வலைப்பதிவின் தற்போதைய வளர்ச்சியை வைத்துப் பார்த்தாலும், வலைப்பதிவு ஊடகம் இன்றைய சூழலில் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிடாது. இருந்தாலும் கருத்துப் பரிமாற்றம் என்ற வகையிலும், நம்மிடையே இருக்கும் எழுத்துத் திறமையை மேம்படுத்தவும், எழுத்துப் பயிற்சி மேற்கொள்ளவும், குறிப்பாக தமிழில் எழுதுவது மகிழ்வளிக்கிறது என்பதாலும், சமூக அவலங்களைக் கண்டு மனம் புழுங்கி மன அழுத்ததைக் குறைத்துக் கொள்ள எழுதுகிறோம் என்பதாலும், தமிழ் சூழலில் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்கிற உணர்வு கிடைப்பதாலும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... என்பதாலும் எழுதுகிறோம்.
இதில் பலதரப்பட்ட சூழலிகளில் வளர்ந்தவர்கள், தற்பொழுது வாழும் சூழல், வயது, பால் ஆகியவை காரணிகளை உள்ளடக்கி அவரவரின் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. பதிவென்றாலும், பின்னூட்டமென்றாலும் மறுமொழி என்றாலும் ஒருவரின் கருத்துகள் மேற்கண்டவற்றை ஒட்டியே எழுதப்படுகின்றன. வெகுசிலர் மட்டுமே தன் கருத்தாக பொதுப் பார்வையிலிருந்து பார்த்து எழுதுவார்கள். பதிவுலகில் கருத்தொற்றுமை என்றெல்லாம் பார்பதைவிட எதிர்மறைக் கருத்துக் கூறுபவர் என்றாலும் என்னுடைய எழுத்தைப் படித்த பிறகு தான் ஒருவர் அதுபற்றி கருத்துரைக்கிறார் என்ற தெளிவிருந்தால், எதிர்கருத்தை தன்மானத்துடன் அல்லது தன்னுடைய கொள்கையுடன் பொருத்திப் பார்த்து எதிர்பதாக நினைக்கும் தாழ்வுணர்வுகள் வெகுவாக குறையும். இது எழுதுவர் மற்றும் அவருக்கு எதிர்கருத்துக் கூறுவர் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்.
ஒரு சில பதிவுகளைப் படித்துவிட்டு பின்னுட்டம் போடுபவர்களை தனக்கு எதிரியாகவே சிலர் கற்பனை செய்துக் கொண்டு தனிமனித வெறுப்பாக மறுமொழியில் பதில் சொல்லுகிறார்கள். ஒரு பதிவை எழுதிவிட்டு வெறும் பாராட்டுகளும், ஒத்தக் கருத்து மட்டுமே வேண்டும் என்று விரும்புவோர் பின்குறிப்பாக 'எதிர்கருத்துக்களை நான் விரும்பவில்லை, இது எனக்கு ஜால்ரா போடுபவர்களுக்காக மட்டுமே எழுதி இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டால், அதன் பிறகு அவர் தேவையற்றதாக கருதும் கருத்துகளை எவரும் தெரிவிக்கப் போவதே இல்லை. பொதுவில் வாசிப்பதற்கு எழுதி கடை விறித்துவிட்டு 'நீ எனக்கு எதிர்கருத்துக் கூறத்தேவை இல்லை' என்பதும் அங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருப்பதாக படிப்பவர்களே புரிந்து கொள்வார்களா ? எழுதுவது என்னுடைய மன அரிப்புதான், அதைத் தீர்த்துக் கொள்ளவே எழுதுகிறேன், மற்றபடி எனக்கு எதிர்கருத்துகள் எதுவும் தேவை இல்லை என்போர் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டல் எதிர்கருத்துச் சொல்பவரின் நேரம் வீணாகமல் இருக்கும். எதிர்கருத்து விரும்பாதோர் 'எனக்கு எதிர்கருத்துத் தேவை இல்லை' என்பதை வெளிப்படையாகச் சொல்லி பெருந்தன்மையாக நடந்து கொள்ளலாமே.
