பின்பற்றுபவர்கள்

24 நவம்பர், 2009

1000ம் - 'காலத்து' பயிர்கள் !

எனது வலைப்பதிவு காலம் - இதில் 1000 இடுகைகள் இன்றோடு முற்றுகிறது. எழுத்து என்பதை தள்ளி நின்று பார்த்தால் மலை போன்றும் அதன் அருகில் சென்றால் அருவியில் நாமும் குளிக்கலாம் எனது துய்ப்பு(அனுபவம்), ஆழ்ந்த கருத்தைத் தொட்டு எழுதுகிறேன் என்று ஒரு சிலர் பின்னூட்டத்தில் பாராட்டினாலும் சரியான புள்ளிவிவர தரவுகளுடன் நான் எழுதுவதில்லை என்கிற குற்றச் சாட்டுகளும், சில எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள் நேர்வதையும் சிலர் சுட்டுவதையும் ஏற்கிறேன்.



மிகச் சிறந்த ஆக்கம், கட்டுரை படைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் நான் எதையும் எழுதுவதில்லை, எழுதுபவர்கள் அனைவருமே கற்பனை என்கிற எல்லைக் கோட்டில் நின்று எழுதுவதில்லை. எங்கோ படித்தவற்றின் பகிர்வுகள் அது குறித்த எண்ணங்களை தான் சார்ந்துள்ள பிடித்த கொள்கைகளின் கருத்துகளையும் நுழைத்தே எழுதுகிறார்கள், நேர்மையான விமர்சனப் பகிர்வுகள் வருவது குறைவுதான். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களம் என்பது சிந்தனைக் களம் என்பதைத் தாண்டி சித்தாந்தங்களை முன்னிருத்தும் களமாக நிற்கிறது. அரசியல் சார்பு, தன்னல முன்முடிவுகள் தான் பெரும்பாலும் கருத்துக்களில் முன்னிறுத்தப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல இருந்தாலும் பச்சைப் பொய்களை அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறி கருத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று முயன்றதில்லை, அதற்கான தேவையும் எனக்கு இல்லை என்று உறுதியாக நினைக்கிறேன்.

முதல் பதிவிலிருந்து 999 இடுகை வரை சிந்தனை ஓட்டங்களில் ஒரு சில கருத்துகளில் மாற்றம் இருந்தாலும் முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை என்பதை என் எழுதுக்களில் எனது முந்தைய இன்றைய நிலைப்பாடுகளை ஒப்பிடும் போது எனக்கு தெரிகிறது. நாத்திக நிலைப்பாடு, ஆத்திக நிலைப்பாடு என்ற இருபக்கமும் எதோ ஒன்றை சார்ந்து எழுதியது போல் தெரியவில்லை. மதவேறுபாடுகளால் கூறுபட்டு கிடக்கும் மனித இனங்களை ஒன்றிணைக்க வாழ்வு உண்மையானதே, மனம் முதன்மையானது, தனிமனித உரிமை என மனிதம் பேசும் நாத்திகம் எந்த அளவுக்கு எனக்கு முதன்மையாக தெரிகிறதோ அதே அளவுக்கு அனைவரையும் ஒன்றிணைக்க வாழ்வே நிலையற்றது, உடல் நிலையற்றது, நிறம் நாமே விரும்பிப் பெற்றது அல்ல, இனவேறுபாடுகள் தவிர்த்தால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கூறி அதற்கு இறை நம்பிக்கையை முன்வைத்துப் பேசும் ஆத்திகமும் எனக்கு முக்கியமானதே. எனது வலைப்பக்கத்தில் நான் வள்ளலார், பெரியார் வேறு காலகட்டங்களின் வேறு வேறு தமிழ் துருவங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறேன். தமிழ் சூழலிலேயே அத்தகைய இருதுருவங்கள் நம்மிடையே வாழ்ந்ததும் நம் தமிழர்களின் கொடுப்பினையாக நினைக்கிறேன்.

