பின்பற்றுபவர்கள்

7 ஜனவரி, 2008

ஷங்கரின் ரோபோ கதை !

வழக்கம் போன்ற ஷங்கர் கதைதான் என்றாலும் இந்த முறை(யும்) தயாரிப்பாளரின் ஏகோபித்த பேராதரவுடன் மாபெரும் பொருட் செலவுடன் தயாரிக்கப்படுகிறது ரோபோ. சிவாஜியில் ரஜினிக்கு பரிபூரண திருப்தி இருந்தாதால் ரஜினி ரோபோவுக்கும் ஷங்கரிடம் ஓகே சொன்னதாக தட்ஸ்தமிழ் செய்தி அறிவித்து இருக்கிறது. ஷங்கரின் ஒன்லைன் ஸ்டோரி, கோடம்பாக்கம் நண்பர் மூலம் காத்து வாக்கில் எனக்கு கிடைத்தது உங்களுக்குச் சொல்லாவிட்டால் எப்படி?

தண்ணீர் பிரச்சனைத்தான் படத்திற்கு கரு. இலவசமாக மழை நீராக வரும் தண்ணீரை வில்லன் கும்பல் மினரல் வாட்டராக மாற்றி பணம் பண்ணுகிறது, ஏழைகள் ஒருகுடம், ஒரு தம்ளர் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போகிறார்கள். இதை கேள்விபட்ட கபாலீஸ்வரர் கோவிலின் குருக்கள் இரவோடு இரவாக விதவிதாமான ரோபோவை உருவாக்கி அதன் மீது அமர்ந்து வில்லன் கும்பலை தீர்த்துக்கட்டுகிறார்.

இதை திரைகதையாக மாற்றி ரஜினியை வைத்து செய்வதில் சில சிக்கல் இருக்கிறதாம், சாதுவான குருக்கள் வேடம் ரஜினிக்கு முதலில் பொருந்துமா என்று நினைத்து ஆழ்ந்து யோசித்தாராம். அதன் பிறகு ஹாலிவுட் மேக்கப்காரர்களின் தயவால் அச்சு அசலாக முதிர்ந்த இராகவேந்திரா போன்ற மேக்கப் ரஜினிக்கு செட் ஆகவே ஷங்கர் குஷி மூடில் இருக்கிறாராம்.

கதைப்படி கபாலீஸ்வரர் கோவிலில் ரஜினி தலைமை குருக்கள், ஒரு நாள் கபாலீஸ்வரர் கோவிலில் அபிசேகம் முடித்துவிட்டு வெளிப் பிராகாரத்திற்கு வந்த போது, அங்கே அபிசேகத்தண்ணீர் சாக்கடையில் கலக்கும் இடத்தில் ஒரு சிறுவன் அதை குடத்தில் பிடிக்கிறான். ஆண்டவனின் அபிசேக நீரை பக்தியுடன் பிடிகிறான் என்று ஆச்சரியமாக பார்த்தபோது, அந்த சிறுவன் தண்ணீரே கிடைக்காமல் வேறு வழியின்றி தீர்த்த நீரைபிடிப்பதை அவன் வாயால் சொல்லக் கேட்டு உணர்ச்சி வசபடுகிறார். அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருந்து பல்வேறு 'ஏன் ... ஏன்' என்று கேள்வி எழுப்பிக் கொண்டே பகவானை எண்ணி சேவிக்கிறார், அப்போது பரண் மீது குறுக்கே ஓடிய எலி ஒன்று பழைய பேப்பரை கீழே தள்ள அதிலிருந்த செய்தி அவருக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் மூட்டுகிறது, "பாலாற்றில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது", மேலும் மேலிருந்து ஒவ்வொரு பேப்பராக எடுத்துப்பார்க்கிறார். "வரட்சியில் வாடும் இராமநாதபுரம்","மரக் கொள்ளையர்களால் காடுகள் அழிப்பு, தமிழகத்தில் மழைவரத்து குறைகிறது", "குடிநீர் பதுக்கல் - மினரல் வாட்டர் விலை எகிரியது", என்பதாக பல பல தண்ணீர் செய்திகள்

