பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2008

நாடுகள், மக்கள் மனது, சட்டங்கள், தண்டனைகள்

விபத்து நடந்த அன்று, நடக்கும் முன்பு அன்று மதியம் நானும் நண்பர் பாஸ்கரும் தீவிர விவாதம் செய்து கொண்டு இருந்தோம்.

"இந்தியர்கள் உலகத்தில் இருப்பவர்களைவிட நல்லவர்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்" என்றார்

"எதை வச்சு சொல்றிங்க பாஸ்கர்?"

"நம்ம ஊரில் பரம ஏழைகள் சாதாரண சாதி சான்றிதழ் வாங்கனும் என்றாலும் கூட 10 ரூபாயாவது கொடுத்தால் தான் காரியம் ஆகுது..இங்கெல்லாம் போனவுடனே எந்த சர்டிபிகேட் வாங்கனும் என்றாலும் சரியான தகவல் கொடுத்தால் சரி பார்த்துவிட்டு கொடுத்துடுவாங்க"

"சரிதான், இங்கே சட்டதிட்டம் கடுமையாக இருக்கு, நீங்க பணம் கொடுத்தால் உங்களைத்தான் புடிச்சு உள்ளே போடுவாங்க, இவ்வளவு இருந்தும் சென்றவாரம் அரசாங்க திடீர் சோதனையை ஒரு நிறுவனத்திற்கு முன்கூட்டியே தகவல் சொல்லி மாத மாதம் பணம் பெற்றவர் சிக்கி இருக்கிறார்"

"ஆமாம் படிச்சேன்...நம்ம ஊரில் அதிகம் இல்லையா ?"

"ஞாயப்படுத்துறேன் என்று நினைக்காதிங்க, நம்ம ஊரில் அரசாங்க வேலைக்கு பணம் கொடுத்து தானே போறான், போட்ட முதலை அவன் எடுக்கிறான்... நேர்மையை மறந்து, மறுத்து பைபாஸ் பண்ணுவதற்கு நாம தயராக இருப்பதால், லஞ்சமும் குற்றங்களும் அதிகரிக்குது...கடுமையான தண்டனைகள் இருக்கும் சீனாவில் ஊழலுக்கு குறைவில்லை என்கிறார்கள்"

"இங்கே இந்த ஊரில் பாருங்க...கீழே எதும் கிடந்தா யாரும் எடுக்க மாட்டாங்க"

"யார் சொன்னது? நீங்க 100 வெள்ளியைக் கீழே போட்டுட்டு அந்த பக்கமாக நின்று பாருங்க, யாரும் பார்க்கவில்லை என்றால் எடுப்பாங்க, ஆனல் வெறும் 10 சென்ட் போட்டால் எடுக்க மாட்டாங்க, இங்கேயும் பொருளின் மதிப்பை வைத்துதான் ஒருவர் நேர்மையானவரா இல்லையா என்பதையே சொல்ல முடிகிறது"

"ம் சரிதான், சிலர் தொலைக்கும் பர்ஸ் இதுபோல் சிலரால் எடுக்க்கப்பட்டு விட்டால் உடனே ஐடெண்டி கார்டை எடுத்து வீசிட்டு மத்ததை எடுத்துட்டு போய்கிட்டே இருப்பாங்க....."

"இப்ப நீங்களே சொல்றிங்க...."

