பின்பற்றுபவர்கள்

12 ஜூன், 2009

தமிழ் பேசுகிறவர்கள் தமிழனா ?

எந்த ஒரு நல்ல முயற்சிக்கும் எதிர்பாளர்கள், எதிரிகள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். தமிழ், தமிழர்கள் மேன்பாட்டில் இது நிறையவே உண்டு. தமிழை அழிப்பதற்கு முனைபவர்களும் தாங்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்வது தான் வேடிக்கை. உயிர் கொலை அல்லது கொல்லுதல் பாவம் என்றாலும் கோவிலுக்காக அதைச் செய்வது புனிதம், நன்மை எனப்படுவது போல், இழிசெயல்களுக்கும் புனிதம் கற்பித்துவிட்டால் எந்த இழிசெயலையும் கூச்சமில்லாமல் செய்யலாம். எனக்கு வடமொழி மீது எந்த வெறுப்பும் கிடையாது ஆனால் அவை வலிந்து திணிக்கப்படும் போது எரிச்சலை ஏற்படுவதை மறுக்க மாட்டேன்.


மிக மிக பொதுவான உண்மை எல்லா மொழியும் முதலில் வெறும் தகவல் பரிமாற்ற கருவி மட்டுமே. அந்த அளவில் அதற்கென்று சிறப்புகள் எதுவும் கிடையாது. ஆனால் எந்த ஒரு மொழியும் அந்த மொழி பேசுபவர்களுக்கு உயிர் போன்றது, சிந்தனை, செயல், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவரவர்களின் தாய்மொழியே ஊட்டி வளர்க்கிறது. பிறமொழிகளைக் கற்றுக் கொள்ளும் போது அறிவுத் திறன் மேலும் வளர்ச்சி அடைகிறது. தேவ மொழி, தேவ பாடை என்று கூறிக் கொண்டு வடமொழி தாங்கிகள் செய்யும் கிறுக்குத் தனத்துக்கு அளவே இல்லை.

பள்ளியில் புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு நடந்த 'அக்ஷ்ரபியாசம்' நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்: இடம் கொளத்தூர், சென்னை - என்ற படத்தை தினமலர் வெளி இட்டிருந்து.



'அக்ஷ்ரபியாசம்' - இது என்ன ? சிறுவர்களுக்கு பள்ளியில் பூணூல் போட்டுவிடுகிறார்களா ? அல்லது பாலியல் விழிப்புணர்வு கல்வி கற்றுக் கொடுக்கிறார்களா ? என்று படிப்பவர்கள் திணறா வண்ணம் படம் போட்டு இருப்பதால் ஓரளவு என்னவாக இருக்க முடியும் என்று ஊகிக்க முடிகிறது.



அக்ஷ்ர - என்றால் எழுத்து


அப்யாச - என்றால் பயிற்சி



'எழுத்துப் பயிற்சி' என்பதைத் தான் 'அக்ஷ்ரபியாசம்' வடமொழியில் சொல்லுகிறார்கள். பசங்கப் படிக்கப் போறது தமிழ், அதைத் தமிழிலேயே 'குழந்தைகளுக்கான எழுத்துப் பயிற்சி' என்று சொல்வதால் என்ன தாழ்ந்துவிடப் போகிறது ? தமிழைப் புறக்கணித்து வடமொழியைத் திணித்து என்ன சாதிக்கப் போகிறார்கள் ? பிஞ்சுவயதில் நஞ்சைக் கலந்தால் பிறகு தமிழ்சிறுவர்களுக்கு தமிழ் பற்று எப்படி ஏற்படும்.



நான் தினமலரைக் குறைச் சொல்லவில்லை, வடமொழியின் புனிதம் பறைசாற்றுவதைத் மூச்சாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது தான். அதையும் தமிழர்களிடயே காசுக்கு விற்கிறார்கள், உண்மையிலேயே திறமைசாலிகள், அறிவாலிகள் தான். ஒருவரை தூற்றிக் கொண்டே அவரிடம் விற்பனை செய்தால் விற்பனையாளர் அறிவாளிதானே ?



'திலகாஷ்ட மகிஷ பந்தனம்' (காய்ந்த எள்ளுச் செடியும், எருமை கட்டும் கயிறும்) என்ற வெறும் வடமொழித் தொடரை வைத்து பண்டிதர் ஒருவரிடம் தன்னை ஒரு பெரும் அறிவாளியாக வாய்ச்சொல் காட்டி அவரைத் துறத்திய தெனாலி இராமன் கதைகள் போல் தமிழர்களை ஏமாற்றுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
(கதை தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் கேளுங்கள்)


குழந்தைகளின் பள்ளி ஆசிரியராக இருப்பவர்கள் இது போன்ற வடமொழித் திணிப்பிலும், தமிழ் புறக்கணிப்பிலும் முனைந்து செயல்படுவதை தடுப்பது யார் ? அறிவை மஞ்சள் துண்டிற்கு அடகுவைத்தவர்களிடம் இதையெல்லாம் முறையிட்டாலும் சரியாகுமா ? தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரி தமிழர்களிடையேயும், தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். யார் சொன்னது, தமிழ் பேசுகிறவனெல்லாம் தமிழன் என்று ?

