பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2009

புனித (நூற்) போர் !

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமந்திரம்.

தனக்கும் மேலான சக்தி ஒன்று உண்டு என்போர் அன்றும் இன்றும் என்றும் உள்ளனர். இருந்தாலும் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாத சூழலில், மறுப்பதற்கும் மனமின்றியே 'கடவுள் என்று ஒன்று இருக்கிறது, இருந்தாக வேண்டும்' என்ற நம்பிக்கை வரும் கால சந்ததியினருக்கு (வி)இட்டுச் செல்வர். சந்ததிகள் மூலம் மனித இனம் உயிர்புடன் இருப்பது போலவே நம்பிக்கைகளை (அசையா!) சொத்தாகக் கொடுப்பதால் கடவுள் குறித்த நம்பிக்கைகள் என்றும் உயிர்புடன் இருக்கின்றன. மனித மனங்களினால் ஆன கடவுள் கட்டமைப்பு காலம் தோறும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவது தொடர்வதைப் பார்க்கும் பொழுது, 'கடவுள் இருப்பை நிருப்பிக்கிறேன்... என்று சொல்லப்படுவதும், அப்படி எழுதப்படுவதும்' நிராகரிக்கப்படுவதும் தொடர்கிறது. எந்த ஒரு நிருபனமும் உண்மையாக இருக்கும் பொழுது, அவை ஏற்றுக் கொள்ளும் பொழுது அவற்றின் விடைகள் முழுமை பெற்றதாக எண்ணப்படும்.

இயற்பியல் விதிகள் என்பவை அதன் செயல்பாடுகள் குறித்த முந்தைய கேள்விகளின் விடைகள் எனலாம். இயற்பியல் விதிகள் போன்ற தெளிவான ஒரு முடிவை 'கடவுள் இருப்பின் நிருபனங்கள்' இதுவரை செய்துவிட வில்லை, இனியும் செய்துவிடாது என்பது என் திண்ணமான எண்ணம். ஏனெனில் கடவுள் இருப்பு பற்றிய கேள்விகள் தொன்று தொட்டவை. அதாவது 'கடவுள் இருப்பை' எந்த ஒருவரும் நிருபனம் செய்துவிடமுடியாது, அவை தொடரும் ஒரு நம்பிக்கை மட்டுமே. இதன் சாட்சியாக இருப்பதே 'ஒன்றே தேவன்' என்கிற சொல். இந்த சொல்லை ஆய்ந்து நோக்கும் போது, பல்வேறு கடவுள்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் ஆராயப்பட்டு, அனைத்தையும் மறுத்து, எதோ ஒன்று (மட்டும்) இருந்தாகவேண்டும் என்கிற உள்மன ஆசையையும் சேர்த்த ஒற்றை வெளிப்பாடாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதையும் ஏற்க மனமில்லாதோர், நம்பாதவர் ஏற்படுத்திய மற்றொரு கூற்று 'நானே கடவுள், அஹம் ப்ரம்மாஸ்மி' எனும் அத்வைத சித்தாந்தக் கூற்று. அத்வைதிகள் கடவுள் இருப்பை நேரடியாக மறுக்காமல் 'நானே கடவுள்' என்ற சொல்லாடலில் அதைச் செய்கிறார்கள். ஒரு நாத்திகனுக்கும், அத்வைதிக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாத்திகன் கடவுள் இல்லை என்பான், அப்படிச் சொல்லாமல் அத்வைதி 'நானே கடவுள்' என்பான்.

