சென்னை: தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் திட்டமிட்டு சில டிவி, பத்திரிக்கைகள் விஷமத்தை பரப்பி வருவதாக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்ைக:
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சில பத்திரிக்கைகள், எழுதி வருகின்றன. நான் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதைப் பொறுக்க முடியாமல்தான் இப்படி என் மீது அவதூறை வாரி வீசுகின்றனர்.
இந்த முதல்வரிடம் முப்புரி நூல் இல்லை, நான் பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய சமூகத்தைச் சேர்ந்தவனும் இல்லை. பிரம்மனின் காலிலிருந்து உதித்த சமூகத்தைச் சேர்ந்தவனாகி விட்டேன். அதனால்தான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள்.
நான் பிற்பட்ட வகுப்பில் பிறந்த காரணத்தினால்தான், சில குறிப்பிட்ட பத்திரிக்கைகள், அரசின் சாதனைகளை மூடி மறைத்து விட்டு, வேண்டும் என்றே எனக்கு எதிராக தவறான பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றன.
நிக்சனும், ஹெக்டேயும் அவர்களே தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக கிளம்பிய குற்றச்சாட்டுக் காரணமாகத் தான் பதவியை ராஜினாமா செய்தார்கள். அந்த வரலாறு தெரியாத சில வரட்டு மதியினர் தமிழகத்தில் இரு அதிகாரிகளுக் கிடையே தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து என்னை பதவி விலக சொல்வது விஷமத்தனமானது.
செய்தி : தட்ஸ்தமிழ்
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
1 கருத்து:
கலைஞரில் ஆதங்கப் படத் தேவையில்லை. சமாளிக்கவேண்டும்.
இது எப்போதும் ஆற்றாமையால் கலைஞர் எடுக்கும் கடைசி ஆயுதம். தேவையில்லாதது.
அவரே ஒரு பத்திரிக்கையாளர். அவர் கைது செய்யப்பட போது எல்லா ஊடகங்களும் எதிர்த்தன.(அப்போது அவர்கள் இவர் என்ன போட்டிருக்கிறார் என்று பார்க்கவில்லையே) திரு அத்வானி,ஜெட்லி உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்து ராம் போன்றவர்கள் உறவினர் மட்டுமன்றி ஆலோசகராக கூட இருந்திருக்கிறார். துக்ளக் சோ கூட நெருக்கமாக இருந்திருக்கிறார். துக்ளக் சோவும் கலைஞரும் சத்துணவு திட்டத்தை செய்யாத கேலியா?
அன்புடன்,
ஜோதிபாரதி.
கருத்துரையிடுக