ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]
ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!
'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்
ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,
இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,
ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்
வழியே நிகழும் வகையினை அறிந்து
வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்
மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை
எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,
- வீஎஸ்கே
இந்த கணக்கு ஆண்களுக்குச் சரி,
பெண்களுக்கு ? ஒன்பது ஓட்டையா ? பெண்குறி ஒரே துளையா ? குழந்தை பிறக்கும் வழி, மற்றும் சிறுநீர் பாதை என இரண்டு இருக்கிறது. ஒரே இடத்தில் முடிந்தாலும், ஆரம்பம் வேறு இடம், வேறு வழியாக வந்து முடிகிறது. பெண்களுக்கு ஒன்பது ஓட்டை கணக்கு சரியில்லை என்றே நினைக்கிறேன். தகவல் தெரிந்தவர்கள் 'உடலுக்கு ஒன்பது வாசல்' என்று பொதுவாகச் சொல்லப்படும் கூற்றை மறுக்கிறீர்களா ? நான் மறுக்கிறேன்.
அடுத்து ?
******
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]
ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்
ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி
பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!
மூலாதாரம் என்னும் முதல்நிலை
குதம், குறி இவற்றின் நடுவே இருக்கு
கணபதி இங்கே ஆளுமைசெய்து ( பிள்ளையார் உட்கார நல்ல இடமாக கிடைக்கலையா? )
சாதகன் தன்னை வழிநடத்திடுவார்
குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்
பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்
உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்
திருமால் இதிலே வாசம் செய்கிறார்
இதயநாடியில் அநாகதம் உளது
உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்
கண்டம் நடுவே விசுத்தி ஆகும்
மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்
புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்
சுழுமுனை என்பதும் இதுவேதான்
ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்
மூலம் தொடங்கி மேலே எழும்பி
பிராணன் இவற்றின் வழியே கடந்து
சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்
இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்
ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த
இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்
இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி
ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்
தன்னை மறந்தவன் இறையினை உணரும்\
ஏன் அப்படி சொல்கிறார்கள் ? ஆன்மிக அரசியல். தியானம் யோகம் இவற்றில் இருந்து பெண்களை விலக்கிவிட்டுத்தான் கோட்பாடுகளை வகுக்கிறார்கள். பெண்கள் கணவனுக்கு பணிவிடை செய்தாலே
தெய்வத்துக்கு செய்தது போன்றது தான் என்றெல்லாம் சொல்லி அவளின் கவனங்களை திருப்பிவிட்டார்கள். :)
அடுத்து யோக நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஆண் தெய்வமே உட்கார்ந்து இருக்கிறதாம். இந்த தெய்வங்களின் மனைவியர்(கள்) குழாயடி சண்டை போட சென்றுவிட்டார்களா ?
இந்த ஹடயோகம், குண்டலினி யோகம் இவையெல்லாம் பெண்களுக்கு கிடையாது என்று சொல்லுவதற்கேற்ப முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே வகுப்பட்ட நோக்கிலேயே இருக்கிறது.
வீஎஸ்கே ஐயா மன்னிக்க இன்னிக்கு பதிவு போட மேட்டர் கிடைக்கல.
சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
//சரி, ஐயத்துக்கு யாராவது பதிவர்கள் பதிலைச் சொல்லுங்கள், பெண்களுக்கு உடல் வாசல் ஒன்பதா ? பத்தா ?//
சரி நீங்கள் சொல்லும் 10வது வாசல் பெண்குறி ஒரே வாசலாக கருதுவதுதான் உண்மை, அப்பரம் தொப்புல பத்தி என்ன நினைக்குரிங்க..
தாயுக்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள முதல் வாசல்
//ஆ.ஞானசேகரன் said...
சரி நீங்கள் சொல்லும் 10வது வாசல் பெண்குறி ஒரே வாசலாக கருதுவதுதான் உண்மை, அப்பரம் தொப்புல பத்தி என்ன நினைக்குரிங்க..
தாயுக்கும் குழந்தைக்கும் தொடர்புள்ள முதல் வாசல்//
சின்னகவுண்டருக்கும் பம்பரத்துக்கும் கூட தொடர்பு இருக்கு :)
பம்பரம் என்றால் வைகோ அல்ல.
கரு உண்ட வாசல் தொப்புல், கரு வெளிவந்த வாசல் குறி.....
கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக்கை என்று லேபிள் போட்டிருக்கிறீர்கள்..
மிக நல்ல விவாத கருத்துக்களை பதிந்து மொக்கை என்று போட்டுவிட்டீர்களே..
நர்சிம்
////கோவியானந்தாவின் இன்றைய பொன்மொழி:
சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.
புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !/////
கோவியானந்தா' - பெயர் சூப்பராக இருக்கிறது.பாராட்டுக்கள். இந்தப் பெயர் அலெக்ஸா ரேங்கில் மட்டுமல்ல. அகில் உலகத்திலும் புகழ் பெறட்டும்! வாழ்த்துக்கள்!
