பின்பற்றுபவர்கள்

9 நவம்பர், 2009

ஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !

ஸ்வாமி ஓம்காரின் 'வேத வாழ்க்கை (8)' தொடரில் வரும் 'பசு' புராணம் அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களை மிகவும் சினம் அடைய வைத்தது, சித்தூர் முருகேசன் ஓம்கார் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓம்கார் பின்னூட்டத்தை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து சினந்த சித்தூர் முருகேசன் ஓம்காருக்கு எதிர்வினைப் பதிவு ஒன்றைப் போட்டார்.


இரு இடுகைகளையும் நான் படித்த வரையில்,

* ஸ்வாமி ஓம்கார் பசு கொல்லப்படுவதைச் சுட்டி சுற்றுச் சூழல் கேடு அல்லது சுற்றுச் சூழலுக்கு பசுவின் பங்கு குறித்து எழுதி இருந்தார்.

அதை சித்தூர் முருகேசன் புரிந்து கொண்ட விதம்

* ஸ்வாமி ஓம்கார் பசு புனிதம் என்கிறார், பசுவை கொல்வது பாவம் என்கிறார், என்கிற ரீதியில் தனது எதிர்ப்புகளை எழுதி இருந்தார்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் சித்தூர் முருகேசன் இருவருமே சோதிடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர்கள், சோதிடம் பற்றிய கருத்தில் ஒருவரை ஒருவர் மறுத்தது இல்லை.

ஸ்வாமி ஓம்கார் பசுவை மட்டுமல்ல, மரங்கள் வெட்டப்படுவது பற்றியும் எழுதி இருந்தார். இருந்தாலும் அந்த தொடரில் மற்றொரு பகுதியில் மரம் குறுந்தகடை (சிடி) படிக்கும் என்று எழுதி இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு எந்த ஒரு சான்றையும் ஸ்வாமி ஓம்கார் தரமுடியாது. சிடியில் டேட்டா பதிவு என்பது பல்வேறு டிகோடிங் முறைகளை அடக்கியது, அதை என்கோட் செய்து படிக்கும் முறைகளும் கணிணியால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று, பச்சை மரத்திற்கு அருகில் சிடியைக் கொண்டு சென்றால் அதில் அடங்கி இருக்கும் தகவலுக்கேற்ற (எம்எஸ்எஸ், இளைய ராஜா, ஏஆர் ரஹ்மான் இசை ?) மரம் உணர்ச்சி வசப்படும் என்பது ஓம்காரின் கூற்றாக இருக்கிறது. இது நம்புவதற்கோ, அறிவியல் மூலம் நிருபணம் செய்யவோ கூறு அற்றதும், ஒட்டுமொத்தமாக அந்த கருத்தே நிராகரிக்கக் கூடியது ஆகும். மரம் உணர்ச்சி வசப்பட இயற்கைச் சூழல் மாறி மாறி அமைந்தால் தான் உண்டு மற்றபடி குயில் என்னதான் இனிமையாக மரத்தின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாலும் மரம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதே எனது கருத்து, தொடு உணர்ச்சி என்பது தவிர்த்து மரம் கேட்கும் திறனற்றது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் அந்த கருத்தில் அழுத்தமாக இருந்தால் அவ்வாறு சொன்னதற்கு வேறெதும் காரணங்கள் இருக்கிறதா என்பதை விளக்கினால் நன்று. ஸ்வாமி ஓம்கார் பசு பற்றிய எழுதிய கட்டுரைகளில் பசுவை புனிதப் படுத்தவில்லை ஆனால் பசு பற்றிய நல்ல கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்

அண்ணன் சித்தூர் முருகேசன் எழுதிய கருத்தில் ஒன்று மனதில் பதிந்தது, "அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான்"

அதாவது,

"பசு புனிதம் என்று சொல்லுபவர்கள், பசு கிழவியானதும் அதாவது கன்று ஈனுவதற்கான வாய்ப்பும், பால் கொடுக்க முடியாத சூழலில் அதை ஏன் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்கள் ? விற்பவனை விட்டுவிட்டு கொல்பவனை மட்டும் குறை சொல்வது ஏன் ?" என்று கேட்டிருந்தார்.

என்னைப் பொருத்த அளவில் இது சிந்தனையைத் தூண்டும் கேள்வி தான். பசுவை தெய்வம், தாய் என்றெல்லாம் ஒப்பிடும் இந்துக்கள், பசுவதை மீளாப் பாவம் என்றெல்லாம் பயமுறுத்தும் இந்துக்கள், இறந்த பசுவை தோல் உறித்துவிட்டு தின்றார்கள் என்று தலித்துகளை சிலர் அடித்து கொன்றதையும் ஞாயம் பேசும் இந்துக்கள் எந்தப் பசுவும் இயற்கை மரணம் அடைந்ததைப் பார்த்திருக்கிறார்களா ? அல்லது இயற்கையாக வயதானதும் வயதின் காரணமாக இந்தியாவில் இறக்கும் பசுக்களின் அதாவது கிழப்பசுக்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு ? ஒருவிழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.

* பால் கரக்கும் வரையில் தான் பசு புனிதமாக பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அடிமாட்டுக்காரணிடம் கிடைத்த விலைக்கு விற்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு வாங்குபவர் அந்த கிழட்டு பசுமாட்டிற்கு வைக்கோலும், புல்லும் போட்டு சாகும் வரை பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்களா ?

* பாலைக் கரந்து... கரந்து குடித்துவிட்டு பசு கிழடு ஆனதும் விற்பது என்பது அந்த மாட்டைக் கொல்வதைவிட பாவம் இல்லையா ?

* பசுவதைப் பற்றிப் பேசுவோர் எத்தனை பேர் தோல் செருப்புகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் ?

**********

ஆட்டுக்குட்டி, ஒட்டகம், பசு இவையெல்லாம் மதங்களில் காட்டப்படும் விலங்குகள் என்பதைத் தவிர்த்து எனக்கு அவற்றின் மீது பெரிய கருத்துகள் இல்லை. வலி உணர்வு கொண்ட எந்த ஒரு உயிரனத்தையும் கொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விலங்குகள் குறித்து புனிதம், அசுத்தம் பேசுப்வர்களின் கொல்லாமை மற்றும் கொள்கை பேசுவோரின் 'விலங்குகள்' பற்றிய கருத்துகளும் ஏற்புடையது அல்ல. தின்பது என்றாகிவிட்டால் நாய்கறி சாப்பிடுவது கூட இழிவானது கிடையாது.

விலங்குகளுக்கு பேசும் திறன் இருந்தால் அதுவும் வாழ்வுரிமைப் பற்றிப் பேசும் அல்லது அப்படி பேசுவதற்கு அதற்கு உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம்.

உயிர்கொலை அல்லது கொல்வதற்கான உணவு சுழற்சி பற்றிய விளக்கங்கள், மனிதனும் ஏதோ ஒரு விலங்குக்கு தன்னை உணவாக்கினால் ஏற்றுக் கொள்வதற்கு நன்றாக இருக்கும். இல்லையா ?

:)


மூப்பு அடிமாடுகள் விற்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பது குறித்து வாய் பேசாமல், அந்த அடிமாடு வெட்டப்படுவதைப் பற்றி பெருமூச்சு விடுவது ஞாயமற்றதும் பக்க சார்பனதும் ஆகும்.

85 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

புரிகிறது - இரு பக்கமும் உள்ள நல்ல கருத்துகளை வைத்து ஒரு இடுகை. படித்தேன் - சிந்தித்தேன்.

இருப்பினும் பசுவதை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் என்னிடம் பதிலில்லை. நாங்கள் மாற இன்னும் காலம் வேண்டும்.

முன்பெல்லாம் வயதான பசுக்களைக் காக்க கோசாலைகள் இருந்தன. ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் கோவி

நிகழ்காலத்தில்... சொன்னது…

சக மனிதனாக இருந்து ஒருவரின் கருத்தை நாம் உணர முடிகிறது

ஓம்காரின் இடுகையில் நான் சொன்னது,

\\நீங்கள் பசுவாகவும், மரமாகவும் இருந்து எழுதுகிறீர்கள்

நானோ மனிதனாக இருந்து படிக்கிறேன்

ஓரளவுக்குதான் புரிகிறது சாமி..

........புரியாத பொன்னுச்சாமி\\

அதுவே இங்கும் பொருந்தும் என நினைக்கிறேன். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக தொடர் முடிந்த பின் பார்த்தால் விடை கிடைக்கலாம்

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

// cheena (சீனா) said...
அன்பின் கோவி

புரிகிறது - இரு பக்கமும் உள்ள நல்ல கருத்துகளை வைத்து ஒரு இடுகை. படித்தேன் - சிந்தித்தேன்.

இருப்பினும் பசுவதை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் என்னிடம் பதிலில்லை. நாங்கள் மாற இன்னும் காலம் வேண்டும்.

முன்பெல்லாம் வயதான பசுக்களைக் காக்க கோசாலைகள் இருந்தன. ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் கோவி
//

சீனா ஐயா,

பசுவதை மட்டும் அல்ல, உழவு மாட்டையும் கொல்வது, அல்லது எந்த ஒரு விலங்கையும் கொல்வது என்னால் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.

தங்கள் 'கோசாலைகள்' தகவல் மற்றும் கருத்துகளுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக தொடர் முடிந்த பின் பார்த்தால் விடை கிடைக்கலாம்

வாழ்த்துக்கள்//

சிவா,

நானும் காத்திருக்கிறேன்

குடுகுடுப்பை சொன்னது…

ஜெகதீஸ் போஸ் என்பவரின் மரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சியை படிக்கவும் கோவியார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
ஜெகதீஸ் போஸ் என்பவரின் மரம் பற்றிய அறிவியல் ஆராய்ச்சியை படிக்கவும் கோவியார்.
//

மரம் தாவிரத்திற்கு உணர்ச்சி உண்டு, தொட்டால் சிணுங்கி கூட அப்படித்தான். காது கேட்பதற்கு காது வேண்டும். :)

குடுகுடுப்பை சொன்னது…

http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose

கோவி.கண்ணன் சொன்னது…

// குடுகுடுப்பை said...
http://en.wikipedia.org/wiki/Jagadish_Chandra_Bose
//

இணைப்புக்கு நன்றி. தாவிரங்களுக்கு உயிர்தன்மை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை.

Robin சொன்னது…

நீண்ட... இடைவெளிக்குப் பிறகு நல்ல பதிவோன்றைக் கொடுத்த கோவி கன்னனனுக்கு நன்றி.

RR சொன்னது…

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin said...
நீண்ட... இடைவெளிக்குப் பிறகு நல்ல பதிவோன்றைக் கொடுத்த கோவி கன்னனனுக்கு நன்றி.
//

நீண்ட இடைவெளிக்கு பிறகு கண்களில் பட்டதா ?

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RR said...
இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com
//

கட்டணமில்லாதது என்பதால் பின்னூட்டங்களில் இலவச வெளம்பரமா ?
அவ்வ்வ்வ்

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கருத்துக்கள். பிராணிகளின் உயிர் வதை செய்வது தடுக்கப் பட வேண்டும். ஆனால் இந்த பதிவில் மரம் மற்றும் செடிகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்று தாங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவற்றுக்கு மனிதர்களை புரியும் திறனும், நாம் பேசுவதை கேட்கும் திறனும் உண்டு. இது நான் கூட எங்க வீட்டு ஜாதிமல்லி செடியுடன் முயற்சி செய்துள்ளேன்.
மற்றபடி சி டி விண்டேஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் எல்லாம் அதுக்கு தெரியுமா இல்லையன்னு அது கிட்டத்தான் கேக்கனும். நன்றி.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இணையத்தில் பெருகிவரும் வன்முறைப் பதிவுகள், பின்னூட்டங்கள் மிகவும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இப்போது தான் விஷம் கக்கும் பதிவுத் தொடர் சண்டை ஒன்று முடிந்தது என்று நிம்மதிப்பெருமூச்சு விடுதற்கு முன்னாலேயே அடுத்து ஒன்று, மேலும் ஒன்று என்று போய்க் கொண்டிருக்கும் நிலைமையை என்று மாற்றிக்கொள்ளபோகிறோம்?

நல்ல எண்ணங்களை விதைப்போமே!

இந்தச் சுட்டியில் உள்ள செய்தியை எதற்கும் ஒரு தரம் முழுக்க வாசித்து விடுங்கள்!
http://www.chinadaily.com.cn/world/2009-02/04/content_7446244.htm

தொடர்புடைய எனது பதிவு

http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_5370.html

மீன்துள்ளியான் சொன்னது…

ஓம்கார் சம்பந்தமான இன்னொரு பதிவு "ஓம்கார் சுவாமிகளே உங்களின் தகவலுக்கு ஒரு மறுப்பு"

http://meenthulliyaan.blogspot.com/2009/11/blog-post.html


அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\இணையத்தில் பெருகிவரும் வன்முறைப் பதிவுகள், பின்னூட்டங்கள் மிகவும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இப்போது தான் விஷம் கக்கும் பதிவுத் தொடர் சண்டை ஒன்று முடிந்தது என்று நிம்மதிப்பெருமூச்சு விடுதற்கு முன்னாலேயே அடுத்து ஒன்று, மேலும் ஒன்று என்று போய்க் கொண்டிருக்கும் நிலைமையை என்று மாற்றிக்கொள்ளபோகிறோம்?

நல்ல எண்ணங்களை விதைப்போமே!\\

கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வேண்டுகோளே எனது விருப்பமும்..

Unknown சொன்னது…

தாவரங்கள் இசையினால் கவரப்படுவதாக கேட்டிருக்கிறேன்.
இதையும் பாருங்கள்

வால்பையன் சொன்னது…

மாட்டுப்பால் கன்னுகுட்டிக்கு, மனுசனுக்கு அல்ல!

Chittoor Murugesan சொன்னது…

கோவி கண்ணன் அவர்களுக்கு,
நான் பதிவுலகில் நுழைந்து முளைச்சு மூணு இலை விடறதுக்கு முன்னாடியே விளையும் பயிரி முளையிலேனு கண்டு பிடிச்சு தட்டிக்கொடுத்தவர் தாங்கள். நானும் பசுவை கொல் என்று சொல்லவில்லை. நிறுத்துங்கய்யா உங்க லொள்னுதான் சொன்னேன்.

அந்த காலத்துல எதை எழுதினாலு ஓலை நறுக்குல நறுக்குனு எழுதனும் . அதனால அவங்க இதை செய் லட்சுமிகரம். இதை செய்யாதே பீடைனு சுருக்கமா சொன்னாங்க. அவங்க ஏன் சொன்னாங்க எதுக்கு சொன்னாங்கங்கறதையெல்லாம் விட்டுட்டு ( அதையெல்லாம் நோண்டினா பிழைப்பு கெட்டுடும். தாளி..வெள்ளிக்கிழமை விளக்கு வச்ச பிறகு குப்பைய வெளிய கொட்டாதேன்றாங்கல்ல ஏன் எதுக்குனு ஓம்காரை சொல்லிரச்சொல்லுங்க அவர் கிளிப்பிள்ளை இல்லை, வேதகாலம் மீட்டு பொழப்பை பலப்படுத்திக்கிற சுய நல வாதி இல்லேனு நான் ஒப்புக்கறேன்


கொல்லமைல நானும் உங்க கட்சிதான். எனக்கு இவுக மேல நம்பிக்கையில்லே
எங்கயோ ஆரம்பிப்பான். அது சூத்திரனுக்கோ, துருக்கனுக்கோ ஆப்பா வரும். கோவதை தடுப்பையே எடுத்துக்கங்க .. யாருக்கு ஆப்பு ?

அவனுக்கு ஆல்ட்டர்னேட்டி மோட் ஆஃப் லிவிங் காட்டுங்க.. ஒரு டெட் லைன் வச்சுக்குங்க. எவனுக்கும் அந்த தொழில் தேவையில்லேனு ருசுவான பிறகு கோவதை தடுப்பு பத்தி பேசுங்க.

அய்யருங்க எல்லாம் சிக்கன்,கறி முட்டைனு வெட்ட ஆரம்பிச்ச பிறகுதான்
அதுக விலை ஆகாசத்துக்கு போச்சு .சாப்பிடாதவன் எல்லாம் மாட்டுக்கறி சாப்பிட துவங்கிட்டான். ஃப்யூச்சர் ட்ரேட் பண்ணி பருப்பு விலைய (ப்ரோட்டீன்) ஏத்தி விட்ட
சோடாபுட்டி அய்யருங்களை அதை விடச்சொல்லுங்க. முட்டை,கோழி,ஆடு உள்ள‌ தள்றதை விடச்சொல்லுங்க. வங்கில மேனேஜரா இருக்கிற அய்யர் மாரு பறைச்சேரிக்கு போய் மாடுவெட்ற இடத்துல அவுக கிட்ட பேசி வேற தொழில் துவங்க லோன கொடுங்க. அதை விட்டுட்டு.. எங்கயோ ஆரம்பிச்சு மறுபடி வேதகாலம் வரனும்னா

மாடல மறையோன் சொன்னது…

பசுவதை மட்டும்தான் வதையா? மற்ற பிராணிகள் வதைக்கப்படவில்லையா? அவைகளின் வதை மட்டமா?

பிராணி வதை என்பதே ஒரு போலித்தனமான் ஏமாற்று வாதம். ஏனெனில், பிராணி வதை வைத்தே உலகத்தில் பல மனிதனுக்கு நல்ல விடயங்கள் செய்யப்படுகின்றன. ஆதிகாலம் முதல். பிராணிவதை செய்யாதே என்வரும் அந்நலங்களை பெற்று மகிழ்வாக வாழ்கிறார். இல்லையா?

பின்னர் ஏன் பசுவதை சிறப்பு? சிறப்பு இந்து மதத்தில் மட்டுமே. சுரு்க்கின், இது ஒரு தியாலாஜிக்கள் விடயம். மற்ற்மத்தினருக்கும் இதற்கும் தொடர்பில்லை.

மனிதனுக்காக சகல் ஜீவராசிகளும் படைக்கப்பட்டன என்பது கிருத்தவத்தின் தியாலாஜி. என்வே அவைகளை கொன்று புசிக்கலாம் என அது மட்டுமல்ல, இசுலாமும் சொல்கிறத. மேலும், அவைகளுக்கு ஆன்மா இல்லை. மனிதனுக்கே உண்டு. அவைகள் இறைவன் படைப்பில் மனிதனுக்கும் கீழானவை. மனிதனுக்காகவே படைக்கப்பட்டவை என்பது அவர்களின் தியாலாஜியாகும்.

நீங்கள் இந்து என நிலையிலிருந்தா இப்பதிவைப்போட்டிருக்கிறீர்கள்?

மாடல மறையோன் சொன்னது…

பசுவை வைதீகஇந்துமதத்தின் தெய்வமாக்கப்பட்டதாலே, தலித்துகளை வன்கொடுமை செய்தார்கள் வைதீக இந்துக்கள். இதை முருகேசன் சுட்டுக்காட்டியுள்ளார்.

அக்காலத்தில் தலித்துகளால் இதை எதிர்க்கமுடியவைல்லை. இன்று முடியும்: மதமாற்றம் என்ற ஆயுத்த்தை வைத்து.

வேதகாலவாழ்க்கையே சிறந்தது எனச்சொல்லும் ஓம்கார், தலித்துகளை நினத்துப்பார்த்தாரா? வேதகாலம் வந்தால், நசுக்கப்படுவது தலித்துகளே. அது பிராமணனுக்குச் சார்பானது. வேதகாலம் நாற்குலங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு, தலித்துகளை குலமற்ற காட்டுமிராண்டிகள் அவர்கள் சமூகத்திற்கு வெளியே வாழவேண்டும் என வேலி போட்டது.


பசுவை வைத்து தலித்துகள மீண்டும் நசுக்கத்திட்டம். ப்லிக்காது. காலம் மாறிவிட்டது.

மாடல மறையோன் சொன்னது…

ஓம்கார் சுவாமி...ஓம்கார் சுவாமி என்று எழுதிகிறீர்களே? அது யார் கொடுத்த பட்டம்? தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பட்டம்.

நான் எனக்கு ‘மகாராஜ, மார்ததாண்ட், ப்ராக்கிரம்,...’ என்று எனக்கு நானே பட்டங்கள் கொடுத்துகொண்டால், அப்படியே அழைப்பீர்களா?

ஓம்காருக்கு மட்டும் அப்படியென்ன ச்லாம்?

எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம். மனிதனாக. இப்படி..சுவாமி. ஆதினம்..என்றெல்லாம் தனக்குத்தானே பட்டமணிந்தவருக்கு அவர்கள் சீடர்கள்தான் அப்பட்டத்தை சொல்வார்கள்?

நீங்கள் அவர் சீடரென்றால் சொல்லலாம். சீடரா?

மாடல மறையோன் சொன்னது…

என் பின்னூட்டங்களும் ஓம்காரால் தடுக்கப்பட்டன. அவைகள் அருவருக்கத்தக்க மொழிநடையில் எழுதப்பட்டவையல்ல. இங்கு எப்படி எழுதுகிறேனோ அப்படியே. மேலும், இதே கருத்தகளை ஆங்கிலத்தில் இட்டேன். ஆனால் ஓம்கார் தடுத்து விட்டார்.

இப்படி பின்னூட்டத்தடுப்பு செய்பவர் ஏன் தமிழ்மணம் வலைதிரட்டியில் தன் பதிவுகளை பொதுப்படுத்தி அனைவரயும் ப்டிக்கத்தூண்டவேண்டும்?
பின்னூட்டப்பகுதியிலும் அனைவரும் போடலாம் என ஏன் சொல்லவேண்டும்?

அவர் சீடர்களுக்கு மட்டுமென்றால், அதை ஏன் ஒளிவுமறைவில்லாமல் சொல்லக்கூடாது. அப்படிச்சொல்லின், நாம் தமிழ்மணத்திற்கு இப்படி தனியார் நலத்திற்கு எழுதப்படும் பிறரைத்தடுக்கும் பதிவுகளுக்கு ஏன் விளம்பரம் எனக்கேட்போம்.

கல்வெட்டு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கல்வெட்டு சொன்னது…

//ஓம்கார் சுவாமி...ஓம்கார் சுவாமி என்று எழுதிகிறீர்களே? அது யார் கொடுத்த பட்டம்? தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பட்டம்.

நான் எனக்கு ‘மகாராஜ, மார்ததாண்ட், ப்ராக்கிரம்,...’ என்று எனக்கு நானே பட்டங்கள் கொடுத்துகொண்டால், அப்படியே அழைப்பீர்களா?

ஓம்காருக்கு மட்டும் அப்படியென்ன ச்லாம்?//

என்ன கொடுமையிது?

"ஸ்வாமி ஓம்கார்" என்பது வலைப்பதிவில் அவர் வைத்திருக்கும் பெயர். நான் "கல்வெட்டு" என்ற புனைப்பெயர் வைத்துள்ளேன் என்னை கோவி கல்வெட்டு என்றுதான் அழைப்பார். "பைத்தியக்காரன்" என்று ஒரு பதிவர் அவரை அப்படியே அழைப்பார்கள். "ஆடுமாடு" என்று ஒரு பதிவர் அவரை அப்படித்தான் அழைப்பார்கள்.

விரும்பி வைக்கும் புனைப்பெயரில் அழைப்பதில் என்ன தவறு உள்ளது?

"மரியாதைக்குரிய பேரண்பு மிக்க ‍ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ" என்று நீங்கள் புனைப்பெயர் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை விளிப்பவர்கள் "மரியாதைக்குரிய பேரண்பு மிக்க ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ" பயன்படுத்தியே ஆகவேண்டும்.

வால்பையன் சொன்னது…

நான் சொல்ல நினைத்ததும் அதே தான் கல்வெட்டு!

சுப்பிரமணியசாமி என்றால் நமக்கு சிரிப்பு தானே வரும்!

அது போல் சுவாமி ஓம்கார் என்றால் சிரிச்சிட்டு போங்களேன்! ஏன் கோபபடுறிங்க!

எல்லாமே காமெடி தான் பாஸ்!

மாடல மறையோன் சொன்னது…

'சுவாமி’ என்பது பெயர் - சுப்பிரமணியம் சுவாமி, அரவிந்த சுவாமி போன்று. இவர்களுக்கு இவை பட்டப்பெயர்களல்ல. பெற்றோரிட்ட பெயர்கள்.

புனைப்பெயர்களாகவும், ‘சுவாமி’ என் வைத்துக்கொள்ளலாம். அப்போடது கல்வெட்டு சொன்னது ஒத்துவரும்.

ஆனால், ஓம்கார் வெறும் புனைப்பெயராக ’சுவாமி’ என்று வைத்துக்கொள்ளவில்லை. சுவாமி வேடத்தோடேயே இருக்கிறார். காரணம்: மற்றவர்கள் அவ்வேடத்தை ஏற்றுகொண்டு ‘ஒரு சாமியாருக்கு’த் தரவேண்டிய பெருமரியாதைக்காக. அவ்வேடத்தைக்கண்டு, மக்கள் பயப்படுகிறார்கள் - மரியாதை கொடுக்கவில்லையென்றால் சபித்துவிடுவாரோ; அவரிடம் மந்திரசக்தியிருக்குமோ! வேடம் போடுபவர்கள் இப்பயத்தைப் பயன்படுத்தி பிழைக்கிறார்கள்.

ஓம்காரை, ஸவாமிஜி, அல்லது, கோவி கண்ணன் அழைத்த மாதிரி, ஸ்வாமி, என்றழைப்பதற்கும், விட்டேத்தியாக மற்றவரின் புனைப்பெயரை - அதாவது, கல்வெட்டு, வால்பையன் போன்று - அழைப்பதற்கும் தெளிவான வேறுப்பாடுண்டு.

எளிய மனிதன் செயலுக்கும், உள்ளோக்கம் வைத்துச்செயயும் மற்றொருவனின் செயலுக்கும் உள்ள வேறுபாடு அது.

நான் ஒருவனே என் பின்னூட்டங்களின் ’திரு ஓம்கார்’ என்றழைத்தவன்.

மாடல மறையோன் சொன்னது…

ஒருவருக்கு ஒருவர் மதித்து வாழும் உலகத்தில் வெறும் ‘திரு’ போதும்.

மாடல மறையோன் சொன்னது…

காலில் விழ வேண்டிய் அவசியமில்லை.

மாடல மறையோன் சொன்னது…

இந்துக்களுக்கு அவர் சுவாமி. கோவி கண்ணனுக்கும் சுவாமி.

இந்துக்கள் அல்லாதோருக்கும், இந்துக்களாயிருந்து but அம்மதத்தைச்சட்டைபண்ணாமல் தானுண்டு, தன் வழியுண்டு (வால்பயன் போன்றோருக்கு)என்பவருக்கும், நாத்திகருக்கும், யார் சாமியார்? யார் ஸ்வாமிஜி? ஏன் ஸ்வாமிஜி என்றழக்க வேண்டும்?

‘திரு’ போதாதா, கல்வெட்டு அவர்களே?

கல்வெட்டு சொன்னது…

ஜோ அமலன்,
நானும் அவரை ஓம்கார் என்றுதான் அழைப்பேன். "ஸ்வாமி" என்ற வார்த்தையும் "பேய்" என்ற வார்த்தையும் "கூமுட்டை" என்ற வார்த்தையும் "கல்வெட்டு" என்ற வார்த்தையும் பதிவர்களின் புனைப்பெயர் என்ற அளவில் எனக்கு அவை ஒரு அடையாளச் சொல்லே. எதற்கும் சிறப்பு அர்த்தங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

***


ஓம்கார் பக்திக் கதைகள், ஆன்மீகம், தியானம் , ஜோசியம் போன்ற போன்ற பல தொழில் செய்யும் ஒரு தேர்ந்த தொழில்முனைவோராகவே எனக்குத் தெரிகிறார். "ஸ்வாமி ஓம்கார்" என்பது அவரின் சட்டப்பூர்வமான (அரசாங்க ஆவணக்களில் உள்ள) பெயராகவே இருந்தாலும் , அவரின் தொழிலுக்குக்குத் தோதாக (ஆன்மீக வித்துவான், ஸ்வாமி ) பெயர் வைத்துக் கொள்வதில் தவறே இல்லை.

சுவாமி என்று பெயர்வைத்துக்கொள்வதில் ஒரு சிறப்பும் இல்லை. ஒரு வேளை உங்களுக்கு ஸ்வாமி என்ற பெயர் தவறான அர்தத்தை தரலாம். கைராசி டாக்டர் என்று டாக்டர்கள்கூட வாய்மொழியாக விளம்பரப்படுதப்படுகிறார்கள்.


***

யாரும் பெயரால் அதுவாகிவிடுவது இல்லை. பெயரும் அதுவல்ல. அது ஒரு அதன் அடையாளமே.

**
உங்களுக்காக "ஸ்வாமி ஓம்கார்" என்ற புனைப்பெயரை மாத்தி "பெரியார்கார்" என்று வைத்துக்கொண்டு அதே "மரம் சிடி வாசிக்கும்" நோபல் பிரைஸ் வெயிட்டிங் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? அறிவியல் ஆதாரம் செய்முறை விளக்கம் கேட்க மாட்டீர்களா?

**

பெயரை விடுங்கள். பசு மேட்டரையும் ம‌ரம் சிடி வாசிப்பதையும் பேசினால் சுவராசியமாய் இருக்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்காக ஒரு வேளை அவர் மரம் சிடி ரீடர் அறிவியல் சூத்திரத்தை வெளியிட்டு அதன் மூலம் அவருக்கே நோபல் கிடைக்க நம் கேள்விகள் உதவலாம்.

கல்வெட்டு சொன்னது…

/// ஜோ அமலன்....
...எளிய மனிதன் செயலுக்கும், உள்ளோக்கம் வைத்துச்செயயும் மற்றொருவனின் செயலுக்கும் உள்ள வேறுபாடு அது.//

???

ஜோ அமலன்,
ஆன்மீக பிசினெசில் என்ன உள்நோக்கம் உள்ளது என்று நினைக்கீறீர்கள்?

சிம்ப்ளி ஆன்மீக வியபாரம்
சிடி, பங்கு வர்த்தக பலன் , கருத்து கதை புத்தம் ...டிமாண்ட் உள்ளவரை யாரும் இந்தத் தொழில் செய்யலாம்.

சிரி சிரி சிரி ரவி என்று ஒருவர் காமகோடி என்று ஒருவர் பகவான் அம்மா என்று ஒருவர் இயேசு அழைக்கிறார் என்று ஒருவர் பல தரப்பு உள்ளது. இராமகிருஸ்னர் மடம் , மதராஸா , குருத்வார் என்று அமைப்பாகவும் ஆன்மீகம் கிடைக்கும். எல்லாருக்கும் மார்க்கெட் உள்ளது.


வேண்டியவர் வேண்டியவற்றைப்பெற அவரவர்களுக்கான ஞாயங்கள் உண்டு.

கல்வெட்டு சொன்னது…

அய்யா ஸ்வாமி தர்மம் பண்ணுங்க (என்று உதவி கேட்பவ‌ர்களும்)

அம்மா "வாசல்ல ஒரு ஸ்வாமி வந்திருக்கு காசு போடவா" என்று உதவி செய்பவர்களும் ....

சகிட்டுமேனிக்கு ஸ்வாமி என்ற வார்த்தையப் பயன்படுத்தும்போது... இவர் பயன்படுத்துவதில் என்ன தவறு?

ஸ்வாமி ஒரு ஜனதாச் சொல். அனைவரும் ஸ்வாமியே.

இப்படி..."ஸ்வாமி கல்வெட்டு" அவர்கள் "ஸ்வாமி ஜோ அமலனு"க்குச் சொல்கிறார். :-)))

கல்வெட்டு சொன்னது…

ஜோ அமலன் தகவலுக்காக...

நான் தெருவில் பலூன் விற்பவன். எனது தொழிலுக்காக "பலூன் மாமா " (http://balloonmama.net)என்று தொழில் முறை புனைப்பெயர் வைத்துள்ளேன். கோமாளிவேடம் போடுவேன்.குழந்தைகளுடன் கோமாளியாகவே இருப்பேன்.

அது போலவே .. ஆன்மீக வியாபாரத்திற்காக ஒருவர் ஸ்வாமி என்று பெயர் வைத்துக் கொள்வது பட்டை போடுவது காவிசட்டை போடுவது...எல்லாம்.

இது ஒரு சப்பை மேட்டர் விட்டுவிடுங்கள்

கல்வெட்டு சொன்னது…

ஜோ அமலன்,
உண்மையில் உலகை அறிந்தவன் /உலக இயக்கத்தைப் புரிந்தவன் எந்தவித சிறப்பு அடையாளங்களும்( காவி, மொட்டை,பட்டை ,கொட்டை,அங்கி,தொப்பி,கம்பு,கத்தி ) இல்லாமல் உங்களைப்போல சக மனுசனாக பேண்ட் சட்டையுடன் உங்களுக்கு அருகிலேயே வாழ வாய்ப்பு உள்ளது.

What they do for living? என்பது பெரும்பாலும் தனிப்பட்ட குணநலன்களைத் வெளிப்படுத்தாது.
அவை எல்லாம் தொழில் சார்ந்த கட்டாய வேடங்கள். வாழ்வியல் காரணங்களுக்காக பலசமயம் தவிர்க்கமுடியாதவை.
(ஓப்பன் சோர்சை காதலிக்கும் ஒருவர் பல வாழ்வியல் காரணங்களுக்காக மைக்ரோசாப்டில் வேலை பார்க்கும் கொடுமையல்லாம் உள்ளது.)

How they are living? என்பதுதான் பெரும்பாலும் ஒருவரின் தனிப்பட்ட குணநலன் வெளிப்பாடு.

எனவே பெயர் , தொழில் தவிர்த்து பிரச்சனையப் பேசுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ


பசுவதை மட்டும்தான் வதையா? மற்ற பிராணிகள் வதைக்கப்படவில்லையா? அவைகளின் வதை மட்டமா?
பிராணி வதை என்பதே ஒரு போலித்தனமான் ஏமாற்று வாதம். ஏனெனில், பிராணி வதை வைத்தே உலகத்தில் பல மனிதனுக்கு நல்ல விடயங்கள் செய்யப்படுகின்றன. ஆதிகாலம் முதல். பிராணிவதை செய்யாதே என்வரும் அந்நலங்களை பெற்று மகிழ்வாக வாழ்கிறார். இல்லையா?

பின்னர் ஏன் பசுவதை சிறப்பு? சிறப்பு இந்து மதத்தில் மட்டுமே. சுரு்க்கின், இது ஒரு தியாலாஜிக்கள் விடயம். மற்ற்மத்தினருக்கும் இதற்கும் தொடர்பில்லை.

மனிதனுக்காக சகல் ஜீவராசிகளும் படைக்கப்பட்டன என்பது கிருத்தவத்தின் தியாலாஜி. என்வே அவைகளை கொன்று புசிக்கலாம் என அது மட்டுமல்ல, இசுலாமும் சொல்கிறத. மேலும், அவைகளுக்கு ஆன்மா இல்லை. மனிதனுக்கே உண்டு. அவைகள் இறைவன் படைப்பில் மனிதனுக்கும் கீழானவை. மனிதனுக்காகவே படைக்கப்பட்டவை என்பது அவர்களின் தியாலாஜியாகும்


நீங்கள் இந்து என நிலையிலிருந்தா இப்பதிவைப்போட்டிருக்கிறீர்கள்?//
//

ஜோ அமலன் ஐயா,

விலங்குவதையாவும் கொடுமையானதே, பசு மாடுகள் வழியாக முழுப்பயனையும் அடைந்த பிறகும் அவை கொல்லப்படுவதால் அது முன்னிலைப்பட்டு பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். ஒரு காளைமாடுகளை வெட்டுவதைப் பற்றி பேசுவது போல் தெரியவில்லை, தாய்க்கும் பசுவுக்கும் பொதுவானது பால் என்கிற செண்டிமெண்ட் படி இது பெரிதாகப் பேசப்படுவதாகவும் நான் கருதுகிறேன். என்னைப் பொருத்தளவில் எந்த ஒரு உயிர்கொலையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அப்படி விலங்குகளை வெட்டித் திண்பவர்களில் மாடுகளைத் திண்பவர்களுக்கு பன்றி திண்பவர்கள் ஏளனம், இவை அனைத்தையும் திண்பவர்கள் நாயைத் திண்பவர்களின் (கொரியர்கள்) செயல் ஏளனம். எனவே மதக் கொள்கைபடி படைக்கபப்ட்டவை திண்பவை என்பதை மதம் அனுமதிக்கப்பட்ட விலங்குகளுக்கு மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது தவிர்த்து பொதுவான அசைவ உணவு பற்றி அல்ல.

