பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2010

கலப்படம் !

படம் 1 : அண்மையில் சென்றிருந்த வானூர்தி கண்காட்சியில் எடுத்த சில படங்கள் இங்கே. இலவச நுழைவுச் சீட்டு கிடைத்தது, நல்ல கூட்டம், கூடவே நல்ல உச்சி வையில் கண் கூசும் சூரிய வெளிச்சம், வகை வகையான வானூர்திகள் காட்சிக்கு நின்று கொண்டிருந்தன, மனித கண்டுபிடிப்புகள் பார்க்க விலங்கின வகைகளில் சேர்கலாம் என்பது போன்ற தோற்றங்கள், குழந்தை, யானை, தொடர் வண்டி பார்பதற்கு அழகாக இருக்கும், வானூர்திகளும் அப்படித்தான். நிறைய எடுத்தேன் கொஞ்சம் இங்கே. தொலைவை கடப்பதற்கு பயன்படுத்தும் ஊர்திகள் அன்றும் இன்றும் போருக்கு பயன்பாடாக மாறிப் போகிறது, அன்று குதிரைகள் பூட்டிய வண்டி இன்று வானூர்திகள். நாம தொழில் நுட்பத்தின் உதவியால் கடக்க நினைக்கும் எல்லைகள் பாதுகாப்பு என்பதில் விழும் ஓட்டைகளாக மாறிப் போகும் போது, பாதுகாப்பு என்ற பெயரில் போர் செய்வதற்கும் அதே தொழில் உத்திகளைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. முன்பெல்லாம் போர் விமானங்களைப் பார்க்கும் போது அழகாக இருப்பதாகத் தோன்றும், இப்போதெல்லாம் அவ்வாறு ரசிக்கத் தோன்றவில்லை.








திரும்பும் வழியில் சாங்கி இரண்டாம் வானூர்தி முனைய புறப்பாடு தளத்தில் அமைத்திருந்த மலர்கள் ஒப்பனை கண் கொள்ளாக் காட்சி.

*****

படம் 2 : சென்ற கிழமை (வாரம்) எங்கள் அலுவலகத்தில் சீன புத்தாண்டு நிகழ்வின் துவக்க கொண்டாட்டம் நடைபெற்றது. ஹலல் (இஸ்லாமிய பரிந்துரை) முறையில் செய்யப்பட்ட சீன உணவு வகைகள், அனைத்தும் அசைவம் தான். நான் வேடிக்கைப் பார்த்ததுடன் சரி. ஒரு தட்டில் பல வகை இனிப்புகளை ஒன்றன் மீது ஒன்றாக கொட்டி, பிறகு உணவு குச்சியால் (சாப் ஸ்டிக்) எதோ கத்திக் கொண்டு அள்ளி அள்ளி போட்டு மகிழ்ந்து பிறகு அந்த கலவையை உண்டார்கள். எந்த ஒரு சீன(ர்) கொண்டாட்டத்திலும் இது நடைபெறுகிறது.



பிறகு விருப்பம் போல் எடுத்து உண்ணும் (பபே) உணவு, புத்தாண்டின் பரிசாக ஆரஞ்சுகள் வைக்கப்பட்ட சிறு அன்பளிப்பு பை கொடுக்கப்பட்டது, அது தவிர்த்து புத்தாண்டு முடிந்து முதல் நாள் அலுவலகத்தில் நிறுவனரால் அனைவருக்கும் சிறிய சிவப்பு அட்டைப் பையில் (ரெட் பாக்கெட் அல்லது சீன மொழியில் ஹங் பாவ்) 20 வெள்ளிகள் கொடுக்கப்பட்டது. மதவேறுபாடின்றி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, சிங்கையில் இனவேறுபாடின்றி அனைவரும் சீனர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி பெற்றுக் கொள்கிறார்கள். ஆங்கில புத்தாண்டு போலவே சீனப் புத்தாண்டும் சிங்கையில் பெரும் கொண்டாட்டமாகவே நடைபெறும், சிறப்பு விற்பனைகள் தள்ளுபடிகள், விடுமுறைகள் வரும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் சீனப் புத்தாண்டு அமைந்துவிடுகிறது.






சீனப் புத்தாண்டு கொண்ட்டாத்தின் பகுதியாக 'ரிவர் ஹங் பாவ் ' எனப்படும் சிங்கப்பூர் ஆற்று வளாகத்தில் நடைபெற்ற பொருள்காட்சிகள் நன்றாக இருக்கும், நேற்று தான் சென்று வந்தேன். வண்ணங்களின் கலவையாக அந்த இடம், திடலின் நடுவே டீ கோப்பையில் செய்யப்பட்ட ட்ராகன் மற்றும் மயில், சர்கரை பாகில் செய்யப்பட்ட ட்ராகன், அதிர்ஷ்ட சீட்டுகளை வீசும் சீன சாமி, செயற்கையாக செய்யப்பட்ட ஒளித் தாமரை குளம் மற்றும் பல பல, ராட்டின வகைகள் சிறுவர் விளையாட்டுகள் என களை கட்டியிருந்தது

படம் 3 : சிங்கைக்கு உடமையான ஒரு சிறிய தீவிற்கு சிறிய வகை உற்சாக கப்பல்கள் செல்கிறது, சென்று வர மூன்று மணி நேரம் வரை பிடிக்கும், போக 45 நிமிடம், வர 35 நிமிடம் தீவில் சுற்றிப் பார்க்க 45 நிமிடம், கட்டணமாக பெரியவர்களுக்கு 20 வெள்ளியும், சிறியவர்களுக்கு 12 வெள்ளிகளும் வாங்குகிறார்கள், பயணத்தின் இடையே தேனீர், பிஸ்கெட் கொடுக்கிறார்கள். நகர இறைச்சல் இன்றி நல்ல அமைதியான பயணமாகவும் இருக்கும். அந்த தீவின் பெயரை தமிழில் எழுதினால் மூக்கை பிடிக்க வேண்டி இருக்கும், ஆங்கிலத்தில் இருக்கிறது, அந்த தீவில் ஆமை கோவிலும், ஆமைகளும் வளர்க்கப்படுகின்றன, ஆமைக்கு மலாய் மொழியில் Kusu என்று பெயர். அதன் பெயரில் அந்த தீவின் பெயர் Kusu ஐலண்ட். நாம வேண்டுமானாம் ஆமைத் தீவு என்று சொல்லிக் கொள்ளலாம்.







*******
தகவல் : ஸ்வாமி ஓம்கார் ஒருவார நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிங்கை வருகிறார். விவரம் இங்கே உள்ளது. ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி தனிப் பதிவு அவருடைய பதிவிலும் எனது பதிவிலும் வரும். திரு ஓம்காரின் வருகையின் போது பதிவர் நண்பர்களிடம் கலந்து பேசிய பின் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும், அது பற்றிய அறிவிப்பும் வரும்.



பலர் என்னிடம் கேட்கிறார்கள், நீங்கள் ஸ்வாமி ஓம்காரின் சிஷ்யரா ? நான் பேசும் ஆன்மிகம் பற்றி தமிழ் பதிவர் உலகம் நன்கு அறிந்தது தான். ஸ்வாமி ஓம்காருக்கு நான் சிஷ்யன் அல்ல, பதிவுலகில் எனக்கு இருக்கும் நெருக்கமான நண்பர்களில் அவரும் ஒருவர்.
பார்பனீயம் பற்றியும் எழுதுகிறேன், எனக்கு நெருக்கமான பார்பன நண்பர்கள் பலர் உண்டு.
ஒத்த துருவங்களைவிட எதிர் துருவங்களே ஈர்க்கும் என்பது என்னைப் பொருத்த அளவில் நட்புக்கும் விதியாக இருக்கிறது.

******


(சிங்கையில் விரைவில் திறக்க இருக்கும் சூதாட்ட நகரம்)


பிகு: வழக்கமாக கலவையாக வரும் பதிவு, படங்களை தாங்கி வருவதால் கலப்'படம்' ஆகியது தலைப்பு. படங்கள் அனைத்தும் ஐபோன் வழியாக எடுத்தவை, அவ்வளவு துல்லியம் இருக்காது.

