இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.
(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.
சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.
அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.
சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.
சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.
‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
5 கருத்துகள்:
நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள். இரண்டு இடத்தில் தான் கொஞ்சம் தடுமாற்றம்.
கற்பு பற்றியும், தாங்கள் கூறியுள்ள கருத்துக்கள் மிகச் சரி. இதில் மறுமணமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அளவு நமது சமுகம் முன்னேற்றம் அடைந்துருப்பது சிறப்பு.
இதில் பெரியாரின் கருத்துக்கள் என்றால் பெரியார் கற்பு பத்தி கொஞ்சம் ஏடாகூடமான கருத்துக்கள் எல்லாம் சொல்லி இருக்கார். அது ஒத்து வராது. அவர் சொன்னதில் நல்லதை மட்டும் எடுத்துப்பேம்.
இரண்டு ஜாதியக் கருத்துக்களைக் கூறும் போது நீங்கள் பிராமன எதிர்ப்பை பதிவு செய்து திராவிட பற்றை நிலை நாட்டியிள்ளீர்கள். நல்லது. அனால் நீங்களும் சரி, உங்களின் வீர தீர சகாக்களும் சரி, ஜாதி என்றால் பார்ப்பான் தானா?. யாருமே ஏன் மதுரை,இராமனாதபுரம், நெல்லை ஆகிய இடங்களில் ஜாதிப் பிரிவினையும், கலகமும் செய்யும், தேவர்,கள்ளர், முக்குலத்தோர் மற்றும் வன்னியரைக் குறிப்பிடுவதில்லை. பார்ப்பான் ஒன்னும் பண்ண மாட்டன் அப்பிடின்னு தைரியம் தான் இந்த வீரத்திற்க்கு காரணமா?.
உங்களின் அந்த பிராமண சாடல் தவிர ஜாதியக் கருத்துக்கள அனைத்தும் உண்மையே. நான் பிராமனியத்தை ஆதரவளிக்க வில்லை, ஆனால் அனைத்து ஜாதிய மேசடிகளையும் எதிர்ப்பு தெரிவிக்கவும் என்றுதான் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.
//பித்தனின் வாக்கு said...
நல்ல கட்டுரை. நல்ல கருத்துக்கள். இரண்டு இடத்தில் தான் கொஞ்சம் தடுமாற்றம்.
//
:) தடுமாறாமல் எழுத நான் நீங்கள் இல்லையே.
மற்றவர்கள் பற்றி எழுதத்தான் உங்களைப் போன்றோர்கள் இருக்கிறார்களே. நானே எல்லாவற்றையும் எழுத முடியாது.
தேவர், கள்ளர் பற்றி எழுதுபவர்கள் கூட பார்பனர்கள் இல்லை அல்லது மிகக் குறைவு. தேவர்களை கள்ளர்களளப் பற்றி எழுதச் சொல்லுங்கள் இந்துத்துவாதிகளின் கை நடுங்கும், ஏனென்றால் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களே முக்குலத்தோர் என்று அழைத்துக் கொள்பவர்கள் தான்.
//உங்களின் அந்த பிராமண சாடல் தவிர ஜாதியக் கருத்துக்கள அனைத்தும் உண்மையே. நான் பிராமனியத்தை ஆதரவளிக்க வில்லை,//
நான் பார்பனருக்கு பிராமண தகுதி கொடுப்பது இல்லை. நான் பார்பனர்களை பிராமணர் என்று குறிப்பிடுவதும் இல்லை.
சாதி ஒரு திட்மிட்ட சதி
நால்ல பதிவு வாழ்த்துக்கள்
பித்தன் சொல்வதுபோல் பெரியாரின் கருத்துகள் எல்லாம் சரியானது அல்ல.
//இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம்//
தவறாக புரிந்துள்ளீர்கள் ஒரு பெண்னின் மீது சுமத்தபடும் குற்றத்திற்கு தான் நான்கு சாட்சிகள் தேவை
ஒருபென் தன்னை ஒருவன் கெடுத்துவிட்டான் என்று சொல்வதர்கு தகுந்த சட்சியங்கள் இருந்தால் பொதும்
சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும். அண்ணல் அம்பேத்கார்,தந்தை பெரியார் (இன்னும் சொல்லலாம் ஆனால் இதற்கு இதுபோதும்) இருவரும் காங்கரசில் இருந்தவர்கள் ஆனால் அண்ணல் அம்பேத் அதிலயே தொடர்ந்தார் பெரியார் அதிலிருந்து வெளியேறினார் ஏன்? பராமணர்கள் உட்பட உயர் சாதியிணர்க்கு முக்கயத்துவம் கொடுக்கப்பட்டதால.ஆனால் அண்ணல் அம்பேத்கார் தொடர்ந்தார் அதனால் இந்தய சட்டத்தையே இயற்றமுடிந்து இந்தியா இருக்கம்வரை அம்பேத்காரும் நினைவுகளில் இரு்பார்.காங்கரசும்,பாஜகவும் பிராமணக் கட்சியாகவே பார்க்கப்பட்டது இரண்டிலுமே திராவிடங்களும் கூட்டணி வைத்தன அப்படியெனில்?? அண்ணல்அம்பேத்காரும் சிறு வயதில் ஒரு பார்ப்பண ஆசிரியர்தான் படிக்க வந்து வளர்த்தார் மேலும் இரண்டாவது மனைவியாக ரமாபாய் என்ற பார்பண பெண்ணை மணந்தார். அப்பட எனில் ஜாதி யாரால் என்ன காரணத்திற்காக முன் வைக்கப்பட்டது,ஏன்? அவர்களால்தான் அன்றிலிருந்து அரசியலில் ஜாதிக்கட்சிகள் நிறம்பி வழிகின்றது. விதையை அழித்து விட்டால் செடிகள் வளராது இவர்கள் விதையை அழித்தார்களா செடியை வளர்த்தார்களா? மேலும் உங்களுக்கு தெரிந்த்தை என்னுடன் பதயுங்கள்
கருத்துரையிடுக