மிக அண்மையில் ஈழம் தொடர்பில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துகளை எழுதுகிறேன், என்பதற்காக கொள்கை பிடிப்பு உள்ளப் பதிவர் எனக்கு பதிலடிக் கொடுப்பதாக நினைத்து மறுமொழியில் எனக்கு 'சாதி' ஒட்டவைக்க முயன்றார். இத்தனைக்கும் நான் இன்ன சாதி என்று வலைப்பதிவில் விளம்பரப் படுத்திக் கொண்டதோ, பெருமையாகவோ / தாழ்வாகவோ / உயர்வாகவோ பேசியதோ கிடையாது, அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று நான் அறிந்து கொள்ள விரும்பியதும் இல்லை. நன்றாக பழகுபவர்களும் கூட எதிர்கருத்தை தன் ஈகோவைத் தாக்குவதாக நினைப்பது, எவர் மீதும் தனிப்பட்ட நம்பிக்கை வைக்கக் கூடாது, எழுத்ததைத் தாண்டி தனிப் பட்ட நட்புகளாக நெருங்கக் கூடாது என்பதை பாடமாகவே கொடுக்கிறது.
இதுபோன்ற கசப்பான பட்டறிவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக தன் எழுத்துக்களுக்கு எதிராக கருத்துரைக்க தேவை இல்லை என்போர், முன்முடிவாக தான் சொல்வதே சரி என்ற முடிவுடன் எழுதுபவர்கள் அன்பு கூர்ந்து, என்னுடைய இடுகைக்கு மாற்றுக் கருத்து எதிர்கருத்தை நான் விரும்பவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டால் நல்லது, முற்றிலுமே தேவை இன்றி ஏற்படும் மனக்காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்
27 கருத்துகள்:
இங்கே நான் ஜால்ரா போடனுமா , எதிர் கருத்து சொல்லனுமா? இல்லை நழுவி ஒடிரட்டுமா?
இந்த பதிவுக்கு நான் 49ஒ போட்டுக்கிறேன்
//குடுகுடுப்பை 10:03 AM, April 17, 2009
இங்கே நான் ஜால்ரா போடனுமா , எதிர் கருத்து சொல்லனுமா? இல்லை நழுவி ஒடிரட்டுமா?
//
இதற்கு நான் கருத்துச் சொல்வது இந்தப் பதிவின் கருத்துக்கு எதிரானது :)
//உடன்பிறப்பு said...
இந்த பதிவுக்கு நான் 49ஒ போட்டுக்கிறேன்
//
:) ஒரே ஒரு ஒ போட்டுவிட்டு 49 ஒ போட்டதாக சொல்வதை ஏற்பதற்கில்லை. ஏமாற்றுகிறீர்கள்
நாம் இடும் பதிவிற்கு...ஒத்த கருத்தோ...மாற்று கருத்தோ சொல்வதில் தப்பில்லை..ஒரு விதத்தில் அது சமயங்களில் ஆரோக்யமான விவாதம் ஆகிவிடும்.என் சில பதிவுகளில் வந்த மாற்றுக் கருத்தால் என் நிலைப்படையும் மாற்றிக்கோண்டதுண்டு.ஆனால்..எதிர்மறை கருத்தை ஆரோக்யமாக சொல்ல முடியாதவர்கள்...நம்மை தனிப்பட்ட முறையில் கொச்சை படுத்தி ஏன் பின்னூட்டம் இடுகிறார்கள்? வேண்டுமானால்..அப்படிப்பட்ட நிலையில்..அவர்கள் வலைப்பக்கத்தில்..அதை தனிபதிவாய் இடட்டும்.
என்னதான்...கமெண்ட் மாடுரேஷன் இருந்தாலும்..அதை நீக்கும்முன் நம் மனத்தை அது பாதித்து விடுகிறது உண்மைதான்.
அவருரவருடைய கருத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்றால் குழப்பங்கள் இல்லை. இதில் ஒரு விசயம் என்னவென்றால் கருத்து வேறுபாடு நட்புக்கும் ஆப்படித்துவிடுகிறது. எல்லோரும் ஒத்தக் கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை :))
எதிர்க்கருத்துக்கள்ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே அண்ணா, ஆனால் அதைக் கூறுபவர்கள் தம்மை மறைத்து Anonymous ஆகப் பினனூட்டமிடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? தமது கருத்தை துணிச்ச்லாக வெளியிடமுடியாத அவர்களை என்னதான் சொல்லுவது? எதிர்க்கருத்தைக் கூறுவதற்கும் ஒரு முறை இருக்கிறது அல்லவா? எமது சுய மரியாதையை நாம்தான் காப்பாற்ற ்வேண்டும். அதற்காக அவ்வாறான பின்னூட்டங்களை நீக்குவதில் தவறேதும் இல்்லையென்றே கருதுகின்றேன். எமது பதிவிற்குத்தான் பின்னூட்டம் இடப்பட வேண்டுமே தவிர எமக்கல்ல அல்லவா?
