பின்பற்றுபவர்கள்

23 அக்டோபர், 2007

இந்தியர்களுக்கு இனவெறி ?

இந்தியர்களுக்கு இனவெறி என்று வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள். அதுவும் ஒரு கிரிகெட் ஆடுகளத்தில் நடந்த சிறு நிகழ்வை மையப்படுத்தி இந்தியர்களுக்கு இனச்சாயம் பூச அதனை அனைத்துலக (சர்வதேச) அரங்கமாக மாற்றி இந்தியர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

வரலாற்று வழியாக பார்த்தாலும், அதாவது இஸ்லாமிய படையடுப்பு, போர்த்துகீசிய, பிரஞ்சு மற்றும் இங்கிலாந்து வெள்ளையர் இன்னும் ஏனைய வந்தேறிகள் இந்திய மண்ணில் நுழைந்தபோது இந்தியர்களுக்கு இனவெறி என்பது இருந்திருந்தால் புட்டத்தில் சூடு போட்டு வந்த வழியாக வெளியேற துறத்தி இருப்பர். இந்தியன் என்றால் அவன் சாதியால் /மதத்தால் தனக்குள்ளே பிளவு பட்டவனேயன்றி உலக அளவில் தான் இந்தியன் என்பதை அடையாளப்படுத்தி எந்த நாட்டையும் அடிமை படுத்தி வைத்திருந்ததற்கான வரலாறுகள் என எதுவும் இதுவரை இருந்ததே இல்லை.

தங்களை உலக உத்தமர்கள் என்று காட்டிக் கொள்ளும் வெள்ளையர்கள் கோலோச்சும் நாட்டில் தான் நிறத்தினால் பிற இனங்களை பிரித்து பார்த்து உயர்வு தாழ்வு பேசும் நிலை இன்றும் தொடரவே செய்கிறது. ஜப்பானியர்களையும், சீனர்களையும் 'மஞ்சள் பிசாசுகள்' என்றே வெள்ளையர் அழைப்பார்கள். 'இந்தியன் இங்க்' என்று பேனா மையுக்கும் இந்தியர்களின் கருப்பு நிறத்தை குறிப்பிட்டு கேவலப்படுத்தும் உத்தியெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கே உரியது. இவர்களைப் பார்த்தே சீனர்கள் கூட இந்தியரின் உழைப்பை கேள்விக்குறி ஆக்க முடியாது என்று உணர்ந்தே இந்தியர்களை 'கருப்பு' என்று சொல்லித் தூற்றுவது ஆசிய நாடுகளில் நடக்கும் கேவலக் கூத்துகள். சிறிய நாடான இலங்கையில் இருக்கும் சிங்கள இனவெறிக்கு இந்தியன் விழித்து இருந்தால் என்றோ அங்கு அமைதி நிலையும், நீதியும் திரும்பி இருக்கும். இந்தியர் என்பதால் பெருமை அடைகிறேன் என்று சுதந்திர நாள் கொடியேற்றத்திற்கு பிறகு தூதரக (எம்பஸி) ஆட்களும் அன்றே மறந்து போய்விடுகிறார்கள்

இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலியாவில் ஆடும் போதெல்லாம் இனத்தைச் சொல்லி வசையாடும் ஆஸ்திரேலிய வெள்ளையர் நிறவெறி ரசிகர்களை வைத்துக் ஆஸ்திரேலிய அணி செய்வது சாத்தான் வேதம் ஓதும் கதையாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஆசியர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்கள் எப்போதும் இருப்பவை. அண்மையில் இங்கிலாந்தில் ஷில்பா ஷெட்டி இந்தியர் என்பதால் இனவெறியால் கேவலப்படுத்தி அதற்காக சம்பந்தப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டதையெல்லாம் உலகமே பார்த்து கண்டனம் தெரிவித்தது.