மறுநாள் குருக்கள் கோவிலுக்குள் சென்று ஒவ்வொரு வாகனத்தைப் பார்க்கும் போது, அவை பேசுவது போலவும் அவற்றிற்கு உயிர் வந்தது போல் உணர்கிறார். மந்திர, மற்றும் அறிவியல் சக்தியுடன் எலக்டாரானிக் தொழில் நுட்ப உதவியுடன் வாகன ரோபோக்கள் உருவாக்கப்பட்டு குருக்கள் ரஜினி அதன்மீது ஏறி அமர்ந்து மணல் கொள்ளைக்காரர்களை வதம் செய்கிறார். முதலில் ஆட்டுக்கிடா வாகனத்தில் செல்கிறார். பாலாற்று மணல் திருடனை அழிக்க பாலாறு போன்ற செட் போடப் படுகிறது, மணல் பால் போன்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக சைனாவில் இருந்து இரண்டு கப்பலில் மணல் வருகிறது. அடுத்ததாக சிங்க வாகனத்தில் ஏறிச் சென்று மரக் கொள்ளையர்களை அழிக்கிறார். கடைசியாக மினரல் வாட்டர் கம்பெணி காரனை கருடவாகனத்தில் சென்று நடுக்கடலுக்குள் உப்பு நீரில் அமிழ்த்தி அழிக்கிறார்.

வாகன ரோபாக்களை உருவாக்குவதற்காக அவருக்கு உதவும் வெளிநாட்டில் படித்த தமிழ்பெண்ணாக கதாநாயகி ஐஸ்வர்யா பச்சன் நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு பெயர் 'எழிலரசி' தமிழ் பெயராக இருக்க வேண்டும் என்று ரஜினி விருப்பம் தெரிவித்ததராம். படத்தின் முடிவில் காவேரியும் கங்கையும் இணைந்து தமிழகம் பசுமை ஆனதாகவும், கூவத்தில் பொழுதுபோக்கு படகுகள் செல்வதாகவும் காட்டுவார்கள். ஐயர் கதையாக இருப்பதால் அனேகமாக ஜென்டில்மேன், ஜீன்ஸ் படத்திற்கு வசனம் எழுதிய பாலகுமரான் இதற்கும் கதைவசனம் எழுதுவார் என்று தெரிகிறது.

முழுக்கதையும் எழுதிவிட்டால் அப்பறம் ஷங்கர் கதையை மாற்ற திண்டாடுவார். பாவம் விட்டுடுவோம்.

பின்குறிப்பு : பாத்திரங்கள், தட்டுமுட்டு சமான் எல்லாம் கற்பனையே !

35 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ஏன் இந்தக் கொலைவெறி?
:)

TBCD சொன்னது…

ச(ஷ)ங்கரின் பொழைப்பில் மண் அள்ளிப் போடுறவா எல்லார்க்கும் கும்பிபோஜம் தான்..

மங்களூர் சிவா சொன்னது…

கலக்கல்!!

மங்களூர் சிவா சொன்னது…

//
பின்குறிப்பு : பாத்திரங்கள், தட்டுமுட்டு சமான் எல்லாம் கற்பனையே !
//
இது சூப்பர்

மங்களூர் சிவா சொன்னது…

ஒரே கதையை திரும்ப திரும்ப வேறு வேறு பெயர்களில் படமாக எடுக்கும் சங்கர் இதை கண்டிப்பாக எடுக்கலாம்.

இந்த கதையெழுதிய எங்கள் 'தலை'க்காக நான், டிபிசிடி, ஜகதீசன் மூன்று பேரும் டிவிடிலயாவது பார்ப்போம் என்பதை சங்கருக்கு இங்கு உறுதி கூறுகிறேன்!!

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணே ஆபீஸ்ல தூங்காதீங்க சீக்கிரம் கமெண்ட் பப்ளிஸ் பண்ணுங்க

வடுவூர் குமார் சொன்னது…

எந்த ஊர் திண்ணையில் உட்கார்ந்து யோசித்தீர்கள்!!!
சங்கருக்கு இதன் மூலமே பொறி கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜமாலன் சொன்னது…

கண்ணன் சங்கரின் உதவி இயக்கநரையே மிஞ்சிவிட்டது உங்கள் கற்பனை. பாலகுமாரனுக்கு பதிலாக ரங்கு மாமா (சுஜாதா அய்யங்கார்) எழதலாம் வசனம். ரஜனி ஸ்டைலாக அணியும் முப்பரி நூலை வடிவமைக்க 'காலி'வுட்டிலிருந்து கணிப்பொறி வடிவமைப்பாளர்கள் வருகிறார்களாம். அதற்கான காப்பி ரைட் ஏவிஎம். அப்பதான் வைர நெஞ்சம் மாதிரி நெடுந்தொடரில் ரஜனிக்கு முதுகு சொறியும் ரசிக கண்மமணிகளுக்கு பொருட்களை பரிசாக அளிக்கலாம்.