கடவுள் என்ற சொல்லை, கடவுள் என்கிற தனியாக ஒரு இருப்பை மறுத்துப் பேசினால் அத்வைதிக்கு கடவுள் நம்பிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்காது என்கிற கொள்கை தன்நலம் சார்பாக பக்தியாளர்களை ஏமாற்றும் வழியாக 'எல்லாம் மாயை, எல்லாம் ப்ரம்மம்' என்பதன் சுருக்கமே 'அஹம் பிரம்மாஸ்மி என்னும் நான் கடவுள் என்று சொல்லிக் கொள்வது. அத்வைதம் எந்த ஒரு புற வழிப்பாட்டையும் தவறென்று சொல்லும், அல்லது அதுவும் பிரம்மத்துக்குள் அடங்கியது என்று சொல்லும். தனிமனித மனம் சார்ந்த நம்பிக்கைகள் தவறு என்று சொல்வதில் நாத்திகமும், அத்வைதமும் வேறு வேறு அல்ல. (நான் சொல்வது தவறு என்போர் விவாதிக்கவும்) அத்வைத சித்தாந்தம் வழியாக எத்தனை சாமியார்கள் முக்தி பெற்றார்கள் என்கிற கணக்கு எதுவும் கிடையாது, ஆனால் 'நான் கடவுள்' என்று கூறிக் கொண்ட போலிச் சாமியார்கள் கூட்டம் புற்றீசல் போன்று தோன்ற அது வழியமைத்துக் கொடுத்தது.

*****

இறைக் கொள்கைகள் எதுவாக இருந்தாலும் அவை தொகுப்பாக இல்லாவிடில் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அந்த தொகுப்பை கட்டி வைத்திருப்பவையே புனித நூல்கள் எனப்படும். புனித நூல்களுக்கான புனிதம் எது என்று பார்த்தால் அவை 'அருளப் பட்டவை' என்ற அடைமொழியால் சிறப்பு சேர்க்கப்பட்டு இருப்பதே. இன்றே ஒரு மதம் தோன்றினாலும் அதன் முதற்பணியே தனக்கான புனிதத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்வதற்கான முதல் முயற்சி என்பதாக இருக்கும். இன்றைய வளர்ந்த கார்ப்ரேட் சாமியார்களின் கொள்கைகள், புனித பேச்சுகள் அருளுரைகள் அனைத்தும் புத்தகமாக வடிவம் பெற்றும் மத வடிவம் பெற முயற்சித்துக் கொண்டு இருப்பதை காட்டும் விதமாக அவை 'இ(ச)யங்கள்' என்ற அடையாளம் எடுத்து இருப்பதைக் காணலாம்.

எழுத வந்தது ஒரு எதிர்வினை, ஆனால் எண்னங்கள் எங்கோ சென்றுவிட்டது,
திண்ணை இணைய பக்கதில் திருகுறளை மேற்கோள் காட்டி, இஸ்லாம் குறித்த சாடல் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது, (கீழ்கண்ட சாய்வெழுத்துகள் எனது எழுத்துகள் அல்ல, திண்ணைக் கட்டுரையின் பகுதி)

எல்லாவிளக்கும் விளக்கல்ல, சான்றோர்க்குப்

பொய்யாவிளக்கே விளக்கு.

மேற்கூறிய திருக்குறள் செய்யுள்களில் பொதிந்த கருத்துப்படி, ‘இஸ்லாமியர் ஒருவர் தன் நெஞ்சறிய பொய்சொன்னாலும், அப்பொய் அவருடைய இஸ்லாமிய நெஞ்சைச் சுடாது, பொய்யாவிளக்கே இஸ்லாமில் கிடையாது. ஆகவே, இஸ்லாமில் சான்றோர்கள்..............? என கேள்வியும் ஒருங்கே எழுகிறது.
உலகிலுள்ள மற்ற ஒவ்வொரு நல்ல மரபிலும், மதத்திலும் நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது. அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இஸ்லாமிய மரபில் எல்லாமே உலக மரபுகளுக்கும் உலக நல்லொழுக்கத்திற்கே நேர் எதிர்மறையாக உள்ளது. இஸ்லாமியத்தில் நல்லொழுக்கம் பற்றி அதன் புனித நூல்களிலிருந்து இருப்பதையே இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. படித்தறியவும். மேலும் பொய்களும் ஷரியா சட்டப்படி குற்றமும் ஆகாது. மேலே படியுங்கள் புரியும்.

