பின்பற்றுபவர்கள்

3 ஜனவரி, 2008

புனித பயணமா ? இறுதி பயணமா ?

சீசன் கோவில்களுக்கும், மெக்காவிற்கும் புனித பயணம் செல்பவர்களின் சாவு எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இந்தாண்டு 227 இந்திய இஸ்லாமியர்கள் மெக்காவில் இறந்ததாக செய்தி வந்திருக்கிறது. ஐயப்பன் கோவிலில் 100க் கணக்கானோர் மாரடைப்பால், மூச்சு திணறலால் இறந்திருக்கிறார்கள்

முன்பெல்லாம் ஏன் இவ்வாறு நடப்பதில்லை ? ஆண்டவனுக்கே கோபம் வந்து அடியார்களை தண்டித்துவிட்டாரா ? அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லிங்க. நெருப்பில் கை வைத்தால் சுடும், இது பொது விதி, நெருப்புக்கு தன்னை தொடவருவது குழந்தையின் விரல் என்றெல்லாம் தெரியாது, சுட்டு பொசுக்கிவிடும். இது இயற்பியல் நியதி. அவதாரசாமியார்களுக்கும் இதெல்லாம் பொருந்தும், எந்த சாமியாரையாவது நெருப்புக் குளிக்கச்ச் சொல்லுங்கள். செய்ய மாட்டார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு மக்கள் நெருக்கம் அதிகம் என்பது ஒருபுறம் இருந்தாலும், சென்று பார்த்துதான் வருவோமே என்ற ஆவல் புதியவர்களுக்கு ஏற்படுவதே இத்தகைய கட்டுக்கு அடங்காத கூட்டத்திற்கான காரணம். மக்கள் கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தக் கூடியது. ஆனால் மக்கள் வெள்ளம் ? அதில் சிக்கினால் அருகில் இருக்கும் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

மெக்காவிற்கு செல்வது இஸ்லாமியரின் வாழ்நாள் கடமை என்கிறார்கள். அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. புனித பயணம் அதை ஹஜ் சீசனில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா ? மற்ற நாட்களில் சென்றால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாது என்றே நினைக்கிறேன். மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இஸ்லாமியர்கள் நண்பர்கள் தெளிவு படுத்துங்கள். ஆனால் நம் ஊர் ஐயப்பன் கோவிலை சில நாட்கள் தவிர்த்து ஆண்டு முழுவதும் திறந்து வைத்துள்ளார்கள், வைகாசி மாதத்திலும் பக்தர்கள் இருமுடி எடுத்துச் சென்று வருவது உண்டு, அப்போதெல்லாம் நெருக்கத்தினால் மூச்சு திணறி பக்தர்கள் இறக்கிறார்கள் என்ற செய்திகள் வருவதில்லை.

கூட்டத்தோடு கூட்டமாக போனால் தான் பக்தியா ? வீட்டுக்குள் சாமிகள் இருக்கிறது அதையும் தாண்டி கோவிலுக்குச் செல்வதில் தான் நிம்மதி என்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும், அப்பறம் குறிப்பிட்ட நாட்களில் சென்றால் தான் விசேசம் என்கிறார்கள். மற்ற நாட்களில் அந்த சாமிக்கு சக்தி இருப்பதில்லையா ?எல்லோரும் ஒரே நாளில் போய் குவிந்தால் தான் கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?

கும்பகோணம் மகா மக விபத்து, திருநள்ளாறு நெரிசல் என்று ஆண்டுக்கு ஆண்டு எதாவது விபத்துக்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான பழியை யார் மீது போடுவது ? பக்தியாளர்களால் நிச்சயம் கடவுள் மேல் போட முடியாது. அதற்கு யார் தான் பொறுப்பு ? தனக்கு ஒரு குடும்பம் இருப்பதையும், அதில் தன் பொறுப்பு இருப்பதையும் உணராமல் சமாளித்துவிடலாம் என்ற அசட்டு தைரியத்தில் செல்லும் பக்தர்கள் தான் பொறுப்பு. இது போன்ற கூட்ட நெரிசல்களுக்கு பெண்களையும், குழந்தைகளையும், ஐம்பது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அனுமதிக்கவே கூடாது. வெளியேற திணறி, ஆக்சிஜன் பற்றாக் குறையால் மூச்சு திணறி, கூட்ட நெரிசலில் அதிகம் மிதிபட்டு இறப்பவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகவே இருக்கிறார்கள்.

