பின்பற்றுபவர்கள்

9 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி பகுதி 1

திருப்பூர் பேருந்து நிலையத்தில் நினைவுகளை சுமந்து கொண்டு இருந்த போது எதிரே மதுரை பேருந்து உறுமிக் கொண்டு ஆயத்தமாக மெதுவாக நகர்ந்தது. ஏறினேன். மாலை 6 மணி வாக்கில் மதுரை வந்துவிடுவேன், சந்தித்துவிட்டு உடனேயே கிளம்பிவிடுவேன் என்று வலைச்சரம் பேராசிரியர் (இதெல்லாம் கவுரவ பட்டம் ! கொடுக்கும் போதே வாங்கிக் கொள்ள வேண்டும்!!! ) சீனா ஐயாவிடம் சொல்லி இருந்தேன். திருப்பூரில் இருந்து மதுரை மாலை 6.30 மணிக்கு கிளம்பினால், இரவு 11 மணிக்குத்தான் மதுரையை சென்றடையும் என்று தெரிந்தது. அந்த நேரத்தில் எவரையும் சந்திக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிந்தது, சீனா ஐயாவை அலைபேசியில் அழைத்து நிலைமையைச் சொன்னேன். 'எங்க வீட்டுக்கு நேராக வந்திடுங்க...ஏற்பாடுகள் செய்கிறேன்' என்றார். இரவு 11 மணிக்கு மேலும் ஆகலாம் ஆகையால் எதாவது விடுதியில் தங்கிவிடுகிறேன். காலையில் அலுவலம் செல்லும் முன்பு வாருங்கள் பார்ப்போம் என்றேன். அதேபோல் சாலி சம்பர் (முன்னாள் ஜாலிஜம்பர் தான்) மற்றும் தருமி ஐயாவுக்கு மறுநாள் காலையில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

பேருந்தில் அரத பழசான (கரகாட்டக்காரன் மற்றும் மலையூர் மம்பட்டியான் என) இரண்டு படங்களைப் அடுத்து அடுத்து போட்டு இம்சித்தார்கள். இடையில் திருப்பூருக்கு 1 மணி நேர பேருந்து பயண தொலைவில் ஒரே ஓர் ஊரில் பேருந்து நிலையத்தினுள் இளைப்பாருதலுக்காக பேருந்து நின்றது, அதிலிருந்து இறங்கிய பெரியவர் ஒருவர் ஓரளவு வெளிச்சம் இருந்ததையும் கண்டுகொள்ளாமல் பேருந்து முன் சக்கரத்தை குளிரூட்டினார் (கருமம் கருமம்...ஏன் இப்படியெல்லாம் இருக்கிறார்கள்...யாருமே கண்டுகொள்ளவில்லை) அதன் பிறகு மூன்று மணி நேர இம்சையாக மேற்சொன்ன படங்களுடன் பயணம் தொடர்ந்தது. அதுவே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஓட, பின்னர் பேரொலியுடன் பழைய பாடல்கள் (பாட்டு ஓடவில்லை என்றால் ஓட்டுனர் தூங்கிடுவாராம்) அதற்காக பயணிகளை இம்சித்தார்கள். ஒருவழியாக இரவு 11:30 மணி அளவில் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். மதுரை எனக்கு மிகுந்து பழக்கம் இல்லாத நகரம். சுற்றிலும் பார்த்தேன் விடுதிகள் இருப்பது போல் தெரியவில்லை. மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் விடுதிகள் இருப்பது தெரியும், அங்கிருந்து நகரப் பேருந்து எடுத்து மாட்டுதாவணி வந்து, எதிரே இருக்கும் மகராஜா ஹோட்டலில் அறையெடுத்துவிட்டு, அதன் பிறகு ஒரு குளியலைப் போட்டுவிட்டு, ஓட்டல் பணியாளரிடம் சொல்லி தோசை வரவழைத்து உண்டுவிட்டு, செல்பேசியில் அலாரம் வைத்துவிட்டு படுத்தேன். காலையில் 7 மணிக்கு அலாரம் அடித்த போது தான் விழிப்பு வந்தது.



