பின்பற்றுபவர்கள்

22 ஏப்ரல், 2008

இவர்களையாவது விட்டு வையுங்கடா !

இறந்த தலைவர்களுக்கு உருவச்சிலை அமைப்பது, அவர்களின் செயல்களை போற்றி மரியாதை காரணமாக அவர்களை நினைவுறுவதற்கும், வருங்கால சந்ததியினர்கள் தலைவர்களின் அற்பணிப்பை உணர்ந்து வாழ்கையில் நாமும் ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுப்பதற்குத்தான். பொதுவாக தேசிய தலைவர்கள் எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கும் உடமையான (சொந்தமான)வர்கள் இல்லை என்பதால் காந்தி, நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகளுக்கு செய்யப்படும் அவமரியாதை குறைவே, அப்படியும் தீவிரவாதிகளின் இலக்கு அவர்களது சிலையாகத்தான் இருக்கும். தமிழ்மண்ணில் பெரியார் சிலைக்கே அவமாரியாதை நடந்திருக்கின்ற போது, முத்துராமலிங்க தேவர் போன்றவர்களுக்கு அது நடப்பது ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல.

தேசிய தலைவர்களில் தமிழக அளவில் அவமரியாதை செய்யப்படுவதில் அண்ணல் அம்பேத்கரின் சிலையே மிகுந்தது. தலித் பெருமக்கள் தங்கள் குலத்தில் தோன்றிய விடிவெள்ளியாகத்தான் நினைத்து அம்பேத்காரையும் அவரது சிலைக்கும் மரியாதை செய்து வருகின்றனர். அம்பேத்காரை தலித் பெருமக்களுக்கும் மட்டுமான சாதித் தலைவர் போல் நினைத்து ஒரு தேசிய தலைவருக்கு பிற சாதிக்காரர்கள் அவமரியாதை செய்து வருவது ஒருவகையில் தேச துரோகம் ஆகும். இந்திய அரசியல் சாசன சட்டத்தை ஏற்படுத்தி, சமூக நீதிக்கு எதிராக போராடிய அண்ணல் அம்பேத்கார் வெறும் தலித் பெருமக்களுக்கான தலைவர் மட்டுமல்ல. மகாமத்மா காந்தி போலவே அண்ணல் என்று அன்புடன் அழைக்கப்படும் மாபெரும் ஒரு தலைவர் அவர்.

அண்ணல் அம்பேத்கார் தமிழகத்தில் தொடர்ந்து அவமரியாதை செய்யப்படாமல் இருக்க வேண்டுமென்றால் தலித் பெருமக்கள் அவரை தங்கள் தலைவர் போன்று முன்னிறுத்துவதை தவிர்க்க வேண்டும். இவர்கள் இப்படி செய்வதாலேயே அண்ணல் அம்பேத்கார் தலித்துகளின் தலைவன் என்றே சாதிவெறியர்கள் எப்போதும் அவரது சிலைக்கு அவமரியாதை செய்து வருகின்றனர். ஒரு தேவர் சிலை அவமதிக்கப்பட்டால் பதிலுக்கு 10 அம்பேத்கார் சிலைகள் அவமானப் படுத்தப்படுவது(ம்) நடந்தேறுவருகிறது. இதுபோன்று தேசிய தலைவர்களை அவமானப் படுத்துபவர்களை மத்திய அரசின் தடுப்புக் காவல் சட்டம் கொண்டு ஒடுக்கினால் இது போன்று அவமரியாதைகள் குறையும்.

தேவர் சிலைக்கு நடந்த அவமரியாதைப் பற்றி...

பிற்காலத்தில் சிலையாக மாற இருக்கும் எந்த ஒரு சாதிக்கும் தலைவனாக உருவெடுக்கிறவர்களுக்கு வருங்காலத்தில் பிற சாதியினர் செய்யும் அவமரியாதை இதுதான் என்று தேவர் சிலைக்கு நடக்கும் அவமரியாதைகள் பாடமாக இருக்குமா ? தெரியவில்லை. முத்துராமலிங்க தேவர் தேவர் சமூகம் தாண்டி பிறமக்களுக்கு அப்படி என்ன செய்துவிட்டார் என்றே தெரியவில்லை. அவரது நூற்றாண்டுக்கு அரசு விழாவெல்லாம் கலைஞர் அரசு எடுத்தது. அதே ஆண்டில் தான் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டும் வந்தது, அது எத்தனைப் பேருக்கும் தெரியும் ? அதையும் அரசு மிகச் சிறப்பாக கொண்டாடியதா ? கேவலமான ஓட்டு அரசியலும், சாதி அரசியலும் நடக்கின்ற நாட்டில் தமிழறிஞர்களுக்கு பெரிய அளவில் விழா எடுப்பதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுப்பது போல் நடந்து முடிந்துவிடும். மதுரையில் தேவநேயப்பாவாணருக்கு மணிமண்டபம் என்ற செய்தி தவிர்த்து தேவநேயப்பாவானருக்கு தமிழக அரசு என்ன விழாவெல்லாம் எடுத்தது, பொதுமக்களுக்கு அது பற்றி தெரியுமா ? அரசு குறிப்பையோ, செய்தித்தாள்களையோ பார்த்தால் தான் தெரியவே வரும்.