45 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

பிறமொழிக் கலப்பு, ஆதங்கம் புரியுது!

ஆனா யார் தமிழன் என்பதற்கு வரையறை இருக்கா? இருந்தா சொல்லுங்க, தெரிஞ்சுக்கலாம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
பிறமொழிக் கலப்பு, ஆதங்கம் புரியுது!

ஆனா யார் தமிழன் என்பதற்கு வரையறை இருக்கா? இருந்தா சொல்லுங்க, தெரிஞ்சுக்கலாம்!
//

தமிழ் வளர்ச்சிக்கும் மேன்னைக்கும் பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் தான், கால்டுவெல், ஜியு போப் போன்ற வெள்ளைக்காரர்களும் தமிழர்கள் தான். தமிழை அழிக்க நினைக்காமல் தமிழை பேசத் தெரிந்து போற்றுபவர்கள் அவர்கள் வேற்று மொழிக் காரர்கள் என்றாலும் அனைவரும் தமிழர்கள் தான்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

மொழி கலப்பில் ஒரு கவர்சியை காண்கிறார்களே அண்னா.... புயலில் ஒரு தோணி எழும் நூலில் எழுத்து நடைக்கும் அதன் வெற்றிக்கும் மொழி நடை தான் காரணம் எனக் கூறப்படுவதுண்டு....

அப்பாவி முரு சொன்னது…

இதுக்கு முக்கிய காரணம்,

தெரியாத பொருளுக்கும், ஆட்களுக்கும் அதிகம் மதிப்பளிப்பதும்,
தெரிந்த பொருளுக்கும், ஆட்களுக்கும் குறைந்த மதிப்பளிக்கும் மனப்பான்மையே.

இம்மனப்பான்மை தமிழர்களுக்கு மிக மிக அதிகம், அதனால் எழுதப்பழகுதலைக் கூட வடமொழியில் சொன்னதும் எல்லாப் பொற்றோர்களும் அந்த நிகழ்சியில் கலந்து கொண்டிருப்பர்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//தமிழ் வளர்ச்சிக்கும் மேன்னைக்கும் பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் தான், கால்டுவெல், ஜியு போப் போன்ற வெள்ளைக்காரர்களும் தமிழர்கள் தான். தமிழை அழிக்க நினைக்காமல் தமிழை பேசத் தெரிந்து போற்றுபவர்கள் அவர்கள் வேற்று மொழிக் காரர்கள் என்றாலும் அனைவரும் தமிழர்கள் தான்.

//

அதே அதே..

சரவணன் சொன்னது…

தினமலரில் உள்ள வடசொற்களை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
தமிழனாய்ப் பார்த்து தி்ருந்தாவிட்டால் தமிழை மேன்மையடைச் செய்ய முடியாது.

ச.பிரேம்குமார் சொன்னது…

//'அக்ஷ்ரபியாசம்'
//

அடடே... என்ன அருமையா சிந்திச்சு இருக்காங்க! சொல்றதுக்குள்ள தாவு தீர்ந்திடும் போல இருக்கு!!

கண்டும் காணான் சொன்னது…

தமிழை விற்றுப் பிழைப்பவர்கள் இருக்கும் வரை , எமக்கு இவ்வாறான சந்தேகங்கள் வந்து கொண்டே இருக்கும்

ராம்.CM சொன்னது…

ஆதங்கம்....

இறைகற்பனைஇலான் சொன்னது…

அன்பரே, தினமலர்க்காரன் அவன் தரப்பில் சரியாக இருக்கிறான்.முடிந்தவரை நாம் கலப்பின்றி எளிய தமிநில்பேசிப்பழகுவோம். பந்திகளில் சோறு என்று கேட்பது இழிவாகக்கருதப்படுவதை மாற்றி அன்னம் என்று கேழுங்கள். ரைஸ்என்று
கேட்பதை முழுக்கால் உடுப்புப் போட்டவர்களும் ஆடம்பரமாக உடுத்துவோரும் கேட்க ஆரம்பித்தால்
போதும் . தமிழன் யார் என்றால்,
தன் வாழ்வில் கோயிலில், திருமனத்தில் தமிழ் பயன்படுத்துவது சரி என்று ஒப்புக்கொள்ளவேண்டும். குடும்பச்சூழலால் இப்போது பயன் பயுத்த முடியவில்லையானாலும் தன்நெஞ்ஞறிய ஏற்ப்பவராக இருக்கவேண்டும். கால்டுவெல் நற்றமிழ் அறிஞ்ஞர்தான் தமிழர் என்று அவர் அவரையே ஏற்கமாட்டார். நான் தமிழ இனத்தான் தான் என்றும்
ஆரியனோ,பாரசீகனோ அல்ல என்று எண்ணுபவனே தமிழன்.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//தமிழ் வளர்ச்சிக்கும் மேன்னைக்கும் பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் தான், கால்டுவெல், ஜியு போப் போன்ற வெள்ளைக்காரர்களும் தமிழர்கள் தான். தமிழை அழிக்க நினைக்காமல் தமிழை பேசத் தெரிந்து போற்றுபவர்கள் அவர்கள் வேற்று மொழிக் காரர்கள் என்றாலும் அனைவரும் தமிழர்கள் தான்.//