19 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

ஸ்லைட் ஷோ வில் ஸ்வாமி வ‌ருகை ந‌ன்றாக‌ உள்ள‌து.
சீன‌ புது வ‌ருட‌ம் ‍ இங்குள்ள‌ சீன‌ரிட‌ம் கொங் சி பா சாய் சொன்னேன் அவ‌ரோ ப‌திலுக்கு நாங்க‌ள் இப்போது டிச‌ம்ப‌ர்க்கு மாறிவிட்டோம் என்றும், என்னைப்போல் ப‌ல‌ரும் சிங்கையில் மாறிவிட்டார்க‌ள் என்றார்.
அந்த‌ சூதாட்ட‌ விடுதி இன்னுமா த‌யாராக‌வில்லை?

ஜோதிஜி சொன்னது…

ஒவ்வொரு முறையும் படித்து முடித்ததும் சிங்கப்பூரின் வளர்ச்சியும், உள்ளே நுழைந்து வெளியே வந்தது போல் உணர்கின்றேன். இந்த தீவு எனக்கு புதிய செய்தி.

தெளிவானது படங்கள் மட்டுமல்ல உங்கள் நோக்கமும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...

ஸ்லைட் ஷோ வில் ஸ்வாமி வ‌ருகை ந‌ன்றாக‌ உள்ள‌து.
சீன‌ புது வ‌ருட‌ம் ‍ இங்குள்ள‌ சீன‌ரிட‌ம் கொங் சி பா சாய் சொன்னேன் அவ‌ரோ ப‌திலுக்கு நாங்க‌ள் இப்போது டிச‌ம்ப‌ர்க்கு மாறிவிட்டோம் என்றும், என்னைப்போல் ப‌ல‌ரும் சிங்கையில் மாறிவிட்டார்க‌ள் என்றார்.
அந்த‌ சூதாட்ட‌ விடுதி இன்னுமா த‌யாராக‌வில்லை?//

:)

சூதாட்ட விடுதி படம் போடும் போது உங்க நினைவு தான் வந்தது, இதைப் படித்து நீங்க பின்னூட்டம் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

துவங்கிய பிறகு எதோ ஒரு தொய்வு, பிறகு முழுவீச்சில் கட்டுகிறார்கள், திறப்பு அடுத்த ஆண்டு இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் படித்து முடித்ததும் சிங்கப்பூரின் வளர்ச்சியும், உள்ளே நுழைந்து வெளியே வந்தது போல் உணர்கின்றேன். இந்த தீவு எனக்கு புதிய செய்தி.

தெளிவானது படங்கள் மட்டுமல்ல உங்கள் நோக்கமும்.//

மிக்க நன்றி ஜோதிஜி.

அப்பாவி முரு சொன்னது…

ஹங் பாவ் கவரில் வரும் பணமெல்லாம் 4D கடைக்குத்தான் போகும்...

அண்ணரு எப்படி? (10 மில்லியன் குலுக்கலா?)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலக்கிட்டீங்க போல ..

ஆமா , நீங்கள் சேர்ந்து இருப்பது போல படம் எடுக்கலியா ..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்னடா கொஞ்ச நாளா ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்.

இதுக்குத்தானா.

படங்கள் அனைத்தும் அருமை கோவி அண்ணா.

இனி தொடர்ந்து எழுதுங்கள்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எனது வருகை குறித்த தகவல் அளித்தமைக்கு நன்றி.

தலைப்பில் என்ன ஒரு தமிழ் நுனுக்கம். கலப்படம் அருமை..!


ஆமை புகுந்த வீடு விளங்காதுனு சொல்லுவாங்க.. இங்க ஒரு தீவில ஆமையே புகுந்துருக்கே...!

அறிவிலி சொன்னது…

படங்கள் அனைத்தும் அழகு。ஐ ஃபோனில் !!!

ஸ்வாமி வருகை அற்விப்புக்கு நன்றி. சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

கலப்படம்னாலும் நன்னா இருக்கு ஓய்..

