பின்பற்றுபவர்கள்

4 டிசம்பர், 2008

சைவ பின்லேடன்கள் !

மதவெறி என்பது எதோ இந்த நூற்றாண்டில் தான் தலைவிரித்து ஆடுகிறது என்றெல்லாம் எண்ண வேண்டாம். 13 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அதில் ஒரு சைவ - வைணவ கதையைத் தான் தசவதாரம் படத்தில் காட்டினார்கள். இந்திய விடுதலை போராட்டத்திற்கு பிறகு குறுநில மன்னர்கள் சுளுக்கெடுக்கப்பட்டு அவர்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை இந்தியாவுடன் இணைத்த நிகழ்வு போலவே 13 - 12 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு எதிராணவர்கள் என்ற குற்றச்சாட்டில் சமண - பவுத்த மதங்கள் வீழ்த்தப்பட்ட பிறகு அவர்களுடைய சமய பள்ளிகளும், கோவில்களும் கொள்ளையடித்து அழிக்கப்பட்டு அவையெல்லாம் சைவம் சார்ந்த அமைப்புடன் இணைக்கப்பட்டது. நாகையில் இருந்த புத்தகோவிலில் இருந்த பெருஞ்செல்வங்களும், வைர புத்தர் சிலை திருமங்கையாழ்வாரால் (வைணவர்) எடுத்துச் செல்லப்பட்டு பெருமாளாக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் சைவம் - வைணவம் என இருபிரிவுகள் இருந்தாலும் கூட்டுக் களவானி போல் அதற்குமுன் இருந்த சண்டையெல்லாம் நிறுத்திவிட்டு, இனி ஒருவரை ஒருவர் தாக்குவதில்லை, தலையிடுவதும் இல்லை என்று முடிவுக்கு வந்திருந்தனர்.

இது கற்பனையென்றாலும் அதை மெய்பிக்கும் விதமாக அதுகாறும் சண்டை சச்சரவாக இருந்த சைவ - வைணவம் ஞானசம்பந்தர் காலத்தில் குறைந்துவிட்டு இருந்திருக்கிறது அல்லது இல்லை எனலாம். ஏனெனில் ஞான சம்பந்தர் பாடல்களாயினும் சரி, சேக்கிழார் பாடல்களாக இருந்தாலும் சரி, அதில் மருந்துக்கு கூட வைணவர்களையோ, அவர்களின் முழுமுதல் கடவுளான திருமாலையோ ஒரு இடத்திலும் புகழ்வதற்கு கூட குறிப்பிடவில்லை.

தமிழ்நாட்டை அல்லது தமிழ் பேசும் பகுதிகளை முற்றிலும் சைவம் ஆக்கும் முயற்சிக்கு ஊதுகுழலாக இருந்தவர் சைவ பின்லேடன் போன்று செயல்பட்ட சேக்கிழார். சைவ திருவைந்தெழுத்தை அதாவது சிவாய நம என்ற மந்திர சொல்லை ஓதுபவர்களுக்கு அற்புதம் நிகழ்ந்ததாக கதை எழுதவேண்டிய பணியை சேக்கிழார் எடுத்துக் கொண்டார். சேக்கிழார் உருவாக்கிய 63 நாயன்மார்கள் கதைகள் ஒன்று கூட பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பது படிப்பவர்களுக்கு நன்கு தெரியும். சிவன் ஒரு சிவனடியார் வடிவில் வந்து இயற்பகை நாயனாரின் மனைவியை கூட்டிக் கொடுக்கச் சொன்னார், அவரும் மறுக்காமல் அதற்குத் துணிந்தார், அதைத் தடுத்த உறவினர்களை வெட்டிக் கொன்றார். இதை பக்தியின் உயர்வெளிபாடாக சிவன் மெச்சி காட்சி கொடுத்தான் என்பது போன்ற நாலாம் தரக் கதைகள் நிறைந்தவைதான் சேக்கிழார் கூறும் 63 நாயன்மார்கள் கதைகள். அதில் பலகதைகள் ஒன்று போலவே இருக்கும், திருநீலகண்டரிடம் திருவோட்டை ஒழித்து வைத்த சிவன், அமர்நீதி நாயனாரிடம் கோவணத்தை ஒழித்து வைத்து திருவிளையாடல்(?) நிகழ்த்துவாராம். அதாவது சிவனடியார் என்ற பெயர் தாங்கினால் அவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று 'வலி''யுறுத்த'லாகவே 63 நாயன்மார்களின் வரலாறுகள் உள்ளதை பக்திசார் பற்று படிக்கும் எவரும் உணருவர்.

திருஞானசம்பந்தன் என்னும் மற்றொரு சைவ பின்லேடன் "அந்தணர் வாழ்க" என்று தொடங்கிய ஏட்டை (ஒற்றை பனையோலை) புனல் வாதத்தின் போது பெருக்கெடுத்த ஆற்றில் விட அது ஆற்றை எதிர்த்து நீந்திச் சென்று திருவோடகம் என்ற இடத்திற்கு அருகில் நின்றதாம், அதே ஆற்றில் அதே வாதத்திற்கு விடப்பட்ட சமணர்களின் ஏடு ஆற்றோடு அடித்துச் சென்று கடலில் சேர்ந்துவிட்டதாம். அனல் வாதத்தின் போது சம்பந்தன் எழுதிய ஏட்டை தீயில் போடும் போது எரியாமல் முன்பைக் காட்டிலும் பளபளப்பாக மாறியதாம், சமணர்களின் ஏடு கருகியதாம். இதனால் வாதில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்ட சமணர்களின் நூல்கள் வைகை ஆற்றில் எரியப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுவது சைவ சமயமே கூறும் வரலாறு.

சைவத்தை நிரூபிக்க வேண்டுமென்றால் சம்பந்தன் தானே தீயில் இறங்கிக் காட்டி மீண்டு வந்திருக்க வேண்டும், அதைச் செய்யாமல் அந்த காலத்து சாய்பாபா போல் என்னவோ வித்தை செய்து சைவம் வென்றதாகச் சொல்லி சமண மதத்தையும் பெளத்ததையும் அழித்தொழித்தார்கள்.

தமிழ்சமூகத்தில் சைவ சமயம் என்ற பெயரில் பார்பனர்களுக்கு முதன் முதலில் அடிவருடிய பெருமை சேக்கிழாரையும் அவரது வெள்ளாள (பிள்ளைமார் சாதி) சமூகத்தையே சாரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். எங்கெல்லாம் ஆகம அமைப்புடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சிவன் கனவில் வந்து சொன்னதாகவே விடிவதற்குள் கதையை எழுதி, செய்யாவிடில் அரசு அழிந்துவிடும் என மன்னர்கள் பயமுறுத்தப்பட்டு பெரும்பாலான சிவன் கோவில்கள் கட்டப்பட்டு, அதற்கென சொத்துக்கள் எழுதிவைக்கப்பட்டு அன்றைய பார்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு நிரந்தர வழிவகையின் ஏற்பாடாக செய்யப்பட்டு இருக்கிறது.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் 13 நூற்றாண்டில் 63 நாயன்மார்களுக்காக தோன்றிய சிவன் அதன் பிறகு 8 நூற்றாண்டுகளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டில் தோன்றவில்லை. இவையெல்லாம் உண்மை என்று நினைத்திருந்தால் அருட்பிரகாச வள்ளலார் உருவ வழிபாட்டை புறம்தள்ளிவிட்டு 'அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்று ஜோதி வடிவ வழிபாட்டுக்கு மாறி இருப்பாரா ?

