பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2009

கலவை !

சு.ஸ்வாமிக்கு முட்டை அடியாம். வன்முறை கூடாது. அவ்வளவு முட்டையையும், தக்காளியையும் ஆம்லேட் போட்டு டாஸ்மாக் பக்கம் வைத்திருந்தால் நல்ல விற்பனை ஆகி இருக்கும். எவ்வளவு வீனாப்போச்சு !

இதை வச்சு புஷ்"ஷூ" போல் புகழடையலாம் என்று சு.ஸ்வாமி திட்டம் போடுகிறாம்.

"தமிழ்நாட்டுல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கெட்டு போய்டுத்து, என்கிட்ட 111 எம்பி சைன் (யாரோ குரல் விடுறாங்க...யோவ்...! அதுக்கு எம் எல் ஏ கையெழுத்து போடனும்) போட்டு கொடுத்து இருக்கா...கருணாநிதி ஆட்சியை பிப்ரவரி 30க்குள் கவுத்துடுவேன்."படம் : நன்றி வினவு

(இது முட்டையால் அடித்த பிறகு எடுத்த படம் அல்ல, சிதம்பரம் சிற்றம்பலத்தில் சாமி கும்பிட்டுவிட்டு சு.சாமி வெளியே வருகிறார்)
***

மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக டெபாஸிட் இழந்து செல்வாக்கு இழந்து வருகிறது - இது செய்தி, ஒருவாரம் கழித்து...

வி.காந்து : வரும் தேர்தலை இலங்கை தமிழருக்கு (இவரெல்லாம் ஈழத்தமிழர் என்று சொல்லமாட்டார்) ஆதரவாக அனைத்து கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்

(பின்னே 234/40 தொகுதியிலும் டெபாசிட் போனால் கட்சிக்கு பெருத்த நட்டமாகிடுமே)

***

அத்வானி : மத்திய பட்ஜெட் சத்யம் நிறுவன கணக்கு வழக்கு போல் இருக்கிறது

அடப்பாவிகளா, சத்தியம் நிறுவனத்தின் (x)ஆயிரம் கோடி முறைகேடு பாராளுமன்றத்தில் லாவனி பாட நகைச்சுவைக்காக மட்டும் தான் பேசப்படுதா ? சத்தியத்துக்கும் (நேர்மை பற்றியல்ல) பாஜவுக்கும் தொடர்பில்லை என்பதைத்தான் பாராளுமன்றத்தில் இப்படி போட்டு உடைக்கிறாரோ. ஆமாம் இராஜசேகர ரெட்டி காங்கிரஸ்காரர் ஆச்சே. நெருப்பில்லாமல் புகையாது - சாம்ராணி, பருப்பில்லாமல் மணக்காது ... சாம்பாரு

***

ரஜினியை மோடியாக்க முயல்கிறேன் - சோ

மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் 'மதிப்பும் மரியாதையும்' தெரிந்தும்...சோவுக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு காண்டு ? ரஜினி ரசிகர்களிடம் இருந்து சோ வை ஆண்டவன் தான் காப்பாத்தனும்.

***

சிதம்பரம் தீட்சிதர்கள் உண்ணாவிரதம்.

நெய் விலை கடும் சரிவு . (சத்தியமாக என்னோட கற்பனை இல்லை, தட்ஸ்தமிழில் யாரோ ஒரு புள்ளையாண்டான் போட்டு இருந்தான்)

38 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

me the first.

மணிகண்டன் சொன்னது…

தலைவர் பத்தாயிரம் வோட்டுக்கு மேல எடுத்து இருக்காரு திருமங்கலத்துல ! டெபாசிட் திருப்பி தரனும். அதுக்குரிய சட்ட amendment கொண்டு வராம இருக்கும் நாடாளுமன்றத்த வன்மையா கண்டிக்கறேன்.

சி தயாளன் சொன்னது…

:-)

கமெண்டுகள் சூப்பர்ப்:-)

Unknown சொன்னது…

சும்மா உதார் உடுவாரு, ஒன்னுமே நடக்காதுன்னுதான் பிப்ரவரி 30ஆ!