தமிழ் சினிமா என்று ரஜனியிடம் மண்டியிடுவதை நிறுத்துமோ? அந்த கருடாழ்வாருக்குத்தான் வெளிச்சம்.

ரஜனி ரோபோவாக நடிக்க வேண்டாம். நடந்தால் போதும். ஏற்கனவே பலரின் ரிமோட்டில்தான் நடமாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கை தொலைந்து தனது ஸ்டைலுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். விட்டால் கடித்தவிடும் புலிாவலைப் பிடித்துக் கொண்டிருப்பவர். ரோபோவிற்கு பொருத்தமான ஆள்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஏன் இந்தக் கொலைவெறி?
:)
//

எனக்கும் ஷங்கரிடம் உதவி இயக்குனர் ஆகும் ஆசைதான். அவரை உங்களுக்கு நல்லா தெரியுமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
ச(ஷ)ங்கரின் பொழைப்பில் மண் அள்ளிப் போடுறவா எல்லார்க்கும் கும்பிபோஜம் தான்..
//
டிபிசிடி ஐயா,
கும்பி போஜமா ? அம்பி போஜமா ? எதோ ஒண்ணு, ஷங்கர் இந்த காதைக்கு சன்மானமாக தருவார் என்கிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
கலக்கல்!!
//

சிவா, ஆட்டோ வருமோன்னு எனக்குத்தான் கலக்குது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
எந்த ஊர் திண்ணையில் உட்கார்ந்து யோசித்தீர்கள்!!!
சங்கருக்கு இதன் மூலமே பொறி கிடைக்க வாய்ப்புள்ளது.
//

குமார்,

:)))

உஷ்... யாராவது போட்டு கொடுத்துடப் போறாங்க. முதலில் கதைக்கு காப்புரிமை வாங்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
கண்ணன் சங்கரின் உதவி இயக்கநரையே மிஞ்சிவிட்டது உங்கள் கற்பனை. பாலகுமாரனுக்கு பதிலாக ரங்கு மாமா (சுஜாதா அய்யங்கார்) எழதலாம் வசனம். ரஜனி ஸ்டைலாக அணியும் முப்பரி நூலை வடிவமைக்க 'காலி'வுட்டிலிருந்து கணிப்பொறி வடிவமைப்பாளர்கள் வருகிறார்களாம். அதற்கான காப்பி ரைட் ஏவிஎம். அப்பதான் வைர நெஞ்சம் மாதிரி நெடுந்தொடரில் ரஜனிக்கு முதுகு சொறியும் ரசிக கண்மமணிகளுக்கு பொருட்களை பரிசாக அளிக்கலாம். //

ஷங்கரின் ஐயர் கதைகளுக்கு பாலகுமாரன் தான் ஜொலிக்கிறார். ஜென்டில் மேன், ஜீன்ஸ் அவர்தான். அந்நியனில் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் அதிகம் இருந்ததால் சுஜாதா எழுத வேண்டியதாயிற்றாம்.
:)

//
தமிழ் சினிமா என்று ரஜனியிடம்
மண்டியிடுவதை நிறுத்துமோ? அந்த கருடாழ்வாருக்குத்தான் வெளிச்சம்.

ரஜனி ரோபோவாக நடிக்க வேண்டாம். நடந்தால் போதும். ஏற்கனவே பலரின் ரிமோட்டில்தான் நடமாடிக்கொண்டிருக்கிறார். அவருக்கான வாழ்க்கை தொலைந்து தனது ஸ்டைலுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர். விட்டால் கடித்தவிடும் புலிாவலைப் பிடித்துக் கொண்டிருப்பவர். ரோபோவிற்கு பொருத்தமான ஆள்தான்.
//

ரஜினிக்கு நடிக்கவேத் தெரியாது. உண்மையானவர், நேர்மையானவர். ஒரு ஆன்மிக வாதியைப் பார்த்து அடாத பழியை போடுகிறீர்களே ? உங்களுக்கு மன்னிப்பு உண்டா ?

