பின்பற்றுபவர்கள்

8 பிப்ரவரி, 2010

ஏதுமறியாதவர்கள் முக்தி பெற (Mukthi for Dummies) !

பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
கருணாநிதி : வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

*****
இங்கு திருவள்ளுவர் சொல்லுவது பிறவியா பிறவிகளா ? சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் மூவரும் பிறவி என்னும் ஒருமைக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், முவ பற்றி சரியாகத் தெரியவில்லை, முக பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர், சாலமன் பாப்பையா கிறித்துவர் என்பதால் அவரும் பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர். மூவருமே பிறவி என்பதற்கு வாழ்க்கை என்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், இதில் கருணாநிதி தவிர்த்து இருவரும் இறைவன் என்பதற்கு நேரடி பொருளைச் சொல்லி இருக்கிறார்கள், கருணாநிதி இறைவன் என்பதற்கு தலைவன் என்பதாக அவருடைய பொருளைச் சொல்லி இருக்கிறார்.

இதே குறளுக்கு சைவ சித்தாந்தம் மற்றும் ஆத்திகவாதிகள் பிறவி என்பதை பல்வேறு பிறவி அல்லது பிறவிகள் (மறு பிறப்புகள்) என்பதாக சொல்லி பெரும் துன்பத்தைத் தரும் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்க வேண்டுமெனில் பிறவாத் தன்மையைத் தரும் இறைவனின் திருவடிகளைப் பற்ற வேண்டும் என்பதாக விளக்குவர்.

திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்கிற ஆராய்ச்சியில் அவர் சமணர், பெளத்தர், சைவர், வைணவர் மற்றும் கிறித்துவர் என்பது போல் சொல்லும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக சொல்ல முனைகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே இன்னும் அது போல் செய்யவில்லை, திருவள்ளுவர் கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து அவர் இந்த மதத்துக்காரர் என்று சொல்ல முயற்சிக்கும் கொடுமை திருவள்ளுவருக்குத் தான் நடந்திருக்கிறது, இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அவர் தின்றுவிட்டு தூங்கி இருப்பார். :) திருக்குறளில் இடம் பெறும் சில சொற்கள் குறிப்பாக எண் குணத்தான், மலர்மிசை ஏகினான், பகவன் என்ற சொற்கள் சமணம் மற்றும் பெளத்த மதத்தைச் சார்ந்த சொற்கள் என்பர், எனவே திருவள்ளுவர் இந்த இரு மதங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி. மற்றபடி திருவள்ளுவர் சைவரா, வைணவரா, கிறித்துவாரா என்பதற்கு சான்றுகள் குறைவு மற்றும் அவர் காலங்களில் இவை மூன்றும் மதங்களாக/சமயங்களாக அறியப்படாதவை.

சைவம், வைணவத்தின் கூறுகள் பழந்தமிழர் மற்றும் பார்பனர்களின் வேத வழிபாடுகளின் கலவைகளால் ஏற்பட்ட பின்னாளில் சமயங்களாக வளர்ந்தவை, ஆதிசங்கரரை இவ்வாறு சைவம், வைணவம் என்று அடைப்பார்களா ? ஆனாலும் திருவள்ளுவரை ஏன் முயற்சிக்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது, அவ்வாறு முயற்சிப்பது அவரை சிறுமைப் படுத்தும் முயற்சியாகும், நான் திருவள்ளுவரை சமணர் பெளத்தர் என்று நினைக்கவில்லை, இருந்தாலும் அவ்வாறு இருக்க கூறுகள் மிகுதி என்பதை அறிஞர்கள் காட்டும் போது ஒப்புக் கொள்கிறேன்.

*****

சொல்ல வந்தது முக்தி பற்றி அல்லவா ? முக்தி என்பது பிறவி அற்ற நிலையாம். அப்படி என்றால் ஜீவன் முக்தி என்கிறார்களே அது என்ன என்று கேட்டால் ஒருவரும் சரியாகச் சொல்வதில்லை. ஜீவன் என்பதற்கு வாழ்க்கை என்று பொருள், இல்லாவிடில் எல் ஐ சி பாலிசிகளில் 'ஜீவன்' என்கிற சொல் இடம் பெற்றிருக்காது :) ஜீவன், ஜீவ என்பதன் பொருள் உயிரோட்டமுள்ள என்பதாக வடமொழியில் வழங்கப்படும். ஜீவா என்றால் ஜீவித்திருப்பவர், அதாவது வாழ்பவர் என்ற பொருள். ஜீவன் முக்தி என்றால் ? வாழும் நிலையிலேயே முக்தி பெற்றவராம். முக்தி என்பது 'தன்னை' அழிப்பது, பிறவா நிலை என்று விளக்கம் சொல்பவர்கள், ஜீவன் முக்திக்கான விளக்கத்தில் சறுக்குகிறார்கள். இதுவே இப்படி இருக்கையில், முக்திவேண்டுவோர் நாட வேண்டிய இடம் ? கேட்பதற்கு வானொலி விளம்பரம் போன்று இருந்தாலும் இப்போதெல்லாம் ஆத்திகம், உயர்தர ஆன்மிகம் ( உயர்தர சைவ உணவகம் போல்) முக்தி என்பது பற்றி பரவலாகப் பேசப்படுகிறது, பிறவா நிலையை அடைவதே வாழ்வின் உயர்ந்த நோக்க(லட்சிய)மாம். இருந்துவிட்டு போகட்டுமே. என்று நினைக்கும் படி அது போன்ற விளம்பரங்கள் இல்லை,

இந்துத்துவம் சார்ந்த இணைய தளம் ஒன்றில் முக்தி பற்றி படிக்க நேர்ந்தது, மூன்று வழியில் முக்தி அடையலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்,
சிவனையே பரப்பிரம்மமாக வணங்குபவர்களுக்கு முக்தி கிட்டுமாம், நாராயணனை முழுமுதல் கடவுளாகவும், பரப்பிரம்மமாகவும் நினைத்து வழிபடுபவர்களுக்கு முக்தியாம், இவர்களின் வழியாக முக்தி பெற விரும்புபவர்கள் இவர்களைத் தவிர வேறு இறைவனை நினைக்கக் கூடாது, அப்படிச் சொல்வதால் பிற தெய்வங்களை குறைகூறலாம் என்ற பொருள் இல்லையாம். மூன்றாவது சொன்னது தான் சிறப்பே, கிடைப்பதற்கரிய பிராமணப் பிறவி அடைந்து அதன் வழி ஒழுகுவது முக்தியாம், 'பிராமணப் பிறவி பெற்று' என்று நேரடியாக எழுதினால் கண்டனங்கள் வரும் என்பதைத் தவிர்க்க பிரம்ம தேஜஸ் (பிரமண உடல்) பெற்று முக்தி அடைவானாம்.

