பின்பற்றுபவர்கள்

5 டிசம்பர், 2008

ஊடகங்கள் என்னும் மதங்கள் !

மதம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை, எண்ணங்களை தீர்மாணிப்பது என்று சொன்னால் எவரும் மறுப்பார்களா ? எந்த ஒரு மதமும் அதைச் சார்ந்தவர்களின் குண நலன்களை உருவாக்குவதுடன், உணவு உடை மற்றும் கட்டுப்பாட்டுக்களை விதித்து ஒருவரை தன் இச்சையாக செயல்படவிடாலம் அவர் மீது ஆளுமை செலுத்தினால் அதுதான் மதம். நேரடியாக ஒருவர் மீது தாக்கத்தை ஏற்படுவதால் அதன் பண்புகளில் ஏற்படும் மிகக் கூடுதலான அளவே மதவெறி எனப்படும். சரியா ?

ஊடகங்கள் எனப்பது மக்களாட்சியின் நான்காவது தூண்கள் கிட்டதட்ட மதம் போல் ஆகிவிட்டன. மதம் என்பதே சார்பு நிலைதானே. எந்த ஒரு ஊடகமும் அது செய்தி இதழாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி மக்கள் முன் காட்சிபடுத்துதல் ( பின்நவினத்துவ சொல்லாம்) என்பதில் சார்பு நிலையில் தான் இயங்குகின்றன. சன் டிவி, ஜெ டிவி பார்க்கும் சிறுவர்கள் கூட இதை உணர்வார்கள். இவற்றைக் குறிப்பிடுவது எளிமையான உதாரணம் கருதியே.

ஊடகம் என்பது தொழில் என்பதாக வளர்ந்த பின் போட்டித் தன்மை என்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. முதலில் மக்கள் விரும்புவதைத் தருவதாகச் சொல்லும் ஊடகங்கள் பிறகு மக்களின் விருப்பத்தை தீர்மாணிக்கின்றன.

விபச்சாரம் நடப்பதும் அதன் மீது சட்ட நடவெடிக்கையும் இயல்பாக அன்றாடம் நடப்பவைதான். அன்று போடுவதற்கு செய்தி பஞ்சமோ, பெரிய Deal இல்லாத போது, காவல் துறையின் விபச்சார நடவடிக்கை செய்தியை எடுத்து
படத்துடன் "விபச்சார அழகிகள் உல்லாச விடுதியில் கைது" என்று போடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை அழகிகளாகக் காட்டுவதுடன், விடுதிகள் என்றால் அவை உல்லாசமாக இருப்பதற்கு உரிய இடம் என்பது இவர்கள் முன்பே பலமுறை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளதால், அந்த செய்தியை பலர் ஆர்வமுடன் படிப்பார்கள்.

ஊடகங்கள் எப்போதுமே பிரபலங்களின் செய்திகளை கொடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பதை அண்மைய மும்பை தாக்குதலில் இரயில் நிலையத்தைவிட நட்சத்திர ஓட்டல்களின் காட்சிகளே தொலைக்காட்சியில் இடம் பெற்றதை பலரும் குறிப்பிட்டு காட்டி கண்டனம் செய்தார்கள். வாசகர்கள் காதில் புனிதம் தடவி "ஊடகம் என்பது ஜெனநாயகத் தூண்" என்பது எப்போதோ அடிப்பட்டுப் போய்விட்டது.

ஒரு ஆட்சியை மாற்றி அமைப்பதில் ஊடகம் முன்னிலை வகிக்கிறது. விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் என்றால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களை பற்றி ஒருவரி கூடச் சொல்லாமல், அவர்கள் குறித்து நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல் வழக்குகளின் செய்திகளை மட்டுமே வெளியிட்ட பிற செய்திகள் தங்கள் வாசகர்களின் கண்களில் படாமல் கவனத்துடன் தவிர்ப்பர். செய்திகளாக இவர்கள் தருவது இவர்களுக்கு பிடித்தவை மட்டுமே.

இஸ்லாம் பற்றிய மேற்கத்திய (கிறித்துவ சார்பு, முதலாளித்துவ சார்பு) ஊடகங்களின் தாக்குதலும் இப்படித்தான், பின்லேடனையும் அல்கொய்தா என்ற இரண்டே விசயங்களை வைத்துக் கொண்டு முடிந்த அளவுக்கு 'இஸ்லாம் என்றால் தீவிரவாதம்' என்கிற செய்தியை பதியவைக்க முயன்று வெற்றிபெற்றன. ஆனால் அதே ஊடகங்களுக்கு ஈராக்கில் எந்தவிதமான ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று தெரிந்தாலும், தெரிந்தே புஷ் அரசின் செயல்பாடுகளையும், அபுகிரைப் கொடுமைகளையும் அதிக அளவில் வெளியே பரப்பாமலும் ஓரளவுக்கு தாங்கள் நடுநிலையாளர்கள் என்று காட்ட சிறு சிறு செய்திகள் அளவுக்கு அதனை வெளியிட்டன.

மலேக்கான் தொடர் குண்டு வெடிப்பு பற்றி பரபரப்பாக வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தும் தற்பொழுது மும்பைத் தாக்குதலில் கவனம் செலுத்தி அன்றாட தகவல் ஆக்கிவிட்டன. இந்த செய்திகள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தார்போல் செய்திகளை வெளி இடுவார்கள், 'இறந்து போனவர்களில் எவரும் இஸ்லாமியர் இல்லை' என்று சொல்வது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களோ அதை நோக்கமாக கொண்டுள்ள செய்தி இதழ் அதனை வெளியிட்டது, அதுமட்டுமில்லாது அந்த செய்தி மக்கள் மனதில் மறையவே கூடாது என்பதற்காக இறந்து போனவர்களின் அத்தனை பேரின் வீடுகளுக்குச் சென்று அன்றாடத் தகவல்களாக அதனை வெளி இடுவார்கள். இவை சிறு இதழ்களில் செய்யப்பட்டால் பெரிய தாக்கம் ஏற்படாது, சிறிய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட தன்மையான வாசகர்களை மட்டுமே கொண்டிருக்கும், அவர்களின் கவனம் வேறு இதழ்களுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அதனை தொடர்ந்து செய்வார்கள், ஆனால் இந்திய அளவில் செயல்படும் செய்தி இதழ்கள் மறைமுகமாக செய்யும் போது வாசகர் மனதில் அந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

நான் 25 ஆண்டுகளாக ஆனந்தவிகடன் படிக்கிறேன், 15 ஆண்டுகளாக நக்கீரன் படிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் முன் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள், 'அந்த இதழ்களெல்லாம் உங்களுக்கு தேவையானதை கொடுக்கவில்லை, அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் மாறி இருக்கிறீர்கள், அவர்கள் தரும் செய்தியே உங்கள் எண்ணங்களையும் சிந்தனையாகவும் மாறி இருக்கிறது, அதாவது உங்கள் எண்ணங்களையும் சிந்தனைகளையும் தீர்மாணிப்பவர்கள் அவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. இது வாசகனுக்கு பெருமையான ஒன்றா ?

ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.

ஆனால் 90 விழுகாடு வாசகர்களின் மன நிலை எதோ ஒரு சார்பில் எதோ ஒரு செய்தி ஊடகத்தை சிறப்பாக கருதும் மனநிலையில் தான் இருக்கிறது, அதில் வரும் செய்திகளே உண்மையானவவ என்று நம்புவார்கள், மற்ற இதழ்கள் திரிப்பதாகவே சொல்வார்கள், இந்தியாவில் வேலை செய்யும் போது துக்ளக் மட்டுமே படித்த எனது முன்னாள் பாஸிடம் நான் நக்கீரன் செய்தி பற்றி பேசினால், 'நக்கீரனெல்லாம் ஒரு புத்தகமா, அவன் பொய் பொய்யா எழுதுவானே ?' என்று சொல்லுவார். அவரைப் பொருத்து நக்கீரனின் வரும் செய்திகள் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும், ஏனெனில் நக்கீரன் எவரையும் துணிவுடன் எதிர்த்து எழுதும், ஆனால் அவ்வளவு துணிவு வாய்பே இல்லை என்று நினைப்பவராக அவர் இருப்பதால் நக்கீரன் பழிசொல்லி எழுதுவதாகவே அவர் கருதுவார். இங்கே நக்கீரன் துணிச்சலான செய்தி இதழ் என்று சொல்லவரவில்லை. நக்கீரனின் அன்மைய திமுக ஆதரவு செய்திகள் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஆதரவு நிலை என்பதற்காக எப்போதும் திமுகாவின் ஊழல் தகவல்களை, முறைகேடுகளை மறைப்பதில்லை என்பதில் ஓரளவுக்கு நக்கீரன் கோபால் பரவாயில்லை என்பேன்.