தீவிர இறை மறுப்பு மற்றும் ஏற்பு என்ற இரண்டிற்குள்ளும் நான் பொதுவாக மூக்கு நுழைப்பதில்லை, மதவாதமும், சாதிவேற்றுமையும் கண்டிப்பதில் சார்பு நிலையற்றது என்பதால் நாத்திகவாதமாக எனது கருத்தை பேசுவது எனக்கு வசதியாவே இருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று சொன்னால் அதை நிருபனம் செய்யச் சொல்லி ஆத்திக நண்பர்களே என்னிடம் கேட்கக் கூடிய பேராபத்தும் உண்டு :) என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன். கடவுள் நம்பிக்கை என்பது பெரும்பாலும் ஊட்டப்பட்ட நம்பிக்கையாக இருப்பதால், அதுபற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் எதிர்ப்பதும் தேவையற்றது, இருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படும் கெடுதல்களை நோக்கும் போது அவை விவாதமாக மாறுகிறது. பூசை அறை நம்பிக்கைகளை யார் குறைச் சொல்லப் போகிறார்கள் ?

என் பதிவின் முந்தைய பிந்தைய இடுகைகளிலும் ஒப்பீட்டு அளவில் எனக்கு தெரிந்த நல்ல மாற்றமாக நான் கருதுவது எழுதும் போது வடமொழி உட்பட்ட பிற மொழிச் சொற்களை தெரிந்த மட்டில் தவிர்த்து எழுதுவதுதான்.

புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இங்கு காலத்தில் இருப்பது 1000 இடுகைகள், இவை தவிர்த்து பிறர் மற்றும் எனது பிற வலைப்பக்களிலும் எனது எழுத்துப் பங்களிப்புகள் உண்டு. இதற்கு செலவிட்ட நேரம் பிற நடவடிக்கைகளுக்கான நேர இழப்பு தான் என்றாலும் இந்த நேரப் பங்களிப்பு 200 க்கும் மிகுதியான நண்பர்களைப் பெற்று தந்திருக்கிறது, 100க்கும் மிகுதியானவர்களை நேரடியாக சந்தித்து மகிழவைத்திருக்கிறது, 1000க்கும் மிகுதியானவர்களுக்கு என்னைப் பற்றிய அறிய வைத்ததுடன் எண்ணங்களை வாசிக்க வைத்திருக்கிறது. எழுதுவதன் பிறநோக்கம், ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துகள் ஏற்பட வைக்க வேண்டும், வாசிப்பவர்களை எழுதத் தூண்டவேண்டும் என்பதே எழுத்து குறித்த எனது தனிப்பட்ட எண்ணம்.


1000 இடுகைகளுக்கு 22,103 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது. சராசரியாக இடுகைக்கு 22+ பின்னூட்டங்கள் என வாரிவழங்கியதுடன்,
தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி (காக்டெய்ல் தாங்கஸ்) ! முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் ஜோதிபாரதி, ஸ்டார்ஜன் மற்றும் அக்பருக்கு மிக்க நன்றிகள்,


வருகை அட்டவணைகள் :

ஆகக் கடைசி 20 ஆயிரம் வருகைகள்


90 நாடுகளில் 175 நகரங்கள்


வருகை கணக்கு விவரம்



வருகைக்காக பயன்படுத்தியவர்களின் உலவி மற்றும் செயலி

118 கருத்துகள்:

கே.என்.சிவராமன் சொன்னது…

வாவ்... முதல்ல கைய கொடுங்க... வாழ்த்துகள் கண்ணன்... :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கிரி சொன்னது…

யப்பா! மயக்கம் வர மாதிரி இருக்கே! படிச்சுட்டு வரேன்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வாழ்த்துக்கள்..

தசாவித அறிவுடன் சதா எழுதுவதால் சஹா பதிவுகள் சாகாவரம் பெற்றனவோ.. :)

சும்மா வட மொழி கலந்தால் அதுக்கு ஒரு பதிவு வரும்னு சொல்லி ஹி ஹி..:)

கிரி சொன்னது…

//முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை//

என்ன கொடுமை சார்!

//என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன்.//

இப்பவே கண்ணை கட்டுதே

//புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.//

வழிமொழிகிறேன்

கடைசில புள்ளி விவர புலி ஆகிட்டீங்களே! :-)

கோவி கண்ணன் சச்சின் மாதிரி போயிட்டு இருக்கீங்க..உங்களை ரிக்கி பாண்ட்டிங் மாதிரி துரத்திட்டு இருப்பது எனக்கு தெரிந்து துளசி மேடம் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்..

