பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2008

சொறி நாய் மற்றும் வெறி நாய் !


பதிவுலகில் பரப்படும் வதந்திகளில் / மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று, அதாவது "ஒரு சில பதிவர்களின் பெயரை தலைப்பில் போட்டாலே பதிவு ஹிட் ஆகிடுமாம்."

அதை பொய் என்று நிரூபனம் செய்ய என்னால் முடியும்.

எனக்கு தெரிந்து 'சொறி நாய் மற்றும் வெறிநாய்' பதிவரும் அல்ல, பதிவுகள் எதையும் வைத்திருப்பதோ, எழுதுவதோ இல்லை. ஆனாலும் பாருங்க. இந்த நாய்கள் சூடான இடுகையில் இடம்பிடிச்சிடும் (இடம் பிடித்துவிட்டது).

இப்ப சொல்லுங்க, "தலைப்பில் பிரபல பதிவர்களின் பெயரிடுவதால் பதிவுகள் சூடாகுகிறது என்பது உண்மையா ?"





(தலைப்பை வைத்து ஆர்வத்தினால் மொக்கை பதிவுகளைக் கூட சூடாக்குவது படிப்பவர்கள் தான்)

39 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

சரியாத் தெரியலையே கோவியாரே.

ஒருவேளை ரத்னேஷ் அந்த ஒருசில பதிவரில் ஒருவர் இல்லையோ.....

என் பதிவு சூடாகலையேப்பா:-)

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
சரியாத் தெரியலையே கோவியாரே.

ஒருவேளை ரத்னேஷ் அந்த ஒருசில பதிவரில் ஒருவர் இல்லையோ.....

என் பதிவு சூடாகலையேப்பா:-)
//

ஐயோ ஐயோ...!

துளசி அம்மா,

இன்னிக்கு ரத்னேஷ் அண்ணாவை நீங்கள் எனக்கு ஞாபகப்படுத்தி விட்டுட்டிங்க நன்றி !

அதுவே ரத்னேஷ் பற்றி எதும் திட்டி எழுதி இருந்தால் ஹீட் ஆகி ஹிட்டாகி இருக்கும்.

நட்புடன் ஜமால் சொன்னது…

இப்படியும் சில நாய்கள் - படம் நல்லாயிருக்கு.

பரிசல்காரன் சொன்னது…

//"ஒரு சில பதிவர்களின் பெயரை தலைப்பில் போட்டாலே பதிவு ஹிட் ஆகிடுமாம்."//

அதுல நீங்களும் ஒருத்தர் கோவி.ஜி!

இது மட்டும் ஹிட் ஆகட்டும். அப்புறம் பாருங்க!

(ஆனா.. சூப்பருங்க.. எத்தனி நாளாச்சு நீங்க இப்படி ஒரு மொக்கை போட்டு!)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ஆமாம்..இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கும்...பரிசலுக்கும்..

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை ஜமால் said...
இப்படியும் சில நாய்கள் - படம் நல்லாயிருக்கு.
//

ஓநாய் படம் தேடினேன் சரியான படி அமையல. ஓநாய்க்கு சொறி பிடிக்குமான்னு தெரியல. அதனால் இந்தப்படத்தைப் போட்டேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//"ஒரு சில பதிவர்களின் பெயரை தலைப்பில் போட்டாலே பதிவு ஹிட் ஆகிடுமாம்."//

அதுல நீங்களும் ஒருத்தர் கோவி.ஜி!

இது மட்டும் ஹிட் ஆகட்டும். அப்புறம் பாருங்க!

(ஆனா.. சூப்பருங்க.. எத்தனி நாளாச்சு நீங்க இப்படி ஒரு மொக்கை போட்டு!)
//

பார்த்து பதமாக கோ.விஜின்னு போடாமல் தள்ளிப் போட்டு இருக்கிங்க.

மொக்கைப் போடுவதுதான் மிகவும் ரொம்ப கஷ்டமாகவும் மனசாட்சிக்கு எதிராகவும் இருக்கு.

rapp சொன்னது…

:):):)

rapp சொன்னது…

//ஒருவேளை ரத்னேஷ் அந்த ஒருசில பதிவரில் ஒருவர் இல்லையோ.....

என் பதிவு சூடாகலையேப்பா//

:):):)

பெயரில்லா சொன்னது…

கோ.விஜி என்ன ஆச்சுங்க?

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

நீங்க எங்கயோ போய்ட்டீங்க!!!

பரிசல்காரன் சொன்னது…

சூடாயிடுச்சுப்பா இந்தப் பதிவு.

வலையுலக விஞ்ஞானி பாஸ் நீங்க!

