படத்தின் நாயகன் முரட்டு பையன், முன் கோபக்காரன், நக்கலாக பேச்சும் பெண்கள் மீது ஜொள்ளு சிவக்குமாரின் சின்னப் பையனை அந்த கேரக்டரில் போடுங்க என்று நினைக்கும் படி கார்த்தியின் மூன்றாவது படமும் அவருக்கு அப்படி ஒரு தோற்றம் கிடைக்கும் படி வந்திருக்கு. இருந்தாலும் இந்தப் படத்தில் கார் ஓட்டும் கார்த்திக், ஜீன்ஸ் பேண்ட், கைமடித்த டெனிம் ஸ்டைலிஸ் சட்டைகள் என்று சற்று மாறுபட்டு இருக்கிறார். எந்த ஒரு கோணத்திலும் அப்பா சிவக்குமாரையோ, அவரது அண்ணன் சூர்யாவையையோ கொண்டு வரும் முகத் தோற்றம். கதையில் கார்த்தி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
நான்கு நண்பர்கள், அவர்களுடன் ஒரு நண்பி என ஐவர் கூட்டணியான கார்த்தியின் நண்பர்கள் கார்திக்குக்கு பெங்களூரில் வேலைக்கு முயற்சிக்க......எதிர்பாராவிதமாக ஒரு ஷாப்பிங் காம்பெளெக்சில் தமன்னாவைப் பார்த்தத்தில் கார்த்தி அவரின் மீது பைத்தியமாக ஆகிறார். இடையில் இவர்களுக்கு கார் கொடுத்த நண்பரை அழைத்துவரச் செல்லும் போது தம்மானாவை வில்லன் உறவினர் சென்னைக்கு கடத்த முயற்சிக்க வாடகைக் கார் தேடும் போது கார்த்தி ஜொள்ளுவிட்டபடி முன்வருகிறார். உறவினரை ஏமாற்றி மும்பைக்கு தமன்னா தப்பிக்க முயற்சிக்க இருவரும் காரில் பயணிக்கிறார்கள். இதற்கிடையே ஏற்கனவே வேறுரொரு வில்லன் கும்பலுடன் கார்த்தி மோதி இருக்க, தமன்னாவின் உறவினர் வில்லன் பட்டாளம் இரு எதிரிகள் இவர்களை துறத்துகிறார்கள்.
நகைச்சுவைக்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் இயக்குனர் லிங்கு சாமி கார்த்தியை வைத்தே சரி செய்திருக்கிறார். இடைவேளைக்கு சற்று முன்பும் இடைவேளைக்கு பிறகு கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் சண்டைக் கோழி ரகம். கார்த்தியின் அசத்தலான சண்டைக் காட்சிகளில் தேறி இருக்கிறார்....அசத்தல்.
அவருடன் ஒட்டிக் கொண்ட வெடவெட கோழிக்குஞ்சு போல தமன்னா வசனம் குறைவாகப் பேசினாலும் இரண்டு ஜோடிக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக பொருந்தி இருக்கு.
யுவன் இசையில் மூன்று பாடல்கள் இனிமை, பின்னனி இசையும் இளைய ராஜாவின் இளைய ராஜா சிறப்பாக செய்திருக்கிறார்.
நெடுஞ்சாலைகள் படம் முழுக்க வருகிறது. நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். ரன், சண்டைக் கோழி வகையில் லிங்கு சாமி செய்திருக்கும் மற்றொரு படம். 2:45 மணி நேரம் ஓடுகிறது.
கார்த்தி படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்தி படம். இயக்குனர் லிங்குசாமி என்று எழுத்து போடும் போது திரையரங்கில் கைத்தட்டல், இயக்குனருக்காகவும் படம் பார்க்கவந்தவர்கள் மிகுதி. படவெளியிடு கருணாநிதி பேரன் தயாநிதி அழகிரி
நாயகன் நாயகிக்கு பெற்றொர்கள் பாத்திரம் எதுவும் திரையில் காட்டப்படவில்லை. நான்கு நண்பர்கள், 10 - 10 இரு எதிரி குழுக்கள், கடைசியில் ஒரு உறவினர் கூட்டம், மும்பை நண்பனாக அயனில் நடித்த நண்டு நொரண்டு நடிக்கிறார். ஒரு சில காட்சிகள் என்றாலும் கலகல.
வேகமான திரைக்கதையும், சண்டை காட்சிகள் பிடித்தவர்களுக்கு லிங்குசாமியின் பைய.....fine fine. மற்றவர்களுக்கு சாலை இரைச்சல், கார் சத்தங்கள், சண்டைகள் அனைத்தும் சத்தமாக இருக்கும்.......பையா fine
பையா.......பைன் எனக்கு பிடித்து இருக்கு. சிவக்குமாரின் சின்னப் பையன் பாஸ் பாஸ்.
ஆனால் தொடர்ந்து இதே போன்றே பாத்திரப் படைப்பில் நடித்தால் போரடித்துவிடும்
பின்பற்றுபவர்கள்
2 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
22 கருத்துகள்:
கவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்!?
தமன்னாவுக்காக இந்த பின்னூட்டம்!
விமர்சனத்துலையும் இவ்வளவு அவசரமா?
:)))
// வால்பையன் said...
கவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்!?