மேலே குறிப்பிட்ட உஙளூடைய கருத்துக்கு உடன்படுகிறேன்.

தமிழின் சிறப்பு, மேன்மை அறிந்து தஞ்சாவூரில் வந்து தமிழ் பயின்று பட்டம் பெற்று, தங்களது சீனப்பெயர்களை அழகான தமிழ் பெயராக மாற்றிக் கொண்டது மட்டும் அல்லாமல், தமிழ் மொழியின் சிறப்பை உலகத்துக்கு கொண்டுசேர்க்கும் விதமாக தமிழ் வானொலியை சீனாவிலே நடத்துபவர்களும் என்னைப் பொருத்தவரை தமிழர்கள் தான்.

வேடிக்கை மனிதன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

விக்னேஷ்வரன்,
அப்பாவி முரு,
எப் எம் அப்துல்லா,
சரவணன்,
கண்டும் காணான்,
இராம் CM,
இறைக்கற்பனை இலான் (பேரு நல்லா இருக்கு),
வேடிக்கை மனிதன்

ஆகியோருக்கு நன்றியோ நன்றி !

மணிகண்டன் சொன்னது…

****
சிந்தனை, செயல், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அவரவர்களின் தாய்மொழியே ஊட்டி வளர்க்கிறது
****

ஜாதி மதம்,பெற்றோர், சுற்றி உள்ள சமூகம் எல்லாம் என்ன பண்ணுது ?

அக்ஷ்ரபியாசம்லயும் தமிழ் "அ" தான் முதலில் எழுத பயிற்சி கொடுக்கறாங்க. அட்லீஸ்ட், அதுவாவது செய்யறாங்களேன்னு நினைக்க வேண்டியதா இருக்கு.

நார்மலா விநாயகருக்கு ஒரு சின்ன பூஜை செய்வாங்க. அதுக்குக்பிறகு நெல்லுல எழுத்துக்கள எழுதறதுக்கு குரு (ஆசிரியர்) பயிற்சி கொடுப்பாங்க. பூஜை எல்லாம் இன்னும் சமஸ்க்ருததுல தான இருக்கு. அது தான் ரீசன். இந்த பழக்கம் பிராமண ஜாதிலேந்து வந்து இருக்கலாம். அதுனால சமஸ்க்ருத சொற்கள் பயன்பாடு.

***
தெரியாத பொருளுக்கும், ஆட்களுக்கும் அதிகம் மதிப்பளிப்பதும்,
தெரிந்த பொருளுக்கும், ஆட்களுக்கும் குறைந்த மதிப்பளிக்கும் மனப்பான்மையே.
***

அப்பாவி முரு, நீங்க சொல்லி இருக்கறது நூத்துக்கு நூறு சரி.

Sanjai Gandhi சொன்னது…

//லிங்கு ராங்க்(கு)...//

இதெல்லாம் தமிழா?

மணிகண்டன் சொன்னது…

***
தமிழனுக்கும், தமிழிக்கும்
***

தமிழன் ஆண்பாலா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//$anjaiGandh! said...
லிங்கு ராங்க்(கு)...

இதெல்லாம் தமிழா?
//
அது பெயர் சொல், அதை எப்படி தமிழில் எழுதுவது, ராங்க் என்பதை வேண்டுமானால் வரிசை என்று எழுதலாம், லிங்கு - என்பது அந்த இணையத்தின் பெயர் அதனால் அப்படி குறிப்பிட்டு இருக்கிறேன்

மணிகண்டன் சொன்னது…

***
பசங்கப் படிக்கப் போறது தமிழ்
***

எந்த பசங்க ? யார் சொன்னா நம்ப ஊருல எல்லாரும் தமிழ் படிக்கறாங்கன்னு ?

படிக்க போறது ஆங்கிலம். முதல் எழுத்து தமிழில். அந்த நடைமுறைக்கு பெயர் சமஸ்க்ருதத்தில்.