இந்தியர்களுக்கு இனவெறி இருந்தால் எந்த ஒரு இந்தியனும், வெளிநாட்டில் வாழும் எந்த இந்தியனும், அமெரிக்காவைப் பார், 'பாலும் தேனும் நயக்கராவில் வழிகிறது' என்று பெருமை பேசி இந்தியா ஒரு தரித்திர நாடு என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்க மாட்டான். ஆனால் நிலமை அப்படியா ? ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் குடியேறும் இந்தியர்கள் அந்த நாடுகெளெல்லாம் சொர்கலோகம் போல வர்ணித்து , இந்தியா எதோ நரகம் போல வெளிப்படையாகவே பெருமை பேசி திரி(க்)கின்றனர். இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்குமே வெளிநாடுகளை தங்கள் கனவு தேசமாக நினைத்து பிறந்த நாட்டை இழிவாகவே கருதுகின்றனர். எல்லா நாடுகளிலுமே மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது, வெளிநாட்டில் குடியேறி அங்கேயே தலைமுறைகளாக வாழும் சீனர்கள் தங்கள் தாய்நாடான சீன நாட்டை விட்டுக் கொடுத்து பேசி பார்த்தே இல்லை. ஏன்... மியன்மர் நாட்டினர்கள் கூட தங்கள் நாடு இயற்கை வளம் செறிந்தநாடு என்று போற்றுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் கூட தங்கள் நாட்டில் இந்தியர், மற்றும் பலவெளிநாட்டினர் இடங்களை வாங்கிப் போட்டதை சூறையாடினர். இந்தியர்களுக்கு இனவெறி இருந்திருந்தால் இந்தியாவின் தலையான ஜம்முவை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் தாரை வார்த்திருக்க மாட்டோம். வெளிநாட்டிற்கு செல்லாத எந்த இந்தியருக்கும் இனவெறி என்ற சொல்லின் பொருள் தவிர்த்து நேரடி அனுபவம் கிடையாது.

இந்தியர்களுக்கு இனவெறி என்ற உணர்வு இருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். ஆனால் அது பிற இனமக்களைக் கெடுத்த வாழ்வாகவே இருக்கும். அதுபோல் நடந்ததே இல்லை. இந்தியர்களுக்கு இருப்பதெல்லாம் சாதிவெறி மட்டுமே, அதுவும் உயர்வு / தாழ்வு என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து வைத்திருப்பதால் மட்டுமே. வெளி உலகை பார்த்து இனவெறி வேண்டாம் ஆனால் கொஞ்சமாவது இந்தியர்களுக்கு இந்தியன் அதற்காக பெருமை படுகிறேன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.







அன்புடன்,

கோவி.கண்ணன்


தொடர்புடைய சுட்டிகள் !
இதுக்குப் பேரு இனவெறியா? - இலவசகொத்தனார்
விளங்கா மண்டையனால் இந்திய ரசிகர்கள் மேல் நடவடிக்கையா...!! - இரத்தம் வர வர அறுத்தவர்

25 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

கோவி, உங்களை சுத்தி இருக்கிற மக்களை மட்டும் வெச்சி சொல்லாதீங்க. சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.சிங்கப்பூர், மலேசியா எல்லாம் தமிழ்நாடு மாதிரிதான். வேற நாட்டுக்கு வந்து பார்த்துட்டு சொல்லுங்க. நம்ம ஆளுங்களுக்கு நெறைய இருக்குங்க. இந்தியர்கள் ஒன்னும் பெரிய காந்தியவாதிகள் இல்லை.

Subbiah Veerappan சொன்னது…

///இந்தியர்களுக்கு இனவெறி என்ற உணர்வு இருந்தால் இந்தியா என்றோ முன்னேறி இருக்கும். ஆனால் அது பிற இனமக்களைக் கெடுத்த வாழ்வாகவே இருக்கும். அதுபோல் நடந்ததே இல்லை. இந்தியர்களுக்கு இருப்பதெல்லாம் சாதிவெறி மட்டுமே, அதுவும் உயர்வு / தாழ்வு என்று பிறப்பின் அடிப்படையில் பேதம் பிரித்து வைத்திருப்பதால் மட்டுமே. வெளி உலகை பார்த்து இனவெறி வேண்டாம் ஆனால் கொஞ்சமாவது இந்தியர்களுக்கு இந்தியன் அதற்காக பெருமை படுகிறேன் என்ற உணர்வு இருக்க வேண்டும்.///
நியாயமான கோரிக்கைதான்!
ஏதோ மைதானத்தில் பத்து இளைஞர்கள் செய்த கோளாருக்கெல்லேம் அர்த்தம் கண்டுபிடித்தால் - அதை என்ன வென்பது?