மன்மதனை எரித்தவன் அதாவது காமத்தை எரித்தவன் என்று போற்றப்படுகின்ற சிவனை, சிவனடியார் வடிவில் காமுகனாக வந்து மாற்றான் மனைவியைக் காமுறுவதற்கு கேட்டான் என்று சொல்வது ஆன்மிகத்துக்கும் இழுக்கு, அதைச் செய்யத் துணிந்தான் ஒரு தமிழன் என்று சொல்வது தமிழருக்கும் இழுக்கு. எவ்வளவு ஒரு சைவ சமய வெறி இருந்திருந்தால் இத்தகாத கதைகளையெலலம் எழுதி வைத்திருப்பார்கள். இவற்றை நாயன்மார்கள் என்ற பெயரில் வரிசையாக வைத்து பக்திப் பெருக்குடன் வழிபாடு செய்யவும், சைவ சமய இலக்கியங்கள் என்று போற்றவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

"அன்பே சிவம்......என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... போற்றி !"

41 கருத்துகள்:

Matra சொன்னது…

Coming during this time of the Mumbai tragedy, your intentions in publishing this article seem dishonorable.

Read this article which tells of terrorists killing someone who gave them water because that person was Hindu.

http://www.expressindia.com/latest-news/Terrorists-kill-the-man-who-gave-them-water/391467/

This news also appeared in Al-Jazeera news channel.

கோவி.கண்ணன் சொன்னது…

// Matra said...
Coming during this time of the Mumbai tragedy, your intentions in publishing this article seem dishonorable.

Read this article which tells of terrorists killing someone who gave them water because that person was Hindu.

http://www.expressindia.com/latest-news/Terrorists-kill-the-man-who-gave-them-water/391467/

This news also appeared in Al-Jazeera news channel.

9:28 AM, December
//

All because of religious extremist !

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

யோசிக்க வச்சுட்டீங்க கோவி!!

:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//கடைசி பக்கம் said...
யோசிக்க வச்சுட்டீங்க கோவி!!

:-))
//

பலர் இதுபோன்ற பதிவுகளுக்கு பின்னூட்டம் போட யோசிக்கிறாங்க, நீங்க யோச்சிச்சும் போட்டுவிட்டிங்க :)

நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தமிழ்நாட்டை அல்லது தமிழ் பேசும் பகுதிகளை முற்றிலும் சைவம் ஆக்கும் முயற்சிக்கு ஊதுகுழலாக இருந்தவர் சைவ பின்லேடன் போன்று செயல்பட்ட சேக்கிழார்//

கண்டனங்கள்!!!


"மீன் கொத்தி சைவக்கொக்கு" ((c)Reserved Jothibharathi) சாமியோவ்!

மோகன் கந்தசாமி சொன்னது…

விமர்சனம் 13 -ம் நூற்றாண்டோடு நின்று விடக்கூடாது, அப்படியே மெல்ல மேலேறி, முகலாய அட்டூழியங்கள், நாயக்கர் அட்டூழியங்கள், மிஷனரி அட்டூழியங்கள், சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த திருவனந்தபுர சமஸ்தான அட்டூழியங்கள், மய்யப்பகுதி வரை இருந்த ஜமீன்தாரி நிலப்ரபுத்துவ அட்டோழியங்கள், சுதந்திர இந்தியாவிலும் திருந்தாத தேவர்சாதி அட்டோழியங்கள், தாராளமய இந்தியாவில் பிராமனருடன் சேர்ந்து உயர்சாதியினர் அட்டூழியங்கள் என எல்லாவற்றையும் டைம் டேபிள் போட்டு விமர்சிக்க வேண்டும்.

கடவுள் பெயரால் தொடங்கி, மதத்தின் பெயரால் வளர்ந்து சாதியின் பெயரால் நிலைத்துவிட்ட அட்டூழியங்கங்கள் பார்ப்பனீயத்துக்கு அடுத்தபடியாக சமரசமின்றி ஒடுக்கப்படவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
//தமிழ்நாட்டை அல்லது தமிழ் பேசும் பகுதிகளை முற்றிலும் சைவம் ஆக்கும் முயற்சிக்கு ஊதுகுழலாக இருந்தவர் சைவ பின்லேடன் போன்று செயல்பட்ட சேக்கிழார்//

கண்டனங்கள்!!!


"மீன் கொத்தி சைவக்கொக்கு" ((c)Reserved Jothibharathi) சாமியோவ்!
//

அது என்ன காபி ரைட், ஏற்கனவே முத்துப்படத்தில் 'கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்ட மீனைக் கண்டு விரதம் முடிச்சிடுச்சாம்' என்ற பாடலில் சைவ கொக்கு பற்றிச் சொல்லிட்டாங்களே.

Robin சொன்னது…

பொதுவாக இப்படி மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை விமர்சிப்பவர்கள் முகலாயர் காலத்தோடு நின்று விடுவார்கள். அதற்கு முந்தைய வரலாற்றுக்கு சென்றால் அடுத்த மதத்தினரை குற்றம் சாட்டமுடியாது, ஏனென்றால் ஒவ்வொரு முறை குற்றம் சாட்டும்போதும் மனசாட்சி (அப்படி ஓன்று இருந்தால்) நீ மட்டும் யோக்கியனா என்று கேட்கும். ஆனால் நீங்கள் எந்த உள்நோக்கமும் இல்லாமல் துணிச்சலாக உங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//சைவத்தை நிரூபிக்க வேண்டுமென்றால் சம்பந்தன் தானே தீயில் இறங்கிக் காட்டி மீண்டு வந்திருக்க வேண்டும், அதைச் செய்யாமல் அந்த காலத்து சாய்பாபா போல் என்னவோ வித்தை செய்து சைவம் வென்றதாகச் சொல்லி சமண மதத்தையும் பெளத்ததையும் அழித்தொழித்தார்கள்.//

கோவி அண்ணே... இது அட்டமா சித்துகளின் உபயோகத்தில் செய்யபடும் சாத்தியக் கூறுகள் இன்னும் உள்ளன... சித்து விளையாட்டுகளை முழுமையாக கற்றவர்கள் அல்பத்தனமான வேலைகளுக்கு உபயோகிக்க மாட்டார்கள்... 'அதை பிலாக் மேஜிக்' எனும் பேரில் சிலர் சம்பாதிக்கிறார்கள்... அதை கூட விடலாம் மேலும் சிலர் மதத்தில் பேரில் இவற்றை பயன்படுத்துவது தான் கேவலம்...

முகவை மைந்தன் சொன்னது…

//வைர புத்தர் சிலை திருமங்கையாழ்வாரால் (வைணவர்) எடுத்துச் செல்லப்பட்டு பெருமாளாக்கப்பட்டது//

இப்ப பெருமாள் எங்கன இருக்கார்? முழு சிலையும் வைரம்னா எப்பவோ ஆட்டையப் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

//திருஞானசம்பந்தன் என்னும் மற்றொரு சைவ பின்லேடன் "அந்தணர் வாழ்க" என்று தொடங்கிய ஏட்டை (ஒற்றை பனையோலை) புனல் வாதத்தின் பெருக்கெடுத்த ஆற்றில் விடும் போது அது ஆற்றை எதிர்த்து நீந்திச் சென்று திருவோடகம் என்ற இடத்திற்கு அருகில் நின்றதாம், அதே ஆற்றில் அதே வாதத்திற்கு விடப்பட்ட சமணர்களின் ஏடு ஆற்றோடு அடித்துச் சென்று கடலில் சேர்ந்துவிட்டதாம். அனல் வாதத்தின் போது சம்பந்தன் எழுதிய ஏட்டை தீயில் போடும் போது எரியாமல் முன்பைக் காட்டிலும் பளபளப்பாக மாறியதாம், சமணர்களின் ஏடு கருகியதாம். இதனால் வாதில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்ட சமணர்களின் நூல்கள் வைகை ஆற்றில் எரியப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுவது சைவ சமயமே கூறும் வரலாறு.//

அப்ப சமணர்கள் கழுவிலேற்றப் பட்டது பொய்யா? உண்மைன்னா, ஏடுகள் எரியாததும் எதிர் நீச்சல் போட்டதும் உண்மையா???