++++++++++++++++++++++++++++++++++
சரி கேள்விக்கு வருகிறேன்:
கேள்வி: டாஸ்மாக் கடைக்கு எத்தனை வாசல்?
பதில்: டாஸ்மாக் கடைக்கு உள்ளே போகும் போது ஒரு வாசல்.
மூக்கு முட்ட சரக்கடித்துவிட்டு வெளியே வரும்போது பத்து வாசல்!
நம்ம லெவலுக்கு இதுதான் தெரியும் கோவியானந்தா சாமி!
//SP.VR. SUBBIAH said...
கோவியானந்தா' - பெயர் சூப்பராக இருக்கிறது.பாராட்டுக்கள். இந்தப் பெயர் அலெக்ஸா ரேங்கில் மட்டுமல்ல. அகில் உலகத்திலும் புகழ் பெறட்டும்! வாழ்த்துக்கள்!
++++++++++++++++++++++++++++++++++
சரி கேள்விக்கு வருகிறேன்:
கேள்வி: டாஸ்மாக் கடைக்கு எத்தனை வாசல்?
பதில்: டாஸ்மாக் கடைக்கு உள்ளே போகும் போது ஒரு வாசல்.
மூக்கு முட்ட சரக்கடித்துவிட்டு வெளியே வரும்போது பத்து வாசல்!
நம்ம லெவலுக்கு இதுதான் தெரியும் கோவியானந்தா சாமி!
12:55 PM, September 23, 2008//
பெரியவர்களிடம் கேட்காமலேயே வாழ்த்துப் பெற கொடுப்பினை இருக்கனும். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி !
//narsim said...
கோவியாரே.. இந்த பதிவிற்கு ஏன் மொக்கை என்று லேபிள் போட்டிருக்கிறீர்கள்..
மிக நல்ல விவாத கருத்துக்களை பதிந்து மொக்கை என்று போட்டுவிட்டீர்களே..
நர்சிம்
12:51 PM, September 23, 2008
//
நர்சிம்,
அந்த பதிவில் விளக்கம் எழுதி இருப்பது விஎஸ்கே, அவரிடம் 'பெண்களுக்கும் ஒன்பது வாசலா? ன்னு கேட்டேன், ஆமாங்கிறார். எனக்கு ஒப்பு இல்லை.
ஆன்மிக நையாண்டிகளைத் தவிர்த்து இந்த பதிவை ரொம்ப சீரியஸாகவும் எழுதவில்லை. அதனால் தான் மொக்கை லேபிள்.
பால் சுரக்கும் இரு மார்பகங்களையும் விட்டு விட்டீர்களே!அவைகளைச் சேர்த்தால் மொத்தம் பனிரெண்டு வாசல்கள்!!
ஆஆஆகா.... என்னம்மா.... யோசிக்கிராங்க..... சத்தியமா என்னாலே ..முடியலெ....
அடடா..இங்கிலீஷ் காரன் நீராவிலே ரயில் உடறான்...நம்ம ஆளுங்க ஆவிலே இட்லி சுடறான்...
(ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதா)
ஒன்பது கதவுகள்
இரு கண்கள்; இரு காதுகள்; ஒரு வாய், ஒரு மூக்கு( இரண்டில்லை; ) சிறுநீர் துளை; மலத்துளை ஆக எட்டு. 9 வது உச்சித் தலை.
வீட்டிற்குள் பல கதவுகள் இருந்தாலும் வாசல் ஒன்றுதான்.- சிறுநீர் துளை ( ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரு கதவு ஒரு வாசல்); நாசியும்.
"மலம் சோரும் ஒன்பது வாய்க் குடில்" இப்படித்தான் வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
2 கண், வலம் இடம் என இரு மூக்கு ஓட்டைகள், இரு செவிகள்,ஒரு வாய், ஆசனவாய், சிறுநீர் துவாரம் இவைதாம் அந்த 9 ஓட்டைகள்.
இவற்றில் தான் பீளை, அழுக்கு, கசடு, நாற்றம், கழிவு என்னும் மலங்கள் சேரும்.
கருவாய் மலம் சேரும் குடில் அல்ல!
குழந்தை பெற வரும் ஒரு வழி!
எனவே அது இதில் சேராது!
அப்படிப் பார்த்தால்,கோடிக்கணக்கான வியர்வைத் துளைகள் இருக்கின்றன உடம்பில்!
அதை ஏன் சொல்லவில்லை என அடுத்த மொக்கைப் பதிவு வேண்டாம் அன்பரே!:))
விளக்கம் கொடுக்க வைத்தமைக்கு நன்றி, கோவியாரே!
இதை எழுதியது ஒரு பெண்தான்.
கருத்துரையிடுக