பின்பற்றுபவர்கள்

20 ஏப்ரல், 2010

இந்தியா சத்திரமல்ல. ...!

சூரியன் படத்தில் சரத்குமாரை கைது செய்வார்கள், அந்த நேரத்தில் சரத்குமாரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக் கொண்ட மனோரமாவின் பிணம் அந்த பக்கமாக ஊர்வலமாக செல்லும் ஒரு காட்சி, அப்போது கவுண்டமணி, 'ஐயா இவன் திருடனோ, கொள்ளைக்காரனோ எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களைப் பொருத்த அளவில் இந்த தாய்க்கு மகன், அந்த அம்மாவுக்கு கொள்ளி போட விடுங்கய்யா' என்று காவலாளிகளிடம் கொஞ்சுவார், கண்டு கொள்ளாமல் சரத்குமாரை இழுத்துச் சென்றுவிடுவார்கள்.

குற்றவாளியின் உறவினர்களும் தண்டிக்கபடவேண்டுமென்றால் நாட்டில் அனைவருமே சிறையில் தான் இருக்க வேண்டும், நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு குற்ற பின்னனி தான் முதல் தகுதியே. நீதி, நேர்மை அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளையும் ஊழல் வழக்கு ஏதோ ஒன்றில் தொடர்புடையவர்கள், குற்றம் நிருபனம் செய்யப்படாததால் வெளியே இருக்கிறார்கள். கட்டுச் சோற்றுக்கு பெருச்சாளி காவல் என்பது போல் அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசாங்கத்தில் சட்டம் என்பவை எப்படி வேண்டுமானாலும் வளைக்க கூடிய அவர்களுக்கான பாதுகாப்பு வளையம்.

நாங்கள் குற்றவாளிகளுக்கு எதிரிகள் அல்ல, என்பது போல் நளினியை சிறையில் சென்று சந்தித்ததை விளம்பரப்படுத்திக் கொண்டார் சோனியாவின் புதல்வி பிரியங்கா வதோரா. மற்றபடி நளினி சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என்கிற அவர் குடும்பத்தின் எண்ணத்தில் மாற்றமில்லை என்பது போல் காட்சிகள் நடந்துவருகின்றன. போஃபர்ஸ் வழக்கு....அதில் தொடர்புடையவர்கள் பற்றியெல்லாம் அரசியல் தலையீடு அற்ற விசாரணை நடந்து இருந்தால் காங்கிரசு குடும்பத்தில் எல்லோருமே சிறையில் தான் கழிக்க வேண்டி இருக்கும், காரணம் இங்கே குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதே அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்தானவை என்பதாக பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியத்தில் இருந்து புரியவைக்கப்படுகிறது.

நான் முதல்வர் என்பதையே தினகரனை படித்து தான் தெரிந்து கொண்டேன், எதற்கும் நான் முதல்வரா என்று மறு உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு, தலைமை கேட்டுக் கொண்டால் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்பது போல் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டத்தை நாளிதழ் பார்த்து தெரிந்து கொண்டாராம் முதல்வர். விமான நிலையத்திற்கு சென்றவர்கள் முகம் தெரியாதவர்கள் அல்ல, வைகோவும், நெடுமாறனும் சென்றிருக்கிறார்கள், அவர்கள் நினைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தூண்ட முடியும், அவர்களின் நடவடிக்கையை கூர்ந்து கவனிக்கும் உளவுத்துறை கூட அவர்கள் விமான நிலையம் சென்றது ஏன் என்பதை முதல்வருக்கு தெரிவித்திருக்கமாட்டார்கள், உளவுத்துறை தன்னிச்சையாக செயல்படுகிறது என்று சொல்லவருகிறாரா முதல்வர் ? நாட்டு நடப்பே தெரியாத ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை, அதிலும் எங்கள் கட்சிக்கே பெருமை என்று திமுகவினர் மார்த்தட்டினாலும் வியப்பு இல்லை.

திருமாவளவன் தலித்துகளுக்கு எதோ செய்ய கட்சி தொடங்கினார், தமிழர் நலன் மீது ஆர்வம் கொண்டவர் என்கிற பிம்பம் இருந்தது, இவர் கட்சி நடத்துவதற்கு பதிலாக கலைத்துவிட்டு திமுகவில் சேர்ந்துவிட்டால், இவர் சொல்வது பேசுவது காமடியாகவே தெரியாது, நானும் அரசியல் நடத்துகிறேன் பாருங்கள் என்கிற ரீதியில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு ஜெ காரணம் என்கிறார். இந்த பொழப்புக்கு பச்சோந்தி வேசம் கட்டி நாடகம் நடத்தினால் கூட அது நடிப்பு நல்லா இருக்கிறது என்று பாராட்டலாம்.

ஆண் பேய், பெண் பேய் என பேய்கள் கட்சி தலைமை ஏற்றால் காட்சிகள் சுடுகாடு ஆகும். என்பது பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்ட நிகழ்வின் மூலம் தெரியவருகிறது.

அதிமுக மகளிர் அணியிடம் 'தரிசனம்' பெற்ற சு.சாமி....'இந்தியா சத்திரமல்ல....கண்டவர்களும் வந்து செல்ல' என்கிறார். இந்தியாவில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சோனியா காந்தி போன்று கட்சி தலை ஏற்கலாம், ராஜிவ் காந்தி படுகொலையில் தொடர்புடையவன் மற்றும் சிஐஏ ஏஜெண்டாக இருந்தவன் என பல்வேறு தரப்பினரால் சந்தேகிப்படுபவன் அரசியல் வாதியாக உலாத்தலாம், காந்தியை கொன்ற கோட்சேவை ஞாயப்படுத்த....'நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்' என்று 'நாடகம்' போடலாம், கோடிக்கணக்கான இதயங்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு தலைவனின் தாயான 80 வயது மூதாட்டி குற்றமற்றவராக இருந்தாலும் வரக்கூடாது. வழக்கம் போல் 'வந்தேறி கூட்டத்தை சேர்ந்த ஒருவனுக்கு அதைச் சொல்ல தகுதிகள் உண்டா ?' என்று யாரும் கேட்டுவிட மாட்டார்கள் என்ற சு.சாமியின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.