கிறித்துவம், சமணம், பவுத்தம், இஸ்லாம் போன்ற புறச் சமயங்களுக்கு முக்தி கிடைக்காதாம், இதில் பிறந்தவர்கள் வேதம் போற்றும் இந்து மதத்தில் எப்போதாவது மறு பிறவி எடுத்தால் முக்தியை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்பார்களாம்.

ஐயோடா சாமி, தேவ நாதன் (அவர்கள் சொல்லும்) பிரமணாகத்தான் பிறந்தான், இந்த பிறவியில் தப்பு செஞ்சுட்டான், மீண்டும் மீண்டும் பிரமணாகவே பிறந்து முக்தி அடைவானா ? அல்லது கிடைப்பதற்கரிய பிரமணப் பிறவியில் அவன் தப்பே செய்திருந்தாலும் மனு சூத்திரங்களின் மெய்வாக்கின் படி அவை தப்பாக கருதப்படாது அவனுக்கு முக்தி கிடைக்குமா தெரியவில்லை.

முக்தியை நாட விரும்புவரா நீங்கள் ?
மூன்றே வழி உண்டு,

1. சிவனை துதிப்பது
2. நாராயணனை நமஸ்கரிப்பது
3. இறுதி பிறவியான பிரமணாக பிறவி எடுக்க வேண்டிக் கொள்வது.

முக்தியை மூன்று ப்ளாட் போட்ட ரியல் எஸ்டேட் விற்பனை போல் இருக்கிறதா ?

செத்தவன் திரும்ப பிறந்தானா ? முக்தி அடைந்தவன் மீண்டும் பிறக்கவே இல்லையா ? இதற்கெல்லாம் எந்த ஒரு சான்றுகளும் கிடையாது. நம்பிக்கையின் பேரில் தான் விற்பனைகள்.

இதுக்குமேல முக்தி வேண்டும், அடைந்தே தீருவேன் என்று முக்தி மேல் பற்று கொண்டோர் யாராவது உண்டா ? முக்தி விற்பனை மட்டுமல்ல, நிரந்தர சொர்கம் கிடைக்கும் வாருங்கள் என்று கூவும் மதவியாபரங்கள் கூட இப்படித்தான். இவர்களின் விளக்கங்கள் யாவும் மிகவும் தட்டையானது, குறுகியதும், கற்பனையனாதும் பொது அறிவுக்கு ஏற்றவையல்லாததும் ஆகும்.

*****

என்னைக் கேட்டால் 'அறியும்' நிலை தரும் பிறவி எதையும் அறியா நிலை என்னும் முக்தி (எனும் கற்பனை)யைவிட மேலானது. அப்படி ஒன்று இருந்தாலும் கூட அதைப் பிறவியின் வழியாகத்தானே அறிந்து கொள்ள முடியும். இருந்த இடமும் , ஏற்றிய ஏணியும் துன்பம், ஏறிய இடம் தான் உயர்வு என்பதான வாதம் எந்த விதத்தில் சிறந்தது என்று தெரியவில்லை. கருப்பை துன்பம், வாழ்க்கை இனிமை என்று சொன்னால் அது ஞாயமா ? கருப்பை இல்லை என்றால் இருப்பே இல்லே. அது போல் தான் வாழ்க்கை நரகம், துன்பம், பிறவா நிலையே மேலானது என்கிற கூற்றும்.

நம்மால் சொர்கமாக்கக் கூடிய வாழும் பூமியை நரகமாக்கிவிட்டு இல்லாத சொர்கத்துக்கு எண்ணற்ற புனைவுகள். மனிதன் கற்பனைக் கோட்டையே இது போன்ற சொர்க்கம், முக்தி பற்றிய கட்டுமானங்கள். இந்த கோட்டைகள் உடையாது, வெறும் உளவியலுக்காக தமக்கு தாமே எழுப்பிக் கொள்வது, இந்த கனவுக் கோட்டைகள் உடைந்தாலும் நட்டம் யாருக்கும் கிடையாது. இருந்தாலும், வாழும் உலகை இன்பமயமாக்க ஏதாவது செய்துவிட்டு கற்பனைச் சொர்கம், முக்தி பற்றிப் பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.

53 கருத்துகள்:

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

நல்ல பகிர்வு
----
மேலும் பார்க்க
கரும்பைப்போல் சுவைக்க
http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_14.html

துளசி கோபால் சொன்னது…

கடைசிப் பாரா சூப்பர்.

முதலில் மனுஷன் மனுஷனா வாழக் கத்துக்கட்டும்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பாஸ் இங்கே எனக்கொரு சந்தேகம்,

பிறவி பெருங்கடலை நீந்தியோர் எல்லாம் இறைவனடியை சேர்ந்திடுவார்கள் என சொல்ல இயலுமா?

இறை என்பது பகுப்பு என்றும் அறியப்படும்.

தனது வாழ்வை பகுத்தறிந்து வாழ்பவன் பிறவி எனும் பெருங்கடலை நீந்துவான் என்றும் அப்படி பகுத்தறிந்து வாழாதோன் அப்பெருங்கடலை நீந்த இயலார் எனவும் இக்குறள் காட்டுகிறது.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கோவி, கோவியாராகி, கோவியானந்தாவாகவே மாறி வரும் பக்குவம் ஆரம்பித்து விட்டது போல் இருக்கிறதே:-))

சரியான பதம் வருகிற வரை நாமும் கொஞ்சம் சேர்ந்து கிண்ட வேண்டாமா?

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

என்கிறார் வள்ளலார். முக்தி, என்பது ஒரு preparatory stage மட்டும் தான்! காமாலை தொற்றி இருக்கும் போது, பார்க்கிறதெல்லாம் மஞ்சள் மஞ்சளாகத் தெரிவதில் இருந்து விடுபடவேண்டுமானால் மஞ்சள் சால்வை போர்த்திக் கொண்டால் மட்டுமே போதாது, காமாலைக்கு மருந்தும் சாப்பிட வேண்டும் இல்லையா?

அது மாதிரி ஒரு வகைப் பற்று, பிடிமானம், இது அளவுகடந்த ஆசை அல்லது முற்றிப்போய் அளவு கடந்த வெறுப்பு இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம், முதலில் அதில் இருந்து விடுபட்டாக வேண்டும்! அது தான் முத்தி!