கொல்லாமை வழியுறுத்திய வள்ளுவரும் வள்ளலாரும் எந்த ஒரு மக்கள் குழுவையும் தாழ்த்தி வையுங்கள் என்று சொன்னது போல் தெரியவில்லை. இந்துமதம் கொல்லாமை வழியுறுத்தியதாக நீங்கள் சொல்வது தவறு, இந்து மதத்தால் கொல்லாமை உள்வாங்கப்பட்டு இருக்கிறது என்பது தான் உண்மை. கொல்லாமை பேசியவர்களில் இந்திய சமயங்களில் பெளத்தமும், சமணமும் முதனமையானதாகும், ஆதிகாலத்து பார்பனர்கள் பசுவையும், பன்றியையும் ஓமகுண்டத்தில் போட்டு பொசுக்கி தின்றதாகத்தான் அக்னிஹோத்ரம் தாத்தாசாரியவர் முதல் பல பெரியவர்கள் குறிப்பிடுகிறார்கள். நான் இந்து மதத்தை வைத்து கொல்லாமை அறம் பேசவில்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஓம்கார் சுவாமி...ஓம்கார் சுவாமி என்று எழுதிகிறீர்களே? அது யார் கொடுத்த பட்டம்? தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட பட்டம்.

நான் எனக்கு ‘மகாராஜ, மார்ததாண்ட், ப்ராக்கிரம்,...’ என்று எனக்கு நானே பட்டங்கள் கொடுத்துகொண்டால், அப்படியே அழைப்பீர்களா?

ஓம்காருக்கு மட்டும் அப்படியென்ன ச்லாம்?

எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம். மனிதனாக. இப்படி..சுவாமி. ஆதினம்..என்றெல்லாம் தனக்குத்தானே பட்டமணிந்தவருக்கு அவர்கள் சீடர்கள்தான் அப்பட்டத்தை சொல்வார்கள்?

நீங்கள் அவர் சீடரென்றால் சொல்லலாம். சீடரா?

//

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ ஐயா,

திடிரென்று ஒரு இடத்தில் ஒரு தகவலைப் படித்தால் நமக்குள் பொதுவாக இருக்கும் உள்(ள)கட்டமைப்பு வழியாக ஒப்பிட்டு பார்த்து உடனடியாகவே அது பற்றிய எதிர்வினை ஆற்றிவிடுவோம். அது இயல்பானதும் கூட.

நான் ஸ்வாமி ஓம்கார் பற்றி தெரியாதவற்றை எதுவும் எழுதுவதில்லை. அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள் என்றும் சொல்லலாம். நான் அவரை கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்து இருக்கிறேன். அது பற்றிய விவரம் இங்கே இருக்கிறது. எனக்கு விளக்கிய வகையில் அவருடைய இயற் பெயரே "ஸ்வாமி ஓம்கார்" என்றே எனக்கு சொன்னார், அதற்காக உங்கள் சான்றிதழ்களையெல்லாம் கொண்டுவாருங்கள் அதிலும் ஸ்வாமி ஓம்கார் என்றே இருக்கிறதா அப்போது நான் ஒப்புக் கொள்கிறேன் என்றெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. நம்பிக்கை தான். நம்புகிறேன்.

ஒருவரிடம் நட்பாக இருக்க, அல்லது ஒருவரைப் பற்றி அறிந்து வைத்திருக்க, ஒருவரை பிடித்து இருக்க நாம் அந்த ஒருவருக்கு சீடராகத்தான் இருக்க வேண்டியது தேவை இல்லை என்பேன்.

உங்களுக்கு அவர் பெயர் தான் பிரச்சனையா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
இந்துக்களுக்கு அவர் சுவாமி. கோவி கண்ணனுக்கும் சுவாமி.//

அவர் பெயரே சுவாமியாக இருந்தால் அனைவருக்கும் சாமி தானே !
:)

//இந்துக்கள் அல்லாதோருக்கும், இந்துக்களாயிருந்து but அம்மதத்தைச்சட்டைபண்ணாமல் தானுண்டு, தன் வழியுண்டு (வால்பயன் போன்றோருக்கு)என்பவருக்கும், நாத்திகருக்கும், யார் சாமியார்? யார் ஸ்வாமிஜி? ஏன் ஸ்வாமிஜி என்றழக்க வேண்டும்?//

நபி என்றால் இறைத்தூதர் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் முகமது நபியைப் பற்றி குறிப்பிடும் போது நபி என்ற அடைமொழியுடன் அல்லது நபிகள் நாயகம் என்றே சொல்லுவார்கள் அது உலக மரபு. ஒரு குழுவினர் ஏற்றுக் கொண்டவர்களை மதிக்க அவர்கள் வழங்கும் சொற்களில் பிறரும் அவர்கள் தலைவரை சொல்வது மரபு.

அன்னை மேரி, அன்னை தெரசச என்று சொல்ல ஒருவன் கிறித்துவனாக இருக்க வேண்டியது இல்லை.

//‘திரு’ போதாதா, கல்வெட்டு அவர்களே?
//

திருட்டு கொடுத்தவர்களும் சரி பிறரும் சரி திருடனை திருடன் என்றே சொல்லுவார்கள், திருட்டு கொடுக்காதவரிடம் சென்று அவனை ஏன் திருடன் என்று சொல்கிறாய் நீ பாதிக்கப்பட்டாயான்னு எங்காவது கேட்க முடியுமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு said...
அய்யா ஸ்வாமி தர்மம் பண்ணுங்க (என்று உதவி கேட்பவ‌ர்களும்)

அம்மா "வாசல்ல ஒரு ஸ்வாமி வந்திருக்கு காசு போடவா" என்று உதவி செய்பவர்களும் ....

சகிட்டுமேனிக்கு ஸ்வாமி என்ற வார்த்தையப் பயன்படுத்தும்போது... இவர் பயன்படுத்துவதில் என்ன தவறு?

ஸ்வாமி ஒரு ஜனதாச் சொல். அனைவரும் ஸ்வாமியே.

இப்படி..."ஸ்வாமி கல்வெட்டு" அவர்கள் "ஸ்வாமி ஜோ அமலனு"க்குச் சொல்கிறார். :-)))
//

கல்வெட்டு,

உங்கள் பின்னூட்டங்கள் அனைத்துமே நகைச்சுவையோடு கலக்கல்.
:)

கல்வெட்டு சொன்னது…

கோவி,
நன்றி புரிந்து கொண்டமைக்கு.

**

நீங்கள் ஓம்காரிடம் நட்பானவர். என்னால் அதற்கு பிரச்சனை என்றால் பின்னூட்டங்களைத்தூக்கி கடாசி விடுங்கள். அட்டைக்கத்திச் சண்டைக் கருத்துக்களைவிட மனித உறவுகள் முக்கிய‌மானவை. உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விருப்பம் இல்லை.

**

அறிவியலை அவியலாக மாற்றிக்கூறு போடும்போதும் வேதங்களின் உண்மையான வர்ணப்பிளவை மறைக்கும்போதும் அதைச் சுட்டவேண்டியது தேவை.

**

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி,
நன்றி புரிந்து கொண்டமைக்கு.

**

நீங்கள் ஓம்காரிடம் நட்பானவர். என்னால் அதற்கு பிரச்சனை என்றால் பின்னூட்டங்களைத்தூக்கி கடாசி விடுங்கள். அட்டைக்கத்திச் சண்டைக் கருத்துக்களைவிட மனித உறவுகள் முக்கிய‌மானவை. உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த விருப்பம் இல்லை.

**
//

கல்வெட்டு,

நீங்கள் பின்னூட்ட நாகரீகம், தனிமனித மதிப்பு தெரிந்தவர் என்பது தெரியும். உங்கள் பின்னூட்டங்களில் நிராகரிக்க ஒன்றுமில்லை. எதிர்வினை என்பது கருத்தின் மீதான விமர்சனம் மட்டுமே தனிமனித தாக்குதல் அல்ல என்கிற புரிந்துணர்வு ஓரளவு பதிவுலகில் வளர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்

கல்வெட்டு சொன்னது…

//தனிமனித மதிப்பு தெரிந்தவர் என்பது தெரியும். //

நிச்சயம் கோவி.
இன்று அறிவியல் கருத்துகளோடு முரண்படும் நான் , நாளை ஓம்கார் "மரம் வளர்ப்போம் வாருங்கள்" என்றால் அதில் உடன்பட்டு அவருடன் நிச்சயம் இருப்பேன்.

ஆன்மிகம் என்பது எனக்கு ஒன்றாகவும் உங்களுக்கு ஒன்றாகவும் ஓம்காருக்கு ஒன்றாகவும் இருப்பதை உணர்வேன்.

பல இடங்களில் ஓம்காரை சூடாக விமர்சித்தாலும் அவரின் உழைப்பை மதிக்கிறேன். பார்த்தால் சொல்லுங்கள் அவரிடம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு said...
//தனிமனித மதிப்பு தெரிந்தவர் என்பது தெரியும். //

நிச்சயம் கோவி.
இன்று அறிவியல் கருத்துகளோடு முரண்படும் நான் , நாளை ஓம்கார் "மரம் வளர்ப்போம் வாருங்கள்" என்றால் அதில் உடன்பட்டு அவருடன் நிச்சயம் இருப்பேன்.

ஆன்மிகம் என்பது எனக்கு ஒன்றாகவும் உங்களுக்கு ஒன்றாகவும் ஓம்காருக்கு ஒன்றாகவும் இருப்பதை உணர்வேன்.

பல இடங்களில் ஓம்காரை சூடாக விமர்சித்தாலும் அவரின் உழைப்பை மதிக்கிறேன். பார்த்தால் சொல்லுங்கள் அவரிடம்.
//

கல்வெட்டு,

நான் சந்திக்க விரும்புவர்களில் நீங்களும் ஒருவர். நமக்கு எப்போதும் அந்த நேரம் வரும் என்று தெரியவில்லை.

கோவை பக்கம் சென்றால் தகவல் அனுப்புங்க, ஸ்வாமி ஒம்காரின் முகவரி தருகிறேன். நேரில் பார்த்துபேசி வரலாம்.

எனது மின் அஞ்சல் govikannan at gmail dot com

Unknown சொன்னது…

ம்ம்ம்ம்....

மனிதனுக்கு சகமனிதனை உண்டால்தான் உயிர்வாழ்வார்கள் எனும் தேவை ஏற்படும் பொழுது நரமாமிசம் சாப்பிடுவர்களாக மாறுவார்கள், அதுதான் உண்மை.

<<<
பசு கொல்லப்படுவதைச் சுட்டி சுற்றுச் சூழல் கேடு அல்லது சுற்றுச் சூழலுக்கு பசுவின் பங்கு குறித்து எழுதி இருந்தார்.
>>>

கோவிஜி, மாடு சாப்பிடுவது மட்டும் தானா சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும்? இது யாரால் பரப்பபட்ட செய்தி? இப்படியும் சிந்திக்கலாம், மனிதன் சாப்பிடும் காய்கறிகளினாலும்தான், உபயோகபடுத்தும் மரங்களினாலும்தான் காடு அழிந்து கொண்டு வருகிறது. குளேபல் வார்மிங் இதுவும் காரணம் இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

// ..:: Mãstän ::.. said...
ம்ம்ம்ம்....