பூங்குன்றன்.வே சொன்னது…

கண்ணன் அண்ணா.ரொம்ப மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.நான் எல்லாம் ஐம்பது பதிவுக்கே தல-கால் புரியாம ஆடிட்டு இருக்கேன்.நீங்க ஆயிரம் பதிவுகளை எழுதிவிட்டு அமைதியாக இருக்கீங்க.

நீங்க "ஆயிரத்தில் ஒருவன்" அண்ணா.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.கண்ணன் சார்
நிச்சயமா என்னைப்போன்ற புதியவர்களுக்கு தங்களின் இந்த சாதனை புதிய உத்வேகத்தை கொடுக்கிறது..

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

வாழ்த்துகள் கோவியார்!

ஜெகதீசன் சொன்னது…

:)

யுவகிருஷ்ணா சொன்னது…

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி வாழ்க வாழ்கவே! :-)

Athisha சொன்னது…

மிஸ்டர் நோ சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பைத்தியக்காரன் said...
வாவ்... முதல்ல கைய கொடுங்க... வாழ்த்துகள் கண்ணன்... :)

தோழமையுடன்
பைத்தியக்காரன்
//

மிக்க நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// கிரி said...
யப்பா! மயக்கம் வர மாதிரி இருக்கே! படிச்சுட்டு வரேன்
//

:) நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
வாழ்த்துக்கள்..

//

நன்றி !

//தசாவித அறிவுடன் சதா எழுதுவதால் சஹா பதிவுகள் சாகாவரம் பெற்றனவோ.. :)//

அப்படின்னா......திட்டுவதா ? :)


//சும்மா வட மொழி கலந்தால் அதுக்கு ஒரு பதிவு வரும்னு சொல்லி ஹி ஹி..:)
//

சும்மா என்பதை வெறுமனே ன்னு சொல்லுவாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

////முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை//

என்ன கொடுமை சார்!//

ஒண்ணும் கொடுமை இல்லை அடிப்படட புரிதல்களை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு படித்தவற்றால் மாற்றம் ஏற்படலைன்னு சொன்னேன்

//என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன்.//

இப்பவே கண்ணை கட்டுதே

//புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.//

வழிமொழிகிறேன்

கடைசில புள்ளி விவர புலி ஆகிட்டீங்களே! :-)

கோவி கண்ணன் சச்சின் மாதிரி போயிட்டு இருக்கீங்க..உங்களை ரிக்கி பாண்ட்டிங் மாதிரி துரத்திட்டு இருப்பது எனக்கு தெரிந்து துளசி மேடம் மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்..//

கோவி.கண்ணன் சொன்னது…

//பூங்குன்றன்.வே said...
கண்ணன் அண்ணா.ரொம்ப மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.நான் எல்லாம் ஐம்பது பதிவுக்கே தல-கால் புரியாம ஆடிட்டு இருக்கேன்.நீங்க ஆயிரம் பதிவுகளை எழுதிவிட்டு அமைதியாக இருக்கீங்க.//

பாராட்டுக்கு மிக்க நன்றி, தங்களின் தமிழ் பெயர் இனிமையாக இருக்கிறது

//நீங்க "ஆயிரத்தில் ஒருவன்" அண்ணா.
//

ஆயிரத்தில் நானும் ஒருவன் ! ஒண்ணே ஒண்ணு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன்...வசந்த் said...
வாழ்த்துக்கள் கோவி.கண்ணன் சார்
நிச்சயமா என்னைப்போன்ற புதியவர்களுக்கு தங்களின் இந்த சாதனை புதிய உத்வேகத்தை கொடுக்கிறது..

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மேலும் பட்டைய கிளப்ப வாழ்த்துக்கள்
//

பாராட்டுக்கு மிக்க நன்றி வசந்த்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள் கோவி.
//

மிக்க நன்றி T.V.R

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
வாழ்த்துகள் கோவியார்!
//
நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
//
நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//யுவகிருஷ்ணா said...
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி வாழ்க வாழ்கவே! :-)
//

பெரும்தலை வாழ்த்துவது பெருந்தலைவரே வாழ்த்துவது போன்றது, நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
மிஸ்டர் நோ சார்பாக என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறேன்!
//

:) மருந்து சாப்பிடும் போது மூதாதையரை நினைப்பவரா நீங்கள் !