பேதமை அது!

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல, தேவையான பதிவு...
இதைப் பற்றிப் பேச ஆஸ்திரேலியர்களுக்கு எந்த அருகதையும் இல்லை..

TBCD சொன்னது…

இளா..நீங்க தான் சொல்லுங்களேன்..எப்படி நாமெல்லாம் இனவெறியர்கள் ஆனோம்..என்று...
உங்கள் கூற்றிலே உன்மை இருக்கலாம்..
புலம் பெயர்ந்த இந்தியர்களிடையே.சகவாச தோசமாக வந்திருக்கலாம்...

ILA (a) இளா சொன்னது…

தமிழ்நாடுக்குள் இருக்கும் போது சாதி பார்ப்போம். வேற மாநிலம் போனதும் மாநிலம் பார்ப்போம். வேற நாடு போனா நம்ம மக்களை வேறு படூத்தி பார்ப்போம். இங்கிலாந்து பத்தின ஒரு கருத்து பொதுவா இருக்கும். அவுங்களுக்கு தன் நாட்டுமேல ரொம்ப கர்வமா இருப்பாங்க. அதனால அடுத்த நாட்டுக்காரங்களைவிட தான் தான் உயர்ந்தவன்னு நினைப்பாங்க. பீட்டர் ரஸ்ஸல்ஸ் பாருங்க விவரம் புரியும். என்ன ஒரு வித்தியாசம் நமக்கு மத்த நாட்டுக்காரங்களை(தமிழ்) விட இனப் பற்றும் கம்மி, வெறியும் கம்மி. பெரிய டாபிக் , குரங்கு சேஷ்டைய வெச்சு மட்டும் எடை போட்டுட முடியாதுங்க.

ILA (a) இளா சொன்னது…

//இளா..நீங்க தான் சொல்லுங்களேன்..எப்படி நாமெல்லாம் இனவெறியர்கள் ஆனோம்.//
தமிழ் நாட்டுல எப்படி சாதி,மதம் பார்க்க ஆரம்பிச்சோம்? அப்படித்தான். எப்போவெல்லாம் சாதிய எதிர்க்க ஆரம்பிச்சோமோ அன்னிக்கே அடுத்தவன் சாதி என்னான்னு தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். இது பழைய மொந்தைங்க. பேசி புரியோஜனம் இல்லை. ஆஸியில பனேசருக்கு என்ன நடந்துச்சு? வெள்ளை தோல் இல்லைன்னுதானே? நானே பெங்களூருல பார்ஹ்து இருக்கேன். வெள்ளைத்தோலை பார்த்து மக்கள் கிண்டல் அடிக்கிறதை. அதுதானே இனவெறி?

bala சொன்னது…

ஜிகே அய்யா,

ஒட்டு மொத்தமா இந்தியர்கள் இனவெறி பிடித்தவர்கள் என்று சொல்வது பேத்தல்.தாங்கள் சூப்பர் டூப்பர் திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழ் கும்பல் வேண்டுமானால் ஜாதி வெறி,இன வெறி,மொழி வெறி பிடித்து அலையும் கும்பல்னு சொல்லலாம்.இது மறுக்க முடியாத உண்மை.

பாலா

பாலராஜன்கீதா சொன்னது…

// அண்மையில் இங்கிலாந்தில் மந்திரா பேடியை இந்தியர் என்பதால் இனவெறியால் கேவலப்படுத்தி அதற்காக சம்பந்தப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டதையெல்லாம் உலகமே பார்த்து கண்டனம் தெரிவித்தது. //

மந்திரா பேடியா ? ஷில்பா ஷெட்டியா ?

Gowri Shankar சொன்னது…

அந்த சம்பவத்தை இனவெறி என்று கூற முடியுமா என்பதே முதல் கேள்வி! மைதானத்தில் இபபடி வீரர்களை மக்கள் கிண்டல் செய்வது இயற்கையே! மேலும், ஆஸ்திரேலியர்கள் மட்டும் என்ன உத்தமர்களா? இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆஸ்திரேலியா சென்றிருந்த போது அவருக்கு பார்வையாளர்கள் அளித்த வரவேற்பு உலகறிந்ததே!

