பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2008

எல்லாம் கடவுள் படைச்சது தான்...?

சென்ற வார இறுதியில் சென்னை நண்பர் ஒருவருடன் சிங்கை பறவைகள் பூங்காவிற்குச் சென்றேன். சிங்கையில் காசு கரைகிற இடங்களில் அதும் ஒண்ணு. 22 வெள்ளி கட்டணம், அந்த அளவுக்கு மதிப்பு பெறாது. சிங்கை போன்ற வளர்ந்த நாடுகளில், குடியுரிமை யுள்ள / பெற்ற உடல் உழைப்பாளர்களுக்கு குறைந்த அளவாக 1000 வெள்ளி ஊதியம் என்பதால் பறவைகள் பூங்கா போன்ற இடங்களில் உள்ள கட்டணங்கள் வாங்குவதற்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் ஊதியமாக கொடுப்பதற்கும், பராமரிப்பு செலவுக்கும் சரியாக இருக்கும், பெரியதாக அரசாங்கத்திற்கு லாபம் ஒன்றும் கிடையாது, வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை கவர்வதற்காக சுற்றுலா மையம் தேவை என்பதால் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலா மையங்கள் கட்டணம் மிக்கவை என்பதால் உள்ளூர்வாசிகள் எவரும் செல்வது இல்லை. ( இது சுற்றுலா வாசிகளுக்காக சின்ன குறிப்புதான் பதிவுக்கும் இந்த தகவலுக்கும் தொடர்பு இல்லை)

உள்ளே சென்றவுடனே பென்குயின் பறவைகள் அடைக்கப்பட்ட கண்ணாடி கூண்டைப் பார்த்தோம் மிக அழகாக நின்று கொண்டும், குளிர்நீருக்குள் நீந்திக் கொண்டும் பெண்குயின் பறவைகள் காட்சி தந்தன. நண்பரும் நானும் மிகவும் ரசித்தோம், அதன் பிறகு நாரைகள், வகைவகையான கிளிகள், பலவிதமான பறவைகளைப் பார்த்தோம். ஒவ்வொரு இடங்களில் உள்ள பறவைகளைப் பார்க்கும் போது, 'ஆண்டவன் படைப்பில் என்ன ஒரு அற்புதம்!!!, என்ன ஒரு அழகு!!!' என்று நண்பர் மிகவும் மகிழ்ந்து, உணர்ச்சி வசப்பட்டார்.

கடைசியாக திரும்பி வரும் போது, இருட்டு அறைக்குள் இரவு நேர பறவைகளை வைத்திருக்கும் இடத்திற்கு வந்தோம், அந்த அறையுனுள் உள்ளே வராமால் தயங்கினார். தயக்கத்திற்கான காரணம் புரிந்தாலும், 'கால் வலிக்குதா ? ஏன் என்ன ஆச்சு, எல்லாவற்றையும் பார்த்தோம், இதையும் பார்த்திட வேண்டியதுதானே ?' என்று கேட்டேன்.

'ஆந்தையெல்லாம் யாரு பாப்பாங்கா ?, ஆந்தை முகத்தில் முழித்தாலே பாவம், கெட்ட சகுனம், நான் வரலை' என்றார்

'ஆந்தையை படைச்சது யாராம்?'

அவர் மனம் புண்படும் என்று அவரிடம் கேட்கவில்லை, ஆனால் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்

நான் உள்ளே சென்று பார்த்தேன், இருட்டு அறையில், மெல்லிய சிவப்பு வெளிச்சத்தில் கூரிய பார்வையுடன், மனித முகம் போலவே இருந்த ஆந்தைகள், 'மற்ற பறவைகளைவிட நானே அழகு' என்று சொல்வது போலவே உணர்ந்தேன்.