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

அருமையான ஆயிரத்துக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - ஆயிரம் பிறை கண்ட அருமை நன்பா - பாராட்ட சொற்களே இல்லை - இறை மறுப்பாளனா - நம்பிக்கையாளனா - இன்னும் எனக்குத் தெரியவில்லையே

நன்று நன்று கோவி நல்வாழ்த்துகள்

துளசி கோபால் சொன்னது…

ஆயிரம் 'தலை' வாங்கிய அபூர்வ சிந்தாமணன் வாழ்க வாழ்க.

நான் ரெண்டுமுறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னது போல:-)

Subankan சொன்னது…

அட!, வாழ்த்துகள் அண்ணா

நையாண்டி நைனா சொன்னது…

வாழ்த்துக்கள்....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

கண்ணன் அண்ணே !

1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் என்றும் மறைவதில்லை .

உங்களுக்கு என் 1000 வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா சொன்னது…

ஆயிரம் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வாழ்த்துக்கள்.

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

வாழ்த்துக்கள்!!!

சுபம்!!!!

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள் அண்ணே!

அப்பாவி முரு சொன்னது…

அண்ணே, சங்கத்திலிருந்து உங்களை வாழ்த்த முடிவு செஞ்சிருக்கோம்.

1000 சிங்கை வெள்ளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு விழாவிற்கு வந்து சேரவும். (இது 1000 இடுகை எழுதினதை விட சுலபமானது)

ஷாகுல் சொன்னது…

ஆயிரமா?

வாழ்த்துக்கள் சார்

iniyavan சொன்னது…

வாழ்த்துக்கள் சார்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன்...

நாகா சொன்னது…

வாழ்த்துக்கள் கோவியாரே

Barari சொன்னது…

nenjaarntha vazthukal koviyaare.

நிகழ்காலத்தில்... சொன்னது…

1000 இடுகைகள் என்பது சாதரண சாதனை அல்ல,

உங்கள் வேகத்திற்கு இது சாதாரணம்,

வாழ்த்துகிறேன். நான் வலையுலகில் வந்த புதிதில் என்னோடு மடலாடி,உரையாடியில் உரையாடிய ’பிரபல’ முதல் பதிவர் தாங்களே..

பலரையும் ஊக்கப்படுத்திய நீவீர் வாழ்க..

TBCD சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! தண்டுல்கர் போல் 30000 அடிக்க வாழ்த்துக்கள் :)

கண்மணி/kanmani சொன்னது…

வாவ் 1000 மா?வாழ்த்துக்கள்
100,200க்கே நாங்க ஆட்டம் போட்டோம்.
சரி சரி சரியா எண்ணிப் பார்த்துச் சொல்றீங்கதானே?;))
எங்களுக்கும் வயசான 1000 தொட்டுவிடுவோம்ல..:))
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வால்பையன் சொன்னது…

எங்கயோ போயிட்டிங்க!

Robin சொன்னது…

வாழ்த்துக்கள் கோவிகண்ணன்!

சி தயாளன் சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே....தொடர்ந்து கலக்கவும்...

கையேடு சொன்னது…

970+ இல் ஒரு நாள் கூட்டிப் பார்த்தேன்.. இப்போ எத்தனை வந்திருக்குன்னு அவ்வப்போது கூட்டிப் பார்ப்பேன்.. பின்னர் நீங்களே வசதியாக ஒரு எண்ணியை வச்சிட்டீங்க..

பின்னூட்ட மட்டுறுத்தல் இருந்திருந்தா முன்னரே வாழ்த்து சொல்லிருப்பேன். சரி அறிவிப்பு சுவாரஸ்யம் கெட்டுப் போகவேண்டாம்னு விட்டுட்டேன்..

இப்போ சொல்லிகறேன்.. 1000 இடுகைகளுக்கு வாழ்த்துக்கள்..

மணிநரேன் சொன்னது…

வாழ்த்துக்கள்...:)

Unknown சொன்னது…

அடேங்கப்பா. மலைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜிகே.

S.Gnanasekar சொன்னது…

மேலும் பல ஆயிரம் பதிவு இட என வாழ்த்துகள் நன்பர் கோவி.கண்ணன் அவர்களே..
சோ.ஞானசேகர்.