ஆரம்ப நிலை இது!

எதோ பிரசவ வைராக்கியம் மாதிரி, புருஷனைக் காய்ச்சி எடுக்கிற பெண், அப்புறமாக அவனுடன் இசைந்து போகிற மாதிரி இல்லாமல், இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால், அதுவே சித்தி!

அதைத் தான், நம்மாழ்வார் பாவனை அதனைக் கூடில் பரமனைக் கூடலாமே என்று அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார்.

சொர்க்க நரகம் எமன், எண்ணெய்க் கொப்பரை, பாவிகளே மனம் திரும்புங்கள், பாவத்தின் சம்பளம் மரணம், பத்துப்பெர்சென்ட் காணிக்கை கொடுத்தால் உங்களுக்காக ஜெபக்கூட்டம், ஊழியம் செய்வது என்கிற மாதிரி உடான்செல்லாம் நாடக சீனுக்குப் பக்க வாத்தியக் காரர்கள் ஒரு ம்யூஜிக் போடுவார்களே அந்த மாதிரி சும்மா ஒரு எஃபெக்ட், அம்புட்டுத்தேன்!

ஹார்மோனியம் தபலா சத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு, இன்னும் கொஞ்சம் உள்ளே வாருங்கள்!

Robin சொன்னது…

//சொர்க்க நரகம் எமன், எண்ணெய்க் கொப்பரை, பாவிகளே மனம் திரும்புங்கள், பாவத்தின் சம்பளம் மரணம், பத்துப்பெர்சென்ட் காணிக்கை கொடுத்தால் உங்களுக்காக ஜெபக்கூட்டம், ஊழியம் செய்வது என்கிற மாதிரி உடான்செல்லாம் நாடக சீனுக்குப் பக்க வாத்தியக் காரர்கள் ஒரு ம்யூஜிக் போடுவார்களே அந்த மாதிரி சும்மா ஒரு எஃபெக்ட், அம்புட்டுத்தேன்!// அப்படியா! அப்போ பார்ப்பானா பிறந்தா முக்தி கிடைக்கும்னு சொல்றது மட்டும் நிஜமா.

Robin சொன்னது…

//கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. // அப்படியா! இது தெரியாம இவ்வளவு நாளும் நான் கிறிஸ்தவன்னு நினைச்சிக்கிட்டு இருந்துட்டனே? எப்படியோ உண்மையை உணர்த்தி விட்டீர்கள். முதல் காரியமா ஒரு குல்லா வாங்கணும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...

//கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. // அப்படியா! இது தெரியாம இவ்வளவு நாளும் நான் கிறிஸ்தவன்னு நினைச்சிக்கிட்டு இருந்துட்டனே? எப்படியோ உண்மையை உணர்த்தி விட்டீர்கள். முதல் காரியமா ஒரு குல்லா வாங்கணும்.//

:) அது உங்கள் விருப்பம், ஆப்ரகாமுடன் சேர்ந்து அல்லா இஸ்லாமைத்தான் உருவாக்கினார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏசு இஸ்லாமியர்களின் நம்பிக்கை படி அவரும் ஒரு இஸ்லாமிய நபி, அவருக்கு இஸ்லாமிய பெயர் ஈஸா நபி.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//ஏசு இஸ்லாமியர்களின் நம்பிக்கை படி அவரும் ஒரு இஸ்லாமிய நபி, அவருக்கு இஸ்லாமிய பெயர் ஈஸா நபி.//

நம்பிக்கை தானே. நம்பிக்கை எல்லாம் நிஜம் என கொள்ள இயலுமா பாஸ்?

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...

//ஏசு இஸ்லாமியர்களின் நம்பிக்கை படி அவரும் ஒரு இஸ்லாமிய நபி, அவருக்கு இஸ்லாமிய பெயர் ஈஸா நபி.//

நம்பிக்கை தானே. நம்பிக்கை எல்லாம் நிஜம் என கொள்ள இயலுமா பாஸ்?//

தெரியல பாஸ் !
:)

ஏசு இருந்தார் என்பது கிறித்துவ வரலாறு, நபிகள் நாயகம் முகமதுவின் வாழ்வும் வரலாறாக பதியப்பட்டு இருக்கிறது, கிறித்துவம், இஸ்லாம் - இணைப்புகள், தொடர்புகள் இவற்றில் நம்பிக்கைகளும் இருக்கின்றன. அவை உண்மையா நம்பிக்கையா நம்பிக்கையாளர்களுக்கே வெளிச்சம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நண்டு=நொரண்டு said...

நல்ல பகிர்வு
----
மேலும் பார்க்க
கரும்பைப்போல் சுவைக்க
http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_14.html//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger துளசி கோபால் said...

கடைசிப் பாரா சூப்பர்.

முதலில் மனுஷன் மனுஷனா வாழக் கத்துக்கட்டும்.//

நன்றி அம்மா.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதைத் தான், நம்மாழ்வார் பாவனை அதனைக் கூடில் பரமனைக் கூடலாமே என்று அழகுத் தமிழில் சொல்லியிருக்கிறார்.//

நம்மாழ்வார் அல்லது திருமுருக கிருபானந்தவாரியாரோ அவற்றையெல்லாம் சொல்கிறார்கள் என்பது சரித்தான். ஆனால் மதவாதிகள் அதைப் பற்றிப் பேசுவதால் யாருக்கு பலன், அதில் அவர்கள் வைக்கும் அரசியல்கள் இவற்றைத்தான் எடுத்துக் கூறினேன். மற்றபடி யார் முக்தி அடைந்தாலும் மறுபிறவி எடுத்தாலும் எனக்கு எதுவும் இல்லை.

நன்றி திரு கிருஷ்ண மூர்த்தி ஐயா.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/அப்போ பார்ப்பானா பிறந்தா முக்தி கிடைக்கும்னு சொல்றது மட்டும் நிஜமா/

அது நீங்க என்ன மாதிரிப் பாப்பானா இருக்கீங்க என்பதைப் பொறுத்தது!

தேவநாதன் மாதிரி வெறும் சில்மிஷம் மட்டும் பண்ணினவனா இருந்தா ஜெயில், விளக்கு மாத்து அடி எல்லாம் உத்தரவாதம்! தினத்தந்தியில் போட்டோ எல்லாம் வந்ததே!

