குறும் பயணமாக சென்னைச் செல்ல நேர்ந்தது, சென்றவாரம் சென்னையில் பதிவர் சந்திப்பு என்று படித்திருந்தேன், தேதியைச் சரியாகப் பார்க்காமல் சனிக்கிழமை நடப்பதாகவே நினைத்திருந்தேன், அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த, எனக்கு நெருக்கமான பதிவர் வீஎஸ்கேவை தொடர்பு கொண்டு, 'வாங்க இருவரும் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு சர்ப்ரைஸ் கொடுக்கலாம், 4 மணிக்கு சந்திப்பாம் வந்துவிடுங்கள் என்று அன்று(சனிக்கிழமை) காலை அவரை நேரடியாக சந்தித்து சொல்லி இருந்தேன். சரி என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். அப்பறம் துளசி அம்மாவை தொலைபேசியில் அழைத்து 'மாலை பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா' என்று கேட்டேன், அதிர்ச்சியுடன், 'என்ன கண்ணன் நாளை ஞாயிறு தானே சந்திப்பு ?' என்று எதிர்கேள்வி கேட்டு எனக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வீஎஸ்கேவை தொடர்பு கொள்ள முடியவில்லை. 'ஐயோ அவரை சந்திப்புக்கு வரச் சொல்லிட்டோமே' என்ன செய்வது ?, அதிஷாவை தொலைபேசியில் அழைத்தேன். 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை' என்றது. அப்பறம் எப்எம் அப்துல்லாவிற்கு அழைத்தேன், 'தற்சமயம் ஸ்வ்ட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது' என்று வந்தது. 'தம்பி நல்லா தூங்குடா' ன்னு வாழ்த்திட்டு,
நம்ம லக்கி லுக் யுவ கிருஷ்ணாவை அழைத்தேன். 'சொல்லுங்கண்ணே' என்றார். அப்பறம் பதிவர் சந்திப்பு இன்னிக்கு என்று நினைத்தேன், அவரையும் வரச் சொல்லிட்டேன், அதோடு மட்டுமல்ல, இன்று இரவே இரண்டு பேரும் கிளம்புறோம், நாளை சென்னையில் இருக்க மாட்டோம் என்றேன். நான் ஒரு அறிவிப்பு போடுகிறேன், இன்னிக்கு சந்திக்க முடிந்தவர்களை சந்திப்போம் என்று 'திடீர்' பதிவர் சந்திப்பை அறிவித்திருந்தார்'
அறிவிப்பு படி 6 மணிக்கெல்லாம் துளசி அம்மா தம்பதிகளாக நடேசன் பூங்காவிற்கு சென்றதும் அழைத்து உறுதிபடுத்திவிட்டார்கள், அங்கே மங்கள இசை கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு முன்பே விஎஸ்கேவை தொடர்பு கொண்ட பொது அவர் செல்பேசியை நண்பரிடம் கொடுத்துவிட்டுச் சென்றவர் எங்கு சென்றார் என்று தகவலைச் சொல்லாமல் சென்றார் என்று தகவல் நான் அவரது செல்பேசியை அழைத்த போது வீஎஸ்கேவின் நண்பர் சொன்னார். 'போச்சுடா சாமி, இவரை நம்பி திடிர் பதிவர் சந்திப்பை அறிவித்து, மானம் போச்சு' என்று நினைத்தபடி, அவர் என்னிடம் ஏற்கனவே கொடுத்திருந்த மற்றொரு எண்ணில் அவரது அக்காவிற்கு தொலைபேசினேன், 'தம்பி இங்கே வரவில்லை' என்றார், 'சரி பரவாயில்லை, அவரு எங்கெல்லாம் போவாரோ அவங்க நம்பரைக் கொடுங்க, நான் முயற்சி செய்கிறேன்', என்று கேட்டு வீஎஸ்கேவின் அண்ணன் நம்பரை வாங்கினேன். 10 முறை அழைத்தும் தொடர்பு கிடைக்கவில்லை. அதற்குள் மணி மாலை 6.30 ஆகவே, பூங்காவினுள் நுழைந்தேன், திரும்பவும் முயற்சிகலாம் என்று அவரது அண்ணனை தொடர்பு கொள்ள இந்த முறை மணி அடித்தது, அப்பறம் 'இங்கேயும் வரவில்லை' என்றார், அவரிடம் விவரம் சொல்லி, அவர் அங்கு வந்தாரென்றால் உடனடியாக நடேசன் பார்க்குக்கு துறத்துங்கள், அவருக்காக ஒரு சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்துவிட்டு காதிருக்கிறோம் என்றேன்.
