பின்பற்றுபவர்கள்

16 ஜூன், 2009

தமிழ்மணம் மகுடம் மற்றும் வாசகர் பரிந்துரை !

வாக்களிப்பது எவ்வளவு கடினமான செயல் என்று நம் தமிழக, இந்திய வாக்காளர்களுக்குத்தான் தெரியும். ஆமாம், ஒவ்வொரு தேர்தலின் போதும் 40 விழுக்காட்டு மக்கள் வாக்கு சாவடிக்கு செல்வதில்லை.

வாசகர் பரிந்துரை - இதுபற்றிய எனது தனிப்பட்ட கருத்து, மிகச் சில கட்டுரைகள் தவிர்த்து பெரும்பாலும் அதில் இடம் பெறுபவை குழுக்களாக இயங்கும் பதிவர்களுக்குள் ஒருவருவருக்கு ஒருவர் பரிந்துரை செய்து கொள்வதால் வாசகர் பரிந்துரை என்ற கட்டத்துக்குள் செல்கிறது என்பதாக நினைக்கிறேன். மற்றபடி சிறந்த ஒரு கட்டுரையை பரிந்துரைக்க வேண்டுமென்றால் 'ஓபன் ஐடி' வாக்களிப்பது கூடுதல் வேலையாக அமைகிறது என்பதால் நல்ல கட்டுரைகளை / இடுகைகளைப் படித்தாலும் பரித்துரைப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது. பலரும் இதே மன நிலையில் தான் இருப்பார்கள்.

தானாகவே இணைத்துக் கொள்ளும் தமிழ்வெளி தவிர்த்து, தற்பொழுது புதிதாக தமிழிஷ் உட்பட பல திரட்டிகள் இயங்குகின்றன. 'Submit New' என்பதை அழுத்தி ஒவ்வொரு திரட்டியிலும் இடுகையை இணைப்பது கூடுதல் வேலையாக இருப்பதால் தமிழிஷ் போன்ற தளங்களில் எப்போதாவது தான் இணைக்கிறேன். சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது, பரிந்துரைக்காக 1 - 2 நிமிடங்கள் ( ஒரு இடுகைக்காக) செய்வது அலுப்பு ஏற்படத்தான் செய்கிறது. ஒரு நாளைக்கு 5 நல்ல இடுகைகளைப் படித்தால் 5 ஐயும் பரிந்துரை செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கும். தற்பொழுது பரிந்துரைகளும் குறைந்துவருகிறது, தமிழ் மண மகுடம் நிலவரம் படி, பரிந்துரைப்பதில் பலருக்கும் விருப்பம் குறைந்து வருவது தெரிகிறது, காரணம் ஓபன் ஐடி வழியாக பரிந்துரையை கட்டுப்படுத்த முயன்றதே என்று நினைக்கிறேன்.

பெறும் மிகுதியான வாக்குகள் தான் ஒரு கட்டுரையின் தரம் காட்டுகிறது என்பதில் உடன்பாடு இல்லை, ஒரு சில கட்டுரைகள் உண்மையிலேயே அப்படி தேர்வாவதும் உண்டு, ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றின் விழுக்காடு குறைவு எனவே அதை கணக்கில் எடுத்துக் கொள்வது சரியாகாது.

தொடர்ச்சியாக இயங்கும் பதிவர்கள் ஒரு 400 பேராவது இருக்கும், அவர்களில் வாரத்துக்கு 7 பேரை நல்ல இடுகைகளை பரிந்துரை செய்ய ('இந்த வார பரிந்துரையாளர்கள்' என்று அறிவித்து தமிழ்மணமே) அழைக்கலாம். அதிலும் ஒற்றைத் தன்மை இருக்கும் ஆனால் அந்த 7 பேருமே ( 7 - ஒரு எண்ணிக்கை மட்டுமே) ஒரே குழுவில் இருக்க வாய்ப்புகள் குறைவுதான். எனவே அனைவரும் தனக்கு பிடித்த பதிவர்களின் பதிவை மட்டும் பரிந்துரைக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வாரம் ஒரு இடுகை என்ற கணக்கில் 1000 பதிவர்கள் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள், ஒவ்வொருவருக்கும் நட்சத்திர பதிவர் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர்கள் எழுதுவார்களா என்பது ஐயமே, பதிவராக இயங்கும் காலத்தில் அவர்களை அங்கீகரிக்கும் வகையில் தமிழ்மணம் (மற்றும் பிற திரட்டிகள்) இது போல் எதாவது செய்யலாம்.