1:06 AM, April 02, 2010
//
இங்கிட்டு ஒருநாள் முன்பே படம் போட்டுவிட்டார்கள்
கார்த்திக் படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்திக் படம். //
அட அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பரம் நீங்க ஓஞ்சுட்டீங்களா?
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
கார்த்திக் படம் என்பதற்காகவே நான் பார்த்த இரண்டாவது கார்த்திக் படம். //
அட அலைகள் ஓய்வதில்லைக்கு அப்பரம் நீங்க ஓஞ்சுட்டீங்களா?
//
அது பழைய (வெத்தலை பாக்கு போட்டுக் கொண்டிருப்பது போல பேசும்) கார்த்திக்
சிவக்குமார் பையாவ கார்த்தி’ன்னு தான் சொல்றாங்க!
திக் திக்குன்னு இருந்தா பட கெலிக்காதுன்னு பயம் போலும்!
:)
அது இருக்கட்டும்!
”தங்க தமன்னாவுக்கு தமிழ் நாட்ட எழுதித் தருவன்டோய்”
அப்படின்னு நம்ம கலிகாலத் தமிழ்க் கவ்ஜர்கள் பாட்டு கீட்டு எழுதி இருக்காங்களா!?
:)))
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சிவக்குமார் பையாவ கார்த்தி’ன்னு தான் சொல்றாங்க!
திக் திக்குன்னு இருந்தா பட கெலிக்காதுன்னு பயம் போலும்!
:)
அது இருக்கட்டும்!//
இப்ப மாத்திட்டாங்களா ? :) நானும் மாற்றிவிட்டேன் !
//”தங்க தமன்னாவுக்கு தமிழ் நாட்ட எழுதித் தருவன்டோய்”
அப்படின்னு நம்ம கலிகாலத் தமிழ்க் கவ்ஜர்கள் பாட்டு கீட்டு எழுதி இருக்காங்களா!?
:)))
//
உட்டா சிங்காரச் சிங்கையில் சிலை வச்சிடுவிங்க போல
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தமன்னாவுக்காக இந்த பின்னூட்டம்!
விமர்சனத்துலையும் இவ்வளவு அவசரமா?
:)))
//
ஹிஹி மீ த பர்ஸ்ட் விமர்சனம் !
அண்ணே படம் பாத்துடீங்களா!!!!!
.
கோவி,
முந்தைய பதிவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு பெரிய்ய புன்னூட்டம் போட்டேன்..வந்த்துச்சா? வந்துச்சா?
:-))
லோகல் காப்பி சேமிக்கவில்லை
:-((
/கல்வெட்டு said...
.
கோவி,
முந்தைய பதிவில் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு ஒரு பெரிய்ய புன்னூட்டம் போட்டேன்..வந்த்துச்சா? வந்துச்சா?
:-))
லோகல் காப்பி சேமிக்கவில்லை
:-((
/
கல்வெட்டு,
இப்பதான் பார்த்தேன் ப்ளாக்கரில் இருந்தது வெளி இட்டாச்சு !
//யன் said...
அண்ணே படம் பாத்துடீங்களா!!!!!
//
நித்யா சத்தியமாக பார்த்தாச்சு !
யூ ஆர் த பஸ்ட்! :-)
அதுக்குள்ளே பையா பார்த்தாச்சா!!!
படம் பரவாயில்லைனு சொல்றீங்க போல இருக்கு.
அவர் பேரு கார்த்திதானே? ஒருவேளை கார்த்திக்தானா? ஏற்கனவே ஒரு கார்த்திக் இருப்பதால் க் கை கழட்டிட்டாங்களா?
//யுவன் இசையில் மூன்று பாடல்கள் இனிமை, பின்னனி இசையும் இளைய ராஜாவின் இளைய ராஜா சிறப்பாக செய்திருக்கிறார்.//
நாகப்பட்டினம் ஆளு இல்ல! வார்த்தை விளையாடுது. அதான் காளமேகமே பாராட்டினார், பாக்குத் தெறித்து விளையாடும் பாலகர் நாவில் தமிழ் தெறிக்கும் திருநாகைன்னு.
தமன்னாவோட ஸ்டில் ஒண்ணையும் போட்டதுக்காக சிறப்புப் பாராட்டுக்கள்.
http://kgjawarlal.wordpress.com
விமர்சனம் அருமை...
கவர் வர்றதுக்குள்ள என்ன அவசரம்!?--
அங்கியுமா?
படம் பார்க்கலாமா வேண்டாமா.
தொடர்ந்து இதே போன்றே பாத்திரப் படைப்பில் நடித்தால் போரடித்துவிடும்
:)
:):):):)
//பைய.....fine fine.//
//பையா fine//
//பையா.......பைன் எனக்கு பிடித்து இருக்கு. சிவக்குமாரின் சின்னப் பையன் பாஸ் பாஸ்//
என்னாதிது?? இப்பல்லாம் தண்ணியடிக்கிறது இல்லைன்னு சொன்ன மாதிரி நினைவு.
கார்த்தியின் மூன்றாவது படம். தேரிடுவார். கதாபாதிரங்களை சற்று தேர்தேடுத்து நடித்தால் எதிர் காலத்தில் நன்றாக வருவார்.
உங்கள் பிளாக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்கள் உணர்வு மற்றும் உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
அருமையான விமர்சனம் அண்ணே.. அண்ணே என்ன ஆளே காணோம்.
அண்ணே உங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன்; மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக