பின்பற்றுபவர்கள்

24 பிப்ரவரி, 2009

அப்பாவி சிங்களர்களை(யும்) காங்கிரஸ் காக்க வேண்டும் !

வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வன்னியிலும், முல்லைத்தீவிலும் சிக்கியுள்ள அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சம் அடைவாதாகவும், இலங்கை அரசு கேட்டுக் கொண்டால் அப்பாவி தமிழர்களை வெளியேற்ற உதவுவதாகவும் இந்திய அரசின் சார்பில் கூறியுள்ளார். இது நல்ல நோக்கமாக தெரிந்தாலும், அப்பாவி தமிழர்களை அவர்கள் வாழும் இடத்தில் இருந்து வெளியேற்றிவிட்டடல் அதன் பிறகு அங்கிருக்கும் விடுதலைப் புலிகளை ஏவுகனை வீசி முற்றிலும் அழித்துவிட முடியும் என்ற மறைமுக யோசனையை காங்கிரஸ் முன்வைப்பதாகவும், உதவ ஆயத்தமாக இருப்பதாக தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் இதன் மூலம் போரில் இலங்கை அரசு வெற்றி பெற காங்கிரஸ் அரசு ஆதரவு அளிப்பதையும், தமிழ் ஈழம் அமைவதை தடுத்துவிட முயற்சிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு ஊதுகுழலாக காங்கிரஸ் பின் நிற்பதைத் தான் பிரணாப் முகர்ஜியின் அந்த போர்கள பூமியில் ஒடுங்கி இருக்கும் அப்பாவிகள் குறித்த 'அக்கரை' தெரிவிக்கிறது.

இலங்கைக்கு அரசுக்கு உதவும் காங்கிரஸ், அப்பாவி சிங்களர்கள் குறித்து அக்கரை படாதது வியப்பையே அளிக்கிறது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் எப்பொழுது மனித வெடிகுண்டுகளாக கொழும்பில் ஊடுறுவி வெடிப்பார்கள், எப்போது விமானம் மூலம் குண்டு போட்டு தாக்குவார்கள் என்ற நிலையில் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களை அப்புறப் படுத்த உதவுகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து, சிங்கள அப்பாவிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு பெயரவைத்தால் எதிரிக்கு எதிரிகளான சிங்கள இராணுவமும், ஈழ விடுதலை போராளிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள்.


அப்பாவி தமிழர்கள் குறித்து அச்சப்படும் காங்கிரஸ் அரசு, எப்போது வெடிகுண்டு தாக்குமோ என்று நடுங்கும் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர் பற்றி அக்கரைபடுமா ?

- தினமலர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் கேட்கிறார்கள்.

4 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இலங்கைக்கு அரசுக்கு உதவும் காங்கிரஸ், அப்பாவி சிங்களர்கள் குறித்து அக்கரை படாதது வியப்பையே அளிக்கிறது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் எப்பொழுது மனித வெடிகுண்டுகளாக கொழும்பில் ஊடுறுவி வெடிப்பார்கள், எப்போது விமானம் மூலம் குண்டு போட்டு தாக்குவார்கள் என்ற நிலையில் கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களர்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்களை அப்புறப் படுத்த உதவுகிறோம் என்று காங்கிரஸ் அரசு தெரிவித்து, சிங்கள அப்பாவிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு பெயரவைத்தால் எதிரிக்கு எதிரிகளான சிங்கள இராணுவமும், ஈழ விடுதலை போராளிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள்.//

இந்த பத்தியில் சொல்லியிருப்பது ஆர்கிமிடீஸ் கோட்பாடு மற்றும் நியூட்டனின் இரண்டாவது விதியை நினைவு படுத்துகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தில் நம் இந்தியா இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அது சாத்தியமானால் தெற்காசிய வல்லரசு பட்டம் சாத்தியம். இந்தியா வல்லரசு என்பதற்கும், விசய காந்த் வல்லரசு என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவியல் தொழில் நுட்பத்தில் நம் இந்தியா இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அது சாத்தியமானால் தெற்காசிய வல்லரசு பட்டம் சாத்தியம். இந்தியா வல்லரசு என்பதற்கும், விசய காந்த் வல்லரசு என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
//

காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கை வையுங்கள். :)

அத்திரி சொன்னது…

//- தினமலர் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இந்த கேள்வியை அப்பாவிகளும், பாமரர்களும் கேட்கிறார்கள்.//

ம்ம்ஹும்.......... முடியல.....

Unknown சொன்னது…

இந்த வீடியோ காட்சி

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்