☼ வெயிலான் சொன்னது…

வாழ்த்துக்கள்!!!!

குமரன் (Kumaran) சொன்னது…

வாழ்த்துகள் கண்ணன்!

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

தங்களின் எழுத்துகளை வாசிக்கும் வாசகன் என்னும் முறையில் பிற மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுதும் உங்களின் எழுத்திற்கும் எண்ணத்திற்கும் பார்க்கும் பொழுது பெருமிதம் அடைகின்றேன்.

தொடருங்கள்

அன்புடன்
திகழ்

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

வாழத்துகள்

வரலாறு முக்கியம்.அதற்காக இங்கும் ;)

அன்புடன்
சிங்கை நாதன்

முகவை மைந்தன் சொன்னது…

வாழ்த்துகள். வரலாறு நெம்பவே தலையாயது :-0

(டிபிசிடி உங்க பதிவுகளை படிக்கிறதே இல்ல போல ;-)

சாலிசம்பர் சொன்னது…

வாழ்த்துகள் கோவியாரே.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

வரலாற்றை நீங்கள் பதிவு செய்ததுபோக வரலாறு உங்களைப் பதிவு செய்யட்டும்.

வாழ்த்துகள்ணா

:))

வேடிக்கை மனிதன் சொன்னது…

உங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒரு தகவல் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த பட்சமாக ஆயிரம் தகவல் உங்கள் பதிவுகளை படித்தவர்கள் பெற்றிருப்பார்கள் என்றே நம்புகிறேன். நான் 500 தகவல்களுக்கு குறையாமல் பெற்றவன் என்கின்ற முறையில் உங்களது இந்த 1000மாவது பதிவிற்கு எனது சார்பாக உங்களுக்கு ஒரு பூங்கொத்து. வாழ்த்துக்கள் அண்ணா

குடுகுடுப்பை சொன்னது…

வாழ்த்துகள்.

gulf-tamilan சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆயிரம் வாலா கோவியார்!

பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்....................................
டும்...டும்...

இதயங்கனிந்த வாழ்த்துகள்!

அறிவிலி சொன்னது…

மேலும் பல்லாயிரம் இடுகைகள் எழுதிட முன்கூட்டிய வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அன்பின் கோவி

அருமையான ஆயிரத்துக்கும் நல்வாழ்த்துகள் - பாராட்டுகள் - ஆயிரம் பிறை கண்ட அருமை நன்பா - பாராட்ட சொற்களே இல்லை - இறை மறுப்பாளனா - நம்பிக்கையாளனா - இன்னும் எனக்குத் தெரியவில்லையே

நன்று நன்று கோவி நல்வாழ்த்துகள்
//

சீனா ஐயா, வாழ்த்துக்கு நன்றி ! நான் மத மறுப்பாளன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆயிரம் 'தலை' வாங்கிய அபூர்வ சிந்தாமணன் வாழ்க வாழ்க.

நான் ரெண்டுமுறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னது போல:-)
//
அம்மா,
ஆயிரம் முறைச் சொன்னது அம்பாளே சொன்னது போல் இருக்கு !

கோவி.கண்ணன் சொன்னது…

/Subankan said...
அட!, வாழ்த்துகள் அண்ணா
//

மிக்க நன்றி !

உங்கப் பதிவுல பின்னூட்ட கும்மி களை கட்டி இருக்கு போல :) வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
வாழ்த்துக்கள்....
//
நன்றி நைனா !

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கண்ணன் அண்ணே !

1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் என்றும் மறைவதில்லை .

உங்களுக்கு என் 1000 வாழ்த்துக்கள்
//

வாழ்த்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//இராகவன் நைஜிரியா said...
ஆயிரம் இடுகைகளுக்கு வாழ்த்துகள்.
//

நன்றி இராகவன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
வாழ்த்துக்கள்.
//
நன்றி அக்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...

வாழ்த்துக்கள்!!!

சுபம்!!!!
//
நன்றி பின்னூட்ட புயல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் அண்ணே!
//
நன்றி ஜமால் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
அண்ணே, சங்கத்திலிருந்து உங்களை வாழ்த்த முடிவு செஞ்சிருக்கோம்.

