சில / பல சொற்களுக்கான சமூகப் புரிந்துணர்வின் மூலமாக பொருள் சொல்வது மிகவும் சிக்கலான ஒன்று. எடுத்துக்காட்டு 'அழகு' என்றச் சொல். நாம் ஒன்றை அழகு என்று நினைத்தால் ஏனையோருக்கும் அதுவே அழகு என்று சொல்வது தவறானது ஏனெனில் எது அழகு என்பதை முடிவு செய்வது அவரவர் மனம் தான். பெரும்பாலும் திரைப்பட நடிகையர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்தாலும் அவரவர்களுக்கு சில நடிகைகளைப் பிடிக்கும், அதற்கு தனிப்பட்ட காரணங்களாக அவர்கள் எண்ணங்களுக்கு ஏற்றவண்ணம் அவர்களின் உடல் அமைப்புகள் இருப்பதாகவும், அவற்றில் இருக்கும் கவர்ச்சி (பால் உணர்வு தூண்டுதல்களைப் பற்றிச் சொல்லவில்லை) அவர்களின் மீதான ஈர்ப்பு.
ஆக அழகு என்பதற்கான அளவு கோல் அவரவர் மனங்களே, அழகு என்பது மனம் தொடர்புடையது என்று சொல்வது உண்மையிலேயே சரியான கூற்றுதானா ?
மனித மனம் தவிர்த்துப் பார்த்தால், அழகும், அழகு உணர்வும் இயற்கையில் இயைந்து, இணைந்திருக்கிறது என்பதே உண்மை. வண்ணங்களையும், பல்வேறு மணங்களையும் பூக்களில் பார்க்கும் போது அவை சரியான கூற்று என்றே உணர்த்துகின்றன. பூக்களுக்கு வண்ணங்களாலும், மணத்தினாலும் நேரடி பலன் இல்லை என்றாலும், அவற்றின் இனப்பெருக்கத்திற்கு அவை மறைமுகமாக உதவுகின்றன. வண்ணமும் மணமும் அதை நாடி வரும் போது அங்கே சுவையான தேனும் இல்லை என்றால் எந்தப் பூக்களையும் வண்டுகள் நாடாது. வண்ணமும் மணமும் அதைப் பெற்றிருக்கும் மென்மையான தோற்றமும் அழகு என்பதை எடுத்துரைக்கும் விதமாக பூக்கள் எங்கும் மலர்ந்திருக்கின்றன.
குறிப்பாக ஆண் இனம் பறவைகள், விலங்குகள் இவைகள் பெண் இனங்களைக் காட்டிலும் அழகுத்தன்மையுடன் இருப்பதால் அதனை வெளிப்படுத்தி பெண் இனங்களுடன் கூடி வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றனர். பெண் இனம் அழகின் மீது கவனம் செலுத்துகின்றன, ஈர்க்கப்படுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை:) (வளர்ந்த நாகரீக மனித சமூகத்தில் ஆண்கள் ஆணாக இல்லாததால், பெண்கள் ஈர்ப்பு திசை மாறி அழகுசாதனங்களின் மீது ஈடுபாடு கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறார்கள் போலும், ஆனால் அப்படிச் சொல்வதும் சிக்கலானது, ஏனென்றால் மனித அழகு உணர்வுகளை முடிவு செய்வதில் பலவித சமூக காரணிகளும் பங்கு வகுக்கின்றனர்) , மிகச் சில விலங்குகளில் வீரம் அழகாக ஏற்க்கபபடுகிறது, எடுத்துக்காட்டு சிங்கம்.
பல ஆண் சிங்கங்கள் பெண் சிங்கத்தை நெருங்க முற்படும் போது ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொண்டு, வெற்றிப் பெற்றதே பெண் சிங்கத்தை அடைகிறது. நீங்களாக அடித்துக் கொண்டு முடிவு செய்யுங்க, அதுவரை நான் காத்திருக்கின்றேன், என்று சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கும் பெண் சிங்கம். இருந்தாலும் ஆண் சிங்கத்திற்கும் இருக்கும் பிடறியும், வலிமையான பார்வையும் பெண் சிங்கத்திற்கு கவர்சியானவை தான்.