மனிதனுக்கு சகமனிதனை உண்டால்தான் உயிர்வாழ்வார்கள் எனும் தேவை ஏற்படும் பொழுது நரமாமிசம் சாப்பிடுவர்களாக மாறுவார்கள், அதுதான் உண்மை.
//

மஸ்தான்,
இப்போதைய சூழலைப் பேசுவோம்,
இல்லாத ஒன்றின் உவமை வெறும் விவாதத்திற்கு மட்டும் கூட பயன்படாது.


//கோவிஜி, மாடு சாப்பிடுவது மட்டும் தானா சுற்றுச் சூழல் கேடு விளைவிக்கும்? இது யாரால் பரப்பபட்ட செய்தி? இப்படியும் சிந்திக்கலாம், மனிதன் சாப்பிடும் காய்கறிகளினாலும்தான், உபயோகபடுத்தும் மரங்களினாலும்தான் காடு அழிந்து கொண்டு வருகிறது. குளேபல் வார்மிங் இதுவும் காரணம் இல்லையா?

11:31 AM, November 10, 2009
//

மரம் வளர்க்கிறோமோ, காடுகளை காக்கிறோமோ ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு மரம் வளர்க்க வேண்டும் என்கிற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அருகிவரும் உயிரனங்கள் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. ஆப்ரிக்ககாடுகளில் யானைகள் இன்னும் 15 ஆண்டுகளில் அழிந்துவிடுமாம்.

ஷாகுல் சொன்னது…

//பச்சை மரத்திற்கு அருகில் சிடியைக் கொண்டு சென்றால் அதில் அடங்கி இருக்கும் தகவலுக்கேற்ற (எம்எஸ்எஸ், இளைய ராஜா, ஏஆர் ரஹ்மான் இசை ?) மரம் உணர்ச்சி வசப்படும் என்பது ஓம்காரின் கூற்றாக இருக்கிறது.//

ஐயையோ! அப்போ 'அந்த' மாதிரி பட சிடிய மரத்துக்கிட்ட கொன்டு போனா என்ன ஆயிருக்கும்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாடல மறையோன் சொன்னது…

//நபி என்றால் இறைத்தூதர் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் முகமது நபியைப் பற்றி குறிப்பிடும் போது நபி என்ற அடைமொழியுடன் அல்லது நபிகள் நாயகம் என்றே சொல்லுவார்கள் அது உலக மரபு. ஒரு குழுவினர் ஏற்றுக் கொண்டவர்களை மதிக்க அவர்கள் வழங்கும் சொற்களில் பிறரும் அவர்கள் தலைவரை சொல்வது மரபு.

அன்னை மேரி, அன்னை தெரசச என்று சொல்ல ஒருவன் கிறித்துவனாக இருக்க வேண்டியது இல்லை.//

கிட்டத்தட்ட வந்தேமாதரம் லாஜிக் இங்கு அப்ளை ஆகிற்து. வந்தெமாதரம் பலரால், அல்லது ஒரு குழுவால், மதிக்கப்படுகிறது. ஆனால் மற்றொரு குழுவே அது எங்கள் மதக்கொள்கைக்கு எதிரானது என்கிறது.

நபிகள் நாயகம் என்று எவரும் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்க்ள. ஆனால், அதை மற்றவர் சொல்வதற்கும், இசுலாமியர்கள் சொல்வதற்கும் வேறுபாடு உண்டு.

இசுலாமியர் அதில் பக்திகலந்த மரியாதையை கலந்து சொல்வார்கள். எ-டு நபிகள் நாயகம் அவர்கள் என்று சொல்லியபின் உடனேயே அதனுடன் இன்னும் சில சொற்களைச் சொல்வார்கள்.

அப்படி பிறர் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏன்? ஒரு பொது நல்லிணக்கத்திற்கு எவ்வளவு தேவையோ, அது போதும்.

இப்படியே, அன்னைமேரி..போன்ற கிருத்துவப்பெயர்களுக்குக்கும். கிறுத்துவருக்கு அவை புனிதம். மற்றவர்களுக்கு வெறும் பெயர்கள்.

‘திரு’ போதும், நம்மைப்போன்ற மனிதர்களுக்கு. ஆனால், அச்சொல் - ஒரு சிறப்பான தமிழ்ச்சொல்- லும் இங்கே கேலி செய்யப்படுகிறது.

தமிழர்களால் - என்ன விந்தை!

மாடல மறையோன் சொன்னது…

ஓம்கார் தன் இயற்பெயரே ஸவாமி ஓம்கார் என்றா சொன்னார் கோவி கண்ணனிடம்?

சன்னியாசம் வாங்கிய்வர்கள் தங்கள் பூர்வாசப்பெயரை வைத்துக்கொள்வதில்லை. அதை வைத்து தான் விளிக்கப்படுவதை விரும்புவதுமில்லை.

இந்த் ஓம்கார், சன்னியாசம் வாங்கியிருந்தால், தன் இயற்பெயரை ஏன் வெளியில் சொல்லி விளிக்கப்பட ஏதுவாக்க்கிறார்?

இயற்பெயரே ஸ்வாமி ஓம்கார் என்று எப்படி வரும்?

சுப்பிரமணியம் சுவாமி
அரவிந்த சுவாமி

நம்பலாம்.

ஸ்வாமி சுப்பிரமணியம்
ஸ்வாமி அரவிந்த.

நம்பலாமா?

அப்படி இயற்பெயரே அதுவாயின் சரி.

பெயரில் ஒன்றுமில்லை என்று சொல்வதெல்லாம் கப்சா.

அதை வைத்து நன்றாக ஏமாற்றலாம்.

மாடல மறையோன் சொன்னது…

கல்வெட்டு, கோவி கண்ணன் - இவர்களை நான் படித்ததுண்டு. ஒரு சுதந்திரமான ஆழ்ந்த சிந்தனையுடன் கருத்துகள் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இங்கே..எனக்கு Defence for Defence sake என்று எழுதுவது போலிருக்கிறது.

மணிகண்டன் சொன்னது…

****
கல்வெட்டு, கோவி கண்ணன் - இவர்களை நான் படித்ததுண்டு. ஒரு சுதந்திரமான ஆழ்ந்த சிந்தனையுடன் கருத்துகள் பார்த்திருக்கிறேன்.

ஆனால், இங்கே..எனக்கு Defence for Defence sake என்று எழுதுவது போலிருக்கிறது.
****

ஜோ, அப்புறம் எதற்கு விவாதம் செய்கிறீர்கள் ?

ஓம்கார் எழுதும் கருத்தை குப்பை என்று கல்வெட்டு கூறுவது போல் கூறுங்களேன். அல்லது கண்ணன் கூறுவது போல் மைல்டாக தவறு என்றும் கூறலாம்.

ப்ளாகில் அவர் எழுதுகிறார் என்பதால் இந்த விவாதமா ? அதுவும் கண்ணனுக்கு நண்பர் என்றும் கூறிவிட்டார். பிறகு அவர் என்ன செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கறீர்கள் ?

கல்வெட்டு சொன்னது…

//ஆனால், இங்கே..எனக்கு Defence for Defence sake என்று எழுதுவது போலிருக்கிறது.//

ஜோ அமலன்,
அவர் விரும்பிய பெயர் வைத்துக் கொள்வதும் அவர் நம்பும்/விரும்பும் கருத்தைச் சொல்வதும் அவரின் பரிபூரண சுதந்திரம் அல்லவா?

அவர் பெயர் எதுவாகிலும் இருக்கட்டும். அவர் முன்னிருத்தும் பிரச்சனைகளைப்பற்றிப்பேசலாம் என்பதுதான் எனது கருத்து. நிச்சயம் ஓம்காரை டிபண்ட் பண்ணும் எண்ணம் இல்லை.

தகவலுக்காக...
இணையத்தில் ஜோசியம், மதம் , சாதி , ஆன்மீகம்,பின் நவீனத்துவம் கருத்துகள் விற்பனை செய்பவர்கள் அதைப் பேசிப்பேசியே ஜல்லி அடிப்பவர்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. இப்படியும் மனிதர்களா என்றுதான் நினைப்பேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ


ஓம்கார் தன் இயற்பெயரே ஸவாமி ஓம்கார் என்றா சொன்னார் கோவி கண்ணனிடம்?

சன்னியாசம் வாங்கிய்வர்கள் தங்கள் பூர்வாசப்பெயரை வைத்துக்கொள்வதில்லை. அதை வைத்து தான் விளிக்கப்படுவதை விரும்புவதுமில்லை.

இந்த் ஓம்கார், சன்னியாசம் வாங்கியிருந்தால், தன் இயற்பெயரை ஏன் வெளியில் சொல்லி விளிக்கப்பட ஏதுவாக்க்கிறார்?

இயற்பெயரே ஸ்வாமி ஓம்கார் என்று எப்படி வரும்?

சுப்பிரமணியம் சுவாமி
அரவிந்த சுவாமி

நம்பலாம்.

ஸ்வாமி சுப்பிரமணியம்
ஸ்வாமி அரவிந்த.

நம்பலாமா?

அப்படி இயற்பெயரே அதுவாயின் சரி.

பெயரில் ஒன்றுமில்லை என்று சொல்வதெல்லாம் கப்சா.

//

அமலன் ஐயா,

அவரிடம் அவர் பெயர் குறித்து கேட்டதற்கு இயற்பெயர் என்றே சொன்னார். உங்களுக்கு என்ன பிரச்சனை ஸ்வாமி என்பதா ? :)
டாக்டர் பட்டம் எந்த பல்(பாழ்)கலைகழகம் கொடுத்தாலும் ஒருவர் டாக்டர் _____ என்று அழைக்கிறார்கள், அழைப்பவர்கள் பல்கலை போலியா உண்மையா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உங்கள் நினைப்பு படியே எதோ ஒரு அமைப்பு அல்லது அவர் மதிக்கின்ற அமைப்பு அவருக்கு ஸ்வாமி என்ற அடைமொழி கொடுத்து இருக்கலாம். எல்லோரும் என்னை "ஸ்வாமி" ஓம்கார் என்று அழைத்து எனக்குபெருமை சேருங்கள் என்று சொன்னது போல் நான் அவர் பதிவில் படித்தது இல்லை. விருப்பட்டவர்கள் ஸ்வாமி ஓம்கார் என்றே அழைக்கிறார்கள், மற்றவர்கள் எவ்வாறு அழைத்தாலும் அவர் கடிந்து கொண்டது கிடையாது.

பெயரில் ஒன்றும் இல்லை... பெயர் என்பது உடலுக்கான ஒரு லேபிள் என்றே அவர் சொல்லுவார் ... எனக்கும் அது தான் சரின்னு படுது:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படியே, அன்னைமேரி..போன்ற கிருத்துவப்பெயர்களுக்குக்கும். கிறுத்துவருக்கு அவை புனிதம். மற்றவர்களுக்கு வெறும் பெயர்கள்.
//

அன்னை மேரி, அன்னை தெரசா மற்றும் அன்னை அல்போஃன்சா ஆகியோரை அதே உள்ளன்போடு தான் குறிப்பிடுகிறேன். நான் வெறும் பெயராக பார்க்கவில்லை

கல்வெட்டு சொன்னது…

ஜோ அமலன்,
அன்னைமேரியோ,முகமது நபி, இயேசு, முருகன்,புத்தர் , குருநானக் ...இன்னபிற பெயர்கள் எல்லாம் ஒவ்வொருவருக்கும் ஒரு அர்த்தம் தருபவை.


எனக்கு மேலே சொன்ன யாரும் சிறப்புத்தகுதி கொண்டவர்களாக தெரியவில்லை. ஒரு காலத்தில் என்னைப்போல வாழ்ந்தவர்கள் அதை மீறி ஒன்றும் இல்லை எனக்கு.

ஒருவருக்கு ஒருமாதிரி இருப்பதால் எல்லாருக்கும் அப்படித் தோன்றத்தேவையில்லை.

சின்ன உதாரணம்.