பரிசல்காரன் சொன்னது…

//
மொக்கைப் போடுவதுதான் மிகவும் ரொம்ப கஷ்டமாகவும் மனசாட்சிக்கு எதிராகவும் இருக்கு/

எங்களை மறைமுகமாகத்தாக்கும் உங்கள் நுண்ணரசியலைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

:-)

(பார்த்துக்கோங்கப்பா.. ஸ்மைலி போட்டிருக்கேன்!)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
சூடாயிடுச்சுப்பா இந்தப் பதிவு.

வலையுலக விஞ்ஞானி பாஸ் நீங்க!
//

ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் போட்டாச்சு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
ஆமாம்..இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கும்...பரிசலுக்கும்..
//

பரிசலுக்கு பரிசு கிடைத்ததற்காக வருத்தம், எனக்கு பரிசல் அந்த பரிசை வாங்கித் தராததற்கு வருத்தம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//rapp said...
:):):)
//

மூன்று ஸ்மைலி போட்டால் குலுங்கி குலுங்கி குலுங்கி சிரிப்பதாக பொருளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
கோ.விஜி என்ன ஆச்சுங்க?
//

என்னது கோ.விஜியா ?

எத்தினி பேர் கிளம்பி இருக்கிங்க !!!
:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//
மொக்கைப் போடுவதுதான் மிகவும் ரொம்ப கஷ்டமாகவும் மனசாட்சிக்கு எதிராகவும் இருக்கு/

எங்களை மறைமுகமாகத்தாக்கும் உங்கள் நுண்ணரசியலைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

:-)

(பார்த்துக்கோங்கப்பா.. ஸ்மைலி போட்டிருக்கேன்!)
//

விகடனுக்குள்ளே போய்டிங்க, உங்கப் பதிவெல்லாம் மொக்கை லிஸ்டில் இருப்பதாகச் சொல்றவங்க மனநிலையை சோதிக்கனும்.

100+ பாலோயர்ஸ்.....கலக்குறிங்க பரிசல், லக்கியும் நீங்களும் தான் இப்ப ஹிட் ஹிட் அண்ட் ஹீட் !

வால்பையன் சொன்னது…

அந்த ரெண்டு நாய்களும் பதிவெழுதுறது உங்களுக்கு தெரியாதுன்னு வேணா சொல்லுங்க, ஆனா இல்லைன்னு மட்டும் சொல்லாதிங்க

பத்த வச்சிட்டியே பரட்ட

குடுகுடுப்பை சொன்னது…

நான்கூட சூடான இடுகைக்காக ஒரு பதிவு இன்னைக்கு போட்டேன், ஆனா ஆகாது போல.எல்லாரும் இங்க வந்துட்டாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
அந்த ரெண்டு நாய்களும் பதிவெழுதுறது உங்களுக்கு தெரியாதுன்னு வேணா சொல்லுங்க, ஆனா இல்லைன்னு மட்டும் சொல்லாதிங்க

பத்த வச்சிட்டியே பரட்ட
//

வாலு,

பல ரகசியங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கிங்க, உண்மையிலேயே அந்த மேட்டர் எனக்கு தெரியாது

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
நான்கூட சூடான இடுகைக்காக ஒரு பதிவு இன்னைக்கு போட்டேன், ஆனா ஆகாது போல.எல்லாரும் இங்க வந்துட்டாங்க.
//

உங்க பதிவு 24 மணி நேரத்துக்குள்ளே சூடாகிடும்.

நசரேயன் சொன்னது…

எனக்கு எல்லாம் எப்படியோ, நீங்க எது வச்சாலும் சூடுதான், ஆனா என்ன அதிலே ஆம்பிலேட் போடமுடியுமான்னு தெரியலை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியார் ஒரு பதிவர்னு தெரியும்!
ஆட்டோக்காரர்னு இப்பதான் தெரிஞ்சுச்சு!!
மீட்டர்ல சூடு வைக்கிரத்துல கைதேர்ந்தவராச்சே!!!

ILA (a) இளா சொன்னது…

//ஆட்டோக்காரர்னு இப்பதான் தெரிஞ்சுச்சு!!
மீட்டர்ல சூடு வைக்கிரத்துல கைதேர்ந்தவராச்சே!!//
பதிவ விட இந்த பின்னூட்டம் அருமை. பதிவுலக ஆட்டோக்காரர் வாழ்க!

KarthigaVasudevan சொன்னது…

அப்படி தெரியலையே கோ.வி சார்
நானும் தான் எழுதிட்டு இருக்கேன் .என் பதிவை ஒரு நாளைக்கு ௨0 பேர் வாசிக்கறதே அதிகம் .அது எப்ப சூடாகுமோ?தலைப்பு தான் பிரச்சினைன்னு யோசிச்சா இப்போ நீங்க குழப்பறிங்களே!!!