தேவரோ, இன்னும் எந்த சாதித் தலைவரோ அவர்களது சிலைகளெல்லாம் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் வைப்பதால் தானே அவமரியாதைக்கு ஆளாகிறது. சாதி மோதல்கள் வரும் போது சாதித் தலைவர்களின் சிலை இலக்காவது தவிர்க்கவே முடியாது. அதற்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் ஒருவரின் சிலையே 100க் கணக்கான இடங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தால் தமிழக அரசுக்கு வீன் செலவு தானே ? அந்த செலவையெல்லாம் சங்கம் வைத்து சாதி வளர்ப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? சாதித் தலைவர்கள் மீது அந்தந்த சாதியினருக்கு நன்மதிப்பு இருக்கட்டும், யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த தலைவர்களை ஏன் சிலையாக வடித்து பொதுவில் வைத்து பிரச்சனைகளுக்கு அடிகோல வேண்டும். அப்படியும் சிலை வைக்க வேண்டுமென்றால் சாதி சங்க கட்டிட வளாகத்தினுள் பாதுகாப்பாக வைத்தால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை ஏற்படப் போகிறது ?

இறந்த பிறகும் காலம் காலமாக தான் சிலை உருவத்திலும் தங்கள் சாதியினருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சாதித் தலைவர்கள் குறிப்பாக மருத்துவர் இராமதாஸ், தொல். திருமாவளவன், மற்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி, மருத்துவர் சேதுராமன் மற்றும் அனைத்து சாதித் தலைவர்களும் தங்களுக்கு வருங்காலத்தில் நடக்கும் அவமரியாதை உணர்ந்து, தங்களுக்கு எந்த சிலையும் இருக்கக் கூடாது என்று தற்போதே தங்கள் சாதியினரிடம் சொல்லி விடுவது நல்லது.

சாதிதலைவர்களின் சிலைகள் பொது இடத்தில் இருப்பது எப்போதும் சீண்டலுக்கும், மோதலுக்குமே வழிவகுக்கும். அது நடந்தால் பொது சொத்துக்கும் மாபெரும் சேதம் விளைவிக்கும். தெருக்களின் பெயர்களில் இருந்து சாதிகளை அகற்றியது போலவே ஊருக்கு(ள்) நடுவே இருக்கும் சாதித் தலைவர்களின் சிலைகளை தமிழக அரசு அகற்றிவிட்டு அங்கெல்லாம் மணிக்கூண்டு அமைக்கலாம். ஒரு சாதித்தலைவருக்கு ஊருக்குள் சிலை இருந்தால் நம் சாதியிலும் ஒருவருக்கு சிலை இருப்பதுதான் நமது சாதிக்கும் பெருமை என்றே பிற சாதியினர் நினைப்பார்கள், சாதிகளும் சாதி வேற்றுமைகளும் சாதிகளின் தலைவர்கள் சிலையாக நின்று கொண்டிருந்தால் கூட அதை அதை கட்டிக் காக்கும் என்பதே உண்மை.

அப்படியும் சிலை வைக்க வேண்டும் என்கிறார்கள் என்றால் ஊருக்கு வெளியே பொதுச் இடுகாடு இருப்பது போன்று தமிழகத்திற்கு பொதுவாக ஒரு நினைவு இடத்தை அரசு ஒதுக்கி, அதனுள் லண்டனில் மெழுகு சிலை அமைத்தவைத்திருப்பது போன்று அனைத்து தலைவர்களுக்கும் இடம் ஒதுக்கி, அந்தந்த சாதியினரிடம் அங்கு வசதிக்கேற்றவாறு சிலை அமைத்துக் கொள்ளச் சொல்லலாம், பிறந்த நாள், இறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு அந்த சிலைகளையும் தொலைவில் இருந்தே பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று விதிமுறை அமைத்து, ஓரிருவரை மாலை மரியாதை செய்ய அனுமதிக்கலாம். அதற்கு ஆகும் பாதுகாப்பு செலவும் குறைவு. அந்த இடத்தை சுற்றுலா தலம் போல் அமைத்தால் அது இன்னும் நன்றாகவே இருக்கும்.