வைகை ஏன் கடலோடு கூடுவதில்லை? இதுல இன்னொரு கதை இருக்கு. அதையும் பதிவிடுங்க.

சைவ பின்லேடன் - பதிப்புரிமை ரத்னேஷ் அண்ணாவோடது!

//தமிழ்சமூகத்தில் சைவ சமயம் என்ற பெயரில் பார்பனர்களுக்கு முதன் முதலில் அடிவருடிய பெருமை சேக்கிழாரையும் அவரது வெள்ளாள (பிள்ளைமார் சாதி) சமூகத்தையே சாரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.//

பாவாணர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர் அதிக்கம் நிலை பெற்றதா சொல்றாரு. நீங்க எந்த ஆய்வாளரை குறிப்பிடுறீங்க? பள்ளிக்கூட ஆய்வாளர்னு சொல்லிடாதீங்க :-))))

//எப்படி யோசித்துப் பார்த்தாலும் 13 நூற்றாண்டில் 63 நாயன்மார்களுக்காக தோன்றிய சிவன் அதன் பிறகு 8 நூற்றாண்டுகளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டில் தோன்றவில்லை.//

அதெல்லாம் தோன்றத்தான் செஞ்சாங்க. ஆனா யாரும் பெருசா எடுத்துக்கலை. பல்வேறு படையெடுப்புகளில் அவனவன் பாடே திண்டாட்டமா இருந்துச்சு. கல்வி அறிவு பெருகினதும் எல்லா சாமியும் கூத்தை ஓரங்கட்டிட்டாங்க. அவ்வளவு தான்.

Me சொன்னது…

சேக்கிழாரை பின்லேடனுடன் ஓப்பிடலமா? உம்மாச்சி கண்ண குத்திடும்.

உம்மாச்சி கண்ணை குத்தவில்லையென்றாலும் இணையத்து கலாச்சார/தேசிய காவல்காரர்களிடமிருந்து ”போலி மதசார்பின்மையின் இன்னொரு முகம் காட்டும் இணைய போலிகள்-by அ கி கி அனானி” என்கிற தலைப்பில் இனி நிறைய பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
இப்ப பெருமாள் எங்கன இருக்கார்? முழு சிலையும் வைரம்னா எப்பவோ ஆட்டையப் போட்டுருப்பாங்கன்னு நினைக்கிறேன்.//

அது தனியாக எழுத வேண்டிய பதிவு. பள்ளி கொண்ட ரங்கனாதரைப் பார்க்கும் போது எனக்கு சயன புத்தரே நினைவுக்கு வருகிறார். :)

//அப்ப சமணர்கள் கழுவிலேற்றப் பட்டது பொய்யா? உண்மைன்னா, ஏடுகள் எரியாததும் எதிர் நீச்சல் போட்டதும் உண்மையா???//

சமணர்கள் துண்டைக்கானும் துணியைக் காணும் (இயல்பாகவே சமண திகம்பர சன்னியாசிகள் துணி இல்லாமல் தான் இருப்பாங்க) என்று தமிழ் நாட்டை விட்டு ஓடியதைப் பார்த்தால் கழுவேற்றியது உண்மையாகத்தான் இருக்கும்.

//வைகை ஏன் கடலோடு கூடுவதில்லை? இதுல இன்னொரு கதை இருக்கு. அதையும் பதிவிடுங்க.//

அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அறிந்தது பதிகிறேன்

//சைவ பின்லேடன் - பதிப்புரிமை ரத்னேஷ் அண்ணாவோடது!//

வேண்டுமென்றே தான் அவர் பெயரை இங்கே குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் பெயரைக் குறிப்பிட்டு இருந்தால் எனக்கு பதிலாக அவருக்கு சாபமிடுவார்கள். கோவிக்கு சாபமெல்லாம் ஒண்ணும் செய்யாது, ஏனெனில் என்னை எழுதத் தூண்டுவது மேலே இருக்கிறானே 'அவன்', எல்லாம் அவன் செயல் :)

//பாவாணர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆரியர் அதிக்கம் நிலை பெற்றதா சொல்றாரு. நீங்க எந்த ஆய்வாளரை குறிப்பிடுறீங்க? பள்ளிக்கூட ஆய்வாளர்னு சொல்லிடாதீங்க :-))))//

2 ஆயிரம் ஆண்டுக்கணக்கு ஊடுறுவல் தொடங்கிய காலம், ஆதிக்கம் தொடங்கியது சைவ மறுமலர்ச்சி (என்று சொல்லப்படுவதற்கு) பின்னால் தான். அதாவது களப்பிரர் ஆட்சிக்கு பின்னே. எந்த ஆய்வாளரா ? பேரறிஞரை அண்ணா ஆய்வளராக இருந்தால் ஒப்புக் கொள்ள மாட்டிங்களா ? அவர் ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி மட்டுமல்ல, மிகச் சிறந்த ஆன்மிகவாதி என்பது என் எண்ணம்.

//அதெல்லாம் தோன்றத்தான் செஞ்சாங்க. ஆனா யாரும் பெருசா எடுத்துக்கலை. பல்வேறு படையெடுப்புகளில் அவனவன் பாடே திண்டாட்டமா இருந்துச்சு. கல்வி அறிவு பெருகினதும் எல்லா சாமியும் கூத்தை ஓரங்கட்டிட்டாங்க. அவ்வளவு தான்.//

இன்னிக்கு சேக்கிழார் இருந்தால் பீடி சாமியாரெல்லாம் சிவனடியாராக உயர்த்தப்பட்டு இருப்பார் :)

SurveySan சொன்னது…

நல்ல கட்டுரை.

ஆனா, இந்த கருத்தின், மாரல் ஆஃப் த ஸ்டோரி இன்னா?

சிவனை துதிக்காதீங்கங்கரதா? ;)

கோவி.கண்ணன் சொன்னது…

// SurveySan said...


ஆனா, இந்த கருத்தின், மாரல் ஆஃப் த ஸ்டோரி இன்னா?

சிவனை துதிக்காதீங்கங்கரதா? ;)
//

எதையும் தப்பாக புரிந்து கொள்பவரா நீங்கள். 'ஈஸ்வர அல்லா தேரா நாம்' என்று ஒன்றிணைத்துச் சொல்லப்பட்ட சிவனை துதிக்காதிங்க என்று நான் சொல்லுவேனா ? கடைசி பத்தியில் எழுதி இருப்பது புரியவில்லையா ?

அளவுக்கு அதிமாக கட்டுக்கதைகளைச் சொல்லி இருக்கிறார்கள், மதவெறியில் நடந்து கொண்டார்கள் என்று தான் சொல்லி இருக்கிறேன். இறைவழிபாட்டைப் பற்றி நான் எங்கும் குறைச் சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
சேக்கிழாரை பின்லேடனுடன் ஓப்பிடலமா? உம்மாச்சி கண்ண குத்திடும்.
//

உம்மாச்சி எனக்கு பக்கத்துவீட்டு அக்காதான். எதுவும் செய்துவிடாது.
:)

//உம்மாச்சி கண்ணை குத்தவில்லையென்றாலும் இணையத்து கலாச்சார/தேசிய காவல்காரர்களிடமிருந்து ”போலி மதசார்பின்மையின் இன்னொரு முகம் காட்டும் இணைய போலிகள்-by அ கி கி அனானி” என்கிற தலைப்பில் இனி நிறைய பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

12:56 PM, December 04, 2008
//

பாடிகாட் முனிஸ்வரன் என்ற பெயரில் இருக்கும் நாட்டார் தெய்வ வழிபாட்டை பழிக்கும் விதமாக எழுதும் அவர்கள் இந்து மதத்தின் பாதுகாவலர் இல்லை. அவர்கள் பாதுகாக்க வேண்டியது 'சோ' கால்ட் ஹிந்துமதம் மட்டும் தான்.

அடுத்த மதக் கடவுளை பழிப்பவர்கள் அனைவருமே போலி ஆன்மிகவாதிகள், போலிமத(ச்சார்பு)வாதிகள் தாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// மோகன் கந்தசாமி said...
விமர்சனம் 13 -ம் நூற்றாண்டோடு நின்று விடக்கூடாது, அப்படியே மெல்ல மேலேறி, முகலாய அட்டூழியங்கள், நாயக்கர் அட்டூழியங்கள், மிஷனரி அட்டூழியங்கள், சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்த திருவனந்தபுர சமஸ்தான அட்டூழியங்கள், மய்யப்பகுதி வரை இருந்த ஜமீன்தாரி நிலப்ரபுத்துவ அட்டோழியங்கள், சுதந்திர இந்தியாவிலும் திருந்தாத தேவர்சாதி அட்டோழியங்கள், தாராளமய இந்தியாவில் பிராமனருடன் சேர்ந்து உயர்சாதியினர் அட்டூழியங்கள் என எல்லாவற்றையும் டைம் டேபிள் போட்டு விமர்சிக்க வேண்டும்.//

மதங்களை ஒழிக்காமல் எந்த ஒரு பிரிவினை வாதத்தையும் ஒழித்துவிட முடியாது :(

//கடவுள் பெயரால் தொடங்கி, மதத்தின் பெயரால் வளர்ந்து சாதியின் பெயரால் நிலைத்துவிட்ட அட்டூழியங்கங்கள் பார்ப்பனீயத்துக்கு அடுத்தபடியாக சமரசமின்றி ஒடுக்கப்படவேண்டும்.
//

இன்னுமா ஒடுங்காமல் இருக்காங்க, ஒடுங்காமல் இருந்தால் இப்படி பட்ட பதிவுகளை பலரும் எழுத முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...

கோவி அண்ணே... இது அட்டமா சித்துகளின் உபயோகத்தில் செய்யபடும் சாத்தியக் கூறுகள் இன்னும் உள்ளன... சித்து விளையாட்டுகளை முழுமையாக கற்றவர்கள் அல்பத்தனமான வேலைகளுக்கு உபயோகிக்க மாட்டார்கள்... 'அதை பிலாக் மேஜிக்' எனும் பேரில் சிலர் சம்பாதிக்கிறார்கள்... அதை கூட விடலாம் மேலும் சிலர் மதத்தில் பேரில் இவற்றை பயன்படுத்துவது தான் கேவலம்...
//

விக்கி,

ப்ளாக் மேஜிக் செய்கிறவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். கிறித்துவத்தில் சூனியக் காரர்கள் உண்டு. தமிழ் சித்தர்கள் சித்துக்கள் பண்ணியதாகச் சொல்லப்படுவது நன்மையின் பொருட்டுதான். ஆனால் இந்த சைவவாதிகள் செய்ததெல்லாம் அட்டூழியம். எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தால் வலியுறுத்தப்பட்டால் அதனை பின்பற்றும் மக்களும் அப்படியே ஆகிப்போவார்கள்.

துளசி கோபால் சொன்னது…

வைர புத்தர் இப்போ எங்கே?
அவரை வந்து சேவிக்கறதா ஒரு பிரார்த்தனை செஞ்சுட்டேனே.....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
வைர புத்தர் இப்போ எங்கே?
அவரை வந்து சேவிக்கறதா ஒரு பிரார்த்தனை செஞ்சுட்டேனே.....
//

வைரம், வைடூரியம் கிரீடமாக பதிக்கப்பட்ட புத்தர். இப்பொதெல்லாம் அதுபோன்ற புத்தர்களை ஆசிய நாடுகளில் தான் பார்க்க முடியும்.

பேங்காக்கில் எமரால்ட் புத்தர் சிலை கூட இருக்கிறது. பச்சைவண்ணத்தில் சிறிய சிலை. அழகாக இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Robin 11:57 AM, December 04, 2008
பொதுவாக இப்படி மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை விமர்சிப்பவர்கள் முகலாயர் காலத்தோடு நின்று விடுவார்கள். அதற்கு முந்தைய வரலாற்றுக்கு சென்றால் அடுத்த மதத்தினரை குற்றம் சாட்டமுடியாது, ஏனென்றால் ஒவ்வொரு முறை குற்றம் சாட்டும்போதும் மனசாட்சி (அப்படி ஓன்று இருந்தால்) நீ மட்டும் யோக்கியனா என்று கேட்கும். ஆனால் நீங்கள் எந்த உள்நோக்கமும் இல்லாமல் துணிச்சலாக உங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள். பாராட்டுகள்.
//

Robin,

பாராட்டுக்கு நன்றி !

துளசி கோபால் சொன்னது…

மரகத புத்தரைப் பற்றிப் பதிவெல்லாம் எழுதியாச்சு கோவியாரே.

எனக்கு இப்போ வைரம்தான் வேணும்:-)

பாண்டித்துரை சொன்னது…

பதிவு நன்று கோவி.

சிவன் சிங்கப்பூரில் கோவில் கட்டச்சொல்லி யாரிடம் கேட்டுக்கொண்டார்? (தெரிஞ்சுக்கலாமேனு......)

சிங்கப்பூரில் திவ்யமான காணிக்கைகள் விழுகின்றன் பத்தாதற்கு பெருமாளே இங்கே வர்றா!


சனிக்கிழமை மட்டும் பெருமாள சேவிச்சு காத்திருந்து பிரசாதம் திங்கறவா எண்ணிக்கை 5000 ற்கும் அதிகம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாண்டித்துரை said...
பதிவு நன்று கோவி.

சிவன் சிங்கப்பூரில் கோவில் கட்டச்சொல்லி யாரிடம் கேட்டுக்கொண்டார்? (தெரிஞ்சுக்கலாமேனு......)

சிங்கப்பூரில் திவ்யமான காணிக்கைகள் விழுகின்றன் பத்தாதற்கு பெருமாளே இங்கே வர்றா!


சனிக்கிழமை மட்டும் பெருமாள சேவிச்சு காத்திருந்து பிரசாதம் திங்கறவா எண்ணிக்கை 5000 ற்கும் அதிகம்.

4:44 PM, December 04, 2008
//

ஒரு காலத்துல விதேஷம் (வெளிநாடு) போறவாளை மீலெச்சர் (அஷுத்தமானவா) என்பார், அவாளை ஷேர்க்காமல் ஒதுக்கி வைப்பாள், நல்ல காரியத்துல அவாள கலந்துக்க விடமாட்டா, இன்னிக்கு சாமியையே விதேஷத்துல கொண்டு வந்து வச்சுட்டா. என்ன பண்றது கலி அவனோட வேலைய காட்டுறான். கலி முத்திடுத்தோன்னோ ?