தமிழ்மணத்தின் தனிச்சிறப்பு சூடான இடுகை, அதை ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. போட்டித் தன்மையுடன் வளர்ந்துவரும் பதிவு திரட்டிகளின் எண்ணிக்கைக்கள் கூடும் இன்னேரத்தில் தமிழ்மணம் சூடான இடுகையைத் தூக்கியது தமிழ்மணத்துக்கு பின்னடைவு ஏனென்றால் சூடான இடுகை இல்லை என்றால் அனைவரும் ரீடரில் இடுகைகளைப் படித்துக் கொள்வார்கள், தமிழ்மணத்திற்கு செல்வது குறைந்துவிடும் - இது என் தனிப்பட்ட கருத்து.

எந்த ஒரு திரட்டியும் பதிவர்களின் இடுகைத்தவிர்த்து, திரட்டி செயல்பாட்டில் பதிவர்களின் பங்களிப்பும் இருந்தால் பதிவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள், இருபக்கமும் பயனாக பலனாக இருக்கும்.

30 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது\

என்னா அண்ணே!

நட்புடன் ஜமால் சொன்னது…

எந்த ஒரு திரட்டியும் பதிவர்களின் இடுகைத்தவிர்த்து, திரட்டி செயல்பாட்டில் பதிவர்களின் பங்களிப்பும் இருந்தால் பதிவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள், இருபக்கமும் பயனாக பலனாக இருக்கும்.\\


இவங்கள்ளாம் சரிப்பட்டு வரமாட்டாங்க


நாம ஒரு திரட்டி ஆரம்பிச்சிடுவோம் அண்ணே!

தேவன் மாயம் சொன்னது…

உங்கள் கருத்துக்களை
ஆமோதிக்கிறேன்!!

சி தயாளன் சொன்னது…

//சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது,
//

உங்களை வைச்சு நீங்களே காமெடி கீமடி பண்ணலையே..ஆவ்

Subbiah Veerappan சொன்னது…

///////தமிழ்மணத்தின் தனிச்சிறப்பு சூடான இடுகை, அதை ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. போட்டித் தன்மையுடன் வளர்ந்துவரும் பதிவு திரட்டிகளின் எண்ணிக்கைக்கள் கூடும் இன்னேரத்தில் தமிழ்மணம் சூடான இடுகையைத் தூக்கியது தமிழ்மணத்துக்கு பின்னடைவு ஏனென்றால் சூடான இடுகை இல்லை என்றால் அனைவரும் ரீடரில் இடுகைகளைப் படித்துக் கொள்வார்கள், தமிழ்மணத்திற்கு செல்வது குறைந்துவிடும் - இது என் தனிப்பட்ட கருத்து./////

எங்கள் கருத்தும் அதுதான்.
தமிழ்மணம் சிந்தித்துச் செயல் படுமா?

வால்பையன் சொன்னது…

ரெண்டு பேரும் மாத்தி மாத்தி காமெடி பண்றிங்களா?

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
லக்கிலுக் சொன்னது…

முதலில் எனக்கு இந்த + மற்றும் - குத்துக்களில் பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை. + குத்து விழுந்தால் மகிழ்வதும் - குத்து விழுந்தால் புலம்புவதும் தேவையே இல்லாதது.

தொடர்ச்சியாக தன்னுடைய எழுத்தில் கன்சிஸ்டென்ஸி மெயிண்டெய்ன் செய்பவர்கள் யாரும் இந்த ப்ளஸ், மைனஸ் விவகாரங்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

சூடான இடுகைகளாவது குறைந்தபட்சம் ஹிட்ஸ் அடிப்படையில் அமைந்தது. இந்த ‘குத்து’ விவகாரம் குழுமனப்பான்மையை வளர்க்கும் என்ற ரீதியிலான கருத்து எனக்கும் ஏற்புடையது. வெட்டு குத்து நடக்காமலிருந்தால் சரி :-)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

தமிழ்மண நட்சத்திரம் ஆவது எப்படி...

கொஞ்சம் சொல்லுங்க‌

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
தமிழ்மண நட்சத்திரம் ஆவது எப்படி...

கொஞ்சம் சொல்லுங்க‌
//

1001 ரூபாய் பணம் கட்டி டோக்கன் வாங்கனும், அதில் இருக்கும் எண்ணை குழுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பாங்க, அதில உங்க டோக்கன் இருந்தால் நீங்கள் நட்சத்திரம் என்று அறிவிப்பாங்க !