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,

ஒட்டு மொத்தமா இந்தியர்கள் இனவெறி பிடித்தவர்கள் என்று சொல்வது பேத்தல்.தாங்கள் சூப்பர் டூப்பர் திராவிடர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தமிழ் கும்பல் வேண்டுமானால் ஜாதி வெறி,இன வெறி,மொழி வெறி பிடித்து அலையும் கும்பல்னு சொல்லலாம்.இது மறுக்க முடியாத உண்மை.

பாலா
//

பாலா (ப்போன ?) ஐயா,
இடுகையை நன்னா படிச்சேளா ?
தெளிவாக சொல்லி இருக்கேனே, இந்தியர்களுக்கு இனவெறி இல்லை...உயர்சாதி வெறியும், மதவெறியும் தான் இருக்கிறது...மேலும் வரலாற்று வழியாக பார்த்தாலும், அதாவது இஸ்லாமிய படையடுப்பு, போர்த்துகீசிய, பிரஞ்சு மற்றும் இங்கிலாந்து வெள்ளையர் இன்னும் ஏனைய வந்தேறிகள் இந்திய மண்ணில் நுழைந்தபோது இந்தியர்களுக்கு இனவெறி என்பது இருந்திருந்தால் புட்டத்தில் சூடு போட்டு வந்த வழியாக வெளியேற துறத்தி இருப்பர்... ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதால் இந்தியர்களுக்கு இனவெறி இல்லை என்றே நான் சொல்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
கோவி, உங்களை சுத்தி இருக்கிற மக்களை மட்டும் வெச்சி சொல்லாதீங்க. சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.சிங்கப்பூர், மலேசியா எல்லாம் தமிழ்நாடு மாதிரிதான். வேற நாட்டுக்கு வந்து பார்த்துட்டு சொல்லுங்க. நம்ம ஆளுங்களுக்கு நெறைய இருக்குங்க. இந்தியர்கள் ஒன்னும் பெரிய காந்தியவாதிகள் இல்லை.
//

இளா,

நான் சிங்கப்பூர் ஒரு குட்டிநாடு அதுவும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு சொந்தமானது அல்ல எனவே சிங்கப்பூரை நான் அளவு கோளாக இங்கு குறிப்பிடவில்லை. இந்தியர்களுக்கு சாதிவெறியும், மதவெறியும் மட்டுமே இருக்கிறது. இந்தியர்கள் எந்த ஒரு வெளிநாட்டுக்காரானையும் இனத்தை வைத்து இழிவு படுத்துவது பொதுப்புத்தி கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
நியாயமான கோரிக்கைதான்!
ஏதோ மைதானத்தில் பத்து இளைஞர்கள் செய்த கோளாருக்கெல்லேம் அர்த்தம் கண்டுபிடித்தால் - அதை என்ன வென்பது?

பேதமை அது!//

ஐயா,
நேரிடையாக இனவெறியை பார்த்துக் கொண்டிருக்கும் நம்ம ஆட்களில் சிலர் கூட இதை இனவெறி என்று வகைப்படுத்துவது வியப்பு அளிக்கிறது. இனவெறிக்கும் மதவெறிக்கும் வேறுபாடுதெரியாதவர்கள். நாம என்றைக்குமே வெள்ளைக்காரனுக்கு வெத்தலை பாக்கு வைத்து வரவேற்பவர்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல, தேவையான பதிவு...
இதைப் பற்றிப் பேச ஆஸ்திரேலியர்களுக்கு எந்த அருகதையும் இல்லை..
//

யெஸ் யுவர் ஹானர் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இளா..நீங்க தான் சொல்லுங்களேன்..எப்படி நாமெல்லாம் இனவெறியர்கள் ஆனோம்..என்று...
உங்கள் கூற்றிலே உன்மை இருக்கலாம்..
புலம் பெயர்ந்த இந்தியர்களிடையே.சகவாச தோசமாக வந்திருக்கலாம்...
//

