பின்பற்றுபவர்கள்

5 டிசம்பர், 2008

காமம் மற்றும் பாலுறவு புனிதமா ?

இதுபற்றி வெளியே பேசினாலே 'பாபம்' என்பதாகச் சொல்லப்படுவதாலேயே அதுபற்றிய அறியாமையிலும் ஆர்வத்திலும் சிலபல தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. 'காமம்' என்பதே மனித இன சாபமாகவே நினைக்க வேண்டி இருக்கிறது. காமமின்றிய வாழ்கை நினைத்துப் பார்த்தால் பலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். காமம் என்பது தெய்வீகம் என்றெல்லாம் கட்டமைக்கும் போதே சிலர் பக்தி / ஆன்மிக வழியில் காமம் என்பது புனித மற்றது அதாவது காமம்(பாலுணர்வு), குரோத (சினம்), லோபம்(பேராசை) , மோகம் (பெரும்பற்று / ஆசை) மற்றும் அகங்காரம் (செருக்கு) எனும் ஐந்து விகாரங்களில் (பஞ்சவிகாரங்களில்) ஒன்றாக அதாவது மனிதனின் தீய குணங்களில் ஒன்றாகவே காமம் சொல்லப்படுகிறது.

காமம் என்பது மனம் சார்ந்த உணர்வு என்றாலும் அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உயர்ந்த குணம் சார்ந்த உணர்வுகளில் ஒன்றாக வைக்க முடியாத தீய உணர்வு என்பதால் தான் காமத்தை முறைப்படுத்துதல் என்பதில் திருமணம் என்கிற சடங்கு மிகத்தேவை என்றாகியது. இறை வழிபாடு என்கிற இறைத் தொடர்பில் காமம் (வழிபாட்டின் போது காம சிந்தனைகள்) என்பது விலக்கப்பட்டதாகவே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன.

காமம் மனித இன சாபமாக நினைத்தாலும் கூட அதனை ஆண்/பெண் இருவருக்கிடையேயான அன்பிற்கு விதையாக மாற்றிக் கொண்டதில் மனிதன் ஓரளவு அந்த (தீய) உணர்வை கட்டுப்படுத்தி, முறைப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றான் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியும். காமம் என்பது பலர் சொல்வது போல் புனிதம் என்றால் அது புனிதம் என நினைக்கப்படுவது தம்பதியினருக்கு இடையே நடைபெறும் உடலுறவு குறித்து மட்டுமே என்ற அளவில் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

காமம் என்பது தனிப்பட்டவர்களின் இச்சை சார்ந்த உணர்வு, தவறு அல்ல என்று சொன்னாலும் அதற்கு வடிகாலாக (பலருக்கு) இன்னொருவர் தேவைப்படுவதால் அது தன்னை மட்டுமே சார்ந்த ஒரு உணர்வு என்றுச் சொல்ல முடியாது. பிள்ளைப் பேற்றிற்றாக இயற்கை ஆக்கிவைத்த ஆண் / பெண் ஈர்ப்பு என்ற உணர்வு அன்றாட தேவையில் ஒன்றாக மாறிப்போனது பரிணாமத்தின் கூறுகளா என்று ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் மனித இனத்தைத் தவிர்த்து மற்ற உயிரனங்களுக்கு மனம் சார்ந்த தேவையாக காமம் இருப்பது இல்லை. விலங்குகளின் பருவ வயதிற்கு பிறகு, அவைகளின் அன்றாட எண்ணங்களிலும் அவை இருப்பது இல்லை. தாய்மை அடைய தேவையான பருவ காலங்களில், அதன் குறிப்பு அறிந்து, தேவை கருதியே மற்ற உயிரனங்களிடம் உடலுறவு நடைபெறுகிறது. காமம் என்பது உடல் சார்ந்த தனிமனித தேவையாகிவிட்ட பிறகு ஆண்/ஆண், பெண்/பெண் என்பதுகூட தவறு அல்ல என்பதாகவே சமூகம் காமம் குறித்த கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளது

எவையெல்லாம் முதன்மையான தேவை (Demand) , அவை இல்லாமல் இருக்க முடியாது (must) என்ற நிலை ஏற்படுகிறதோ அங்கே தான் முறைகேடுகளும் நடைபெற ஆரம்பிக்கின்றன. அவை சந்தைப் படுத்துவதில் நகர்ந்து வியாபாரமாக மாறுகிறாது. பாலியல் என்கிற தொழில் உறுவானதற்குக் காரணம் காமம் தவிர்க்க முடியாது என்று ஆகிப் போனதால் தான் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. புனிதம் புனிதம் என்று சொல்லப்படுகின்ற காமம் அன்புடன் சேர்ந்தால் மட்டுமே புனிதம் என்பதாகச் சொல்லப்படுகிறது, பலரும் நாடிய அதே புழையை அதாவது பாலியல் தொழிலாளிடம் செல்வது கூட சில நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது, காமவெறி அதாவது பாலியல் வன்புணர்வாக அது மாறும் போது அவை குற்றமாகக் கருத்தப்பட்டு தண்டனையும் கிடைப்பதால், காமம் பாலுறவு என்பதற்கு எவ்வகையான புனிதத் தன்மையும் சமூகம் கொடுத்துவிடவில்லை.

உலகில் எந்த ஒரு செயலுக்கும் மனிதனுக்கு துணைத் தேவைப்படாவிட்டாலும், இதற்குத் துணை கண்டிப்பாக தேவைப்படுவதால் காமம் உள்ள மனிதன் எவரையுமே சுதந்திரமானவர், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாதவர் என்று சொல்லிவிட முடியாது. எங்கோ ஒருவர் பாலியல் தாகத்திற்காக கட்டிய மனைவியை விட்டு வேறொருபவரை நாடுபவராகவும், பெற்றப் பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடுவதால் மட்டுமே காமம் புனிதமற்றது என்று சொல்லிவிடமுடியாது என்று கூடச் சிலர் சொல்லலாம். ஆனால் அவற்றின் தேவை சரிவரக் கிடைக்காதவர்கள் பலரும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்பவர்களாகவே, மாற்று நாடுபவர்களாகவே மாறுவார்கள். ஆண்கள் என்று பார்த்தால் இதற்கு தூணிபவர்களின் விழுக்காடு மிகுதி. திருமணமானவர்களின் காமத்தின் தேவை என்பது 'இல்லறக் கடமை' என்ற பெயரில் காமத்தை பலர் புரிந்து கொள்ளாதிருந்தால் சமூக ஒழுக்கம் கூட சீரழிந்திருக்கும். கட்டுப்படுத்தப் பட்ட காமத்தினால் தான் சமூக ஒழுக்கம் காக்கப்படுகிறது.

*****

தனி மனிதனின் காமம் என்பது மற்ற நல்ல உணர்வுகளைவிட, குணங்களைவிட மேலானது என்ற கருத்து திணிக்கப்படுவதாலேயே 60 வயதுக்கும் மேலான ஆண்கள் கூட அதன் மீது தீராத மோகம் கொண்டு, 'முடியாத' போது வயக்ராவரை சென்றுவிட்டார்கள், ஆனால் மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு சுழற்சிக்கு பிறகு பெண்களுக்கு இதில் ஆர்வம் இருப்பதில்லை, கணவர் முறைதவறி சென்றுவிடக் கூடாது என்பதற்க்காக பெண்கள் மாதவிலக்கிற்கு பிறகு அனுமதிக்கிறார்கள் என்பதை பல ஆண்கள் புரிந்து கொண்டவர்களாக இல்லை. 60 வயதில் குறி எழுச்சி அடையாமல் போனால் வாழ்வே போய்விட்டதாகவே ஆண்கள் புலம்புவதால் பாலியல் மருத்துவர்களின் வருமானம் பலமடங்குப் பெருகிறது, மேலும் போலி மருத்துவர்களிடம் ஏராளமான பணத்தை இழக்கிறார்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டால் சரியாகிவிடும் போன்ற தவறான கருத்துகளையெல்லாம் கூட நம்புகிறார்கள்.

"இல்லற வாழ்வை நிறைவுடன் நடத்தியவர்களுக்கு 50 வயதுக்கு மேல் காம உணர்வென்பது அன்றாடத் தேவையின் ஒன்றாக இருப்பது இல்லை, அன்பும், பாசமும் பெருக்கெடுத்த வாழ்க்கையில் காமம் பற்றிய சிந்தனைகள் கூட ஏற்படுவதில்லை" - 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் சுகிசிவம் குறிபிட்டார்

உண்மைதான், தம்பதியினரிடையே உண்மையான அன்பு வெறும் காமத்தால் கட்டமைக்கப்பட்டால் அது தகற்வதற்கு நாட்கள் எடுக்காது. காமம் என்பது கழிவை வெளியேற்ற ஏற்படும் உணர்வு போன்ற அடக்க முடியாத உணர்வு, ஏற்படும் கிளர்ச்சியில் மட்டுமே வேறுபாடு. மற்றபடி காமம் என்பது புனிதத் தன்மையோ, தவிரக்க முடியாத ஒன்றோ அல்ல. அது இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம் என்பதெல்லாம் அன்பை அறியாதவர்களின், உணராதவர்களின், முட்டாள்களின் பேச்சு.

காமம் என்பது ஆண் / பெண் இருவருக்கும் பொதுவான ஒரு உணர்வென்றாலும் 'பெண்ணாசை' அதாவது பெண்களின் மீதான ஆசை என்றே அதை வகைப்படுத்தி இருப்பதும் கூட, ஆணிய சிந்தனையில் காம உணர்வின் விளைவுகளை பெண்களின் மீதான பழியாக போடும் ஆண்களின் தாழ்வுணர்வுச் சொல்லாக கருத முடிகிறது.

காமம் புனிதமற்றது என்ற சமயவாதிகளும், ஆண்களின் பிரம்மச்சாரியத்தை உயர்வாகக் கருதினார்களேயே யன்றி, கணவனை இழந்து பெண்களுக்கு, அவளுக்கு இருக்கும் வழியெல்லாம் அடைத்துவிட்டு கைம்பெண் என்கிற பட்டதைக் கொடுத்து ஓரமாக ஒதுக்கி வைப்பட்டதையும் பார்க்க வேண்டும். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமின்றிய காலகட்டத்தில் கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் 'யோகியாகவே' வாழ்ந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா ? காமம் நல்ல உணர்வென பெண்களும் கருதி இருந்தால் சமூகம் என்றோ சீர்கெட்டுப் போய் இருக்கும்.

காமம் என்பது மனித இன சாபம் தான். திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் காமம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போர், தன் இணையர்களில் ஒருவர் சரியாக ஒத்துழைக்காவிடில் கள்ளக் காதலன் / காதலியுடன் ஓடிப்போவார்கள்.

41 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

என்ன சொன்னாலும் அதன் மேல் ஒரு ஈர்ப்பு வருவதை தவிர்க்க முடியல. fuck என்ற ஒரு வார்த்தையை தலைப்பில் வைத்த ஒரே காரணத்திற்காக பல பதிவர்கள் ஒரு பதிவை படித்து அரை மணியிலே சூடாக்கினார்கள். இனி வரும் தலைமுறைக்காவது தெளிவான ஒரு அறிமுகம் தர முடியுமான்னு பார்க்கனும்.

PS சொன்னது…

http://en.wikipedia.org/wiki/Animal_sexuality#Sex_for_pleasure

http://womenshealth.about.com/od/menopause/a/sexpostmeno.htm

கோவி.கண்ணன் சொன்னது…

//PS said...
http://en.wikipedia.org/wiki/Animal_sexuality#Sex_for_pleasure

http://womenshealth.about.com/od/menopause/a/sexpostmeno.htm
//

இணைப்புக்கு நன்றி, விலங்குகளின் பால் உணர்வு குறித்து விக்கியின் கட்டுரை நன்றி. நான் சொல்வது மற்ற உயிரின வாழ்க்கையில் பாலுறவு அன்றாட வாழ்வை தீர்மாணிக்கும் ஒன்று அல்ல என்பதே.

மாதவிலக்குக்கு பிறகு பெண்களின் பாலியல் ஆர்வம் பற்றி மேற்கத்திய சிந்தனைகளைத் தான் விக்கியில் கட்டுரை ஆக்கி இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
என்ன சொன்னாலும் அதன் மேல் ஒரு ஈர்ப்பு வருவதை தவிர்க்க முடியல. fuck என்ற ஒரு வார்த்தையை தலைப்பில் வைத்த ஒரே காரணத்திற்காக பல பதிவர்கள் ஒரு பதிவை படித்து அரை மணியிலே சூடாக்கினார்கள். இனி வரும் தலைமுறைக்காவது தெளிவான ஒரு அறிமுகம் தர முடியுமான்னு பார்க்கனும்.
//

பாலியல் என்றாலே சூடாகும் செய்திதானே :)

PS சொன்னது…

மறுமொழிக்கு நன்றி.

நம்ம ஊர்ல மாதவிலக்குக்கு பின் பெண்களுக்கு காம இச்சைகள் குறைவது குறித்தான ஆய்வுகள் உள்ளனவா? இருப்பின் சுட்டவும்.

"மறுமணம் என்ற பேச்சுக்கே இடமின்றிய காலகட்டத்தில் கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் 'யோகியாகவே' வாழ்ந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா ?" - யோகியாக வாழ கட்டாயப் படுத்தப்பட்டார்கள் என்பது தானே உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

// PS said...
மறுமொழிக்கு நன்றி.

நம்ம ஊர்ல மாதவிலக்குக்கு பின் பெண்களுக்கு காம இச்சைகள் குறைவது குறித்தான ஆய்வுகள் உள்ளனவா? இருப்பின் சுட்டவும்.//

குழந்தைகள் பருவ வயதை எட்டியவுடனேயே குழந்தைகளின் வாழ்க்கை குறித்த அக்கரையில் பெண்கள் முழுதுமாக கவனம் செலுத்துகிறார்கள். அதன் பிறகு அன்றாடம் கணவரின் அழைப்பை விரும்புவர்களாக இருப்பது இல்லை என்பதே பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆய்வுகள் எதுவும் எடுக்கப்பட்டதா என்று தெரியாது.

//"மறுமணம் என்ற பேச்சுக்கே இடமின்றிய காலகட்டத்தில் கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் 'யோகியாகவே' வாழ்ந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா ?" - யோகியாக வாழ கட்டாயப் படுத்தப்பட்டார்கள் என்பது தானே உண்மை.

ஆம், நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஆண்களால் அப்படி வாழ முடிந்தது இல்லையே. வெகு சிலர் மட்டுமே தாயுமானவர்கள் போல் வாரிசுகளின் நலனை பெரிதாக நினைத்திருக்கிறார்கள்.

தற்காலத்தில் மறுமணம் பற்றிய புரிதல் இருந்தாலும் விதிவயத்தால் 40வயதுக்கு மேல் கைம்பெண்ணாகும் பெண்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது பற்றி நினைப்பது இல்லை என்பது உண்மைதானே.

தராசு சொன்னது…

//காமம் என்பது ஆண் / பெண் இருவருக்கும் பொதுவான ஒரு உணர்வென்றாலும் 'பெண்ணாசை' அதாவது பெண்களின் மீதான ஆசை என்றே அதை வகைப்படுத்தி இருப்பதும் கூட, ஆணிய சிந்தனையில் காம உணர்வின் விளைவுகளை பெண்களின் மீதான பழியாக போடும் ஆண்களின் தாழ்வுணர்வுச் சொல்லாக கருத முடிகிறது.//

குழப்பறீங்க கண்ணன்,

பெண்ணாசை என்பது அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருக்கப்போக, ஆண்களின் எதிர்பால் ஈர்ப்பு உணர்வுகளை எல்லாம் இந்த ஓரே வார்த்தைக்குள் சௌகர்யமாக வகைப்படுத்திவிட முடிகிறது. ஆனால் ஆணாசை என்ற ஒன்றும் தொன்று தொட்டு இருந்த ஒன்றுதான், ஆனால் அந்த ஆசையின் விளைவுகளை அதிகம் பேசுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது தான் உண்மை. சூர்ப்பனகையின் ஆசையை இந்த வகையில் தான் காண முடியும்.