அட விடுங்க பாஸ்! இவங்க எப்பவுமே இப்படித்தான்!
//எல்லோரும் ஒத்தக் கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை//
அவசியம் இல்லை என்று சொல்வதைக் காட்டிலும் அவசியமே இல்லை என்றுதான் கூறவேண்டும்!
வெல் செட் விக்கி!
\\முன்முடிவாக தான் சொல்வதே சரி என்ற முடிவுடன் எழுதுபவர்கள் அன்பு கூர்ந்து, என்னுடைய இடுகைக்கு மாற்றுக் கருத்து எதிர்கருத்தை நான் விரும்பவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டால் நல்லது,\\
நிச்சயம் சொல்லமாட்டார்கள்.
அவர்கள் விரும்புவது, அனைவருமே தன் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே.
அதனால் பிறருக்கு எதிர்கருத்து போடுவார்கள். ஆனால் தனக்கு எதிர்கருத்து வரக்கூடாது என விரும்புவார்கள்.
நாம் இதற்கெல்லாம் தயாராக இருந்தால் மட்டுமே சிந்தனைக்குரிய
விசயங்களை எழுதலாம்.
இல்லயெனில் மொக்கையே பெட்டர்.
கும்மியாவது நடக்கும்.
தம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவே பதிவிடுகிறோம் அதில் கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமே.. அனைவரும் நம் கருத்தை ஏற்று கொள்ள வேண்டும் என்பது நடக்காத காரியம் அது நியாயமுமில்லை.
கருத்தை தெரிவிப்பவர்கள் தங்கள் கருத்தை நாகரீகமான முறையில் தெரிவிப்பதே ஒரு விவாதத்திற்கு அழகு.
ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் அல்லது அவர்கள் கருத்து ஏற்புடையதாக இல்லை என்றால் அவர் பதிவிற்கு போவதையே தவிர்த்து விடலாம்.
கருத்து வேறுபாடுகள் வேறு நட்பு வேறு என்பதை புரிந்து கொள்ளாதவரை மன வருத்தங்கள், கோபங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும், இதை உணராதவர்களே அதிகம்.
பின்னூட்டங்கள் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும் என்பது எவ்வளோ முக்கியமோ, பதிவும் அதே போல தான். தங்களுக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்பதால் அவரை பற்றி பதிவில் அநாகரீகமாக பொதுவில் எழுதுவதும் ஏற்று கொள்ளக்கூடியதாக இல்லை.
போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் தூற்றட்டும்
(எல்லாம்) போகட்டும் கண்ணுக்கே!!!!
// T.V.Radhakrishnan said...
நாம் இடும் பதிவிற்கு...ஒத்த கருத்தோ...மாற்று கருத்தோ சொல்வதில் தப்பில்லை..ஒரு விதத்தில் அது சமயங்களில் ஆரோக்யமான விவாதம் ஆகிவிடும்.என் சில பதிவுகளில் வந்த மாற்றுக் கருத்தால் என் நிலைப்படையும் மாற்றிக்கோண்டதுண்டு.ஆனால்..எதிர்மறை கருத்தை ஆரோக்யமாக சொல்ல முடியாதவர்கள்...நம்மை தனிப்பட்ட முறையில் கொச்சை படுத்தி ஏன் பின்னூட்டம் இடுகிறார்கள்? வேண்டுமானால்..அப்படிப்பட்ட நிலையில்..அவர்கள் வலைப்பக்கத்தில்..அதை தனிபதிவாய் இடட்டும்.
என்னதான்...கமெண்ட் மாடுரேஷன் இருந்தாலும்..அதை நீக்கும்முன் நம் மனத்தை அது பாதித்து விடுகிறது உண்மைதான்.
//
எழுதுபவர் பின்னூட்டமிடுபவர், பின்னோட்டமிட்டு அனானியாக பின்னூட்டுபவர் அனைவர் குறித்தும் தான் சொல்கிறேன் ஐயா
//VIKNESHWARAN said...
அவருரவருடைய கருத்தில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்றால் குழப்பங்கள் இல்லை. இதில் ஒரு விசயம் என்னவென்றால் கருத்து வேறுபாடு நட்புக்கும் ஆப்படித்துவிடுகிறது. எல்லோரும் ஒத்தக் கருத்துடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை :))
//
தன்னுடைய கருத்தே சரி என்பவர்கள் நட்புக்கு வேடு வைக்கும் படித்தான் நடந்து கொள்கிறார்கள்
//Subankan said...