:)

ஆட்டோ வந்தால் உங்க பக்கம் திருப்பி விடுகிறேன்.

na.jothi சொன்னது…

பேசாம ஒன்னு செய்யுங்க இந்த கதையை பதிவு
பண்ணி வச்சிருங்க படம் ரிலீஸ் பண்ணும் போது
கேஸ் போடறதுக்கு உதவும்

Unknown சொன்னது…

ஷங்கர்: கோவி.கண்ணன் அப்படிங்கற பேர்ல நம்மவா ஒருத்தர் வலையுலகில் பதிவு போடுறா, அவரோட கற்பனையோட நம்ம டெக்னாலஜியும் சேர்ந்தா அமெரிக்காவையே வளச்சுடலாம், யோவ் அசிஸ்டென்டு, போய் அள்ளிட்டு வாங்கையா அவரை.

து.இ: (முணு முணுத்தபடி) அப்போ ரங்கு, தாடிச்சாமிக்கெல்லாம் வேலை போச்சா??

கோ.விக:(ரஜினி இஸ்டைலில்) இதோ பார் சங்கர் இந்த காதுல பூ(ணூல்) சுத்துற வேலையெல்லாம் எங்கிட்ட நடக்காது, காலம் வலைப்பூவுல உங்க பூ பூ பூ.... பூணூலை சந்தி சிரிக்க வைக்கறது தான் இந்த கோவிக'வோட லட்சியம்.

நீ படம் எடுக்கறதுக்கு முன்னாடியே நத படத்தோட கதைய நான் காலத்துல எழுதி, அதை உலகம் புல்லா பரப்பி, உன்னோட பட வசூலை கொறச்சி, உன்ன நடுத்தெருவுல நிக்க வைக்கல என் பேர் கோவிக இல்ல. வர்ட்டா...

குசும்பன் சொன்னது…

//இருக்க வேண்டும் என்பதற்காக சைனாவில் இருந்து இரண்டு கப்பலில் மணல் வருகிறது. அடுத்ததாக சிங்க வாகனத்தில் ஏறிச் சென்று மரக் கொள்ளையர்களை அழிக்கிறார். கடைசியாக மினரல் வாட்டர் கம்பெணி காரனை கருடவாகனத்தில் சென்று நடுக்கடலுக்குள் உப்பு நீரில் அமிழ்த்தி அழிக்கிறார்.///

உங்கள அழிக்க கூட வருகிறார்.என்று ஒரு செவி வழி செய்தி:))))

Me சொன்னது…

பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!

அரை பிளேடு சொன்னது…

ஃபிளாஷ்பேக் வேண்டாமா...

ரஜினிக்கு ஒரு தம்பி. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் வர்ற புள்ளையாண்டான்..

ஒரு நாள் தம்பிக்கு விக்குது... ரஜினி நல்ல ஜலம் தேடி கொண்டார்றதுக்குள்ளாற தம்பி விக்கி விக்கியே செத்து போறாரு...

அப்புறமாதான் ரஜினி தண்ணி கொள்ளைகாரங்களுக்கு எதிரா மெகா ரோபோ அவதாரம் எடுக்கிறாரு :))

மங்களூர் சிவா சொன்னது…

//
அரை பிளேடு said...
ஃபிளாஷ்பேக் வேண்டாமா...

ரஜினிக்கு ஒரு தம்பி. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் வர்ற புள்ளையாண்டான்..

ஒரு நாள் தம்பிக்கு விக்குது... ரஜினி நல்ல ஜலம் தேடி கொண்டார்றதுக்குள்ளாற தம்பி விக்கி விக்கியே செத்து போறாரு...

அப்புறமாதான் ரஜினி தண்ணி கொள்ளைகாரங்களுக்கு எதிரா மெகா ரோபோ அவதாரம் எடுக்கிறாரு :))
//
அரை பிளேடு எப்பிடியும் ஆட்டோ வரப்போறது உறுதி உங்க வீட்டுபக்கம் திரும்பிட போகுது ஜாக்கிரதை இந்த கொலை வெறி ஐடியாவுக்காக!!!