இயேசுவிற்கு அன்னைமேரி அம்மா. ஆனால் அவர் கணவனுக்கு என்றும் அவர் மனைவிதானே?

மேலும் அன்னைமேரி அவர் அம்மாவிற்கு என்றும் பிள்ளைதானே?

யாரை எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உங்களுக்கு ஸ்வாமி என்றாலே புனிதம்/புண்ணியம்/சிறப்பு/தூய்மை/வாய்மை என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன். அது உங்களின் பார்வை என்ன செய்ய.

பெயரில் என்ன இருக்கிறது? பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மேலும் அன்னைமேரி அவர் அம்மாவிற்கு என்றும் பிள்ளைதானே?

யாரை எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. உங்களுக்கு ஸ்வாமி என்றாலே புனிதம்/புண்ணியம்/சிறப்பு/தூய்மை/வாய்மை என்று தோன்றுகிறது என்று நினைக்கிறேன். அது உங்களின் பார்வை என்ன செய்ய.

பெயரில் என்ன இருக்கிறது? பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.
//

கல்வெட்டு,

கிறித்துவ பாதிரிமார்களை நான் அருள் தந்தை அல்லது பாதர் என்று அழைக்கத் தயங்கியது இல்லை. பெரும்பாலன மாற்று மதத்தினரும் அப்படியே தான் அழைக்கிறார்கள். நம்ம அமலன் ஐயா 'ஸ்வாமி' என்பதற்கு லோக குரு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ என்று பொருள் எடுத்துக் கொள்கிறாரான்னு தெரியலை

கல்வெட்டு சொன்னது…

// கிறித்துவ பாதிரிமார்களை நான் அருள் தந்தை அல்லது பாதர் என்று அழைக்கத் தயங்கியது இல்லை. பெரும்பாலன மாற்று மதத்தினரும் அப்படியே தான் அழைக்கிறார்கள். நம்ம அமலன் ஐயா 'ஸ்வாமி' என்பதற்கு லோக குரு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ என்று பொருள் எடுத்துக் கொள்கிறாரான்னு தெரியலை//

கோவி,
கிறித்துவ பாதிரிமார்கள் - அருள் தந்தை - பாதர் ....எல்லாம் வகிக்கும் பதவி அல்லது மதம் சார்ந்த செய்யும் தொழில் - பொறுப்புகளுக்கான பெயர் அல்லது அடைமொழி.

ஏட்டை ஏட்டு என்று அழைப்பதில் தவறு இல்லை.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் என்பதும் ஏட்டையா ஜெகத்கஸ்பர் என்பதும் வேலை சார்ந்தது.

இதே அருட்தந்தை ஜெகத்கஸ்பர் நாளை நீதிபதி ஆகிவிட்டால் கனம் நீதிபதி ஜெகத்கஸ்பர் என்றுதான் அழைக்க வேண்டும்.

**

அமலன் 'ஸ்வாமி' என்பதற்கு லோக குரு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ என்று பொருள் எடுத்துக் கொண்டாலும் ஒன்றும் மாறப்போவது இல்லை. எத்தனை ஸ்ரீஸ்ரீஸ்ரீ போட்டாலும் இரவி இரவிதான் .

**

அமலன் 'ஸ்வாமி' என்ற வார்த்தையை அவரைவிட உயர்வான இடத்தில் வைத்துப் பார்க்கிறார். அது சில புனித எதிர்பார்ப்பைக்கூட்டுகிறது. அதுதான் பிரச்சனையே.

"ஓம்கார் வாங்க டீ சாப்பிடுவோம்" என்று தோழமையுடன் பார்க்கப்பழகிவிட்டால் பிரச்சனை இல்லை.

**

எத்தனை பிள்ளை பெற்றாலும் மனைவி கண‌வனுக்கு என்றும் காதலிதான். பிள்ளைகள் அம்மா என்று அழைக்கலாம்.
பேரக்குழந்தைகள் பாட்டி என்று அழைக்கலாம்.
ஆனால்,மனைவி கண‌வனுக்கு என்றும் காதலிதான்.

அதுபோல ஓம்கார் பக்தர்களுக்கு ஸ்வாமியகவும், ஸ்டாக் புரோக்கர்களுக்கு பங்கு வர்த்தக ஜோசியராகவும், மூளையை அடகுவைக்கத் தயாரக இருப்பவர்களுக்கு ஆன்மீக குருவாகவும் இருந்துவிட்டுப்போகட்டுமே?

இந்த வட்டத்தில் வராதவர்கள் அவரை சக பிளாக்கராக "வாங்க பாஸு" என்று அழைப்பதில் என்ன பிரச்சனையோ.... ???

மாடல மறையோன் சொன்னது…

//உங்களுக்கு என்ன பிரச்சனை ஸ்வாமி என்பதா ? :)//

தனிப்பட்ட பிரச்சனை என்றெல்லாம் நான் பின்னூட்டம் போடுவதில்லை. என் கருத்துகள் என்னைபொறுத்தவரை பொதுக்கருத்துகள். ’தனிப்பட்ட’ என்ற சொல்லை பயன்படுத்துவோர் வேறெங்கோ போக நினைக்கிறார்கள்.

மாடல மறையோன் சொன்னது…

//நான் வெறும் பெயராக பார்க்கவில்லை//

நான் உங்கள் முதல் கருத்தை பொதுக்கருத்தாகத்தான் பார்க்கிறேன். இப்பொது தனிப்பட்ட கருத்தாக்கிவிட்டீர்கள். அப்படியென்றால் பின்னூட்டமே தேவையில்லை.

மாடல மறையோன் சொன்னது…

//டாக்டர் பட்டம் எந்த பல்(பாழ்)கலைகழகம் கொடுத்தாலும் ஒருவர் டாக்டர் _____ என்று அழைக்கிறார்கள், அழைப்பவர்கள் பல்கலை போலியா உண்மையா என்றெல்லாம் பார்ப்பது இல்லை. உங்கள் நினைப்பு படியே எதோ ஒரு அமைப்பு அல்லது அவர் மதிக்கின்ற அமைப்பு அவருக்கு ஸ்வாமி என்ற அடைமொழி கொடுத்து இருக்கலாம். எல்லோரும் என்னை "ஸ்வாமி" ஓம்கார் என்று அழைத்து எனக்குபெருமை சேருங்கள் என்று சொன்னது போல் நான் அவர் பதிவில் படித்தது இல்லை. விருப்பட்டவர்கள் ஸ்வாமி ஓம்கார் என்றே அழைக்கிறார்கள், மற்றவர்கள் எவ்வாறு அழைத்தாலும் அவர் கடிந்து கொண்டது கிடையாது.//

டாக்டர் பட்டம்...போன்ற வாதங்களுக்கு என் பின்னூட்டம் பொருந்தாது. இயற்பெயருக்கு மட்டுமே பொருந்தும்.

இப்போது ஸவாமி என்று யாரோ கொடுத்ததாக்ச் சொல்லிவிட்டீர்கள்.

case dismissed. or case withdrawn by the peititoner 9Govi Kannan)

மாடல மறையோன் சொன்னது…

//ப்ளாகில் அவர் எழுதுகிறார் என்பதால் இந்த விவாதமா ? அதுவும் கண்ணனுக்கு நண்பர் என்றும் கூறிவிட்டார். பிறகு அவர் என்ன செய்யவேண்டும் என்று எதிர்ப்பார்க்கறீர்கள் ?//

மணிகண்டன்...அவர் வலைபதிவில் இப்படி கேட்டால்தான் தவறு. இங்கு கேட்கலாம் - ‘நான் அவருக்கு வேண்டிய்வன்..இங்கும் வேண்டாம்’ என்று கோவி கண்ணன் சொல்லாதவரை.

எவரயும் எதிர்பார்த்து எவரும் பின்னூட்டங்கள் போடுவதில்லை. கோவி கண்ணன் பதிவு திறந்த வெளியில் போடப்பட்ட சுவரோட்டி. எவரும் விமர்சனம் செய்ய்லாம். அது ஆபாசசொற்களில் இல்லாதவரை.

நீங்கள் மிரட்டுகிறீர்கள் - ‘எனக்குப் பிடிக்கவில்லை..ஏன் எழுதினாய்?’ என்பதைப்போல.

இது கோவி கண்ணன் வலைபதிவு. He can moderate. He can censore me. Why you get annoyed?

மாடல மறையோன் சொன்னது…

//ஓம்கார் வாங்க டீ சாப்பிடுவோம்" என்று தோழமையுடன் பார்க்கப்பழகிவிட்டால் பிரச்சனை இல்லை//

இதுவும் தவறு. தோழர்களே ஓம்கார் என மொட்டையாகக் கூப்பிடலாம். மற்றவர்கள் ‘திரு ஓம்கார்’ என்பதே சரி. அவரிடம் நேராக இல்லாமல் நம்க்குள்ளே பேசும்போது வெறும் ஓம்கார் போதும்.

அவரின் வலைபதிவுகள் , திரு ஓம்கார் என்றே இருக்கும்.

இங்கு கோவி கண்ணன், கல்வெட்டு, மணிகண்டன் என மொட்டயாக விளித்தது ஒரு unsolicited liberty subject to approval.

மாடல மறையோன் சொன்னது…

//அவரின் வலைபதிவுகள் , திரு ஓம்கார் என்றே இருக்கும்//

அவரின் வலைபதிவுகளின் என் பின்னூட்டங்கள் ‘திரு ஓம்கார்’ என்றே விளித்தன்.

என்று திருத்தி வாசிக்கவும்.

மாடல மறையோன் சொன்னது…

//அதுபோல ஓம்கார் பக்தர்களுக்கு ஸ்வாமியகவும், ஸ்டாக் புரோக்கர்களுக்கு பங்கு வர்த்தக ஜோசியராகவும், மூளையை அடகுவைக்கத் தயாரக இருப்பவர்களுக்கு ஆன்மீக குருவாகவும் இருந்துவிட்டுப்போகட்டுமே?//

This is to be accepted wholeheartedly. Because it is individual liberty
to be what he wants to be to persons who admire him.

Like fan clubs for actresses and actors. Can we accuse the actors and actresses for that?

To see the fans pouring milk over their cutouts and other such overwhelming affection, will appear highly idiotic and annoying to us. But we cant help it.

In the name of liberty, anything is possible, and is to be allowed, except when it exploits the gullibility of the innocents.

It is too well known that public personalities like politicians and others exploit people. But the exploitation by politicians and actors will come to an end one day . The exploitation by god men (all religions) goes on forever. They exploit fear factor. Politicians and others don't exploit that factor.

Even after the death of a god man, the leading followers of that god man, uses his memory to exploit - like building manimandapam with crores of rupees earned by common and innocent people!

மாடல மறையோன் சொன்னது…

மணிகண்டன்!

ராஹுல்காந்தி ஒரு தலித்தின் வீட்டின் அவர்கள் செய்த உணவை உண்டு அவ்வீட்டில் அவர்களுடன் தங்கியிருந்து மறுநாள் தில்லி திரும்பினார். அது ஒரு political stunt என்று அரசியல் விம்ரசகர்கள் சொல்லலாம். எனினும். அது செய்ய்ப்பட்டது செய்யப்பட்டதே.

உங்கள் குரு ஓம்கார், இப்படி தமிழ் தலித்து - அவர் பாங்கு வேலை செய்பவரரக் இருக்கக்கூடாது - நகரசுத்தி தொழிலாளியாகத்தான் இருக்கவேண்டும் - அப்படிப்பட்ட தலித்தின் வீட்டில் சென்று ரா.காந்தி செய்ததைப்போல் செய்துவிட்டு வந்து தான் ‘சுத்தி பரிகாரம்’ செய்ய்வைல்லை என்பதையும் நிருப்பித்தால்,

அவரை நான் ஸ்வாமி ஓம்கார் என அழைக்கிறேன் பவ்வியமாக. என் பிரச்னை என்று சொன்னீர்களல்லவா? அது தீர்ந்துவிட்டது.

அப்படி அவர் செயதால் அவரைச்சுற்றி, ஸ்வாமிஜி..ஸ்வாமிஜி என்று ஆராதனை செய்யும் பார்ப்பனகோடிகள் பறந்துவிடுவார்கள்.