தமிழின்னு நான் இது வரை கேள்விப்பட்டது இல்ல. அப்படி ஒரு சொல் இருக்கா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழின்னு நான் இது வரை கேள்விப்பட்டது இல்ல. அப்படி ஒரு சொல் இருக்கா ?//

மணி கண்டன் எனக்கு கொல வெறியை ஏற்படுத்துறிங்க. !!!

அது தட்டச்சுப் பிழை, விரைவாக தட்டச்சும் போது i க்கு பதிலாக u விழுந்து, ழு, ழி ஆகி இருக்கிறது, எனது எழுத்துப் பிழைகள் தட்டச்சில் அருகருகே இருக்கும் எழுத்துக்களால் பெரும்பாலும் ஏற்படுகிறது.

சுட்டியதற்கு நன்றி !

மணிகண்டன் சொன்னது…

தமிழன், தமிழி பக்கத்துல பக்கத்துல எழுதி இருந்ததுன்னால குழம்பிட்டேன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
தமிழன், தமிழி பக்கத்துல பக்கத்துல எழுதி இருந்ததுன்னால குழம்பிட்டேன் !
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

/// i க்கு பதிலாக u ////

u க்கு பதிலாக i என்று வாசிக்கவும்

மணிகண்டன் சொன்னது…

தமிழ் தட்டச்சு கத்துக்கணும். நான் இன்னும் கூகிள் Transliterate தான் பயன்படுத்தறேன்.

பழமைபேசி சொன்னது…

உங்க விடை மனநிறைவா இருக்கு...

வடமொழியில இருந்து இனி தமிங்கிலத்துக்கு வாங்க... இஃகிஃகி... வலையுலகமே சிக்கல் ஆயிடும்...

என்னைப் பொறுத்த வரைக்கும் வடமொழி ஆதிக்கத்தைவிட இதுதான பெரிய தலைவலி?!

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
தமிழ் தட்டச்சு கத்துக்கணும். நான் இன்னும் கூகிள் Transliterate தான் பயன்படுத்தறேன்.
//

நான் இ கலப்பை !

கோவி.கண்ணன் சொன்னது…

//பழமைபேசி said...
உங்க விடை மனநிறைவா இருக்கு...

வடமொழியில இருந்து இனி தமிங்கிலத்துக்கு வாங்க... இஃகிஃகி... வலையுலகமே சிக்கல் ஆயிடும்...

என்னைப் பொறுத்த வரைக்கும் வடமொழி ஆதிக்கத்தைவிட இதுதான பெரிய தலைவலி?!
//

மிக்க நன்றி !

மறத்தமிழன் சொன்னது…

கோ.வி.க.,

தினமலர்,ஹிண்டு ராம்,சு.சாமி,துக்ளக் சோ போன்றவர்கள்
எழுதுவதையோ பேசுவதையோ பொருட்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும்.
தமிழை தாய் மொழியாகக்கொண்டும், தமிழ்நாட்டில் பிறந்தும் இருந்தால் மட்டும் யாரையும் த‌மிழ‌ர்க‌ளாக‌ ஏற்றுக்கொள்ள‌ முடியாது...
ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ ஒரு சொட்டு க‌ண்ணீர் கூட‌வ‌டிக்காத‌வ‌ர்க‌ளை த‌மிழ‌ர்க‌ள் என்று எப்ப‌டி ஏற்ப‌து?
தமிழ் உணர்வுள்ளவர்களே தமிழர்கள்.

அன்புட‌ன்
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

நல்லா சொன்னிங்க போங்கோ :)

தீப்பெட்டி சொன்னது…

//தமிழை அழிக்க நினைக்காமல் தமிழை பேசத் தெரிந்து போற்றுபவர்கள் அவர்கள் வேற்று மொழிக் காரர்கள் என்றாலும் அனைவரும் தமிழர்கள் தான்//

நல்ல வரையறை..
இதற்கு தனி பதிவிட்டு இன்னும் அலசினால் மேலும் நன்றாக இருந்திருக்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"தமிழ் பேசுகிறவர்கள் தமிழனா ?"//

ஆமாமா!

அப்ப கருணாநிதி, ஜெயலலிதா, ராஜபக்ஷே, சுப்பி ராமநியசாமி, நடிகர் அஜித், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், வைகோ, ராதாரவி, விஜயகாந்த், கவிஞர் வாலி, வைரமுத்து, விஜய், நயன்தாரா எல்லோரும் தமிழர்கள் தான்!

க.பாலாசி சொன்னது…

ஆதங்கப்படுவதா அனுதாபப்படுவதா என்று தெரியவில்லை. தமிழ் கொள்ளப்படுகிறது, அதற்கு தமிழனும் உடன்படுகிறான் என்பதே உண்மை.