மடாதிபதியா இருந்து, தப்புப் பண்ணி ஜெயிலுக்குப் போனாலும், ஆட்சியையும் காட்சியும் மாறும்போது,ஒரு understanding இல், சாட்சிகள் எல்லாம் பல்டி அடித்து, கூடிய சீக்கிரமே வம்பு வழக்கு இவற்றில் இருந்து முக்தி (விடுதலை) பெறுவது நிச்சயம்!

தசமபாக விநோதங்களை ராபின் இன்னமும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை போல இருக்கிறது!

அது சங்கடங்களில் சிக்கிக் கொண்டவர்களை விட இன்னும் அசிங்கம்!

விக்னேஸ்வரன், பாத்து ரொம்ப நாளாச்சு!

ஏசுவை இறைத் தூதராக ஏற்றுக் கொள்கிறார்கள், ஈசா நபி என்றும் அழைக்கிறார்கள்! ஆனால், முசல்மான்கள், கிருத்தவத்தை ஏற்றுக் கொள்வதில்லை!

Robin சொன்னது…

//தசமபாக விநோதங்களை ராபின் இன்னமும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை போல இருக்கிறது!

அது சங்கடங்களில் சிக்கிக் கொண்டவர்களை விட இன்னும் அசிங்கம்! //

உங்கள் புராணக் கதைகளைவிட அசிங்கமா?

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஆமாம் ராபின்!

http://devapriyaji.wordpress.com/2010/02/05/police-shielding-bishop/

வாடிகன் புராணம் கொஞ்சம் அரசியல், நிறைய அசிங்கம் என்று இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

/கிருஷ்ணமூர்த்தி said...

ஆமாம் ராபின்!

http://devapriyaji.wordpress.com/2010/02/05/police-shielding-bishop/

வாடிகன் புராணம் கொஞ்சம் அரசியல், நிறைய அசிங்கம் என்று இருக்கும்.//

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

நல்லதைப் பாருங்கள், நல்லதை எழுதுங்கள் என்று எனக்கு சொல்லுவிங்க. இப்ப நீங்களே இப்படி மாற்றி மாற்றி உதா'ரணங்களை' அடுக்குகிறீர்கள்.

அவர் சொன்னக் குறை உங்களுடையது அல்ல, பொதுவான ஒன்றைத்தானே காட்டினார். பதிலுக்கு உங்க மதம் சரியா என்பது போன்ற கேள்விகள் இந்து மதத்தை தூய்மை படுத்தும் என்று நான் நம்பவில்லை.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

நான் ராபினைக் குறை சொல்லவில்லை!

தேவனாதனையோ,சங்கடத்தில் சிக்கிக் கொண்டு அரசியல் தஞ்சத்துடன் சாட்சிகளைப் பிறழ வைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பார்ப்பானையோ கூட நியாயப்படுத்தவோ, வக்காலத்து வாங்கிப் பேசவுமில்லை.

பார்ப்பானில் ஆரம்பித்துப் புராணத்திற்குப் போனார்! புராண அசிங்கங்கள் எல்லா இடத்திலும் உண்டு என்பதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே அடுத்ததையுமே சொன்னேன்.

இங்கே கூட, எதையும் கேட்டதாகச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலோ, வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லவேண்டும் என்கிற எண்ணத்திலோ இல்லை!

எந்த ஒரு விஷயமாக இருந்தாலுமே, அதில் உடன்படுகிற அம்சங்கள் கொஞ்சம் இருக்கும், மறுக்கப் படவேண்டிய விஷயங்கள் கொஞ்சம் இருக்கும்.

முத்தி அல்லது விடுதலை என்பதைப் பேச வந்த பதிவில், அவருக்கு உண்மையாக அந்த விஷயத்தில் பட்டதை, தெரிந்ததை, அல்லது தெரிந்துகொள்ள வேண்டியதைப் பேசியிருந்தாரேயானால், அது அவருக்கும் உபயோகமாக இருந்திருக்கும், இல்லையா?

எதைப் பிடித்துக் கொண்டு எங்கே போகிறோம் என்பது தான் மிகவும் முக்கியம்!

பித்தனின் வாக்கு சொன்னது…

இது எனது கருத்து அல்ல, நான் படித்த கருத்துக்கள்.
ஏழு பிறவி நிலைகள் உள்ளதாகவும், அவற்றில் பசுவும்,பிராமனனும் உயர்ந்தது என்றும் கூறுவார்கள். பிராம்னன் ஆக பிறப்பவன் முக்தியடைய சாத்தியம் அதிகம் உள்ளதாகவும், ஆனால் அந்த நிலையில் இருந்து தவறினால் சாக்கடையில் புழுவாய் பிறப்பார்கள் எனவும் கூறுவார்கள். எனக்கும், தேவ நாதனுக்கும் சாக்கடை புழுவுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கின்றேன். நன்றி.

பித்தனின் வாக்கு சொன்னது…

நான் படித்த வரையில் திருவள்ளுவர் சமணர் என்றுதான் கேள்விப் பட்டேன்.

பெயரில்லா சொன்னது…

ஜீவன் என்பதற்கு வாழ்க்கை என்று பொருள், இல்லாவிடில் எல் ஐ சி பாலிசிகளில் 'ஜீவன்' என்கிற சொல் இடம் பெற்றிருக்காது //அருமையான கண்டுபிடிப்பு அய்யா

பெயரில்லா சொன்னது…

முதலில் மனுஷன் மனுஷனா வாழக் கத்துக்கட்டும்.//
அது தாங்க பிரச்சனை

கோவி.கண்ணன் சொன்னது…

/எனக்கும், தேவ நாதனுக்கும் சாக்கடை புழுவுக்குத் தான் வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கின்றேன். நன்றி.//

மிஸ்டர் சுதாகர்,

தேவநாதன் பற்றி ஊருக்கே தெரியும், உங்களைப் பற்றி நீங்களே இப்படி ஒப்பிட்டு சொல்றிங்க. :)

ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

//அவற்றில் பசுவும்,பிராமனனும் உயர்ந்தது என்றும் கூறுவார்கள்.//

பாலை ஒட்ட ஒட்ட கறந்த பிறகு அடிமாட்டுக்காரனிடம் விற்று, கேரளாவுக்கு சென்று மலையாளிகள் வயிற்றில் முக்தி அடையுது பசுக்கள். பார்பனர்கள் முக்தி அடைவது எவ்வாறு என்று தெரியல, சிக்கன் மட்டன் அவர்களின் சிலர் வயிற்றில் முக்தி அடைவது தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

நான் படித்த வரையில் திருவள்ளுவர் சமணர் என்றுதான் கேள்விப் பட்டேன்.//

நீங்க இந்துத்துவா இல்லையா ? ஓ கேள்விப்பட்டேன் என்று தான் சொல்கிறீர்கள், அதை ஒப்புதல் என்று கொள்ள முடியாது இல்லையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

இது எனது கருத்து அல்ல, நான் படித்த கருத்துக்கள்.
ஏழு பிறவி நிலைகள் உள்ளதாகவும்,//

எல்லாம் புரோமசன் ஆகி கடைசியில் பார்பனர்களாக பிறக்கிறார்கள் என்று கேள்வி பட்டிங்களா ?