:-))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
உங்கள அழிக்க கூட வருகிறார்.என்று ஒரு செவி வழி செய்தி:))))
//

எதாவது திட்டம் வச்சிருந்தால் சொல்லுங்கய்யா. பதிவை தூக்கிடுறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//valar said...
பேசாம ஒன்னு செய்யுங்க இந்த கதையை பதிவு
பண்ணி வச்சிருங்க படம் ரிலீஸ் பண்ணும் போது
கேஸ் போடறதுக்கு உதவும்
//

ஏற்கனவே ஒருத்தர் தசவதாரம் கதை என்னுதுன்னு கொடிபிடிச்சு போராடி ஓய்ந்துவிட்டார். சினிமா காரங்களைப் பற்றி தெரியாதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இசை said...
ஷங்கர்: கோவி.கண்ணன் அப்படிங்கற பேர்ல நம்மவா ஒருத்தர் வலையுலகில் பதிவு போடுறா, அவரோட கற்பனையோட நம்ம டெக்னாலஜியும் சேர்ந்தா அமெரிக்காவையே வளச்சுடலாம், யோவ் அசிஸ்டென்டு, போய் அள்ளிட்டு வாங்கையா அவரை.

து.இ: (முணு முணுத்தபடி) அப்போ ரங்கு, தாடிச்சாமிக்கெல்லாம் வேலை போச்சா??

கோ.விக:(ரஜினி இஸ்டைலில்) இதோ பார் சங்கர் இந்த காதுல பூ(ணூல்) சுத்துற வேலையெல்லாம் எங்கிட்ட நடக்காது, காலம் வலைப்பூவுல உங்க பூ பூ பூ.... பூணூலை சந்தி சிரிக்க வைக்கறது தான் இந்த கோவிக'வோட லட்சியம்.

நீ படம் எடுக்கறதுக்கு முன்னாடியே நத படத்தோட கதைய நான் காலத்துல எழுதி, அதை உலகம் புல்லா பரப்பி, உன்னோட பட வசூலை கொறச்சி, உன்ன நடுத்தெருவுல நிக்க வைக்கல என் பேர் கோவிக இல்ல. வர்ட்டா...
//

என் மேல ஏன் கொலை வெறி ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு!

1:18 AM, January 08, 2008
//

வாங்கோ, ஒரு கப் ப்ரூ காப்பி சாபிட்டு போங்கோ !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...
ஃபிளாஷ்பேக் வேண்டாமா...

ரஜினிக்கு ஒரு தம்பி. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் வர்ற புள்ளையாண்டான்..

ஒரு நாள் தம்பிக்கு விக்குது... ரஜினி நல்ல ஜலம் தேடி கொண்டார்றதுக்குள்ளாற தம்பி விக்கி விக்கியே செத்து போறாரு...

அப்புறமாதான் ரஜினி தண்ணி கொள்ளைகாரங்களுக்கு எதிரா மெகா ரோபோ அவதாரம் எடுக்கிறாரு :))
//

சிவாஜி சீன் லீக் ஆகிவிட்டது என்று சொல்லி ரீ சூட் பண்ண 5 கோடி ஆச்சாம். நான் முழுக்கதையும் சொல்லிவிட்டால் பாவம் தயாரிப்பாளர்.
:)

அரை பிளேடு சார்,
உங்களுக்கு கதை தெரிஞ்சா முழுக்கதையும் வெளியில் சொல்லாதிங்க. திரை உலகை வாழவைப்போம் !

PRABHU RAJADURAI சொன்னது…

ஆரம்பிச்சிட்டீங்களா!

இப்பத்தான் பில்டப் பில்டப்னு வலைப்பதிவுல பயித்தியம் பிடிச்சு அலைச்சு, அது தெளியல...

மறுபடியுமா?

ஆமா, இப்படி பில்டப் கொடுக்கறத்துக்கு சன்மானம் ஏதும் உண்டா:-))

genius சொன்னது…

நண்பரே, உங்கள் இணையத் தளத்தைப் படித்தேன். கொஞ்ச நேரம் என்னை மறந்து சுவைக்க முடிந்தது. வாழ்த்துகள். நீங்கள் இதைப் போல இன்னும் ஏராளமாக எழுத வேண்டும்.

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்
செல்பேசி - 97107 20106 (சென்னை)

கோவி.கண்ணன் சொன்னது…

//genius said...
நண்பரே, உங்கள் இணையத் தளத்தைப் படித்தேன். கொஞ்ச நேரம் என்னை மறந்து சுவைக்க முடிந்தது. வாழ்த்துகள். நீங்கள் இதைப் போல இன்னும் ஏராளமாக எழுத வேண்டும்.

அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்
செல்பேசி - 97107 *****(சென்னை)
//

பாராட்டுக்கு நன்றி ஐயா,

மிகவும் மகிழ்ழ்வாக இருக்கிறது

இது போன்ற பொது ஊடகங்களில் தொலைபேசி எண்ணை பகிர்ந்து கொள்வதில் கவனம் கொள்ளுங்கள்.

தனிப்பட்ட தகவல் தரவேண்டுமென்றால் பதிவுலகில் 'தகவல்கள் வெளி இட அல்ல' என்று சொல்லுவது நடைமுறை.

ப்ளாக்கர் வழியாக பின்னூட்டமிட்டிருப்பதால் உங்கள் பின்னூட்டத்தை அழிக்க வேண்டும் என்றால் அதை நீங்களே செய்து கொள்ள முடியும் எனவே அழிப்பதா வேண்டாமா என்பதை உங்கள் விருப்பத்திற்கு விடுகிறேன்.

மீண்டும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபு ராஜதுரை said...
ஆரம்பிச்சிட்டீங்களா!

இப்பத்தான் பில்டப் பில்டப்னு வலைப்பதிவுல பயித்தியம் பிடிச்சு அலைச்சு, அது தெளியல...

மறுபடியுமா?

ஆமா, இப்படி பில்டப் கொடுக்கறத்துக்கு சன்மானம் ஏதும் உண்டா:-))
//

பிரபு ராஜதுரை அய்யா,

இதற்கெல்லாம் வெளம்பரம் கொடுப்பதற்காக நாம் இழக்கும் நேரமும் தன்மானமும் தான் கிடைக்கும்(?) சன்மானம்.

பதிவு நண்பர்களை சிரிக்க வைக்க முடிகிறதே. :)

RATHNESH சொன்னது…

கதை ஷங்கர் பட ரேஞ்சுக்குச் சரியாத் தான் பொருந்தி வருது.

உங்களுக்காகத் தான் உங்க அருமை நண்பர், இன்னிக்கு காப்பிரைட் சம்பந்தமான பதிவு போட்டிருக்காரா?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கதை ஷங்கர் பட ரேஞ்சுக்குச் சரியாத் தான் பொருந்தி வருது.

உங்களுக்காகத் தான் உங்க அருமை நண்பர், இன்னிக்கு காப்பிரைட் சம்பந்தமான பதிவு போட்டிருக்காரா?
//

நண்பரே மிக்க நன்றி,

'சனிக்கிழமை' இன்னிக்கு நிறைய பதிவுகளை படிக்க முடிந்தது.

நம்ம கதையை படம் எடுத்தால் மகிழ்ச்சிதான்("ஆசை தோசை அப்பளம் வடை") . சென்ற ஆண்டு http://kaalangkal.blogspot.com (மற்றொரு வலைத்தளத்தி)ல் தசவாதாரம் பற்றி நான்கு நகைச்சுவை தொடர் பதிவுகள் எழுதி இருந்தேன். இந்த இரண்டில் எனக்கு பிடித்தது அதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
உங்களுக்காகத் தான் உங்க அருமை நண்பர், //

உங்களுக்காகத் தான் 'நம்' அருமை நண்பர் என்று இருக்க வேண்டும்.

:)

கிரி சொன்னது…

இப்பவே கண்ண கட்டுதே :-)))

இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதற்குள்ள முடிவா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல்காரன் சொன்னது…

ஐயோ.. ஐயோ யாராவது காப்பாத்துங்களேன்..

எல்லாரும் தசாவதாரக் கும்மில இருக்கறப்போ ஒரு கும்பல் பமட்டும் தனியா கெளம்பி, ரோபோ, குசேலன், நான் கடவுள்லனு கிளம்பிருக்காஙக..

எல்லாரும் ஓடுங்க..

Veera சொன்னது…

பின்குறிப்பை மிகவும் ரசித்தேன்! :)

புருனோ Bruno சொன்னது…

//பாலாற்று மணல் திருடனை அழிக்க பாலாறு போன்ற செட் போடப் படுகிறது//

இது தசாவதார கதை ஆச்சே !!!

நீங்கள் கூட நான் எழுதியதை கமல் ”காப்பி அடித்தார்” என்று வழக்கு தொடரலாம் :) :) :) :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்