1000 சிங்கை வெள்ளிகள் மட்டும் எடுத்துக்கொண்டு விழாவிற்கு வந்து சேரவும். (இது 1000 இடுகை எழுதினதை விட சுலபமானது)
//

ஆயிரம் என்ன 10000 கூட எடுத்துவரலாம், எடுத்துக் கொண்டு ததனே வரனும். செலவு செயத் தேவை இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷாகுல் said...
ஆயிரமா?

வாழ்த்துக்கள் சார்
//

நன்றி ஷாகுல்

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...
வாழ்த்துக்கள் சார்!
//

நன்றி உலக நாதன் சார்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் கண்ணன்...
//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகா said...
வாழ்த்துக்கள் கோவியாரே
//
நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//Barari said...
nenjaarntha vazthukal koviyaare.
//

மிக்க நன்றி நண்பரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
1000 இடுகைகள் என்பது சாதரண சாதனை அல்ல,

உங்கள் வேகத்திற்கு இது சாதாரணம்,

வாழ்த்துகிறேன். நான் வலையுலகில் வந்த புதிதில் என்னோடு மடலாடி,உரையாடியில் உரையாடிய ’பிரபல’ முதல் பதிவர் தாங்களே..

பலரையும் ஊக்கப்படுத்திய நீவீர் வாழ்க..
//

நினைவு கூறலுக்கு நன்றி சிவசு !

கோவி.கண்ணன் சொன்னது…

// TBCD said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி ! தண்டுல்கர் போல் 30000 அடிக்க வாழ்த்துக்கள் :)
//

:) எல்லாம் உங்க ஊக்கம் தான் தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்மணி said...
வாவ் 1000 மா?வாழ்த்துக்கள்
100,200க்கே நாங்க ஆட்டம் போட்டோம்.
சரி சரி சரியா எண்ணிப் பார்த்துச் சொல்றீங்கதானே?;))
எங்களுக்கும் வயசான 1000 தொட்டுவிடுவோம்ல..:))
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//

:) உங்களுக்கும் வாழ்த்துகள் கண்மணி

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
எங்கயோ போயிட்டிங்க!
//

நீங்க தான் கோள்கள், கேலக்சி என்று எங்கேயோ போய்விட்டிங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...
வாழ்த்துக்கள் கோவிகண்ணன்!
//

நன்றி திரு இராபின்

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
வாழ்த்துகள் கோவியாரே....தொடர்ந்து கலக்கவும்...
//

நன்றி யாழ்பாணத் தம்பி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
970+ இல் ஒரு நாள் கூட்டிப் பார்த்தேன்.. இப்போ எத்தனை வந்திருக்குன்னு அவ்வப்போது கூட்டிப் பார்ப்பேன்.. பின்னர் நீங்களே வசதியாக ஒரு எண்ணியை வச்சிட்டீங்க..//

பழைய சில மொக்கை இடுகைகளை எடுத்துவிட்டேன், இல்லை என்றால் இந்த எண்ணிக்கை சென்ற மாதமே வந்திருக்கும்

//பின்னூட்ட மட்டுறுத்தல் இருந்திருந்தா முன்னரே வாழ்த்து சொல்லிருப்பேன். சரி அறிவிப்பு சுவாரஸ்யம் கெட்டுப் போகவேண்டாம்னு விட்டுட்டேன்..//

:) அதுவும் சரிதான்

//இப்போ சொல்லிகறேன்.. 1000 இடுகைகளுக்கு வாழ்த்துக்கள்..
//

மிக்க நன்றி கையேடு !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிநரேன் said...
வாழ்த்துக்கள்...:)
//

நன்றி திரு மணிநரேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
அடேங்கப்பா. மலைக்க வைக்கிறது. வாழ்த்துக்கள் ஜிகே.
//

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

//S.Gnanasekar said...
மேலும் பல ஆயிரம் பதிவு இட என வாழ்த்துகள் நன்பர் கோவி.கண்ணன் அவர்களே..
சோ.ஞானசேகர்.
//

பாராட்டுக்கு மிக்க நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

// ☼ வெயிலான் said...
வாழ்த்துக்கள்!!!!
//
நன்றி ரமேஷ்

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
வாழ்த்துகள் கண்ணன்!
//

குமரன்,
உங்கள் வாழ்த்து பெரு மகிழ்ச்சி, இந்த இடுகைக்கு உங்கள் வாழ்த்து வரவேண்டும் என்றும் எதிர்பார்த்தேன். நிறைவேற்றியதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// திகழ் said...
வாழ்த்துகள்

தங்களின் எழுத்துகளை வாசிக்கும் வாசகன் என்னும் முறையில் பிற மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுதும் உங்களின் எழுத்திற்கும் எண்ணத்திற்கும் பார்க்கும் பொழுது பெருமிதம் அடைகின்றேன்.