என்ன சொன்னேள், சிங்கையில் யாரோட கனவில் வந்து சொன்னாரா ? தலபுராணம் பார்க்கனும் டைம் கொடுப்பேளா ?

மலேசியா பத்துமலை முருகனுக்கு கோவில் கூட சொப்பனத்தில் சொன்னதால் தான் கட்டப்பட்ட விஷயம் தெரியுமோன்னோ ?

நாகை சிவா சொன்னது…

//என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... போற்றி !"//

தென்நாட்டுடைய சிவனே போற்றி

வுட்டு போச்சு அண்ணனே..

ஏண்டா எம்மாம் கஷ்டப்பட்ட மாங்கு மாங்கு னு எழுதி இருக்கேன்.. இது தான் ரொம்ப முக்கியமா உன் கண்ணுல பட்டுச்சானு எல்லாம் கேட்கப்பிடாது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
வாய்ப்பு கிடைத்தால் சிங்கையில் நடக்கும் அடுத்த திருமுறை மாநாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.
தாங்கள் வரவேண்டும் தமிழ் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் அவா!

திருச்சிற்றம்பலம்!

suvanappiriyan சொன்னது…

நிறைய படிக்கிறீர்கள். படித்ததை உடன் மற்றவர்களுக்கு பதிந்தும் விடுகிறீர்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் கோவியாருக்கு பாராட்டுக்கள்.

மணிகண்டன் சொன்னது…

பின்லேடன், ராதாகிருஷ்ணன் சார் எழுதிய "ஊன் உண்ணாமை" அதிகாரத்தின் பொருள் படிச்சவுடன சைவமா மாறிட்டாராம் ! அது இப்ப தான் தெரியுமா உங்களுக்கு ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எது எப்படியோ ஆட்டுக்கறி விலை குறைந்தால் நல்லது தானே.
நம்மளைபோல் ஏழை பாளைகள் வங்கி சாப்பிடலாமே!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சிங்கப்பூர் பெருமாள் கோயில்ல பிரசாதம் நெம்ப நல்லா இருக்கும்ணே. அதுக்காச்சும் அந்த கோயிலுக்கு நன்றி சொல்லோனும். அப்றம் சிலோன் ரோட்டுல இருக்க பிள்ளையார் கோயில்லயும் நல்லா சாப்பாடு போடுவாங்க. இட்லி, காபி எல்லாம் கூட ஒரு தடவ குடுத்தாங்கண்ணே.
சிவன் கோயில்ல சாப்பாடு எப்டின்னு இன்னும் பார்த்தது இல்ல. அங்கயும் ஒருக்கா போவோணும்ணே.

கார்க்கிபவா சொன்னது…

//சுவனப்பிரியன் said...
நிறைய படிக்கிறீர்கள். படித்ததை உடன் மற்றவர்களுக்கு பதிந்தும் விடுகிறீர்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் கோவியாருக்கு பாராட்டுக்கள்.//

ரிப்பீட்டேய்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா 6:48 PM, December 04, 2008
//என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி... போற்றி !"//

தென்நாட்டுடைய சிவனே போற்றி

வுட்டு போச்சு அண்ணனே..

ஏண்டா எம்மாம் கஷ்டப்பட்ட மாங்கு மாங்கு னு எழுதி இருக்கேன்.. இது தான் ரொம்ப முக்கியமா உன் கண்ணுல பட்டுச்சானு எல்லாம் கேட்கப்பிடாது
//

நன்றி சிவா,

இதைக் குறிப்பிட்டு யாராவது கேட்கனும் என்று நினைத்தேன்.

சிவன் எனும் பேரொளியை தென்னாட்டிற்கு மட்டுமே உடைமை ஆக்கவிரும்பவில்லை, அதனால் அந்த வரிகளை எழுதவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி 6:56 PM, December 04, 2008
கோவியாரே!
வாய்ப்பு கிடைத்தால் சிங்கையில் நடக்கும் அடுத்த திருமுறை மாநாட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்.
தாங்கள் வரவேண்டும் தமிழ் தாகம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் அவா!

திருச்சிற்றம்பலம்!
//

மிக்க நன்றி, பக்திசார் நிகழ்ச்சிகளுக்கு அவ்வளவாக விருப்பு காட்டுவதில்லை. நீங்களும் உடன் வருவதால் செல்வோம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சிங்கப்பூர் பெருமாள் கோயில்ல பிரசாதம் நெம்ப நல்லா இருக்கும்ணே. அதுக்காச்சும் அந்த கோயிலுக்கு நன்றி சொல்லோனும். அப்றம் சிலோன் ரோட்டுல இருக்க பிள்ளையார் கோயில்லயும் நல்லா சாப்பாடு போடுவாங்க. இட்லி, காபி எல்லாம் கூட ஒரு தடவ குடுத்தாங்கண்ணே.
சிவன் கோயில்ல சாப்பாடு எப்டின்னு இன்னும் பார்த்தது இல்ல. அங்கயும் ஒருக்கா போவோணும்ணே.
//

பெருமாள் கோவில் வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல் நல்லா இருக்கும். சிவன் கோவில் அது போல் வாரவாரம் போடமாட்டாங்க.

அங்கெல்லாம் சென்று ஒரு 5 ஆண்டுகள் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
பின்லேடன், ராதாகிருஷ்ணன் சார் எழுதிய "ஊன் உண்ணாமை" அதிகாரத்தின் பொருள் படிச்சவுடன சைவமா மாறிட்டாராம் ! அது இப்ப தான் தெரியுமா உங்களுக்கு ?
//

:)

நான் இருபிறப்பாளன், 10 வயது வரை அசைவம், அதன் பிறகு தூய சைவம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
நிறைய படிக்கிறீர்கள். படித்ததை உடன் மற்றவர்களுக்கு பதிந்தும் விடுகிறீர்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் கோவியாருக்கு பாராட்டுக்கள்.
//

பாராட்டுக்கு நன்றி சுவனப்பிரியன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
//சுவனப்பிரியன் said...
நிறைய படிக்கிறீர்கள். படித்ததை உடன் மற்றவர்களுக்கு பதிந்தும் விடுகிறீர்கள். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்கும் கோவியாருக்கு பாராட்டுக்கள்.//

ரிப்பீட்டேய்
//

கார்க்கி நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எது எப்படியோ ஆட்டுக்கறி விலை குறைந்தால் நல்லது தானே.
நம்மளைபோல் ஏழை பாளைகள் வங்கி சாப்பிடலாமே!

8:02 PM, December 04, 2008
//

பாரதி,
தற்போதைய விலை விபரம் எனக்கு தெரியாது.

சிங்கையில் சீனர்கள் ஆட்டுக்கறி சாப்பிட்டால் விலை குறையும், நிறைய இறக்குமதி பண்ணுவாங்க, கொஞ்சமாக இறக்குமதி செய்வதால் விலையும் மிகுதி என்று நினைக்கிறேன்.

Matra சொன்னது…

Looks like a serious discussion has turned to comparison of temple prasadams.

If the perpetrators were Hindus and or the victims were exclusively Muslim/Christian/Tamilian, then the outcome would have been very different.

What I understand now is that it is ok to kill , maim, torture, destroy, whatever. Only the background of the perpetrator and the victim matters.

வாசகன் சொன்னது…

\\13 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. அதில் ஒரு சைவ - வைணவ கதையைத் தான் தசவதாரம் படத்தில் காட்டினார்கள்.\\

இந்தக் கதை புளுகான கதை எனப் படத்திலேயே காட்டுகிறார்கள்,இதை நீங்கள் எடுத்துக்காட்டுவது விந்தையானது.