அரவிந்த்,

இனவெறி இருந்திருந்தால் வெளிநாட்டு இந்திய சந்ததியினர் இந்தியர்களிடையே ஒற்றைமையும் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கும். நடைமுறையில் கலக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
தமிழ் நாட்டுல எப்படி சாதி,மதம் பார்க்க ஆரம்பிச்சோம்? அப்படித்தான். எப்போவெல்லாம் சாதிய எதிர்க்க ஆரம்பிச்சோமோ அன்னிக்கே அடுத்தவன் சாதி என்னான்னு தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். இது பழைய மொந்தைங்க. பேசி புரியோஜனம் இல்லை. ஆஸியில பனேசருக்கு என்ன நடந்துச்சு? வெள்ளை தோல் இல்லைன்னுதானே? நானே பெங்களூருல பார்ஹ்து இருக்கேன். வெள்ளைத்தோலை பார்த்து மக்கள் கிண்டல் அடிக்கிறதை. அதுதானே இனவெறி?
//

சாதி / மதப் பிரச்சனை வேறு இனப்பிரச்சனை வேறு. இனம் என்பது ஒட்டு மொத்த இந்திய இனத்தைக் குறிப்பிடுவது (இதில் திராவிடர் மற்றும் ஆரியரும் அடக்கம்) இந்தியன் என்ற பெயரில் வெறி எடுத்து மற்ற வெளிநாட்டு இனத்தை அடிமையாக்கி இருக்கிறார்களா ? கிழாக நினைத்திருக்கிறார்களா ? என்பதே கேள்வி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாலராஜன்கீதா said...
// அண்மையில் இங்கிலாந்தில் மந்திரா பேடியை இந்தியர் என்பதால் இனவெறியால் கேவலப்படுத்தி அதற்காக சம்பந்தப்பட்ட பெண் மன்னிப்பு கேட்டதையெல்லாம் உலகமே பார்த்து கண்டனம் தெரிவித்தது. //

பாலராஜன்கீதா,

மந்திரா பேடியா ? ஷில்பா ஷெட்டியா ?
//

ஷில்பா ஷெட்டியா அது ! மன்மதன் படம் பார்த்த மயக்கத்தில் இருந்து நான் மீளவில்லை என்று நினைக்கிறேன். மாற்றிடுவோம்

:)

-L-L-D-a-s-u சொன்னது…

வெள்ளைக்காரர்களை பார்த்தால் இளிப்பது அடிமைப்புத்தி. அது இந்தியர்களுக்கு நிறையவே உண்டு . ஒரு மேற்கிந்தியரிடமோ அல்லது ஆப்ரிக்க தேசத்திரடமோ எப்படி பழகிறார்களோ அதனை கொண்டுதான் இந்தியர்கள் இனவெறியரா இல்லையா என அளவிடமுடியும் ,

தென்னிந்தியர்களை கருப்பர்கள் என ஒதுக்கும் வட இந்தியர்களிடம் இருப்பது நிறவெறியா? இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//L-L-D-a-s-u said...
வெள்ளைக்காரர்களை பார்த்தால் இளிப்பது அடிமைப்புத்தி. அது இந்தியர்களுக்கு நிறையவே உண்டு . ஒரு மேற்கிந்தியரிடமோ அல்லது ஆப்ரிக்க தேசத்திரடமோ எப்படி பழகிறார்களோ அதனை கொண்டுதான் இந்தியர்கள் இனவெறியரா இல்லையா என அளவிடமுடியும் ,//

தாஸ் நீங்கள் சொல்வது சரிதான். இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை குறைத்து மதிப்பிடுவதில்லை. வெள்ளையர்களுக்கு அடிமையாக இருந்த அவர்களை அடிமையாக இருந்த இந்தியர்கள் குறைத்து மதிப்பிட எந்த தகுதியும் இல்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள்.

//தென்னிந்தியர்களை கருப்பர்கள் என ஒதுக்கும் வட இந்தியர்களிடம் இருப்பது நிறவெறியா? இல்லையா?
//

நீங்கள் குறிப்பிடுவது திராவிட - ஆரிய அரசியல்... ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. அதுவல்ல விசயம்.

