மோடி வகையறாக்கள் தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ? என்று பார்த்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மோடிவகையறாக்கள் அப்படி செய்யக் கூடியவர்கள், அவர்கள் தான் செய்திருக்கிறார்கள் என்பதை எல்லோருமே ஊகித்தி இருக்கிறார்கள், தற்போது கிடைத்திருக்கும் ஆதாரம் மதவெறியில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற சான்றிதழ் மாட்டுமே.
குஜராத் கலவரம் தொடர்புடைய சாட்சி அடைப்படையில் வழங்கப்பட்ட நீதிகள்(?), தெகல்கா ஆதாரத்துக்கு முன்பு வெட்கி தலைகுனிகிறது.
இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் வெளியில் இருந்து வந்தேறவில்லை. முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது ? எந்த ஒரு குடிமகனுக்கும் அவன் விரும்பிய மதத்தில் இணைய உரிமை உண்டு. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ இருப்பதை வைத்து அவர்களை சிறுபாண்மையினர் என்று சிறுமைபடுத்தி பார்ப்பது எதற்கு ?
மதம் அன்பை போதிக்கிறது, இந்துமதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',, அனைத்து மதங்ககளும் கலந்த இந்துமதம் கங்கையைப் போல் ஒரு புனித(?) சாக்கடை என்று புனிதம்(?) பேசிக் கொண்டே, இந்து மதத்தின் பெயரால் தீவிரவாதம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. காந்தியை கொன்ற கோமான்களின் இரத்த வேட்டை காந்தி பிறந்த பூமியில் வீறுநடை போட்டு இருக்கிறது. குஜராத் நிகழ்வுகளுக்கு பின்னால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பெருமை பேசினால் காக்கை கூட பேசுபவனின் நாக்கில் எச்சமிட்டு எள்ளிவிட்டு செல்லும்.
குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ? அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ? மைனாரிட்டி என்பதால் இராணுவத்தில் இல்லாமல் இருக்கிறார்களா ? மைனாரிட்டி என்பதால் இலவசமாக எல்லாமும் கிடைக்கறதா ?
"அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்" - மோடி
மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்களா ? பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,
மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.
தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
25 கருத்துகள்:
//மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.
தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?
//
கொஞ்சம் கவலை கொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது!
நல்ல பதிவு கோவியாரே!
//தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?
//
கருட புராணத்தின் படி மோடி செய்தது எந்த தப்பும் இல்லை. பிறகேன் நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்.
//சாணக்கியன் said...
கருட புராணத்தின் படி மோடி செய்தது எந்த தப்பும் இல்லை. பிறகேன் நீதிமன்றம் கண்டிக்க வேண்டும்.
//
கருட புராணம் என்பது ஹிந்து ஜிகாத் நூலா ?
சாணக்கியன் சார், இலைக்காரரை கேட்டதாக சொல்லவும்.
:)
//இந்துமதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',//
அதனை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறியாதவரைக்கும் இப்படித்தான் ரத்தமாகக் 'கழிந்து' கொண்டிருக்கும்.
//தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?//
நீதிமன்றம், நாட்டில் எந்தக் கடை எப்போது திறந்திருக்க வேண்டும் எப்போது மூடியிருக்க வேண்டும் என்று கணக்கெடுப்பதிலும் சொல் பேச்சுக் கேட்காத கடைக்காரர் இருக்கும் மாநிலத்தின் முதல்வர்களைத் தண்டிப்பது பற்றிய பரிசீலனையிலும் பிஸி. நீதிமன்றங்கள், இப்போதெல்லாம் உளறுவதில் மோடிக்கு மூத்த அண்ணன்களாக ஆகி விட்டன.
மோடியின் அபத்த உளறல்களுக்கு குஜராத் தேர்தலில் பொதுமக்கள் பதில் கொடுப்பார்கள்.
//நாமக்கல் சிபி said...
கொஞ்சம் கவலை கொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது!
நல்ல பதிவு கோவியாரே!
//
இந்த பதிவுக்கு நல்ல பதிவு பாராட்டா ? - எழுத்தைச் சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன்.
இது கெட்டதை சுட்டும் பதிவாயிற்றே. வேதனைக்கு வாழ்த்துக்கள் பெறுவது போல் இருக்கிறது !
:(
//
தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?
//
அது தான் "மனு" நீதிமன்றம் ஆயிற்றே
:(
என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை....மோடி ஒரு கேடி..அவரை தூக்குப் பிடிக்கும் அனைவரும் இந்த குற்றத்திற்கு துணை போனதாக கருத வேண்டும்...
