பின்பற்றுபவர்கள்

4 செப்டம்பர், 2008

எப்போதான் நிறுத்துவானுங்களோ.......!

சில சமயம் செய்திகளைப் படித்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் கொடுமையை விட அவர்கள் அதைக் கொண்டு சேர்க்கத் தலைப்பிட்டிருப்பது படு எரிச்சல்.

கரூர்-ஒரு பெண்ணை 6 பேர் கற்பழித்த கொடூரம்! - இது ஒரு கொடுமையான நிகழ்வு, இதன் தொடர்புடைய ஆண்களுக்கு விதையை அறுத்துப் போட்டு தண்டனைக் கொடுத்தாலும் எவரும் எதிர்க்க மாட்டார்கள். (அந்த செய்தியை நான் படிக்கவில்லை)

கற்பு - என்ற சொல்லே பெண் அடிமைத் தனத்துக்காக புகுத்தப்பட்ட ஒன்று, கணவன் மனைவியிடம் பாலியல் உறவு கொள்வதை கணவன் கற்பழிக்கிறான் என்று சொல்ல முடியாது அல்லவா ? புணர்ச்சி, பாலியல் உறவு இது தானே பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வதற்கான பெயரே...இதில் கற்பு என்கிற சொல் எங்கிருந்து வந்தது ?

ஒரு பெண்ணின் விருப்பமின்றி பலவந்தப்படுத்தி உறவு கொள்வது பாலியல் வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்றே இப்பொழுதெல்லாம் முற்போக்கு சிந்தனையாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. காரணம் இது போன்ற கொடுமைகளை எந்த தவறும் செய்யாது அனுபவித்து வரும் பெண்ணிடம் சென்று 'நீ கற்பழிக்கப்பட்டுவிட்டாய்' என்று தூற்றுவது, அடையாளப்படுத்துவது... அவளுக்கு மன அளவில் ஆயிரம் பேர் தன்னை வன்புணர்ந்த கொடுர உணர்வையே ஏற்படுத்தும். கற்பனையாக கற்பு என்னும் சொல்லில் பெண்களை புனிதப் படுத்துகிறோம் என்ற போர்வையில் அந்த சொல்லால் அவளைக் கொல்வதற்கே, இழிவு படுத்துவதற்கே, காயப்படுத்துவதற்கே ஆண் சமூகம் தற்போதும் முயன்று வருகிறது.

தலைமீது காக்கை எச்சமிட்டுவிட்டது என்பதற்காக தனது புனித தன்மை போய்விட்டது என்று எந்த மனிதனாவது புலம்புகிறானா ? குளித்துவிட்டு அல்லது துடைத்துவிட்டு சென்று கொண்டே இருப்பான். பாலியல் வண்புணர்ச்சி ஒரு கொடிய செயல் அந்த செயலைச் செய்த கொடியவர்களுக்கு மேற்சொன்ன தண்டனை வழங்குவதைத் தான் செய்ய வேண்டும். அதைவிடுத்து 'பெண் கற்பழிக்கப்பட்டாள்' என்று சொல்வது பெண்ணை இழிவு படுத்துவதுதான். ஒரு பெண் கற்பு என்ற உறுப்பை பெண் உறுப்பில் ஒட்ட வைத்துக் கொண்டு இருக்கிறாளா ? ஏன் இல்லாத ஒன்றைச் சொல்லி பெண்களை இழிவு படுத்த வேண்டும் ?

ஊடகங்கள் இது போன்ற பாலியல் வண்கொடுமைகளை, வல்லுறவுகளை, வன்புணர்ச்சிகளைப் பற்றி எழுதும் போது 'கற்பழிக்கப்பட்டாள்' என்று எழுதுவதை நிறுத்த வேண்டும். கற்பு என்ற சொல் பெண்மையைப் புனிதப் படுத்துவதாக ஆணாதிக்கவாதிகள் சொல்லிக் கொண்டாலும்..அந்த சொல்லால் காயப்பட்ட பெண்களின் உணர்வுகளை ஆற்றவே முடியாது ... அது மேலும் அவளைக் காயப்படுத்தி 'தான் புனிதம் கெட்டவள்' என்று எண்ண வைத்து தற்கொலை வரை கொண்டு செல்லும். கற்பு என்பது பெண்ணிய ஒழுக்கமாகத்தான் சித்தரிக்கப்படுகிறது....'பெண் கற்பழிப்பட்டாள்'...என்பதை 'பெண் ஒழுக்கம் அழிக்கப்பட்டாள்' மறைமுகமாக 'பெண் ஒழுக்கம் கெட்டாள்' என்ற பொருளையே சொல்கிறது. கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.

பெரியாரால் அறிவுறுத்தப்பட்டு ... பெரியார் வாழ்ந்த காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வரும் 'கற்பு' என்னும் சொல்லே அழிக்கப்பட வேண்டியது, தமிழ் மொழியில் ஒரு சொல்லாக இருக்கக் கூட பயனற்றது. மேற்கத்திய மொழிகளில் 'கற்பு' என்ற சொல்லுக்கு மாற்றான சொற்கள் இல்லை, அது போன்ற தாழ்வான கற்பனை மேற்கத்திய மக்களிடம் இல்லை.

16 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.//

நல்ல கருத்து.

