பின்பற்றுபவர்கள்

3 டிசம்பர், 2008

தே... பையன் மற்றும் கருத்தியல் !

சுத்தியல், பொரியல், பொறியியல், அவியல் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். கருத்தியல் என்றால் என்ன ? வலைப்பதிவுக்கு வரும் முன் இப்படி ஒரு கருமத்தை (கருமம் என்றால் செயல்/ செயல்பாடு என்ற பொருளும் உண்டு) நான் கேள்விப்பட்டதே இல்லை. வலைப்பதிவு ஊடகம் வழியாக பலபுதிய சொற்களையும் அவை எங்கு கையாளப்படுகின்றன என்பதையும் என்னப் போலவே பலரும் கற்றுக் கொண்டுள்ளனர். ஒருவர் மீது வீசப்படும் சொற்களைக் கூட ஆராய்ந்து அந்த சொல் எப்படி வந்தது, உண்மையிலேயே அந்த சொல் எதிரியின் செயலைத் தாக்குகிறதா ? அல்லது வெறுமனே உணர்ச்சியைத் தூண்டுகிறதா என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

"தேவடியாப் பையன்" என்று ஒருவரைத் திட்டும் போது சொல்லப்படும் "தேவடியா" என்ற சொல் பெண்மையை மட்டுமே இழிவு படுத்தும் சொல், பாலியல் தொழில் என்பது வாடிக்கையாளர்கள் இல்லை என்றால் இருக்கவே இருக்காது. வாடிக்கையாளர்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் அதைச் செய்யும் பெண்களை மட்டும் இழிவாக சித்தரிக்கும் சொல்தான் விபச்சாரி, தேவடியா போன்ற சொற்களெல்லாம். ஆனால் அந்த பெண்ணை வைத்து வியாபாரம் செய்யும் ஆணை "மாமா அல்லது மாமா பையன்" என்று உறவுப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்கள், இழிதொழில் செய்பவன் ஆண் என்றால் அவனை உறவு பெயரில் கூட அழைப்பதற்கு சமூகம் தயாராகிவிடுகிறது. பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கும் ஆணுக்குக் கொடுக்கும் பெயர்களின் தன்மைகள் இப்படித்தான் முரண்பாடாக இருக்கிறது.

ஒருவனை ஆபாசமாகத் திட்டுவதற்கு அவனது தந்தையை கேவலப்படுத்த முடியாது என்பதால் தாயின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி சொல்லாக வீசுவதே "தேவடியா பையன் / தேவடியா மகன்" என்று சொல்வதன் நோக்கமாகும். தந்தை பல பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அதை பெருமையாக நினைக்கும் சமூகம், தாய் என்றால் அவள் கற்பின் சொரூபமாகத்தான் இருக்க வேண்டும் என்ற புனிதம் கற்பிக்கப்படுவதால், அப்படி ஒரு சொல்லைச் சொல்லி திட்டுவதன் கெட்ட நோக்கமும், திட்டுவாங்கியவரின் எதிர்வினையாற்றுவதும் ஒரே புள்ளியில் சந்திக்கிறது. பெண்ணைத் தூற்றுவதற்காகவே அவளை புனிதப் பொருள் என்று முன்னேற்பாடாக போற்றி வைக்கிறது சமூகம். கற்பு கத்திரிகாய்கள் எல்லாம் இவ்வாறுதான் அவள் மீது தேவையற்ற சுமையாக்கி வைத்திருக்கின்றனர். எந்த மொழியிலும், எந்த இனத்திலும் "தேவடியா மகன் அல்லது அதற்கு இணையான பெண்மையை இழிவு படுத்தி திட்டும் வழக்கம் இருக்கிறது

