பித்தானந்தாவும் போலி கோவி.கண்ணனும் யார் என்பது உங்களுக்குத் தெரியும் சாச்சாத் நம்ம நாமக்கல் சிபி சுவாமிகளே தான். மங்களூர் சிவாவின் திருமணத்தில் பிசியாக இருந்தாலும், எனக்காக சிறிது ஒத்துழைப்பு கொடுத்தார்.
தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் மிகவும் மகிழ்ச்சியுடனே காணப்பட்டார்.
"பித்தானந்தா எப்படி இருக்கிங்க ?"
"எனக்கென்ன பக்தைகள் சூழ நல்லாத்தான் இருக்கேன்"
"எப்டிய்யா ... தமிழகத்தில் மின் வெட்டாம், இரவு தூக்கமே வரவில்லை என்கிறார்களே..."
கடகட வென சிரித்தார்
"அறியாதவர்கள்....எங்கள் வீட்டில் மின்வெட்டு இல்லை, ஆசரமத்திலும் மின் வெட்டு இல்லை"
"கரண்டை திருடுகிறீரோ...அது எப்படி யாருக்குமே கிடைக்காத கரண்டு... உங்களுக்கு மட்டும் ?"
மறுபடியும் சிரித்தார்
"யோவ் சொல்லுய்யா...ஆர்காடு வீராசாமி உங்க ஆசிரமத்துக்கு வருகிறவரா ?"
பதறினார்,
"அபச்சாரம் ... அபச்சாரம்"
"அப்படி நான் என்ன கேட்டுவிட்டேன்...பக்தரா என்று தானே கேட்டேன் பதரா என்று கேட்கவில்லையே ... ஏன் இப்படி பதறுகிறீர் ?"
"எப்படி என்று சொல்லத்தான் ஆசை ஆனால் பெண்களுக்கு படும் துன்பம் ஆகிவிடுமோ என்று பார்க்கிறேன்..."
"உங்க மனைவி...ஆசிரம பக்தைகள் யாரும் துன்பம் அனுபவிக்கவில்லையா ?"
"அது.....அது அவர்கள் சேவையாக நினைத்துச் செய்கிறார்கள்"
"அப்படி என்னதான் செய்கிறார்கள்......"
"விசுப் படம் பார்த்திருக்கிங்களா கோவி ஜி"
"நீங்க பேசுவதே அப்படித்தானே இருக்கும், விசுப்படம் வேற தனியாக பார்க்கனுமா ?"
"குதர்கம் பேசப்படாது......விசு படத்தில் பெயர் வாங்கிய படம் எது ?"
"மணல் கயிறு....."
"இல்லை"
"திருமதி ஒரு வெகுமதி....."
"நெருங்கிட்டிங்க ஆனால் இதுவும் இல்லை"
"இன்னும் ஒன்னு தான் நினைவுக்கு வருது.......ரகுவரன் லஷ்மி நடித்த 'சம்சாரம் அது மின்சாரம்' "
"சபாஷ் அதே தான்......இரவெல்லாம் என் மனைவி என் வீட்டில் மின் சார கம்பியைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்.....அதனால் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கிறது......ஆசிரமத்தில் பக்தைகள் என்மீதான 'நாயகி பாவத்தில்' இருந்து கொண்டே மின் கம்பியின் மீது கைவைத்து இருக்கிறார்கள், எனவே அங்கும் மின் பற்றாக்குறை இல்லை"
"ஓ அப்படியா விசயம்....நல்ல விசயமாக இருக்கிறதே...."
"ஆனால் பெண்களுக்கு பெரும் துன்பம் தானே......எப்பொழுதும் மின் கம்பியைப் பிடித்துக் கொண்டே இருந்தால் கணவர் நன்றாகத் தூங்குவார்...குரட்டை ஒலியால் பெண்கள் அவதிப்படுவார்களே...."
"யோசிக்க வேண்டிய விசயம் தான்....பெரிய பெரிய வீடு வைத்திருப்பவர்களுக்கு மனைவி கொடுக்கும் மின் சாரமே போதும் என்கிறீர்களா ?"
"போதவில்லை என்றால் சின்ன வீட்டை மின் வெட்டு பிரச்சனை தீரும் வரை பெரிய வீட்டுக்கு சிப்ட் செய்துட வேண்டியது தானே"
"ஐயையோ....மின்சாரம் போததவர்கள் இரண்டாவதாக ஒரு சம்சாரத்தையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறீர்களா ?"