தொடருங்கள்

அன்புடன்
திகழ்
//

எனது தமிழார்வம் வளர்ந்ததுக்கு தங்களைப் போன்று அடிக்கடி படித்து பாராட்டுபவர்களும் காரணம். பாராட்டுக்கு மிக்க நன்றி திகழ்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராமலக்ஷ்மி said...
நல்வாழ்த்துக்கள்!
//
நன்றி சகோதரி !

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
உங்களின் பல பதிவுகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரவேண்டியது.பலர் படிக்கவேண்டியது.
கலக்குங்க!
//

யோகன் அண்ணா, உங்களை சந்தித்ததைவிட 1000 இடுகைகள் மகிழ்வான ஒன்று கிடையாது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பு அரவணைப்பு என்றுமே நினைக்கும் போது உணரக் கூடியது. அம்மாவுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கை நாதன்/SingaiNathan said...
வாழத்துகள்

வரலாறு முக்கியம்.அதற்காக இங்கும் ;)

அன்புடன்
சிங்கை நாதன்
//

நன்றி தம்பி ! வரலாறு நாமே எழுதிக் கொள்வது தானே ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
வாழ்த்துகள். வரலாறு நெம்பவே தலையாயது :-0

(டிபிசிடி உங்க பதிவுகளை படிக்கிறதே இல்ல போல ;-)
//
இராம்குமார்,
வாழ்த்துகளுக்கு நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள் இரண்டாம் முறையாக அப்பா ஆனதற்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//சாலிசம்பர் said...
வாழ்த்துகள் கோவியாரே.
//

மிக்க நன்றி சாலிசம்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
வரலாற்றை நீங்கள் பதிவு செய்ததுபோக வரலாறு உங்களைப் பதிவு செய்யட்டும்.

வாழ்த்துகள்ணா

:))
//

நன்றி தம்பி ! விழா எடுத்தால் வரலாறு பதித்திக் கொள்ளும் !

சென்னை மாநகர் எங்கும் ஒட்டிகள் முழங்கட்டும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வேடிக்கை மனிதன் said...
உங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒரு தகவல் என்று வைத்துக்கொண்டாலும் குறைந்த பட்சமாக ஆயிரம் தகவல் உங்கள் பதிவுகளை படித்தவர்கள் பெற்றிருப்பார்கள் என்றே நம்புகிறேன். நான் 500 தகவல்களுக்கு குறையாமல் பெற்றவன் என்கின்ற முறையில் உங்களது இந்த 1000மாவது பதிவிற்கு எனது சார்பாக உங்களுக்கு ஒரு பூங்கொத்து. வாழ்த்துக்கள் அண்ணா//

நன்றி சரவணா,

என் எழுத்தைப் தொடர்ந்து பாராட்டுபவர் நீங்கள். உங்களின் நல்வாழ்த்து எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//gulf-tamilan said...
வாழ்த்துக்கள்!!!
//
நன்றி ஐயா

கோவி.கண்ணன் சொன்னது…

/குடுகுடுப்பை said...
வாழ்த்துகள்.
//
நன்றி குடுகுடுப்பை

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
ஆயிரம் வாலா கோவியார்!

பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்...பட்....................................
டும்...டும்...

இதயங்கனிந்த வாழ்த்துகள்!
//

மிக்க நன்றி,

உங்களுக்கும் நல் வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
மேலும் பல்லாயிரம் இடுகைகள் எழுதிட முன்கூட்டிய வாழ்த்துகள்.
//

நன்றி அண்ணே !

பித்தனின் வாக்கு சொன்னது…

அண்ணா வாழ்த்துக்கள், உங்களுடன் இருப்பதற்காக பெருமைப் படுகின்றேன்.

