காலத்தில் தேட...

பதிவர் லக்கி லுக்கின் இணைய சாதனை !

Tuesday, June 09, 2009

அலெக்சா மதிப்பீட்டில் லக்கிலுக் என்கிற யுவ கிருஷ்ணாவின் http://luckylookonline.com என்கிற அவருடைய இணைய தளம், அலெக்சா.காம் பட்டியல் படி உலகம் முழுவதில் இயங்கும் பலரால் படிக்கப்படும் முதல் ஒரு லட்சம் இணைய தளங்கள் என்ற எல்லைக்குள் ஒன்றாக வந்திருக்கிறது.

இணைய இதழ்கள், செய்தித்தாள்கள் என வாசிக்கப்படும் பொதுச் சேவை இணைய ஊடகங்களில், ஒரு பதிவர் தனது பதிவை, அதுவும் தமிழில் எழுதி, தமிழ் வலைப்பதிவு ஒன்றை முதல் ஒருலட்சத்திற்குள் கொண்டு வரும் படி எழுத்தில் சாதனை செய்தது பாராட்டத்தக்கது.



பதிவர் மற்றும் நண்பர் என்கிற முறையில் லக்கி லுக்கை பாராட்டி மகிழ்கிறேன்.



யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.

32 கருத்துக்கள்:

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP