அண்மையில் சிங்கை நூலகத்தில் சோ இராமஸ்வாமி எழுதிய ஹிந்து மஹா சமுத்திரம் என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது. ஹிந்துமதம் பற்றி எதேனும் புதிய செய்திகளைச் சொல்லுவாரோ என்று எதிர்பார்ப்பில் படித்த எனக்கு ஏமாற்றமே. வேதகாலத்தில் தொடங்கி இன்று வரை நடக்கும் வருணாசிரம (அ)தருமத்தை தேவைப்படும் இடங்களில் தாங்கிப் பிடித்து இருக்கிறார். இதற்கு ஆதரவாக அதிலிருக்கும் ஸ்லோகங்களுக்கு இவரே கண்டிபிடித்த கற்பனைகளை சேர்த்து மொழுகி இருக்கிறார். ஒரு பகுதியில் வேதகாலத்தில் விலங்குகள் எதையும் பலி இடவில்லை, ஸ்லோகங்களில் உள்ள பலியிட்டதாக சொல்லி இருக்கும் பெயர் சொற்களான ஆஜ என்றால் ஆடு இல்லை, கோ என்றால் பசு இல்லை, அஸ்வம் என்றால் குதிரை இல்லை என்கிறார். அவை பலியிடப் பட்டதாகச் சொல்வது ஒரு குறியீடுதான் என்கிறார். இன்னொரு பக்கத்தில் ஒருவன் தனக்கு விருப்பமானவற்றை இறைவனுக்குக் கொடுப்பான் எனவே மிருகங்களை உண்பவர்கள் மிருகங்களை பலி இட்டத்தில் தவறு ஒன்று இருப்பதாக தெரியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக எழுதி இருக்கிறார்.
ஏகத்துவம் அதாவது பிற மதங்களில் இருக்கும் ஒற்றை இறை நம்பிக்கையே இந்து மதத்தில் இருப்பதாகவும் அதைத்தான் அத்வைதம் வழியுறுத்துவதாகவும், ஆதிஷங்கரர் வழியுறுத்திய அத்வைதம் ஒற்றை இறைத்தன்மையைப் போற்றுவதாகவும் கூறுகிறார். எனக்குத் தெரிந்த்து அத்வைதம் ஒற்றைக் கடவுள் கொள்கையெல்லாம் கொண்டிருக்கவில்லை, நீங்களும் நானும், பாம்பும், பல்லியும், மலமும், மூத்திரமும் ஒன்றே என்கிறது. இதுதான் அந்த ஒற்றைத் தன்மை, இது இறைவன் என்கிற தனித்தன்மையை போற்றுவதாக எப்படிக் கொள்வது ? ஆதிசங்கரின் அத்வைதம் என்பது பெளத்தக் கொள்கையில் சற்று ஒட்டுப் போட்டு புதிய கொள்கைகளாக காட்ட முயன்றது மட்டுமே, புத்தர் கடவுள் எதையும் காட்டவில்லை, அவர் சொன்னது அனைத்தும் சூனியமே சூனியத்தைத் தவிர எதுவுமே இல்லை, சூனியத்தில் சூனியமாக ஒடுங்குவதே பரிநிர்வாண நிலை என்றார், அதன் பிறகு பிறப்புக் கிடையாது என்றார். ஆதிசங்கரர் அதைச் சற்று மாற்றி அனைத்தும் பிரம்மமே, பிரம்மத்தில் ஒடுங்குவதே லட்சியம் என்றும் அதன் பிறகு பிறவி கிடையாது என்றார். இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் வெற்று குடுவை ஒன்றில் எதுவும் இல்லை என்பது புத்த தத்துவும், அதில் காற்று இருக்கிறது என்பது ஆதிசங்கரரின் தத்துவம் அவ்வளவுதான் வேறுபாடு.
உலகத்தின் ஆதிமதம் ஹிந்து என்பதை அழுத்தம் கொடுத்து சொல்ல முயல்கிறார் சோ. ஆதிமதம் என்று எதுவும் கிடையாது, அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்ட மதம் என்று தான் சொல்ல முடியும். ஆதிமதம் என்றால் பிற மதத்திற்கு இடையில் இருக்கும் தொடர்பைச் சொல்ல வேண்டும். சோ இராமஸ்வாமியின் நூலில் அதுபோல் எதுவும் சொல்லப்படவில்லை. எனக்குத் தெரிந்து பெளத்தம், சமணம் மதங்களுக்கு மட்டுமே ஹிந்து மதத்துடன் ஓரளவு தொடர்பு இருக்கிறது மற்றபடி உலக மதங்கள் பலவற்றுடனான ஹிந்துமதத் தொடர்பு என்பது தேடினாலும் கிடைக்காது.
உருவ வழிபாடு ஆகியவை கிழானவை என்று அவர் கூறினாலும் வைதீகர்களின் பிழைப்பைப் கெடுக்கக் கூடாது அதே சமயம் ஆதிசங்கரரின் அத்வைதத்தையும் போற்ற வேண்டும் என்கிற இரட்டை சிந்தனையில் உருவ வழிபாடு கிழானது தான் என்றாலும் நம்மைப் போல் சாதாரணவர்களுக்கு அது தான் எளியவழி ஞானிகளுக்குத் தான் அத்வைதம் சிறந்த வழி, அதுவே நேரான வழியும் என்கிறார். சோ இராமஸ்வாமியின் 'ஹிந்து மஹா சமுத்திரத்தில்' நாட்டார் தெய்வ வழிபாடு, அதாவது மதுரை வீரன், முனி, இருளன், ஐயனார், மாரியம்மன் குறித்து எந்த ஒரு பத்தியையும் பார்க்க முடியவில்லை. அதையெல்லாம் ஹிந்து மதத்தில் இருந்து நீக்கிவிட்டாரா என்று தெரியவில்லை.
நாத்திகம் என்பது ஈரோட்டு இராமஸ்வாமியால் முன்னெடுக்கப்பட்டது அல்ல, வேதகாலத்திலேயே சார்வாகம் என்ற பெயரில் ஹிந்து மதத்தில் ஓர் அங்கமாக நாத்திகம் இருந்தது தான் என்கிறார், பிறகு ஏன் நாத்திகம் பற்றி அங்கங்கே தூற்றுகிறார் என்றும் தெரியவில்லை. இவர் சொல்வது என்ன வென்றால் நாத்திகம் உயர்ந்தது என்றாலும் ஈரோட்டு இராமஸ்வாமிக்கு அந்த பெருமை கூடாது என்பதே. ஸோம பானம் மதுபானம் இல்லை ஆனால் சுரா பானம் தான் மது பானம் என்கிறார். சுரர் என்றால் தேவர்கள். அவர்கள் குடிக்கும் பானம் மதுபானம் என்பதை மறைமுகமாக தயக்கத்துடன் சொல்கிறார் என்பதாக எடுத்துக் கொண்டேன்.
ஹிந்து மதம் சிறந்த மதம் அதை வெளிநாட்டினர் ஆய்ந்து ஆய்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவிட்டார்கள் என்கிறார். தீண்டாமை பாவச் செயல் என்று ஒரு வரியைக் கூட எழுதி இருக்கவில்லை அவர். பிராமணன் என்பது நிலை, அது சாதித் தொடர்புடையது கிடையாது, சூத்திரன் பிராமணன் நிலைக்குத் உயர்வதும், பிரமணன் சூத்திர நிலைக்கு உயர்வதும் அவரவர் செயல்களால் தீர்மாணிக்கப்படுவதே அன்றி அவை சாதி குறித்த அடையாளம் இல்லை என்கிறார். சரி தான். ஆனால் இன்றைய பார்பனர்களின் செயலை வைத்துப் பார்த்தால் ஒருவரும் தன்னை பிராமணர் என்று கூற தகுதியற்றவர் என்பதை சோ மறந்தும் கூட அந்த புத்தகத்தில் பதிக்கவில்லை. இன்றைய பார்பனர்களிலும் கருப்பு நிறத்தினர் இருப்பதற்கு அன்றை சூத்திரனில் சிலர் பிரமணராக உயர்ந்து அவர்களுடைய வாரிசுகளாக தன்னை பிராமணர்களாகக் கூறிக் கொள்ளும் பார்பனர்களும் இருக்கிறார்கள் என்றாவது சொல்லி இருக்கலாம். அதாவது பிராமணர்களில் பார்பனர் உண்டு, பார்பனர் அனைவருமே பிராமணர் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.
மொத்தத்தில் சோ இராமஸ்வாமியின் இந்த நூள் ஒற்றைத் தன்மை உள்ள இறைவழிபாடு ஹிந்துமதத்தில் இருக்கிறது என்பதை நிறுவும் ஒரு முயற்சியாகப் பார்த்தேன். நல்லது தான் கடைசியில் ஒரே ஒரு வரி, ஈஸ்வரன், அல்லா ஜெஹோவை ஆகிய பெயர்களை ஹிந்து ஒரே இறைவனாகத்தான் பார்க்கிறான் என்று சொல்லி இருக்கலாம், சோ இராமஸ்வாமி சார்ந்திருக்கும் இயக்கம், அவரது பார்பனிய ஆதரவு அதைச் சொல்லுமா ? கண்டிப்பாக சொல்ல முடியாது. இந்த நூல் ஹிந்து மதம் புனிதமானது என்ற அளவில் ஹிந்து ஆதரவாளர்களுக்கு அளித்தால் அவர்களை அதைப் படித்துவிட்டு, ஹிந்து மதத்தில் இருக்கும் அபத்தங்களை தெய்வீகம் என்று ஒருவேளை போற்றினாலும் போற்றலாம். மற்றபடி ஒரு நாத்திகன் படித்தால் வரிக்கு வரி கண்டனம் தெரிவிக்கும் படி பழமைவாத சிந்தனைகள் நிறைந்து காணப்படுகிறது.
வேதம், உபநிடதம், ஸ்மிருதி இதுபற்றிய சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்போவர் படிக்கலாம். ஹிந்து மதத்தில் விழுந்திருக்கும் குப்பைகளை மறுசுழற்ச்சி செய்து தந்திருக்கிறார். ஹிந்து மஹாசமுத்திரம் உப்பு நீர், பழமைவாத உவர்ப்பு ! கண்ணதாசனின் அர்தமுள்ள இந்து மதத்தின் மற்றுமொறு வைதீக வெர்சன் (பதிப்பு, பாதிப்பு) !
நூலை முழுமையாக வாசித்ததும், பழமை வாதங்களுக்கு புதிய முலாம் பூசி, இது போன்று பழைய புராண ஸ்லோகங்களுக்கு கற்பனை பொருள் கூறியும், இட்டுக்கதைகளையும் கூறியே இந்திய சமய நம்பிக்கைகளை பார்பனிய சித்தாந்தங்களிலும், வேதமயமாக்க முயன்றும் சோ இராமஸ்வாமி போன்றவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்ற பெருமூச்சே வந்தது.
Book Title : ஹிந்து மஹா சமுத்திரம்
Author : சோ
Price : RS 175 /-
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
12 கருத்துகள்:
//இன்றைய பார்பனர்களிலும் கருப்பு நிறத்தினர் இருப்பதற்கு அன்றை சூத்திரனில் சிலர் பிரமணராக உயர்ந்து அவர்களுடைய வாரிசுகளாக தன்னை பிராமணர்களாகக் கூறிக் கொள்ளும் பார்பனர்களும் இருக்கிறார்கள் என்றாவது சொல்லி இருக்கலாம்.//
???
//. இவர் சொல்வது என்ன வென்றால் நாத்திகம் உயர்ந்தது என்றாலும் ஈரோட்டு இராமஸ்வாமிக்கு அந்த பெருமை கூடாது என்பதே.//
:}}
// SUREஷ் said...
???
//
இன்றைக்கு பிராமணர்கள் என்றுக் கூறிக் கொள்கிறவர்கள் அனைத்து நிறங்களிலும் இருக்கிறார்கள், அதைத்தான் குறிப்பிட்டேன், சாதி அடையாளத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இன அடையாளம் இருந்தது, அதுவே ஆரிய ([பார்பனர், பாற் + பனர் > பால் போன்ற நிறத்தோர், வெண்ணிறத்தார், வெள்ளையர்] திராவிடர் எனப்பட்டது. இராவண்ணன் (இரவின் வண்ணத்தை உடையவன்) கருப்பு நிறம் தான். சோவின் கூற்று உண்மை என்றால் இன்றைய பார்பனர்களின் நிறங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அவர் பிராமணன் என்பது நிறம், சாதி வழி வந்தது இல்லை என்று ஒப்புக் கொண்டாலும், பார்பனர்கள் அனைவருமே பிராமணர்கள் இல்லை என்று அவர் சொல்லவில்லை.
சில நேரங்களில் இந்த மாதிரியான புத்தகங்களை த்விர்வித்துவிடுங்கள் தல, உட்ம்புக்கு எதவது ஆகிவிடபோகிறது
சில நேரங்களில் இந்த மாதிரியான புத்தகங்களை த்விர்வித்துவிடுங்கள் தல, உட்ம்புக்கு எதவது ஆகிவிடபோகிறது
//அக்னி பார்வை 5:20 PM, April 27, 2009
சில நேரங்களில் இந்த மாதிரியான புத்தகங்களை த்விர்வித்துவிடுங்கள் தல, உட்ம்புக்கு எதவது ஆகிவிடபோகிறது
//
அக்னி பார்வை,
வாசிப்பதை தவிர்க்கனுமா ? வாசித்தாலும் இங்கே அதுபற்றி எழுதுவதை தவிர்கனுமா ?