இவையெல்லாம் ஒருவகையான இயற்கையான கவர்ச்சி தான் என்றாலும், என்னை வியப்படைய செய்த தகவல் ஒன்று, பெண் பறவையைக் கூடுவதற்கு விருப்பம் தெரிவிக்க ஆண் பறவை செயற்கையான சில அலங்காரங்களை செய்கிறது என்ற தகவல் , பவர்பேர்ட் (BowerBird) என்கிற அந்த பறவை இனத்தில் கவர்ச்சி மற்றும் ஈர்ப்புக்கு ஆண் பறவைகள் செயற்கைக் கவர்ச்சி அலங்காரங்களை கூட்டிற்கு (Nest) முன்பு உருவாக்குகின்றன. என்பது அவற்றின் இயற்கைத் தன்மை. This complex mating behaviour, with highly valued types and colors of decorations that, has led some researchers[who?] to regard the bowerbirds as among the most behaviorally complex species of bird. It also provides some of the most compelling evidence that the extended phenotype of a species can play a role in sexual selection and indeed act as a powerful mechanism to shape its evolution, as seems to be the case for humans.
அசை படம் :
அந்த இனப்பிரிவின் உட்பிரிவில் சில பறவைகள் பூக்களைக் கூட செயற்கை அலங்காரங்களுக்கு பயன்படுத்துன்றன மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்
அழகுணர்வில் மனித மனத்தின் ஒப்பீடு தவிர்த்துப் பார்த்தாலும் அழகுணர்வில் செயற்கைத் தன்மை இருக்கலாம் என்பதும் இயற்கைதான். பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்துக் கொள்கிறார்கள், அது செயற்கையான அழகு, அது தேவையற்றது என்பவர்கள், இயற்கையில் கூட செயற்கைத் தன்மையில் இடமிருக்கிறது என்பதை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது. :)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
38 கருத்துகள்:
:-)
//
அழகு என்பது மனம் தொடர்புடையது என்று சொல்வது உண்மையிலேயே சரியான கூற்றுதானா ?
//
உண்மை தாங்க.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லப் படுவதும் அதனால்தான்
இன்ரஸ்டிங் இல்ல...
ம்ம்... மனித நிலையில் நீங்க சொன்ன அந்த "அழகின்" அளவீடு வேண்டுமானால் பார்ப்பவரின் மனநிலையின் பொருட்டு அமைகிறது எனலாம். எனக்கு ஐஸ்-சின் அழகை விட கஜோலின் அழகு என்னவோ செய்யும் என் உள்ளே. ;-)
மனித உலகில் மேலும் பலபல காரணிகள் அழகை கூட்டுகின்றன குறைக்கின்றன (பணம், புகழ், அந்தஸ்து... இத்தியாதி).
ஆனால், விலங்குகளின் உலகில் அப்படியே எதிர் மாறாக உள்ளது வலிமையானது, ஏதோ ஒரு வகையில் புற அழகோ, அல்லது இரண்டு ஆண் விலங்குகள் மோதிக் கொண்டு எது தன் இருப்பை வலிமையுள்ளதாக ஆக்கிக் காமிக்கிறதோ இறுதியில் அதுவே பெண்ணை அடைய லாயாக்கு இருப்பதாக மரபணு தேர்வில் பெண் முடிவு செய்கிறது ;-). அங்கு பெண்ணுக்கு கடைசி விரல் அசைவு உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெரிய விலங்குகளில் கிட்டத்தட்ட எல்லா வகைகளிலும் இது நடைமுறை.
பறவைகளில் நிறங்கள் பெரும்பங்கும், குரல் வலமும் முக்கிய பங்காற்றுகின்றன இதற்கு ஆங்கிலத்தில் Courtship display என்றே பெயர் உண்டு. இனப்பெருக்க காலங்களில் இதுக்கெனவே அவைகளின் plumage(மேல் இறகுகள்) நிறங்களை பெறுவதுண்டு.
நிறைய இருக்குங்க... தனிப்பதிவா போடுறேன் பிரிதொரு சமயம்.
ஆனா, விலங்குகள் உலகிலிருந்து நமது சமூகம் நிறைய கத்துக்க இருக்கு... அதிலும் இந்த இனப்பெருக்கம் சார்ந்து பெண் விலங்குகளில் உள்ள சாய்ஸ் நமக்கு வாய்த்தது, நிறைய பேருக்கு நம்மூர்ல திருமணமே ஆகாது :-)))
//உண்மை தாங்க.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்லப் படுவதும் அதனால்தான்//
காக்கையும் அழகுதான், கருமை நிறத்தை குறைத்துச் சொல்லுவோர் காக்கையை அதற்கு பலி ஆக்கி பழமொழி ஆக்கி இருக்கிறார்கள். நாமும் தவறாக பயன்படுத்துகிறோம்!
// ’டொன்’ லீ said...
:-)
//
சிப்பான போட்ட்டுட்டு எச்கேப் ஆனா என்ன பொருள் ? வன்மையாக கண்டிக்கிறேன்
தெகா அருமையான தகவல்கள். நீங்கள் சிறப்பாக எழுதுவீர்கள், சொன்னபடி ஒரு கட்டுரையை படங்களுடன் இயற்கை நேசியில் போடுங்க.
// பூக்களுக்கு வண்ணங்களாலும், மணத்தினாலும் நேரடி பலன் இல்லை என்றாலும்,//
அந்த வண்ண நிறங்களை அவைகள் பெற்றிருப்பதே தன்னினத்தை பெருக்கிக் கொள்ளத்தானே. அவைகளின் கவர்ச்சிமிக்க வண்ணங்களையும், மணத்தையும் கொண்டு பிற பூச்சி, விலங்கினங்களை கவர்கிறது தனது மகரந்த சேர்க்கைக்கும், விதைகள் பரப்பிற்கும்.
எனவே, "நேரடி" தொடர்பு இருக்கிறது அவைகளின் இந்த புற பண்புகளால் ...
படங்களும், விளக்கங்களும் அருமை.
இதுவே காரணம் ஏன் பழங்கள் நல்ல நறுமணத்தையும், பல வண்ண நிறத்தில் இருக்கிறது என்பதற்கும்...
திரும்பத் திரும்ப வருவேனோ ;-)
// இயற்கை நேசி|Oruni said...
அந்த வண்ண நிறங்களை அவைகள் பெற்றிருப்பதே தன்னினத்தை பெருக்கிக் கொள்ளத்தானே. அவைகளின் கவர்ச்சிமிக்க வண்ணங்களையும், மணத்தையும் கொண்டு பிற பூச்சி, விலங்கினங்களை கவர்கிறது தனது மகரந்த சேர்க்கைக்கும், விதைகள் பரப்பிற்கும்.
எனவே, "நேரடி" தொடர்பு இருக்கிறது அவைகளின் இந்த புற பண்புகளால் ...
//
:) நேரடி என்றால் மணமும் வண்ணமும் செடிக்கு பலனாக அமையாது, அதை மகரந்த சேர்க்கைக்காக விரிக்கப்படும் மாய வலை என்ற பொருளில் தான் நான் சொன்னேன்.
// எது அழகு என்பதை முடிவு செய்வது அவரவர் மனம் தான்//
அது மட்டுமல்ல, காலத்திற்குக் காலமும் இது மாறுகின்றது.
அக்காலப் பெண்களுக்கு வீர விளையாட்டில் வென்று வருபவன் அழகு, இக்காலத்திலே தனது வீண் செலவுகளைப் பொறுப்பெடுப்பவனும், ஸ்டைலாக பைக் ஓட்டுபவனும் கைநிறையச் சம்பாதிப்பவனுமே அழகாகத் தெரிகின்றார்கள்.