அது போகட்டும்.

இப்பொது வேதகால வாழ்க்கையைப் பற்றி இவர் எழுதும் நோக்கம் அதைப்பற்றி இன்றைய் தலைமுறைக்குச்சொல்லி உசுப்பேத்துவத்ற்காக.

தீண்டாமை...ஜாதி...என்றெல்லாம் வரும்போது, நடுங்குவது, தேவரல்ல, செட்டியார்கள் அல்ல..முத்லிகள் அல்ல...கவுண்டர்கள் அல்ல...கோனார்கள் அல்ல.

ப்ன்னெடுங்காலமாக வாய்பேசமுடியாமல் நசுக்கப்பட்டு விலங்குகளைப்போல் வாழ்க்கை வாழ்த்துரத்தப்பட்ட, அவர்கள் நிழல் பட்டாலே பாவம் என மனித சமூக்த்திற்கு வெளியே வைக்கப்பட்ட தலித்துகளே நடுங்குவர்.

ஓம்கார் அந்தப் புண்ணியத்தைச்செய்து, பார்ப்பனர்களின் பேராதரவைப்பெற முயற்சிக்கிறார்.

இறைவன் அங்கு இல்லை. அது இப்படிப்பட்டவர்களிடம் இருப்பதாக நினைப்பது ஒரு மாயை.

எவனொருவன் ராகுல் செய்ததைச்செய்தானே அவனிடமே இறைவன் இருப்பான். எவ்னொருவன் வேதகால வாழ்க்கையை எழுப்பிவிட்டு தலித்துகலை மறுபடியும் வில்ங்குகளாக ஆக்கனினைக்கிறேன் அவனுக்கும் இறைவனுக்கும் தொடர்பில்லை.

தெய்வம் நின்று கொல்கிறது இன்று பார்ப்ப்னர்களை இல்லயா?

தெய்வத்தை ஏமாற்ற் முடியாது மணிகண்டன்!

மாடல மறையோன் சொன்னது…

வேதகாலம் என்றால் பார்ப்ப்னன் முகம் மலர்கிறது. குதிக்கிறான்; கொண்டாடுகிறான்.

வேதகாலம் என்றால் தலித்து அல்றுகிறான். அழற்றுகிறான். நடுங்குகிறான். ஏன்? இன்னும் அக்காலம் சொன்ன தீட்டை சும்க்கிறான். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், அவன் கோயிலுக்கு நுழையமுடியவில்லை. என்வே அவன் நடுங்குவதை அவனாலேயே தடுக்கமுடியாது.

பார்ப்பனனுக்கு மீண்ட சொர்க்கத்தைக் காட்ட, காவியுடையணிந்து, நெற்றினிறைய நீருபூசி, உருத்திராடசைகொட்டைமாலையணிந்து, சரித்திர ஆராய்ச்சி பண்ணி, சமஸ்கிருத சொல்மாலையிட்டு, ஸ்வாமி என்ற பெயருடன், பார்ப்பனனுக்கு வேதகாலத்தைக் அது உன்சொர்க்கம், அதற்காக பாடுபடு என்கிறான் ஒருவன்.

மூவகை மனிதர்கள்.

இறைவன் பெயரால் அரங்கேறும் ஒரு சோக நாடகம்.

வலைபதிவுகளிலும் நாம் காணும் காட்சிகள்.

இறைவன் எங்கே என்று தேடுபவன் ஸ்வாமி. நான் கண்டேன்.. நீயும் காண வா’ என்பான் அவன்.

ஒருவன் வாழ் இன்னொருவனை அழிக்க முயல்பவன். அவ்விறைவன் இவனுக்கே. உனக்கில்லை..என்பவன் எல்லாம் ஸவாமியா?

ஸ்வாமி என்ற் சொல்லுக்கு அப்படியும் ஒரு பொருளா?

மணிகண்டன் சொன்னது…

ஜோ, ஓம்காரின் வேதகால வாழ்க்கை என்ற தொடரை படித்து விட்டு உங்களுக்கு பதில் சொல்கிறேன். அவரை நான் அதிகம் படித்ததில்லை. படிக்காமல் உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை.

அடுத்தது, நான் உங்களை மிரட்ட எல்லாம் முடியாது :)-

கோவி கண்ணனின் நண்பர் என்று சொன்ன பிறகும் பெயரை குறித்து விவாதம் தேவையா என்றே உங்களிடம் கேட்டேன். அவ்வளவே.

அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.

கோவி கண்ணனை ஸ்வாமி என்பதற்கு பதிலாக சுவாமி என்று மாற்ற சொல்லுங்கள் - உடனடியாக செய்வார் :)- ஸ்ரீரங்கத்தை பலமுறை சீரங்கம் என்று தான் எழுதுகிறார். திருவரங்கம் என்று எழுதமாட்டார் :)-

அடுத்தது உங்களுக்கு கல்வெட்டு, கோவிகண்ணன் பல பதில்கள் எழுதி உள்ளார்கள். ஆனால் என் பெயரை குறிப்பிட்டே பின்னூட்டங்கள் எழுதி இருக்கிறீர்களே ! ஏன் ? உங்களிடம் ஓம்காரை எனது குரு என்று எப்போது சொன்னேன் ? ஒருவரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லாம் எனக்கு இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள்.

மணிகண்டன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//டாக்டர் பட்டம்...போன்ற வாதங்களுக்கு என் பின்னூட்டம் பொருந்தாது. இயற்பெயருக்கு மட்டுமே பொருந்தும்.

இப்போது ஸவாமி என்று யாரோ கொடுத்ததாக்ச் சொல்லிவிட்டீர்கள்.

case dismissed. or case withdrawn by the peititoner 9Govi Kannan)//

அமலன் ஐயா,

யாரோ கொடுத்ததாகச் சொல்லவில்லை, 'இருக்கலாம்' என்றே சொன்னேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் மிரட்டுகிறீர்கள் - ‘எனக்குப் பிடிக்கவில்லை..ஏன் எழுதினாய்?’ என்பதைப்போல...


உங்கள் குரு ஓம்கார், இப்படி தமிழ் தலித்து - அவர் பாங்கு வேலை செய்பவரரக் இருக்கக்கூடாது -//

அமலன் ஐயா,

நண்பர் மணிகண்டன் கருத்து எதிர்கருத்து சொல்லும் போது அதை மிரட்டலாக நான் எடுத்துக் கொள்வது கிடையாது. கருத்துகளை தனிமனித விமர்சனமாக அவரும் செய்வது கிடையாது.

அவர் ஓம்கார் தனக்கு குரு என்று சொல்லாதபோது அவர் ஓம்கார் குறித்து நேர்மறைக் கருத்துக் கூறினார் என்பதை வைத்து நீங்களாகவே குரு என்றெல்லாம் ஊகமாக குறிப்பிடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஸ்வாமி ஓம்கார் பார்பனரோ, பார்பனர்களின் செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவரும் இல்லை. இந்து மதம் பார்பனர் வளர்த்தது பார்பனர்களின் மதம் என்று எவரும் சொன்னால் அதை ஒட்டுமொத்தமாக இந்து மதத்தை அழிக்கும் குற்றச் சாட்டாக பார்பவர். அதை மறுப்பவர் மட்டுமே.
வள்ளலார், விவேகநந்தர் போன்றோரும் மதத்தினுள் இருந்து கொண்டு தான் சீர்திருத்தம் செய்ய முயன்றார்கள் மதத்தை அழித்துவிட்டு அல்ல. இந்து வேதங்கள் அனைத்தும் பார்பனர்களின் ஆக்கம் என்பதை அவர் மறுக்கிறார்.

ஜோ/Joe சொன்னது…

//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.//

:)))))

சின்ன வயதில் என் நண்பன் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று கேட்டான் " போப்பாண்டவர் குசு விடுவாரா?" :)))

ஜோ/Joe சொன்னது…

அமலன் ஐயா ('ஐயா' என்பது நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் சேர்த்துக்கொண்டது),

இந்த பெயர் ,அடைமொழி குறித்து இவ்வளவு விவாதம் தேவையா ? இல்லையென்றால் பசுவதை ,விலங்கு வதை பற்றி நேரடி விவாதங்கள் வந்திருக்கும் ..கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.

மாடல மறையோன் சொன்னது…

அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை//

You can take it differently also.

Every action will bring its reaction.

It is a negative action to crush a people using religious theology of pollution.

The dalits were crushed, and they accepted it, because they were brainwashed to believe that God created them just an inch above the animals; and they shouldn't claim equality with other humans in a Hindu society.

Such crushing wont continue for ever. Their children will react. Or, the awakened society consisting of others will take up cudgels on their behalf. It happens in any society of oppression. How long will you crush?

However, the reaction is still incomplete. The brahmins have brought to foreign soils their theology; and they represent Hindusim there.

The dalits fear Hindu history will repeat there.

Recent example: Obama's celebration of Diwali in White House and the brahmins priests consecrated everything there.

The representatives of Dalits met the US President and explained the potential danger of eliminating dalits in Hindu celebrations. They pointed out that dalits were not allowed for fear of pollution and it was an upper caste show all the way. More to come. Lets see how Obama will act. If US could bring equality to blacks in white-dominated society, it is possible to bring equality to dalits in Upper caste dominated Hindu society, that now, has gone to live in other countries and wanted the ancient brand of Hindu religion there.

This is the rational way of explaining தெய்வம் நின்று கொல்லும். There is no way for you to escape from reaction, even you try to sweep under 'Unbelief' as you do here.

J.A.R.Fernando.

மாடல மறையோன் சொன்னது…

//எனக்கு தெரிந்து ஸ்வாமி ஓம்கார் பார்பனரோ, பார்பனர்களின் செயல்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவரும் இல்லை//

Ok, I take it.

Nevertheless, you may be reminded of collateral damage or friendly fire.

We do certain things, in good faith. The innocents become victims of our act, unintentionally.

Of course, the actor escapes claiming the fact of unintention.

So far so good.

Now, take the actor. Is he really so innocent that his act wont affect the innocent? Here, he is well conversant with Hindu lore and theology. He is aware of the history that certain things in the religion were carefully and cunningly done - in order to eliminate dalits from Hindu society. If he does an act, and that act affects dalits, can he claim immunity from the anger of those affected?

He cant. He need to be questioned. He need to be pulled up.

Omkar is aware of all that he is writing. He is not innocent.

My point, already stated in your blog, is that the glorification of Vedic age will mislead. The glorification will strike fear in the hearts of dalits. The glorification of Cow as a sacred animal was done by brahims only to make dalits as lowest humans living on the carcasses of the cows, and that was a stark violation of hindu dharma; and for that, it was just and proper they were eliminated from the religion; and anyone coming into contact with them even remotely(நிழலே படக்கூடாது; எனவே, ஊருக்கு வெளியேதான் வாழவேண்டும்) get polluted religiously.

The Hindus should treat the cow sacred; and even drink its urine. But they should not treat the dalits as proper humans worthy of living in human society. An animal is preferred; and human is hated. ஹா...ஹா...!

Omkar is callous and cruel in his glorification of that age. I said, he was all for brahmins, because, he is well aware of the fact that the age brought glory to them; and such a glory was getting diminshed; and such a glory should be dusted off, given a fresh polish and displayed to make brahmins high up in Hindu society to the envy and kowtowing of others! The brahmins want that glory; he is here trying to give them that fantasy.

In US, there is no Omkaar. But others are doing that worthy job there - read my reply to Manikandan, couldnt you?

His writings, in other blog feedbacks, too bespeak his ardent desire for upfronting the brahmins, which will ipos facto imply elimination of dalits in the religion.

In a feedback, he wrote he was agonised to see agrahaarams are vanishing!

I am also agonised in a differnt sort of way!

மாடல மறையோன் சொன்னது…

’ஐயா’is to be avoided in addressing me please.

I hate such addresses which remind me of master-servant relationship.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
’ஐயா’is to be avoided in addressing me please.

I hate such addresses which remind me of master-servant relationship.
//

ஐயா என்று விளிப்பது உங்கள் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை மதித்து தான்.
வேறு தனிப்பட்ட படிப்பு, அடையாளங்களுக்கு அல்ல.