அப்படி என்றால் இன்னாள் சூத்திரர்கள் அறியாமையில் முன்னாள் சூத்திரர்களை ஐ மீன் இன்னால் பார்பனர்களை தூசிக்கிறார்கள் என்று நினைத்து அதைப் புறந்தள்ளலாம் அல்லவா ?

ஏனென்றால் இன்னும் சில பிறவிகள் இருக்கு, அவர்களும் கடைசியால பார்பனர்களாகத்தானே பிறந்து முக்தி அடையப் போகிறார்கள். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்கோ.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜீவன் என்பதற்கு வாழ்க்கை என்று பொருள், இல்லாவிடில் எல் ஐ சி பாலிசிகளில் 'ஜீவன்' என்கிற சொல் இடம் பெற்றிருக்காது //அருமையான கண்டுபிடிப்பு அய்யா//

ரொம்ப நாளாக ஆளைக் காணூம் ? நலமா ?

Robin சொன்னது…

//முத்தி அல்லது விடுதலை என்பதைப் பேச வந்த பதிவில், அவருக்கு உண்மையாக அந்த விஷயத்தில் பட்டதை, தெரிந்ததை, அல்லது தெரிந்துகொள்ள வேண்டியதைப் பேசியிருந்தாரேயானால், அது அவருக்கும் உபயோகமாக இருந்திருக்கும், இல்லையா?// இது நான் சொல்லவேண்டியது. முக்தியை பற்றி பேச வேண்டிய இடத்தில் கிறிஸ்தவர்களை கிண்டல் செய்து வேண்டுமென்றே வம்புக்கிழுத்தது நீர்தானே.

முதலில் பரம யோக்கியர்களை போல பேசும் நீங்கள், போக போக சுயரூபத்தை காட்ட ஆரம்பித்து விடுகிறீர்கள்.

//பார்ப்பானில் ஆரம்பித்துப் புராணத்திற்குப் போனார்! புராண அசிங்கங்கள் எல்லா இடத்திலும் உண்டு என்பதை அவர் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டுமே அடுத்ததையுமே சொன்னேன்.// நீர் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லா மதங்களை பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன். உம்மிடம் கற்றுக் கொள்ளும் அளவுக்கு உம்மிடம் சரக்கு இருப்பதுபோல தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

திரு ராபின்,

கருத்து விவாதங்கள் தேவை தான், அதன் மூலம் நம் எண்ணங்களை மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, கிருஷ்ண மூர்த்தி ஐயாவிடம் நான் கேள்வி எழுப்பினேன், அவர் பதில் சொன்னார். நீங்களும் பதிலுக்கு பதில் போல் பேசுவதும், உணர்சி வசப்படுவதும் வருத்தம் அளிக்கிறது. பொதுக்கருத்து என்பது தவிர்த்து கிருஷ்ண மூர்த்தி ஐயா தனிமனிதர்கள் மீது அன்பு கொண்டவர், எனக்கும் அவருக்கும் கொள்கை அளவில் உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் நல்ல நட்பு உண்டு.

அவரும் உங்களை குறை சொல்லவில்லை என்று தானே சொல்லி இருக்கிறார். அவர் கருத்துடன் உடன்படத் தேவை இல்லை, ஆனால் அது அவருக்கு இருக்கும் மரியாதையையும் முடிவு செய்வதாக நான் நம்புவதில்லை. உங்கள் சொற்களின் கடினத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். முதலில் நாம் ஒருவரை ஒருவர் மதிப்பது அதன் பிறகே நம் கருத்துகளுக்கான மதிப்பு, அதுவும் கூட ஏற்பு மறுப்பு என்றில்லாமல் விவாதம் என்பதாக அமைந்தால் நன்றாக இருக்கும்.

நான் சிலரிடம் கடிந்து கொள்வதுண்டு ஒப்புக் கொள்கிறேன், அது என்னுடன் தொடர்பு உள்ளவர்கள், எதிரே பார்த்தால் மறந்துவிடுவார்கள் என்பதற்காகவும் அந்த வாய்பிற்காகவும், மற்றொன்று அனானிகள் அவர்களை எப்போதும் பார்க்கப் போவதுமில்லை. மற்றவர்களிடம் எப்போதும் மதிப்புடன் தான் நடந்து கொள்கிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

1 . திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவரா இருந்தா என்ன ? அவர் சொல்ற கருத்துக்கள் நல்லவையா கெட்டவையா என்றுத்தான் ஆராயனுமே தவிர ..

மத அடையாளத்தை ஏன் புகுத்துறாங்க ..

2 . டீ குடிச்சிட்டு வாரேன் .. :))

நிகழ்காலத்தில்... சொன்னது…

திரு. ராபின்

சாந்தம் :))

மனிதன் இவ்வுலகில் பிறந்த பின் அணிந்து கொள்ளும் ஒரு ஆடைதான் மதம். இதில் உயர்வு தாழ்வு எதுவும் இல்லை.

அவரவர் மதம் அவரவருக்கு உயர்வு,

உங்களது உணர்ச்சி வசப்பட்ட பதில் விவாதத்தை தடை செய்து வேறு திசையில் திரும்பி விடும்.

திரு. கோவியானந்தா

முக்தி என்பது இல்லாத ஒன்றாக வைத்துக்கொண்டாலும், இருப்பதாக நினைத்து கொண்டு எங்களவர்கள் செய்யும் செயல்கள், அதனால் விளையும் விளைவுகள், அதில் உள்ள போலித்தனம் போன்றவற்றை
எழுதினால் பயனாக இருக்கும்.

\\வாழும் உலகை இன்பமயமாக்க ஏதாவது செய்துவிட்டு கற்பனைச் சொர்கம், முக்தி பற்றிப் பேசினால் ஏற்றுக் கொள்ளலா\\

இல்லாத முக்தியை அடைவதற்கு இவ்வுலகிற்கு என்ன செய்தோம் என்பது மிகச் சாதரண அடிப்படை விதி..