\\இந்திய விடுதலை போராட்டத்திற்கு பிறகு குறுநில மன்னர்கள் சுளுக்கெடுக்கப்பட்டு அவர்களுடைய ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை இந்தியாவுடன் இணைத்த நிகழ்வு போலவே 13 - 12 ஆம் நூற்றாண்டில் தமிழுக்கு எதிராணவர்கள் என்ற குற்றச்சாட்டில் சமண - பவுத்த மதங்கள் வீழ்த்தப்பட்ட பிறகு\\

இது போன்ற அரை அவியல் பதிவுகளை எழுதும் முன் குறைந்தபட்சம் என்ன எழுதுகிறீர்களோ அது பற்றிய வரலாறாவது சிறிது படித்து விட்டு வந்து எழுதுங்கள்.
இரண்டு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழியின் ஆதிக்கம் அதிகமாகி கிட்டத்திட்ட தமிழ் சாவுப் படுக்கைக்கு வந்து விட்டது.

இந்த சமயத்தில் தமிழர் கடவுட் கொள்கையான சிவம் என்ற தத்துவமும் தமிழ் என்ற மொழியின் இருப்பும் கேள்விக்குள்ளான பொழுதில் தோன்றியதுதான் தமிழ் சமய இலக்கியப் புரட்சியும் மறுமலர்ச்சியும்.

சமணம் வீழ்த்தப் பட்டது;காரணம் சமணப் பள்ளிகளும் சமண குரு'க்களும் அரசர்களை பொம்மை போலத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள்;வடமொழியும் பிராகிருதமும் அரசியல் ஆட்சி செய்தன.

ஒரு மொழி,இலக்கிய நோக்கில் வளர வேண்டுமெனில் அரசு ஆதரவு வேண்டும்.

அதற்கு அரசர்கள் மனம் மாற வேண்டும்.இந்த நுண்ணிய கருத்தைப் புரிந்து கொண்ட சம்பந்தர் போன்ற பெரியவர்கள் மொழி,சமயம் இரண்டையும் ஒரே நேரத்தில் மீட்டெடுக்கத் தளராது முயன்று பெற்ற வெற்றியினால்தான் தமிழ் மீண்டும் ஏற்றம் பெற்றதுடன் தமிழர்களின் சிவ வழிபாடும் மீண்டும் ஏற்றம் பெற்றது.

சம்பந்தர் போன்றவர்கள் அதற்காக தம் உயிரையும் கூட இழக்க நேர்ந்தது.
பலமுறை தப்பியவர்கள் கடைசியில் திருமணத்தன்று சூழ்ச்சியால் மொத்தமாகப் பலியானார்கள்!

ஒருவேளை சம்பந்தர்,திருநாவுக்கரசர் போன்றவர்கள் தோன்றாதிருந்தால் இன்று தமிழின் பெயரைக் கொண்ட ஜல்லியடித்துக் கொண்டு குடும்ப சொத்து வளர்த்துக் கொண்டிருக்கிறாரே முக., அவர் போன்றவர்களுக்குப் பிழைக்க வழியில்லாமல் போயிருக்கும் !


\\தமிழ்நாட்டை அல்லது தமிழ் பேசும் பகுதிகளை முற்றிலும் சைவம் ஆக்கும் முயற்சிக்கு ஊதுகுழலாக இருந்தவர் சைவ பின்லேடன் போன்று செயல்பட்ட சேக்கிழார். சைவ திருவைந்தெழுத்தை அதாவது சிவாய நம என்ற மந்திர சொல்லை ஓதுபவர்களுக்கு அற்புதம் நிகழ்ந்ததாக கதை எழுதவேண்டிய பணியை சேக்கிழார் எடுத்துக் கொண்டார்.\\


திரும்பவும் ஒரு அரைவேக்காட்டுத் தனமான புரிதல்!

சேக்கிழார் அவரே கற்பனையில் இவற்றை எழுதவில்லை;திருத்தொண்டர் புராணத்தை ஏற்கனவே நம்பியாண்டார் நம்பி தொகுத்து வைத்திருந்த நாயன்மார் வரலாறுகளை சேக்கிழார் முறைபபடுத்தித் தொகுத்தார்,அவ்வளவே.



\\சேக்கிழார் உருவாக்கிய 63 நாயன்மார்கள் கதைகள் ஒன்று கூட பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்பது படிப்பவர்களுக்கு நன்கு தெரியும். \\


இரண்டாவது பெரியபுராணத்தில் எழுதி இருக்கும்படி இன்றைக்கும் ஏதேனும் இரு இடங்களுக்கிடையேயான இருப்பிட தூரம் மற்றும் மற்ற வரலாற்றுச் சான்றுகள் உண்மையாக இருக்கின்றன;ஆக அனைத்தும் புரட்டு என்பது ஒரு மொக்கை வாதம்.

குர் ஆன் மற்றும் புதிய,பழைய ஏற்பாடுகளைப் படித்து அவற்றில் புரட்டாகத் தோன்றும் செய்திகளைப் பற்றியும் இப்படி ஒரு விளக்கப் பதிவை எதிர்பார்க்கிறேன் !!!!




\\திருஞானசம்பந்தன் என்னும் மற்றொரு சைவ பின்லேடன் "அந்தணர் வாழ்க" என்று தொடங்கிய ஏட்டை ...\\

இது பழந்தமிழ் நாட்டில் அந்தணர் என்றால் இன்றைய பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற இன்னொரு அரைகுறை அரைவேக்காட்டுத்தனப் புரிதலில் வந்த வாக்கியம் இது !

\\(ஒற்றை பனையோலை) புனல் வாதத்தின் போது பெருக்கெடுத்த ஆற்றில் விட அது ஆற்றை எதிர்த்து நீந்திச் சென்று திருவோடகம் என்ற இடத்திற்கு அருகில் நின்றதாம், அதே ஆற்றில் அதே வாதத்திற்கு விடப்பட்ட சமணர்களின் ஏடு ஆற்றோடு அடித்துச் சென்று கடலில் சேர்ந்துவிட்டதாம். அனல் வாதத்தின் போது சம்பந்தன் எழுதிய ஏட்டை தீயில் போடும் போது எரியாமல் முன்பைக் காட்டிலும் பளபளப்பாக மாறியதாம், சமணர்களின் ஏடு கருகியதாம். இதனால் வாதில் தோற்றவர்களாக அறிவிக்கப்பட்ட சமணர்களின் நூல்கள் வைகை ஆற்றில் எரியப்பட்டதாகவும், ஒப்பந்தப்படி எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுவது சைவ சமயமே கூறும் வரலாறு.\\

அதனால் என்ன?
அது நிகழ வேண்டியதற்கான மொழி அரசியல் காரணங்கள் இருந்தன...



\\தமிழ்சமூகத்தில் சைவ சமயம் என்ற பெயரில் பார்பனர்களுக்கு முதன் முதலில் அடிவருடிய பெருமை சேக்கிழாரையும் அவரது வெள்ளாள (பிள்ளைமார் சாதி) சமூகத்தையே சாரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.\\

எந்த வரலாற்று ஆய்வாளர்?

டாவு மன்னனா?


\\எங்கெல்லாம் ஆகம அமைப்புடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சிவன் கனவில் வந்து சொன்னதாகவே விடிவதற்குள் கதையை எழுதி, செய்யாவிடில் அரசு அழிந்துவிடும் என மன்னர்கள் பயமுறுத்தப்பட்டு பெரும்பாலான சிவன் கோவில்கள் கட்டப்பட்டு,\\

எப்படி?