நையாண்டி நைனா சொன்னது…

அண்ணே... எனக்கு வரக்கூடாத ஆசை வந்து நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.

வந்து.....

வந்து.......

நான் ஒரு......

கதை எழுதி தொலைச்சிட்டேன்...

கொஞ்சம் படிச்சி...

உங்க மோதிர கையாலே.....

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் 9:54 PM, February 17, 2009
சும்மா உதார் உடுவாரு, ஒன்னுமே நடக்காதுன்னுதான் பிப்ரவரி 30ஆ!
//

சரியாக கண்டு பிடிச்சிட்டிங்களே பிப் 30.

இன்னொன்னு கூட இருக்கு 111
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
தலைவர் பத்தாயிரம் வோட்டுக்கு மேல எடுத்து இருக்காரு திருமங்கலத்துல ! டெபாசிட் திருப்பி தரனும். அதுக்குரிய சட்ட amendment கொண்டு வராம இருக்கும் நாடாளுமன்றத்த வன்மையா கண்டிக்கறேன்.
//

நானும் சேர்ந்து கண்டிக்கிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...
:-)

கமெண்டுகள் சூப்பர்ப்:-)
//

அரசியல்வாதிகள் என்றாலே நகைச்சுவை தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
அண்ணே... எனக்கு வரக்கூடாத ஆசை வந்து நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.

வந்து.....

வந்து.......

நான் ஒரு......

கதை எழுதி தொலைச்சிட்டேன்...

கொஞ்சம் படிச்சி...

உங்க மோதிர கையாலே.....
//

குட்டியாச்சு கை லேசா வலிக்குது !
:)

பெயரில்லா சொன்னது…

கமெண்டுகள் சூப்பர்ப்:-)

இராம்/Raam சொன்னது…

//ரஜினி ரசிகர்களிடம் இருந்து சோ வை ஆண்டவன் தான் காப்பாத்தனும்.//

ஹி ஹி ஹி

இராம்/Raam சொன்னது…

//
சிதம்பரம் தீட்சிதர்கள் உண்ணாவிரதம்.

நெய் விலை கடும் சரிவு . (சத்தியமாக என்னோட கற்பனை இல்லை, தட்ஸ்தமிழில் யாரோ ஒரு புள்ளையாண்டான் போட்டு இருந்தான்)///

நம்ம சிங்கப்பூரு ஐயங்கார் கோவிச்சிக்க போறாரு... :))

வீ. எம் சொன்னது…

//மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் 'மதிப்பும் மரியாதையும்' தெரிந்தும்...சோவுக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு காண்டு ? ரஜினி ரசிகர்களிடம் இருந்து சோ வை ஆண்டவன் தான் காப்பாத்தனும்.//

இது சூப்பார்.. ரஜினியின் மீது சோவுக்கு வெறுப்பு.. என்ற அதே தொனியில் என் பதிவு

http://arataiarangam.blogspot.com/2009/02/blog-post_16.html

மணிகண்டன் சொன்னது…

***
தமிழ்நாட்டுல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கெட்டு போய்டுத்து
***

ஹை கோர்ட்ல வழக்கு தாக்கல் பண்ண வரும் போது அடிச்சி இருக்காங்க போல. அப்படி இருக்கும் போது அவரு இத சொன்னா எப்படி அது காமெடி ஆகும் !

ராம் சேனா பப்ல பூந்து அடிக்கும் போது அடிச்சவங்களையும், இதுல அடிபட்டவரையும் வச்சி நம்ப ஏன் காமெடி பண்றோம் ! இதுக்கு கூட இந்த கமெண்ட் சரியா இருக்கும்.

நெருப்பில்லாமல் புகையாது - சாம்ராணி, பருப்பில்லாமல் மணக்காது ... சாம்பாரு

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் 11:12 PM, February 17, 2009
***
தமிழ்நாட்டுல ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் கெட்டு போய்டுத்து
***

ஹை கோர்ட்ல வழக்கு தாக்கல் பண்ண வரும் போது அடிச்சி இருக்காங்க போல. அப்படி இருக்கும் போது அவரு இத சொன்னா எப்படி அது காமெடி ஆகும் !

//

மணி டென்சன் ஆகாதிங்க. அவரு எப்போதுமே ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் பற்றி பேசுவார். அதுல இதுவேற நடந்துவிட்டதா அதனால் தான் அப்படி எழுதினேன். அவரு எதச் சொன்னாலும் காமடிதான். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
//
சிதம்பரம் தீட்சிதர்கள் உண்ணாவிரதம்.

நெய் விலை கடும் சரிவு . (சத்தியமாக என்னோட கற்பனை இல்லை, தட்ஸ்தமிழில் யாரோ ஒரு புள்ளையாண்டான் போட்டு இருந்தான்)///

நம்ம சிங்கப்பூரு ஐயங்கார் கோவிச்சிக்க போறாரு... :))
//

நம்ம யூசூப் ஐயங்காரா ? அவரு சுத்த அசைவம் !

Matra சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Matra சொன்னது…

"இப்பொ என்ன பெரிசா ஆயிடுச்சு . கொர்ட்டா இருந்தா என்ன. எங்க கொழ்கை தான் முக்கியம். நான்ங்க என்ன வெனுமானாலும் சேய்வோம்.

நாங்க செய்வது தான் செரி. நீங்க என்ன செய்தாலும் அது தவரெ.

நாங்க எதயும் அவரவர் ஜாதி , மதம், மொழி, அரசியல் கட்சி வைத்து தான் சரியா தவரா என்ட்ரு சொல்வொம்.

இதுதான் த்ராவிட கொ'ல்'கை

இப்படிக்கு ,

த்ராவிட சுயனலம் விரும்பி "

PS. Excuse me for any typos. The above statement explains the mindset of the so called Periyarists. Looks like even God cannot save the Courts. Law and order can go to hell if this continues.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

Super Appu!(நான் சூப்பர் அப்புன்னு எழுதியதை சூப்பர் ஆப்பு என்று தாங்கள் படித்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது)
பாவம் நல்ல மனுஷன். இப்ப தமிலு எல்லாம் கத்துக்கிட்டு நல்லா பேஸுறாரு!
மதுரை நாடு ஆளு மன்ற தொகுதி இலை நிக்கவச்சு ஜெயிக்கவச்சா தேசம் சுபிட்சம் அடையும்.
யாகாவாராயினும் நாகாக்க அப்படின்னு அய்யன் வள்ளுவர் பெருமகனார் சொல்லி இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra 8:04 AM, February 18, 2009
"இப்பொ என்ன பெரிசா ஆயிடுச்சு . கொர்ட்டா இருந்தா என்ன. எங்க கொழ்கை தான் முக்கியம். நான்ங்க என்ன வெனுமானாலும் சேய்வோம்.

நாங்க செய்வது தான் செரி. நீங்க என்ன செய்தாலும் அது தவரெ.

நாங்க எதயும் அவரவர் ஜாதி , மதம், மொழி, அரசியல் கட்சி வைத்து தான் சரியா தவரா என்ட்ரு சொல்வொம்.

இதுதான் த்ராவிட கொ'ல்'கை

இப்படிக்கு ,

த்ராவிட சுயனலம் விரும்பி "//

சூத்திரன் அவனுக்கு தெரிஞ்ச வழியில தானே எதிர்ப்பை காட்டுவாங்க, வாய்கொழுப்பெடுத்தா...வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான். சூத்ராள் முரடர் என்று சாமி அறிந்து கொள்ளமல் இருந்தாரா ?

//PS. Excuse me for any typos. The above statement explains the mindset of the so called Periyarists. Looks like even God cannot save the Courts. Law and order can go to hell if this continues.//

அச்சச்சோ அபச்சாரமாக பேசாதேள். கடவுள் பார்த்துண்டு இருப்பார், ஆனால் கண்டிப்பாக தண்டிச்சுடுவார். சிதம்பரம் தீட்சிதர்கள் போல் நம்பிக்கையோடு இருங்கோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
Super Appu!(நான் சூப்பர் அப்புன்னு எழுதியதை சூப்பர் ஆப்பு என்று தாங்கள் படித்துக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது)
பாவம் நல்ல மனுஷன். இப்ப தமிலு எல்லாம் கத்துக்கிட்டு நல்லா பேஸுறாரு!
மதுரை நாடு ஆளு மன்ற தொகுதி இலை நிக்கவச்சு ஜெயிக்கவச்சா தேசம் சுபிட்சம் அடையும்.
யாகாவாராயினும் நாகாக்க அப்படின்னு அய்யன் வள்ளுவர் பெருமகனார் சொல்லி இருக்கிறார்.
//

அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க வேண்டிய ஒருவரை எம்பி சீட்டுக்கு அல்லாட விடுறிங்களே, இது உங்களுக்கே நல்லா இருக்கா ?

ராவணன் சொன்னது…

கலவை என்றவுடன் கலவை சங்கர மடத்தில் ஏதோ கசமுசா என்று நினைத்தேன்.

சு.சாமி மாமா சும்மா கொழு கொழுவென்று பெரிய வெண்ணையாக இருப்பார் போல?

ஆமா..இந்த சு.சாமி மாமா யாரு?

priyamudanprabu சொன்னது…

முன்னே ஓம்கார் சுவாமி
இப்போ சு.சுவாமி
ஆகட்டும் ஆகட்டும்

priyamudanprabu சொன்னது…

25

priyamudanprabu சொன்னது…

நெருப்பில்லாமல் புகையாது - சாம்ராணி, பருப்பில்லாமல் மணக்காது ... சாம்பாரு
///

இது நல்லாயிருக்கு

priyamudanprabu சொன்னது…

///
மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் 'மதிப்பும் மரியாதையும்' தெரிந்தும்...சோவுக்கு ரஜினி மீது ஏன் இவ்வளவு காண்டு ?
///

மோடிக்கு தைரியம் உண்டு
ரசினிக்கு ??? ???????
ஆக சோ முயற்ச்சி தோற்க்கும்
கவலைவேண்டாம்

Bharath சொன்னது…

//சூத்திரன் அவனுக்கு தெரிஞ்ச வழியில தானே எதிர்ப்பை காட்டுவாங்க, வாய்கொழுப்பெடுத்தா...வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான். சூத்ராள் முரடர் என்று சாமி அறிந்து கொள்ளமல் இருந்தாரா ?//

அப்போ ராம்சேனாவையும் சூத்திராளோட சேத்திட்டீங்களா?? என்ன உங்க சப்பக்கட்டு.. பேஷ் பேஷ்.. கலைஞர் ட்யுஷனா??

I don't support Swamy in any means but i'm firmly against these kind of "DRAVIDIAN" sappakkatu..

SurveySan சொன்னது…

சிதம்பரம் கோயில்லயும் சட்டைய கழட்டிட்டுதான் போகணுமா?
என்னங்காணும் கொடுமையிது?

நா.க பாக்கலியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...

அப்போ ராம்சேனாவையும் சூத்திராளோட சேத்திட்டீங்களா?? என்ன உங்க சப்பக்கட்டு.. பேஷ் பேஷ்.. கலைஞர் ட்யுஷனா??//

இப்ப கர்நாடகத்தில் பிஜேபி ஆட்சி, ஆட்சி மாறினால் தான் இராம்சேனா சூத்ராளா ? சூத்திரதாரிகளோட ஆளான்னு தெரியும்.

இதுக்கெல்லாம் கலைஞர் தான் ட்யூசன் எடுக்கனுமா ? தாடிக்கார கிழவனின் பாடம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானவை.
:)

//I don't support Swamy in any means but i'm firmly against these kind of "DRAVIDIAN" sappakkatu..//

ஒடுக்கப்பட்டவர்கள் கொந்தளித்தால் அது பேரு திராவிடமா ?

சேகுவாரா கூட சொல்லி இருக்கிறார்

"உலகில் எங்காவது நடக்கும் ஒடுக்குமுறைக்கு எதிராக நீ கொதித்தெழுந்தால் இருவரும் நண்பர்கள்"

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
சிதம்பரம் கோயில்லயும் சட்டைய கழட்டிட்டுதான் போகணுமா?
என்னங்காணும் கொடுமையிது?

நா.க பாக்கலியா?
//

:) இது இம்புட்டு நாளாக தெரியாதா ?
குருவாயூர் போலவே சட்டையை கழட்டிட்டுதான் போகனுமாம், தீட்சிதர்கள் மலையாள நாட்டவர் என்பதற்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ ?

சு.ஸ்வாமி ஏன் போட்டுக்கல ? ஒருவேளை சட்டையைக் கழட்டச் சொல்லுவாங்க என்பது தெரியாமல் அப்படியே வந்துட்டாரா ?

Unknown சொன்னது…

சார்...சு.சாமி என்னதான் காமெடி பண்ணாலும் இந்த மாதிரி நீதிமன்றத்துல அதுவும் நீதிபதிகள் முன்னாடி ஒருவரை அடித்த இந்த செயலை எப்படித்தான் நீங்க ஆதரிகிரீங்களோ!!!!!இதே அராஜகத்தை தான் ராமசேனாவும் செய்கிறது....அதை மட்ட்டும் கிழித்து தொங்க விடுகிறீர்கள்?????
ஒரு வேளை ராமசேனாவும் இலங்கை தமிழர்களுக்காக யாரையாவது அடித்தால் நீங்கள் அதையும் ஆதரிப்பீர்கள் போல????
வாழ்க!!! உங்கள் தமிழ் கலாச்சாரம்....இப்படி ரௌடித்தனம் பண்ணும் அனைவரும் ரௌடிதான் என்று ஏன் உங்களால் சொல்லமுடியவில்லை....
எனக்கு எவன் ரௌடித்தனம் பண்ணாலும் ஒன்று தான் அது ராமசெனாவாக இருந்தாலும் சரி இப்படி வக்கீல்களாக இருந்தாலும் சரி....
இது சட்டதுறைக்கும் காவல்துறைக்கும் பெரிய அவமானம்!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Kamal said...
சார்...சு.சாமி என்னதான் காமெடி பண்ணாலும் இந்த மாதிரி நீதிமன்றத்துல அதுவும் நீதிபதிகள் முன்னாடி ஒருவரை அடித்த இந்த செயலை எப்படித்தான் நீங்க ஆதரிகிரீங்களோ!!!!!

இதே அராஜகத்தை தான் ராமசேனாவும் செய்கிறது....அதை மட்ட்டும் கிழித்து தொங்க விடுகிறீர்கள்?????

//

சார், நான் எங்கே ஆதரித்தேன். முதல்வரியிலேயே 'வன்முறை கூடாது' ன்னு தான் எழுதி இருக்கிறேன். மற்றவை அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்பதற்கான விளக்கம் மட்டுமே. தீ பிடித்தது தெரிந்து ...தீக்குச்சியை உரசியதால் பற்றியது என்று சொல்வது 'தீ' வைத்த செயல் ஆகிடுமா ? அல்லது அதை ஞாயப்படுத்தியதாக பொருள் கொள்ள முடியுமா ?