மற்ற பதிவுகளை படித்து பின்னூட்டமிடாமல் சென்றாலும் இதற்கு பின்னூட்டமிடாமல் சென்றால் மனசாட்சி குத்தும் கோவி.ஜி.
இந்தக் கட்டுரையும் இதற்குப் பின்னால் உள்ள உங்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது!
அழகே அழகு தேவதை>....
அழகை பற்றிய அழகான பதிவு ..
அருமை...
அருமையான பதிவு அழகைப் பற்றி!
//கவர்ச்சிமிக்க வண்ணங்களையும், மணத்தையும் கொண்டு பிற பூச்சி, விலங்கினங்களை கவர்கிறது தனது மகரந்த சேர்க்கைக்கும், விதைகள் பரப்பிற்கும்...//
இதிலும் ஒரு பிரச்சனை. நமக்கிருக்கும் colour vision பூச்சிகளுக்கு இல்லை. நாம் காணும் அழகும் வண்ணமும், நமக்குக் கிடைக்கும் வாசனையும் பூச்சிகளுக்குக் கிடைப்பதில்லை.
அவுக உலகமே வேற... !
Really interesting
அருமையான பகிர்வுண்ணே...
அழகென்பது அவரவர் பார்வையில் என அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
உங்கள் வலை தளத்திற்கு நான் வருவது இதுவே முதல் முறை.இனி தொடர்ந்து வருவேன்..
சரியா..
அழகு என்பது அவரவர் ரசனை பொறுத்தது.
வரையறுக்க முடியுமா??
தாங்கள் குறிப்பிட்ட பறவை பற்றிய
விபரணப் படம் பார்த்து ஆச்சரியப்
பட்டுள்ளேன்.
//ஜோசப் பால்ராஜ் said...
படங்களும், விளக்கங்களும் அருமை.
//
யூசுப் ஐயங்கார் நன்றி !
//Subankan said...
// எது அழகு என்பதை முடிவு செய்வது அவரவர் மனம் தான்//
அது மட்டுமல்ல, காலத்திற்குக் காலமும் இது மாறுகின்றது.
அக்காலப் பெண்களுக்கு வீர விளையாட்டில் வென்று வருபவன் அழகு, இக்காலத்திலே தனது வீண் செலவுகளைப் பொறுப்பெடுப்பவனும், ஸ்டைலாக பைக் ஓட்டுபவனும் கைநிறையச் சம்பாதிப்பவனுமே அழகாகத் தெரிகின்றார்கள்.
//
:) ஆண்களின் வீரம் பேச்சளவில் என்றாகிய போது குறைந்த அளவாக பொருள் ஈட்டுவதிலாவது முனைப்புடன் இருக்கிறானா என்று பெண்கள் அறிய முனைவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.
//பரிசல்காரன் said...
மற்ற பதிவுகளை படித்து பின்னூட்டமிடாமல் சென்றாலும் இதற்கு பின்னூட்டமிடாமல் சென்றால் மனசாட்சி குத்தும் கோவி.ஜி.
இந்தக் கட்டுரையும் இதற்குப் பின்னால் உள்ள உங்கள் உழைப்பும் பிரமிக்க வைக்கிறது!
//
கிருஷ்ணா,
இந்த பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் அதுவும் கிட்டதட்ட இதே பின்னூட்டம் எதிர்பார்த்தேன். நீங்கள் ஏமாற்றவில்லை. நன்றி !
அட மெய்யாலுமே ! நம்புங்க !
//ஆ.ஞானசேகரன் said...
அழகே அழகு தேவதை>....
அழகை பற்றிய அழகான பதிவு ..
அருமை...
//
உங்களுக்கு ஐஸ்வரியா பிடிக்கும் என்பது தெரியும், அந்தப் படம் உங்களை நினைத்து போட்டது தான் !!!
:)
//இயற்கை நேசி|Oruni said...