அடடடடா... இந்த சிங்கைகாரவிங்களுக்கு ஆனா ஊனா சந்திப்புக்கு எதுனா சாக்கு கெடைச்சிடுதுப்பா.. கோயமுத்தூர்ல இருக்கிறவங்கள எல்லாம் சாமி கண்டுக்கவே மாட்டேங்கறார்.. ஆனால் சிங்கைப் போய் பதிவர்களை சந்திக்கிறார்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger அப்பாவி முரு said...

ஹங் பாவ் கவரில் வரும் பணமெல்லாம் 4D கடைக்குத்தான் போகும்...

அண்ணரு எப்படி? (10 மில்லியன் குலுக்கலா?)//

எனக்கு கிடைக்கும் ஹங் பாவ் பணம் என் மகளிடம் கொடுத்துவிடுவேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலக்கிட்டீங்க போல ..//

முடிஞ்ச அளவுக்கு கொண்டாடியாச்சு.

// ஆமா , நீங்கள் சேர்ந்து இருப்பது போல படம் எடுக்கலியா ..//

மூஞ்சியை எத்தனை தடவை நான் காட்டுவேன். பார்வை பட்டுவிடும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// அக்பர் said...

என்னடா கொஞ்ச நாளா ஆளைக்காணோமேன்னு பார்த்தேன்.

இதுக்குத்தானா.

படங்கள் அனைத்தும் அருமை கோவி அண்ணா.

இனி தொடர்ந்து எழுதுங்கள்.//

மிக்க நன்றி அக்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

எனது வருகை குறித்த தகவல் அளித்தமைக்கு நன்றி.//

அது முன்னோட்டம்.

// தலைப்பில் என்ன ஒரு தமிழ் நுனுக்கம். கலப்படம் அருமை..!//
நன்றி !



// ஆமை புகுந்த வீடு விளங்காதுனு சொல்லுவாங்க.. இங்க ஒரு தீவில ஆமையே புகுந்துருக்கே...!//

சீனர்களுக்கு ஆமை தான் அதிர்ஷடம் கொடுக்கும் என்று நம்பிக்கை உண்டு, ஆமை பொம்மைகளை வீட்டில் வைத்திருப்பார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...

படங்கள் அனைத்தும் அழகு。ஐ ஃபோனில் !!!

ஸ்வாமி வருகை அற்விப்புக்கு நன்றி. சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.//

நன்றி அண்ணே !

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

கலப்படம்னாலும் நன்னா இருக்கு ஓய்..//

நன்றி சஞ்செய்!

// அடடடடா... இந்த சிங்கைகாரவிங்களுக்கு ஆனா ஊனா சந்திப்புக்கு எதுனா சாக்கு கெடைச்சிடுதுப்பா.. கோயமுத்தூர்ல இருக்கிறவங்கள எல்லாம் சாமி கண்டுக்கவே மாட்டேங்கறார்.. ஆனால் சிங்கைப் போய் பதிவர்களை சந்திக்கிறார்.. இருக்கட்டும்.. இருக்கட்டும்.. :)//

சின்ன ஊர் சுற்றி சுற்றி வந்தாலே யாராவது பதிவர் நண்பர் கண்ணில் பட்டுவிடுவாங்க

Kesavan சொன்னது…

//துவங்கிய பிறகு எதோ ஒரு தொய்வு, பிறகு முழுவீச்சில் கட்டுகிறார்கள், திறப்பு அடுத்த ஆண்டு இருக்கும்.//

இன்றைய நாளிதழில் திறந்து விட்டதாக செய்தி வந்ததே !!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...
இன்றைய நாளிதழில் திறந்து விட்டதாக செய்தி வந்ததே !!!!!
//

அது வேற இடத்தில் பகுதியாக திறந்திருக்கிறார்கள், சூதாட்ட விடுதிகள் சில இடங்களில் அமைக்கிறார்கள், நான் குறிப்பிட்டு இருப்பது பெரிய அளவிலான சூதாட்ட கூடங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

படங்கள் அனைத்தும் அருமை kovi

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்