அண்ணன் ரத்னேஷ் பணி இடமாற்றம் காரணமாக சுமார் 6 மாதங்கள் எழுத முடியாத சூழலில் இருந்தார். தற்போது மீண்டும் பட்டையைக் கிளப்ப வந்து இருக்கிறார். தமிழ் நாட்டில் மின் தடை போல அவர் இருக்கும் இடத்தில் இணைய இணைப்பு விட்டு விட்டு வருகிறதாம்.
மீண்டும் இன்று முழுவதும் ஆன்மீகம், மற்றும் மாறுபட்ட நற்சிந்தனை, சமூக ஒழுங்கீனம், நல்லவற்றை வெளிச்சமிடுவது.. போன்றவற்றை எழுதுவார்
மீண்டு(ம்) எழுத வந்த ரத்னேஷ் அண்ணாவுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ரத்னேஷ் அண்ணாவின் அண்மைய இடுகைகள் !
விவேக சிந்தாமணியும், நியூட்டனின் முதலாம் இயக்க விதியும்
வெற்றியே உன் விலை என்ன?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
9 கருத்துகள்:
ரத்னேஷும் உங்களுக்கு அண்ணாவா?
என்ன கொடுமைங்க இது? வடுவூராரருக்கு ரத்னேஷ் அண்னாவா தம்பியா?
ரத்னேஷ் சின்னப் பையன்ன்னு இல்ல நெனச்சிருந்தேன். அவ்ளோ வயசா ஆயீடுச்சு?
நானும் ஆட்டையில சேந்துக்கறேன்...
வாழ்த்துக்கள்..
வருக!!!வருக!!!
//SurveySan said...
ரத்னேஷும் உங்களுக்கு அண்ணாவா?
என்ன கொடுமைங்க இது? வடுவூராரருக்கு ரத்னேஷ் அண்னாவா தம்பியா?
ரத்னேஷ் சின்னப் பையன்ன்னு இல்ல நெனச்சிருந்தேன். அவ்ளோ வயசா ஆயீடுச்சு?
//
வடுவூர் அண்ணாதான் பெரியவர்.
அவ்வளே வயசுன்னா ? எவ்வளவு ?
என் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறீர்கள் தானே
//விஜய் ஆனந்த் said...
நானும் ஆட்டையில சேந்துக்கறேன்...
வாழ்த்துக்கள்..
வருக!!!வருக!!!
1:59 AM, September 07, 2008
//
தம்பி விஜய்
நன்றி !
வருக வருக
ரத்னேஷ் சீனியருக்கு நல்வரவு.
கோவி.கண்ணன், இதெல்லாம் ரொம்ப ஓவர். நன்றி எல்லாம் கிடையாது.
சர்வேசன் சார்,
//ரத்னேஷும் உங்களுக்கு அண்ணாவா?//
1. இந்தியாவில் நடிகைகளுக்கும் (எனக்குத் தெரிய ஒருநடிகை விதிவிலக்கு) கோவி.கண்ணன் அவர்களுக்கும் வயது என்கிற வார்த்தையும் பொருளும் பிடிக்காது என்பது தாங்கள் அறியாததா?
2. அழகிரியை, வைரமுத்து 'அண்ணன்' என்று அழைக்கையில் கோவி.கண்ணன், ரத்னேஷை அழைக்கக் கூடாதா?
3. ரத்னேஷுக்கு அவ்ளோ வயசா ஆயிடுச்சு என்கிற கேள்வியை 'கோவி.கண்ணன் அவ்ளோ சின்னப் பையனா?' என்று கேட்டிருக்க முடியாதா?
நன்றி விஜய் ஆனந்த் சார்,
நன்றி முரளி கன்ணன் சார்
நன்றி துளசி கோபால் மேடம்.
கருத்துரையிடுக