******

பதிவர்களால் எழுதப்பட்டும் பலகட்டுரைகள், நகைச் சுவைகள் ஆகியவற்றை படிக்கும் போது ஏற்படும் எண்ணங்களையும், அந்த பதிவர்களின் எழுத்துக்களைப் பற்றி சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. "அவரு என்ன எழுதி இருக்காரு...மொக்கை...கருத்தியல் ரீதியாக எதுவுமே இல்லையே...இவரெல்லாம் பதிவர்னு நீங்கதான் சொல்லனும்...மற்றவங்களை விடுங்க...நீங்க நிறைய எழுதிறிங்க கருத்தியல் ரீதியாக உங்கள் பதிவுகளைப் பார்த்தால் ஒண்ணுமே இல்லையே..." என்பார்கள். அடப்பாவிகளே இதுகூட தெரியாமலா ஒரு 'அவதூறு ஆறுமுகம்' என்னை 'கருத்து கந்தசாமி' என்று சொல்லி மகிழ்ந்தார் ? என்று கேட்டேன். "கருத்தியல் ரீதியாக" என்பதில் எனக்கு உடன்பாடு ஏற்படுவதில்லை. நான் படித்த கருத்தியல் பதிவுகள் அனைத்துமே நடந்து முடிந்தவைப் பற்றி அதனுடைய காரண செயல்பாடுகள், இதனால் என்று ஆராய்ச்சி ரீதியில் எழுதப்பட்ட பதிவுகளாகவே உள்ளன. அதாவது கருத்தியல் என்பதே நடந்து முடிந்தது பற்றிய ஒரு ஆய்வறிக்கை மட்டுமே. அதை எப்படி அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதுபவர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை புனைவோர்களுக்கு ஒட்டவைக்க முடியும் ?

ஒரு இடத்தில் குண்டுவெடிக்கிறதென்றால் அதைப் பற்றிய செய்தியைத் தான் பதிய முடியும், அதையெல்லாம் கருத்தியல் ரீதியாக எழுதவேண்டுமென்றால் ஒருமாதம் கழித்து தகவல் திரட்டிய பிறகு, இதன் காரணம் என்ன, உளவியலா, புண்ணாக்கா, வெடிச்ச பஞ்சா என்றெல்லாம் எழுத முடியும்.

கருத்தியல் ரீதியான எழுத்து என்பது வெறும் காரண காரியங்களை எழுதும் ஆய்வறிக்கை மட்டுமே, அதை ஒரு சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. படிப்பதற்கு படிப்படியான தகவல்கள் இருக்கும், கோர்வையாக இருக்கும் என்பதெல்லாம் சரி. படிப்பதற்கு சோர்வளிக்காமல் நகைச்சுவையாக இருக்குமென்றெல்லாம் சொல்ல முடியாது. இயல்புகளைக் கூட "பொது புத்தி" என்று பேசுவதுதான் கருத்தியலின் வழக்கம்.
கருத்தியல் ரீதியில் எதையும் எழுதினால் அதை கருத்தியல் ஆசாமிகள் மட்டுமே படிப்பார்கள், மற்றவர்களெல்லாம் "பெரும் அறிவாளி போல இருக்கு" என்று சொல்லிவிட்டு ஒரு பத்திக்கு மேல் வாசிக்க மாட்டார்கள். கருத்தியல் நடைமுறையில் இருக்கும் சில பல தவறுகளை சுட்டுக் காட்டுகிறது (உதாரணம் மேலே சுட்டிய தேவடியா பையன் சொல்) என்பது சரிதான் அதனடிப்படையில் கருத்தியலில் பேசுவது தவறல்ல, ஆனால் அதையே பேசிக் கொண்டு இருப்பது இயல்புக்கு மாறானது. அன்றாட நிகழ்சிகளை எழுதுவதோ, விமர்சிப்பதோ கருத்தியலால் இயலாத ஒன்று என்றே நினைக்கிறேன். இது கருத்தியல் பற்றிய எனது தவறான கருத்தியல் என்று நினைக்கும் கருத்தியல் ஆசாமிகள் சுட்டிக்காட்டவும்.

18 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
கருத்தியல் பத்தி நீங்க எழுதீருக்குறது எல்லாம் கருத்தியல் ரீதியாக சரிதான்!