அப்பாவி முரு சொன்னது…

தமிழன் எப்பவுமே தைரியசாலி தான,

தன் எதிரியையும் தானே வளர்ப்பான்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரி தமிழர்களிடையேயும், தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். யார் சொன்னது, தமிழ் பேசுகிறவனெல்லாம் தமிழன் என்று ?//
நல்ல சுட்டிகாட்டு

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\தமிழ் தட்டச்சு கத்துக்கணும். நான் இன்னும் கூகிள் Transliterate தான் பயன்படுத்தறேன்\\

நான் nhm writer பயன்படுத்துகிறேன்.
செளகரியமாக இருக்கிறது.

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\கோ.வி.க.,\\

அட, நல்லாயிருக்கே..,

’திரு.வி.க’ மாதிரி

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\தமிழ் தட்டச்சு கத்துக்கணும். நான் இன்னும் கூகிள் Transliterate தான் பயன்படுத்தறேன்\\

நான் nhm writer பயன்படுத்துகிறேன்.
செளகரியமாக இருக்கிறது.

தமிழ் தட்டச்சு பழகவேண்டியதே இல்லை. தமிழை tamil என அடித்தால்போதும். தமிழ் வார்த்தையை அப்படியே ஆங்கிலத்தில் அடித்தால் போதும்.

ஷாகுல் சொன்னது…

சன் டிவி செய்திகளில் வாக்கியத்தின் முடிவை ஜவ்வு போன்று இழுத்து இப்போது அதுவே நாகரீகமாகிவிட்ட்து.

இவர்கள் தமிழை வளர்க்க வேண்டாம். கெடுக்காமல் இருந்தால் சரி.

ஆமாம் அது என்ன தெனாலிராமன் கதை.

Matra சொன்னது…

Manikandan said..
//..பூஜை எல்லாம் இன்னும் சமஸ்க்ருததுல தான இருக்கு. அது தான் ரீசன். இந்த பழக்கம் பிராமண ஜாதிலேந்து வந்து இருக்கலாம். அதுனால சமஸ்க்ருத சொற்கள் பயன்பாடு.//

Correctly said. It is not that there were Thamizh terms for these and they were deliberatively replaced by Sanskrit ones.

Govi Kannan said..
//தமிழ் வளர்ச்சிக்கும் மேன்னைக்கும் பாடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்கள் தான், கால்டுவெல், ஜியு போப் போன்ற வெள்ளைக்காரர்களும் தமிழர்கள் தான்.//

This is a wrong example. These people learnt Thamizh in order to propagate their religion and culture. Their aim was to eventually bring the world under their religion and culture.

Vedikkai Manithan said..
//தமிழின் சிறப்பு, மேன்மை அறிந்து தஞ்சாவூரில் வந்து தமிழ் பயின்று பட்டம் பெற்று, தங்களது சீனப்பெயர்களை அழகான தமிழ் பெயராக மாற்றிக் கொண்டது மட்டும் அல்லாமல், தமிழ் மொழியின் சிறப்பை உலகத்துக்கு கொண்டுசேர்க்கும் விதமாக தமிழ் வானொலியை சீனாவிலே நடத்துபவர்களும் என்னைப் பொருத்தவரை தமிழர்கள் தான்.//

I second this.

பதி சொன்னது…

தலைப்புப் பற்றி மட்டும்,

நிச்சயம் தமிழ் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்றெ எண்ணுகின்றேன். அப்படியெனில், நாம் ஆங்கிலேயர்கள் (ஆங்கிலம் தெரிந்ததினால்) பிரெஞ்சு மற்றும் இன்னபிற மொழி அடையாளங்களையும் பெறுவோம் அல்லவா??

நமக்கு ஏராளமான மொழிகள் தெரிந்து இருக்கலாம். ஆனால், நாம் எந்த மொழியுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள/இணைத்துக் கொள்ள மனதால் விரும்புகிறோமோ என்பதே முக்கியம்.அதனாலேயே அடையாளம் காணப்படுகின்றோம்...

இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் ஒரு அன்னிய மோகம் என்றே சொல்ல வேண்டும். இது போன்ற பெற்றோர்களுடன் விவாதித்து நொந்து நூடூல்ஸ் ஆனதிலிருந்து இது பொன்ற விவாதங்களை கண்டாலே ஒரே ஓட்டம் !!!!!!! :)

பாஇரா சொன்னது…

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ....

தமிழன் என்றால் தலை மறைவாகவோ, தலை குணிந்தோ தான் இன்று வாழ வேண்டியுள்ளது.....


இதை தமிழ்த் தலைவர்களே தட்டிக் கேட்க முடியாத நிலையில் தான் பதவியில் வேதனையோடு (????????????!!!!!!!!!!!!)
உள்ளனர்......