56 கருத்துகள்:

Vera சொன்னது…

"இந்தியா சத்திரமல்ல. ...!"//


MMMM!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

aaamaa!

அப்பாவி முரு சொன்னது…

நல்லான் அல்ல.,

வல்லான் வகுத்த்தே வாய்க்கால்...

பித்தனின் வாக்கு சொன்னது…

என்ன சொல்வது, இது என்னவே, அந்த அம்மாவை வைத்து இங்க யாரும் அரசியல் பண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்தில் திருப்பி அனுப்ப அரசு முடிவு எடுத்து இருக்குமோ என்ற சந்தோகம் உள்ளது. எவனையும் நம்ப முடியவில்லை, ஒரு வயதான முதாட்டியின் உடல் நலனில் கூடவா அரசியல் காண்பது? கொடுமையான விஷயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

என்ன சொல்வது, இது என்னவே, அந்த அம்மாவை வைத்து இங்க யாரும் அரசியல் பண்ணி விடக் கூடாது என்ற எண்ணத்தில் திருப்பி அனுப்ப அரசு முடிவு எடுத்து இருக்குமோ என்ற சந்தோகம் உள்ளது. //

அட உங்களுக்குத்தாங்க எல்லாமே நல்லதாக தோணுது, அதுக்கெல்லாம் எதாவது ஸ்பெசல் இருக்குமோ.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

என்ன சார் பண்றது.. அந்தம்மா என்ன முரசொலி குடும்பமா?..தனி விமானத்தில் அமெரிக்கா அனுப்ப?..

பித்தனின் வாக்கு சொன்னது…

// அட உங்களுக்குத்தாங்க எல்லாமே நல்லதாக தோணுது, அதுக்கெல்லாம் எதாவது ஸ்பெசல் இருக்குமோ. //

நிஜமாகவே நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல்லை. நான் எங்க நல்லதுன்னு சொன்னேன். இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சனை தமிழ் நாட்டில் பெரிதாக இல்லை. எல்லாரும் பிரியாணியும் குவாட்டரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். எங்க இந்த அம்மாவை உள்ளே விட்டால் வை கோ. மருத்துவர், திருமா எல்லாரும் அரசியல் பண்ணி விடுவார்களோ என்று திருப்பி அனுப்பி இருக்கலாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். ஆனா அதுக்கு உடல் நிலை முடியாத வயதானவர்தான் கிடைத்தாரா?

நீங்க என்ன நினைக்கின்றீங்கன்னு எனக்குப் புரியவில்லை. ஸ்மைலி போட்டாக் கூட தப்பாதான் நினைப்பீங்களா. வம்பு வேண்டாம்ன்னு வந்துட்டுப் போனதுக்குஅடையாளமாசென்ற சூடான பதிவில் &&&& போட்டேன். நல்ல வேளை அதுக்கு ஒன்னும் அர்த்தம் சொல்ல வில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்க என்ன நினைக்கின்றீங்கன்னு எனக்குப் புரியவில்லை. //

மருந்து கொடுத்தா காப்பாத்தி இருக்கலாமே என்று நோயாளி குறித்து மருத்துவரிடம் கேட்டா....இவங்க பொழைச்சு நாட்டுக்கு என்ன லாபம் என்கிற நல்ல எண்ணத்தில் மருந்து கொடுக்கவில்லை என்று மருத்துவர் சொன்னாராம்.

priyamudanprabu சொன்னது…

யாராக இருந்தால் தகுந்த காரணம் இன்றி திருப்பி அனுப்புவது அநாகரீகம்

அதிலும் வயதான மூதாட்டி இங்கா வெந்து சிகிச்சை பெருவதில் என்ன சிக்கல் ஏற்ப்பட போகிறது

திருமாவளவனுக்கு தேர்தல் வரும் போதுமட்டும் இலங்கைதமிழர் பற்றியும்,தமிழக தலித்துகள் பற்றியும் ஞாபகம் வரும்
பாவம் அவருக்கு அப்படி ஒரு நோயால் பாதிக்க பட்டு உள்ளார்

ஆனாலும் இவனையேலாம் நம்பிகிட்டு திரியுதுகளே அதுகளை சொல்லனும்

பித்தனின் வாக்கு சொன்னது…

// மருந்து கொடுத்தா காப்பாத்தி இருக்கலாமே என்று நோயாளி குறித்து மருத்துவரிடம் கேட்டா....இவங்க பொழைச்சு நாட்டுக்கு என்ன லாபம் என்கிற நல்ல எண்ணத்தில் மருந்து கொடுக்கவில்லை என்று மருத்துவர் சொன்னாராம். //

ஹா ஹா இது நீங்க எங்கிட்ட கேக்கக் கூடாது. நானும் மனிதாபிமான அடிப்படையில் ஏன் மருந்து கொடுக்கவில்லை என்றுதான் கேக்கின்றேன். எதுக்கும் இந்த கொட்டோசனை தமிழ் நாட்டுல ஒரு வயது மூத்த மருத்துவர் இருக்கார். அவருகிட்ட கேட்டுக்குங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹா ஹா இது நீங்க எங்கிட்ட கேக்கக் கூடாது. நானும் மனிதாபிமான அடிப்படையில் ஏன் மருந்து கொடுக்கவில்லை என்றுதான் கேக்கின்றேன். எதுக்கும் இந்த கொட்டோசனை தமிழ் நாட்டுல ஒரு வயது மூத்த மருத்துவர் இருக்கார். அவருகிட்ட கேட்டுக்குங்க.//

(நல்ல?) எண்ணத்தில் திருப்பி அனுப்ப அரசு முடிவு எடுத்து இருக்குமோ

நீங்க தான் மே மே ன்னு சாரி மோ மோ ன்னு ஞாயப்படுதத முயற்சிக்கும் காரணத்தை ஐயம் என்பதாக சொன்னிங்க

vinthaimanithan சொன்னது…

’தொண்டு செய்யுமடிமை- உனக்கு
சுதந்திரம் ஒரு கேடா”
தமிழ்நாட்டுத் தமிழன் தான் அடிமையாக
இருப்பதை உணரக்கூட முடியாமல் சொரணையற்றுக் கிடக்கிறான்.
இவனுக்கேது விருந்தாளிக்கு உபசரிக்கும் உரிமை?

பிரியாணியும் குவார்ட்டரும் 1000 ரூபா பணமும் போதாதா?