சரி ஓம்கார் வரட்டும் :))

கோவி.கண்ணன் சொன்னது…

// Starjan ( ஸ்டார்ஜன் ) said...

1 . திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவரா இருந்தா என்ன ? அவர் சொல்ற கருத்துக்கள் நல்லவையா கெட்டவையா என்றுத்தான் ஆராயனுமே தவிர ..

மத அடையாளத்தை ஏன் புகுத்துறாங்க ..

2 . டீ குடிச்சிட்டு வாரேன் .. :))//

:)

வெறும் டீ தானா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு. கோவியானந்தா

முக்தி என்பது இல்லாத ஒன்றாக வைத்துக்கொண்டாலும், இருப்பதாக நினைத்து கொண்டு எங்களவர்கள் செய்யும் செயல்கள், அதனால் விளையும் விளைவுகள், அதில் உள்ள போலித்தனம் போன்றவற்றை
எழுதினால் பயனாக இருக்கும்.//

எங்களவர் என்றால் என்ன ?
:) நீங்கள் வாழ்க வளமுடன் என்று தானே சொல்லுவிங்க, அவங்க போலித்தனமாக இருக்கிறார்களா ?
:)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//சரி ஓம்கார் வரட்டும் :))//

முக்தி பெற்றவர்கள் இக்கட்டுரைக்கு மறுமொழி இடுவதில்லை.. :)

மெளனமே முக்தி..!

நிகழ்காலத்தில்... சொன்னது…

எங்களவர்கள் என்றால் ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் என பொருள் வருமாறு எழுதி உள்ளேன்.

முக்தி என்பது ஆன்மீகத்தை சார்ந்த விசயம்தானே :))

மனிதன் முழுமனிதனாக வாழ்ந்து காட்டத்தான் மனவளக்கலை...

தங்களது இடுகையில் குறிப்பிட்டபடி
\\இருந்த இடமும் , ஏற்றிய ஏணியும் துன்பம்,\\ என்ன செய்ய, பொருள் சம்பாதிக்க வேண்டும், உறவுகளோடு இணக்கமாக வாழ வேண்டும், சக பதிவர்களுடன் நட்போடு இருக்கவேண்டும், என்று இனிமையாக வாழ ஆசைப்படும் மனிதன் அதை அடைய இயலாமல் துன்பங்க்ளை எதிர்கொள்ளும்போது இந்த துன்பங்கள் அற்ற நிலை மீது ஆசைபடுகிறான்.

அதை முக்தி அப்படின்னு சொல்லிக்கிட்டு மறுபிறவியை நம்பிக்கொண்டும் இருக்கிறான். \\ஏறிய இடம் தான் உயர்வு என்பதான வாதம் எந்த விதத்தில் சிறந்தது \\

விட்டாப்போதும் என்கிற மனநிலையே முக்தியை நாட வைக்கிறது :))

மகிழ்ச்சியா இருங்க

நிகழ்காலத்தில்... சொன்னது…

//சரி ஓம்கார் வரட்டும் :))//

முக்தி பெற்றவர்கள் இக்கட்டுரைக்கு மறுமொழி இடுவதில்லை.. :)

மெளனமே முக்தி..!\\

மனம் நிரந்தர மெளனமானால் அதுவே இல்லாத முக்தி :))

நிகழ்காலத்தில்... சொன்னது…

http://gurublack.wordpress.com/2009/09/01/%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/

இதை நேரமிருக்கும்போது படித்துப் பாருங்கள்..

வேதாத்திரி மகான் ஜீவன்முக்தி பற்றி சொல்லி இருக்கிறார்.


\\இந்துத்துவம் சார்ந்த இணைய தளம் ஒன்றில் முக்தி பற்றி படிக்க நேர்ந்தது, மூன்று வழியில் முக்தி அடையலாம்\\

அந்தக்கால பிரமணருக்கு உரிய குணங்கள் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.

பிறப்பால் அனைத்து உயிரும் ஒன்றே..

வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப மனிதமனம் பலவித மாறுபட்ட இயல்புகளை அடைகிறது..

சரியாக புரிந்து கொள்ள முயற்சி கொள்ளுங்கள். அல்லது தவறான பொருள் வரும்படி எழுதாதே என எதிர்வினையாற்றுங்கள்.

அந்த இடுகையில் தவறுகள் இருப்பின் அதை சரி என பொருள்வரும்படி எடுத்துக் கொண்டு எதிர்வினை ஆற்றினால் நடுநிலையாளரான தங்களின் இடுகை ஒருபக்க சார்பாக இருப்பதுபோல் தோற்றம் அளிக்கிறது.

சரி சரி தொட்ர்ந்து கலக்குங்க...:))

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

சிவா!

என் மதம் தான் ஒசத்தி என்று எப்போதுமே நான் மதத்தைக் கட்டிக் கொண்டு அழுததில்லை.உண்மையைச் சொல்லப் போனால் என் மதம் உள்ளிட்ட அத்தனையையுமே, அவற்றில் உள்ள கோளாறுகளை விமரிசிக்கத் தயங்கியதும் இல்லை.

இங்கே முதல் பின்னூட்டத்தின் கடைசி இரண்டு பாராவுமே அதற்கு சாட்சி!

@சுவாமி ஓம்கார்!
நெத்தியடி! ஏனோ எனக்குப் பொன்னியின் செல்வன் கதையில் ஆழ்வார்க்கடியானும், வீர சைவனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் கதாநாயகன் வந்தியத்தேவன் உள்ளே புகுந்து சமரசம் செய்யும் பகுதி தான் நினைவுக்கு வருகிறது!