மூவரையும் பார்த்துவிட்டு காலை 10 மணி வாக்கில் ஊருக்கு திரும்பிட வேண்டியது தான் என்று நினைத்திருந்தேன். 7:30 மணி இருக்கும், சென்னையில் இருந்து ஒரு நெருங்கிய பதிவர் நண்பர் அழைத்தார்.

'எங்கே இருக்கிங்க ?'

'நான் மதுரையில் இருக்கேன்...10 மணிக்கு கிளம்பிடுவேன்.....'

'அப்படியா...நான் மாலை 12:30 மணிக்கு சென்னையில் இருந்து வைகையில் வருகிறேன்'

'மதுரை வர எத்தனை மணி ஆகும் ?'

'செட்யூல் படி இரவு 8:30'

'அப்ப உங்களைப் பார்த்துட்டே கிளம்புறேன்'


(காலை நேரத்தில் மாட்டுதாவணி பேருந்து நிலையம், ஓட்டல் மாடியில் இருந்து எடுத்தப்படம்)

மறுபடியும் காலையில் சீனா ஐயாவை அழைத்து அன்று இரவு வரை இருக்கப் போவதாக சொன்னேன். கிளம்பிட்டேன்...வந்து பேசுவோம் என்றார். காலை 8:30 மணிக்கு சீனா ஐயா ஹோட்டல் அறைக்கு வந்தார். இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக பணி புரியும் சீனா ஐயா என்னை வந்து சந்தித்தது பெரு மகிழ்சியாக இருந்தது, சீனா ஐயாவைப் பற்றி முன்பே ஓரளவுக்கு தெரியும் என்றாலும் இந்த திட்டமிடாத பயணத்தின் ஒருமாதத்திற்கு முன்புதான் தனிப்பட்ட தொடர்பு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 'மதுரைக்கு எங்க வீட்டுக்கு வரவேண்டும் நீங்கள்' என்று மிகவும் அன்பாக கேட்டுக் கொண்டு அலைபேசி எண்ணைக் கொடுத்து இருந்தார். தமிழக பயணத்தின் போது சீனா ஐயாவையும் சந்திக்கவேண்டும் என்றெண்ணி இருந்தேன் அது நிறைவேறியது. 'வாங்க சாப்பிடப் போகலாம்..' என்றேன்

'சாலி சம்பர் ...வருவார்' அவரை அழைத்துக் கொண்டு செல்வோம், நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டு வந்துட்டேன்' என்றார்

'உங்களுடன் காலை உணவு சேர்ந்து உண்ணலாம் என்றிருந்தேனே'

'இரண்டு இட்டெலிக்கு இடம் இருக்கிறது' என்றார்

சிறுது நேரத்திற்கெல்லாம் சாலி சம்பர் வந்துவிட்டார்

பின் அவருடன் சேர்ந்து மூவருமாக காலை உணவை அருகில் இருந்த ஓட்டலில் முடித்தோம். பிறகு சிறிது நேரம் அலாவலாவிட்டு,

சீனா ஐயாவுடன் சாலி சம்பர்

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக...

'தேவநேய பாவாணர் மணி மண்டபம் எங்கே இருக்கிறது?' என்று கேட்டேன்

'எங்க அலுவலகம் பக்கம் தான்...அது திறந்து இருக்கான்னு தெரியலை.. கூட்டிப் போறேன்' என்றார் ஐயா

'திருமலை நாயக்கர் மஹாலுக்கு நான் கூட்டிப் போறேன்' என்றார் சாலி சம்பர்

மதியம் உங்க வீட்டுக்குச் சென்று அம்மாவை பார்க்கனும்..நீங்க அலுவலகம் போங்க, நான் சாலி சம்பருடன் மஹாலைப் பார்த்துவிட்டு உங்க அலுவலகத்துக்கு வந்துடுறேன்...' என்றேன்

'சரி' என்றார். அதன் பிறகு மூவரும் மூவுருளி தானியில் (ஆட்டோ தான் ஐயப்படாதிங்க) ஏறி, செல்லும் வழியில் தானியில் இருந்த படி தேவநேய பாவாணர் மணி மண்டத்தை பார்த்துவிட்டு...ஐயாவை அலுவலகத்தில் விட்டுவிட்டு