உங்கள் நண்பர்கள் புனித பயணம் சென்றால் அவர்களிடம் கூட்ட நாட்களில் செல்ல வேண்டாம் என்று சொல்லுங்கள். புனித பயணத்தில் இறப்பது பெருமை அல்ல. வெளியில் வேண்டுமானல் 'நல்ல சாவு' என்று ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளலாம். அவ்வாறு சொல்வதால் ஒரு பயணும் இல்லை. அதில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு பெரும் துன்பம். இதற்கு காரணம் ஆண்டவனோ, ஆள்பவனோ இல்லை. கட்டுக்கு அடங்காத நெரிசல் அதனால் பிதுங்கி மிதிபடுதல் என்னும் இயற்பியல் விதியே காரணம். விசேச நாட்களில் புனித பயணம் மேற்கொண்டு புறப்படும் ஒருவர் தான் செல்லும் புனித பயணம் தனக்கு இறுதி பயணம் என்று செல்லும் போது அவருக்கு தெரியாது. விஷேச நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் புனித தலங்களுக்குச் சென்றால் புனித பயணம் செய்து வீடு வந்து சேரமுடியும். அப்படியும் செல்ல வேண்டுமென்றால் காப்பீடு செய்துவிட்டுச் செல்லலாம்

18 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
மெக்காவிற்கு செல்வது இஸ்லாமியரின் வாழ்நாள் கடமை என்கிறார்கள். அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. புனித பயணம் அதை ஹஜ் சீசனில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா ?
//
ஒரு வேளை, ஹஜ் சீசனில் செல்வதற்கு மட்டுமே அரசு மானியம் தருமோ?...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு வேளை, ஹஜ் சீசனில் செல்வதற்கு மட்டுமே அரசு மானியம் தருமோ?...//

அது தெரியாது, அரசாங்கம்இறந்து போனால் நிச்சயம்
இழப்பீடு தராது. முன்பே காப்பீடு செய்திருந்தால் கிடைக்கும்.

புரட்சி தமிழன் சொன்னது…

நம்ம மக்களுக்கு செத்தாலும் சாமி கொயிலில் செத்தால் தான் பெருமை. செத்தவர்கள் குடும்பத்தை அய்யப்பனும் அல்லாவும் காப்பாற்றாமலா போய்விடுவார்கள். நீங்க நாத்தீகவாதி அதனால்தான் இப்படி பதிவெழுதுகிறீர்கள்.

கருப்பன் (A) Sundar சொன்னது…

ஒரு வேளை இனிமேல் இந்த புனித தளங்களுக்கு செல்லும் மக்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதற்க்கு மறுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Unknown சொன்னது…

//இந்தாண்டு 227 இந்திய இஸ்லாமியர்கள் மெக்காவில் இறந்ததாக செய்தி வந்திருக்கிறது//

ஜிகே. இந்த செய்தியை கொஞ்சம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டில் மெக்காவில் பெரிய விபத்துக்கள் ஏதும் நடைபெறவில்லையென்றே நினைக்கிறென்.

//அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.//

கூட்டம் அதிகரிப்பதென்னவோ உண்மைதான்.
மானியத்தில் செல்பவர்களில் அதிகரித்துள்ள எண்ணிக்கையை விடவும் தனியார் மூலமாக செல்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.

//புனித பயணம் அதை ஹஜ் சீசனில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா ? மற்ற நாட்களில் சென்றால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பாடாது என்றே நினைக்கிறேன். மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை.//
ஹஜ் கடைமையை நிறைவேற்றுவதற்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் மக்காவில் சென்று தங்கி அதற்குரிய கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.

மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறது. குறைந்த கிரியைகள் மட்டும் செய்வர். அதை உம்ரா எனச் சொல்வார்கள். அது ஹஜ் ஆகாது.

அபு முஜாஹித் சொன்னது…

கோவி கண்ணன் சார் ,

இஸ்லாமிய மாதம் 'துல்ஹஜ்ஜில்' உலக முஸ்லிம்கள் எல்லாம் மக்காவில் ஒன்று கூடி நிறைவேற்றப்படும் ஒரு கிரியையே 'ஹஜ்' என்பது. மற்ற மாதங்களிலும் மக்காவில் இதற்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் 'உம்ரா'. மேலும் ஹஜ் தான் இஸ்லாத்தில் வசதி படைத்த முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை. அதானலேயே துல்ஹஜ் மாதத்தில் உலக முஸ்லிம்கள் இஸ்லாத்தின் மார்பிடம் அல்லது உலக முஸ்லிம்களின் கேந்திரம் எனப்படும் மக்காவிற்கு வருகின்றனர். இந்த உலகளாவிய மாநாட்டில் முஸ்லிம்கள் நிறைவேற்றும் வணக்கங்கள் அனைத்தும் இஸ்லாத்தின் தந்தை என்றழைக்கப்படும் இப்ராஹிமின்(Abraham)(இறை சாந்தி நிலவட்டும்) தியாகத்தையும் வழிமுறையும் நினைவு கூறுவதாக அமைந்திருக்கும்.பல நாடு பல மொழி பல நிறம் கொண்டவராயினும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நாம் அனைவரும் அந்த ஒரு இறைவனின் அடிமைகள் என்ற ஆன்மீக புத்துணர்ச்சியுடன் முஸ்லிம்கள் தங்கள் தாயகம் திரும்புவார்கள். நீங்கள் கூறுவது போல் விபத்துகள் நடப்பதும் வருந்தத்தக்கதே. அரசாங்கம் எவ்வளவுதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும் மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தருமி சொன்னது…

நீங்க நாத்தீகவாதி அதனால்தான் இப்படி பதிவெழுதுகிறீர்கள்.//

:)

நல்லடியார் சொன்னது…

கோவியார்,

இரு வருடங்களுக்கு முன் தமிழக அரசின் ஏதோ இலவசம் வாங்க ஓடிப்போய் இலவசமாக நெரிசலில் உயிரை விட்டார்கள். இதுக்குக் காரணம் (தமிழ்நாட்டை) ஆண்டவன்!

கொலம்பியா விண்கலம் விஞ்ஞானிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் மீறி நொறுங்கியது.இதுக்குக் காரணம் அறிவியல்!

மனிதத் தவறுகளுக்கு ஆண்டவன்மீது பழி போடுவதில் நம்மைவிட நன்றி கெட்டவர்கள் வேறு யாருமில்லை!

//அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.//

இதுபற்றி வெட்கமில்லாமல் ஒரு பதிவு சென்ற வருடம் போட்டிருந்தேன்.

படித்தீர்களா?

nagoreismail சொன்னது…

முஸ்லீம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் என்பதாகும். ஹஜ் என்றால் 'ஒரு இடத்திற்கு செல்வது' என்று பொருள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகின் மையப் பகுதியும் இஸ்லாமிய ஆன்மீக மையமுமான 'கஅபா ' என்ற இறையில்லத்தை நோக்கி செல்வதை இது குறிக்கும். இந்த கடமையை துல்ஹஜ் என்ற மாதத்தில் தான் செய்ய வேண்டும். மற்ற மாதங்களில் செய்ய முடியும், இதற்கு 'உம்ரா' என்று பெயர். இது கடமை ஆகாது.

"கூட்டத்தோடு கூட்டமாக போனால் தான் பக்தியா ? வீட்டுக்குள் சாமிகள் இருக்கிறது அதையும் தாண்டி கோவிலுக்குச் செல்வதில் தான் நிம்மதி என்கிறார்கள். இருந்துவிட்டு போகட்டும், அப்பறம் குறிப்பிட்ட நாட்களில் சென்றால் தான் விசேசம் என்கிறார்கள். மற்ற நாட்களில் அந்த சாமிக்கு சக்தி இருப்பதில்லையா ?எல்லோரும் ஒரே நாளில் போய் குவிந்தால் தான் கடவுள் ஏற்றுக் கொள்வாரா ?"

- இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் கடமைகள் அனைத்துமே சரியாக நிர்ணயிக்கப்பட்டு இதை இந்த நேரத்தில் இப்படி தான் செய்ய வேண்டும் என்று தெளிவாக இருக்கும். உதாரணத்திற்கு நோன்பு பிடிப்பதை பார்த்தீர்களானால் 'ரமலான்' மாதத்தில் மட்டும் தான் பிடிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல குறிப்பிட்ட நேரத்தில் சரியாக நோன்பை முறித்து விடவும் வேண்டும். நோன்பு திறக்கும் நேரத்தில் பள்ளி வாசலில் ஒரு பரபரப்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம், அதாவது 'இந்த கூட்டம் 13 மணி நேரம் தான் நோன்பில் இருந்தது, எங்கள் கூட்டம் 14 மணி நேரம் நோன்பில் இருந்தது எங்களது கூட்டம் தான் சிறந்த கூட்டம்' என்பதற்கு எல்லாம் இடமே இல்லை. இது போன்று இஸ்லாத்தில் இருக்கும் சில அடிப்படையான காரணங்களை புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழுந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஹஜ் கடமையை இந்த நாளில் தான் நிறைவேற்ற வேண்டும், இந்த இடத்தில் தான் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதற்கு அழுத்தமான காரணங்கள் உள்ளன. எண்ணிலடங்கா சமுதாய நன்மைகளும் உள்ளது. இது ஏதோ சினமுற்று இருக்கும் கடவுளை குஷிப் படுத்த என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.

தவிர, உங்களுக்கு சக மனிதர்கள் இறந்து போகிறார்களே என்ற உயர்ந்த நோக்கமும் உண்மையான வருத்தமும் இருக்கும் பட்சத்தில், உங்களுக்கான பதில், கீழே இருக்கும் சுட்டியில் தரப்பட்டுள்ளது. நன்றி - நாகூர் இஸ்மாயில்

http://www.hajinformation.com/main/y1464.htm

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் அளித்த அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் நன்றி.

இந்த இடுகை, கூட்ட நெரிசலில் உயிர்துறந்தவர்கள் பற்றிய எண்ணத்தில் எழுதியது. இதில் மதநம்பிக்கை குறித்து எதுவும் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். கூட்ட நெரிசலுக்கு காரணம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் கூட்டமே. இது திருப்பதி மற்றும் சபரிமலையிலும் நடக்கிறது.

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் வசதி வாய்ப்பு பெற்று காஃபா வில் கூடுவதாக இருந்தால் அந்த இடம் தாங்குமா ?

SurveySan சொன்னது…

நல்ல கேள்விகள் :)

சரவணா பவன்ல மதிய உணவு சாப்பிட போனா, பயங்கர கூட்டம் இருக்குமேங்கறதுக்காக, 10 மணிக்கே போய் சாப்பிட முடியாதே.

அத மாதிரி, செய்ய வேண்டிய வேலைய செய்ய வேண்டிய நேரத்துல செய்ய வேண்டிய மாதிரி செஞ்சாதான் திருப்தி கெடைக்கும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
நல்ல கேள்விகள் :)

சரவணா பவன்ல மதிய உணவு சாப்பிட போனா, பயங்கர கூட்டம் இருக்குமேங்கறதுக்காக, 10 மணிக்கே போய் சாப்பிட முடியாதே.

அத மாதிரி, செய்ய வேண்டிய வேலைய செய்ய வேண்டிய நேரத்துல செய்ய வேண்டிய மாதிரி செஞ்சாதான் திருப்தி கெடைக்கும் :)
///

சரவண பவன் சரியான உதாரணமா ?

கூட்டம் அதிகமாக இருந்தால் எவ்வளவு நேரம் காத்திருப்பீர்கள் ? இந்த கூட்டத்தில் வெயிட் பண்ணி சாப்பிடத்தான் வேண்டுமா ? என்று எண்ணி வேறு ஓட்டலுக்கு சென்றதே இல்லையா ?