இதனால், முஸ்லிமில்லாத மக்களின் விசுவாசத்தைப் பெற்று, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு, அவர்களுடைய பலவீனமான தருணத்தில், அவர்களை மடக்கி தோற்கடித்து, குரானில் உள்ளது உள்ளபடி, உலகத்தையே இஸ்லாமிய மயமாக்க, àதேவைப்பட்டால் அல்லாவின் நாமத்தைச் சொல்லி, ‘அல்லாஹூ அக்பர்’ என்ற ’ஜிஹாத் புனித போர் ஒலி’யை உரக்கப் பரக்கக் கூவிக்கொண்டே குறுக்கே வரும் எவரையும் கொன்றுபோடலாம். [போட்டுத்தள்ளலாம்!!!]. முஸ்லிம்களுக்கு, நம் நாடு (patriotism), தம் மக்கள் (Blood relations can be killed for honour killing), தன் நண்பர்கள் (friends), என்று எவரும் முக்கியமல்ல, இஸ்லாம் என்ற மத இயக்கம் ஒன்றே ஒன்று தான் மிக முக்கியம். (Islam is most important than anything else) இதனால் தான் அன்றும், இன்றும், என்றும் மெக்கா இருக்கும் மேற்கு திசையை நோக்கியே (ஸலாத் / நமாஸ் - தொழுகை) செய்கின்றனர். ‘எல்லா புகழும் அல்லாவுக்கே’ என மேற்கே இருக்கும் மெக்காவில் அவதரித்த முகம்மதுவால் தொடக்கப்பட்ட இஸ்லாமின் அல்லாவுக்கே போய் சேர வேண்டும். இக்கட்டுரையில், முகம்மதுவைப் பற்றிய சரித்திரத்திலிருந்தும், குரான் (இறைச்செய்தி), ஹதிஸ்-சுன்னா (முகம்மது நபி தன் வாழ்க்கையில் நடத்திக்காட்டிய மரபு, பழக்க வழக்கங்கள்), சிராத்(வாழ்க்கை வரலாறு), ஆகியவற்றிலிருந்து சில உதாரண ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையில் இஸ்லாம் புனித நூல்களில் உள்ளது உள்ளபடியே தான் கொடுக்கப்பட்டுள்ளது.

******
மேற்கண்ட திண்ணைக் கட்டுரையின் பகுதியைப் படித்ததும்,

இங்கே குரான், அல்லா என்பதற்கு பதிலாக பகவத் கீதை, கிருஷ்ணன் என்பதைப் போட்டால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்பதை பகவத் கீதையை நன்கு படித்தவர் தெரிந்து கொள்ளலாம். "எதிரே இருப்பவர்கள் அனைவருமே என் உறவினர்கள்....இவர்களை எப்படிக் கொல்வது ?" என்று தயங்கிய அர்ஜுனன் போரில் இருந்து பின்வாங்கப் போவதாக சொல்ல,

"கோழைகளைப் போல் சிந்திக்காதே.....போர் புரிவது சத்திரிய தருமம், கோழைகள் சென்று சேரும் இடம் நரகமே...." என்பதாக கண்ணன் போர் புரிய வேண்டியதன் கடமையையும், ஞாயத்தையும் கர்மயோகம் என்ற பகுதியில் பத்தி பத்தியாக உரைப்பான். "எல்லாப் புகழும் (,இகழும் கூட) கிருஷ்ணனுக்கே" என்பதே பகவத் கீதையின் சாரம்.

போர் சூழலில் சொல்லப்பட்டதே கீதை என்று கீதையின் முன்குறிப்பிலும், அர்ஜுனன், கர்ணன் என்கிற பாத்திரங்களின் மூலம் சொல்கிறார்கள், ஆனால் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பும் போது இதற்கு கொடுக்கப்படும் விளக்கம் "அர்ஜுனன் என்பது ஆன்மா, கிருஷ்ணன் பரமாத்மா.....இங்கு குறிப்பிடுவது போர் அல்ல... ஆன்ம விடுதலைக்கான அறிவுரைகள், நடைமுறைகள்....இதைத்தான் போர் என்னும் புனைவில் சொல்லப்பட்டு இருக்கிறது" என்கிறார்கள். ஆனால் இந்த விளக்கம் எவ்வளவு தொலைவு நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது என்று பார்த்தால் நமக்கு கிடைப்பது ஏமாற்றம் தான். ஏனெனில் இன்றைய இந்தியவில் இந்துத்துவாக்கள் (என்னுடைய தன்நலம் இந்து மதவெறியர்கள் என்று எழுத மனம் இடம் கொடுக்கவில்லை :)) இதே பகவத் கீதையில் சொல்லப்பட்டு இருப்பதன் படி தீர்ப்பு எழுதுவதாக நினைக்கிறார்கள்.