சி தயாளன் சொன்னது…

எனக்கு தலை சுத்துது

புதுகை.அப்துல்லா சொன்னது…

இது கருத்தியல் பற்றிய எனது தவறான கருத்தியல் என்று நினைக்கும் கருத்தியல் ஆசாமிகள் சுட்டிக்காட்டவும்.
//

எச்சூஸ்மி.... கருத்தியல் பத்தின உங்க சரியான கரூத்தியலை பற்றி சரியான கருத்து சொல்லலாம்னு நினைச்சா தவறான கருத்தியலப் பத்தின சரியான கருத்த கேக்குறீங்க. அப்ப நாங்க உங்க சரியான கருத்தியலப் பத்தி தவறான கருத்தியல் எதுவும் சொல்லக் கூடாதா???

பரிசல்காரன் சொன்னது…

//ஒரு இடத்தில் குண்டுவெடிக்கிறதென்றால் அதைப் பற்றிய செய்தியைத் தான் பதிய முடியும், அதையெல்லாம் கருத்தியல் ரீதியாக எழுதவேண்டுமென்றால் ஒருமாதம் கழித்து தகவல் திரட்டிய பிறகு, இதன் காரணம் என்ன, உளவியலா, புண்ணாக்கா, வெடிச்ச பஞ்சா என்றெல்லாம் எழுத முடியும்.//

பலே!

கோவி.கண்ணன் சொன்னது…

// புதுகை.அப்துல்லா said...


எச்சூஸ்மி.... கருத்தியல் பத்தின உங்க சரியான கரூத்தியலை பற்றி சரியான கருத்து சொல்லலாம்னு நினைச்சா தவறான கருத்தியலப் பத்தின சரியான கருத்த கேக்குறீங்க. அப்ப நாங்க உங்க சரியான கருத்தியலப் பத்தி தவறான கருத்தியல் எதுவும் சொல்லக் கூடாதா???
//

கொலைவெறி தாக்குதல், என்னோட சிங்கை சப்போர்டர்ஸ் (ஜெகதீசன் தீக்குளிக்கப் போறானாம்) பார்கிறதுக்குள்ள பின்னூட்டத்தை அழிச்சிட்டு ஓடிடுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
கருத்தியல் பத்தி நீங்க எழுதீருக்குறது எல்லாம் கருத்தியல் ரீதியாக சரிதான்!
//

ஜெகு,
யப்பா முதன் முதலில் சிரிப்பானுடன் சேர்த்த்து இலைக்காரன் பதிவுக்கு போட்டுக் கொள்வதைப் போல் முதன் முதலாக பின்னூட்டம் போட்டு இருக்கிறாய். நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
எனக்கு தலை சுத்துது
//

நீளக் கழுத்தாக இருந்தால் முதுகைப் பார்க்கலாம் என்று சொல்லுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// பரிசல்காரன் said...


பலே!
//

திருப்பூர் காரங்களுக்கு 'வெடிச்ச பஞ்சு' என்று எழுதி இருந்தால் கண்ணுல பட்டுடுமா ?

நன்றி !

ஜெகதீசன் சொன்னது…

//

ஜெகு,
யப்பா முதன் முதலில் சிரிப்பானுடன் சேர்த்த்து இலைக்காரன் பதிவுக்கு போட்டுக் கொள்வதைப் போல் முதன் முதலாக பின்னூட்டம் போட்டு இருக்கிறாய். நன்றி
//
புரியல்ல... தயவு செய்து விளக்கவும்....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//

ஜெகு,
யப்பா முதன் முதலில் சிரிப்பானுடன் சேர்த்த்து இலைக்காரன் பதிவுக்கு போட்டுக் கொள்வதைப் போல் முதன் முதலாக பின்னூட்டம் போட்டு இருக்கிறாய். நன்றி
//
புரியல்ல... தயவு செய்து விளக்கவும்....
//

போட்டுக் கொல்வதை என்று மாற்றிப் படிக்கவும், ஒரெழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது.வருந்துகிறேன். வருத்தம் தெரிவிப்பது மன்னிப்பாகாது.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

கருத்தியல் கத்தரி போட்டுட்டிங்களே...