இதுவே காரணம் ஏன் பழங்கள் நல்ல நறுமணத்தையும், பல வண்ண நிறத்தில் இருக்கிறது என்பதற்கும்...
திரும்பத் திரும்ப வருவேனோ ;-)
//
இதுல ஒண்ணைக் கவனிச்சிங்களா ? பலனை முதலில் கொடுத்துவிட்டே மறுபலன்(பிரதிபலன்) அவைகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் மனிதன் தான் இதைச் செஞ்சா நமக்கு லாபம் என்று அறிந்தால் மட்டுமே விருந்து கொடுக்க ஆயத்தமாகுகிறார்கள்.
:)
// ஆகாய நதி said...
அருமையான பதிவு அழகைப் பற்றி!
//
ஆகாய நதி, பாராட்டுக்கு மிக்க நன்றி !
//தருமி said...
இதிலும் ஒரு பிரச்சனை. நமக்கிருக்கும் colour vision பூச்சிகளுக்கு இல்லை. நாம் காணும் அழகும் வண்ணமும், நமக்குக் கிடைக்கும் வாசனையும் பூச்சிகளுக்குக் கிடைப்பதில்லை.
அவுக உலகமே வேற... !
//
தருமி ஐயா,
பூச்சிகளுக்கு மோப்பத் திறன் பற்றி மிகுதியாகத் தெரியாது, ஆனால் விலங்குகளுக்கு மோப்பத் திறன் நம்மை விட மிகுதி.
//சுல்தான் said...
Really interesting
//
நன்றி ஐயா
//Peer said...
அருமையான பகிர்வுண்ணே...
//
நன்றி ஐயா !
// ஜகதீஸ்வரன் said...
அழகென்பது அவரவர் பார்வையில் என அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி ஜகதீஸ்வரன்.
//உங்கள் வலை தளத்திற்கு நான் வருவது இதுவே முதல் முறை.இனி தொடர்ந்து வருவேன்..
சரியா..
//
எல்லோருக்கும் பிடித்த வண்ணம் எழுத வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. பெரும்பாலும் நான் சமூகம் குறித்து எழுதுவதில் சில பலருக்கு பிடிக்காமலும் போகும். பதிவுகள் வெறும் எண்ணப் பகிர்வுகள் தான் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறேன். தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி !
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அழகு என்பது அவரவர் ரசனை பொறுத்தது.
வரையறுக்க முடியுமா??//
யோகன் ஐயா,
அழகை வரையரை செய்வது கடினம் தான். இருந்தாலும் இயற்கையில் இருக்கும் வண்ணங்கள், மென்மை, மனம் இவையெல்லாம் சில வரையரைகள் இருப்பதாகத் தானே சொல்லி பூக்களாகவும், விலங்குகளின் மேல் தோல்களில் வரி / நிறம் ஆகியவற்றில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி ரசிக்கமும் வண்ணம் அமைத்திருக்கின்றன என்பதாக நினைக்கிறேன்
//தாங்கள் குறிப்பிட்ட பறவை பற்றிய
விபரணப் படம் பார்த்து ஆச்சரியப்
பட்டுள்ளேன்.
//
அசைப்படம் தேடி எடுத்து நானும் இணைக்க முயற்சிக்கிறேன்
இப்போதெல்லாம் இது புரியாமல் பெண்களின் அழகில் மயங்குவது புதிராக இருக்கிறது!
நல்ல கட்டுரை கோவியாரே!
தட்டச்சில் இன்னும் சற்று கவனம் செலுத்தவும்!
:)))))
நல்ல பதிவு!!
உயிரினத்தின் பெருக்கத்துக்காக அவை நிறைய பிரயத்தனப் படுகின்றன!!
ஆச்சரியம்தான்!!
//நேரடி என்றால் மணமும் வண்ணமும் செடிக்கு பலனாக அமையாது, அதை மகரந்த சேர்க்கைக்காக விரிக்கப்படும் மாய வலை என்ற பொருளில் தான் நான் சொன்னேன்.//
மாய வலை அல்ல, நேரடியான வலைதான். ஒருவேளை செடிக்கே
நேரடியாக ஏதேனும் உபயோகமானால் அதுதான் மாயை.