:)
ஓஹோ உங்களது நடுநிலைமையை காட்டூகிறீர் போலும்- இப்படித்தான் கள்ளவோட்டுப் புகழ் கருணாநிதியின் அடிவருடி கும்பல் கூறுவார்கள்.
சோவின் நையாண்டு கதைப் புத்தகம்..போல்...பார்த்து சிரிக்கலாம்..தயவு செய்து சிந்தித்து விடாதீர்கள் :-)
காலத்தாலும் இயற்கையின் சீற்றங்களாலும் கூட அழிக்க முடியாதென நம்பிவந்த டைட்டானிக் போன்ற மாபெரும் கப்பல் கணக்கில் இவர்களை போன்ற (அனைத்து) மதவாதிகள் கற்பனையில் கப்பல்கள் பலகட்டி மாபெரும் இந்திய துணைக்கண்டத்தில் பிரயாணம் மேற்கொண்டார்கள். இவர்களின் இந்திய வருகைக்கு முன்னமேயே இருந்த புத்தம், சமனம், சீக்கியம், இஸ்லாமியம், நாட்டடார், பழங்குடி வழிபாட்டு முறைகள், அன்மைக்கால பகுத்தறிவாளர்கள், சீர்திருத்தவாதிகள், விஞ்ஞானம், தொழில்நுட்ப மாற்றங்கள் போன்ற இயற்கையான சீற்றங்களில் 'இந்து டைட்டானிக்' சிக்கி உடைந்து தூள்தூளாகி அழிந்துவரும் வேளையில் 'சோ' போன்ற புத்திசாலிகள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடிவரும் வேளையில் 'இந்து மஹா சமுத்திரம்' போன்ற நூலெனும் பெயரில் உடைந்து மிதந்துவரும் கட்டைகளில் தொற்றிக்கொண்டு "ஐயகோ எங்களை காப்பாற்றுங்கள், நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம், இன்னும் கொஞ்ச நேரங்களில் மீதமுள்ள் இந்த கட்டையும் நீரில் ஊறி நாங்கள் அழிதேபோய்விடுவோம்" என அறைகூவல் விடுவதுபோல்தான் இருக்கிறது. அடாவடி அராஜக போக்குகள் கொண்ட இந்த மதத்தினர் இன்று இதுபோன்ற விளக்க உரைகளை புத்தகங்களாக வெளியிடுவது இவர்களது அழிவின் ஆரம்பத்தையே நமக்கு உறுதிபடுத்துகிறது. நல்லதொரு அழிவின் ஆரம்பத்தை மனமாற வாழ்த்துவதை தவிர வேறென்ன செய்ய முடியும்!
" இராவண்ணன் (இரவின் வண்ணத்தை உடையவன்) கருப்பு நிறம் தான்."
அவருடைய நிறத்துக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறீர்களே?
ராவணன் என்பவர் இருந்தார் என்பதை எந்த நூல் கொண்டு அறிந்தீர்கள்?
இன்றைய பார்பனர்களின் செயலை வைத்துப் பார்த்தால் ஒருவரும் தன்னை பிராமணர் என்று கூற தகுதியற்றவர் என்பதை சோ மறந்தும் கூட அந்த புத்தகத்தில் பதிக்கவில்லைகோவியாரே,எங்கே பிராமணன் புத்தகத்தை படிச்சிட்டீங்களா? அதில் ஆதார சுருதியே இன்றைய நிலையில் யாருமே பிராமண தகுதியுடன் இல்லை என்பதே.முடிந்தால் படிக்கவும் - உடம்புக்கு எதுவும் ஆகாத மாதிரி. :-)
சமுத்திரத்தை கப்பல்/விமானம் மூலம் கடக்கலாம் ஆனால் இன்னும் நீந்திக்கடக்ககூடிய உடம்பும் மனதும் இன்னும் யாருக்கும் வாய்க்கவில்லை.நீந்தினால் அனுபவம் கிடைக்கும் என்பது என் கருத்து.
இதற்கு பெயர் தான் நூல் விமர்சனமா? உங்கள் விமர்சனத்தில் ஜாதி பார்ப்பன காழ்ப்புணர்ச்சியும், இறை மறுப்பும், தவறாக மட்டுமே கூறவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே வெளிப்படுகிறது..
ஒரு புலமை புத்தி தவறுகிறது..
கருத்துரையிடுக