அருண்மொழிவர்மன் சொன்னது…

மிகவும் நேர்மையான பதிவு கோவி.

கருணாநிதி, ஜெ, வைகோ முதல் தொட்ட எல்லா திராவிட தலைவரிகளின் மீதான் நம்பிக்கையையும் அவர்களே தொலையப் பண்ணிவிட்டர்கள். திருமாவளாவன் மீது பெரிய மரியாதை இருந்தது. அதுவும் தொலைந்து போய்விட்டது.

ஈழப் பிரச்சனை என்றில்லை, வேறு எந்த ஒரு சமூகப் பிரச்ச்னைக்காகவேனும் அண்மைக்காலங்களில் இவர்கள் போராடி இருக்கிறார்களா?

ராணுவத்தில் அரசியல்மயமாக்கல், அரசியலை ராணுவமயமாக்கல் என்று பேசிக் கொண்டிருக்கும் இந்தக் காலங்காளில் இவர்கள் எல்லாவற்றையும் சினிமா மயமாக்கிக் கொண்டிருப்பதை இனி பேசவேண்டும்....

பித்தனின் வாக்கு சொன்னது…

// நீங்க தான் மே மே ன்னு சாரி மோ மோ ன்னு ஞாயப்படுதத முயற்சிக்கும் காரணத்தை ஐயம் என்பதாக சொன்னிங்க //


அண்ணா எதுக்கும் நம்ம உரையாடலை மீண்டும் ஒரு தரம் படிச்சிப் பாருங்கள். இரண்டு வார்த்தைகள் உங்களின் தவறான புரிதல் தான். நான் சொல்ல வில்லை ( நல்ல) இதை நான் டைப் பண்ண வில்லை. ஏன் (தவறான) போட்டுப் படியுங்கள் சரியாகி விடும்.

மோ மோ என்ற வார்த்தைகள் பத்திரிக்கை துறையில் பயன் படுத்தப்படும் எச்சரிக்கை வார்த்தைகள். அனுமானத்தை இப்படித்தான் இருக்கும் என்று சொல்லாமல், நம்பத் தகுந்த வட்டாரங்களுக்கு விட்டு விடுவார்கள். அதுபோல சொல்லப்படுவது மோ மோ என்பது.

அரசியல் காரணங்களுக்காத்தான் அம்மா திருப்பி அனுப்பப் பட்டார் என்பதை பத்திரிக்கை உலகம் போல மோ மோ போட்டேன். இதில் ஞாயப்படுத்த என்ற வார்த்தையும் நான் சொல்ல வில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் என் மீதான உங்களின் புரிதலை வெளிப்படுத்து கின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் ஞாயப்படுத்த என்ற வார்த்தையும் நான் சொல்ல வில்லை. இந்த இரண்டு வார்த்தைகளும் என் மீதான உங்களின் புரிதலை வெளிப்படுத்து கின்றது.//

நீங்கள் அவ்வாறு சொல்லவில்லை என்று சொல்லும் போது இது பற்றி மேலும் சொல்ல ஒன்றும் இல்லை. நீங்க எந்த பொருளில் கூறினீர்கள் என்பது என்னைவிட உங்களுக்குத்தான் நன்றாக தெரியும் என்பதால், அவ்வாறு சொல்லவில்லை என்று நீங்கள் கூறுவதால் இத்துடன் முற்று புள்ளி வைக்கிறேன். ஒருவர் தான் அவ்வாறு சொல்லவில்லை என மறுப்பு தெரிவித்த பிறகு 'நீங்க அப்படித்தான் சொல்லி இருப்பீர்கள்' என்ற கற்பனையில் சுட்டுவது என் வழக்கம் இல்லை.

Sanjai Gandhi சொன்னது…

ஸ்ஸ்ஸப்பாஆஆ.. தியாகி நளினியை நாளைக்கே வெளியில் விட சொல்லி போராடுவோம்.. அந்த தியாகியை சந்திக்க சென்றதை ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டி விளம்பரப் படுத்திய பிரியங்கா காந்தியை வன்மையாகக் கண்டிப்போம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியங்கா காந்தியை வன்மையாகக் கண்டிப்போம்..//

Gandhe என்பது இந்திரா நேருவின் திருமணத்திற்கு பிறகு இராஜிவின் குடும்ப பெயர். அது Gandhi யும் அல்ல. ஆனால் காந்தியின் வழித்தோன்றல்கள் போல் Gandhi என்று எழுதி இந்திராவின் வாரிசுகள் Gandhi ஆகிவிட்டனர். அப்படியே இருந்தாலும்....

பிரியங்கா 'காந்தியா' ? வதோரா இல்லையா ? வதோராவும் காந்தியாகிவிட்டாரா ?

அவ்வ்வ்வ்.......'சாரி எனக்கு கல்யாணம்' ஆகிடுச்சுன்னு அம்மணி சொல்லவே இல்லையா ?

Matra சொன்னது…

Parvathiammal, veru oru madhathathai sernthavraagi irunthaal, Mu Ka avarai kondadi iruppaar.

Bomb vaithavarukku arasu maruthuva manayil raja mariyathai. Ithey Karunanithi avarai sendru visaarithaar.

Aanal paavam indha Ammayarukku intha nilamai.

Rajivein manaivi / Gandhe family endra orey kaaranurthukkaga, Antonia Maino endravarku maryadhai, power ellaam.

Priyanka/Rahul endra paer ellaam nammai yematruvatharkaga.

Original peyargal Bianca mattrum Raoul.

பனித்துளி சங்கர் சொன்னது…

//////நாட்டு நடப்பே தெரியாத ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது இதுவே முதல் முறை, அதிலும் எங்கள் கட்சிக்கே பெருமை என்று திமுகவினர் மார்த்தட்டினாலும் வியப்பு இல்லை.//////////



இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இதில் ஏதோ ஒரு உள் அரசியல் இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது.. அந்த அம்மா சென்றதே நல்லதாக தெரிகின்றது. இங்கிருந்தால் .... என்னல்லாம் நடக்குமோ/

நட்புடன் ஜமால் சொன்னது…

கன்டணம்!

வேறு என்ன செய்ய இயலுமுன்னு தோனலை...

ராஜ நடராஜன் சொன்னது…

எண்ணங்களை பிரதிபலிக்கிறது இடுகை.