இதற்கு இடையே பூங்காவினுள் நுழைந்ததும் தம்பி வினோத் தண்ணீர் ஊற்றருகே உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே நாமக்கல் சிபி பதிவு வாசகர் முத்தமிழ் செல்வன் (எ) பெருசுவுடன் வந்தார். பிறகு நால்வரும் எனது நண்பரும் சேர்ந்து சேர்ந்து துளசி அம்மாவையும் அவரது கணவர் திரு கோபாலையும் அழைத்துக் கொண்டு புல் வெளியில் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம், யுவ கிருஷ்ணா வந்தார். அவர்களிடம் வீஎஸ்கே எஸ்கேப் ஆன கதையைக் கூறி, 7:30 வரை பார்ப்போம் அப்பறம் கிளம்பிடலாம் என்றேன். துளசி அம்மா & கோபால் தம்பதிகள் 'வீஎஸ்கேவைப் பார்க்கலாம் என்று தான் வந்தோம' என்றார்கள். அதற்குள் வீஎஸ்கேவிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது, 'உடனடியாக சந்திப்பு நடக்கும் இடத்துக்கு வருகிறேன்' என்றார்,
அவர் வரும் அரை மணி நேரத்திற்குள், நாங்களெல்லோரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இருந்தோம், உங்க விஜயகாந்து புத்தகம் கடையில் பார்த்தேன், நல்லா இருந்தது 75 ரூபாய் மிக அதிகம், அதனால் இவரு வாங்கவில்லை என்று துளசி அம்மா, திரு கோபாலைக் குறிப்பிட்டு லக்கியிடம் சொல்ல கலகலப்பானது. விஜயகாந்து படம் ஓசியில் கூட பார்க்கத் தயங்குவார்கள், வி.காந்து புத்தகத்துக்கு 75 ரூபாய் மிக அதிகம் தான் :) எல்லோரும் வட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே.... பைத்தியக்காரன் பதிவின் அனல்பறக்கும் விவாதம் பற்றி அதிஷா குறிப்பிட்டார். அப்பறம் சிபியைக் கொஞ்சம் கலாய்த்துக் கொண்டிருந்த போது வீஎஸ்கே வந்து சேர்ந்தார்.
வீஎஸ்கேவிடம் 'நீங்க மருத்துவராக இருக்கிங்க, அது பற்றி தொடர் எழுதலாமே என்று கேட்டார் கோபால்'. ஏற்கனவே பாலியல் பற்றி எழுதி இருக்கிறேன். நாராயண ரெட்டிக்கு வரும் கேள்விகள் போல் அடிக்கடி 'சின்ன' 'சின்ன'தைப் பற்றி மாற்றுவது 'குறி'த்து பெரிய கேள்விகள் வருது. ஆனால் வெளி இடவேண்டாம் என்கிறார்கள். என்றார் வீஎஸ்கே. பிறகு கோபால், '30 வயசுக்கு மேல் ஆண்களுக்கு வரும் தொப்பை' குறித்து எழுதலாம். பெண்களுக்கு போட்டியாக முப்பது வயதில் ஆண்கள் சுமப்பது அழகாக இல்லை என்றார். தொப்பை வருவது ஏன் என்பது பற்றி சில தகவல்களைச் செல்லிவிட்டு அது பற்றி பதிவில் எழுதுகிறேன் என்று உறுதி அளித்தார். நாமக்கல் சிபி அப்போதே அடிவயிறு கலங்குவதாகச் சொன்னார். அபிஅப்பா போன்ற தொப்பை பிரியர்கள் வீஎஸ்கே பதிவைத் தவிர்க்கலாம். :)
நேரம் செல்லச் செல்ல அனைவருக்கும் கிளம்பவேண்டிய உந்துதல், போதாக் குறைக்கு அங்கு பூங்காவில் நடைப் பெற்றுக் கொண்டிருந்த கிராமிய தப்பாட்டம், அந்த பக்கமாக அனைவரையும் அழைத்தது.