//காமம் என்பது மனம் சார்ந்த உணர்வு என்றாலும் அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உயர்ந்த குணம் சார்ந்த உணர்வுகளில் ஒன்றாக வைக்க முடியாத தீய உணர்வு என்பதால் தான் காமத்தை முறைப்படுத்துதல் என்பதில் திருமணம் என்கிற சடங்கு மிகத்தேவை என்றாகியது//

காமம் மாத்திரமல்ல, எந்த ஒரு உணர்வும் முறையான வெளிப்படுத்துதலின் மூலமாகவே அது ஒரு நல்லுணர்வாக உருவெடுக்கவும் உணரப்படவும் முடியும்.


//காமம் என்பது மனித குல சாபம் தான்.//

அல்ல, ஒத்துக்கொள்ளவே முடியாது,

உலகில் தோன்றிய எல்லா உயிருக்கும் இன்பம் துய்க்க கொடுக்கப்பட்ட வரமே காமம். கிடைத்த எந்த ஒரு வரத்தையும் அளவுக்கு மீறியோ, தவறான வழியிலோ உபயோகித்தால் தான் அது சாபமாகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

// தராசு said...
குழப்பறீங்க கண்ணன்,

பெண்ணாசை என்பது அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருக்கப்போக, ஆண்களின் எதிர்பால் ஈர்ப்பு உணர்வுகளை எல்லாம் இந்த ஓரே வார்த்தைக்குள் சௌகர்யமாக வகைப்படுத்திவிட முடிகிறது. ஆனால் ஆணாசை என்ற ஒன்றும் தொன்று தொட்டு இருந்த ஒன்றுதான், ஆனால் அந்த ஆசையின் விளைவுகளை அதிகம் பேசுவதற்கான ஆதாரங்கள் இல்லை என்பது தான் உண்மை. சூர்ப்பனகையின் ஆசையை இந்த வகையில் தான் காண முடியும்.//

நான் 'ஆணாசை' என்று ஏன் சொல்வதில்லை என்று கேட்கவில்லை. கட்டுபாடின்றிய பாலியல் வேட்கையால் கெட்டுப் போகும் ஆண்களை 'பெண்ணாசை' மிக்கவர்கள், பெண்ணாசையில் விளைந்த கேடு, என்றெல்லாம் சொல்லுகிறார்களே. ஆண்களின் மிதமிஞ்சிய பால் உணர்வு என்பதை இழிவாகச் சொல்லாமல் பெண்மீதான பழியாக பெண்ணாசை என்று சொல்வதைக் குறிப்பிட்டுத் தான் கேட்டு இருக்கிறேன்

//காமம் மாத்திரமல்ல, எந்த ஒரு உணர்வும் முறையான வெளிப்படுத்துதலின் மூலமாகவே அது ஒரு நல்லுணர்வாக உருவெடுக்கவும் உணரப்படவும் முடியும்.//

அன்போ மற்ற உணர்வுகளோ புரிந்து கொள்ளப்படாவிட்டாலும் நாளடைவில் புரியவைக்கலாம், ஆனால் தம்பதிகளுக்குள் காமம் பற்றிய ஒருவரின் விருப்பம் சரியாக புரியவைக்கப்படாவிட்டால் மற்றவருக்கு துன்பம் தான். விருப்பமில்லாத பால் உறவு வண்புணர்வுக்கு சமம் என்று தானே சொல்கிறார்கள்.

//அல்ல, ஒத்துக்கொள்ளவே முடியாது,

உலகில் தோன்றிய எல்லா உயிருக்கும் இன்பம் துய்க்க கொடுக்கப்பட்ட வரமே காமம். கிடைத்த எந்த ஒரு வரத்தையும் அளவுக்கு மீறியோ, தவறான வழியிலோ உபயோகித்தால் தான் அது சாபமாகிறது.//

உலகில் உள்ள எல்லா உயிரனங்களிடையே இருக்கும் அன்பு காமம் சார்ந்தது அல்ல, அன்றாடம் அவற்றை அவை நினைப்பதும் இல்லை. மனிதனுக்கு அது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பதாக அமைந்துவிட்டு இருப்பது சாபம் தானே.

ஆட்காட்டி சொன்னது…

புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆட்காட்டி said...
புதுசா ஏதாவது சொல்லுங்கப்பா..
//

காமத்தைப் பற்றி புதுசா சொல்லவேண்டுமென்றால் 'பஜாரில் புதுசு' என்பது போல் எதாவது புதிய கண்டுபிடிப்புகள் பற்றித்தான் சொல்ல வேண்டும். அதுபற்றி எதுவும் தெரியாது

Thangavel Manickadevar சொன்னது…

கோவி கண்ணன், க்மெண்ட் ஃப்ராய்டு பற்றி படித்திருப்பீர்களே. மனித வாழ்வின் அச்சாணியே காமம் தான். காமம் மனிதனின் சாபக்கேடு என்பதெல்லாம் வெறும் பேச்சு.

வலியுறுத்தப்பட்ட குடும்ப உறவுகளில் காமம் என்பது அசிங்கம். ஆனால் குடும்பங்கள் காமத்தால் தான் கட்டுப்பட்டு இருக்கும். அதன் படி வாழ்க்கை நடக்கும். பல முரண்பாடுகள் கொண்டவை குடும்ப வாழ்க்கை.

ஆனால் எதுவும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் சூரியனெப்படி இரவாகவும் பகலாகவும் தெரிகின்றானோ அது போல....

பொத்தாம் பொதுவாக காமம் என்பது சாபக்கேடு என்று சொல்வது ஏற்புடையதன்று.

தராசு சொன்னது…

//நான் 'ஆணாசை' என்று ஏன் சொல்வதில்லை என்று கேட்கவில்லை. கட்டுபாடின்றிய பாலியல் வேட்கையால் கெட்டுப் போகும் ஆண்களை 'பெண்ணாசை' மிக்கவர்கள், பெண்ணாசையில் விளைந்த கேடு, என்றெல்லாம் சொல்லுகிறார்களே. ஆண்களின் மிதமிஞ்சிய பால் உணர்வு என்பதை இழிவாகச் சொல்லாமல் பெண்மீதான பழியாக பெண்ணாசை என்று சொல்வதைக் குறிப்பிட்டுத் தான் கேட்டு இருக்கிறேன்//

பெண்ணாசை என்பது பெண்ணுக்குள்ளிருக்கும் ஆசையாக எப்பொழுதும் அர்த்தம் கொள்ளப்பட்டதில்லை, பெண்ணின் மீது ஆணுக்கு இருக்கும் ஆசையாகத்தான் கருதப்பட்டுள்ளது. அப்படியிருக்க இதில் பெண்கள் எங்கு இழிவு படுத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.

//விருப்பமில்லாத பால் உறவு வண்புணர்வுக்கு சமம் என்று தானே சொல்கிறார்கள்//

விருப்பமில்லாத பாலுறவு/உடலுறவு மாத்திரமல்ல, விருப்பமில்லாத எந்த உறவுமே எந்த தம்பதியராலும் ரசிக்கப்படவோ, அனுபவிக்கப்படவோ மாட்டாது. இப்படியிருக்க அது அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடு விருப்பமில்லாத ஒரு எதிர்பாலின நபரிடத்திலிருந்து வெளிப்படுத்தப்படுகிறதென்றால் அந்த உணர்வுகளுக்கு அர்த்தமே இல்லையே.

//உலகில் உள்ள எல்லா உயிரனங்களிடையே இருக்கும் அன்பு காமம் சார்ந்தது அல்ல, அன்றாடம் அவற்றை அவை நினைப்பதும் இல்லை. மனிதனுக்கு அது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பதாக அமைந்துவிட்டு இருப்பது சாபம் தானே.//


கோவியாரே, காமத்தைக் கொன்ற மனிதர்கள் உண்டு (விவேகானந்தர்), ஆனால் காமத்தைக் கொன்ற விலங்குகளை சொல்லுங்களேன்.

