இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெண்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே. உண்ணாவிரத பெண்களுடம் அமர்ந்து கனிமொழி கண்ணீர் வடித்தாராம். தன் தந்தை தமிழர்களுக்காக வாழ்நாளை அற்பணித்து யோகியாகி அமர்ந்திருக்கிறார் என்று அந்த பெண்களிடம் தெரிவித்தாராம். அங்கே அந்த பெண்களைப் பார்த்து பேச வந்த காங்கிரசு சுதர்சனம் நாட்சியப்பன், இன்னும் மூன்று நாட்களுக்குள் உண்ணாவிரதம் பற்றி சோனியாவிடம் எடுத்து சொல்லப் போவதாக தெரிவித்தாராம். அன்னை சோனியா தற்பொழுது பிரச்சார பயணத்தில் இருப்பதால் அவரை தொடர்ப்பு கொள்வது கடினமாம். 8 நாள் தொடரும் உண்ணாவிரதம் 11 நாள் வரையில் சோனியாவிடம் எடுத்துரைப்பதற்காக நீடிக்கப்படுமா ? இல்லை அவர்களுக்கு பால் ஊற்றியதும் தான் சோனியாவின் காதுக்கு பெண்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கும் செய்தி போய் சேருமா என்பது தெரியவில்லை :(
உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் இதை உடனடியாக கைவிடாவிட்டால் அவர்கள் நிலமை மோசமாகி எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி ஈழப் பிரச்சனை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறிவருவது கவனிக்கத் தக்கது. இராமேஷ்வர மீனவன் குண்டடிப்பட்டு மாள்வதையே கண்டு கொள்ளாதவர்கள் ஈழத்தமிழர்களுக்காக மனம் இறங்குவார்கள் என்று நினைப்பது வீண் என்றே சமூக நோக்காளர்கள் கருதுகிறார்கள்
கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
11 கருத்துகள்:
//கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்//
எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது
//அங்கே அந்த பெண்களைப் பார்த்து பேச வந்த காங்கிரசு சுதர்சனம் நாட்சியப்பன்,//
இதற்கு இது போன்ற அரசியல் அல்பைகளை எல்லாம், இது போன்ற இடங்களுக்கு அனுமதிக்கின்றனர்?
//நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்//
இதுதான் எரிகிற வீட்டில் புடுங்கியவரை ஆதாயம் என்பதோ
//கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.//
செய்யாமல் விடமாட்டார்கள்
....................
இவ்வ்ளோ நேரமாச்சு.,
சஞ்சையைக் காணோம்????
11 ஆவது நாள் ஆனதும்.,
மாமன் - மச்சானெல்லாம் வந்து.,
அங்காளி - பங்காளிகளுக்கு எண்ணை தேய்ச்சு குளிப்பாட்டி, கருமாதியை முடித்து வைப்பார்கள்.
//No 9:28 PM, April 21, 2009
....................
//
ஓ இருக்கியளா ?
//கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.//
சரியா சொல்லியிருக்கீங்க.
//No 9:28 PM, April 21, 2009
....................
//
ஓ இருக்கியளா
பாசக்கார பசங்க.!!!
சிரிப்பை அட்க்கமுடியவில்லை..
//அறிவே தெய்வம் said...
//No 9:28 PM, April 21, 2009
....................
//
ஓ இருக்கியளா
பாசக்கார பசங்க.!!!
சிரிப்பை அட்க்கமுடியவில்லை..
//
போச்சு போச்சு, அடுத்து உங்களைப் பற்றி நாலு வரிச் சொற்கள் ஆங்கிலத்தில் தான். நறுக்கென்று சொல்லுவார்.
கருத்துரையிடுக