மோகன் கந்தசாமி சொன்னது…

ஒரு பெண்ணை குடும்ப மானம், கற்பு, கள்ள உறவு என பழிசுமத்தி அவரது குடும்பத்தினரே கொலை செய்தது குறித்து பதிவர் பாலபாரதி எழுதிய பதிவில் நான் இட்ட பின்னூட்டம். கீழே உள்ளது. பதிவெழுத வந்த புதிதில் இட்ட பின்னூட்டம் என்பதால் உணர்ச்சி மேலீட்டில் பின்னூட்டம் சற்று கடுமையாக இருந்தது.

இந்த கொலையில் எனக்கும் பங்கு உண்டு..! :(February 27th, 2008 by ♠யெஸ்.பாலபாரதி)

அடேய்! பாவிகளா, இன்னும் எத்தனை காலத்திற்கு இதை தொடர்வீர்கள், கள்ள உறவு பழி சுமத்திவிட்டால் பெண்களை கொள்ளவும் உரிமம் இருக்கிறதா உங்களுக்கு. சரி பாதி மக்கள் தொகையை இன்னும் அடிமையாய் வைத்துக்கொண்டு, உங்கள் கற்பனையான குடும்ப மானத்தை அவர்களின் கற்பில் வைத்து, தினம் தினம் கட்டுப்பாட்டை நெருக்கி, உழைப்பை சுரண்டி, வார்த்தையால் கொன்று, …………………….அயையோ, இன்று கொள்ளையும் அடித்து கொலையும் செய்து, ஏய் ச்சீ! த்தூ…போங்கடா!!!

விஜய் ஆனந்த் சொன்னது…

கற்புங்கற வார்த்தைய அகராதியிலருந்து தூக்குவோம்...என்ன கொடுமை சார் இது???ஆம்பளைங்களுக்கு not applicalbe, ஆனா பொம்பளைங்களுக்கு மட்டும் applicalbe-ஆ??

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம். பாரதி என்ற பகலவன் சொன்னான். "மறுபடியும்" என்று ஒரு படம் வந்தது. அதை மறுபடியும் பாருங்களேன்.

Unknown சொன்னது…

இது பத்தி உங்களுக்கு ரொம்ப பிடித்தமான இஸ்லாம் என்ன சொல்கிறது..

கோவி.கண்ணன் சொன்னது…

// பின்னூட்டம் பெரியசாமி.. said...
இது பத்தி உங்களுக்கு ரொம்ப பிடித்தமான இஸ்லாம் என்ன சொல்கிறது..
//

எனக்கு பிடித்தது இருக்கட்டும் உங்களை இஸ்லாம் எந்தவிதத்தில் புண்படுத்தியது... இந்த பதிவில் தேவையற்று அவர்களை இழுப்பது ஏன் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கற்பு என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம். பாரதி என்ற பகலவன் சொன்னான். "மறுபடியும்" என்று ஒரு படம் வந்தது. அதை மறுபடியும் பாருங்களேன்.

5:36 PM, September 04, 2008
//

ஜோதிபாரதி,

இல்லாதா ஒன்றை எங்கே வைத்தால் என்ன ? 6 பேர் சேர்ந்து வன்புணர்ச்சி செய்ததை கற்பழிப்பு என்கிறார்களே... அந்த 6 பேர் அழித்துக் கொண்டது என்ன ? செய்தி இதழ்கள் 'கற்பழிப்பு' என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
கற்புங்கற வார்த்தைய அகராதியிலருந்து தூக்குவோம்...என்ன கொடுமை சார் இது???ஆம்பளைங்களுக்கு not applicalbe, ஆனா பொம்பளைங்களுக்கு மட்டும் applicalbe-ஆ??
//

விஜய் ஆனந்த்,
கற்பு, தீட்டு....இதெல்லாம் எடுக்கப்பட வேண்டிய சொற்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
//கற்பு என்ற சொல் பெண்களின் மீது வீசப்படும் ஆணிய கத்தி...உடைத்து எரியப்பட வேண்டும்.//

நல்ல கருத்து.
//

நன்றி அண்ணாச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

மோகன் கந்தசாமி,

உங்கள் பின்னூட்டம் உணர்ச்சி வசப்பட்டதாக இருக்கிறது. பத்திரிக்கைகள் குற்ற உணர்வே இல்லாமல் 'கற்பு' பற்றி எழுதி வருகின்றன. :(

ஜோ/Joe சொன்னது…

//பெரியார் வாழ்ந்த காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வரும் 'கற்பு' என்னும் சொல்லே அழிக்கப்பட வேண்டியது, தமிழ் மொழியில் ஒரு சொல்லாக இருக்கக் கூட பயனற்றது.//

ரொம்ப சரி!

Kanchana Radhakrishnan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Thamira சொன்னது…

நல்ல பதிவு.!

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
pl.visit my following page

http://tvrk.blogspot.com/2008/03/blog-post_12.html

11:29 PM, September 04, 2008
//

இந்த பின்னூட்டம் வந்த போது, நீங்கள் காட்டும் அந்த பதிவைத்தான் படித்துக் கொண்டு இருந்தேன்.
:)

Kanchana Radhakrishnan சொன்னது…

நான் பதிவை மாற்றிக்கொடுத்துவிட்டேன்.அதுதான்.சரியான பதிவை குறிப்பிடுகிறேன்

Kanchana Radhakrishnan சொன்னது…

http://tvrk.blogspot.com/2008/03/blog-post_1698.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்