உறவு முறைப் பெயர்களும் அப்படித்ததனே. வயது அனுபவம், தொடர்பு ஆகியவை அடக்கியது தான் உறவு முறைகளும். நண்பர் என்று அழைப்பதற்கும் அதே போன்று வெறும் காரணம், நாம் ஒருவரை ஏற்கிறோமா இல்லையா என்பதைவிட அவரை மதிக்கிறோம் என்பதையும் நம் பதிலில் குறிப்பிட வேண்டி இருக்கிறது. 'திரு' போல் ஐயாவும் ஒரு மரியாதை விளிப்பு சொல்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Omkar is callous and cruel in his glorification of that age. I said, he was all for brahmins, because, he is well aware of the fact that the age brought glory to them; and such a glory was getting diminshed; and such a glory should be dusted off, given a fresh polish and displayed to make brahmins high up in Hindu society to the envy and kowtowing of others! The brahmins want that glory; he is here trying to give them that fantasy.

In US, there is no Omkaar. But others are doing that worthy job there - read my reply to Manikandan, couldnt you?

His writings, in other blog feedbacks, too bespeak his ardent desire for upfronting the brahmins, which will ipos facto imply elimination of dalits in the religion.

In a feedback, he wrote he was agonised to see agrahaarams are vanishing!

I am also agonised in a differnt sort of way!//

:) ஸ்வாமி ஓம்கார் தனக்கு தெரிந்த வேதகாலம் பற்றி குறிப்பிடுகிறார், அவர் குறிப்பிடும் வேதகாலம் பார்பனர்கள் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் இல்லையா ? ஒன்றிலிருந்தே வந்திருந்தாலும் உதாணத்திற்கு கிறித்துவர்களில் மோட்ச வருணனைக்கும், இஸ்லாமியர்களில் வருணனைக்கும் வேறுபாடு உள்ளது, இரண்டுமே ஒன்று அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...
அமலன் ஐயா ('ஐயா' என்பது நீங்கள் வயதில் பெரியவர் என்பதால் சேர்த்துக்கொண்டது),

இந்த பெயர் ,அடைமொழி குறித்து இவ்வளவு விவாதம் தேவையா ? இல்லையென்றால் பசுவதை ,விலங்கு வதை பற்றி நேரடி விவாதங்கள் வந்திருக்கும் ..கொஞ்சம் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்.
//

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...
அடுத்தது - இந்த தெய்வம் நின்று கொல்லும் / உட்கார்ந்து கொல்லும் / சாய்ந்திருந்து கொல்லும் என்று எழுதுவதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை//

You can take it differently also.

Every action will bring its reaction.

//

அமலன் ஐயா,

ஒரு கிறித்துவரான நீங்கள் இதை ஏற்கிறீர்களா ?

கிறித்துவத்தில் 'மனம் திரும்புவர்களுக்கு/திருந்துபவர்களுக்கு பாவ மன்னிப்பு' உண்டு என்று சொல்லப்படுகிறதே. அப்போது ஆக்சன் ரியாக்சன் இவை எல்லாம் நல்(Null)ஆக்சன் ஆகிவிடுமே :)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ/Joe said...
//பெயரெதுவாக இருந்தாலும் புனிதர்களும் ஆய்போவார்கள் என்ற புரிதல் இருந்தால் போதும்.//

:)))))

சின்ன வயதில் என் நண்பன் மிகப்பெரிய சந்தேகம் ஒன்று கேட்டான் " போப்பாண்டவர் குசு விடுவாரா?" :)))
//

நல்லா இருக்கு, நாங்க விட்டா(ல்) பெருங்காய வாசனை வரும் என்கிற குலப்பெருமை பழமொழியும் நினைவுக்கு வருகிறது. குசு மேட்டரில் ஏன் மக்கள் அவ்வளவு ஆராய்ச்சி செய்கிறார்கள் !!
:)

மாடல மறையோன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் தனக்கு தெரிந்த வேதகாலம் பற்றி குறிப்பிடுகிறார், அவர் குறிப்பிடும் வேதகாலம் பார்பனர்கள் குறிப்பிடுவதிலிருந்து மாறுபட்டு இருக்கலாம் இல்லையா ? //

If that is true, will he accept with me in shouting and desiring:

DESTROY VARNASHRADHARMA

so that the dalits and all else will be equal to brahmins?

As long as it is there, so long as dalits are not equal to anyone, let alone brahmins, the FIRST AMONG EQUALS in the religion.

Varnsharadharam and its cruel children, the JAATIS stand against dalits, and eliminate them.

Will Omkar accept me?

If he does not side with Brahmins, he will accept it.

Remember: Destruction of Varnashradahrma is a destruction of the entities called Brahimins and dalits.

Brahmins wont accept. Even Bhrati did not. Brahmins hold tenactiously that the dharma did well to cohere society - the brahmins wont like to see the coherence involved all except dalits. You can read forum exclusive to Tamil brahmins to verify my statement.

About Omkar, he is to prove himself yet! Wanting Vedic age back is wanting the cruel dharma back intact.

Govi Kannan! THERE CANT BE A VEDIC AGE WITHOUT VARNASHRADHARMA...!

JAR Fernando

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ said...

If that is true, will he accept with me in shouting and desiring:

DESTROY VARNASHRADHARMA

so that the dalits and all else will be equal to brahmins?

//

ஐயா, ரொம்ப வேகமாக இருக்கிங்க. நாம நினைப்பதையும் நாம படிததையும் நம்ம நம்பிக்கையையும், நாம அறிந்திருக்கும் வரலாற்றையும் அவரும் அறிந்திருக்க வேண்டிய அவசியமும். நாம எதிர்பதற்கான காரணம் அவருக்கும் இருக்கனும் என்று நம் எதிர்பார்ப்பில் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை.

அவருக்கு அவற்றையெல்லாம் எப்போது எதிர்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது அவர் செய்வார், அதை நாம் நிர்பந்தப்படுத்த முடியாது. அவர் லோக குரு என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னால் இந்துக்கள் அணி திரண்டு இருந்தால் நீங்கள் சொல்வதைச் செய்யச் சொல்லி நாம கேட்கலாம். அவரும் ஒரு சாரரசரி மனிதர் அவர் அறிந்தவற்றை எழுதுகிறார். அதுவும் அவர் எழுத்துகளைப் படிப்பவர்களுக்கு எழுதுகிறார் என்பதே என்புரிதல்.

***


தலித் - தாழ்த்தப்பட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடுகள் தமிழகத்தில் கிறித்துவ மதத்திலும் இருக்கின்றன, அடிக்கடி தலித் கிறித்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பொருளதார, தகுதி அடிப்படையில் ஞாயமாக கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடுகளும் கிறித்துவர்கள் என்பதால் தடுக்கப்படுகிறது. பேராயர்களும், மறைமாவட்டத்து பொருப்பாளர்களும் வெளிப்படையாக எந்த ஒரு நடவெடிக்கைகளும் எடுக்க தயங்குகிறார்கள், அவர்கள் கட்டுப்பாடு எதுவுமே இல்லாமல் சர்சுகள் தலித் நுழைகிறார்கள் என்று பூட்டப்படுகிறது. இதையெல்லாம் பற்றி நாம கவலைப்பட வில்லை. வளரும் ஒரு இந்து சாமியார் பார்பனர்களை வர்ணாசிரமத்தை தாக்கிப் பேசிவிட்டு இந்து சமயம் பற்றி போதனைகள் செய்ய வேண்டும் என்கிற தங்கள் எதிர்ப்பார்ப்பில் ஞாயம் இருப்பது போல் தெரியவில்லை.
கிறித்து உயர்சாதியம் பற்றிய விழிப்புணர்வுகள் எதிர்ப்புகள் அவ்வப்போது வந்தாலும் அவை இன்னும் களையப்படாமல் இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவை தான் ஒருவர் பிற மதங்களை விமர்சனம் செய்யும் போது பொதுவாக வைக்கப்படும் எதிர்மறைக் கேள்விகள் இதற்கு தங்களிடம் பதில் உண்டா ?

கல்வெட்டு சொன்னது…

//வளரும் ஒரு இந்து சாமியார் //

கோவி,
சாமியாருக்கு வளர்ச்சி என்பதை எந்த அளவுகோலில் அளக்கிறீர்கள்?

1.பணம்
2.சொத்து
3.அவரிடம் மூளையை அடகுவைத்தவர்கள்(சரணாகதி தத்துவம்) எண்ணிக்கை.
4.எழுதிய புத்தகம் எண்ணிக்கை.
5.சொன்ன கதைகள் எண்ணிக்கை.

ஆச்சர்யமாய் இருக்கிறது சாமியார்களும் வளர்வார்கள் (உடல் உயரத்தைச் சொன்னீர்களா) என்பது. தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை.

வளரும் சுய‌தொழிலதிபர்(தொழில்: ஜோசியம்,ஆன்மீக உரை, ஆர்கானிக் சிடி ரீடர்) என்று சொன்னால் சரியாக இருக்கும்.

மணிகண்டன் சொன்னது…

*****
ஆச்சர்யமாய் இருக்கிறது சாமியார்களும் வளர்வார்கள் (உடல் உயரத்தைச் சொன்னீர்களா) என்பது. தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை
*****
கல்வெட்டு,

ஹா ஹா ஹா. தன்னை உணர்ந்தவனுக்கு தேவையில்லை தான் :)- ஆனால் கோவி ஒன்றும் அவரை முழுவதும் உணர்ந்ததாக கூறவில்லையே !

ஓம்கார் வந்து வளரும் இந்து சாமியாராகியா "நான்" அப்படின்னு எழுதினா உங்க விமர்சனமாகிய "தன்னை உணர்ந்தவனுக்கு வளர்ச்சி / தேய்தல் என்று ஏதும் இல்லை" சரியா இருக்கும் (இருக்கலாம்) !

கல்வெட்டு சொன்னது…

மணிகண்டன்,
"தன்னை உணர்ந்தவனுக்கு" என்றுதான் சொன்னேன். இது வளர்ச்சி என்ற சொல்லுக்கான பொதுவான எனது கருத்து. சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

**

//கோவி ஒன்றும் அவரை முழுவதும் உணர்ந்ததாக கூறவில்லையே ! //

ஆம் சொல்லவில்லை.
கோவி அவரை "வளர்கிறார்" என்றுதான் சொல்லியுள்ளார்.

சாமியாரின் வளர்ச்சி எப்படி அளவிடப்படுகிறது என்பதுதான் கேள்வி.

//ஓம்கார் வந்து வளரும் இந்து சாமியாராகியா "நான்" அப்படின்னு எழுதினா உங்க விமர்சனமாகிய ..//

இது இந்துசாமியார் வளர்கிறார் என்ற‌ கோவியின் கருத்துக்கான வளர்ச்சி குறித்தான கேள்வி மட்டுமே. ஓம்கார் வந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் ஓம்காரை மையப்படுத்தி கோவி எழுதிய பதிவில் கோவிக்கான பதிலாக/கேள்வியாக மட்டுமே எனது பின்னூட்டம்.

என்ன கொடுமை மணி இது?

ஜோதிஜி சொன்னது…

அய்யா ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். என்னடா இவர் இன்று எதுவும் எழுதாமல் இருக்கிறாரா? என்று பழைய பதிவுகளுக்குள் உள்ளே வந்தால் கோபம், பயம், ஆச்சரியம், அதிசயம், அச்சம் என்று அத்தனை உணர்ச்சிகளும் உள்ளே நர்த்தனமாடுகிறது.

சிலர் கேட்டுள்ள கேள்விகள் நியாயமான கேள்விகள். எனக்குள் அது குறித்து தொடக்கம் முதல் உண்டு.

ஆனால் இந்த அளவிற்கு கிழிக்க வேண்டியது இல்லை. பிடித்தால் ஏற்கவேண்டும். பிடிக்காமல் போனால் புறந்தள்ள விழிப்புணர்ச்சி வேண்டும்.

மிக மிக பயந்த பவ்யத்துடன் பார்த்த இந்த இடுகைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்