அப்படியே அங்கு சென்றுவிட்டு, விடைபெற்று களைய ஆயத்தமானோம், மருத்துவர் புரூனோ வந்தார். அவருடன் கைகுலுக்கிவிட்டு, பேசுவதற்கு நேரமில்லை மன்னிக்கவும், வருகைக்கு மகிழ்ச்சி, நான் ஒன்பது மணி அளவில் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்று விடைபெற்றேன். எல்லோரும் விடைபெற்றோம்.
காலை 12 மணி வாக்கில் அறிவிப்பு வெளி இட்டு 8 பேர் வரை கூடியது வியப்பாக இருக்கிறது, அன்று சனிக்கிழமை ஆகையால் பலருக்கு வேலை நாள், இல்லை என்றால் மேலும் சிலர் வந்திருக்கக் கூடும். உடனடி பதிவர் சந்திப்பு வெளி இட்ட லக்கி லுக் யுவ கிருஷ்ணாவுக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
அதிஷா, லக்கி லுக்(யுவகிருஷ்ணா), வீஎஸ்கே(சங்கர் குமார்), நாமக்கல் சிபி
வீஎஸ்கே, கோவியார்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
29 கருத்துகள்:
ஃபர்ஸ்ட்டேய்!
ஹைய்யா! நிஜமாவே நான்தான் ஃபர்ஸ்ட்டேய்!
படிச்சிட்டு அப்பாலிக்கா திரும்ப வரேன்!
போட்டோஸ் அருமை!
//விஜயகாந்து படம் ஓசியில் கூட பார்க்கத் தயங்குவார்கள், வி.காந்து புத்தகத்துக்கு 75 ரூபாய் மிக அதிகம் தான் :) //
எடுத்த எலெக்சன் வரும்போது தெரியும் தலைவரோட (கொள்கை)புத்தகத்துக்கு என்ன ரேட்டுன்னு, நீங்கள்ளாம் மயங்கப்போறீங்க.
இருட்டில் எடுத்தபடம்கூட நல்லா வந்துருக்கே!
முத்தமிழ்ச் செல்வன் , பெரு நாட்டுப் பெருசா?
அடடா...தெரியாமப்போச்சே(-:
எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்! அருமையா வந்திருக்கு!
:))
//முத்தமிழ்ச் செல்வன் , பெரு நாட்டுப் பெருசா?
//
ஆமா! அவருதான் பெரு எம்பசிக்கு வெப் சைட் டிசைன் பண்னுறார்!
பெரு நாட்டு பெருசு என்பது சாலப் பொருந்துகிறது!
சூப்பர்ண்ணே..
கோவி,
நீங்கள் புறப்பட்ட பிறகும் ஒரு 2 மணி நேரத்துக்கும் மேலான விவாதம் நடந்தது!
நல்ல கவனிப்பு போல உங்களுக்கு ....
நடக்கட்டும் நடக்கட்டும்....
பதிவர் சந்திப்புல கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்
நம்ம பக்கத்துக்கு வாங்க
முரளியிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்னேன்
present sir
/Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல கவனிப்பு போல உங்களுக்கு ....
நடக்கட்டும் நடக்கட்டும்....