அட போங்கப்பா போயி ஏதாச்சும் வேல வெட்டி இருந்தா பாருங்க...........

ஓஓஓ கரண்ட் இல்லியா அடடா......

Gokul சொன்னது…

'அக்ஷ்ரபியாசம்' - இதன் அர்த்தம் என்ன என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். இதற்கு இணையான தமிழ் வார்த்தை இல்லை , இதை எழுத்து பயிற்சி என்று சொன்னால், பள்ளியில் சேர்ந்த பிறகு தரும் எழுத்து பயிற்சிக்கு என்ன பெயர் சொல்வது.

சமீபத்தில் படித்த ஒரு செய்தி - slumdog , Jaiho போன்றவை ஆங்கில அகராதியில் சமீபத்தில் சேர்ந்த சொற்கள், இதற்கு காரணம் slumdog millionre படம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை , இதில் Jaiho என்ற சொல் முழுவதுமாக இந்திய பாணியில், இருக்கும் ஒரு சொல், இதை ஆங்கிலத்தில் சேர்த்ததனால் யாரும் புழுங்கவில்லை , Tsunaami என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை , சொல்லப்போனால் Tsu என்ற ஜப்பானிய உச்சரிப்பே ஆங்கிலத்தில் இல்லை (எப்படி ஹ என்ற சொல் தமிழில் இல்லையோ , அதைப்போல) அதனால் tsunami என்ற புதிய வார்த்தையை ஆங்கிலத்தில் புகுத்தினார்கள், இப்படி புதியதை ஏற்று கொள்வதினால் மட்டுமே ஆங்கிலம் வளர்கிறது, ஏற்கனவே தமிழில் இருக்கும் demerits போதாது என்று அதை மேலும் மேலும் சுருக்குகறீர்கள், இப்போது என்ன பிரச்சினை "'அக்ஷ்ரபியாசம்" என்ற வார்த்தை, அதை தமிழ் அகராதியில் சேர்த்துவிட்டால் போயிற்று, அதற்கு அர்த்தம் வேண்டுமானால் 'பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் ஒரு சடங்கு' என்று வைத்து விடுங்கள். இதன் மூலம் தமிழுக்கு என்ன நஷ்டம்? தமிழுக்கு ஒரு வார்த்தை கூடுவதினால் , லாபமே அன்றி நஷ்டம் இல்லை.

தமிழின் பலவீனங்களை பற்றிய எனது கட்டுரை (கட்டுரையில் எழுத்து பிழைகள் அதிகம் இருக்கும், நான் உபயோகிக்கும் editor-இல் , நான் நினைத்ததை எழுத முடியவில்லை)

http://kulambiyagam.blogspot.com/2009/05/katbadhar-tupping.html

கோவி.கண்ணன் சொன்னது…

//'அக்ஷ்ரபியாசம்' - இதன் அர்த்தம் என்ன என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். இதற்கு இணையான தமிழ் வார்த்தை இல்லை , இதை எழுத்து பயிற்சி என்று சொன்னால், பள்ளியில் சேர்ந்த பிறகு தரும் எழுத்து பயிற்சிக்கு என்ன பெயர் சொல்வது.//

திரு கோகுல், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.


நான் 'அர்த்தம்' கூறவில்லை, பொருள் கூறினேன். அர்தத்திற்கு தமிழில் 'பொருள்' என்று பொருள். அர்தத்தைப் 'பொருட்'படுத்துவது தமிழுக்கு நல்லது. 'அக்ஷ்ரபியாசம்' என்பது ஒற்றைச் சொல்கிடையாது அட்சர என்றால் எழுத்து, அப்யாசம் என்றால் பயிற்சி அதை குறிப்பிட்டிருக்கிறேன். நான் எழுதியதை சரியாக புரிந்து கொண்டீர்களா எனத் தெரியவில்லை. தெலுங்குகாரன் தண்ணீரை நீலு என்று சொன்னால் நீலு தமிழில் இல்லை என்று சொல்லி 'நீலு' தமிழ்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது உங்கள் எண்ணம். மிகத் தவறு இல்லாத சொற்களைத் தான் சேர்க்கவேண்டும், இருக்கும் ஒன்றை அழித்துவிட்டு மறந்துவிட்டு சேர்ப்பது மொழிக்கு அழிவைத்தான் விளைவிக்கும்