அமா ஒரு இரகஸ்யம் சொல்லுங்கள், அதுல எத்தனை பார்ப்பான் எதிர் பதிவுகள் ஹா ஹா நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
அண்ணா வாழ்த்துக்கள், உங்களுடன் இருப்பதற்காக பெருமைப் படுகின்றேன்.

அமா ஒரு இரகஸ்யம் சொல்லுங்கள், அதுல எத்தனை பார்ப்பான் எதிர் பதிவுகள் ஹா ஹா நன்றி.
//

ஹிஹி... எல்லாம் மன பிராந்தி தான்.
முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டேன்.

"சூத்திரனுக்கு ஒரு நீதி தெண்டச்சோறு பார்பானுக்கு ஒரு நீதி" ன்னு பாரதி சொன்னா அது பெயர் புரட்சி ஏனெனில் பாரதியை ஒரு பார்பனராக பார்த்து அவர் புரட்சி செய்தார், தமிழர்களின் விடிவெள்ளி, சாயங்கால சனி என்றெல்லாம் சொல்லும் அதே நாக்கு அதையே ஒரு தாழ்த்தப்பட்டவன் சொன்னால் 'பார்பன துவேசமாக' தெரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

////பித்தனின் வாக்கு said...
அண்ணா வாழ்த்துக்கள், உங்களுடன் இருப்பதற்காக பெருமைப் படுகின்றேன்.

//

நன்றி சுதா!

ஜோதிஜி சொன்னது…

இதென்ன வெறும் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு நகர வேண்டிய சமாச்சாரமா?

நீங்கள் புள்ளி விபரம் என்று எதையும் சுட்டிக்கொண்டு கட்டிக்காட்டினாலும், இல்லாவிட்டாலும் கடைசி 950க்கு மேல் தான் என்னைப் போன்றோர்கள் உள்ளே வந்தோம்.

ஆச்சரியமாக இருக்கிறது. எண்ணிக்கைக்காக அல்ல. உங்கள் மொத்த எண்ணங்களுக்காக.

1000 பேர்கள் தொடர்பவர்கள் ஒரு பக்கம்.

1000 தலைப்புகள் ஒரு பக்கம்.

கண் முன் தெரிகிறது? போக வேண்டிய தூரம்.

ஆசானுக்கு அன்பானவனின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா.

நலம் பெறுக. வளம் பெற்று வாழ்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
இதென்ன வெறும் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு நகர வேண்டிய சமாச்சாரமா?

நீங்கள் புள்ளி விபரம் என்று எதையும் சுட்டிக்கொண்டு கட்டிக்காட்டினாலும், இல்லாவிட்டாலும் கடைசி 950க்கு மேல் தான் என்னைப் போன்றோர்கள் உள்ளே வந்தோம்.

ஆச்சரியமாக இருக்கிறது. எண்ணிக்கைக்காக அல்ல. உங்கள் மொத்த எண்ணங்களுக்காக.

1000 பேர்கள் தொடர்பவர்கள் ஒரு பக்கம்.

1000 தலைப்புகள் ஒரு பக்கம்.

கண் முன் தெரிகிறது? போக வேண்டிய தூரம்.

ஆசானுக்கு அன்பானவனின் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள் ஐயா.

நலம் பெறுக. வளம் பெற்று வாழ்க.
//
மிக்க நன்றிங்க ஜோதிஜி.

ஆழமாக நிறைய தகவல்கள் படித்துவிட்டு எழுதும் உங்கள் பதிவுகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன

மணிகண்டன் சொன்னது…

My Best wishes kannan. Carry on.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

தங்களைப்பற்றி எழுதியுள்ளேன்.
அண்ணா எனது தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

Ravichandran Somu சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

ARIVUMANI, LISBON சொன்னது…

my hearty wishes for your 1000 worthful ignitions.. congrats, carry on the same..:-))

நிஜமா நல்லவன் சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

Thamira சொன்னது…

வாழ்த்துகள் கோவிஜி.!

தருமி சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி.

ஆமா இதுவரை இந்த எண்ணிக்கையைத் தொட்டவர் வேறு யாரும் உண்டா? நீங்கள்தான் முதல் ஆளா?

இன்னும் புதிய உயரம் தொடுங்கள்.

கோவைகத்துக்குட்டி சொன்னது…

பதிவுகள் ஆயிரம் இரண்டாயிரம்... என தொடர வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்