வாஉசியும், பாரதியும் சாதித்தலைவர்கள் ஆகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் எதாவது ஒரு சாதி உரிமை கொண்டாடி இருக்கும் :(

தமிழகத்தில் முன்னாள் தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் சாதித் தலைவராக மாற்றிக் கொள்ளூங்கள், தந்தைபெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிநி ஆகியோரையாவது விட்டுவையுங்கடா ன்னு சொல்லத் தோன்றுகிறது.

17 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து பல உயிர்களைக் காத்துள்ளது காவல்துறை. எந்தப் பொறம்போக்கோ பண்ணினதுக்கு ஒரு மனநோயாளியை வைத்து பிரச்சினைய முடித்தவிதம் செம தந்திரம். கலைஞர் ஆட்சிதான்யா...:))

மரைக்காயர் சொன்னது…

//தெருக்களின் பெயர்களில் இருந்து சாதிகளை அகற்றியது போலவே ஊருக்கு(ள்) நடுவே இருக்கும் சாதித் தலைவர்களின் சிலைகளை தமிழக அரசு அகற்றிவிட்டு அங்கெல்லாம் மணிக்கூண்டு அமைக்கலாம்.//

நல்ல யோசனை!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்படியும் சிலை வைக்க வேண்டுமென்றால் சாதி சங்க கட்டிட வளாகத்தினுள் பாதுகாப்பாக வைத்தால் அவர்களுக்கு ஏன் அவமரியாதை ஏற்படப் போகிறது ?//

வெறுப்பில் நான் போட்ட இடுகையில் அதைக் கொட்டிவைத்தேன். தாங்கள் வடித்திருக்கிறீர்கள்.(சிலை அல்ல எழுத்தைச்சொன்னேன்)

//இறந்த பிறகும் காலம் காலமாக தான் சிலை உருவத்திலும் தங்கள் சாதியினருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சாதித் தலைவர்கள் குறிப்பாக மருத்துவர் இராமதாஸ், தொல். திருமாவளவன், மற்றும் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவர் சேதுராமன் மற்றும் அனைத்து சாதித் தலைவர்களும் தங்களுக்கு வருங்காலத்தில் நடக்கும் அவமரியாதை உணர்ந்து, தங்களுக்கு எந்த சிலையும் இருக்கக் கூடாது என்று தற்போதே தங்கள் சாதியினரிடம் சொல்லி விடுவது நல்லது.//

மருத்துவர்களின் பட்டியல் நீளும் போலத் தெரிகிறது! திருமாவைத் தவிர... கிருஷ்ணசாமி தானே தாங்கள் சொல்லவந்தது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கல்வெட்டு சொன்னது…

// வாஉசியும், பாரதியும் சாதித்தலைவர்கள் ஆகும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, காந்தி தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவரையும் எதாவது ஒரு சாதி உரிமை கொண்டாடி இருக்கும் :(//

கப்பல் ஓட்டிய தமிழனை பிள்ளைமார் சாதி ஏற்கனவே ஓட்டிக்கொண்டு போய்விட்டது. எந்தக்காலத்தில் வாழ்கிறீர் கோவி?

அய்யா முத்துராமலிங்கத்தேவர் நிச்சயம் தேவர் இன முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். கப்பல் ஓட்டிய தமிழன் என்ன பிள்ளைமார் சாதிக்காகவா கப்பல் ஓட்டினார்? கொடுமை. அவரும் சாதித் தலைவராகிவிட்டார் :-(((

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
உண்மையான ஒரு மனநோயாளியை கைது செய்து பல உயிர்களைக் காத்துள்ளது காவல்துறை. எந்தப் பொறம்போக்கோ பண்ணினதுக்கு ஒரு மனநோயாளியை வைத்து பிரச்சினைய முடித்தவிதம் செம தந்திரம். கலைஞர் ஆட்சிதான்யா...:))

10:30 PM, April 22, 2008
//

இளா,
கொடுமை, நேற்றுதான் ஜெவின் குற்றச்சாட்டுகளுக்கும் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆன்டி' என்று குறைபட்டுக் கொண்டார். இவரது காவலர்களுக்கு இளிச்சவாயன் மனநோயாளி போல.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//மருத்துவர்களின் பட்டியல் நீளும் போலத் தெரிகிறது! திருமாவைத் தவிர... கிருஷ்ணசாமி தானே தாங்கள் சொல்லவந்தது.