Kesavan சொன்னது…

மனிதாபமான முறையில் மருத்துவ உதவி செய்திருக்கலாம்.தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருகிறாராம் :) . வேறு என்ன செய்ய முடியும் , அமைச்சரவை விரிவாக்கம் என்றால் நேராக சென்றிருப்பார் .

Kesavan சொன்னது…

மனிதாபமான முறையில் மருத்துவ உதவி செய்திருக்கலாம்.தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருகிறாராம் :) . வேறு என்ன செய்ய முடியும் , அமைச்சரவை விரிவாக்கம் என்றால் நேராக சென்றிருப்பார் .

Sanjai Gandhi சொன்னது…

கோவிஜி, சில அமயங்களில் மிதமிஞ்சிய அறிவு வளர்ச்சியும் சிக்கல் தான்.. :)) விரிச்ச வலைல அழகா விழறிங்க.. :))

என் பெயர் சஞ்சய்காந்தி. இந்திராகாந்தி குடும்பத்தின் மீதுள்ள பிரியத்தால் எனக்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள். அதே போல் காந்தியின் மீதுள்ள பிரியத்தால் நேருவின் பேரப் பிள்ளைகளுக்கும் காந்தி என்று பெயர்வைக்கப் பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காந்தே என்பது ஒரு சாதிப் பெயர் என அறிந்தேன். என் அப்பாவுக்கு முந்தையத் தலைமுறையில் அனைவருக்கும் சாதிப் பெயருடன் தான் அவர்கள் பெயர் முடியும். அப்படி என்றால் நானும் அந்த சாதி அடையாளத்துடன் அலைய வேண்டுமா? அல்லது என் பெயரில் காந்தி இருப்பதால் நானும் காந்தியின் வழித்தோன்றல் என்பது போல் காட்டிக் கொள்ள இந்தப் பெயரை வைத்திருக்கிறார்களா? அல்லது இந்திராகாந்தியின் பிள்ளைகள் அவர்கள் சாதிப் பெயருடன் இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா பெரியார் சீடரே?. உங்களுக்கு கண்ணன் என பெயர் வைத்திருப்பது, நீங்கள் கண்ணனின் அவதாரம் என்று காட்டிக் கொள்ள தானா? இந்த மேட்டர் இம்புட்டு நாளா நேக்கு தெரியாதே :))

பிரியங்காகாந்தியின் பெயருக்கு வரேன். நீங்கள் இந்த பதிலைத் தால் சொல்வீர்கள் என்பதை மிக சரியாக கணித்தே அதை சொன்னேன்.

பிரியங்காகாந்தி என்பது தான் அவர் பெயர். வதேரா என்பது அவர் கணவர் பெயர். பெரியாரை பின்பற்றுவதாக உதார் விட்டால் மட்டும் போதாது பெரியவரே. மனதிலும் கடைப் பிடிக்க வேண்டும். ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு பிறகு தன் பெயரில் பாதியை எடுத்துவிட்டு அதற்கு பதில் கணவன் பெயரை சேர்க்க வேண்டும் என்பது ஆணாதிக்கம் அல்லது பெண்ணடிமைத்தனம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதை பெரியார் எதிர்த்தார். மணியம்மை, பெரியாரை மணந்த பின்னும் மணியம்மை தான். மணிராமசாமி இல்லை. அப்படி இருக்கும் போது பிரியங்காகாந்தி ஏன் பிரியங்கா வதேராவாக மாற வேண்டும்?.

விளக்கம் ப்ளீஸ்...

Matra சொன்னது…

Sanjai Gandhi said.. //அதே போல் காந்தியின் மீதுள்ள பிரியத்தால் நேருவின் பேரப் பிள்ளைகளுக்கும் காந்தி என்று
பெயர்வைக்கப் பட்டுள்ளது //

This is not the truth.

When the Prime Minister was being chosen, most people supported Sardar Patel. Nehru used his closeness with Gandhiji to get himself pushed in as the candidate.

Once the PM candidate was known, it was agreed that Nehru having a son-in-law with the name Feroz Khan will be a problem due to the Partition and events happening then.

Therefore, Nehru got Gandhiji to 'adopt' him and let him take the surname as Gandhi.

Sanjai Gandhi சொன்னது…

Matra,

எப்டி இப்டி எல்லாம்? :)

Matra சொன்னது…

Sanjai Gandhi said..

//பிரியங்காகாந்தி என்பது தான் அவர் பெயர். வதேரா என்பது அவர் கணவர் பெயர். பெரியாரை பின்பற்றுவதாக உதார் விட்டால் மட்டும் போதாது பெரியவரே. மனதிலும் கடைப் பிடிக்க வேண்டும். ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு பிறகு தன் பெயரில் பாதியை எடுத்துவிட்டு அதற்கு பதில் கணவன் பெயரை சேர்க்க வேண்டும் என்பது ஆணாதிக்கம் அல்லது பெண்ணடிமைத்தனம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதை பெரியார் எதிர்த்தார். மணியம்மை, பெரியாரை மணந்த பின்னும் மணியம்மை தான். மணிராமசாமி இல்லை. அப்படி இருக்கும் போது பிரியங்காகாந்தி ஏன் பிரியங்கா வதேராவாக மாற வேண்டும்?.
//

இதே கேள்வியை திருப்பி கேட்க்லாம். ஏன் சோனியா Antonia Maino என்ற த்ன் பெயரை மாற்றினார் ?

Barari சொன்னது…

அந்த வயதான அம்மையாருக்கு சிகிச்சை என்ற பெயரில் அனைவரும் அரசியல் நடத்ததான் நினைக்கிறார்கள் உண்மையான அக்கறை எவருக்கும் இல்லை .உலகம் முழுவதும் பரவி இருக்கும் புலிகளும் புலி ஆதரவாளர்களும் எங்கே? இந்தியாவை தவிர எங்கேயும் நல்ல சிகிச்சை அளிக்க முடியாதா?அவர்களின் நோக்கம் தமிழகத்தில் வைத்து மீண்டும் ஒரு எழுச்சி அல்லது புலி ஆதரவை எர்ப்படுத்துவது இதுதான் அவர்களின் எண்ணம் வைகோ உள்பட.