நாம் பார்பது இந்தியன் என்ற அடையாளத்தில் பிர நாட்டினரை இன அடிப்படையில் நாம் தாழ்வென்று நினைப்பது இல்லை மாறாக சமமாகவும் வெள்ளையர் என்றால் உயர்வாகவும் நினைக்கிறோம்

கையேடு சொன்னது…

இந்த பதிவு எழுதப்பட்ட நிகழ்வின் பின் தேவயற்ற இனவெறிச்சாயம் பூசப்பட்டது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

மதவெறியை இனவெறியினின்று வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் சாதிவெறியை இனவெறியிலிருந்து எதனடிப்படையில் வேறுபடுத்துகிறீர்கள், புரியவில்லை..!!

சீனு சொன்னது…

கிரிக்கெட்ல் ஸ்லெட்ஜிங்கை வெறியோடு செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். அணியின் பயிற்சியாளர் தனது பயிற்சியின் ஒரு பாடமாகவே வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குரங்கு போல சேட்டை செய்தால் அது இனவெறியென்றால் சைமன்ட்ஸ் என்ன குரங்கு இனமா? அப்படி பார்த்தால் நாமெல்லோருமே குரங்கு இனம் தானே!

ஆஸ்திரேலியர்களுக்கு இதே தான் வேலை. இவர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? இன்னும் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றால் தான் இருக்கிறது அவர்களுடைய செய்கை. பரபரப்பான தொடராகத்தான் இருக்கப் போகிறது ஆஸ்திரேலியத் தொடர்...

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
இந்த பதிவு எழுதப்பட்ட நிகழ்வின் பின் தேவயற்ற இனவெறிச்சாயம் பூசப்பட்டது குறித்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.
//

ஒத்த கருத்துக்கு நன்றி !

//
மதவெறியை இனவெறியினின்று வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் சாதிவெறியை இனவெறியிலிருந்து எதனடிப்படையில் வேறுபடுத்துகிறீர்கள், புரியவில்லை..!!
//

ரொம்ப சிம்பிள் எந்த சாதிவெறியனும் தான் இந்தியன் இல்லை என்று சொல்ல மாட்டான். :) இந்தியனாக இருக்கும் எவரும் மற்ற வெளிநாட்டு இனங்களை தம்மைவிட தாழ்ந்தவர் என்று நினைப்பதில்லை. சமமாகவும், உயர்வாகவும் தான் நினைகின்றனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சீனு said...
கிரிக்கெட்ல் ஸ்லெட்ஜிங்கை வெறியோடு செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். அணியின் பயிற்சியாளர் தனது பயிற்சியின் ஒரு பாடமாகவே வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

குரங்கு போல சேட்டை செய்தால் அது இனவெறியென்றால் சைமன்ட்ஸ் என்ன குரங்கு இனமா? அப்படி பார்த்தால் நாமெல்லோருமே குரங்கு இனம் தானே!

ஆஸ்திரேலியர்களுக்கு இதே தான் வேலை. இவர்கள் செய்யாத ஸ்லெட்ஜிங்கா? இன்னும் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றால் தான் இருக்கிறது அவர்களுடைய செய்கை. பரபரப்பான தொடராகத்தான் இருக்கப் போகிறது ஆஸ்திரேலியத் தொடர்...
//


வாங்க சீனு,

கருத்துக்கு மிக்க நன்றி ! சரியாக சொல்கிறீர்கள் !

ஆஸ்திரேலியா அணி ஓவராக ப்லிம் காட்டுது. ஆஸ்திரேலியா வெள்ளையர் பெரும்பாண்மையினர் இருக்கும் நாடே தவிர வெள்ளையர் நாடு இல்லை. நாமெல்லாம் அதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். வெள்ளையர்களுக்கு இல்லாத இனவெறியா இந்தியர்களுக்கு இருக்கப் போகிறது.

கையேடு சொன்னது…

//ரொம்ப சிம்பிள் எந்த சாதிவெறியனும் தான் இந்தியன் இல்லை என்று சொல்ல மாட்டான். :) இந்தியனாக இருக்கும் எவரும் மற்ற வெளிநாட்டு இனங்களை தம்மைவிட தாழ்ந்தவர் என்று நினைப்பதில்லை. சமமாகவும், உயர்வாகவும் தான் நினைகின்றனர்.//

பதிவின் பேசுபொருளிருந்து விலகி உரையாடலை மீண்டும் தொடர்வதற்கு மன்னியுங்கள். இப்பின்னூட்டத்திற்குத் தனியாக பதில் எழுதினாலும் சரி அல்லது இப்பதிவிலேயே பதில் அளித்தாலும் சரி. ஏனெனில் பதிவின் பேசுபொருளிலிருந்து பெரிதும் விலகுகிறேன் என்று தெரிந்தே எழுதுகிறேன். இது எந்த திசைதிருப்பும் நோக்குடனும் எழுதப்பட்டதல்ல.