மயன் மாளிகை மாதிரி ஒரு இரவில் கட்டினார்களா?

கோவில்கள் இருந்த தலங்களுக்குப் போய்த்தான் நால்வர் பாடினார்கள்...

\\எப்படி யோசித்துப் பார்த்தாலும் 13 நூற்றாண்டில் 63 நாயன்மார்களுக்காக தோன்றிய சிவன் அதன் பிறகு 8 நூற்றாண்டுகளில் ஒருமுறை கூட தமிழ்நாட்டில் தோன்றவில்லை.\\

அல்லா,யேசு எல்லார் ஒவ்வொரு வீக் எண்டும் வந்து போகிறார்களா?

கடவுள் தேடல் இருக்கின்றவனிடம்தான் போவார்.
அறை எண் 305 மாதிரி கண்ட கழிசடைகளுக்காக வரமாட்டார்.



\\இவையெல்லாம் உண்மை என்று நினைத்திருந்தால் அருட்பிரகாச வள்ளலார் உருவ வழிபாட்டை புறம்தள்ளிவிட்டு 'அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை' என்று ஜோதி வடிவ வழிபாட்டுக்கு மாறி இருப்பாரா ?\\

இன்னொரு பிதற்றல் !

கந்த கோட்டத்து கந்த வேளைப் பாடியது யார்?

கோவி.கண்ணன் சொன்னது…

வாசகன் has left a new comment on your post "சைவ பின்லேடன்கள் !":

//இந்தக் கதை புளுகான கதை எனப் படத்திலேயே காட்டுகிறார்கள்,இதை நீங்கள் எடுத்துக்காட்டுவது விந்தையானது.//

புளுகுக்கதையா ? பெருமாள் கடலில் வீசப்பட்டதெல்லாம் ஆவணமாக இருக்கிறது. வைணவர்களைக் கேளுங்கள் சொல்லுவார்கள். கிரிமிகண்ட சோழன் கதையெல்லாம் புளுகுகதையல்ல, படத்தில் மெருகேற்றப்பட்டது என்று தான் சொல்லுவார்கள்

//இது போன்ற அரை அவியல் பதிவுகளை எழுதும் முன் குறைந்தபட்சம் என்ன எழுதுகிறீர்களோ அது பற்றிய வரலாறாவது சிறிது படித்து விட்டு வந்து எழுதுங்கள்.
இரண்டு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடமொழியின் ஆதிக்கம் அதிகமாகி கிட்டத்திட்ட தமிழ் சாவுப் படுக்கைக்கு வந்து விட்டது.//

வடமொழி ஆதிக்கம் ? உளறல், ஐம்பெரும் காப்பியங்கள் அனைத்தும் பெளத்த/சமண கவிஞர்களால் உருவானவை. அதன்பிறகு சைவ சமயத்தினரால் தான் மணிப்ரளவ நடை உறுவாக்கப்பட்டு தமிழை சீரழிக்க முயன்று சென்ற நூற்றாண்டில் தோற்றார்கள்

//இந்த சமயத்தில் தமிழர் கடவுட் கொள்கையான சிவம் என்ற தத்துவமும் தமிழ் என்ற மொழியின் இருப்பும் கேள்விக்குள்ளான பொழுதில் தோன்றியதுதான் தமிழ் சமய இலக்கியப் புரட்சியும் மறுமலர்ச்சியும்.//

கேள்விக்கு உள்ளான பொழுது அல்ல, சைவ வெறியாக மாறிய பொழுதும் பார்பனர் மற்றும் வெள்ளாள சமூகம் ஆளுமையை செலுத்த எத்தனித்த போதே மறுமலர்ச்சி என்ற பெயரில் உறுவானது.

//சமணம் வீழ்த்தப் பட்டது;காரணம் சமணப் பள்ளிகளும் சமண குரு'க்களும் அரசர்களை பொம்மை போலத் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தார்கள்;வடமொழியும் பிராகிருதமும் அரசியல் ஆட்சி செய்தன.//

வடமொழி இந்தியாவெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததே இல்லை. பேச்சுவழக்கற்ற அதுவெறும் இலக்கிய மொழி மட்டுமே. தமிழகத்தில் பாலி மொழி இருந்ததற்கான சுவடுகளே இல்லை என்பதால் அது உங்கள் கற்பனை.

//ஒரு மொழி,இலக்கிய நோக்கில் வளர வேண்டுமெனில் அரசு ஆதரவு வேண்டும்.

அதற்கு அரசர்கள் மனம் மாற வேண்டும்.இந்த நுண்ணிய கருத்தைப் புரிந்து கொண்ட சம்பந்தர் போன்ற பெரியவர்கள் மொழி,சமயம் இரண்டையும் ஒரே நேரத்தில் மீட்டெடுக்கத் தளராது முயன்று பெற்ற வெற்றியினால்தான் தமிழ் மீண்டும் ஏற்றம் பெற்றதுடன் தமிழர்களின் சிவ வழிபாடும் மீண்டும் ஏற்றம் பெற்றது.//

அச்சோ அச்சோ அப்போ வடமொழியைக் கலந்து புதுமொழி என்ற பெயரில் மணிப்ரளவம் நுழைத்து தமிழை கெடுக்க முயன்றது யாராம் ?

//சம்பந்தர் போன்றவர்கள் அதற்காக தம் உயிரையும் கூட இழக்க நேர்ந்தது.
பலமுறை தப்பியவர்கள் கடைசியில் திருமணத்தன்று சூழ்ச்சியால் மொத்தமாகப் பலியானார்கள்!//

சம்பந்தர் தான் தங்கி இருந்த இடத்திற்கு தன் ஆட்களால் தீ வைக்கச் சொல்லி, சமணர் எரித்ததாக கிளப்பிவிட்டுத்தான் மதுரைக்குள் மங்கையர்கரசி யின் ஆதரவில் நுழைந்தார். திருமணத்தன்று அவர் எரிந்தது சமணர்கள் சூழ்ச்சியல்ல, அவரை தமிழ் சங்கராச்சாரியாராக ஆக்க முயன்ற சைவ சமயத்தினருக்கு அவரின் திருமணம் எரிச்சலூட்டியது, எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஏற்க மறுத்தார். விரும்பியே அடியார்களுடம் வேறுவழியின்றி தீ புகுந்தார்.

//ஒருவேளை சம்பந்தர்,திருநாவுக்கரசர் போன்றவர்கள் தோன்றாதிருந்தால் இன்று தமிழின் பெயரைக் கொண்ட ஜல்லியடித்துக் கொண்டு குடும்ப சொத்து வளர்த்துக் கொண்டிருக்கிறாரே முக., அவர் போன்றவர்களுக்குப் பிழைக்க வழியில்லாமல் போயிருக்கும் ! //

சம்பந்தர் போன்றோர்கள் தோன்றி 'அந்தணர்' புகழ்பாடாதிருந்தார் பார்பனர்களுக்கு நிரந்தர வயிற்றுப்'பிழை'ப்பு கிடைக்காமல் போயிருக்கும்

//திரும்பவும் ஒரு அரைவேக்காட்டுத் தனமான புரிதல்!