அப்படி என்றால் நீங்க இராம் சேனா செய்தது சரி என்கீறீர்களா ? நான் முட்டை அடியை சரி என்று சொல்லவில்லை

//ஒரு வேளை ராமசேனாவும் இலங்கை தமிழர்களுக்காக யாரையாவது அடித்தால் நீங்கள் அதையும் ஆதரிப்பீர்கள் போல????
வாழ்க!!! //

அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும் :)

//உங்கள் தமிழ் கலாச்சாரம்....இப்படி ரௌடித்தனம் பண்ணும் அனைவரும் ரௌடிதான் என்று ஏன் உங்களால் சொல்லமுடியவில்லை....//

கண்டிப்பாக சொல்லமுடியும், ஆறுமுகசாமி மீது குண்டர் படையை ஏவிய தீட்சிதர்கள் கூட ரவுடிகள் தான் சார்.

//எனக்கு எவன் ரௌடித்தனம் பண்ணாலும் ஒன்று தான் அது ராமசெனாவாக இருந்தாலும் சரி இப்படி வக்கீல்களாக இருந்தாலும் சரி....
இது சட்டதுறைக்கும் காவல்துறைக்கும் பெரிய அவமானம்!!!!
//

சட்டதுறையை விடுங்க அது மனுசன் அமைச்சது, ஆன்மிகத் துறை கடவுளால் செயல்படுதே. குண்டர்படைகளை ஏவிய தீட்சித பார்பனர்களின் செயலுக்கு என்ன பதில் வைத்திருக்கீறீர்கள் ?

Bharath சொன்னது…

//
இதுக்கெல்லாம் கலைஞர் தான் ட்யூசன் எடுக்கனுமா ? தாடிக்கார கிழவனின் பாடம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு போதுமானவை.//

தாடிக்காரக் கிழவன் ஒழுங்காத்தான் பாடம் எடுத்தார்.. நடுவுல அத சுயநல்த்துக்காக ப்ளேட்ட திருப்ப கலைஞர் தான் ட்யுஷன்.. மாமியார் ஒடச்சா மண் குடம்..

//ஒடுக்கப்பட்டவர்கள் கொந்தளித்தால் அது பேரு திராவிடமா ?//

கோர்ட்ல போய் முட்டை அடிக்கறதுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. இதுல்ல இவங்க எல்லாம் வக்கீலாம்.. சிதம்பரம் தீக்‌ஷிதர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்??

Unknown சொன்னது…

///சட்டதுறையை விடுங்க அது மனுசன் அமைச்சது, ஆன்மிகத் துறை கடவுளால் செயல்படுதே. குண்டர்படைகளை ஏவிய தீட்சித பார்பனர்களின் செயலுக்கு என்ன பதில் வைத்திருக்கீறீர்கள் ?///

கோ.வி சார் நான் தான் தெளிவா சொல்லிட்டேனே!!!! கீழே மீண்டும் பேஸ்ட் செய்திருக்கிறேன்....பாருங்கள்!!!

"எனக்கு எவன் ரௌடித்தனம் பண்ணாலும் ஒன்று தான் அது ராமசெனாவாக இருந்தாலும் சரி இப்படி வக்கீல்களாக இருந்தாலும் சரி....
இது சட்டதுறைக்கும் காவல்துறைக்கும் பெரிய அவமானம்!!!"

///அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும் :)///
அத்தைக்கு மீசை முளைக்கும் நாள் கூடிய சீக்கிரம் வந்துவிடும் போல...பா.ஜ.க இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறதே...:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...

தாடிக்காரக் கிழவன் ஒழுங்காத்தான் பாடம் எடுத்தார்.. நடுவுல அத சுயநல்த்துக்காக ப்ளேட்ட திருப்ப கலைஞர் தான் ட்யுஷன்.. மாமியார் ஒடச்சா மண் குடம்..//

ஈழம் தொடர்பாக கலைஞரின் வழிகாட்டுதல்(?) படி யாரும் நடக்கவில்லை. மூட்டை வீச்சு ஈழம் தொடர்பாக நடந்த ஒன்று. மாமியாரும் உடைக்கல மருமகளும் ஒடைக்கல, எவனோ ஒரு சோமாறி உடைச்சதால் தான் பிரச்சனையே