நிர்ணயிக்கப்பட்ட பெயர்களுடன் உலக வரைபடத்தின் கோடுகளுக்குள் வாழும் எல்லோரும் ஒரே இனம் என்ற கருத்து ஏற்புடையதா? அதற்காக எல்லோரும் இனவெறியுடன் பிரிந்துகிடக்க வேண்டும் என்பதற்கில்லை. அப்படிப்பட்ட ஒரு பக்குவத்தினை உலக நாடுகள் பல (இந்தியா உட்பட)அடைந்துவிட்டனவா என்பதுதான் கேள்வி?

இவ்விககாரத்திலும் கூட சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியர்தானே. மேலும், ஆஸ்திரேலியர்களைக் குரங்கெனச் சொல்லிக் கிண்டல் செய்தார்கள் என்றே புகார் கூறியிருக்க வேண்டும் அவ்வணியினர். ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு இனவெறி உலகறிந்த செய்தி.

இனவெறி எப்பொதும் தேசிய வரைபட எல்லையைத் தாண்டிய ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

இந்தியர்கள் மற்றவர்களைத்தாழ்வாக நினைக்கிறார்களா?

அந்தமான், நிக்கோபார் தீவுகளிலுள்ள வம்சாவழியினர் சுதந்திர இந்தியர்களால் எப்படிக் கையாளப்பட்டனர்.

தனிநபராக நம் இருவருக்கும் அந்நிகழ்வுகளில் உடன்பாடில்லாமலிருக்கலாம், ஆனால் இந்தியர்கள் என்ற முறையில் நாம் மறைமுகமாகப் பொறுப்பேற்பதாகவே உணருகிறேன்.

சாதிவெறியைப் பொருத்தவரை அதன் தற்போதைய மற்றும் வரலாற்றுச் செயல்பாடுகள் இனவெறியின் சர்வதேச வரையறைக்குள் வெகுவாகப் பொருந்துவதாகவே கருதுகிறேன்.

பதிவின் மையக்கருத்திலிருந்து விலகியதற்கு மீண்டும் மன்னியுங்கள்.

மவுலாசா சொன்னது…

வரலாற்று வழியாக பார்த்தாலும், அதாவது இஸ்லாமிய படையடுப்பு, போர்த்துகீசிய, பிரஞ்சு மற்றும் இங்கிலாந்து வெள்ளையர் இன்னும் ஏனைய வந்தேறிகள் இந்திய மண்ணில் நுழைந்தபோது இந்தியர்களுக்கு இனவெறி என்பது இருந்திருந்தால் புட்டத்தில் சூடு போட்டு வந்த வழியாக வெளியேற துறத்தி இருப்பர்- கோவி.கண்ணன்

வந்தேறிகளில் முன்னோடியான 'ஒரு' கும்பலை மட்டும் விட்டிவிட்டீர்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்லாஸ் said...
வரலாற்று வழியாக பார்த்தாலும், அதாவது இஸ்லாமிய படையடுப்பு, போர்த்துகீசிய, பிரஞ்சு மற்றும் இங்கிலாந்து வெள்ளையர் இன்னும் ஏனைய வந்தேறிகள் இந்திய மண்ணில் நுழைந்தபோது இந்தியர்களுக்கு இனவெறி என்பது இருந்திருந்தால் புட்டத்தில் சூடு போட்டு வந்த வழியாக வெளியேற துறத்தி இருப்பர்- கோவி.கண்ணன்

வந்தேறிகளில் முன்னோடியான 'ஒரு' கும்பலை மட்டும் விட்டிவிட்டீர்களே!
//

இக்லாஸ்,

'ஏனைய' என்பதற்குள் 'ஒரு' வராது ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்