பதிவர் சந்திப்புல கலக்கிட்டீங்க வாழ்த்துக்கள்//
கவனிப்பெல்லாம் எதுவும் இல்லை :)
ஒருவரை ஒருவர் பேசுவதைத் தான் கவனித்தோம்
//நம்ம பக்கத்துக்கு வாங்க
2:42 PM, June 29, 2009//
//
வந்திடுவோம்
சென்னை - சிங்கை 'சீசன் டிக்கெட்' எடுத்து வச்சிருக்கீங்களோ?
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
முரளியிடம் தொலைப்பேசியில் வாழ்த்து சொன்னேன்
//
Starjan,
அது நேற்று, நாங்கள் சந்தித்தது நேற்று முன்னாள்.
//தருமி said...
சென்னை - சிங்கை 'சீசன் டிக்கெட்' எடுத்து வச்சிருக்கீங்களோ?
//
சனி - ஞாயிறு வந்து போக அப்படிக் கிடைத்தால் நல்லா இருக்கும்.
:)
//நாமக்கல் சிபி said...
கோவி,
நீங்கள் புறப்பட்ட பிறகும் ஒரு 2 மணி நேரத்துக்கும் மேலான விவாதம் நடந்தது!
2:11 PM, June 29, 2009
//
ஆஹா, மிஸ் பண்ணிட்டேனே. புகை மூட்டத்தில் புரூனோ நொந்து போய் இருப்பார்.
நல்லது...:-)
நானும் சனிக்கிழமை 9 முதல் 12 மணி (11 மணி புலி விமானம் லேட்) வரை சென்னை விமான நிலையத்தில்தான் இருந்தேன். பார்த்திருந்தால் இன்னொரு குட்டி சந்திப்பு நடத்தியிருக்கலாமே...
எப்படி மிஸ் பண்ணினேன்.
நூல் கேப்பில் தவற விட்டுவிட்டேன்.
சந்திப்பு சந்திப்பு சந்திப்பு அவ்வ்வ்வ் 1000 பிறை கண்டவர் போல 1000 சந்திப்பில் கலந்துக்கொண்டவர் என்று பட்டம் கொடுக்கலாம் போல!
அருமையானச் சந்திப்பு கட்டுரை. எழுத்தோடு நில்லாது, சந்திப்புகள் என நட்பு பாராட்டும் எழுத்துலகத்திற்கு எனது வணக்கங்கள்.
மிக்க நன்றி ஐயா.
தீடீர் பிரியாணி மாதிரி தீடீர் சந்திப்பா!
எங்க ஊர் பக்கம் எப்போ வர்றிங்க!?
கலக்குங்கோ கலக்கல்
நிறைய போட்டோவில் நீங்கள் இல்லை(அநேகமாக நீங்கள் படம் எடுத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.)
நீங்கள் ஊர் சென்ற சமயம் நான் பதிவிட ஆரம்பித்துள்ளேன். போன பதிவில் பின்னூட்டம் இட்டேன், நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
என் குறை நிறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
அன்புடன் அழைக்கிறேன்.
http://sinekithan.blogspot.com
பதிவர் சந்திப்பா!?
தொலையாடலும், தேடலும் போல் தெரிகிறது.
அது சரி,
இந்த படங்களில் நான் இரண்டு பதிவர் சந்திப்பைக் காண்கிறேன்.
உண்மையா!?
கொஞ்சமாவது தொப்பை இருந்தா நல்லா இருக்கும்ன்னு தான் பார்க்க்கிறேன். ஊகூம் எட்டி கூட பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்குது கோவியாரே!
ஆமா தருமி சார் சந்தேகம் தான் எனக்கும் சிங்கை - சென்னை சீசன் டிக்கெட் வச்சிருக்கீங்களா??
அருமையான படங்கள். அருமையான தொகுப்பு. நல்லா இருந்துச்சு பதிவு!
தொடருட்டும் வாழ்த்துக்கள்...!
நல்ல பதிவு படங்கள் கோவியாரே!
உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ந்தேன்.
கருத்துரையிடுக