"வெளியே எதோ பெண்கள் அமைப்பின் கோஷம் கேட்குது......இந்த விசயம் வெளியே தெரிந்தால் மின்சாரத்துக்கு பதிலாக இங்கே இடியே விழுந்துடும்.......நான் அப்பீட்டு ஆகிக் கொள்கிறேன்" சுவாமிஜி தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
14 கருத்துகள்:
ஓகோ! அதுதான் அரசியல் வாதிகள் வீட்டில் மின் தட்டுப்பாடு இல்லையோ?
//வடகரை வேலன் said...
ஓகோ! அதுதான் அரசியல் வாதிகள் வீட்டில் மின் தட்டுப்பாடு இல்லையோ?
11:30 AM, September 08, 2008
//
அண்ணாச்சி, சரியாக பாயிண்டை பிடிச்சிட்டிங்க !
:)
கோவி கண்ணன் உங்களுக்கு அழைப்பு
http://girirajnet.blogspot.com/2008/09/for-aristocrat-vodka.html :-)
;-)))...
புதுசு புதுசா கண்டுபிடிக்கறாங்களே!!!!
இந்தியா 2020-ல வல்லரசு ஆயிடும்...யிடும்...டும்...ம்..
சம்சாரம் அது மின்சாரம் இத ஒத்துக்கலாம். எப்டி பக்தைகள்,சின்ன வீடுகள் எல்லாம் மின்சாரமாக முடியும்?
சுவாமி என்னா எல்லாரையும் சம்சாரமாத்தான் நினைப்பாரோ?
நாட்டுல புரட்சிய உண்டுபண்ணுங்கய்யான்னா, புரளியல்ல உண்டுபண்ணுறீங்க.
//ஜோசப் பால்ராஜ் said...
சம்சாரம் அது மின்சாரம் இத ஒத்துக்கலாம். எப்டி பக்தைகள்,சின்ன வீடுகள் எல்லாம் மின்சாரமாக முடியும்?
சுவாமி என்னா எல்லாரையும் சம்சாரமாத்தான் நினைப்பாரோ?
நாட்டுல புரட்சிய உண்டுபண்ணுங்கய்யான்னா, புரளியல்ல உண்டுபண்ணுறீங்க.
//
சுவாமி தெளிவாக சொல்லி இருக்கிறாரே, பக்தைகள் 'நாயகி பாவத்தில்' சுவாஜியை கணவராகவே நினைக்கிறார்கள், சுவாமி அப்படி நினைக்கவில்லை. :)
//பக்தரா என்று தானே கேட்டேன் பதரா என்று கேட்கவில்லையே ... ஏன் இப்படி பதறுகிறீர் ?"//
ஆட்டோவ ஏரோப்ளேன்ல ஏத்தி வந்துரப்போறங்க கோவியாரே..
நல்லா இருக்கு
நர்சிம்
அப்போ கோவி.கண்ணன் அப்பிடின்னு நெறைய பேரு இருக்கீங்களா? அட பாவிங்களா? நான் என்னமோ ஒரே ஒரு கோவி கண்ணன் தான் இப்பிடி யோசிச்சு யோசிச்சு ஏகப்பட்ட பதிவுகளா போட்டு தள்ளராறு போலன்னுல்லா நெனைச்சுட்டேன்.
வர வர நீங்களும் கலைஞர் மாதிரி ஆயிட்டீங்க... ஒரே சுவாமி பதிவாக போடுகிறீர்கள்;)))
/
சாச்சாத் நம்ம நாமக்கல் சிபி சுவாமிகளே தான். மங்களூர் சிவாவின் திருமணத்தில் பிசியாக இருந்தாலும்
/
நானே இன்னும் மங்களூர்லதான் உக்காந்துகிட்டிருக்கேன் ராத்திரிதான் சென்னை கிளம்பறேன் இவர் பிசியா இருக்காரா?????????
அவ்வ்வ்வ்வ்
//அண்ணாச்சி, சரியாக பாயிண்டை பிடிச்சிட்டிங்க !//
தப்பில்லை. பிடிக்கலாம். அது 3 பின் பாயிண்டாக இரூந்தாலும் கரண்ட் வராது!
மின்சாரதட்டுப்பாடு தீர இப்படி ஒரு வழியிருக்கான்னு..ஆற்காட்டார் நினைத்து..தன் அமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்ள ..ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்ய ஏடாகூடமா ஏதாவது செய்துடப்போறார்
கருத்துரையிடுக