சேக்கிழார் அவரே கற்பனையில் இவற்றை எழுதவில்லை;திருத்தொண்டர் புராணத்தை ஏற்கனவே நம்பியாண்டார் நம்பி தொகுத்து வைத்திருந்த நாயன்மார் வரலாறுகளை சேக்கிழார் முறைபபடுத்தித் தொகுத்தார்,அவ்வளவே.//

முழுவேக்காட்டு புரிதல் கொண்டோரே, சிவனடியார் கேட்கிறார் என்பதற்க்காக மனைவியைக் கூட்டிக்கொடுக்கும் பக்தர் எவரும் இருக்கிறார்களா ? எனது அனுமதியில்லாமல் என்னை எப்படி வைத்து சூதாடலாம் என்று பாஞ்சாலியே கேட்ட பிறகு, ஒரு பக்தனின் மனைவி கணவன் சொல்கிறான் என்பதற்க்காக சிவனடியாரிடம் கூடுவதற்கு தயார் என்று கிளம்புவாரா ? இதெல்லாம் சேக்கிழாரின் அருவெருப்பான திருவிளையாடல். இன்னும் சில பதிவுகளில் கூட சேக்கிழாரின் திருவிளையாடலை எழுதுவேன்.

//இரண்டாவது பெரியபுராணத்தில் எழுதி இருக்கும்படி இன்றைக்கும் ஏதேனும் இரு இடங்களுக்கிடையேயான இருப்பிட தூரம் மற்றும் மற்ற வரலாற்றுச் சான்றுகள் உண்மையாக இருக்கின்றன;ஆக அனைத்தும் புரட்டு என்பது ஒரு மொக்கை வாதம்.//

முதலில் வரலாறுகளையும் பிறகு அதற்க்கான சான்றுகளை உருவாக்கியது தான் ஆகம ஆலயங்கள். அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

//குர் ஆன் மற்றும் புதிய,பழைய ஏற்பாடுகளைப் படித்து அவற்றில் புரட்டாகத் தோன்றும் செய்திகளைப் பற்றியும் இப்படி ஒரு விளக்கப் பதிவை எதிர்பார்க்கிறேன் !!!!//

எனக்கு இது தேவையற்றது, நான் இஸ்லாமினோ, கிறித்துவனோ இல்லை. பக்தி என்ற பெயரில் ஆபாசம் கற்பிக்கப்பட்டுள்ள என்னைச் சார்ந்த சமயத்தை குறிப்பிட்டும் சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது, அதற்கு பர்மிசன் தரும் அதிகாரம் உங்களிடம் இல்லை, அதைச் சொல்ல உங்களுக்கு உரிமையும் இல்லை, உங்களை நான் கட்டுப்படுத்தினால் நீங்கள் அவ்வாறு சொல்லலாம்

//இது பழந்தமிழ் நாட்டில் அந்தணர் என்றால் இன்றைய பிராமணர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற இன்னொரு அரைகுறை அரைவேக்காட்டுத்தனப் புரிதலில் வந்த வாக்கியம் இது !//

சங்ககாலத்தில் அந்தணர் என்றால் சான்றோர், ஞானசம்பந்தர்காலத்தில் பார்பனர் அனைவருமே அந்தணராக அறிவித்துக் கொண்டனர். ஞான சம்பந்தனின் பாடல்களில் தில்லைவாழ் அந்தணர் என்றே வருகிறது, தில்லைவாழ் அந்தனர்களில் எத்தனை பேர் பார்பனர் அல்லாதோர் ? உங்களால் காட்ட முடியுமா ?

//அதனால் என்ன?
அது நிகழ வேண்டியதற்கான மொழி அரசியல் காரணங்கள் இருந்தன...//

கீழ்த்தரமான அநீதி அரசியல், இந்த கால அரசியலைவிட படுகேவலமானது ஏனெனில் இவை அனைத்தும் இறை நம்பிக்கை என்ற பெயரில் கடவுளை கொச்சைக்கு பயன்படுத்திய கேவல அரசியல். முடிவில் என்ன தான் நடந்தது தெரியுமா ? திருமுறைகள் அனைத்தையுமே பார்பனர்கள் கைப்பற்றி தில்லையில் ஒரு இருட்டு அறையில் வைத்து கரையானக்கு இறையாக்கினர், நம்பியாண்டார் நம்பியின் முயற்சியால் சில மீட்கப்பட்டது

\\தமிழ்சமூகத்தில் சைவ சமயம் என்ற பெயரில் பார்பனர்களுக்கு முதன் முதலில் அடிவருடிய பெருமை சேக்கிழாரையும் அவரது வெள்ளாள (பிள்ளைமார் சாதி) சமூகத்தையே சாரும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள்.\\

//எந்த வரலாற்று ஆய்வாளர்?

டாவு மன்னனா?//

இதெல்லாம் ஆர்வமுடன் தெரிந்து கொள்ளவிழைபவர்கள் அறியவேண்டிய ஒன்று தூற்றுபவர்களுக்கு அல்ல.


//எங்கெல்லாம் ஆகம அமைப்புடன் கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் சிவன் கனவில் வந்து சொன்னதாகவே விடிவதற்குள் கதையை எழுதி, செய்யாவிடில் அரசு அழிந்துவிடும் என மன்னர்கள் பயமுறுத்தப்பட்டு பெரும்பாலான சிவன் கோவில்கள் கட்டப்பட்டு,\\

//எப்படி?

கோவில் தலபுராணம் என்று எல்லா கோவில்களிலுமே உள்ளது, போய் படித்துப்பாருங்கள், கனவு என்ற சொல் இடம் பெறாத தலபுராணமே கிடையாது

மயன் மாளிகை மாதிரி ஒரு இரவில் கட்டினார்களா? -- இதைத் தெரிந்து என்ன ஆகப்போகிறது, நான் பேசுவது தமிழகம் குறித்து

//கோவில்கள் இருந்த தலங்களுக்குப் போய்த்தான் நால்வர் பாடினார்கள்...// பண்டாரம் பரதேசிகள் கோவிலுக்கு செல்வதில் புதுமை என்ன இருக்கிறது, இவர்கள் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கூடுதல் தகுதி அவ்வளவுதான்.

//அல்லா,யேசு எல்லார் ஒவ்வொரு வீக் எண்டும் வந்து போகிறார்களா?//

அவர்களைப் பற்றி கேட்கும் உங்களால் ஏன் உங்களைப் பற்றி கேட்க முடிவதில்லை ? அவர்களை பொய் என்று நிரூபிப்பவர்கள் உங்களையும் சொன்னால் அதனை அளவுகோலாக எடுத்துக் கொள்வீர்களா ?

//கடவுள் தேடல் இருக்கின்றவனிடம்தான் போவார்.
அறை எண் 305 மாதிரி கண்ட கழிசடைகளுக்காக வரமாட்டார்.//

இப்படியெல்லாம் டெபனேசன் கொடுத்து கோவணத்துக்குள் கடவுளை ஒழி(ளி)க்கும் அளவுக்கு, இறைவன் கீழ்த்தரமானவர்களின் சித்தரிப்புக்கு ஆளானவன் இல்லை என்பது எனக்குத் தெரியும்


///இன்னொரு பிதற்றல் !

கந்த கோட்டத்து கந்த வேளைப் பாடியது யார்? //

இராமலிங்க அடிகளார் ஒரே நாளில் ஞான நிலையை அடைந்துவிடவில்லை, பலரைப் போலவே முன்பு பக்தியில் இருந்தவர் தாம், அப்போது பாடியவை அவைகள்.

கொ.வை. அரங்கநாதன் பிள்ளைத் தமிழ் சொன்னது…

இலங்கை யிலிருந்து ராஜபக்‌ஷேயை அழைத்து வந்து அன்பே உருவான புத்த மத்த்தை இங்கு பரப்பி சைவத்தையும் வைணவத்தையும் அழித்துவிட்டால் இந் த நாட்டில் பாலாறும் தேனாறும் பெருக்கெடுத்து ஓடும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்