எதிர்க்கருத்துக்கள்ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே அண்ணா, ஆனால் அதைக் கூறுபவர்கள் தம்மை மறைத்து Anonymous ஆகப் பினனூட்டமிடுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? தமது கருத்தை துணிச்ச்லாக வெளியிடமுடியாத அவர்களை என்னதான் சொல்லுவது? எதிர்க்கருத்தைக் கூறுவதற்கும் ஒரு முறை இருக்கிறது அல்லவா? எமது சுய மரியாதையை நாம்தான் காப்பாற்ற ்வேண்டும். அதற்காக அவ்வாறான பின்னூட்டங்களை நீக்குவதில் தவறேதும் இல்்லையென்றே கருதுகின்றேன். எமது பதிவிற்குத்தான் பின்னூட்டம் இடப்பட வேண்டுமே தவிர எமக்கல்ல அல்லவா?
//
நாகரீகமில்லாமல் அனானியாக தனிமனித தாக்குதல் நடத்துபவர்கள் பெரும்பாலும் பதிவர்கள் தான். அவங்க துணிச்சல் அவங்க பதிவுக்கு மட்டும் தான்.
//எவர் மீதும் தனிப்பட்ட நம்பிக்கை வைக்கக் கூடாது. எழுத்ததைத் தாண்டி தனிப் பட்ட நட்புகளாக நெருங்கக் கூடாது என்பதை பாடமாகவே கொடுக்கிறது.//
இங்கே வந்ததும் எத்தனையோ புதுப்புது நண்பர்கள். சிலர் சில விடயங்களில் ஒத்த கருத்தினர். சிலர் மாற்றுக் கருத்தினர். இதிலே நட்புக்கு பங்கம் வருவதில்லை. எல்லாவற்றிலும் ஒருமித்த கருத்துடையவர் மட்டுமே நண்பர்கள் ஆவதில்லை.
நம் கருத்தை, மன அரிப்புகளை சொல்லி இருக்கிறோம். எல்லோரும் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிந்தே எழுதுகிறோம்.
என்ன பிரச்னை? தம்முடைய எதிர்கருத்துக்களை மோசமான வழிகளில் வெறித்தனமாக வெளிப்படுத்துவர்கள். சொன்ன கருத்தைத் தாண்டி தூற்ற முனைபவர்கள். அவர்களை இனம் பிரித்து ஒதுக்கி விட்டால் போகிறது.
Keep Cool GK.
சில நெருங்கிய உறவுகளால்தான் வாழ்வில் பல இடற்பாடுகள் வருகிறது. நெருங்கிய உறவுகளே வேண்டாம் என்று தள்ளி விடுவோமா என்ன?
வாழ்ந்து பார்ப்போம். நம் மனதை வெறுப்பின் பாதையை விட்டு விலக்குவோம்.
Ha Ha Ha………………………………
Nanbar Thiru Jyothi is now fuming with anger. I could smell the sulfur my friend and almost feel you! Look who needs psychiatric treatment!
Dear friend, its you who have opened shop and exhibited your skills to the world and not me. How does it matter if I am anonymous or that I write in English. My job is not to tell you what a Mahakavi like you should write. It should come from you. Till you learn to do that, which I doubt, and till you keep puking such hate laced gibberish in your blog, you are liable for verbal prosecution by anybody!
Anbana Nanbare, If at all you want to pursue your poetic circus in a criticism less environment, why don’t you please call up your fans and other jalra’s every day by phone to read what you have written instead of trying to expose such masterpieces in public!
Like Sex, verbal abuse should only be inside four walls. Whereas you have chosen to publish verbal abuse in a visible forum by calling it blog writing!! That’s the problem my friend!
Forgive me dear Govi Kannan avargale for not writing about you this time around as you have written something sensible for a change and which is also in line with what I have just written about Thiru Jyothi.
Thanks
நல்லதொரு பார்வை.. ஒரு மறைமுக வேதனை உங்கள் பதிவில் தெரிகிறது..
குறைக்கும் சில பல குரல்களை கணக்கிலெடுக்க வேண்டாமே..
தம் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வேண்டாம் என்று சொல்பவர்கள் பத்திரிகைகள் போல பின்னூட்டம் எதிர்பார்க்காமலே எழுதலாமே..