வாசகர் வட்டம் என்ற வட்டத்திற்குள் நீங்கள் இருந்தால் உங்களின் எண்ணங்களில் ஆளுமை செலுத்துவதில் ஒரு ஊடகம் வெற்றிபெற்றிருக்கிறது என்றே பொருள், அந்த ஊடகத்தை துதிப்பவர்களில் நீங்களும் ஒருவர் ஆகிவிடுவீர்கள். உண்மையிலேயே ஊடகம் என்பது தொழில் தான், துணிச்சலான புலனாய்வுக்கு ஊடகங்களைப் பாராட்டலாம், ஆனால் ஊடகம் தரும் செய்திகளே உண்மை என்று நம்புவோர்க்கு ஊடகங்கள் மதங்கள் போல் அவர்களின் மீது ஆளுமை செய்கிறது என்பது பேருண்மை. ஏற்றிவிடுவதும் வாசகர்களே, பிறகு மாட்டிக் கொண்டு மீளாமல் இருப்பவர்களும் வாசகர்களே !

இந்த பலரால் விரும்பிப் படிக்கப்படும் பதிவுகளுக்கும் பொருந்தும் :).

இதுபற்றி பலசெய்திகளை ஒப்பிட்டு விரிவாக எழுதமுடியும், பிரிதொரு இடுகையில் எழுதுவேன்.

8 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் எழுதுங்கள்...

அப்புறம்...

பணக்காரர்கள் இறந்த தாஜ் ஹோட்டலையும், ட்ரைடண்ட் ஹோட்டலையும் பலமுறை காட்டிய ஊடகங்கள், சாமானியர்கள் இறந்த சத்ரபதி டெர்மினஸை காட்டாத ஒருதலைப் பட்சப் போக்கை சாடி, ஞானி எழுதிய கட்டுரை படித்தீர்களா கோவிஜி?

பரிசல்காரன் சொன்னது…

அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் எழுதுங்கள்...

அப்புறம்...

பணக்காரர்கள் இறந்த தாஜ் ஹோட்டலையும், ட்ரைடண்ட் ஹோட்டலையும் பலமுறை காட்டிய ஊடகங்கள், சாமானியர்கள் இறந்த சத்ரபதி டெர்மினஸை காட்டாத ஒருதலைப் பட்சப் போக்கை சாடி, ஞானி எழுதிய கட்டுரை படித்தீர்களா கோவிஜி?
//

அதைப் படிப்பதற்கு முன்பே, மும்பை நிகழ்வுக்கு முன்பே "ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது, அதில் இந்த கருத்தைக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஞானி கூட அங்கிருந்து தான் கருத்தைச் சுட்டு மும்பை நிகழ்வுக்கு பொருத்தி இருப்பாரோ ? :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!!!!
//

நீங்க தான் இந்த இடுகைக்கு பர்ஸ்டும் பார்ஸ்டும்

Dr.Rudhran சொன்னது…

"ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது,
where can i get it? publisher/author?

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr.Rudhran said...
"ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது,
where can i get it? publisher/author?
//

Dr.Rudhran,

புத்தகத்தின் பெயர் : பிறக்கும் ஒரு புது அழகு (ஊடக அரசியல் விமர்சனக் கட்டுரைகள்)

தொகுப்பாசிரியர் : கண்ணன்

வெளியிடு : காலச்சுவடு பதிப்பகம்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அண்ணே வர வர நீங்க எழுதுரது கடினமான வார்த்தைகளா இருக்கு :(...

//ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.//

கண்டனங்கள்.... சிந்திக்கத் தெரியாதன் அப்படி இருக்கலாம்... பகுத்தறிந்து சிந்திப்பவர்களுக்கு அது பிரச்சனையாய் அமையாது....

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
அண்ணே வர வர நீங்க எழுதுரது கடினமான வார்த்தைகளா இருக்கு :(... //

விக்கி,
நான் கடினமான சொற்கள் எதையும் பயன்படுத்துவதில்லையே.

////ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.//

கண்டனங்கள்.... சிந்திக்கத் தெரியாதன் அப்படி இருக்கலாம்... பகுத்தறிந்து சிந்திப்பவர்களுக்கு அது பிரச்சனையாய் அமையாது....
////

மன்னன், தென்றல் படிக்கிறவர்கள் பற்றிச் சொல்லவில்லை :)

சும்மா கிண்டலுக்கு !

நானும் எப்போது ஜோகூர் போனாலும் அந்த வார இதழ்களை வாங்கிவந்து மலேசிய தமிழர்களின் எண்ணங்கள் பற்றி அறிந்து கொள்வேன். இல்லாவிடில் பெயர் எப்படி தெரியும் ?

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்