லேசா புரியுது லேசா புரிய மாட்டுது... பாதி பக்கம் வரத்துக்குள்ள ஏதோ ஒரு மயக்கம் வந்துடுச்சி... மறுபடியும் மேல படிச்சிட்டு வரேன் அப்பவும் ஏதோ தடுமாறுது... மத்தியான சாப்பாடு சரி இல்ல போல....

தேவடியா= தேவர்+அடியாள்... அப்படினா இது கெட்ட வார்த்தையா இல்லை நல்ல வார்த்தையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
கருத்தியல் கத்தரி போட்டுட்டிங்களே...

லேசா புரியுது லேசா புரிய மாட்டுது... பாதி பக்கம் வரத்துக்குள்ள ஏதோ ஒரு மயக்கம் வந்துடுச்சி... மறுபடியும் மேல படிச்சிட்டு வரேன் அப்பவும் ஏதோ தடுமாறுது... மத்தியான சாப்பாடு சரி இல்ல போல....//

:)

//தேவடியா= தேவர்+அடியாள்... அப்படினா இது கெட்ட வார்த்தையா இல்லை நல்ல வார்த்தையா?
//

தேவர் அடியார் குறிப்பாக பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்கள் இறைச்சேவை, கலைச்சேவை என பெண்களை தேவ தாசி ஆக்கி வைத்திருந்து விபசாரம் நடந்தாதால் அந்த சொல் வழக்கில் இருந்து வழுக்கி விழுந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

சாமி 'அனுபவிக்கிறது' என்று சொல்லி சாமிக்கு பங்கான பெண்களை அவங்களும் சேர்ந்து அனுபவித்த முறையே தேவதாசி முறை. கோவில்கள் அந்த கால உயர்வகுப்பு, ஆதிக்க வர்கத்தின் சிவப்புவிளக்கு பகுதியாக இருந்திருக்கிறது என்ற புரிதல் தான் 'தேவடியா' என்ற சொல்லின் பொருள். இப்போது அப்படி இல்லை. கடவுள் பேரைச் சொல்லாமல் தனியாக ரூம் போட்டு அனுபவிக்கிறார்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

என்னுடைய கருத்தியல் ரீதியான விமர்சனம் :

கருத்து கந்தசாமிக்கு எதிர்ச்சொல் அவதூறு ஆறுமுகம்.

சரியா?

மணிகண்டன் சொன்னது…

கருத்தியல் -எனக்கு இந்த வார்த்தை புதிது.

உங்களின் இந்த கட்டுரைய படித்த பிறகு, நீங்கள் எழுத்தும் சில பதிவுகள் இந்த கருத்தியல் இலக்கணத்தை ஒத்தே வருவதாக எனக்கு படுகிறது. அதே சமயம், அவ்வாறாக சுவையோடு எழுத முடியாது என்று சொல்வது சரி அல்ல. சிலரால் முடியும். பத்ரியின் பல பதிவுகள் இதற்கு உதாரணம்.

வெற்றி சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கருத்து கந்தசாமியின் தலைப்பு களையிழந்த பேரோட வருது
மறுத்து பேசலாம் என்றால், மருவிக் கொண்டோடுது மனம்
வெறுத்து ஒதுக்கலாம் என வெட்டியாகப்(அத்திவெட்டியாகப்) போகாமல்
பொறுத்துக் கொண்டு போட்டுவிட்டேன் புன்னகைப் பின்னூட்டம்.

கருத்தியல் ரீதியாக எழுதுகிறவர்கள் விசாரணக் கமிஷன் தலைவர்கள்(ஓய்வு பெற்ற நீதிபதிகள்)

மங்களூர் சிவா சொன்னது…

ஸ்ஸப்பாஅஆ கண்ண கட்டுதே!
:))

நசரேயன் சொன்னது…

எனக்கு மயக்கமா வருது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்