வருண் சொன்னது…

ஆமாம் சூடான இடுகையில் இப்படி டைட்டில் மற்றும் தனிநபர் தாக்குதல், (தரமான பதிவர்கள்கூட இந்த வேலையில் இப்போது இறங்கி உள்ளார்கள்) "இனபம்" போன்ற டைட்டில் ஈசியாக இடம்பிடிக்கும்!

என்னவோ போங்கப்பா!

வருண் சொன்னது…

****துளசி கோபால் said...
என் பதிவு சூடாகலையேப்பா:-)***

சந்தோசப்படுங்க! :)

ரவி சொன்னது…

///ஓநாய் படம் தேடினேன் சரியான படி அமையல. ஓநாய்க்கு சொறி பிடிக்குமான்னு தெரியல. அதனால் இந்தப்படத்தைப் போட்டேன்//

ஓநாய்க்கு மட்டுமல்ல, கழுத்தில் மொபைல் மாட்டிய எல்லா நாய்களுக்கும் சொறி பிடிக்குமென கேள்விப்பட்டிருக்கிறேன்...

குடுகுடுப்பை சொன்னது…

இந்த மாதிரி சூடான இடுகைகளை அவாய்ட் பண்ணலாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி has left a new comment on your post "சொறி நாய் மற்றும் வெறி நாய் !":

///ஓநாய் படம் தேடினேன் சரியான படி அமையல. ஓநாய்க்கு சொறி பிடிக்குமான்னு தெரியல. அதனால் இந்தப்படத்தைப் போட்டேன்//

ஓநாய்க்கு மட்டுமல்ல, கழுத்தில் மொபைல் மாட்டிய எல்லா நாய்களுக்கும் சொறி பிடிக்குமென கேள்விப்பட்டிருக்கிறேன்... //

எல்ஜி மொபைலை கட்டி இருந்த நாய்களுக்கும் சொறி வரும்.

பொதுவாக விசேசமான பின்னூட்டம் வந்தால் அப்படியே வெட்டி மறுமொழி போடுறது தான் எனக்கு வழக்கம். ஏனென்றால் போட்டவரே பின்னூட்டத்தை அழித்துவிட்டு நான் போடலைன்னு சொல்லிடக் கூடாது இல்லையா ?

பாவம்யா நீர், இருதலைக் கொள்ளி எறும்புன்னு கேள்வி பட்டு இருக்கிறேன். அதைவிட கஷ்டப்பட்டு பெயர் வாங்கத் துடிக்கிறீர். நல்ல மனுசங்களிடம் பெயர் வாங்க நினைத்தாலும் பரவாயில்லை. "அந்த மேட்டரில் மிரட்டுதலால் தான் அப்ரூவர் ஆனான் ரவி, நீங்க அவதூறு ஆறுமுகங்கிறத்துக்கு பதிலாக அப்ரூவர் ஆறுமுகம்னு சொல்லி இருக்கலாம், ரவி ரொம்ப நல்லவன், அவனாக உங்களை திட்டலை, அவனுக்கு அப்படி செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்கிறார்கள், அவன் திட்றத பெரிசா எடுத்துக்காதிங்கன்னு" ஒரு நண்பர் காதைக் கடிச்சார்.

"ச்சே ரவியும் நானும் எவ்வளவு நாள் பழகி இருக்கோம், நீங்கச் சொல்லித்தான் எனக்குத் தெரியனுமா ? மத்தவங்களுக்கு பதில் போட்ட நான் ரவியோட அவதூறுகளை கண்டுக்கவில்லை என்பதால் நீங்களே புரிஞ்சிக்கக் கூடாதா ? " என்றேன்.

மேலும் சொன்னார் "ரவிக்கு இந்த ஆபாசமெல்லாம் பெரிய விசயமே இல்லிங்க...ங்கோ**தான்னு திட்டினால் பதிலுக்கு ...ங்கோ**தான்னு திருப்பி திட்டிவிட்டு அதோடு மறந்துடுவான்...இந்த பிரச்சனையில தலையைக் கொடுத்துட்டு ரவி ரொம்பவே அவமானமாக நினைத்து கொஞ்ச நாள் பதிவுல தலையைக் காட்டவே பயந்தான்" என்றார்.

