பல பதிவுகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டம் இட்டவர்களில் பெயருக்கு பதிலாக இரு பிறைகள் தெரியும் '))'said... ன்னு வரும், சில பதிவுகளில் பிறை கூட இல்லாமல் 'said...' மட்டுமே வரும். இதனால் என்ன குறை என்றால் யார் போட்ட பின்னூட்டம் என்று அறிய பின்னூட்டமிடும் பக்கத்திற்கு (Post Comments Page) சென்றால் மட்டுமே அவர்களது பெயரை தெரிந்து கொள்ள முடியும், அதைத் தவிர்க்க சில பதிவர்கள் பின்னூட்டத்துடன் சேர்ந்து 'அன்புடன், நட்புடன், நலமுடன் அல்லது எதோ உடன் சேர்த்து பெயரைப் போடுவார்கள் (நன்றி பரிசல்). மற்றவர்களுடைய பின்னூட்டங்களை பின்னூட்ட பக்கம் வழியாகத்தான் பார்க்க முடியும்.
பதிவுல பொறை தெரிவது யாரோடு குத்தம் ? சாமிப் பேரைச் சொல்லாதிங்க சாமி கண்ணைக் குத்திடும், இதுக்கு காரணம் தமிழ் மணம் தான் என்றே கருதுகிறேன். தமிழ் மணத்தின் கருவிபட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு, தமிழ்மணம் வேண்டு மென்று இதைச் செய்கிறார்களா ? இல்லை,கவனக்குறைவாக இந்த குறையை சரி செய்யாமல் வைத்திருக்கிறார்கள். வரலாறு என்னன்னா ?...முன்பு சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக்கர் தனது வடிவத்தையும், வர்சனையும் மாற்றியது, அப்போது ஒருங்குறியில் (யூனிக் கோட்) பதிவர் பெயர்கள் வைத்திருந்தவர்களை கண்டு கொள்ளாமல் அந்த மாற்றத்தை கூகுள் புதிய வலைப்பக்க வடிவத்தை அமைத்துவிட்டது. அதனால் பழைய பதிவுகளை திறந்தால் பின்னூட்ட மிட்டவரின் பெயருக்கு பதிலாக வசையாடல் சொற்கள்போல் '@3#fslksd%&' என்பதாக தெரியும், அதை ஜாவா ஸ்கிரிப்ட் வழியாக் சரி செய்ய முடியும் என்று பதிவர் ஜெகத் ஸ்கிரிப்ட் அமைத்துத் தந்தார். அதையும் சேர்த்தெ தமிழ்மணம் கருவிப் பட்டையில் இணைத்திருந்தது தமிழ்மணம். எனவே முன்பு தமிழ்மணம் ஸ்கிரிப்டை தமிழ்மணம் வழியாகவே இணைப்பவர்களுக்கு கூகுள் யூனிக் கோட் பிரச்சனை சரியாகியது. ஆனால் விரைவிலேயே கூகுள் யூனிக் கோட் பிரச்சனையை சரி செய்தது, புதிய ப்ளாக்கரில் அந்த பிரச்சனை தற்பொழுது இல்லை. புதிதாக தமிழ்மணத்தில் இணைபவர்களுக்கும் தமிழ்மணம் பதிவு பட்டை ஸ்கிரிப்டுடன் ஜெகத் தின் ஸ்கிரிப்டும் சேர்ந்து வலைப்பக்க கருவிப்பட்டையில் (Blogger Template) இணைந்து இருப்பதால் தான் அந்த '))' பிறை தெரிகிறது.
மிகவும் எளிதாக அதை அகற்ற முடியும்.
Logon to blogger, Select Layout , Edit HTML , then
Click on 'Expand Widget Templates'
(படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.)
Search for the word 'to_unicode'
Select the lines as marked as green square, in above picture,
Replace with below lines (select, copy and paste over your template)
இந்த பகுதியில் பெட்டியில் இருக்கும் ஸ்கிரிப்டை, உங்கள் பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் மேலே பச்சை வண்ணத்தில் குறித்துள்ள ஸ்கிரிப்டுக்கு பதிலாக மாற்றி அமையுங்கள், பிறகு டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு பதிவை திறந்து பார்த்தால் 'பிறைகள்' காணாமல் போய் இருக்கும், அதற்கு பதிலாக பதிவர்களின் பெயர் தெரியும்.
பின்குறிப்பு : டெம்ப்ளேட்டில் கை வைக்கும் முன் தனியாக சேமித்து வைத்துக் கொள்ளவும், ஒரு வேளை சரியாக திருத்தவில்லை என்றால் சொதப்பல் ஆகிவிடும், சேமித்து வைத்திருந்தால் பழையபடி சேர்த்து மீண்டும் சரி செய்ய முயற்சிக்க முடியும்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
29 கருத்துகள்:
நல்ல தகவல்...
பகிர்ந்ததற்கு நன்றி...
good post !!!
நன்றி.
கோவியார், அப்பப்ப கடமையுணர்வை வெளிப்படுத்த தவறுவதில்லை.... சபாசு!
பயனுள்ள பதிவு.said மக்கள் நிறையப் பேர் வலம் வர்றாங்க.பின்னூட்டம் போட்டுட்டு மறுமொழிக்கு மறுபடியும் திரும்ப பார்த்தா நாம போட்ட பின்னூட்டம் நமக்கே தெரியாதபடி கண்ணக் கட்டிவுட்டுறாங்க.