//சமீபத்தில் படித்த ஒரு செய்தி - slumdog , Jaiho போன்றவை ஆங்கில அகராதியில் சமீபத்தில் சேர்ந்த சொற்கள், இதற்கு காரணம் slumdog millionre படம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை , இதில் Jaiho என்ற சொல் முழுவதுமாக இந்திய பாணியில், இருக்கும் ஒரு சொல், இதை ஆங்கிலத்தில் சேர்த்ததனால் யாரும் புழுங்கவில்லை , Tsunaami என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை , சொல்லப்போனால் Tsu என்ற ஜப்பானிய உச்சரிப்பே ஆங்கிலத்தில் இல்லை (எப்படி ஹ என்ற சொல் தமிழில் இல்லையோ , அதைப்போல) அதனால் tsunami என்ற புதிய வார்த்தையை ஆங்கிலத்தில் புகுத்தினார்கள், இப்படி புதியதை ஏற்று கொள்வதினால் மட்டுமே ஆங்கிலம் வளர்கிறது, ஏற்கனவே தமிழில் இருக்கும் demerits போதாது என்று அதை மேலும் மேலும் சுருக்குகறீர்கள், இப்போது என்ன பிரச்சினை "'அக்ஷ்ரபியாசம்" என்ற வார்த்தை, அதை தமிழ் அகராதியில் சேர்த்துவிட்டால் போயிற்று, அதற்கு அர்த்தம் வேண்டுமானால் 'பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் ஒரு சடங்கு' என்று வைத்து விடுங்கள். இதன் மூலம் தமிழுக்கு என்ன நஷ்டம்? தமிழுக்கு ஒரு வார்த்தை கூடுவதினால் , லாபமே அன்றி நஷ்டம் இல்லை.//

தமிழில் அம்மா என்ற சொல் இருந்தாலும் 'மம்மி அல்லது மாம்' என்று ஆங்கிலத்தில் சொல்வதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது போல் சொல்கிறீர்கள். அதற்கு பொருளாக. 'மம்மி அல்லது மாம்' என்றால் குழந்தையைப் பெற்று வளர்பவர்' என்று வைத்துக் கொள்ளவேண்டும், நட்டம் ஒன்றும் இல்லை என்கிறீர்கள். சரியா ?

சுனாமி என்ற சொல்லுக்கு நம் மொழியில் கடற்கோள் என்ற சொல் இருக்கும் போது நாமும் வெள்ளைக்காரன் ஆங்கிலத்துக்கு கடன்வாங்கி சேர்பது போல் சேர்பதால் என்ன சிறப்பு ?

//"'அக்ஷ்ரபியாசம்" என்ற வார்த்தை, அதை தமிழ் அகராதியில் சேர்த்துவிட்டால் போயிற்று, அதற்கு அர்த்தம் வேண்டுமானால் 'பள்ளியில் சேர்க்கும்போது நடக்கும் ஒரு சடங்கு' என்று வைத்து விடுங்கள். //

"'அக்ஷ்ரபியாசம்" இதன் நேரடிப் பொருளே எழுத்துப் பயிற்சி தான் என்னும் போது எதற்கு விரிவாக பொருள் புரிந்து கொள்ளப்பட வேண்டும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழின் பலவீனங்களை பற்றிய எனது கட்டுரை (கட்டுரையில் எழுத்து பிழைகள் அதிகம் இருக்கும், நான் உபயோகிக்கும் editor-இல் , நான் நினைத்ததை எழுத முடியவில்லை)

http://kulambiyagam.blogspot.com/2009/05/katbadhar-tupping.html//

எழுதியில் (எடிட்டர்) குறைபாடுகள் இருக்கிறது ஆனால் மொழியில் ?

தமிழின் பெரும்குறை (பலவீனம்) என்பது பிறமொழிக்காரர்கள் அவரவர் மொழியைப் பற்றி அறிந்து வைத்திருப்பது போலன்றி, அரைகுறையாக தமிழ்மேம்பாடு என்ற பொருளில் கருத்து சொல்பவர் இருப்பதே. அது குறையல்ல அறியாமை.

தொழில் அல்லது விற்பனைத் தொடர்பில் பயன்படும் இணைப்பு மொழிகளில் பிறமொழிகள் சேர்க்கப்படுவதும், நுழைவதும் அதைப் பயன்படுத்துவதும் உலகவழக்கு. ஆங்கிலம் இயற்கை மொழிகிடையாது, உருவாக்கப்பட்ட மொழி, இன்னும் முழுமையடையாத மொழி எனவே அது பிறமொழிச் சொற்களை கடன்வாங்குவது, ஏற்றுக் கொள்வது இயல்பானது. ஆனால் "தாய் மொழிகளின்" தேவை இனக்குழுக்குள் உரையாடவும் அடிப்படை கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளவும் பயன்படுகிறது, அதற்குமேல் பயன்படுத்தத் தேவையோ அதற்காக சொற்களை கடன்வாங்க வேண்டும் என்கிற நெருக்குதலோ "தாய் மொழி"களுக்கு ஏற்படுவதே கிடையாது. எனவே ஆங்கிலத்தை ஒப்பிட்டு எந்த ஒரு மொழியும் சொற்களை ஏற்றுக் கொள்ளுமானால் அது மற்றொரு ஆங்கிலமாக மாறிவிடும், அதனுடைய இயற்கைத் தன்மையில் இருக்காது. ஒரு மொழியில் புழங்கும் சொற்களில் 50 விழுக்காட்டு சொற்கள் பிறமொழி என்றால் அந்த மொழி புதுப் பெயரை எடுத்துக் கொள்ளும், திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றமும் தன்மையும் அது தான்.