"அட நீங்க ஒண்ணு...ரவி ஒரு ரவுசுன்னு எல்லோருக்கும் தெரியும்...அவரை வழக்கம் போல எழுதச் சொல்லுங்க...நான் ஒண்ணும் அவரை தப்பா நினைக்கல...வழக்கம் போல் அந்த நடிப்பை மெயின் டென் பண்ணச் சொல்லுங்க...என்னைய திட்டுறததையோ..பெயர்வைப்பதையோ நான் பெருசா எடுத்துக்கல...ஏனென்றால் அவரு ஏற்கனவே பின்னூட்ட நாயகர் என்று பெயர் வைத்தவர் தானே" என்றேன்

"யாரோட தூண்டிலுக்கு ரவி இரையாகி இருக்கிறான்...விட்டுத்தள்ளுங்க" என்றார்.

"புரிகிறது..." என்றேன்

ரவி, பாவம் இந்த மறுமொழியை பார்த்துட்டு உனக்கு வெளியில் இருந்து மறுப்புப் போடச் சொல்லி ப்ரசர் வரும். போடுங்க. வழக்கம் போல் நான் எதுவும் கண்டுமாட்டேன். சக்திகளின் பிடியில் இருந்து வெளியே வந்து நீர் சுதந்திரமாக எழுதனும் என்பதே உங்களை நன்கு தெரிந்த பலருடைய விருப்பம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை 6:43 AM, December 12, 2008
இந்த மாதிரி சூடான இடுகைகளை அவாய்ட் பண்ணலாமே.
//

குடுகுடுப்பை சார்,

சூடான இடுகையில் வரும் பலப்பதிவுகள் மொக்கை என்று பதிவர்கள் உணர்ந்து கொள்ளட்டுமே.

பதிவுகள் சூடாகுவது பதிவின் தலைப்புக்குத்தான். லக்கிலுக் போன்று நன்கு அறியப்பட்ட ஒரு சில பதிவர்களின் இடுகைகள் விதிவிலக்கு, அவை எப்போதுமே பதிவரின் எழுத்துக்காக சூடாகுபவை

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
எனக்கு எல்லாம் எப்படியோ, நீங்க எது வச்சாலும் சூடுதான், ஆனா என்ன அதிலே ஆம்பிலேட் போடமுடியுமான்னு தெரியலை

11:26 PM, December 11, 2008
//
நசரேயன் ,
நான் போடுவது சைவ பதிவு, அதுல எப்படி ஆம்லேட் போட முடியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியார் ஒரு பதிவர்னு தெரியும்!
ஆட்டோக்காரர்னு இப்பதான் தெரிஞ்சுச்சு!!
மீட்டர்ல சூடு வைக்கிரத்துல கைதேர்ந்தவராச்சே!!!

11:41 PM, December 11, 2008
//

ஜோதிபாரதி, சூடான இடுகைக்கு என்று நினைத்து அதற்கு ஏற்றார்போல் தலைப்பு வைத்தால் கண்டிப்பாக சூடாகும், விளப்பரப்பிரியர்கள் அதை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
//ஆட்டோக்காரர்னு இப்பதான் தெரிஞ்சுச்சு!!
மீட்டர்ல சூடு வைக்கிரத்துல கைதேர்ந்தவராச்சே!!//
பதிவ விட இந்த பின்னூட்டம் அருமை. பதிவுலக ஆட்டோக்காரர் வாழ்க!
//

இளா,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// மிஸஸ்.டவுட் said...
அப்படி தெரியலையே கோ.வி சார்
நானும் தான் எழுதிட்டு இருக்கேன் .என் பதிவை ஒரு நாளைக்கு ௨0 பேர் வாசிக்கறதே அதிகம் .அது எப்ப சூடாகுமோ?தலைப்பு தான் பிரச்சினைன்னு யோசிச்சா இப்போ நீங்க குழப்பறிங்களே!!!
//

தலைப்புதான் முதன்மையானது வெறும் நாய் என்று போட்டிருந்தால் பதிவு சூடாகி இருக்காது, கூடவே பண்புபெயர் சேர்த்து இருப்பதால் சூடாகி இருக்கிறது.

ஜெகதீசன் சொன்னது…

:((

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் 9:59 PM, December 11, 2008
சூடாயிடுச்சுப்பா இந்தப் பதிவு.

வலையுலக விஞ்ஞானி பாஸ் நீங்க!
//

பரிசல்,

சென்ற ஆண்டு போட்ட குப்பை கூட சூடான இடுகைக்கு போனது
:)

இந்த பதிவு இந்த ஆண்டின் 365 ஆவது பதிவு. நாள் ஒன்றுக்கு என்ற கணக்கை நேர்செய்த பதிவு.

பெயரில்லா சொன்னது…

நாய் படம் நல்லா இருக்கு :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்