நாத்திகம் பேசுவது பாவம் !!! நாத்திகனை பேச வைப்பது யார் ? :)

எல்லாம் அவன் செயல் !!! :-)

பின்குறிப்பு : பதிவில் எதும் உள்குத்து இல்லை. தேடவேண்டாம். பின்குறிப்பு மட்டுமே உள்குத்து. :)

18 கருத்துகள்:

TBCD சொன்னது…

ஆ...குத்திருச்சி...

TBCD சொன்னது…

குத்த வேண்டியவர்களைப் பற்றிய குறிப்பு எது என்றுச் சொன்னால், உள் குத்தைக் கண்டுப்பிடிக்க வசதியா இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//

TBCD said...
ஆ...குத்திருச்சி...
//

ஆ...ன்மிகம் குத்திருச்சா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
குத்த வேண்டியவர்களைப் பற்றிய குறிப்பு எது என்றுச் சொன்னால், உள் குத்தைக் கண்டுப்பிடிக்க வசதியா இருக்கும்.
//

உள்குத்து இருக்கிறதா ? என்று நீங்கள் தேடினால் உங்களுக்கு குத்தும், உங்களுக்கு எதுவும் குத்தலை என்றால், உள்குத்து இல்லை என்று பொருள். குத்துறவர்களுக்குத்தான் குத்தும் மற்றவர்களுக்கு தேவை இல்லாதது.
:-0)

வடுவூர் குமார் சொன்னது…

சுற்றுலா மையங்கள் கட்டணம் மிக்கவை என்பதால் உள்ளூர்வாசிகள் எவரும் செல்வது இல்லை
ஆமாம்.
எனக்கு பிடித்தது பறவைகளை சுதந்திரமாக பறக்கவிட்டிருக்கும் இடம் தான்.இன்னும் இருக்கா?

Thamizhan சொன்னது…

விமானத்தில் ஊரிலிருந்து திரும்பும் போது ஒரு வெள்ளையர் தமிழ் புத்தகம் படித்து கொண்டிருந்தார்.என்ன எப்படி?புரிகிறதா என்று பேச்சுக் கொடுத்தேன்.
கிருத்துவப் பணியில் சேலத்தில் இருந்தாராம்.ஏதாவது சம்பவங்கள் உண்டா சுவையாக என்றேன்.சிரித்துக் கொண்டு சிலவற்றைச் சொன்னார்.

ஒரு படித்தவர் நீண்ட நேரம் பேசிவிட்டுக் கடைசியில் தன் பூணூலைக் காட்டி பிரம்மாவின் நால்
வருணம் பற்றி சொன்னாராம்.
அவர் எப்படி முகத்திலிருந்து பிறந்தவர் என்று பெருமையுடன் சொன்னாராம்.

பொறுமையாகக் கேட்டு விட்டு இந்த
வெள்ளையர் கேட்டாராம்"அப்ப
நானெல்லாம் எங்கேயிருந்து பிறந்தேன்?"என்று.
பாவம் கடவுள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
விமானத்தில் ஊரிலிருந்து திரும்பும் போது ஒரு வெள்ளையர் தமிழ் புத்தகம் படித்து கொண்டிருந்தார்.என்ன எப்படி?புரிகிறதா என்று பேச்சுக் கொடுத்தேன்.
கிருத்துவப் பணியில் சேலத்தில் இருந்தாராம்.ஏதாவது சம்பவங்கள் உண்டா சுவையாக என்றேன்.சிரித்துக் கொண்டு சிலவற்றைச் சொன்னார்.

ஒரு படித்தவர் நீண்ட நேரம் பேசிவிட்டுக் கடைசியில் தன் பூணூலைக் காட்டி பிரம்மாவின் நால்
வருணம் பற்றி சொன்னாராம்.
அவர் எப்படி முகத்திலிருந்து பிறந்தவர் என்று பெருமையுடன் சொன்னாராம்.