ஆகவே காமம் சாபமல்ல, வரம்

கோவி.கண்ணன் சொன்னது…

//தராசு said...
பெண்ணாசை என்பது பெண்ணுக்குள்ளிருக்கும் ஆசையாக எப்பொழுதும் அர்த்தம் கொள்ளப்பட்டதில்லை, பெண்ணின் மீது ஆணுக்கு இருக்கும் ஆசையாகத்தான் கருதப்பட்டுள்ளது. அப்படியிருக்க இதில் பெண்கள் எங்கு இழிவு படுத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.//

பெண்ணாசையை நான் பெண்ணின் ஆசை என்று சொல்லவில்லை. பாலுணர்வு என்பது இருபாலினருக்கும் பொதுவானதாக இருக்கும் பொழுது, 'பெண்ணாசையால் கெட்டவர்கள்' என்று இந்திரன் முதலானோர்க்குச் சொல்லப்படுவதைக் கவனியுங்கள். காகவெறியால் கெட்டான் என்று சொல்லப்படுவதில்லை. பெண்ணின் மீதான பாலியல் விருப்பம் தவறு என்பதாக ஆணியச் சிந்தனையால் சொல்லப்படும் மறைவுச் சொல் அது. அதுவே ஒரு பெண் ஆணின் விருப்பின்றி அவள் மட்டுமே விரும்பினால் அவளுக்கு கொடுக்கப்படும் பட்டம் 'அலைகிறவள்'

//விருப்பமில்லாத பாலுறவு/உடலுறவு மாத்திரமல்ல, விருப்பமில்லாத எந்த உறவுமே எந்த தம்பதியராலும் ரசிக்கப்படவோ, அனுபவிக்கப்படவோ மாட்டாது. இப்படியிருக்க அது அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உணர்வுகளின் வெளிப்பாடு விருப்பமில்லாத ஒரு எதிர்பாலின நபரிடத்திலிருந்து வெளிப்படுத்தப்படுகிறதென்றால் அந்த உணர்வுகளுக்கு அர்த்தமே இல்லையே.//

மற்ற உணர்வுகளில் உடல் தீண்டுதல்கள் இருக்காது, ஏற்காவிட்டாலும் பெரிதாக சினம் வராது. கட்டாயப்படுத்தப்படும் காமமும், மறுக்கப்படும் காமமும் சினத்தை ஏற்படுத்தும்.

//கோவியாரே, காமத்தைக் கொன்ற மனிதர்கள் உண்டு (விவேகானந்தர்), ஆனால் காமத்தைக் கொன்ற விலங்குகளை சொல்லுங்களேன்.//

ஏற்கனவே சொல்லிவிட்டேன், விலங்குகளின் காமம் அன்றாடத் தேவையாக இருப்பதில்லை. உந்துதல், உணர்வு எல்லாம் இனப்பெருக்கம் சார்ந்து நடப்பவை. ஒரு சில விலங்குகள் குறிப்பாக புணரும் வாய்ப்பில்லாத சில யானைகளுக்கு என்றோ ஒருநாள் மதம் பிடிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எல்லா யானைகளுக்கும் அவ்வாறு மதம் பிடிப்பது இல்லை

//ஆகவே காமம் சாபமல்ல, வரம்//

அதில் ஒத்துழைக்கும் இருமனங்களுக்கு வேண்டுமானல் அவ்வாறு கூறிக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கு காமம் என்பது நரகம், அந்த வேதனையிலிருந்து (அவஸ்தையிலிருந்து) தற்காலிகமாக விடுபட விலையும் கொடுக்கிறார்கள்.

சரியான வடிகால் கிடைக்காவிட்டால் காமம் அவஸ்தை இல்லையா ? முடியாத போது தன்கையே என்று நிவாரணம் தேடிக் கொள்கிறார்கள்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தங்கவேல் மாணிக்கம் said...
கோவி கண்ணன், க்மெண்ட் ஃப்ராய்டு பற்றி படித்திருப்பீர்களே. மனித வாழ்வின் அச்சாணியே காமம் தான். காமம் மனிதனின் சாபக்கேடு என்பதெல்லாம் வெறும் பேச்சு.//

பிராய்டு புத்தகம் நானும் படித்து இருக்கிறேன். உளவியலாளர்கள் அனைவரும் ஒன்றுபோலவே ஒன்றைப் பற்றி கருத்துறைப்பதில்லை என்பதை ஒப்பு நோக்கவேண்டும். ஆராய்ச்சித் தவிர்த்து அல்லது ஆராய்ச்சியை அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப அதில் பதிய வைப்பதும் உளவியலாளர்களின் திறன் இருக்கிறது. படிப்பதற்கு பேருண்மைகள் போல் தோன்றுவது கருத்துக் கோர்ப்பினாலும் எழுதுத் திறமையாலும் கூட இருக்கலாம்.
பாலுணர்வில் மிகுந்த நாட்டமுள்ளவர்கள் அதைத் தவறாக நினைக்க மாட்டார்கள் உணவைப் போல் அன்றாடத் தேவை என்பதாக அதனை ஞாயப்படுத்திவிடுவார்கள்.
அதனால் தான் காமம் என்பது முறைப்படுத்தலுக்காக திருமண உறவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காட்டுவாசிகளாக இருந்தாலும் பலரையும் புணரலாம் என்று அந்த சமூகத்தையும் உள்ளடக்கிய மனித இனம் நினைப்பது இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

//வலியுறுத்தப்பட்ட குடும்ப உறவுகளில் காமம் என்பது அசிங்கம். ஆனால் குடும்பங்கள் காமத்தால் தான் கட்டுப்பட்டு இருக்கும். அதன் படி வாழ்க்கை நடக்கும். பல முரண்பாடுகள் கொண்டவை குடும்ப வாழ்க்கை.
ஆனால் எதுவும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் சூரியனெப்படி இரவாகவும் பகலாகவும் தெரிகின்றானோ அது போல....
//

திருமணமான ஆண்களைப் பொருத்த அளவில் பெண்கள் அதனை ஒரு பரிசாகக் கொடுப்பதாகவே அவளுக்கு புரியவைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு கட்டுப்பாடுடன் தான் நல்ல இல்லறம் நடக்கிறது. அதை மறுக்கும் பெண்களை, அதில் விருப்பமில்லாத பெண்களை உடனே மனமுறிவும் செய்துவிடுவார்கள்.



//பொத்தாம் பொதுவாக காமம் என்பது சாபக்கேடு என்று சொல்வது ஏற்புடையதன்று.
//

ஆனால் அதன் பெருட்டு மிதமிஞ்சிய வெறியில் நடக்கும் பாலியல் வன்புணர்வு அதனை மறைக்க கொலை என்றெல்லாம் செல்கிறது அல்லவா ?

selventhiran சொன்னது…

உறவு முடிந்தவுடன் தோன்றும் "ச்சே இதுக்குத்தானா..." என்கிற அயற்சிதான் மீண்டும் மீண்டும் இச்சை கொள்ளச் செய்கிறதுங்றார் ஓஷோ. யாராவது ஒரு அனுபவஸ்தர் உண்மைதானான்னு சொல்லுங்க...

வருண் சொன்னது…

காமம் மற்றும் பாலுறவு புனிதமா ?"

1) காமம் ஏன் புனிதமாக இருக்கனும்?அது புதிராகவும் இருக்க வேண்டிய தில்லை! அது அதாகவே இருக்கட்டும்.

----------------

***காமமின்றிய வாழ்கை நினைத்துப் பார்த்தால் பலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.***

காமவெறி தற்கொலைய நாடியதாக நான் கேல்விப்பட்டதில்லை, கோவி!

காமவெறி மனிதனை மிருகமாக்குவதென்னவோ உண்மைதான்

---------------

***காமம் என்பது மனித இன சாபம் தான். திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் காமம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போர், தன் இணையர்களில் ஒருவர் சரியாக ஒத்துழைக்காவிடில் கள்ளக் காதலன் / காதலியுடன் ஓடிப்போவார்கள்.***

எனக்கு இங்கே புரியவில்லை!

ஏன் ஓடிப்போகனும்?

விவாகாரத்து செய்துகொண்டு தனக்கு ஒத்துவருகிற துணை தேட வேண்டியது தானே?

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
காமம் மற்றும் பாலுறவு புனிதமா ?"

1) காமம் ஏன் புனிதமாக இருக்கனும்?அது புதிராகவும் இருக்க வேண்டிய தில்லை! அது அதாகவே இருக்கட்டும்.