"இல்லிங்க முற்றிலும் சரி என்று ஒத்துக்க மாட்டேன்... "

"சரி....நம்ம நாட்டுக்கும், தாய்லாந்துக்கும் என்ன வேறுபாடு"

"இரண்டும் ஏழை நாடுகள் தான்"

"அதுமட்டுமா அங்கீகரிக்கப் பட்ட தொழிலாகவே பாலியல் தொழில் தாய்லாந்தில் நடக்குது, இந்தியாவில் பெருநகரங்களில் நடக்குது இல்லை என்று சொல்லவில்லை, பொழைக்க வழி இல்லை என்றால் அந்த தொழிலுக்கு போவலாம் என்று நினைப்பவர்கள் இந்தியாவில் குறைவுங்க...பாத்திரம் தேய்தாவது பிழைப்பாங்க, பிழையான வாழ்கையை தேர்ந்தெடுப்பவங்க குறைவுதான்"

"ஒத்துக்கிறேன்...நீங்க இப்படி சொல்றிங்க, கிராம புறங்களில் பலரும், இப்போ சாப்ட்வேரில் வேலைபார்ப்பவர்கள் பலரும் ஒழுக்கம் கெட்டு தானே கிடக்கிறாங்க"

"கிரமங்களும், மேல்தட்டு மக்கள் மட்டுமே சமூகம் இல்லிங்க, நடுத்தர மக்கள் இதுபோல் முடுவெடுப்பது இல்லையே... அவர்களில் இருப்பாங்க அளவு மிக மிகக் குறைவு"

"நடுத்தர மக்களிலும் இருக்காங்களே...ஆம்பளைங்க எல்லாம் வெளியே போகலை என்று நினைக்கிறிங்களா ?"

"ஆம்பளைங்களுக்கு வெளிப்படையான பாதிப்பு குறைவுதான், 90 விழுக்காடு சென்று வருகிறார்கள், பெண்கள் அப்படி இல்லை என்பது ஆறுதலான விசயம் தானே"

"ம் சரிதான்...ஒப்புக் கொள்கிறேன்"

"வெளிநாட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரிய வித்யாசம் இங்கே ஆண்களாக நாடிப்போனால் தான் உண்டு... இந்தியாவில் பெண்களை அந்த தொழிலுக்கு தள்ளுபவர்கள் ஆண்களாகக் கூட இருக்கும், வெளிநாட்டில் அந்த தொழிலுக்கு விரும்பிப் போகுபவர்கள் இருக்கிறார்கள்"

"சரிதான்...நம்ம ஊரில் குற்றங்களுக்கு தண்டனை குறைவுதான், அதனால் குற்றம் செய்கிறவர்கள் அதிகம் ஒத்துக்கிறிங்களா ?"

"அது அப்படி இல்லிங்க...எங்கே குற்றம் அதிகமாக இருக்கிறதோ அங்குதான் தண்டனை அதிகமாக இருக்கும்"

"எப்படி சொல்றிங்க ?"

"போதைப் பொருள் கடத்தினால் ஆசிய நாடுகளில் மரண தண்டனை தெரியும் தானே ? காரணம் இங்கு போதை புழங்கிகள் அதிகம், அதற்கெல்லாம் குறைவாக தண்டனை வைத்திருந்தால், நாட்டில் பொருளாதாரம் சீறழிவது மட்டுமல்லாமல் இளைஞர்களின் வாழ்க்கையே சீரழிந்துவிடும், ஓர் ஆண்டு தண்டனை முதல் 10 ஆண்டு தண்டனை வரை கொடுத்தால் அது போதை வியாபாரிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல, தொடர்ந்து புதிய ஆட்களை வைத்து செய்தே வருவார்கள், அதனால் தான் இங்கெல்லாம் மரணதண்டனை வைத்திருக்கிறார்கள்"

"ம் சரிதான்...."

