பின்பற்றுபவர்கள்

19 செப்டம்பர், 2008

வடுவூர் குமார் அண்ணனுக்கு வாழ்த்துகள் !

இப்ப வருமோ, எப்ப வருமோ ... நீண்ட நாளாக எதிர்ப்பார்த்து காத்திருந்த துபாய் வேலை ஒப்பந்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, நம்ம வடுவூர் குமார் அண்ணன் சிங்கையிலிருந்து துபாய்க்கு இன்று துபாய் புறப்படுகிறார்.

பதிவர் சந்திப்புகளில் தவறாது கலந்து கொள்பவர் என்பதால் அவரது பிரிவு சிங்கைப் பதிவர்களுக்கு சற்று வருத்தம் தான். எங்கள் வருத்தத்தைப் போக்க, கூகுளாண்டவர் இருக்கிறார், எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.

**********

9:32 AM வடுவூர்: Good Morning,Free?
me: துபாய் போறிங்களா ?
:)
என்றைக்கு ?
வடுவூர்: Yes,Want to inform that
Today eve
9:33 AM me: ஓ.......
வடுவூர்: 4.50 flight
me: அப்படியா மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
வடுவூர்: this time can't come for meet up
me: சரியா ஊகம் பண்ணி இருக்கிறேன்....வாழ்த்துகள் வடுவூர்
வடுவூர்: o!
நன்றி
9:34 AM me: பரவாயில்லை, பதிவர் மீட்டிங் சும்மா நல்லிணக்கத்துக்கு தானே வேலை தான் முக்கியம்

***********

அண்ணன் வடுவூரார், புதிய சூழலில் எதிர்நோக்க உள்ள பணியை சிறப்பாக முடித்து பெயர் பெற்று உயர்வடைய வேண்டும் என்று சிங்கை (பதிவர் சந்திப்பு) பதிவர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.

அவருக்கான பதிவர் சந்திப்பு சிற்றுண்டி பாகம் தனியாக எடுத்துவைக்கப்பட்ட பிறகு அடுத்த சுற்றில் தீர்க்கப்படும், எனவே நாளை மாலை 3 மணிக்கு புக்கிட் கொம்பா எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் நடக்கும் சந்திப்புக்கு கொண்டுவரும் பண்டங்களின் அளவை குறைத்துவிட வேண்டாம் என்று நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.


வடுவூர் அண்ணா தங்கள் இனிய பயணத்திற்கும், புதிய வேலைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் !

அன்புடன்
கோவி.கண்ணன்

குசும்பனுக்கு : அமீரகம் பதிவர்கள் சார்பில் குமார் அண்ணனுக்கு சிறப்பான வரவேற்பு பதிவு ஒன்றை தட்டிவிடுங்கள்.

14 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மண்ணின் மைந்தர் திரு. வடுவூர் குமார் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

எனக்குதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று!

கிரி சொன்னது…

அப்பாடா! வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள் :-)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

எங்க சிங்கை பதிவர் ஒருத்தர துபாய் பதிவர்கள் கிட்ட ஒப்படைக்கிறோம். பத்திரமா பார்த்துங்கப்பா. ( இப்ப போய் இந்த குசும்பன் நினைப்பு வருது, அதான் பயாம இருக்கு).

வடுவூர் குமார் அண்ணா, துபாயில் உங்கள் பணியில் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகிறோம்.

ஆயில்யன் சொன்னது…

வாழ்த்துக்கள் வடுவூர் குமார் அண்ணா!

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்
வடுவூராரே.......

ஜோ/Joe சொன்னது…

வடுவூர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் .!

துளசி கோபால் சொன்னது…

எங்கிருந்தாலும் வாழ்க!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
மண்ணின் மைந்தர் திரு. வடுவூர் குமார் அவர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

எனக்குதான் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று!
//

ஜோதிபாரதி,
மாலை 3 மணிக்குள் ஏர்போர்ட் விரைந்தால் பார்க்கலாம், 4 மணிக்குத்தான் விமானமாம்.

விஜய் ஆனந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் வடுவூர் குமார் அண்ணா!!!

all the very very best!!!

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் வடுவூர் குமார், மாற்றம் பல நன்மைகள் தர வாழ்த்துக்கள்

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள் வடுவூர் குமார் அண்ணா!!!

வடுவூர் குமார் சொன்னது…

Thanks for Everyone - From Airport.
those interested can get "India' cd from singai Nathan.

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
Thanks for Everyone - From Airport.
those interested can get "India' cd from singai Nathan.
//

வடுவூர் அண்ணா,
நன்றி ! இனிய பயண நல்வாழ்த்துகள் !

முரளிகண்ணன் சொன்னது…

all the best vaduvuur kumar.

giri said

அப்பாடா!

why?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்