//கோர்ட்ல போய் முட்டை அடிக்கறதுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. இதுல்ல இவங்க எல்லாம் வக்கீலாம்.. சிதம்பரம் தீக்‌ஷிதர்களுக்கும் இவங்களுக்கும் என்ன வித்தியாசம்??//

இதுக்கு இவ்வளவு வருத்தப்படாதிங்க, இதே சு.ஸ்வாமி அதிமுகவினரால் ஆசிட் வீசப்பட்ட சந்திரலேகாவையே அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கவச்சவரு. இன்னிக்கு தேதியில் ஒருமாதிரி பேசுவார், நாளைக்கே வேறுமாதிரி பேசுவார்.

6:04 PM, February 18, 2009
//

கோவி.கண்ணன் சொன்னது…

//Kamal said...

கோ.வி சார் நான் தான் தெளிவா சொல்லிட்டேனே!!!! கீழே மீண்டும் பேஸ்ட் செய்திருக்கிறேன்....பாருங்கள்!!!

"எனக்கு எவன் ரௌடித்தனம் பண்ணாலும் ஒன்று தான் அது ராமசெனாவாக இருந்தாலும் சரி இப்படி வக்கீல்களாக இருந்தாலும் சரி....
இது சட்டதுறைக்கும் காவல்துறைக்கும் பெரிய அவமானம்!!!"//

நாட்டுக்கே அவமானமாக பலநிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறது.
பாபர் மசூதி, கோத்ரா ரயில் சொல்லிக் கொண்டே போகலாம். இது கூட சு.ஸ்வாமிக்கு வெளம்பரம் தான். லூஸ்ல விடுங்க

/////அத்தைக்கு மீசை முளைத்த பிறகுதான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும் :)///
அத்தைக்கு மீசை முளைக்கும் நாள் கூடிய சீக்கிரம் வந்துவிடும் போல...பா.ஜ.க இலங்கை தமிழர்கள் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கிறதே...:))))))
//

அதையும் வெட்டி எரியமுடியுமா என்று முயற்சிக்கும் 'சோ'மாறிகளை மறந்துட்டிங்களே சார்.

Matra சொன்னது…

//சூத்திரன் அவனுக்கு தெரிஞ்ச வழியில தானே எதிர்ப்பை காட்டுவாங்க, வாய்கொழுப்பெடுத்தா...வாங்கிக் கட்டிக்க வேண்டியதுதான். சூத்ராள் முரடர் என்று சாமி அறிந்து கொள்ளமல் இருந்தாரா ?//

Do not confuse rough behaviour with absolute indecency and disrespect to law and order.

Poverty or belonging to underdeveloped communities is no justification for indecent behaviour. There are millions of people from poor/illiterate background who behave decently unlike the Dravidians.

FYI, I too belong to a so called Sudra community !. Just because Im against these Dravidian scoundrels doesnt mean im a Brahmin.

There are a lot of people who are against atrocities committed by the FC but in no way behave indecently.

People have every right to display their opinion but there are limits. If these lawyers had protested outside the Courts in a non violent manner, that would have been fine.

Supporting these indecent actions and justifying them will result in situation where nothing is sacrosanct and nobody is safe. Just plain chaos leading to total destruction of society.

I repeat, if people judge right or wrong based on the caste/religion/language/political affiliation of the concerned parties, then justice will no longer exist.

கோவி.கண்ணன் சொன்னது…

//Matra 7:58 AM, February 19, 2009

அண்ணே, உங்களுக்கு எப்படி சொன்னாலும் வெளங்கல,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்வது, போராட்டுவது, மனித சங்கிலி அமைப்பது எல்லாம் கூட சட்டப்படி குற்றம் தான், அரசாங்கத்துக்கு எதிராக போராடலாம் என்று எந்த சட்டத்திலும் இல்லை. எனவே அவையெல்லாம் சட்ட விரோதம் இல்லையா ?

சு.ஸ்வாமியை உயிரோடு விட்டாங்களேன்னு மகிழ்ச்சி அடையுங்க

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்