பொறுமையாகக் கேட்டு விட்டு இந்த
வெள்ளையர் கேட்டாராம்"அப்ப
நானெல்லாம் எங்கேயிருந்து பிறந்தேன்?"என்று.
பாவம் கடவுள்!
//

மனிதர்கள், விலங்குகள் என பெண்ணின் பிறப்பு உறுப்பு பிறப்பு வழியாக தொப்புள் கொடியோடுதான் பிறக்கும், பூணூல் எனக்கு தெரிந்து எந்த பார்பனரும் பூனூலோடு பிறந்ததாகவோ, முகத்தில் இருந்து பிறந்ததாக ஒப்புக் கொண்டது இல்லை.

:)

சாமியார்கள், பீடாதிபதிகள், விவேகநந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோர்கள் அனைவருமே தந்தை - தாய் உடல் உறவின் மூலம் பெண்ணின் பிறப்பு உறுப்பு வழியாக பிறந்தவர்கள் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
சுற்றுலா மையங்கள் கட்டணம் மிக்கவை என்பதால் உள்ளூர்வாசிகள் எவரும் செல்வது இல்லை
ஆமாம்.
எனக்கு பிடித்தது பறவைகளை சுதந்திரமாக பறக்கவிட்டிருக்கும் இடம் தான்.இன்னும் இருக்கா?
//

குமார் இருக்கு,

நம்ம ஊரில் சுட்டு தின்று இருப்பார்கள், சிங்கையாக இருப்பதால் தப்பியது, கடந்தவாரம் செய்தியை பார்த்தீர்களா ? விலங்கியல் பூங்காவில் குறங்குக்கு தன்னிச்சையாக தீனி போட்டவருக்கு 4000 வெள்ளி தண்டனை ஆணை பிறப்பிக்கப்பட்டதாம். இத்தனைக்கும் அவர் முன்பு அந்த வேலைதான் பார்த்து வந்தாராம்.

தருமி சொன்னது…

ஏங்க இப்படியெல்லாம் நாத்திகரா இருக்கீங்க ... வருத்தமா இருக்கு ..

:)

துளசி கோபால் சொன்னது…

இப்படியும் சிலர்(-:

எல்லாம் ஒவ்வொருவிதத்தில் அழகில்லையாமா?

ஆமாம். பறவைகள் கிளிகள் நம்ம தலையிலும் தோளிலும் உக்கார்ந்துக்கும். அதைப் படம் எடுத்துக் கொடுப்பாங்களே.

அது இன்னும் இருக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இப்படியும் சிலர்(-:

எல்லாம் ஒவ்வொருவிதத்தில் அழகில்லையாமா?

ஆமாம். பறவைகள் கிளிகள் நம்ம தலையிலும் தோளிலும் உக்கார்ந்துக்கும். அதைப் படம் எடுத்துக் கொடுப்பாங்களே.

அது இன்னும் இருக்கா?
//

துளசியம்மா,

கைகள் தோள்மீது உட்காரும் கிளிகள் இருக்கிறது, 2 வெள்ளிக்கு ரவா கஞ்சி போன்று ஒரு ப்ளாஸ்டிக் கின்னத்தில் கொடுக்கிறார்கள், அதை கைகளில் ஏந்தினால் சின்னச் சிறிய பல வண்ணக்கிளிகள் அருகில் வந்து கைகளின் மேல் உட்கார்ந்து அதை அருந்துகிறது, அதைத் தவிர்த்து பெரிய கிளிகளை தோள்மீது உட்காரவைத்து புகைப்படம் எடுக்க அனுமதியும் கொடுக்கிறார்கள். அதற்கு(ம்) தனி கட்டணம் உண்டு.

உதயம் சொன்னது…

இது உள் குத்து இல்லை , ஊமை குத்து.