ஐயோ அது ஜோக்கு !

*****

தொடர்ந்து எழுது வந்தால் நட்சத்திரமாக விருப்பமா என்று கேட்டு மின் அஞ்சல் அனுப்புவாங்க, அந்த மின் அஞ்சல் கிடைக்கப் பெற்ற நீங்கள் ஒப்புதல் அளித்தால் அவங்க சொல்லும் ஒருவாரத்திற்கு நீங்கள் தான் நட்சத்திரம். நான் எழுதத் தொடங்கி ஓராண்டு சென்ற பிறகு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது சிலருக்கு 2 மாதத்திலும் சிலருக்கு 3 ஆண்டுகளிலும், சிலருக்கும் 4 ஆண்டுகள் ஆகியும் கிடைக்காமல் இருக்கு, என்னுடன் எழுதவந்த சிலருக்கு இன்னும் நட்சத்திர வாய்ப்பு கிடைக்கவில்லை, அதுல ஒரு பெரியவரும் எனது நெருங்கிய நண்பரான ஆத்திகம் வீஸ்கேவும் உண்டு.

கோவி.கண்ணன் சொன்னது…

//venkat has left a new comment on your post "தமிழ்மணம் மகுடம் மற்றும் வாசகர் பரிந்துரை !":

// இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் /////

வெங்கட்,

எனது பதிவில் மட்டுறுத்தல் இல்லை, எனவே பின்னூட்டம் போட்டவுடன் வெளி ஆகிவிடும். உங்கள் பின்னூட்டம் வெளி இடப் பட்டு இருந்தால் அது அதுவாகவே வெளியிடப் பட்டது என்று தெரிவித்துக் கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது\

என்னா அண்ணே!
//

தூங்கும் போது பதிவு எழுத முடியாது ஜமால் !
:))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//இவங்கள்ளாம் சரிப்பட்டு வரமாட்டாங்க


நாம ஒரு திரட்டி ஆரம்பிச்சிடுவோம் அண்ணே!//

தமிழ் பதிவுலகில் 1001 ஆவது திரட்டியா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//thevanmayam said...
உங்கள் கருத்துக்களை
ஆமோதிக்கிறேன்!!

11:19 AM, June 16, 2009
//

மிக்க நன்றி மருத்துவரே !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
//சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது,
//

உங்களை வைச்சு நீங்களே காமெடி கீமடி பண்ணலையே..ஆவ்
//

ஜமாலுக்கு கொடுத்த பதிலை படிக்கவும். வெகு சீரியஸ் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// SP.VR. SUBBIAH said...
///////தமிழ்மணத்தின் தனிச்சிறப்பு சூடான இடுகை, அதை ஏன் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. போட்டித் தன்மையுடன் வளர்ந்துவரும் பதிவு திரட்டிகளின் எண்ணிக்கைக்கள் கூடும் இன்னேரத்தில் தமிழ்மணம் சூடான இடுகையைத் தூக்கியது தமிழ்மணத்துக்கு பின்னடைவு ஏனென்றால் சூடான இடுகை இல்லை என்றால் அனைவரும் ரீடரில் இடுகைகளைப் படித்துக் கொள்வார்கள், தமிழ்மணத்திற்கு செல்வது குறைந்துவிடும் - இது என் தனிப்பட்ட கருத்து./////

எங்கள் கருத்தும் அதுதான்.
தமிழ்மணம் சிந்தித்துச் செயல் படுமா?

12:48 PM, June 16, 2009
//

வாத்தியாரே, நீண்ட நாள் சென்று வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி காமெடி பண்றிங்களா?

12:58 PM, June 16, 2009
//

யாரு 2 பேர் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
முதலில் எனக்கு இந்த + மற்றும் - குத்துக்களில் பெரிய அபிப்பிராயம் எதுவுமில்லை. + குத்து விழுந்தால் மகிழ்வதும் - குத்து விழுந்தால் புலம்புவதும் தேவையே இல்லாதது.

தொடர்ச்சியாக தன்னுடைய எழுத்தில் கன்சிஸ்டென்ஸி மெயிண்டெய்ன் செய்பவர்கள் யாரும் இந்த ப்ளஸ், மைனஸ் விவகாரங்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

சூடான இடுகைகளாவது குறைந்தபட்சம் ஹிட்ஸ் அடிப்படையில் அமைந்தது. இந்த ‘குத்து’ விவகாரம் குழுமனப்பான்மையை வளர்க்கும் என்ற ரீதியிலான கருத்து எனக்கும் ஏற்புடையது. வெட்டு குத்து நடக்காமலிருந்தால் சரி :-)
//

லக்கி தென் கலை ஐயங்கார்,

நன்னா சொன்னேள் !