Unknown சொன்னது…

கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்


மனிதர்களில் இரு வகை.வெளினோக்குபவர், உள்னோக்குபவர்
உள்னோக்குபவர் சிந்தித்து சிந்தனையை நிறுத்தினால் உணர்வு விரிவடைகின்றது என்பதை கண்டு அது இட்டுச்சென்றதை சிலர் முக்தி என்கிறார்கள்.இது மதம் கிடையாது.
இது பற்றி ஆழமாக வாசிக்காது எழுத /அபிப்ராயம் கூறுவது விவாதம் செய்வது நான்கு பிறவிக்குருடர்கள் யானை பார்த்த கதையை ஞாபகப்படுத்துகிறது.
சித்தர் பாடல்கள் இது பற்றி கூறுகின்றன.சித்தர் பிராமணர் அல்லர்.
இப்படி தனக்கு புரியாத விடயத்தை மற்றவருக்கு விளங்கப்படுத்தி வழியும் சொல்லும் மு..தனத்தை

” குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழி “ சேருவதாக ஒரு சித்தர் பாடியும் வைத்திருக்கிறார்.

kathar mohideen சொன்னது…

இஸ்லாம் பற்றி உங்களுடைய புரிதல் மிக குறைவு என்பது முஸ்லிம் எனது எண்ணம்.இதனாலே ஹிந்து அல்லது கிறிஸ்தவம் பற்றி உங்கள் கருத்து சரிதானா? என்றே யோசிக்க வேண்டியுள்ளது......
கிறிஸ்தவர்களையும்,யூதர்களையும் எப்படி முஸ்லிம்கள் என்று முஸ்லிம்கள் நினைப்பார்கள்?
இறைவன் ஒருவனே என்ற கொள்கை உடையவர்களே,சிலை வணக்கம் மறுப்பவர்களே முஸ்லிம்கள்....
கிறிஸ்தவர்கள் ட்ரினிடி என்பதிலும் ,சிலை வணக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள்....எப்படி முஸ்லிம் ஆவார்கள்?
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடுவது ஜீஸஸ்
பிறப்பு மற்றும் அவர் புரிந்த அற்புதஙகளை நம்புவதில் மட்டுமே

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

ஒரு குறளுக்கு இவ்வளவு ஆய்வு செய்தி பொருள் கண்டு பிடித்து - அதனை வைத்து விளக்கக் கட்டுரை எழுதி - முக்தி எப்படி அடைவது எனக் கூறி - பலே பலே

அக்குறளுக்கு வள்ளுவன் எழுதும் போது என்ன சிந்தனையில் எழுதினானோ - இறு வந்தானெனில் -= இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பொருள் கூறிச் சென்று விடுவான். எச்சூழ்நிலைக்கும் ஏற்ற வாறு பொருள் வரக்கூடிய சிறப்பு குறளுக்கு உண்டு

நல்வாழ்த்துகள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

//kathar mohideen said...
இஸ்லாம் பற்றி உங்களுடைய புரிதல் மிக குறைவு என்பது முஸ்லிம் எனது எண்ணம்.இதனாலே ஹிந்து அல்லது கிறிஸ்தவம் பற்றி உங்கள் கருத்து சரிதானா? என்றே யோசிக்க வேண்டியுள்ளது......
கிறிஸ்தவர்களையும்,யூதர்களையும் எப்படி முஸ்லிம்கள் என்று முஸ்லிம்கள் நினைப்பார்கள்?
இறைவன் ஒருவனே என்ற கொள்கை உடையவர்களே,சிலை வணக்கம் மறுப்பவர்களே முஸ்லிம்கள்....
கிறிஸ்தவர்கள் ட்ரினிடி என்பதிலும் ,சிலை வணக்கத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள்....எப்படி முஸ்லிம் ஆவார்கள்?
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒன்றுபடுவது ஜீஸஸ்
பிறப்பு மற்றும் அவர் புரிந்த அற்புதஙகளை நம்புவதில் மட்டுமே
//

அல்லா மோசஸ் மற்றும் ஜீஸஸ் வழியாக இஸ்லாமைத்தான் தோற்றுவித்தார் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை, கிறித்துவர்களும், யூதர்களும் முகமது நபியை ஏற்காத இஸ்லாமியர் என்பது போல் தான் இஸ்லாமிய நண்பர்கள் மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள். நான் சொன்னதில் தவறு இருப்பது போல் தெரியவில்லை. நீங்கள் நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அல்லா இஸ்லாமைத்தான் படைத்தார் ஈஸா மூசா உட்பட அனைத்து தூதரும் இஸ்லாமியத் தூதர் என்றால் அவர்களை பின்பற்றுபவர்கள் இஸ்லாமியர் இல்லையா ? புதுக் குழப்பமாக இருக்கிறது. அவர்கள் (கிறித்துவர், யூதர்) அதை ஒப்புக் கொள்ளவில்லை என்பது வேறு, அதை மறுப்பது அவர்கள் உரிமையும் கூட.

முஸ்லிம்கள் அனைவரும் மும்மின்கள் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அன்பின் கோவி

ஒரு குறளுக்கு இவ்வளவு ஆய்வு செய்தி பொருள் கண்டு பிடித்து - அதனை வைத்து விளக்கக் கட்டுரை எழுதி - முக்தி எப்படி அடைவது எனக் கூறி - பலே பலே

அக்குறளுக்கு வள்ளுவன் எழுதும் போது என்ன சிந்தனையில் எழுதினானோ - இறு வந்தானெனில் -= இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் பொருள் கூறிச் சென்று விடுவான். எச்சூழ்நிலைக்கும் ஏற்ற வாறு பொருள் வரக்கூடிய சிறப்பு குறளுக்கு உண்டு

நல்வாழ்த்துகள் கோவி
//

குறள் பதிவின் ஒரு முன்னோட்டம் தான், முக்தி அடைய முன்னூறு வழிகள் நூல் எழுதலாம் என்று உள்ளேன். :)

yrskbalu சொன்னது…

1. krishnmoorthy ji- dont try to change kovikannan. let it be he as it is. then only know other side of man ignorance .

2. siva- pl dont make anything -it is final statement until you realise yourself. comeout with your own reference.

3.my dear kovi kanan- good. keep going. everything you going to negelect or critise - then what will you stand for?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//நம்மால் சொர்கமாக்கக் கூடிய வாழும் பூமியை நரகமாக்கிவிட்டு //

என்னத்தை சொல்ல.

இருக்குறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுத மாதிரி.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\அப்படியா! அப்போ பார்ப்பானா பிறந்தா முக்தி கிடைக்கும்னு சொல்றது மட்டும் நிஜமா.\\

\\உங்கள் புராணக் கதைகளைவிட அசிங்கமா?\\

\\நீர் சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எல்லா மதங்களை பற்றியும் ஓரளவு தெரிந்து வைத்துள்ளேன். உம்மிடம் கற்றுக் கொள்ளும் அளவுக்கு உம்மிடம் சரக்கு இருப்பதுபோல தெரியவில்லை.\\

திரு.ராபினைச் சாந்தம் என சொன்னேன்.
உங்களைச் சொல்லவில்லை திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களே :)))

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\1. krishnmoorthy ji- dont try to change kovikannan. let it be he as it is. then only know other side of man ignorance .