(சீனா ஐயா பணி புரியும் அலுவலக வளாகம்...லோன் கேட்டு போய் நிக்காதிக சாமியளா)

சாலி சம்பரும் நானும் மஹாலை அடைந்தோம். கொஞ்சம் (திமுக) அரசியலைப் பேசிக் கொண்டே





நுழைவு சீட்டுகள் வாங்கிவிட்டு உள்ளே நுழைந்தோம், நாயக்கர் மஹாலில் மறுநிர்மான, பழுதுபார்ப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது, உள்ளே சுற்றிப் பார்த்துவிட்டு, வெளியே வர மணி 11 ஆகி இருந்தது. மிகப்பொருமையாக, பொறுப்பாக அழைத்துச் சென்ற சாலி சம்பருக்கு நன்றி கூறி விடைபெற்றேன். மனுசன் எழுதும் போது தான் சினத்துடன் எழுதுகிறாரேயன்றி, பேசும் போது பரமசாது. இப்படி பட்ட நண்பர்களை சந்திக்க கொடுத்துவைக்க வேண்டும். எனக்கு கொடுத்து வைத்திருக்கிறது.


(மஹாலில் இந்த இடம் எப்போதும் திறந்தே இருக்காதாம்..சாலி சம்பர் சொன்னார்)







அங்கே அருகில் தான் மீனாட்சி கோவில், சென்று வரவேண்டும் என்று தோன்றியது...

பொடி நடையாக இடத்தைக் கேட்டுக் கொண்டு கோவிலுக்குள் சென்றேன்.

ஆனை ஆனை அழகு யானை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை, கோவில் யானை, பத்துரூபாய் கொடுத்தால் நிழல்பட கருவியில் ப்ளாஸ் வரும் வரை தும்பிக்கையை தலையில் வைத்தபடியே இருக்கிறது. கொஞ்சம் கனமாகவும், அதன் தும்பிக்கையில் உள்ள முடிகள் தலையில் குத்த அவஸ்தையுடன் ஒரு நிழல்படம் எடுத்துக் கொண்டேன்.




அடுத்து பொற்தாமரை குளத்தை நோக்கி நடந்தேன்.

இடுகை நீளம் கருதி அடுத்த பகுதியில் பொற்தாமரை குளத்திற்குச் செல்வோம்... சொக்கநாதரைப் பார்த்தேனா ? தனியாக மட்டுமல்ல வேறொரு பெயரில் தம்பதி சகிதமாக காட்சி கொடுத்தார்....அடுத்த பகுதியில் அந்த காட்சியுடன்

தொடரும்...

17 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வளவு இடம் சுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்!

இதில் எதிர்கட்சிகளின் சதி இருக்கலாம் என்பதால் சி.பி.பி(ஓவரா ரோலிங் ஆகுதே) சரி எதோ ஒண்ணு விசாரணை நடந்தால் சரி

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
தருமி ஐயாவை விட்டுவிட்டு இவ்வளவு இடம் சுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்!
//

வாலு, அதெல்லாம் அடுத்த பகுதியில் வரும் !

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

பொறாமையா இருக்கு. எல்லாரையும் பார்த்துட்டு வந்துருக்கீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஆகா...உங்க பயணம் மெகா சீரியல் அளவுக்கு போய்க்கிட்டு இருக்கும் போல இருக்கே...

cheena (சீனா) சொன்னது…

mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும்.

மணிகண்டன் சொன்னது…

**** mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும். *******

இது வேறயா ?
கொஞ்சம் விட்டு வேற போயிருக்கா ?

கோவி, bachelor மாதிரி உங்க விடுமுறைய கழிச்சி இருக்கீங்க.

ஆளவந்தான் சொன்னது…

ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :) .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போயிருந்தா, அப்டியே அலங்காநல்லூர் ஜல்லிகட்டையும் ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்.

அப்டியே முருகன் இட்லி கடையில் இட்லி, அம்சவல்லியில் சிக்கன் பிரியாணி, முணியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா, “ப்ரியா” காம்ப்ளக்ஸில் ஒரு படம் என மதுர மணத்த முழுசா அனுபவிச்சுட்டு வாங்க அப்பு..