ரிசர்வேசன் சிஸ்டம் எல்லாம் தேவை இன்றியா ஏற்பட்டு இருக்கிறது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//புரட்சி தமிழன் said...
நம்ம மக்களுக்கு செத்தாலும் சாமி கொயிலில் செத்தால் தான் பெருமை. செத்தவர்கள் குடும்பத்தை அய்யப்பனும் அல்லாவும் காப்பாற்றாமலா போய்விடுவார்கள். நீங்க நாத்தீகவாதி அதனால்தான் இப்படி பதிவெழுதுகிறீர்கள்.
//

செத்தவங்க குடும்பத்தை மட்டுமல்ல நாத்திகனையும் கடவுள் தான் காப்பாற்றுகிறார் என்று ஒரு போடு போட்டிருந்தால் ஜூப்பராக இருந்திருக்கும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கருப்பன்/Karuppan said...
ஒரு வேளை இனிமேல் இந்த புனித தளங்களுக்கு செல்லும் மக்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதற்க்கு மறுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
//

அது ஆண்டுக்கு ஆண்டு நிகழும் இறப்பின் எண்ணிக்கையைப் பொறுத்து இருக்கிறது. நிலை தொடர்ந்தால் காப்பீட்டு நிறுவனங்கள் 'நோ' சொல்லிவிடும்

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//இந்தாண்டு 227 இந்திய இஸ்லாமியர்கள் மெக்காவில் இறந்ததாக செய்தி வந்திருக்கிறது//

ஜிகே. இந்த செய்தியை கொஞ்சம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆண்டில் மெக்காவில் பெரிய விபத்துக்கள் ஏதும் நடைபெறவில்லையென்றே நினைக்கிறென்.

//அரசாங்க மானியம் கிடைப்பதனால் இந்தியாவில் இருந்து செல்லும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது.//

கூட்டம் அதிகரிப்பதென்னவோ உண்மைதான்.
மானியத்தில் செல்பவர்களில் அதிகரித்துள்ள எண்ணிக்கையை விடவும் தனியார் மூலமாக செல்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.

//புனித பயணம் அதை ஹஜ் சீசனில் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமா ? மற்ற நாட்களில் சென்றால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பாடாது என்றே நினைக்கிறேன். மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறதா என்று தெரியவில்லை.//
ஹஜ் கடைமையை நிறைவேற்றுவதற்கு வருடத்தின் குறிப்பிட்ட நாட்களில் மக்காவில் சென்று தங்கி அதற்குரிய கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.

மற்ற நாட்களில் அங்கு செல்ல அனுமதி இருக்கிறது. குறைந்த கிரியைகள் மட்டும் செய்வர். அதை உம்ரா எனச் சொல்வார்கள். அது ஹஜ் ஆகாது.
//

ஹஜ் பயணம் பற்றிய தகவல்களுக்கு நன்றி சுல்தான் ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//அபு முஜாஹித் said...
கோவி கண்ணன் சார் ,

இஸ்லாமிய மாதம் 'துல்ஹஜ்ஜில்' உலக முஸ்லிம்கள் எல்லாம் மக்காவில் ஒன்று கூடி நிறைவேற்றப்படும் ஒரு கிரியையே 'ஹஜ்' என்பது. மற்ற மாதங்களிலும் மக்காவில் இதற்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் 'உம்ரா'.
//

அபு முஜாஹித் சார்,
தகவல்களுக்கு நன்றி

//மேலும் ஹஜ் தான் இஸ்லாத்தில் வசதி படைத்த முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமை. //

ஏழை பணக்காரன் அன்றி நேர்மையாக இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஹஜ் பயண ஆசை / ஆவல் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுபற்றி வெட்கமில்லாமல் ஒரு பதிவு சென்ற வருடம் போட்டிருந்தேன்.

படித்தீர்களா?//

நல்லடியார்,
சுட்டியை படித்தேன். உங்கள் ஆதங்கம் நியாமானது.

சவூதி தமிழன் சொன்னது…

கோவி. கண்ணன்,

உங்களுக்குப் பதில் எழுத முனைந்து ஒரு பதிவாகவே மாறிவிட்டது. என்னையும் பதிவெழுத வைத்ததற்கு நன்றி.

http://iyalbu.blogspot.com/2008/01/blog-post.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்