மொழிகளை அந்தந்த இனக்குழுக்கள் சரிவர பராமரிக்காவிடில் மொழிகள் திரிந்து கிளைக்கும் அல்லது அழிந்து போகும் வாய்ப்புள்ளது. வட இந்திய மொழிகளாக வடமொழி பலமொழிகளாக திரிந்தும் மூல மொழியான வடமொழி எந்த ஒரு சிறுநகரத்திலும் பேசப்படும் மொழியாகவோ, புதிய இலக்கியங்கள் ஏற்படுத்திக் கொள்ளும் மொழியாகவோ தற்போதைக்கு இல்லை. அதில் உள்ள பழைய நூல்களுக்காகவும், இறைவழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருப்பதால் அதனை தேவைக்கு என்ற அளவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வளர்ச்சி இன்றி நின்றுபோன மொழிகள் என்ற வகையில் தான் வடமொழியும் இருக்கும், சிலர் வெளிப்படையாகவே இறந்த மொழி என்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. வடமொழிகளுக்கும், சில திராவிட மொழிகளுக்குமான புதிய சொற்களின் வேர்சொற்களுக்காக வடமொழியின் தேவை என்றும் உண்டு, அதனால் வடமொழி தொடர்புள்ள மொழிகள் வடமொழியை வாழவைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

தமிழ்மொழி பிறமொழி சொற்களை ஏற்றுக் கொண்டால் ஆங்கிலம் போல் தழைக்கும் என்பது மொழி அறிவற்றோரின் கற்பனை வாதம். ஏனெனில் இனமொழியாக அடையாளப்படுத்தப்படும் எந்த ஒரு மொழியும் பொது மொழியாவது கடினம். தமிழ் இனமொழி, தமிழர்களுக்கு தாய்மொழி என்ற அளவில் தான் என்றும் இருக்கும், அதனை இனம் தாண்டி பேச வைக்கமுடியும் என்பதற்க்கான தேவை இருந்ததில்லை. தமிழர்கள் உலகம் முழுவதையும் ஆளுகைக்கு கொண்டுவந்தால் தமிழ்மொழி பிற இனத்தாலும் பேசப்படும், ஏற்கப்படும் அல்லது திணிக்கப்படும் என்ற வகைக்குள் வரும், ஆனால் இந்தியாவில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழன் உலகத்தை ஆளுகைக்கு உட்படுத்துவதெல்லாம் நடக்கின்ற செயலா ? நாம் உலகை ஆளவோ, உலகத்தினரை தமிழ் பேசவைக்கவோ முயலவேண்டாம். எனவே வேற்று மொழிச் சொற்களின் ஏற்பு தமிழுக்கு சிறப்பையோ, வள்ர்ச்சியையோ ஏற்படுத்தாது. முடிந்த அளவில் பிறமொழிச் சொற்களை தமிழில் மொழிமாற்றிப் பயன்படுத்தும் அளவுக்கு நம்மிடையே வேர்சொற்கள் (Word Root / Orgin or the Word) நம்மொழியில் உண்டு. வேர் சொல் இல்லாத மொழிகள் தான் பிறமொழிச் சொற்களை கடன் வாங்கும், நமக்கு அதன் தேவை இல்லை. இணையம், வலைப்பக்கம், வலைப்பதிவு என ஆயிரம் ஆயிரம் சொற்களை நம்மால் அமைக்க முடிந்திருக்கிறது, அதை பயன்படுத்து வழக்கில் கொண்டுவர முடிந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்க.

***

தமிழ்மேம்பாட்டிற்கு அறிவுரை அல்லது அறிவுறுத்தல் கூறும் முன், தமிழ் சொற்களையும், இலக்கண வரையறைகளையும் ஓரளவேனும் அறிந்து கொண்டு சொல்வது நல்லது.

தீப்பெட்டி சொன்னது…

//தமிழ்மேம்பாட்டிற்கு அறிவுரை அல்லது அறிவுறுத்தல் கூறும் முன், தமிழ் சொற்களையும், இலக்கண வரையறைகளையும் ஓரளவேனும் அறிந்து கொண்டு சொல்வது நல்லது//

அவசியமான ஒன்று..

Arputharaj Samuel சொன்னது…

தமிழ் பேசுகிறவன் எல்லாருமே தமிழன் தான். ஆனால் இந்தி பேசுகிற எல்லாரும் இந்தியர்கள் அல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்