வவ்வால் சொன்னது…

கோவி,
//இருட்டு அறைக்குள் இரவு நேர பறவைகளை வைத்திருக்கும் இடத்திற்கு வந்தோம்,//

அங்கே ஆந்தை மட்டும் தான் இருக்கா வவ்வால் இல்லையா :-)) எனக்கும் உங்க ஊர் பறவைகள் பூங்காவில ஒரு இடம் கொடுக்க சொல்லுங்க(இட ஒதுக்கீடு கேட்கிறேன்னு யாராவது சண்டைக்கு வரப்போறாங்க :-)) )

வவ்வால் பார்த்தா தோஷம்னு சொல்வாரா அவர் ?

//ஆந்தையெல்லாம் யாரு பாப்பாங்கா ?, ஆந்தை முகத்தில் முழித்தாலே பாவம், கெட்ட சகுனம், நான் வரலை' என்றார்//

கடவுள் படைத்த ஒன்றை எதிர்த்ததால் அவரும் நாத்திகரே :-))
(நாத்தீகம் பேசுபவர்கள் ஏன் கடவுளை துணைக்கு அழைக்கனும்னு சிலர் கேட்கக்கூடும், நான் வெறும் 3 ஆம் வகுப்பு தான் என்னை விட்றுங்கோ :-)) )

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
ஏங்க இப்படியெல்லாம் நாத்திகரா இருக்கீங்க ... வருத்தமா இருக்கு ..

:)
//

ஆசானே, உங்கள் வருத்தத்தில் ஞாயம் இல்லை, குரு எவ்வழியோ மாணாக்கரும் அவ்வழியே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

பாலா(எ) ஜயராமன் சார்,

உங்கள் பின்னூட்டம் ரிஜெக்டட்.

டாட்டா சால்ட் உடம்புக்கு நல்லதாம் முயற்சி செய்யுங்களே, இரத்த சோகை வருவதற்குள் உப்பு போட்டு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

bala சொன்னது…

//டாட்டா சால்ட் உடம்புக்கு நல்லதாம் முயற்சி செய்யுங்களே//

கோவி.மு.கண்ணன் அய்யா,
அடப்பாவி,உப்பு கூட டாடா போட்டதை வாங்கறீங்களே?இந்த அளவுக்கு மறு காலனி ஆதிக்க மோகினி ஆட்டத்துல மயங்கி,கிறங்கி இருக்கீங்களே?இருங்க இருங்க,எங்க கட்சித் தலைவர் அசுரன் அய்யா வந்து, உங்களை செம்மையா புடைக்கப் போறாரு.

பாலா

PS
பின்னூட்டம் என்ன காரணத்தால் ரிஜெக்ட் செய்யப்பட்டது;பதிவுக்கு சம்பந்தமா இருந்ததாலா?இல்லை இந்த வாரம் கோட்டா 0% ஆக மாற்றி விட்டீங்களா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

92 ல் , இந்த பறவைகள் காட்சியகம் பார்த்துள்ளேன். அழகாகப் பேணினார்கள்.
நேற்று தொலைக்காட்டியில் ஆந்தைக் கிளி என ஒரு பறவை (கிளி வகை), நியூசிலாந்தில் மாத்திரம் உண்டெனக் காட்டினார்கள். இரவில் உலாவும் ;நிலப் பொந்தில் வாழும்; மிக அழகாக இருந்தது.
ஐரோப்பாவில் ஆந்தை சகுனப்பிழையுள்ள பறவையாகக் கணிக்கவில்லை. கிராமிய பண்ணை வீடுகளில்
ஆந்தை வாழ்வதை விரும்புகிறார்கள்; எலியைக் கட்டுப்படுத்த இது மிக உதவுகிறது.
சகுனம்;முகத்தால் பிறத்தல் அறியாமையின் வெளிப்பாடு.
முகத்தில் சளி வரும்; பிள்ளை வருமென்பது; அதீத புழுகு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

காச்சுள்(இந்தியன் பின்டா) பார்த்தீரா? அழகாக இருக்கும். மெதுவாக தவ்வி தவ்வி வாலாட்டும். வாலுக்கு கீழே குங்குமப் போட்டு போல் இருக்கும்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்