அழகு பற்றிய அழகான பதிவு.
ஒருவரின் அழகு என்பது அவர் கொண்டிருக்கும் திறமையின் அடிப்படையிலும் இருக்கும். உதாரணமாக, அப்துல்கலாம் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானி என்பதை மறந்துவிட்டு, சாதாரண மனிதனாக அவரின் முகத்தைப் பார்க்கும்போது, அவரை யாரும் அழகாக இருக்கிறார் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் அவரின் திறமைகள் தெரிந்தபின், அப்துல்கலாமா.. என்ன லுக்குயா அவருக்கு, இந்த வயசிலும் மனுசன் எவ்வளவு ஆக்டிவா இருக்குறாரு என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், அவரின் உருவப்படத்தை நம் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துக்கொள்கிறோம் இல்லையா. என்னைப் பொறுத்தமட்டில், ஒருவனின் திறமைகள்/சாதனைகள் தான் அவனுக்கு அழகைத் தேடித்தருகின்றன.
// " உழவன் " " Uzhavan " said...
அழகு பற்றிய அழகான பதிவு.
ஒருவரின் அழகு என்பது அவர் கொண்டிருக்கும் திறமையின் அடிப்படையிலும் இருக்கும். உதாரணமாக, அப்துல்கலாம் ஒரு மிகச் சிறந்த விஞ்ஞானி என்பதை மறந்துவிட்டு, சாதாரண மனிதனாக அவரின் முகத்தைப் பார்க்கும்போது, அவரை யாரும் அழகாக இருக்கிறார் என்று சொல்லமாட்டார்கள். ஆனால் அவரின் திறமைகள் தெரிந்தபின், அப்துல்கலாமா.. என்ன லுக்குயா அவருக்கு, இந்த வயசிலும் மனுசன் எவ்வளவு ஆக்டிவா இருக்குறாரு என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், அவரின் உருவப்படத்தை நம் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துக்கொள்கிறோம் இல்லையா. என்னைப் பொறுத்தமட்டில், ஒருவனின் திறமைகள்/சாதனைகள் தான் அவனுக்கு அழகைத் தேடித்தருகின்றன.
//
பின்னூட்டக் கருத்துக்கு நன்றி உழவன்.
அன்பானவர்களின் முகம் எப்போதும் அழகாகவே தெரியும்.
//VSK said...
இப்போதெல்லாம் இது புரியாமல் பெண்களின் அழகில் மயங்குவது புதிராக இருக்கிறது!
நல்ல கட்டுரை கோவியாரே!
தட்டச்சில் இன்னும் சற்று கவனம் செலுத்தவும்!
:)))))
//
வீஎஸ்கே,
அத்தி பூத்தாற்போல் பின்னூட்டம் வந்திருக்கிறது நன்றி !
//அறிவே தெய்வம் said...
//நேரடி என்றால் மணமும் வண்ணமும் செடிக்கு பலனாக அமையாது, அதை மகரந்த சேர்க்கைக்காக விரிக்கப்படும் மாய வலை என்ற பொருளில் தான் நான் சொன்னேன்.//
மாய வலை அல்ல, நேரடியான வலைதான். ஒருவேளை செடிக்கே
நேரடியாக ஏதேனும் உபயோகமானால் அதுதான் மாயை.
//
:)
செடிக்கு மனமோ, குணமோ இல்லை, அதன் தன்மையில் இருக்கும் இனப்பெருக்க உத்திக்கு பயன்படுவர்களுக்கு கொடுக்கப்ப காத்திருப்பவைதான், வண்ணம், மணம் தேன் ஆகியவை. அசையக் கூடிய உயிரனம் மட்டுமே நன்மை தீமையை ஆராய்ந்து அதன் படி நடந்து கொள்ளும்.
கருத்துரையிடுக