Sanjai Gandhi சொன்னது…

பெயர் என்பது ஒருவரின் தனிப் பட்ட உரிமை. அதில் பிறர் தலையிடக் கூடாது என்பதற்கு தான் அவ்ளோ பெரிய விளக்கம் குடுத்தேன். நீங்க இப்போ கேட்ட கேள்விக்கும் அதான் பதில். நாளைக்கே கூட என் பெயரை மாற்றிக் கொள்வேன். ஆனால் அதை பிறர் சொல்லக் கூடாது என்பது தான் என் வாதம்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வன் கொடுமை சட்டம்னா என்ன அண்ணா?

அதுல யாரையெல்லாம் போடலாம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//
பிரியங்காகாந்தி என்பது தான் அவர் பெயர். வதேரா என்பது அவர் கணவர் பெயர். பெரியாரை பின்பற்றுவதாக உதார் விட்டால் மட்டும் போதாது பெரியவரே. மனதிலும் கடைப் பிடிக்க வேண்டும். ஒரு பெண் தன் கல்யாணத்திற்கு பிறகு தன் பெயரில் பாதியை எடுத்துவிட்டு அதற்கு பதில் கணவன் பெயரை சேர்க்க வேண்டும் என்பது ஆணாதிக்கம் அல்லது பெண்ணடிமைத்தனம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதை பெரியார் எதிர்த்தார். மணியம்மை, பெரியாரை மணந்த பின்னும் மணியம்மை தான். மணிராமசாமி இல்லை. அப்படி இருக்கும் போது பிரியங்காகாந்தி ஏன் பிரியங்கா வதேராவாக மாற வேண்டும்?.//

நீ இப்படி பிதற்றுவாய் என்று தெரியும் ... உன் கூற்று படி பார்த்தால் கூட இந்திரா 'காந்தி' கிடையாது, இந்திரா நேருதான். பாட்டி மதிக்காத தந்தையின் குடும்பப் பெயரை பேத்தியும் மதிக்காமல் இருந்தால் நான் வரவேற்பேன். ஆனால் திருமணத்திற்கு பிறகும் தந்தைவழி பெயரை அல்லவா வைத்துக் கொண்டு இருக்கிறார். உங்க பார்வையில் இந்திரா ஆணாதிக்கவாதியா ? அல்லது அவர் கணவர் பெரோஸ் ஆணாதிக்க வாதியா ?

உனக்கு சஞ்சய்காந்தி என்பது வெறும் பெயர் பற்றுதலால் வைப்பது, நானும் நிறைய காந்தி பெயர்களை தமிழகத்தில் பார்த்திருக்கிறேன். என் நண்பர் ஒருவர் மகனுக்கு 'ராகேஷ் சர்மா' என்று வைத்திருக்கிறார். உடனே அவங்க குடும்பம் சர்மா என்னும் சாதிப் பெயருக்கு மாறிவிட்டார் என்று பொருள் இல்லை.

//அல்லது இந்திராகாந்தியின் பிள்ளைகள் அவர்கள் சாதிப் பெயருடன் இருந்திருக்க வேண்டும் என்கிறீர்களா பெரியார் சீடரே?.//

காந்தி என்பது மோகந்தாஸின் குடும்ப/சாதிப் பெயர் தான். அதைக் குடும்பப் பெயராக தொடர்ந்து வைத்தால் அது சாதிப் பெயராகத்தான் மாறும்.

மோகன் தாஸ் என்ற பெயருடன் காந்திக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது 'மகாத்மா' நல்லவேளை இந்திரா குடும்பத்தினர் மகாத்மா என்று வைத்துக் கொள்ளவில்லை.

Kesavan சொன்னது…

//குடும்பப் பெயராக தொடர்ந்து வைத்தால் அது சாதிப் பெயராகத்தான் மாறும் //

அப்படியா :). இப்படி தான் ஜாதி உருவாகிறதா ? அல்லது இவர்கள் ஜாதி மாறி விட்டார்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

me: பிரியங்கா திருமணம் ஆனாலும் இன்னும் காந்தி பேமிலி தானா ?
SanJai: இல்லையே
me: பின்னே
SanJai: அவர் பெயர் இப்போ பிரியங்கா வதேரா தானே
me: பிரியங்கா காந்தி இல்லையா
SanJai: பிரியங்கா காந்தின்னு யாரும் இப்போ சொல்றதைல்லையே
வட நாட்டு பத்திரிக்கைகள் எல்லாம் சரியா எழுதறாங்க
me: பத்திரிக்கைகளில் இன்னும் பிரியங்கா காந்தின்னு தானே எழுதுறா
1:35 PM க
SanJai: வதேரா யார்னு நம்ம மக்களுக்கு தெரியாது.. அதனால நம்ம ஊர் பத்திரிக்கைகள் காந்தினு எழுதறாங்க போல :)
me: பிரியங்கா காந்தி நளினியை சந்தித்து வந்தார் என்று தான் எழுதினாங்க
SanJai: அதான் சொன்னேனே
நம்ம ஊர் பத்திரிக்கைகள் அப்டி தான் எழுதி ஆகனும்
1:36 PM me: நான் வட நாட்டு பத்திரிக்கை படிப்பதில்லை
:)
SanJai: பிரியங்கா வதேரா என்று எழுதினால் வேற யாரோ என்று நம் மக்கள் நினைப்பாங்க :))
:)
பெயரில் என்ன இருக்கு?
1:37 PM அதுல எல்லாம் அரசியல் பண்றது சுத்த பேத்தல்
me: :)))
சமாளிப்பு
SanJai: யார் வேணாலும் எந்த பெயரை வேணாலும் வச்சிக்கலாம்
இல்லை நிஜம் தான்
இதை காங்கிரஸ்காரர்கள் செய்தாலும் என் கண்டனங்கள் உண்டு

1:38 PM me: சரி பிரியங்கா வதாரோன்னு எழுதுங்க யாருன்னே யாருக்கும் தெரியாது
SanJai: அதான் நானும் சொல்றேன்.. அவருக்கு அது ஒரு அடையாளமாக இருக்கும் போது அப்படியே பத்திரிக்கைகள் எழுதட்டுமே
அதில் எதுக்கு அரசியல் என்று தான் கேட்கிறேன் :)
1:39 PM உண்மையில் அவர் பெயர் பிரியங்கா காந்தி தானே
அதை என் மாற்ற வேண்டும் என்பதே எனக்கு புரியலை
me: அப்படி என்றால் இந்திராவும் இந்திரா நேருதானே
SanJai: வேண்டுமானால் பிரியங்கா காந்தி வதேரா என்று சொல்லலாம் :)
இல்லை
me: சொல்லுவிங்க சொல்லுவிங்க

1/20/09

பெயரில்லா சொன்னது…

தாயே...
சாதாரண மகனைப் பெற்றிருந்தால்
மாளிகையில் கொலுவிருப்பாய்
துணையாய் அணைத்திருப்பான்
வஞ்சனையில்லா வரவேற்பும்
வாழ்வும் இனித்திருக்கும்.

வீரனைப் பெற்றதாலோ
விழுதாய் தள்ளாட்டம்
மீண்டும்...
பெற்றெடு தாயே
தயங்காதே நீ !!!

ஹேமா(சுவிஸ்)

Kesavan சொன்னது…

ஆமாம் அந்த அம்மையாரின் மகள் கனடாவில் இருகிரரமே ? அங்கே செல்லலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

ஆமாம் அந்த அம்மையாரின் மகள் கனடாவில் இருகிரரமே ? அங்கே செல்லலாமே//

படுக்கையில் இருக்கும் ஒரு நோயாளி மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் நேரமும், கனடா செல்லும் நேரமும் ஒன்று அல்ல. மேலும் அந்த அம்மா மருத்துவ குழு பாதுகாப்புடன் தனிவிமானத்திலெல்லாம் செல்லவில்லை.

எப்படிங்க இந்த விசயத்தில் எல்லோருமே ஒரே மாதிரி சிந்தனையோடஅந்த அம்மா இங்கே வந்தது தவறு என்பதாக புரியவைக்க முயற்சிக்கிறீர்கள் ?

பெயரில்லா சொன்னது…

இந்த தறுதலை சப்ரமணிசாமியை பெத்ததிற்கு இவனுடைய அம்மா முதலில் மன்னிப்பு கேட்கட்டும்.

அதெப்படி தமிழனுக்கு எதிரான விஷயத்தில் பார்ப்புகள் எல்லாம் ஒரே கொட்டில் இணைகிறார்கள், வந்தேறிகள் என்பதாலா.

இன்னொரு பார்ப்புவின் திமிரான பதிவு

http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html

(பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்.)

அதாவது இவர்களுக்கு தமிழ், தமிழ்நாடு, தமிழன் எதுவும் வேண்டாமாம். இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்டானாம் கதை இவர்களுடையது. இவர்கள் இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள், நமக்குத்தான் சூடு சொரணை எல்லாம் பார்பனீயத்திற்கு அடகு வைத்து ரொம்ப நாளாயிற்றே.

Robin சொன்னது…

இனிமேல் யாராவது தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கவேண்டுமேன்றாலோ அல்லது தங்களது பெயரை மாற்ற வேண்டுமென்றாலோ திருவாளர் கோவி கண்ணனிடம் கட்டாயம் அநுமதி வாங்கியாகவேண்டும்!

Kesavan சொன்னது…

//படுக்கையில் இருக்கும் ஒரு நோயாளி மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் நேரமும், கனடா செல்லும் நேரமும் ஒன்று அல்ல. மேலும் அந்த அம்மா மருத்துவ குழு பாதுகாப்புடன் தனிவிமானத்திலெல்லாம் செல்லவில்லை.//

இவ்வளவு கஷ்ட படறதுக்கு பதிலா அங்கேயே போயிருக்கலாமே என்று சொன்னேன்.அவ்வளவுதான் அவ்வ்வ்வவ் .

//எப்படிங்க இந்த விசயத்தில் எல்லோருமே ஒரே மாதிரி சிந்தனையோடஅந்த அம்மா இங்கே வந்தது தவறு என்பதாக புரியவைக்க முயற்சிக்கிறீர்கள் ? //

" மனிதாபமான முறையில் மருத்துவ உதவி செய்திருக்கலாம் " என்று ஏற்கனேவே சொல்லி இருக்கேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதாவது இவர்களுக்கு தமிழ், தமிழ்நாடு, தமிழன் எதுவும் வேண்டாமாம். இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்டானாம் கதை இவர்களுடையது. இவர்கள் இதுவும் சொல்வார்கள் இன்னமும் சொல்வார்கள், நமக்குத்தான் சூடு சொரணை எல்லாம் பார்பனீயத்திற்கு அடகு வைத்து ரொம்ப நாளாயிற்றே.//

அந்த ஐயா கோட்சே குடும்பத்தையே கொளுத்தனும் என்கிற கருத்தும் கொண்டிருப்பார் என்று தான் நினைக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...

இனிமேல் யாராவது தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கவேண்டுமேன்றாலோ அல்லது தங்களது பெயரை மாற்ற வேண்டுமென்றாலோ திருவாளர் கோவி கண்ணனிடம் கட்டாயம் அநுமதி வாங்கியாகவேண்டும்!//

நான் அப்படி சொல்லவில்லை. ஆண்டனோ மொய்னோ காந்தி ஆகும் போது பிரியங்கா ஏன் வதோரா ஆகக் கூடாதுன்னு கேட்டேன். தப்பா ?

Kesavan சொன்னது…

//அதெப்படி தமிழனுக்கு எதிரான விஷயத்தில் பார்ப்புகள் எல்லாம் ஒரே கொட்டில் இணைகிறார்கள், வந்தேறிகள் என்பதாலா.//

அமாங்க பார்ப்புகள் எல்லாம் ஒரே கோட்டுல தான் இனைகறாங்க . தமிழ் தமிழ் நு சொல்ல்ற உங்க மஞ்சள் துண்டு தலைவர் எனக்கு ஒரு விஷயமும் தெரியாதுன்னு சொல்றார் . அவருக்கு சப்போர்ட் பண்ற மிருக கட்சி தலைவர் என்ன பண்ணிண்டு இருக்காருங்க. என்ன அவங்களும் பார்புகளோட சேர்ந்துடான்கள. என்ன உங்களுக்கு பார்ப்பு பாசம் . சாமி சொல்லி தான் இங்க எல்லாம் நடக்கற மாதிரி பேசறீங்க .