நல்ல மருந்து. மிகுந்த நன்றி. என்னுடைய அழைப்பு பதிவிலும் சரியாகி விட்டது.
அடடே...கோவியார் தொழில் நுட்பத்திலும் கலக்கிறார் :-)
எனக்கு அந்த பிரச்சனை இல்லை
நன்றி உங்க தயவில் சரிசெய்தாச்சு
//வேத்தியன் said...
நல்ல தகவல்...
பகிர்ந்ததற்கு நன்றி...
//
நன்றிக்கு நன்றி ! :)
//நமிதா..! said...
good post !!!
//
ஆகா எம்மாம் பெரிய ஆளுங்க என் போஸ்டைப் படிக்கிறாங்க :)
//பழமைபேசி said...
கோவியார், அப்பப்ப கடமையுணர்வை வெளிப்படுத்த தவறுவதில்லை.... சபாசு!
//
மிக்க நன்றி !
//ராஜ நடராஜன் said...
பயனுள்ள பதிவு.said மக்கள் நிறையப் பேர் வலம் வர்றாங்க.பின்னூட்டம் போட்டுட்டு மறுமொழிக்கு மறுபடியும் திரும்ப பார்த்தா நாம போட்ட பின்னூட்டம் நமக்கே தெரியாதபடி கண்ணக் கட்டிவுட்டுறாங்க.
//
நானும் ரொம்ப நாளாக இதுபற்றி பதிவு எழுதனும் என்று நினைத்தேன். 'said...' டெம்ப்ளேட் கிடைக்காமல் இருந்தது, ஞான சேகரன் சரி செய்து தரச் சொல்லி இருந்தார். அப்படியே பதிவாக போட்டாச்சு. மிக்க நன்றி !
//சுல்தான் said...
நல்ல மருந்து. மிகுந்த நன்றி. என்னுடைய அழைப்பு பதிவிலும் சரியாகி விட்டது.
//
உங்களுக்கும் இது பிரச்சனையாக இருந்ததா ? ஓகே ஓகே !
நன்றிக்கு நன்றி !
//’டொன்’ லீ said...
அடடே...கோவியார் தொழில் நுட்பத்திலும் கலக்கிறார் :-)
//
சிஸ்டம் என்ஜினியர்னு பேரு பெத்த பேரு இருக்கே :)
//பிரியமுடன் பிரபு said...
எனக்கு அந்த பிரச்சனை இல்லை
//
விரைவில் அந்த பிரச்சனை ஏற்பட வாழ்த்துகள் !
:)
//ஆ.ஞானசேகரன் said...
நன்றி உங்க தயவில் சரிசெய்தாச்சு
//
உங்க தயவுல ஒரு போஸ்டும் போட்டாச்சு !
//ஆ.முத்துராமலிங்கம் said...
நன்றி.
//
நன்றி !
நன்றி தல...
http://blog.thamizmanam.com/archives/136
http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html
//புருனோ Bruno said...
http://valaipadhivan.blogspot.com/2008/07/said.html
//
தமிழ்மண்ம கருவி பட்டை இணைத்த பிறகே இந்த பிரச்சனை பதிவகளுக்கு வருகிறது, அந்த unicode ஸ்கிரிப்டை தமிழ்மணம் நீக்கினால் புதிதாக கருவிப் பட்டை இணைக்கும் பதிவர்களுக்கு வராது.
சரி செய்யுமா தமிழ்மணம் ? நம்பிக்கையோடு காத்திருப்போம் !
நல்ல பயனுள்ள இடுகை.
ஆதிமூலகிருஷ்ணண் பதிவில் இந்த பிரசசினை இன்னமும் இருக்கிறது.
பயனுள்ள பதிவு. பரிசல் கூட என்னிடம் ஏன் பெயர் கீழே போடுகிறீர்கள் என்று கேட்டிருந்தார். பாருங்கள் இப்போ நான் போடமாட்டேன்.
அனுஜ ....சாரி
ரொம்ப நாள் பிரச்சினை, உங்களோடது மிகத் தெளிவான விளக்கமாக இருக்கிறது. சரியாகிறதா என என்று முயற்சிக்கிறேன்.. சரியாவலைன்னா தெரியும் சேதி.!
பயனுள்ள பதிவு.
ஆதி,
சரி ஆகலைனா உங்க சேதிதான் ஊருக்கே தெரியும். :)
அன்புடன்
மாசற்ற கொடி
தல.. சரி பண்ணிட்டேன். இப்போ பெயர் தெரியுது, ஆனா பாருங்க அவங்க மேல கிளிக் பண்ணினா திரும்பவும் என் பிளாகுக்கே போகுது. (நல்லவேளையாக பின்னூட்டப் பக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறது. முன்னைக்கு இது பெட்டர்ங்கிறதால நன்றி. எதுக்கும் இதற்கும் தீர்வு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்)
பயனுள்ள
பதிவிட்ட கோவியாருக்கும் நன்றி!
தீராதெ பொறையெல்லாம்
தீர்த்துவைப்பான் கோவி’ந்தோ...
:)
கருத்துரையிடுக