பின்பற்றுபவர்கள்

31 டிசம்பர், 2008

தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் !

"வேண்டுகோள் வைக்கும் வாரம் முடியறத்துக்குள்ளே... நீங்க ஒரு பதிவைப் போட்டு வேண்டுகோள் வைங்கண்ணே..."

என்றார் பதிவுலகின் ஒரு சின்னத் தம்பி (ஜெகதீசனோ, விஜய் ஆனந்தோ, விக்னேஷ்வரனோ இல்லை)

திடீர் என்று கேட்டால் என்ன வேண்டு கோள்வைப்பது ? ஆங்.....ஒண்ணே ஒண்ணு இருக்கு...நானும் ரொம்ப நாளாகவே வேண்டுகோள் வைக்கனும் என்று நினைத்து இருந்தேன்.

என்னோட வேண்டுகோள் யாருக்கு ? தலைப்பிலேயே இருக்கு !

எதுக்கு வேண்டுகோள் ?

Classic தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பக்கம் கிளிக்கினால் நட்சத்திர பக்கம் காட்டும் (இந்த வாரம் நம்ம லதாநந்த் அங்கிள்... கோவை கிரைம் நாவல் எழுத்தாளர் இராஜேஸ் குமார் மாதிரியே போஸ் கொடுப்பார் பாருங்க)

நட்சத்திர பக்கத்தில் இருந்து தமிழ்மணம் முகப்புக்குச் செல்ல 'கிளிக்' செய்தால்

Not Found
The requested document was not found on this server.
--------------------------------------------------------------------------------
Web Server at thamizmanam.com

வெள்ளை அறிக்கை காட்டுது, அதாவது அந்த வலைப்பக்கம் சர்வரில் இல்லையாம்,

இது எதுனால வருது என்றால், புதிய தமிழ்மண முகப்பு அமைப்பின் போது எல்லா கோப்புகளையும் PHP Script க்கு மாற்றி இருக்கிறார்கள், ஆனால் இந்த
பக்கத்தில் இருக்கும் தமிழ்மண முகப்பிற்கான இணைப்பு மட்டும் இன்னும் html ஆகவே (http://www.thamizmanam.com/index.html) இருக்கிறது அந்த கோப்பும் சர்வரில் இல்லை (Dead Link), இதை சரி செய்ய அங்கு இணைப்பாக PHP (http://www.thamizmanam.com/index_classic.php) இணைப்பு தான் வரவேண்டும்.

இந்த கவனமின்மை தமிழ்மணத்தில் புதிய தமிழ்மணம் வடிவமைத்த போதிலிருந்தே இருக்கிறது.

வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்.

பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !

40 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

:-)
புத்தாண்டில் புது பதிவுடன், பொலிவுடன் சந்திப்போம்..

நட்புடன் ஜமால் சொன்னது…

\\"தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் !"\\

ஒன்று என்ன

நிறைய நிறைய ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்.\\

நீங்க நல்லவர்ண்ணே ...

ஜெகதீசன் சொன்னது…

இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா?

கிரி சொன்னது…

//ஜெகதீசன் said...
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா?//

:-))))))))))

நாமக்கல் சிபி சொன்னது…

வாழ்க உமது சேவை!
வளர்க உமது வேண்டுகோள்!

நாமக்கல் சிபி சொன்னது…

//ஜெகதீசன் said...
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா//

குட் கொஸ்டீன்!

நாமக்கல் சிபி சொன்னது…

//நீங்க நல்லவர்ண்ணே ...//

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ண்ணே ...

Subbiah Veerappan சொன்னது…

/////பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !/////

அனானிகளை விட்டுவிட்டீர்களே?
அனானி option இல்லை என்று சொல்ல வேண்டாம்:-)))

வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்திற்கு நன்றி உரித்தாகுக!

வால்பையன் சொன்னது…

என்ன ஒரு பொறுப்பு!

நாமக்கல் சிபி சொன்னது…

//என்ன ஒரு பொறுப்பு!//

வாத்தியாருக்குத்தானே!

அனானிகள் மீதும் அளவில்லாத அன்பு வைத்திருப்பவர் அவரன்றி வேறு யார்?

//அனானிகளை விட்டுவிட்டீர்களே?
//

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
பதிவர்கள், வாசிப்பவர்கள்,

அனானிகளை விட்டுவிட்டீர்களே?
அனானி option இல்லை என்று சொல்ல வேண்டாம்:-)))//

அனானிகள் ஆப்சன் இல்லாததால் தான் குறிப்பிடவில்லை. :)

வாத்தியார் சொன்னால் மறுப்பேது,
சரி, அனானிகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

நன்றி ஐயா.