Kesavan சொன்னது…

// வந்தேறிகள் என்பதாலா.//

யாருங்க வந்தேறிகள் , கொஞ்சம் விவரமா சொன்னா நல்ல இருக்கும் . உங்களுக்கு ஒத்த கருத்து இல்லேன்னா திட்ட ஆரம்பிச்சுடுவீங்களே . cool down . பாருங்க கோவி எவ்வளவு சாந்தமா கண்ணியமா பதில் சொல்றாரு

Kesavan சொன்னது…

தமிழ் நாட்டில் நடக்கும் சாலை பணி , மேம்பால பணி களுக்கு தமிழனுக்கு வேலை கொடுக்காமல் வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வருகிறார்களே . எங்கே போனது தமிழ் மற்றும் தமிழன் பாசம். இந்த வேலைகளை கொடுத்தது நீங்கள் சொல்லும் வந்தேறிகள இல்லை தமிழ் நாட்டை கூறு போடும் .....
முதல்ல (நீங்க சொல்ற) வந்தேறிகளை சொல்றதை நிறுத்திட்டு மத்ததை மாத்துங்க , அப்பறம் (நீங்க சொல்ற) வந்தேறிகளை பத்தி பேசலாம் .

நசரேயன் சொன்னது…

//
சு.சாமியின் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன்.
//

யாரு அண்ணே இந்த சு.சாமி ?

பனிமலர் சொன்னது…

இது எல்லாம் கால கொடுமை, சுசா தான் இராசீவ்காந்தியின் படுகொலைக்கு திட்டமிட்டவர். திருச்சி சிவா சுசா என்ன என்ன எப்ப எப்ப செய்தார்ன்னு குமுதம் இணைய தளத்தில் காணொளி கொடுத்து இருந்தார். எல்லாத்தையும் சுசா செய்துவிட்டு விபு மேல பழியை போட்டது மட்டும் இல்லாது, இவ்வளவு கேவலமா அந்த மூதாட்டியை நக்கல் பேசுவது தகுமா. இவர்கள் நம்புவது போல் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்றால் இந்த செய்கைக்கு என்ன என்ன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்து இருக்கும்..............இந்த பிழைப்பு பிழப்பதற்கு பதில் அந்த பிழைப்பு பிழைக்கலாம் சுசா..........

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் கேட்க வந்த கேள்வி ஏன் தீடீர் என்று தோன்றியது என்று இப்போது புரிகிறது? மீனம்பாக்கம் எதிர்புறம் உள்ள TRIDENT HOTEL நடந்த பத்து நிமிடத்தில் ஐயாவுக்குத் தெரிகிறது.

இது போன்ற பல விசயங்களையும் சேமித்து வைத்து இருந்தாலும் "முடிந்து" போன விசயங்களைப் பற்றி இந்த மாதிரி ஈத்தர நாய்களைப் பற்றி யோசிப்பது எழுதுவதே பாவம் என்றே நிணைக்கின்றேன். செய்தது யார் என்று தெரிகிறது. அவரின் குணம் நன்றாகவே புரிகிறது. ஒவ்வொன்றும் தன்னால் மட்டுமே? அதுவும் தவறாக இருந்தாலும் மிக நாகரிகமாக தங்கள் ஆட்கள் மூலம் மட்டுமே என்ற திட்டுமிடுதல் என்று நோக்கமும் புரிகிறது.

நாய்கள் பேய்கள் எல்லாம் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்த காரணத்தால் இவர்கள் பெயர்களும் உள்ளே வந்து போனது. ஆனால் பயன்படுத்தி இருக்கலாம். நீங்கள் சொன்னவுடன் எழுத வேண்டும் தோன்றுகிறது.

முயற்சிக்கின்றேன் கண்ணன்.

முடியாமல் தொட்டால் தொடரரும் என்பது போல் போய்க்கொண்டே இருக்கிறது.

காரணம் வணிக ரீதியாக வந்த குப்பைகளை மீறி பலருக்கும் நல்ல புரிந்துணர்வுகளை உருவாக்கக்கூடிய படைப்பாக நல்ல கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தால்?

Sanjai Gandhi சொன்னது…

கோவியாரே, நல்லவேளையாக நான் உங்களிடம் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் பேசியதில்லை என நினைக்கிறேன். ஒருவேளை பேசி இருந்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. உங்க சுயநலத்துக்காக அதையும் பொதுவில் போட்டிருப்பிங்க. இரண்டு பேர் தனியாக பேசிக்கொள்ளும் போது அந்த நேரத்து மனநிலையில் தான் பேச்சு இருக்கும். உங்களிடம் பேசும்போது சிரிப்பான்களைப் பயன்படுத்தி நக்கலாகத்தான் பேசி இருக்கிறேன். இது போல் தனிமையில் பேசுவதற்கும் பொதுவில் பேசுவதற்கும் பெரும்பாலும் பெரிய வித்தியாசம் இருக்கும்.

உதாரணமாக, சமீபத்தில் நான் கூகுள் பஸ்ஸில் வெளியிட்ட ஒரு செய்திக்காக ஒரு நண்பர் சாட்டில் பேசினார். அனுமதி இல்லாமல் அவர் பெயரை எல்லாம் சொல்ல முடியாது.

//
***: உங்கள் வீட்டுல துரத்தியடிச்சதும் அரசியலுக்கு வந்துட்டீங்க. சரியா?
me: ஆமா
***: அதே போல தாம் ராமும் போல....
me: அதனால தான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சது
***: கிகிகி
அனுபவம் பேசுது சாமியோவ்!
me: அதே//

இதில் நான் சிரிப்பான் கூட பயன்படுத்தவில்லை. அபப்டி என்றால் என் வீட்டில் துரத்தி அடிச்சதால் தான் அரசியலுக்கு வந்தேன் என அர்த்தமா?

( அந்த நண்பர் இங்கும் பின்னூட்டம் போட்டிருக்கிறார் என்பதால் அவரே உங்களிடம் யாரென்று சொல்ல வாய்ப்பிருக்கு )

ஒருவருடன் நட்பு ரீதியில் மட்டும் தனிமையில் பேசியதை பொதுவில் வைக்கும் முன் கொஞ்சம் யோசிப்பது நாகரிகம்.