சி தயாளன் சொன்னது…

ம்..நல்லா சுத்தியிருக்கீங்க..

துளசி கோபால் சொன்னது…

ஆஹா..... பார்வதி தலையில் (தும்பிக்) கை வச்சுட்டாளா?

யானையைப் பார்க்க நேரிட்டால் என்னை நினைச்சுக்க வேணாம்.:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
பொறாமையா இருக்கு. எல்லாரையும் பார்த்துட்டு வந்துருக்கீங்க.

11:42 PM, February 09, 2009
//

ஐயங்கார்,

வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்பட்ட நேரம் நமக்கே நமக்கானது மட்டுமல்ல. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
ஆகா...உங்க பயணம் மெகா சீரியல் அளவுக்கு போய்க்கிட்டு இருக்கும் போல இருக்கே...
//

அவ்வளவு இழுவையாக சோர்வாகவா இருக்கிறது ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
mmmmmm - அனைத்துப் பகுதிகளும் எழுதி முடித்த உடன் நானும் ஒரு பதிவு போடுகிறேன். விட்டுப்போனவற்றை எல்லாம் எழுதுகிறேன். பொறுத்திருக்கவும்.

12:13 AM, February 10, 2009
//

சீனா ஐயா
மிக்க மகிழ்ச்சி, இன்று வரும் இரண்டாவது பகுதியையும் படிச்சிடுங்க. !

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...

கோவி, bachelor மாதிரி உங்க விடுமுறைய கழிச்சி இருக்கீங்க.
//

மணி,
பேச்சிலராக ஊருக்குச் சென்றதால் அப்படி போச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :) .. ரெண்டு வாரத்துக்கு முன்னாடி போயிருந்தா, அப்டியே அலங்காநல்லூர் ஜல்லிகட்டையும் ஒரு விசிட் அடிச்சிருக்கலாம்.//

ஆளவந்தான்,

ஜல்லிக் கட்டு... ஐயோ பயமாக இருக்கிறது.

//அப்டியே முருகன் இட்லி கடையில் இட்லி, //

முருகன் இட்லி, சிங்கையில் கடை இருக்கு, நான் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் அதே சுவை இல்லை என்கிறார்கள்.

//அம்சவல்லியில் சிக்கன் பிரியாணி, முணியாண்டி விலாஸில் கொத்து புரோட்டா, //

ஞான் சைவமாக்கும் !

//“ப்ரியா” காம்ப்ளக்ஸில் ஒரு படம் என மதுர மணத்த முழுசா அனுபவிச்சுட்டு வாங்க அப்பு..
//

அவ்வளவு புகழ்வாய்ந்த திரையரங்கா ? அடுத்த முறை போனால் ஆச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
ம்..நல்லா சுத்தியிருக்கீங்க..
//

சென்று வந்த வழி ஒரு பெரிய செங்கோணம் போல பெரிய சுற்றுத்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ஆஹா..... பார்வதி தலையில் (தும்பிக்) கை வச்சுட்டாளா?//

சின்ன சிமெண்ட் மூட்டையால் தலையில் ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.

//யானையைப் பார்க்க நேரிட்டால் என்னை நினைச்சுக்க வேணாம்.:-)
//

யானையைப் பார்க்கும் போது உங்கள் நினைவு வரவில்லை, கடைகளில் யானை பொம்மைகள் வைத்திருந்தார்கள் அதைப் பார்த்ததும் தான் உங்கள் நினைவு வந்தது. அவற்றில் சில உங்கள் பதிவு தலைப்பில் இருக்கும் படம் போல் இருந்தது

சாலிசம்பர் சொன்னது…

கோவியாரே ,
நினைவுகள் சுகமானவை.சூறாவளி சுற்றுப்பயணத்தில் எங்க தலைவர் கலைஞரையே மிஞ்சிட்டீங்க போங்க.

மதிய உணவுக்கு சீனா அய்யாவிடம் வாக்கு கொடுத்திட்டீங்க.இல்லைன்னா தாசுமாக்குன்னு ஒரு இடம் இருக்கு , அதையும் சுற்றிப்பார்த்திருக்கலாம்,தப்பிச்சுட்டீங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்