//நாகரீகமில்லாமல் அனானியாக தனிமனித தாக்குதல் நடத்துபவர்கள் பெரும்பாலும் பதிவர்கள் தான். அவங்க துணிச்சல் அவங்க பதிவுக்கு மட்டும் தான்.//
:)
//கொள்கை பிடிப்பு உள்ளப் பதிவர் எனக்கு பதிலடிக் கொடுப்பதாக நினைத்து மறுமொழியில் எனக்கு 'சாதி' ஒட்டவைக்க முயன்றார்.//
நீங்க பசையுல்ல ஆளுன்னு நினைச்சிருப்பார்!
எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள் கோவி. ஜாதியை பற்றி கேள்வி எழுப்புவது தமிழரின் இயல்பு !
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி நீங்கள் எழுதி வந்தீர்கள். அதற்கு stanjoe என்று ஒருவர் அனானியாக பின்னூட்டம் இட்டு வந்தார். அவர் விடுதலை புலிகள் செய்வது அனைத்துமே கெடுதல் என்று சொல்லுபவர். நீங்களும் அவரது கருத்துக்களை பிரசுரித்து வந்தீர்கள். ஒருசமயம் சற்று அதிகப்படியாகவே பின்னூட்டத்தில் சண்டை நடந்து வந்தது. மற்றொருவர் Stanjoe வின் ஜாதியை குறிப்பிட்டு அவரின் கருத்துக்களை தாக்க ஆரம்பித்தார். அந்த பின்னூட்டத்தை நீக்க சொல்லி கேட்ட பொழுது நீங்கள் சொன்ன பதில் "இதை நான் தனிமனித தாக்குதலாக கருதவில்லை. ஒருவரின் ஜாதி அவரின் கண்ணோட்டத்தை ஒருசில கருத்துக்களை நிர்ணயிக்கிறது. தனியாக உங்களை திட்டினால் சொல்லுங்கள்" என்று சொன்னீர்கள். எனக்கு அது தவறாக தெரிந்தது. இருந்தாலும் அந்த பதிவில் அதை சொன்னால் எனக்கும் திட்டு விழும் என்று விட்டுவிட்டேன். இன்று இதை படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவரும் ஒருசமயம் தடுக்குவது இயல்பே. இப்பொழுது நட்பு பாதிக்கப்பட்டாலும் சில மாதங்களிலையே சரியாகி விடும்.
மணிகண்டன்,
ஜாதிப் பெருமைப் பேசுபவர்களைக் கண்டிப்பாக சாடலாம் தவறே இல்லை. ஏனென்றால் எந்த ஒரு சாதியும் பெருமைக்குறியது அல்ல.
ஆனால் ஒருவருக்கு ஊகமாக சாதி ஒட்டவைத்துத் தூற்றுவது தவறுதான்.
இதையும் வாசித்தேன் !!!!!!!! :)
எவர் மீதும் தனிப்பட்ட நம்பிக்கை வைக்கக் கூடாது, எழுத்ததைத் தாண்டி தனிப் பட்ட நட்புகளாக நெருங்கக் கூடாது என்பதை பாடமாகவே கொடுக்கிறது. //
:(
"முன்முடிவு !"
:(
நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் - வால்டேர்.
//என்னுடைய இடுகைக்கு மாற்றுக் கருத்து எதிர்கருத்தை நான் விரும்பவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டால்...//
இது தேவையில்லையோ என்பது என் நிலையாமை. ஏனென்றால், நமது கருத்தை புறக்கணிப்பவர்களின் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதற்கான நிலை அமைவதுதான் கருத்துச் சுதந்திரமாக இருக்க முடியும். தன்னுடைய இடுகைக்கு மாற்றுக்கருத்து அ எதிர்கருத்தை விரும்பாதவர், தாராளமாக அதை மட்டுப்படுத்தி வெளியிடாமல் செய்யலாம், அன்றி அவர் எதிர்கருத்துக்காகவும் மேடை அமைத்து தருகிறார் என்பது தான் என் புரிதல்.
அதே வேளை, எதிர்கருத்தின் தன்மையும் அவன் மீது குத்தப்படும் முத்திரையும் கருத்தாளனின் சூழ்நிலை மற்றும் சார்பு சார்ந்தே அமைந்துவிடுவது வேதனைதான். உதாரணமாக,
அண்மையில் நீங்கள் எழுதிய கருத்திற்காக உங்கள் மீது ஒட்டப்பட்டதாக சொல்கின்ற 'சாதி' அதே கருத்தை நான் எழுதியிருந்தால் என் மீது ஒட்டப்பட்டிருக்காது. அதற்கு vise versa வாக எனது சில கருத்துக்கள்.
இதென்ன “காலம்” எடுத்த முடிவா?! நண்பா!
கருத்துரையிடுக