Sanjai Gandhi சொன்னது…

//உன் கூற்று படி பார்த்தால் கூட இந்திரா 'காந்தி' கிடையாது, இந்திரா நேருதான். பாட்டி மதிக்காத தந்தையின் குடும்பப் பெயரை பேத்தியும் மதிக்காமல் இருந்தால் நான் வரவேற்பேன்.//

பாட்டி எவ்வழியோ பேத்தியும் அவ்வழியே இருக்க வேண்டும் என ஏன் உளறுகிறீர்கள்? பெயர் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். அவர் பெற்றோர் பின் பற்றிய முறையை பின் பற்ற வேண்டிய அவசியமே இல்லை. மேலும் இந்திரா நேரு கிடையாது. இந்திரா காந்தி தான். பெயரின் பின் அவர் தந்தை பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அவர் விரும்பாத பட்சத்தில்.

// ஆனால் திருமணத்திற்கு பிறகும் தந்தைவழி பெயரை அல்லவா வைத்துக் கொண்டு இருக்கிறார். உங்க பார்வையில் இந்திரா ஆணாதிக்கவாதியா ? அல்லது அவர் கணவர் பெரோஸ் ஆணாதிக்க வாதியா ? //

என்ன கொடுமை சார் இது? அதென்ன தந்தை வழிப் பெயர்? பிரியங்கா காந்தி என்பது தான் அவர் பெயர். அவர் தந்தையின் பெயரில் காந்தி இருக்கிறது என்பதற்காக அதற்கு தந்தை வழிப் பெயர் என்ற முத்திரை குத்துவது அபத்தம். தந்தையின் பெயரைப் போலவே பிள்ளைகளுக்கும் பெயர் வைப்பது ஒரு அடையாளத்துக்கு தான். அதுவும் பெற்றோரோ பிள்ளைகளோ விரும்பினால். விருப்பம் இல்லை என்றால் பிள்ளைகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் உங்கள் பெயரை மாற்றிவிட்டீர்களா கோவி? :) உங்கள் பெயர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் கோவி கண்ணன் தானே? தி.பின் வெறும் கண்ணனாக ஏன் இல்லை? உங்களுக்கு மட்டும் உங்கள் தகப்பனார் பெயர் ஒட்டிக் கொள்ள வேண்டுமா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியாரே, நல்லவேளையாக நான் உங்களிடம் சர்ச்சைக்குரிய விஷயம் எதுவும் பேசியதில்லை என நினைக்கிறேன். ஒருவேளை பேசி இருந்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கு. உங்க சுயநலத்துக்காக அதையும் பொதுவில் போட்டிருப்பிங்க. //

இதெல்லாம் டூ மச்....!

இந்த குறிப்பிட்ட சாட்டில் அப்படி ஒண்ணும் நாம் இந்திய இராணுவ ரகசியம் போல் எதுவும் பேசவில்லை, யாரைப் பற்றியும் தவறுதலாகப் பேசவும் இல்லை என்பதால் போட்டேன். இதான் சாக்கு என்று சர்சையை விட்டுவிட்டு சாணியை அள்ளி பூச முயலுகிறீயே தம்பி. நல்லா இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் பெயர் திருமணத்திற்கு முன்பும் பின்பும் கோவி கண்ணன் தானே? தி.பின் வெறும் கண்ணனாக ஏன் இல்லை? உங்களுக்கு மட்டும் உங்கள் தகப்பனார் பெயர் ஒட்டிக் கொள்ள வேண்டுமா? :)//

எனக்கு ஒரே பெயர் தான் நான் இத்தாலியில் பிறக்கவில்லை, இட்லி விரும்பி சாப்பிடுவேன்.

:)

Kesavan சொன்னது…

பார்வதி அம்மாளை பற்றி மட்டும் பேசறீங்களே . இங்க 17 வருஷத்துக்கு மேல ஒரு பெண்மணி சிறைல இருக்காங்க . அவங்களுக்கு ஒரு தமிழனும் அதரவு பேச்சே பேச மாட்டேன்ட்றீங்க

Indian சொன்னது…

Replies successfully diverted the theme of the post.

There is a difference between how Tamils and others perceive one's name.

Tamils use only one name generally. Officially they prefix *Father's first name's first letter
* for the sake of convenience.

Wherever official documents insist compliance with Global naming format (First Name + Middle Name [optional] + Last Name), Tamils use their common name First Name and Father's first name as Last Name. Famous example is Narain Karthikeyan.

This global naming compliance is a recent phenomenon and there is no consensus among Tamils on what to use as First Name and Last Name.
Confusions do happen when Father's name become first name and a person's common name becomes his/her last name. Famous example for this is Viswanathan Anand.

As far as I know, almost all of north Indians officially use their caste name as their last name. Rest have some common last names like Ram or Das which eventually give away their status in social hierarchy.

In this context, Nehru and Gandhi are indeed caste names.

When a north Indian name his son/daughter after a famous person, he names with the first name of the famous person. Well known example is Sachin Tendulkar. His father Ramesh Tendulkar named him after Hindi music composer SD Burman (i.e Sachin Dev Burman). Ramesh Tendulkar *didn't* name his son as Sachin Burman but Sachin Tendulkar.

Tamils don't view last names as caste names. Hence a Tamil name his son/daughter with the full name. This is the reason why you find Gandhi/Nehru/Bose/Stalin (as first names LOL), Rakesh Sharma and Latha Mangeshkar as names of Tamil people.

This is well narrated in the movie Virumandi when the heroine insist on naming her kid as *Sachin Tendulkar* instead of Sachin.

One of my colleague's name is Muthukumar Bose. He is a true blue Tamilian hailing from *Madurai area*. As he is from Madurai, one can understand why he is named so. His name always confuse north Indians. They mistake him to be a Bengali. :) Even if you explain them of Nethaji's loyalty in Madurai area, they are perplexed wondering why people don't name their son as simply Subash followed by their last name.

I hope this sets context to the preceding naming debate.

Matra சொன்னது…

//In this context, Nehru and Gandhi are indeed caste names. //

A correction. There is no caste name as 'Nehru'. This is an invented name.

Ghiyasuddin Ghazi was a moghul who changed his name to Ganga Dhar and family name to Nehru in order to escape the British. His son was Motilal Nehru.

Indian சொன்னது…

//A correction. There is no caste name as 'Nehru'. This is an invented name.//

True. I stand corrected.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்