அன்புடன்,
ஜோதிபாரதி.//

ஜோதிபாரதி,

கிருஷ்ணசாமி பெயரை திருத்திவிட்டேன், தங்கள் எழுதி இருந்த வள்ளுவர் சிலைக்கும் பூமி பூஜை(சை)யா??? அடப்பாவத்தே...!

இடுகையும் சிறப்பான பதிவு !

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு said...
கப்பல் ஓட்டிய தமிழனை பிள்ளைமார் சாதி ஏற்கனவே ஓட்டிக்கொண்டு போய்விட்டது. எந்தக்காலத்தில் வாழ்கிறீர் கோவி? //

கல்வட்டு ஐயா, அந்த கொடுமை உறுதியாக எனக்கு தெரியாது, அப்படி இருக்கலாம் என்றே நினைத்தேன்.
நீங்கள் சொல்வது சரிஎன்றால் பாவம் வஉசி செக்கிழுத்ததற்கும், கப்பள் ஓட்டி தமிழன் என்று பெருமிதம் கொள்ளச் செய்ததற்கு அவருக்கு பிள்ளைமார்கள் செய்வது பச்சை துரோகம், அவரின் புகழுக்கு இழுக்கு.

// கப்பல் ஓட்டிய தமிழன் என்ன பிள்ளைமார் சாதிக்காகவா கப்பல் ஓட்டினார்? கொடுமை. அவரும் சாதித் தலைவராகிவிட்டார் :-(((
//

ஹூம் கொடுமை தான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மரைக்காயர் said...

நல்ல யோசனை!//

மரைக்காயர் ஐயா,
பின்னூட்டத்திற்கு நன்றி !

துளசி கோபால் சொன்னது…

பிள்ளையார் கோவிலில் Auntyயா?

எங்கே? :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பிள்ளையார் கோவிலில் Auntyயா?

எங்கே? :-)
//

துளசி அம்மா,

இருக்கக் கூடாதா ? வடநாட்டு பிள்ளையார் கோவிலில் சித்தி, புத்தி என இரண்டு aunty கள் பிள்ளையாருக்கு வல, இடபுறமாக இருக்கிறார்களாமே !
:)

துளசி கோபால் சொன்னது…

அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?

தென்னாட்டுலேயே திருவையாறு கோயிலில் இருக்காங்களே:-))))

Uma சொன்னது…

silaigale vaikka koodathunu sattam potta enna?

Uma சொன்னது…

சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் கொன்டு வந்தா என்ன?

நையாண்டி நைனா சொன்னது…

எச் சிலை வடித்தாலும், ஜாதி பேர் சொல்லி வரும் கூட்டம்
எச்சிலை வடித்தாலும் மோதிக்கொண்டு வருமோ - வந்தால்
எச்சிலை அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு
பச்சிலை இல்லை அவர்கள் நோய்க்கு

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அடடே....இந்த auntyகளா? இதுக்கு எதுக்கு வடநாடு?

தென்னாட்டுலேயே திருவையாறு கோயிலில் இருக்காங்களே:-))))
//

துளசி அம்மா,

திருவையாறு கதை தெரிந்தால், 'பிள்ளையாருக்கும் இரண்டு' என்று மொக்கை கதை போட்டு வவா சங்கத்துக்கு அனுப்பி இருப்பேன்.
:)

தகவலுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//umakumar said...
சிலைகலெ வைகக கூடஅதுன்ன் சட்டம் கொன்டு வந்தா என்ன?
//
சிலைகள் வரலாற்றுச் சின்னங்கள் தான் வைப்பதில் தவறு இல்லை. ஆனால் இங்கே சாதிசார்பாக நிற்கும் சிலைகளெல்லாம் பிரச்சனையின் உருவாக உயிருடன் நிற்கின்றன, செத்தும் கெடுத்தானாம் என்று மாற்று சாதியனர் திட்டிக் கொண்டு தான் இருப்பார்கள். இதைப் புரிந்து கொண்டு அவமரியாதை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் சாதி தலைவர்களின் சிலைகளை அகற்றுவது தான் நல்லது. சாதி வெறி சமூகம் என்ற அவப்பெயரையே எந்த ஒரு சாதி தலைவரின் சிலையும் அந்த சாதியினருக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
எச் சிலை வடித்தாலும், ஜாதி பேர் சொல்லி வரும் கூட்டம்
எச்சிலை வடித்தாலும் மோதிக்கொண்டு வருமோ - வந்தால்
எச்சிலை அவர்கள் முகத்தில் உமிழ்ந்துவிடு
பச்சிலை இல்லை அவர்கள் நோய்க்கு
//

நைனா,

உங்கள் குறுங்கவிதை அட்டகாசம் !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்