"போதைத் தவிர மற்ற கிரிமினல் சட்டங்களையும் பாருங்க, எந்த நாட்டில் மக்கள் மனசு மோசமாக இருக்கோ அங்குதான் தண்டனையின் தன்மையும் அதிகமாக இருக்கும், ஒழுக்கம் கெட்டவர்களை வளைகுடா நாடுகளில் பொதுவில் கல்லால் அடித்துக் கொல்லும் சட்டம் இல்லை என்றால்...நாடே கெட்டுவிடும், ஏனென்றால் அவர்களெல்லாம் பணக்காரர்கள், நம்ம ஊர் கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்தில் பாலியல் வண்கொடுமைக்கு பணம் கட்டிவிட்டு வெளியே வருவது போல் வந்து அதையே செய்வார்கள், ஒழுக்கம் ஒழுங்கீனமெல்லாம் அந்த பகுதி மக்களின் செயல்பாட்டைப் பொருத்தே இருப்பதால் அதற்கான சட்ட வரையரையும் அதற்கு ஏற்றவாறு அந்தந்த நாடுகளில் இருக்கிறது...குற்றங்கள் குறைந்திருப்பது தண்டனைகளின் கடுமைகளினால் அன்றி அது மக்களாக விரும்பி குற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்ற பொருளில் வராது...நாடுகளைப் பொறுத்து, அந்தந்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழல், கலாச்சாராம், பண்பாடு பொருத்து... அவர்களுடைய அரசாங்கமே ஏற்றது என நடை முறை படுத்தி இருக்கும் தண்டனையின் தன்மைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அது தவறாக எனக்கு தெரியலைங்க..."

"சொல்வது சரிதான்...ரொம்ப ப்ரியாக விட்ட அமெரிக்காகாரனே இப்ப குற்றம் அதிகரிக்க, தண்டனைகளையும் நடைமுறையும் மாற்றிவிட்டான்" என்றார்

"அடிபட்டு இருங்காங்க இல்லையா ? மரண தண்டனை குறித்த என் தனிப்பட்ட கருத்து மரண தண்டனை என்பது தவறுதான்... தண்டனைகள் திருந்துவதற்காக கொடுக்கப்படும் ஒன்று...

******

கடைசிவரை , பிறநாட்டினரின் மக்கள் தொகையை, ஏழ்மையை வைத்து ஒப்பிடுகையில் இந்தியர்கள் குற்ற மனநிலையும், குற்ற எண்ணிக்கையும் குறைவு என்பதை நண்பர் ஒப்புக் கொள்வதில்லை. நண்பர் நினைப்பது சரியா ?

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

குற்ற எண்ணிக்கை & மனநிலை குறைவா?

அப்படியெல்லாம் ஒன்னுமிருக்காது.

மக்கள் விகிதாச்சாரம் பார்த்தீங்கன்னா.... கணக்குச் சரியா வரும்.

எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். மனுசனுங்கதானே குற்றம் செய்வது?

நியூஸிப் பூனையா இருந்தாலும் அமெரிக்காப் பூனையா இருந்தாலும் குற்றம் செய்ய அதுக்குத் தோணுமா?

TBR. JOSPEH சொன்னது…

எங்கிருந்தாலும் மனுசன் மனுசந்தான். //

நூத்துல ஒரு வார்த்தை. மலேசிய பேருந்தில் பொழுதுபோக்காக நான் செய்த ஒரு நாள் பயணத்திலேயே இது தெரிந்துவிட்டது.

ஒழுங்கீனத்தில் மலாய்,சீன, இந்திய மக்களுக்குள் வித்தியாசமே இல்லை.

Bharath சொன்னது…

உங்கள் நண்பர் சொல்லுவது மிகச் சரி. கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லிக்கொண்டு, மிக அடிப்படையான மனிதநேயம், self-discipline போன்ற குணாதிசியங்கள் வறன்டு கிடக்கின்றன. {குடும்பத்துடன் உட்கார்ந்து மானாட மார்பாட(Thanks Dr.Ramadoss) பார்ப்பது தான் நம் கலாச்சாரம்.}

பாலியல் தொழில் செய்யும் பெண்தான் குற்றவாளி.. அங்கு செல்லும் ஆணுக்கு தண்டனையில்லை போன்ற மகா உன்னத சட்ட திட்டங்கள் பெற்ற நாடு..

சமீபத்தில் படித்த ஜோக்..

In India u cannot kiss in public but piss in public
Elsewhere you can kiss in public but not piss in public.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்