துளசி கோபால் சொன்னது…

நன்றி.

உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் நட்புடன்,
துளசியும் கோபாலும்

கணேஷ் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் கோவி.கண்ணன்!.

புருனோ Bruno சொன்னது…

//பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !//

குசும்பு :)

கூட்ஸ் வண்டி சொன்னது…

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அச்சச்சோ இதை பதிவாக இட்டீர்கள் என்றால் அநாகரிகம் என்று கண்டணங்கள் வருமே....

அண்ணே எவ்வளவு அடிச்சாலும் தாங்குறிங்க.... நீங்க சிங்கம்ணே....

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//கூட்ஸ் வண்டி said...
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்//

அட நீங்களும் தமிழ் சினிமா டாட் காம் மாதிரி எல்லா பதிவுக்கும் ஒரே பின்னூட்டத்த போடுறிங்களே.... ஆகட்டும் ஆகட்டும்...

Sanjai Gandhi சொன்னது…

இம்புட்டு நல்லவரா நீங்க? தமிழ்மணம் ஓனர்ஸே இதை எதிர்பார்த்திருக்க் மாட்டார்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

பரிசல்காரன் சொன்னது…

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
-மிஸஸ் & மிஸ்டர் கிருஷ்ணா
மீரா & மேகா!

Thamira சொன்னது…

வாழ்த்துகள் கோவிஜி.!

Karthik சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)

Tech Shankar சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நசரேயன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பழமைபேசி சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

kuma36 சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Hisham Mohamed - هشام சொன்னது…

நண்பா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... என் பதிவுக்கு கருத்து சொன்னவர் நீங்கள். மென் மேலும் பல நல்ல பதிவுகளை பதிவுலகுக்கு தர வாழ்த்துக்கள் கோடி...

send me ur mail add...
hisham@mail.voa.lk

Hisham Mohamed - هشام சொன்னது…

என் முதல் பதிவுக்கு கருத்து சொன்னவர் நீங்கள்......

ARV Loshan சொன்னது…

நல்ல வேண்டுகோள்.. ;) நல்லா இருப்பீங்க..
புத்தாண்டு வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
:-)
புத்தாண்டில் புது பதிவுடன், பொலிவுடன் சந்திப்போம்..

11:55 AM, December 31, 2008
//

டொன்' லீ, நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// அதிரை ஜமால் said...
\\"தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள் !"\\

ஒன்று என்ன

நிறைய நிறைய ...//

மொக்கை பின்னூட்டத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

11:58 AM, December 31, 2008

// அதிரை ஜமால் said...
\\வரும் ஆண்டு 2009ல் ஆவது இந்த இணைப்பு தவறை தமிழ்மணம் சரிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். வெகுவிரைவில் நிறைவேற்றினால் உடனே பாராட்டி, நன்றி தெரிவித்து ஒரு பதிவும் இடுவேன்.\\

நீங்க நல்லவர்ண்ணே ...

11:59 AM, December 31, 2008//

சும்ம நல்லவர்னு சொல்லக் கூடாது ரொம்ப நல்லவர் :)

// ஜெகதீசன் said...
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா?

12:22 PM, December 31, 2008//

புறா ஒண்ணு அனுப்பு, தனிமடலில் அனுப்புகிறேன்

// கிரி said...
//ஜெகதீசன் said...
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா?//

:-))))))))))

12:27 PM, December 31, 2008//

புன்னகைக்கு நன்றி !

// Namakkal Shibi said...
வாழ்க உமது சேவை!
வளர்க உமது வேண்டுகோள்!

12:30 PM, December 31, 2008//

தமிழ்மணம் நம்ம வேண்டுகோளை கண்டு கொள்வது போல் தெரியல

// Namakkal Shibi said...
//ஜெகதீசன் said...
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா//

குட் கொஸ்டீன்!

12:31 PM, December 31, 2008//

குட் ஆன்சரும் இருக்கு !

// Namakkal Shibi said...
//நீங்க நல்லவர்ண்ணே ...//

நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர்ண்ணே ...

12:31 PM, December 31, 2008//

உனக்குத்தான் என்னைப் பற்றி நல்லா தெரியுது

// வால்பையன் said...
என்ன ஒரு பொறுப்பு!

12:57 PM, December 31, 2008
//

ஒரு எழுத்து மாற்று வாசித்துவிட்டேன். :) என்ன ஒரு பொழப்புன்னு :))))

// துளசி கோபால் said...
நன்றி.

உங்கள் அனைவருக்கும் ஆங்கிலப்புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

என்றும் நட்புடன்,
துளசியும் கோபாலும்

1:50 PM, December 31, 2008//

நன்றி அம்மா, உங்களுக்கும், உங்கள் மகள், கோபால் ஐயா, ஜிகே ஆகியோருக்கும் நல்வாழ்துகள்

// ராம்சுரேஷ் said...
புத்தாண்டு வாழ்த்துகள் கோவி.கண்ணன்!.

1:51 PM, December 31, 2008//

ராம்சுரேஷ், நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// புருனோ Bruno said...
//பதிவர்கள், வாசிப்பவர்கள், வெறும் புரொபைல் வைத்திருப்பவர்கள், அனைவருக்கும் 2009 ஆம் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் !//

குசும்பு :)

2:15 PM, December 31, 2008//

கூடவே அதுவும் பொறந்துடிச்சு, வால்னு சொல்லுவாங்க :)

// கூட்ஸ் வண்டி said...
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

2:28 PM, December 31, 2008//

வருகைக்கும், முயற்சிக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள், கூட்ஸ் வண்டி போலவே தொடர்ந்து எழுதுங்கள்

// VIKNESHWARAN said...
அச்சச்சோ இதை பதிவாக இட்டீர்கள் என்றால் அநாகரிகம் என்று கண்டணங்கள் வருமே....

அண்ணே எவ்வளவு அடிச்சாலும் தாங்குறிங்க.... நீங்க சிங்கம்ணே....

3:03 PM, December 31, 2008//

அடிக்கிறவங்க யோக்கியவானாக இருந்தால் தான் வலிக்கும், அடிக்கிறவங்களுக்கு அடிக்கிற யோக்கிதை எதுவும் இல்லை, எதையோ எதையோ பார்த்து எதையோ செய்யுதுன்னு நினச்சிக்க வேண்டியது தான்

//SanJaiGan:-Dhi said...
இம்புட்டு நல்லவரா நீங்க? தமிழ்மணம் ஓனர்ஸே இதை எதிர்பார்த்திருக்க் மாட்டார்கள்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

4:00 PM, December 31, 2008
//

நல்லவனாக இருப்பது தான் கஷ்டம்,

// பரிசல்காரன் said...
தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
-மிஸஸ் & மிஸ்டர் கிருஷ்ணா
மீரா & மேகா!

4:20 PM, December 31, 2008//

கிருஷ்ணா நன்றி !

// தாமிரா said...
வாழ்த்துகள் கோவிஜி.!

4:46 PM, December 31, 2008//

தாமிரா ஜி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// Karthik said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)

5:00 PM, December 31, 2008
//

கார்த்திக், மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// Sharepoint the Great said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்

5:05 PM, December 31, 2008//

மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// நசரேயன் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்

11:22 PM, December 31, 2008//
நசரேயன், மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// பழமைபேசி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

11:40 PM, December 31, 2008//
மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள், தேவைதான் ஒரு நாள் விடுப்பு கிடைக்குதே :)

//கலை - இராகலை said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

1:11 AM, January 01, 2009//
கலை - இராகலை,
மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள்

// HISHAM said...
நண்பா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... என் பதிவுக்கு கருத்து சொன்னவர் நீங்கள். மென் மேலும் பல நல்ல பதிவுகளை பதிவுலகுக்கு தர வாழ்த்துக்கள் கோடி...

send me ur mail add...
hisham@mail.voa.lk//

மிக்க நன்றி, வாழ்த்துகள், சீரிய பதிவுகள் எழுதி பதிவர்களின் கவனம் பெறுங்கள்

3:38 PM, January 01, 2009

// HISHAM said...
என் முதல் பதிவுக்கு கருத்து சொன்னவர் நீங்கள்......

3:41 PM, January 01, 2009//

அப்படியா, குறிப்பிட்டு பாராட்டுவதற்கு நன்றி !

// LOSHAN said...
நல்ல வேண்டுகோள்.. ;) நல்லா இருப்பீங்க..
புத்தாண்டு வாழ்த்துகள்
//

லோஷன், உங்களுக்கு சென்ற ஆண்டின் தளும்புகள் மறைந்து, வரும் ஆண்டுகள் இனிமையாக அமையட்டும்

ஆளவந்தான் சொன்னது…

//
இதைத் தனிமடலில் தெரிவித்திருக்க முடியாதா?//
//
Sorry for english typing. Since I am using my friends m/c which doesnt have tamil edit facilities.

What is your intention by this post? to resolve issue or aggrevate the issue?

If you are really interested to resolve this issue, you could have send simple mail to respective person. ( I was supposed to send this to your emailid instead of commenting here, But unfortunately I dont have your email id)

It is the common and simple mistake used to happen during migration process, ( I am not saying, it is right). By means of publishing post, I feel that you are aggrevating the issue and I knew that already there are some issues between "pirabala" bloggers and tamilmanam. In this situation, I dont thing this is correct way to approach this issue.

Thanks for understanding.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...

என்னக் கொடுமை, இது தேவை இல்லாத இடங்களில் அறிவுரை சொல்லுவதற்காக இலவச அறிவுரைக் கிடங்கோ, அறிவுரை கடையோ
எங்கு கிடைக்கிறது ?

நாளைக்கு பதிவை எழுதிவிட்டு போடலாமா வேண்டாமா என்று கேட்டுப் போடுகிறேன், இமெயில் முகவரி அனுப்பி வையுங்க.

வருண் சொன்னது…

***என்னக் கொடுமை, இது தேவை இல்லாத இடங்களில் அறிவுரை சொல்லுவதற்காக இலவச அறிவுரைக் கிடங்கோ, அறிவுரை கடையோ
எங்கு கிடைக்கிறது ?****

நம்மமட்டும் ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்னுவோம். ஆனால் ஒரு பய நம்மள ஒண்ணு சொல்லப்படாது.ஏன் னா நம்மதான் எல்லாம் தெரிந்த்வராச்சே!

அசையும் பொரூளில் இசையும் நீங்கதானே!

***நாளைக்கு பதிவை எழுதிவிட்டு போடலாமா வேண்டாமா என்று கேட்டுப் போடுகிறேன், இமெயில் முகவரி அனுப்பி வையுங்க.***

உங்க "லந்து" அர்த்தமற்றது.உங்க இ-மெயில் ஐ டி உங்க ப்ரஃபைலில் இல்லை.

எப்படி அனுப்புவார் பாவம்?

கிருஷ்ண பகவான் ட்ட கேட்டால் கொடுப்பாரோ?

வருண் சொன்னது…

Happy New Year, Kovi! :-)

ஆளவந்தான் சொன்னது…

Koyiluku poitu vanthathula konjam late aagiduchu..

//
என்னக் கொடுமை, இது தேவை இல்லாத இடங்களில் அறிவுரை சொல்லுவதற்காக இலவச அறிவுரைக் கிடங்கோ, அறிவுரை கடையோ
எங்கு கிடைக்கிறது ?
//

naan pidicha muyalukku moone kaal

//
நாளைக்கு பதிவை எழுதிவிட்டு போடலாமா வேண்டாமா என்று கேட்டுப் போடுகிறேன், இமெயில் முகவரி அனுப்பி வையுங்க.
//
sapdaee@yahoo.com :)

Please wait until I approve the same :)

Yeah I forgot to mention, I even prayed for you. Wish you a happy new year.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் 2:30 AM, January 02, 2009
***என்னக் கொடுமை, இது தேவை இல்லாத இடங்களில் அறிவுரை சொல்லுவதற்காக இலவச அறிவுரைக் கிடங்கோ, அறிவுரை கடையோ
எங்கு கிடைக்கிறது ?****

நம்மமட்டும் ஊருக்கெல்லாம் அட்வைஸ் பண்னுவோம். ஆனால் ஒரு பய நம்மள ஒண்ணு சொல்லப்படாது.ஏன் னா நம்மதான் எல்லாம் தெரிந்த்வராச்சே!

அசையும் பொரூளில் இசையும் நீங்கதானே!

***நாளைக்கு பதிவை எழுதிவிட்டு போடலாமா வேண்டாமா என்று கேட்டுப் போடுகிறேன், இமெயில் முகவரி அனுப்பி வையுங்க.***

உங்க "லந்து" அர்த்தமற்றது.உங்க இ-மெயில் ஐ டி உங்க ப்ரஃபைலில் இல்லை.

எப்படி அனுப்புவார் பாவம்?

கிருஷ்ண பகவான் ட்ட கேட்டால் கொடுப்பாரோ?//

இதை "கோவி.கண்ணனின் ஒழுங்கீனம்" என்று தனிப்பதிவாக இடாததற்கு மகிழ்ச்சி.

உங்களுக்கும் வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
Koyiluku poitu vanthathula konjam late aagiduchu..

//
என்னக் கொடுமை, இது தேவை இல்லாத இடங்களில் அறிவுரை சொல்லுவதற்காக இலவச அறிவுரைக் கிடங்கோ, அறிவுரை கடையோ
எங்கு கிடைக்கிறது ?
//

naan pidicha muyalukku moone kaal
//

:)

ஒரு காலை இரையாகக் கொடுத்து தப்பி வந்த முயலுக்கு மூன்று கால் இருக்காலம் அல்லவா.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் கோவி

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
புத்தாண்டு வாழ்த்துகள் கோவி
//

நன்றி ஐயா

குடுகுடுப்பை சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள் கோவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்