அமெரிக்க அதிபர் புஷ்சிற்கு ஈராக் மக்களின் கடைசி பரிசு என்று எகிப்து செய்தியாளர் வீசிய ஷூக்கள் நிகழ்வு பற்றிய தகவல் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ் லாவகமாக குனிந்து தப்பியதை பலரும் பார்த்திருப்பீர்கள். புஷ் மீது செருப்படி விழுந்திருக்கனுமா ? கூடாதா ? அந்த நிகழ்வு சரியா தவறா என்று சொல்லத் தெரியல. பாதிக்கப்பட்டவர்களின் பார்வை என்று தனியாக ஒன்று ஒன்று. அரசாங்க செயலுக்கும் போராளிகளின் செயலுக்கும் ஒரே ஒரு வேறுபாடு, ஒன்று அதிகாரத்தின், ஆளுமையின் பெயரில், மக்கள் கொடுத்த அங்கீகாரத்தின் பெயரில் செய்வது. மற்றது தன்னிச்சையாக. இரண்டுமே தன்னிச்சையாக என்றாலும் அரசாங்க செயல் மக்கள் செயலாக சொல்லப்பட்டுவிடும், குற்றமும் இல்லை என்பதாக பொருள் சொல்லப்படுகிறது.
***
பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளை கடந்து தான் புஷ் போன்ற அரசியல் பெரும் தலைவர்களில் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். காலில் போட்டிருக்கும் ஷூ வைக் கூட பயன்படுத்தி தாக்க முடியும், எதிர்ப்பு காட்ட முடியும், எதிர்ப்பை பதிய வைக்க முடியும் என்பதாக இந்நிகழ்ச்சி புரிய வைத்துள்ளது. இனி வருங்காலத்தில் செய்தியாளர்களை செருப்பில்லாமல், ஷூ இல்லாமல் தான் அனுமதிப்பார்கள், அப்படியே அனுமதித்தாலும் வீசினால் சென்று தாக்கும் அளவுக்கு இல்லாமல் இடைவெளியை மிகுதி படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.
புஷ் தவறான முடிவெடுத்தவராகவும், பொருளாதார சீர்குழைவில் விட்டுச் செல்வதாகவும் இன்னும் பலப்பல குற்றச் சாட்டுகளுடன் விடை பெரும் நேரத்தில் செருப்படியும் கிட்டதட்ட கிடைத்த நிலையில் முடித்துக் கொள்ளப் போகிறார். அவரது கட்சியினருக்கு வருத்தமான நிகழ்வு. அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும். அமெரிக்க அதிபர் வரலாற்றில் புஷ்ஷுக்கென்றே தனியான இடம் இருக்கும்.
எவ்வளவு தான் உயர்ந்த பதவி என்றாலும் அந்த பதவியையும் அவமானப் படுத்த முடியும் என்பது ஷூ வீச்சு நிகழ்ச்சியின் மூலம் புரிகிறது.
பதவியினால் புகழ் கிடைப்பது போல் தான், பதவி அடைந்திருப்பதால் ஏற்படும் அவமானமும், இரண்டுமே செயல் தொடர்பில் கிடைக்கும் பலன் மற்றும் விளைவுகள். தெளிவிருந்தால் இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
*****
புதிய அமெரிக்க அதிபர் ஈராக் படைகளை படிப்படியாக மீட்டுக் கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஏற்படும் பாதுகாப்பின்மையால் தற்பொழுது இருக்கும் ஈராக்கின் அமெரிக்க ஆதரவு அரசு நிலைக்குமா என்பது பெரும் கேள்வி குறி.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
24 கருத்துகள்:
////பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளை கடந்து தான் புஷ் போன்ற அரசியல் பெரும் தலைவர்களில் நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். காலில் போட்டிருக்கும் ஷூ வைக் கூட பயன்படுத்தி தாக்க முடியும், எதிர்ப்பு காட்ட முடியும், எதிர்ப்பை பதிய வைக்க முடியும் என்பதாக இந்நிகழ்ச்சி புரிய வைத்துள்ளது. இனி வருங்காலத்தில் செய்தியாளர்களை செருப்பில்லாமல், ஷூ இல்லாமல் தான் அனுமதிப்பார்கள//////
நடக்கும்!
அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்.//
அப்படியெல்லாம் இல்லை என நினைக்கிறேன்.
//அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்//
nope. didnt come up in hallway conversations :)
அவர் விளகிய விதம்
சொல்லிவச்ச மாதிரி ...
எனக்கு தோன்றியது...
\பதவியினால் புகழ் கிடைப்பது போல் தான், பதவி அடைந்திருப்பதால் ஏற்படும் அவமானமும், இரண்டுமே செயல் தொடர்பில் கிடைக்கும் பலன் மற்றும் விளைவுகள். தெளிவிருந்தால் இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.\\
ஆம்.
//எவ்வளவு தான் உயர்ந்த பதவி என்றாலும் அந்த பதவியையும் அவமானப் படுத்த முடியும் என்பது ஷூ வீச்சு நிகழ்ச்சியின் மூலம் புரிகிறது.//
ஆமென்றாலும் இது ஒரு தவறான முன்னுதாரனமாகிவிடக்கூடும்.
// SP.VR. SUBBIAH said...
நடக்கும்!
//
:)
காலில் ஷூ இல்லாவிட்டால் என்ன ? மென்று கொண்டிருக்கும் சூயிங்கம் பயன்படுத்துவார்கள்.
//குடுகுடுப்பை said...
அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்.//
அப்படியெல்லாம் இல்லை என நினைக்கிறேன்.
//
செருப்படி அவமானம் என்று தெரிந்தவர்களுக்கு அப்படி இருக்கலாம். ஆசியாவில் தானே காரி துப்புவது, செருப்பால் அடிப்பது எல்லாம் அவமானம். அமெரிக்க கல்சரில் அப்படி ஒன்னும் இருந்தால் அவர்கள் வருத்தப்படுவார்களோ !
//SurveySan said...
//அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்//
nope. didnt come up in hallway conversations :)
//
எவ்வளவு (செருப்பால்) அடிச்சாலும் தாங்குற மனநிலைக்கு போய்டாங்களா அவங்க.
அதிரை ஜமால் நன்றி !
//வடகரை வேலன் said...
//எவ்வளவு தான் உயர்ந்த பதவி என்றாலும் அந்த பதவியையும் அவமானப் படுத்த முடியும் என்பது ஷூ வீச்சு நிகழ்ச்சியின் மூலம் புரிகிறது.//
ஆமென்றாலும் இது ஒரு தவறான முன்னுதாரனமாகிவிடக்கூடும்.
//
அண்ணாச்சி...அது ஒன்னும் பண்ண முடியாது. ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்துவாங்க...வாய்ப்புக்காகவும் காத்திருப்பாங்க என்பது தான் இந்த நிகழ்வின் மூலம் புரிகிறது.
மாபெரும் தவறு
புஷ்சை ஷூவால் அடித்தது மாபெரும் தவறு.
பிஞ்ச செருப்பால அடிச்சிருக்கலாம்
ஹா ஹா ஹா
//arasu has left a new comment on your post "புஷ் மீது ஷூ வீச்சு - சில எண்ணங்கள் !":
எங்களைத் தேடி வந்து கருத்து லெக்சர் கொடுத்து கொல்கிறார் ஒரு கருத்து கந்த சாமி. //
அவனா நிய்யீ.....உன்னைய இங்கு வந்து படிக்கச் சொல்லி யாரு அழைச்சாங்க...அப்படியே படிச்சாலும் பின்னூட்டம் போடச் சொல்லி யாரு அழுதாங்க...போய் பொழப்பை பாரு ஒய். அடுத்த அடுத்த பின்னூட்டங்கள் வெளியானதும் நீக்கப்படும்.
//arasu 2:37 PM, December 16, 2008
This post has been removed by a blog administrator. //
உன்னோட சேவை தேவை படுறவங்களுக்கு செய்யேன். எனக்கு பின்னூட்டம் வேண்டுமென்றல் பெயரில்லாதவர்களைக் கூட அனுமதிப்பேன். திறந்த வீடாக இருக்க வேண்டாமென்று தான் ப்ளக்கர் ஆப்சன் மட்டுமே வைத்திருக்கிறேன். 'போலி' புரொபைல் பின்னூட்டங்கள் எனக்கு தேவையற்றது
ஏதோ தெரியவில்லை
பயங்கர சிரிப்பு வந்தது
கத்தி வீசியிருந்தால் கூட அனுதாபம் வந்திருக்கும்.
இது பயங்கர காமெடி
--
அவ்வளவு தொலைகாட்சி ஒளிப்பதிவு கருவிகள் முன்னிலையில் “தூ” என்று துப்பினால் கூட அசிங்கம் அசிங்கம் தான்
--
//அவர் விளகிய விதம்
சொல்லிவச்ச மாதிரி ...
எனக்கு தோன்றியது...//
இல்லை இதற்கெல்லாம் பயிற்சி உண்டு
ஏன் கயிற்றில் பலவகையான முடிச்சு போடுவதற்கு கூட பயிற்சி உண்டு
//புருனோ Bruno said...
ஏதோ தெரியவில்லை
பயங்கர சிரிப்பு வந்தது
கத்தி வீசியிருந்தால் கூட அனுதாபம் வந்திருக்கும்.
இது பயங்கர காமெடி
--
அவ்வளவு தொலைகாட்சி ஒளிப்பதிவு கருவிகள் முன்னிலையில் “தூ” என்று துப்பினால் கூட அசிங்கம் அசிங்கம் தான்
//
புருனோ சார்,
நீங்கள் சொல்வது சரிதான்.
நீங்கள் இங்கே பின்னூட்டம் இட்ட வேளையில் உங்கள் பதிவின் பின்னூட்டங்களை படித்துக் கொண்டு இருந்தேன்
துப்பாக்கியால் சுட்டிருந்தாலும் இந்த அளவு கேவலம் இல்லை.
"இது நாவினால் சுட்ட வடு"...போல் காலத்துக்கும் நிலைக்கும்.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமே!
இனிமேல் கோவணத்துடன் அனுமதித்தாலும்; அதைக் கூட அவிழ்த் தெறிந்து எதிர்ப்பைப் பதிய வைப்பார்கள்.
அமெரிக்கா; ஐரோப்பா அதிரவில்லை என்பது பொய்!!
இங்கே அதிர்வு நன்கு தெரிகிறது. ஆனால் வடிவேல் பாணியில் பாராக்குப் பார்த்துச் சமாளிக்கிறார்கள்.
பி.பி.சி தமிழ் இணையத் தளத்தில் இன்னும் இச் செய்தி வரவில்லை.( யாராவது பார்த்தீர்களா??)
நான் தேடினேன் கிடைக்கவில்லை.
சீர்குழைவில் --> சீர்குலைவில்
அந்த போரினால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டீர்கள்.
அவமானம் எல்லாம் அவனுக்கு இருக்காது. பணத்துக்காக மனசாட்சியை விற்ற கயவன் அவன். இவ்வளவு நடந்த பிறகும், அந்த நபர் என் அப்படி செய்தார் என்று புரியவில்லை என்கிறான்! சுதந்திர நாட்டில் தான் இப்படி சம்பவங்கள் நடக்கும், நாங்கள் அந்த சுதந்திரம் வாங்கி தரத்தானே பாடுபட்டோம் என்று சப்பைக்கட்டு வேறு!
அந்த செருப்பு வீச்சு ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சிறு வெளிப்பாடு என்றுதான் பார்க்க முடிகிறது. அந்த எதிர்ப்புகளும் சரியான இலக்கைப் போய் சேருவதில்லை; வீசியவருக்கு கை வலித்ததுதான் மிச்சம், சம்பந்தப்பட்டவர்களோ குனிந்து தப்பித்து விடுகிறார்கள்.
//அமெரிக்கர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியாக இருந்திருக்கும்.//
இந்த செயல் புஷ்ஷை பாதிக்கவில்லை என வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது. ஒருவேளை எதிர்பார்த்திருப்பாரோ.. :)
So it is ok to throw a shoe and Bush must magnanimously accept it ?. What about the SriLankan General who commented about politicians being 'Jokers' ?. Contrast this with the reaction in TN.
BTW , I'm not a supporter of Bush or the SriLankans.
கருத்துரையிடுக