சென்ஷி சொன்னது…

/தொடர்ச்சியாக தன்னுடைய எழுத்தில் கன்சிஸ்டென்ஸி மெயிண்டெய்ன் செய்பவர்கள் யாரும் இந்த ப்ளஸ், மைனஸ் விவகாரங்களில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

சூடான இடுகைகளாவது குறைந்தபட்சம் ஹிட்ஸ் அடிப்படையில் அமைந்தது. இந்த ‘குத்து’ விவகாரம் குழுமனப்பான்மையை வளர்க்கும் என்ற ரீதியிலான கருத்து எனக்கும் ஏற்புடையது. வெட்டு குத்து நடக்காமலிருந்தால் சரி :-)//

:))

காக்கா - கவுஜைக்கு பல ஓட்டு கிடைத்தும் (எதிர் ஓட்டு உள்பட) வாசகர் பரிந்துரையில் முன்னுக்கு வரவில்லை. நட்சத்திர நண்பர் மோகனின் பதிவிற்கு அதை விட அதிகமான ஓட்டு கிடைத்தது காரணமாய் இருந்திருக்கும்.

மயாதி சொன்னது…

உண்மைதான் ...
இருந்தாலும் நமக்கு தேவை நல்ல சில பின்னூட்டங்கள் அவைதான் நம்மை வழிப்படுத்தும், பரிந்துரைகளை விட....(என் கருத்து)

இருந்தாலும் நீங்கள் சொல்லும் படி நடந்தாலும் நல்லம் போலதான் இருக்கு...
இந்த மனசு எப்பவும் இப்படித்தான் தோழா !

ஷாகுல் சொன்னது…

//தூங்கும் போது பதிவு எழுத முடியாது ஜமால் !//

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இப்படி தானோ ஒகே

Vishnu - விஷ்ணு சொன்னது…

//ஓபன் ஐடி வழியாக பரிந்துரையை கட்டுப்படுத்த முயன்றதே என்று நினைக்கிறேன்.//

கண்டிப்பாக. அது எடுத்து கொள்ளும் நேரம் மற்றும் சில நேரங்களில் விடுக்கும் நாம் தவறான உள்ளீடுகளால் கொடுக்கும் பிழை செய்திகள் கொஞ்சம் களைப்பு தோன்றத்தான் செய்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//:))

காக்கா - கவுஜைக்கு பல ஓட்டு கிடைத்தும் (எதிர் ஓட்டு உள்பட) வாசகர் பரிந்துரையில் முன்னுக்கு வரவில்லை. நட்சத்திர நண்பர் மோகனின் பதிவிற்கு அதை விட அதிகமான ஓட்டு கிடைத்தது காரணமாய் இருந்திருக்கும்.//

கோவி.கண்ணன் சொன்னது…

//விஷ்ணு. said...
//ஓபன் ஐடி வழியாக பரிந்துரையை கட்டுப்படுத்த முயன்றதே என்று நினைக்கிறேன்.//

கண்டிப்பாக. அது எடுத்து கொள்ளும் நேரம் மற்றும் சில நேரங்களில் விடுக்கும் நாம் தவறான உள்ளீடுகளால் கொடுக்கும் பிழை செய்திகள் கொஞ்சம் களைப்பு தோன்றத்தான் செய்கிறது.
//

சரியாகச் சொன்னிங்க விஷ்ணு !

கோவி.கண்ணன் சொன்னது…

//starjan said...
இப்படி தானோ ஒகே
//

:) அப்படித்தான்னு நினைக்கிறேன் !

கிரி சொன்னது…

//’டொன்’ லீ said..
//சில பல வேளைகளில் எழுதுவதற்கே நேரம் கிடைக்காத பொழுது,
//

உங்களை வைச்சு நீங்களே காமெடி கீமடி பண்ணலையே..ஆவ்//

:-))))

ஊர்சுற்றி சொன்னது…

//சூடான இடுகை இல்லை என்றால் அனைவரும் ரீடரில் இடுகைகளைப் படித்துக் கொள்வார்கள், //
இப்போ இதைத்தான் செய்துகொண்டிருக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உங்கள் கருத்துக்களை
ஆமோதிக்கிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அப்படியா! எனக்கும் அப்படித்தான் தோனுது!
கொஞ்சம் மந்தமாத்தான் இருக்கு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்