இஸ்லாம் போன்று இந்து மதமும் உலகளாவில் இருந்தால் பகவத் கீதையைக் காட்டி இந்துதுவாக்கள் பாத்வா (தீர்ப்பு - கலாச்சார காவல், பிங்க் ஜட்டி, ஆடு கோழி வெட்ட தடை போட்டது நினைவு வருகிறது) கொடுப்பார்களோ என்னவோ, திண்ணையில் இடம் பெற்ற அந்தக் கட்டுரையை படிதத்தும் எனக்கு தோன்றிய வரிகள் 'ஈயத்தைப் பார்த்து இளித்தாம் பித்தளை", திண்ணைக் கட்டுரையாளர் புனித நூலுடன் (குரான்), புனித நூலை (பகவத் கீதை) ஒப்பிட்டு எழுதாமல் தம் வசதிக்கேற்ப திருகுறள் மேற்கோளுடன் எழுதியது எஸ்கேபிசம். :)

9 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அண்ணே காலையிலேயே தொடங்கியாச்சா :)


இக்கட்டுரையில் பல இடங்களில் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அதை தர்க்கம் செய்ய நான் முயலவில்லை.

பகவத்கீதையாகட்டும், குரான் ஆகட்டும் (முதல் வரியில் சொன்ன) திருமந்திரம் ஆகட்டும்.. நீங்கள் மாற்றுக் கண்ணோட்டத்தில் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

அப்புறம் அந்த அத்வைதம்... சரி விடுங்க :)

1004ஆம் இடுக்கைக்கு வாழ்த்துக்கள்..!

தருமி சொன்னது…

எது ஈயம்; எது பித்தளை?????

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

தனக்குள் கடவுட்தன்மையைப் பெறுவதற்காக இந்தியத் தத்துவ மரபு, தனிநபர் தனக்குள்ளேயே இருக்கும் மிருகத்தன்மையை வெற்றிகொண்டு, அதன் பின் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் குலம், எறும்பும் யானையும் ஆன்ம அளவில் ஒரே எடை என்பதை தன்னுடைய அனுபவத்திலேயே உணர்தல், தன்னையே எல்லோரிலும் காணுதல் என்பதே தன்னை நேசிப்பதைப் போல எல்லோரையும் நேசிப்பது என்று, ஒரு மாற்றத்தின் தொடர்ச்சியாக மேலே மேலே விரிந்து வளரும் தன்மையதாக இருக்கிறது.

ஒரு நாத்திகன் கடவுளே இல்லை என்பதற்கும், ஆன்மீகத்தை உண்மையாக உணர்ந்து கொண்ட ஆத்திகன் 'நான் கடவுள்' என்று உணர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

அண்ணே காலையிலேயே தொடங்கியாச்சா :)


இக்கட்டுரையில் பல இடங்களில் விஷயங்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் அதை தர்க்கம் செய்ய நான் முயலவில்லை.//

நல்லவேளை ஞானக் கண் உள்ளவர்களுக்குத்தான் 'அத்வைதம்' வெளங்கும் என்று சொல்லாதவரை நன்று ! நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

எது ஈயம்; எது பித்தளை?????//

எதுவும் ஈயம் இல்லை எல்லாம் காரி(ஈ)யம் தான் !
:)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இங்கே தருமி ஐயா கேட்டிருக்கிற கேள்விக்கு என்னுடைய எதிர்க் கேள்வி:
எது ஈயம்? எது பித்தளை?
இந்தக் கேள்விகளையும் தாண்டிப் போகக் கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டாமா?

எது, எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பயன் உண்டு, அவ்வளவு தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

// கிருஷ்ணமூர்த்தி said...

தனக்குள் கடவுட்தன்மையைப் பெறுவதற்காக இந்தியத் தத்துவ மரபு, தனிநபர் தனக்குள்ளேயே இருக்கும் மிருகத்தன்மையை வெற்றிகொண்டு, அதன் பின் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் குலம், எறும்பும் யானையும் ஆன்ம அளவில் ஒரே எடை என்பதை தன்னுடைய அனுபவத்திலேயே உணர்தல், தன்னையே எல்லோரிலும் காணுதல் என்பதே தன்னை நேசிப்பதைப் போல எல்லோரையும் நேசிப்பது என்று, ஒரு மாற்றத்தின் தொடர்ச்சியாக மேலே மேலே விரிந்து வளரும் தன்மையதாக இருக்கிறது.//

மிகச் சிறந்த கொள்கை என்று வகுக்க, சிறப்பான வசனங்களுடன் எதையும் சொல்லிவிட முடியும். அனைத்து மதங்களும் 'அன்பிலிருந்து' தொடங்குவதாகவே நம்புகின்றன. அதே போல் யானை எரும்பு எடை தத்துவங்களும் ஒரு கொள்கை கோட்பாடு மட்டுமே. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வாக்கில் நீங்கள் சொன்ன அனைத்துமே அடக்கம். பற்றற்ற நிலையை போதிக்கும் ஆசை அறு...என்கிற புத்தரின் வாக்கும் கூட புற சமயத்தினரால் 'கடவுள் மறுப்பாக' பார்க்கப்பட்டது


// ஒரு நாத்திகன் கடவுளே இல்லை என்பதற்கும், ஆன்மீகத்தை உண்மையாக உணர்ந்து கொண்ட ஆத்திகன் 'நான் கடவுள்' என்று உணர்வதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.//

நாத்திகன் "கடவுளே இல்லை, மனம் போன போக்கில் வாழுங்கள், யாரையும் கொல்லுங்கள்" என்று சொல்லி வந்தால் நீங்கள் சொல்லும் நம்பிக்கை நம்பிக்கை இன்மைக்கு வேறுபாடு இருக்கும். நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு என்பதாக கட்டமைக்கப்படுகிறது, நம்பப் படுகிறது, ஒரு ஆத்திகன் உலக நன்மைக்கு என்னவெல்லாம் செய்வானோ, அதைத்தான் நாத்திகனும் செய்கிறான். நாத்திகத்தின் தோற்றம் ஆத்திகத்தின் அராஜகத்தை எதிர்த்து கிளம்புகிறது.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,

நன்றாக எழுதியுள்ளீர்கள். தவறு எங்கு இருந்தாலும் தவறுதான் என்ற உங்கள் நடுநிலைப் பார்வைக்கு முதலில் தலைவணக்கம்.

//ஒரு நாத்திகனுக்கும், அத்வைதிக்கும் உள்ள ஒரே வேறுபாடு, நாத்திகன் கடவுள் இல்லை என்பான், அப்படிச் சொல்லாமல் அத்வைதி 'நானே கடவுள்' என்பான்.//

இருவரும் வேறு வேறாகச் சொன்னாலும் சொல்லவரும் செய்தி என்னவோ ஒன்றுதான்.

இன்று, கடவுளின் பெயரை நாத்திகனை விட ஆத்திகனே அதிகம் கெடுக்கிறான். திரைமறைவில் மாபாதகம் அனைத்தும் செய்வதற்கு வழங்கப்படுகின்ற உரிமம்தான்(லைசன்சு) 'ஆத்திகன்' எனும் பட்டம்.

அதுசரி, நாத்திகன் என்பவன் கடவுளை நம்பாதவன் அல்லன்; வேதத்தை நம்பாதவனே. ஆத்திகன் வேதத்தை நம்புபவனே அன்றி கடவுளை நம்புபவன் அல்லன் என்று படித்திருக்கிறேன்.

இது பற்றி...???

கோவி.கண்ணன் சொன்னது…

//
அதுசரி, நாத்திகன் என்பவன் கடவுளை நம்பாதவன் அல்லன்; வேதத்தை நம்பாதவனே. ஆத்திகன் வேதத்தை நம்புபவனே அன்றி கடவுளை நம்புபவன் அல்லன் என்று படித்திருக்கிறேன்.

இது பற்றி...???//

திரு சுப.நற்குணன்,

சமண மதத்தின் தொடக்க காலத்தில் வேதத்தை மறுப்பவர்களை நாத்திகர்கள் = ந+அத்திகர் (வேத மறுப்பாளர்) என்ற பொருளில் சமணர்கள் குறித்து அந்த சொல் வழங்கப்பட்டதாக நானும் படித்திருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்