2. siva- pl dont make anything -it is final statement until you realise yourself. comeout with your own reference.

3.my dear kovi kanan- good. keep going. everything you going to negelect or critise - then what will you stand for?\\

திரு.yrskbalu
தங்களின் பல பின்னூட்டங்களை, பல இடங்களில் பார்க்கும்போது சம்பந்தப்பட்ட இடுகையின் பின்னூட்ட நண்பர்களை மிக உரிமை எடுத்துக்கொண்டு அதிகாரத்துடன் அடக்கி விடுகிறீர்கள்.

ஆனால் இடுகையைப்பற்றி கருத்து தெரிவிப்பதில்லை..

அது ஏன் ???????

நட்புடன் சிவா

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\குறள் பதிவின் ஒரு முன்னோட்டம் தான், முக்தி அடைய முன்னூறு வழிகள் நூல் எழுதலாம் என்று உள்ளேன். :) \\

எனக்கு ஒரு புத்தகம் முன்பதிவு செய்து விடுகிறேன்..,

எனக்கு புத்தகம் படிக்கத்தான் வரும்..

அவ்வ்வ்வ்வ்வ்....

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு அண்ணாமலை,
//” குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குழி “ சேருவதாக ஒரு சித்தர் பாடியும் வைத்திருக்கிறார்.//

அந்த அட்ரஸ் இல்லாத சித்தர் பெயர் திருமூலர் என்ற சதாசிவர்.

kathar mohideen சொன்னது…

பதிலுக்கு நன்றி
இஸ்லாம்,முஸ்லிம் என்ற வார்த்தைகள் மட்டுமே அரபியில் பின்னால் முஹம்மத்(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டது.ஆனால் இஸ்லாம்
உலகம் தோன்றும்போதே தோன்றியது.(ஆப்ரஹாமுடன்(அலை)தோன்றியது அல்ல.
ஆதம்(அலை) முதல் ஜீஸஸ் (அலை) வரை முஸ்லிம்களே.....
அவர்களை பின்பற்றுவதாய் நினைத்து அவர்களையும்,பிற‌ சிலைகளையும் வணங்குபவர்கள் அல்ல‌

முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் என்பதால் மட்டுமே எவரும் முஸ்லிம்கள் அல்ல என்பது உண்மை

கோவி.கண்ணன் சொன்னது…

//kathar mohideen said...

பதிலுக்கு நன்றி
இஸ்லாம்,முஸ்லிம் என்ற வார்த்தைகள் மட்டுமே அரபியில் பின்னால் முஹம்மத்(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டது.ஆனால் இஸ்லாம்
உலகம் தோன்றும்போதே தோன்றியது.(ஆப்ரஹாமுடன்(அலை)தோன்றியது அல்ல.
ஆதம்(அலை) முதல் ஜீஸஸ் (அலை) வரை முஸ்லிம்களே.....
அவர்களை பின்பற்றுவதாய் நினைத்து அவர்களையும்,பிற‌ சிலைகளையும் வணங்குபவர்கள் அல்ல‌

முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் என்பதால் மட்டுமே எவரும் முஸ்லிம்கள் அல்ல என்பது உண்மை//

உங்கள் கருத்துப்படியும் ஆப்ரகாமிய மதங்களில் உலகம் தோன்றிய கருத்து தொடர்பிலும் உலக மனிதர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்கிறீர்கள் சரியா ?

kathar mohideen சொன்னது…

பதிலுக்கு நன்றி

//உங்கள் கருத்துப்படியும் ஆப்ரகாமிய மதங்களில் உலகம் தோன்றிய கருத்து தொடர்பிலும் உலக மனிதர்கள் அனைவரும் முஸ்லிம்களே என்கிறீர்கள் சரியா ?//

உலக மனிதர்கள் அனைவரும் ஆதம்(அலை) அவர்களின்
வாரிசுகள் என்கிறேன்... மற்றும் முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் கூட முஸ்லிம்கள் இல்லை என்கிறேன்
முஸ்லிம்கள் யார் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்

Sanjai Gandhi சொன்னது…

ஹய்யோ ஹய்யோ.. :)

Chittoor Murugesan சொன்னது…

கோவி கண்ணன் அவர்களே,
ச்சும்மா சொல்லக்கூடாது "என்னடா இது வச வசன்னிருக்குன்னு படிச்சிக்கிட்டே வந்தேன் ..கட்ட கடைசில கொடுத்திங்க பாரு பஞ்ச் .தூள் சார் !

//வாழும் உலகை இன்பமயமாக்க ஏதாவது செய்துவிட்டு கற்பனைச் சொர்கம், முக்தி பற்றிப் பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.//

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 இந்த முயற்சில ஒரு பாகம் தான்.

Kesavan சொன்னது…

முக்தி for dummies ஒரு சிறிய கதை

ஸ்ரீ ராமானுஜருடைய சிஷ்யரான ஸ்ரீ கூரத்தாழ்வான் தன்னுடைய எல்லா சொத்துகளையும் அந்த ஊர் கிராமத்து மக்களுக்கு கொடுத்து விட்டு அந்த ஊரை விட்டு ஸ்ரீ ரங்கம் சென்றார் . அவர் செல்லும் பொது நாடு ராத்திரி ஆகி விட்டது . அப்பொழுது அவருடைய மனைவி அவரிடம் வழியில் கள்வர் பயம் உண்டா என்று கேட்டார் . அதற்கு கூரத்தாழ்வான் மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் உண்டு என்று சொல்லி, எதற்காக கேட்கிறாய் என்றார் . அவருடைய மனைவி எல்லாவற்றையும் கொடுத்து விட்டோம் , தாங்கள் உணவருந்துவதற்காக தங்க தட்டு மட்டும் வைத்துள்ளேன் என்றார் . உடனே கூரத்தாழ்வான் அந்த தட்டை வாங்கி தூர எறிந்தார் . இனிமேல் எந்த பயமும் இல்லை நிம்மதியாக செல்லலாம் என்று சொன்னார் . அதேபோல் தான் நமது வாழ்கையில் நிறைய சிற்றின்ப ஆசைகளை வைத்து கொண்டு பேரின்பத்தை இழந்து நிற்கிறோம் . அந்த ஆசைகளை கடந்து சென்றால் நமக்கு எந்த துயரமும் இல்லாமல் அந்த இறைவனை அடையலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்