----------------//
நான் புதிர் என்று சொல்லவில்லை. புனிதம் இல்லை என்று மட்டுமே இங்கே சொல்கிறேன். பெரும்பாழும் ஒருவரின் ஒழுக்கம் அவர்களின் காமம் சார்ந்த செயலில் அவர்கள் எவ்வளவு தூரம் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொருத்தும் சொல்லப்படுகிறது இல்லையா ?


//***காமமின்றிய வாழ்கை நினைத்துப் பார்த்தால் பலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.***

காமவெறி தற்கொலைய நாடியதாக நான் கேல்விப்பட்டதில்லை, கோவி!//

திடிரென்று எதோ உடலியல் காரணங்களால் காம உணர்வை இழந்தவர்களின் மனநிலை அப்படித்தான் இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது. பலர் வெளியே சொல்ல தயக்கம் காட்டுவார்கள், சிலர் தவறான மருத்துவமுறைகெளெல்லாம் நாடுவார்கள் என்பது உண்மைதானே. மன அழுத்தத்தில் இருப்பார்கள். ஏனெனில் காமம் இல்லை என்றால் வாழ்க்கையும் அன்பும் இல்லை என்பதாகத் தான் சமூகம் கருத்தேற்றி வைத்திருக்கிறது

வருண் சொன்னது…

என் பார்வையில்,

* காமத்தை புனிதம் என்று சொல்வது ஒரு மாதிரியான உளறல்!

நாம் ருசியாக வக்கனையாக சாப்பிடுவது புனிதமா? காமத்தையும் புனிதத்தையும் எதுக்கு லின்க் பண்ணனும்? ஏத்ஹொ வேலை வெட்டி இல்லாதவன் செய்துவிட்டுப்போனது. நம்மளும் புனிதமா இல்லையானு அலைகிறோம்!

வருண் சொன்னது…

கோவி!

என்னைக்கேட்டால், அன்பு என்பதே புனிதமானதானு தெரியலை!

நிறைய நேரம் அன்பில் சுயநலம் இருக்கிறது!

தாயன்பில் கூட சுயநலம் இருக்கு!

தெய்வத்திடம் காட்டும் அன்பிலும் சுயநல்ம இருக்கு!

சுயநலம் கொண்ட எதுவுமே புனிதமானதில்லை னு நான் சொன்னா என்ன சொல்லுவீங்க? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
கோவி!

என்னைக்கேட்டால், அன்பு என்பதே புனிதமானதானு தெரியலை!

நிறைய நேரம் அன்பில் சுயநலம் இருக்கிறது!

தாயன்பில் கூட சுயநலம் இருக்கு!//

எதிர்பார்ப்பில் வைக்கப்படும் அன்பு சுயநலம் தான். ஆனால் அன்னை தெரசா மற்றும் பணம் வாங்காத சேவை அமைப்புகள் மனிதர்கள் மீது வைக்கும் அன்பில் சுயநலம் உண்டா ? ஒரு ஆண்டு அகவை உள்ள குழந்தையின் மகிழ்வான சிரிப்புடன் தாயை நோக்கிய அன்பில் சுயநலம் உண்டா ? நட்பில் ?

//தெய்வத்திடம் காட்டும் அன்பிலும் சுயநல்ம இருக்கு!
//

இது உண்மை என்றாலும் அதனால் பாதிப்பு அடைபவர்கள் இல்லை. அதனால் தான் இறைப்பற்று, இறை அன்பு என்கிறார்கள், 'பற்றுக பற்றாற்றானை' என்று சொல்வதும் அதனால் தான்

//சுயநலம் கொண்ட எதுவுமே புனிதமானதில்லை னு நான் சொன்னா என்ன சொல்லுவீங்க? :)
//

இது 100 விழுக்காடு சரி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
என் பார்வையில்,

* காமத்தை புனிதம் என்று சொல்வது ஒரு மாதிரியான உளறல்!//

நானும் அதைத்தான் சொல்கிறேன். :) ஒப்பந்தப்படியும் பாதிப்பின்றியும், பரிமாறிக் கொள்ளப்படும் உணர்வு. இருவருக்கும் அதில் ஏற்பு இருக்க வேண்டும்.

//நாம் ருசியாக வக்கனையாக சாப்பிடுவது புனிதமா? //
ஆனால் அவை குற்றம் குற்றமின்மையில் வராது எனவே புனிதப்படுத்துதல் என்பது சைவ / அசைவமா என்பதுடன் முடிகிறது. அசைவத்தை புனிதப்படுத்த தெய்வத்தின் பெயரால் பலி இடுகிறார்கள்.

//காமத்தையும் புனிதத்தையும் எதுக்கு லின்க் பண்ணனும்? ஏத்ஹொ வேலை வெட்டி இல்லாதவன் செய்துவிட்டுப்போனது. நம்மளும் புனிதமா இல்லையானு அலைகிறோம்!
//

காமத்தையும், காமமின்மையும் புனிதமாக வெவ்வேறு தளங்களில் சொல்லப்படுகிறது என்பது தான் அவற்றில் இருக்கும் முரண்பாடு.

வருண் சொன்னது…

அன்னை தெரசா அன்பு பற்றி எனக்கு தெரியாது கோவி. அவரை விட்டுவிடுவோம்!

ஒரு சில அன்பு புனிதமானது, ஒரு சில நட்பும் புனிதமானது. அதுபோல் ஒரு சில காமமும் புனிதமானதுதான்!

இவை எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப அரிதானது என்பதை மனதில் கொண்டு எழுதுறேன்!

நிறைய பொறுக்கிகளும்/அரைவேக்காடுகளும் காமம் புனிதமாந்துனு சொல்லி பிழைப்பு நடத்துதுகள் என்பது என்னவோ உண்மதான்!

நம்ம ஆளுக எதை அப்யுஸ் பண்ணாமல் விட்டான்! இப்போ காமத்தை புனிதம்னு சொல்லி ஏதோ உள்றைக்கொண்டு திரியுதுகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//செல்வேந்திரன் said...
உறவு முடிந்தவுடன் தோன்றும் "ச்சே இதுக்குத்தானா..." என்கிற அயற்சிதான் மீண்டும் மீண்டும் இச்சை கொள்ளச் செய்கிறதுங்றார் ஓஷோ. யாராவது ஒரு அனுபவஸ்தர் உண்மைதானான்னு சொல்லுங்க...
//

செல்வேந்திரன்,
அதை விருப்பம் உள்ளவரை அனுபவத்துவிட்டு வாருங்கள் தவறல்ல அதன் பிறகே உங்களின் மண்டையில் ஞானம் ஏறும் என்று சொல்லி அதற்கு தாராள அனுமதி கொடுத்தாராம் ஓஷோ !

உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா ? இவற்றை பிறர் சொல்லி தெரிந்து கொள்ள முடியாது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...

இவை எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப அரிதானது என்பதை மனதில் கொண்டு எழுதுறேன்!//

ஆனால் அவற்றினால் கிடைக்கும் பரிசான வாரிசு கிடைக்கிறதே. ஆனால் அதையும் சிலர் குப்பையில் வீசிவிடுகிறார்கள். நீங்கள் சொல்வது சரிதான். ஏற்பு இல்லாவிட்டாலும் சகிப்புத்தன்மையில் தான் இவற்றில் புரிந்துணர்வும் வளர்க்கப்படுகிறது.


//நிறைய பொறுக்கிகளும்/அரைவேக்காடுகளும் காமம் புனிதமாந்துனு சொல்லி பிழைப்பு நடத்துதுகள் என்பது என்னவோ உண்மதான்!

நம்ம ஆளுக எதை அப்யுஸ் பண்ணாமல் விட்டான்! இப்போ காமத்தை புனிதம்னு சொல்லி ஏதோ உள்றைக்கொண்டு திரியுதுகள்!

2:29 AM, December 06, 2008
//
காமம் புனிதமானது என்று சொல்பவர்களை வீட
காமம் புனிதமற்றது என்று சொல்லும் சாமியார்கள் பெரும்பாலும் காமவெறியர்களாக இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

வருண் சொன்னது…

பொதுவாக சாமியார்கள் எல்லாம் ஒரு மாதிரியான நடிகர்கள்தான், கோவி!

நடிக்க ஆரம்பித்தாலே உண்மையை மறைக்கெ வேண்டி வரும். அது காமம் என்கிற விசயத்தில் நடிக்க ஆரம்பித்தால், சொல்லவே வேணாம்!

நம்ம சாமியார் ஒருவர், அனுராதா ரமணனனை பாலியல் உறவுக்கு கூப்பிட்ட அக்தை தெரியுமில்லையா உங்களுக்கு?

இவனுகளை கும்பிட்டு ஜால்ரா அடிக்கிறவனுகளை சொல்லனும்!

என்னைக்கேட்டால் சாமியாரை எல்லாம் காயடிச்சு விட்டுடனும்! அவனுகள்தான் எல்லத்தாயும் துறந்த்வர்கள் ஆச்சே. இதை முதலில் துறக்கட்டும்! :-)

KARMA சொன்னது…

புனிதம் என்றால் என்ன?

அப்படி ஒன்று இருந்தாலும் அது எல்லோருக்கும் புனிதமாக இருக்கவேண்டியது அவசியமா?

அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் ....

சரி.....இதை விட்டுவிடலாம்.

லைசென்ஸ் வாங்கிய பிறகும்கூட குற்ற உணர்வு இல்லாமல் முழுமையாக செய்ய முடியாத ஒரு நிலையை மனிதகுலத்தின் சாபம் என்பதில் உடன்படுகிறேன்.

KARMA சொன்னது…

வருண்,

//என்னைக்கேட்டால் சாமியாரை எல்லாம் காயடிச்சு விட்டுடனும்! அவனுகள்தான் எல்லத்தாயும் துறந்த்வர்கள் ஆச்சே. இதை முதலில் துறக்கட்டும்! :-)
//

காமம், கற்பழிப்பு, வல்லுறவு என்பதெல்லாம் உறுப்பு (பிறப்புறுப்பு) தாண்டி யோசிக்க வேண்டிய விஷயங்கள்.

மேலும் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக பேசுவது சரியில்ல. ஆன்மிகவாதி என்ற போர்வையில் தவறிழைப்பவர் இருக்கலாம். அது ஒரு போலீஸ்காரர்/ஆசிரியர் தவறிழைப்பது போலவே.

வருண் சொன்னது…

***லைசென்ஸ் வாங்கிய பிறகும்கூட குற்ற உணர்வு இல்லாமல் முழுமையாக செய்ய முடியாத ஒரு நிலையை மனிதகுலத்தின் சாபம் என்பதில் உடன்படுகிறேன்.***

"லைசெண்ஸ்" எதுக்கு வாங்கி இருக்கிறார்கள்?

எந்த ஒரு காரியமுமே இரண்டு பேர் சேர்ந்து "செய்ய" வேண்டியது வந்தாலே கருத்து வேற்றுமை இல்லாமல் இருக்காது!

வருண் சொன்னது…

***மேலும் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக பேசுவது சரியில்ல. ஆன்மிகவாதி என்ற போர்வையில் தவறிழைப்பவர் இருக்கலாம். அது ஒரு போலீஸ்காரர்/ஆசிரியர் தவறிழைப்பது போலவே.***

எந்த சாமியார் நல்லவர்னு சொல்றீங்க?
போலீஸ்காரரும் ஆசிரியர்களும் வயித்துப்பொழைப்புக்காக அந்த தொழில் செய்கிறார்கள்.

சாமியார்களும் அப்படியா, கர்மா?

ஆட்காட்டி சொன்னது…

பிராய்டினது கொகைகளிலும் இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.இன்செஸ்ட் களுக்கு பிராய்டு குடுத்த விளக்கங்கள் சரிப்பட்டு வருமா?

ஓஷோ சொன்னது சிரிப்புத் தான் வருது. உறவு முடிந்தவுடன் களைத்து தூங்கிவிடலாம். அல்லது ஓடியும் விடலாம். அவர் கருத்துக்கள் படி. மனமொத்த தம்பதிகளுக்கு இன்னமும் நிறைய வேலை உண்டு. ப்கிர்ந்து கொள்ள. இல்லாவிட்டால் அது வெறும் உடல் இணைப்புத்தான்.

மனிதன் மட்டும் தான் சதா பாலியல் எண்ணங்களில் அலைபவன். உடனடியாகத் தூண்டப்படக் கூடியவன். மிருகங்களுக்கு அப்படி இல்லை. பெண்ணாசை ஒருவன் சாகும் மட்டும் இருக்கும். மற்ற ஆசைகளை விட.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...
பொதுவாக சாமியார்கள் எல்லாம் ஒரு மாதிரியான நடிகர்கள்தான், கோவி!
//

பொதுவாக சாமியார்களில் பலர் என்று இருக்க வேண்டும், எல்லோரும் அப்படியல்ல. உண்மையான இறைவேட்கை உள்ளவர்களுக்கு காமம் துட்சமே.

//நம்ம சாமியார் ஒருவர், அனுராதா ரமணனனை பாலியல் உறவுக்கு கூப்பிட்ட அக்தை தெரியுமில்லையா உங்களுக்கு?//

அவர்களின் முதல் குரு ஆதி சங்கரரே, மாற்றான் மனைவியை அதாவது பெண் இன்பம் துய்த பிறகு தான் முழுமை அடைந்தாராம். இவர்களின் செயலுக்கான ஞாயத்துக்கு அது ஒன்று போதாதா ?

//இவனுகளை கும்பிட்டு ஜால்ரா அடிக்கிறவனுகளை சொல்லனும்!//

அவனுங்க ஜால்ரா அடித்தால் பரவாயில்லை. ஆனால் லோக குரு என்று பரப்புவதெல்லாம் டூ மச் தான்.

//என்னைக்கேட்டால் சாமியாரை எல்லாம் காயடிச்சு விட்டுடனும்! அவனுகள்தான் எல்லத்தாயும் துறந்த்வர்கள் ஆச்சே. இதை முதலில் துறக்கட்டும்! :-)
//

ஆமாங்க நான் கூட ஒரு பதிவில் அப்படித் தான் சொல்லி இருக்கிறேன். ஆசையை அடக்குபவர்கள், இந்த சின்ன தியாகத்துக்கு முன்வரவேண்டும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//KARMA said...
புனிதம் என்றால் என்ன? //

காலக் கொடுமையில் எல்லாமே ஆராய்ச்சிக்கு உள்ளாக்கி நிராகரிக்கப்படுவது வியப்பாகவே இருக்கிறது. தாய்மை, தாயன்பு, தந்தையுணர்வு, நட்பு, இறையன்பு போன்றவற்றில் இருக்கும் உணர்வுகள்
புனிதம் தான். அதில் விழுக்காடுகளைப் பொருத்தே அவை விமர்சனம் செய்யப்படுகிறது.

நல்லது / கெட்டது என்ற ஒன்று கூட இல்லை என்கிறோம், ஆனால் அது உண்மையா ?

மரத்துக்கு லாபம் இல்லாத "பழம்" என்பதை நினைத்துப் பாருங்கள், பழம் தருவது மரத்துக்கு மறைமுகமான பயன் தான், அவற்றின் மூலம் விதைப்பரவல் நடக்கிறது, மரத்தின் பழம் என்பது மரத்துக்கு நல்லதை செய்கிறது. நல்லது / கெட்டது எல்லாம் இயற்கையிலேயே உள்ள பிரிவுகள் தான். மனிதரின் சுயநலம், தவறுகளை செய்துவிட்டு ஞாயம் கற்பிக்கும் போது நல்லது / கெட்டதைக் கூட சமப்படுத்த முயற்சிக்கிறார்கள். :)

//அப்படி ஒன்று இருந்தாலும் அது எல்லோருக்கும் புனிதமாக இருக்கவேண்டியது அவசியமா?//

ஒரு சிலரின் தவறான புரிதலை வைத்துக் கொண்டு சில யுனிவர்சல் ட்ரூத் மாறாது என்பது உண்மை இல்லையா ?

//லைசென்ஸ் வாங்கிய பிறகும்கூட குற்ற உணர்வு இல்லாமல் முழுமையாக செய்ய முடியாத ஒரு நிலையை மனிதகுலத்தின் சாபம் என்பதில் உடன்படுகிறேன்.
//

குற்ற உணர்வுகள் தவறிழைத்தவர்களுக்கு இயல்பாக இருக்கும் உணர்வுகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//KARMA said...
வருண்,

காமம், கற்பழிப்பு, வல்லுறவு என்பதெல்லாம் உறுப்பு (பிறப்புறுப்பு) தாண்டி யோசிக்க வேண்டிய விஷயங்கள்.//

:) உடலைத் தாண்டியும் யோசிக்க வேண்டும், அப்படி யோசித்துதான் தன் புனித உடலால் கூடுவதைவிட இறந்த அரசனின் உடலில் புகுந்து காமம் துய்த்தாரம் ஆதிசங்கரர்.

//மேலும் "சாமியார்கள்" என்று பொதுப்படையாக பேசுவது சரியில்ல. ஆன்மிகவாதி என்ற போர்வையில் தவறிழைப்பவர் இருக்கலாம். அது ஒரு போலீஸ்காரர்/ஆசிரியர் தவறிழைப்பது போலவே.
//

பொதுப்படையாக பேசுவது சரியில்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் சாமியார்களை போலிஸ்காரர்/ஆசிரியருடன் ஒப்பிடுவது தவறு. ஏனெனில் அவர்களே நாங்கள் மேலானவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். மற்றவர்களை அற்பமாக பார்பார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆட்காட்டி said...
பிராய்டினது கொகைகளிலும் இப்பொழுது நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.இன்செஸ்ட் களுக்கு பிராய்டு குடுத்த விளக்கங்கள் சரிப்பட்டு வருமா?
//

மனம் என்பதே காலத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்து செயல்படுவது. ப்ராய்டு காலத்து சிந்தனைகள் இந்தக் காலச் சிந்தனையுடன் பொருந்தாது என்றே நினைக்கிறேன். இப்போழுதெல்லாம் வெர்சுவல் செக்ஸ் என்ற வழிமுறைகளெல்லாம் இருக்கிறது. பார்க்காமலேயே காதல் என்பது போல, ஆகவே மனநிலையை தீர்மாணிப்பது நடப்பு காலம் தான்.

//ஓஷோ சொன்னது சிரிப்புத் தான் வருது. உறவு முடிந்தவுடன் களைத்து தூங்கிவிடலாம். அல்லது ஓடியும் விடலாம். அவர் கருத்துக்கள் படி. மனமொத்த தம்பதிகளுக்கு இன்னமும் நிறைய வேலை உண்டு. ப்கிர்ந்து கொள்ள. இல்லாவிட்டால் அது வெறும் உடல் இணைப்புத்தான்.//

ஓஷோ கருத்துக்கள் ஓரளவுக்கு சரிதான். ஆனால் அங்கு சென்றவர்களில் பலரும் தடையற்ற உடலுறவு கிடைக்கும் என்று சென்றதாகவே சொல்லப்படுவதால் அவரது எண்ணம் / கொள்கைகள் எதிர்பார்த்த பலனை தரவில்லை.

//மனிதன் மட்டும் தான் சதா பாலியல் எண்ணங்களில் அலைபவன். உடனடியாகத் தூண்டப்படக் கூடியவன். மிருகங்களுக்கு அப்படி இல்லை. பெண்ணாசை ஒருவன் சாகும் மட்டும் இருக்கும். மற்ற ஆசைகளை விட.
//

மனிதனுக்கு என்ற பொதுப்படை கூட சரிவருமா என்று தெரியவில்லை. ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் இயற்கையிலேயே மேலோங்கி இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களெல்லாம் அவ்வாறு இல்லை என்றே நினைக்கிறேன்.

KARMA சொன்னது…

வருண்,

//எந்த சாமியார் நல்லவர்னு சொல்றீங்க?
போலீஸ்காரரும் ஆசிரியர்களும் வயித்துப்பொழைப்புக்காக அந்த தொழில் செய்கிறார்கள்.

சாமியார்களும் அப்படியா, கர்மா?//

வயித்துப்பொழைப்புக்காகவும் வக்கிரங்களுக்கு வடிகால் தேடவும் சாமியார் தொழில் செய்பவர்கள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்தததே.

அரசியல்வாதி என்றவுடனே அவர் தன்னலமற்ற, மனித நேயத்தொண்டர் என்ற முடிவுக்கு வருதல் எவ்வளவு தவறோ, அவ்வளவு தவறு சாமியார்கள் எல்லாம் புனித ஆத்மாக்கள் என்ற முடிவுக்கு வருவது.

சுருக்கமாகச் சொன்னால், எல்லா வகைகளிலும் நல்லதும் உண்டு/ கெட்டதும் உண்டு.

ஆளவந்தான் சொன்னது…

//காமம் என்பது மனித இன சாபம் தான்.//
நான் இதை ஒரு வரமென்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்.. ...ஆமா சந்தோசத்தை தரக்கூடியது வரமா .. சாபமா?

KARMA சொன்னது…

கோவி,

நீங்களும் "புனிதம்" என சில விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது மிக்க வியப்பை அளிக்கிறது.

//தாய்மை, தாயன்பு, தந்தையுணர்வு, நட்பு, இறையன்பு போன்றவற்றில் இருக்கும் உணர்வுகள்
புனிதம் தான். //

இதில் எதுவுமே புனிதமில்லை. திரைப்படங்களின் எல்லை நீட்டலால் நிகழ்ந்துவிட்ட விபரீதம் இது. எல்லா உணர்வுகளையும் மிகைபடுத்தி, புனிதப்படுத்தி வியாபாரமாக்கிவிட்டனர்.

திரைப்படங்கள் இல்லாதிருந்தாலும் காதல் இருக்கும், ஆனால் இவ்வளவுக்கு புனித்தப்படுத்தப்பட்டு சீரழிந்து போயிருக்காது.

உதாரணத்திற்கு நீங்கள் சொன்ன தாயன்பையே எடுத்துக்கொள்ளலாம். திருமணமான மகனிடம் எவ்வளவு தாயன்பு கொள்ளலாம் என்பதற்கு தாய்க்கு ஒரு எல்லை உள்ளது, அதை மீறும்போது தாயன்பே ஆயிடினும் அது புனிதமோ/விரும்பப்படக்கூடியதோ அல்ல.

சகோதரத்துவத்தை எடுத்துக்கொள்ளலாம். சொத்தை பிரிக்கும் நாள் வரை புனிதமாகத்தானிருந்தது. நட்பும் அப்படியே.

சுருக்கமாகச்சொன்னால் எல்லா வகையான உறவுகளும் நீங்கள் விரும்பும் வகையிலும், அளவிலும் கிடைத்துக்கொண்டிருக்கும் வரையில் அவை உங்களுக்கு(மட்டும்) புனிதமானவைதான்.

எனவே புனிதம் என்பது நம் மனதில் சில காலத்திற்கு மட்டுமே (transient)வாசம் செய்யும் ஒரு சின்ன எண்ண ஓட்டமேயன்றி புறத்தில் உள்ள ஒரு absolute Object அல்ல.

எதைத்தான் நாம் விட்டு வைத்திருக்கிறோம்? தேசப்பற்று, மொழியுணர்வு, சாதி அபிமானம் எல்லாமும்தான் புனிதமாக்கப்பட்டுள்ளன.

சரி....மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம்.

" காமம் (பாலுறவு) என்பது புனிதமானதா ?"

"அது இயற்கையானது" என்பதத்தவிர எனக்கு ஏதும் சொல்லத்தோன்றவில்லை.

ஆளவந்தான் சொன்னது…

//"அது இயற்கையானது" என்பதத்தவிர எனக்கு ஏதும் சொல்லத்தோன்றவில்லை.//
இன்பமானது.

கோவி.கண்ணன் சொன்னது…

//KARMA 3:28 AM, December 07, 2008
கோவி,

நீங்களும் "புனிதம்" என சில விஷயங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது மிக்க வியப்பை அளிக்கிறது.//

பார்வை இழந்தோர் ஒளி இல்லை, நிறமில்லை என்று சொன்னால் நீங்களும் ஆம் என்பீர்களா ?
புனிதம் என்ற சொல்லின் தன்மையையும் சிறப்பையும் கருதி அதைத் தனக்காக்கிக் கொண்ட தன்நல வாதிகளின் செயல் புனிதமற்றதாக இருப்பதாலேயே புனிதம் என்று எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியுமா ?
கலப்படம் இல்லாத எதுவும் அதன் தன்மை மாறாமல் இருக்குமல்லவா ? கரும்பின் சுவையும், பாகலின் சுவையும் சுவை என்ற பெயர்சொல்லில் ஒன்றுபட்டாலும் சுவைத் தன்மையில் பெரிய வேறுபாடே உள்ளது.
நீங்கள் புனிதர்களை பார்த்ததே இல்லை என்பதற்காக அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று சொல்ல முடியாது என்பதை உணருங்கள்.

//இதில் எதுவுமே புனிதமில்லை. திரைப்படங்களின் எல்லை நீட்டலால் நிகழ்ந்துவிட்ட விபரீதம் இது. எல்லா உணர்வுகளையும் மிகைபடுத்தி, புனிதப்படுத்தி வியாபாரமாக்கிவிட்டனர். திரைப்படங்கள் இல்லாதிருந்தாலும் காதல் இருக்கும், ஆனால் இவ்வளவுக்கு புனித்தப்படுத்தப்பட்டு சீரழிந்து போயிருக்காது.//

மனித உறவுகள் கொச்சைப்பட்டுள்ளதால் நீங்கள் அப்படிக் கருதலாம், விலங்கினங்களில் தாய்மை என்பது தன்னலமற்ற புனித உறவுதான். கோழி - கோழிக்குஞ்சு - பருந்து, கோழிக்குஞ்சை பருந்திடம் காப்பாற்றும் கோழி எதை எதிர்பார்க்கிறது ?

//உதாரணத்திற்கு நீங்கள் சொன்ன தாயன்பையே எடுத்துக்கொள்ளலாம். திருமணமான மகனிடம் எவ்வளவு தாயன்பு கொள்ளலாம் என்பதற்கு தாய்க்கு ஒரு எல்லை உள்ளது, அதை மீறும்போது தாயன்பே ஆயிடினும் அது புனிதமோ/விரும்பப்படக்கூடியதோ அல்ல.//

நீங்கள் சொல்வது இயலாமை, எதிர்ப்பார்ப்பு இது தாயிடம் இருக்கக் கூடாது என்பதற்கு நீங்கள் சொல்லும் காரணமே தாய்மை புனிதமானது என்ற உள்ளார்ந்த உணர்வினால் தான். அங்கே தாயாகப் பார்க்காமல் முதியதொரு பெண்ணாகப் பாருங்கள்.

//சகோதரத்துவத்தை எடுத்துக்கொள்ளலாம். சொத்தை பிரிக்கும் நாள் வரை புனிதமாகத்தானிருந்தது. நட்பும் அப்படியே. //

அது பணத்தாசை பிடித்தவர்களுக்கு மட்டுமே, எவ்வளவுதான் அண்ணன் - தம்பி எதிரிகளாக இருந்தாலும் ஒருவர் மறையும் போது மற்றவார்களைவிட மனதுக்குள் அவர்கள் அழுவதை அவர்கள் தான் அறிவார்கள்.

//சுருக்கமாகச்சொன்னால் எல்லா வகையான உறவுகளும் நீங்கள் விரும்பும் வகையிலும், அளவிலும் கிடைத்துக்கொண்டிருக்கும் வரையில் அவை உங்களுக்கு(மட்டும்) புனிதமானவைதான். //

எதிர்ப்பார்ப்பு என்பதில் கொச்சையாக்கியது சமூகம் தானேயன்றி உறவுகளைக் குறைத்துச் சொல்ல இதில் ஒன்றும் இல்லை. இருப்பவன் இல்லாதவனுக்கு அதுவும் தம்பியாக இருந்தால் கொடுக்கவில்லை என்றால் அவன் உறவினாக இருந்தும் பயனில்லை என்று உறவை மேலாக்கி செயலை கிழாக பழிப்பாதே சொல்வதே உலக வழக்கு. அண்ணனுக்கு தம்பியே உதவவில்லை என்றால் அடுத்தவர் உதவுவாரா ? என்ற சொல்லில் இருவருக்குமான உறவுகளின் தன்மைகளும் சேர்த்தே சொல்லப்படுகிறது.

//எனவே புனிதம் என்பது நம் மனதில் சில காலத்திற்கு மட்டுமே (transient)வாசம் செய்யும் ஒரு சின்ன எண்ண ஓட்டமேயன்றி புறத்தில் உள்ள ஒரு absolute Object அல்ல.//

யாருமே தான் தோன்றி கிடையாது, பிறப்புகளும் உறவுகளும் எந்த ஒருவரும் தனிமனிதர் அல்லர் என்று உணர்த்துபவையே. உங்களை ஒருவர் எதிர்பார்க்கிறார் என்பது அவரது இயலாமையே அன்றி, அது அன்பின் அளவுகோல் அல்ல.

//எதைத்தான் நாம் விட்டு வைத்திருக்கிறோம்? தேசப்பற்று, மொழியுணர்வு, சாதி அபிமானம் எல்லாமும்தான் புனிதமாக்கப்பட்டுள்ளன.//

லாபநட்டத்திற்காக ஒன்று கொச்சைப்படுத்தப்படுவதால் அது அவ்வாறு இருக்கவே முடியாதென்பதும் நம் மித மிஞ்சிய கற்பனையே. அரசியல்வாதி என்பவன் யார் ? மக்களின் தலைவன் இதுதான் இலக்கணம். ஆனால் அப்படியா இருக்கிறது ? அரசியல் என்றாலே குழப்பம், லாபமடைய நினைப்பவர்களின் முதலீடு இல்லாக் கூடாரம் என்றாகிவிட்டதல்லவா ? ஒன்றை ஒருசிலர் கெடுக்கிறார்கள் என்பதற்காக அப்படி ஒன்று இல்லை என்பதை ஏற்பதற்கு இல்லை.

//சரி....மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வருவோம்.

" காமம் (பாலுறவு) என்பது புனிதமானதா ?"

"அது இயற்கையானது" என்பதத்தவிர எனக்கு ஏதும் சொல்லத்தோன்றவில்லை.//

இந்த கடைசிவரி ஒப்புதல், மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள், அது ஒரு உணர்வுதான் அது புனிதமான ஒன்று இல்லை. உடலால் கூடுவதாலும் கழிவுகள் வெளியேறும் உறுப்புகளின் இணைப்பினாலும் பலருடன் கூடுவதென்பது அருவெறுப்பாகி இருக்கிறது. கழிவு உறுப்புகளிலேயே காம உணர்வின் வடிகாலும் இருப்பதால் அந்த உருப்புகள் முக்கியமாக கவனமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு இயற்கை அமைப்புதான். பிறப்புறுப்புகளால் காமத்திற்கு பயன்படாமல் வெறும் கழிவு வெளியேற்ற உறுப்பாக இருந்தால் அந்த உருப்பின் மீது தனிப்பட்ட ஆர்வம் எதுவும் இருக்காது. தண்ணீர் குழாயையோ, கழிவு நீர் வெளியேறும் குழாயையோ என்னேரமும் நினைத்துக் கொண்டிருப்போமா ?

அவ்வளவுதான். இதில் புனிதம் எதுவும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் 3:24 AM, December 07, 2008
//காமம் என்பது மனித இன சாபம் தான்.//
நான் இதை ஒரு வரமென்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன்.. ...ஆமா சந்தோசத்தை தரக்கூடியது வரமா .. சாபமா?
//

திருமணம் கூட சிலர் வாழ்க்கையின் வரம் என்று தான் நினைக்கிறார்கள், ஆன பிறகே சாபம் என்கிறார்கள்

சூழலும் மனநிலையும் தான் காரணம் !
:)

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\இல்லற வாழ்வை (காம) நிறைவுடன் நடத்தியவர்களுக்கு 50 வயதுக்கு மேல் காம உணர்வென்பது அன்றாடத் தேவையின் ஒன்றாக இருப்பது இல்லை, \\
\\வாழ்க்கையில் காமம் பற்றிய சிந்தனைகள் கூட ஏற்படுவதில்லை"\\

இதுதான் இல்வாழ்வின் இரகசியம்

வாழ்த்துக்கள்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்