இமானுவேல் ராஜசேகரன் (முத்து ராமலிங்கத் தேவர் தொடர்புடைய) கொலைக்கு காரணமானவர்களை பொதுவிலே வைத்து சுட்டார்களாம், காமராசர் காலத்திலே..மக்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று..அதே போல், இப்போதும் செய்தால் தவறில்லை...நடிகர்களுக்கு, கோடியில் புரளும் கேடிகளுக்கு, அரசியல்வியாதிகளுக்கு என்று தனி சட்டத்தை பின்பற்றும் நீதி மன்றங்களை புனர் நிர்மானம் செய்ய ஏதாவது வழியிருக்கா என்று ஆராயனும்...
//கருட புராணம் என்பது ஹிந்து ஜிகாத் நூலா ?//
ஹிந்து ஜிகாத் நூல் மட்டும் அல்ல.
இந்திய நீதி மன்றங்கள் தீர்ப்பு கூற உதவும் பைபிள்.
//சாணக்கியன் சார், இலைக்காரரை கேட்டதாக சொல்லவும்.
//
இலைக்காரரை கேட்டதாக கூறிவிட்டேன்
"அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்" - மோடி
''குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ? அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ? - கோவி
****
மதம் சார்ந்த மைனாரிட்டி என்ற அடையாளப்படுத்துதலை ஆதரிக்கீறிர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?
***
தொடர்பில்லாத கேள்விகள் உங்களின் சிந்தனைகளுக்காக மட்டும்.
நரிக்குறவர்கள் இனம்/அடையாளம் சார்ந்த ஒரு மைனாரிட்டி .
சமீபத்தில் ஊர்வலம் நடத்திய இந்திய பழங்குடியினர் மோசமான நிலையில் இருக்கும் வாழும் இடம் சார்ந்த மைனாரிட்டி.
இவர்கள் எல்லால் ஏன் மதம் சார்ந்த மைனாரிட்டி அடையாளங்களுடன் போட்டி போட முடியாமல் (லைம் லைட்டில் வராமால்) தவிக்கிறார்கள்?
மைனாரிட்டி என்ற லைம்லட்டில் வருவதற்கு ஒரு குறைந்தபட்ச மெஜாரிட்டி பலம் (அரசியல்/மதம்/அதிகாரம்....) தேவைப்படும் என்பதை அறிவீர்களா?
Irom Sharmila போன்ற போராட்டவாதிகள் என்னதான் சாப்பிடாமல் இருந்தாலும் அரசியல் லைம்லட்டில் வருவதற்கு எந்தவிதமான மெஜாரிட்டி ஆதரவும் இல்லாமல் அழிந்து கொண்டுள்ளார்கள். இவர்களும் அரசியலில் மைனாரிட்டிகள்தான்.
**
மைனாரிட்டி என்ற அடையாளத்துக்கு வருவதற்கு குறைந்தபட்ச மெஜாரிட்டி தேவைப்படுகிறது. அதுவே மைனாரிட்டி அடையாளத்தின் பாதகமும் சாதகமும்.
கோவியாரே,
Cool down. குஜராத்தை hindutva laboratory என்று கூறுவார்கள். They just conducted an experiment in 2002. அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்தியா முழுவதும் அதை நிகழ்த்தி காட்டுவார்கள். They are just waiting for that. ராமை நம்புவர்கள் மட்டுமே நாட்டில் வசிக்கலாம் என்ற் கொள்கை உடையவர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடாது.
நீதிமன்றம் ... :-)))). அவர்கள் நிதிபதிகளையே விலைக்கு வாங்கியவர்கள்.
//மதம் சார்ந்த மைனாரிட்டி என்ற அடையாளப்படுத்துதலை ஆதரிக்கீறிர்களா அல்லது எதிர்க்கிறீர்களா?
//
இது என்ன கிடுக்கிபிடி கேள்வியா ?
ஒரு இந்துவெறி ஓநாய் ஒரு மதத்தை தனிப்பட்ட முறையில் மைனாரிட்டி என்று பேசுவதற்கும், நசுக்கப்பட்டவர்கள் மைனாரிட்டியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.
நரிகுறவர்களை விடுங்கள்... அவர்கள் யாரும் உச்சநீதிமன்ற பதவிகளுக்கு கூட ஆசைப்படுவதில்லை.
சாதி சார்ந்த மைனாரிட்டிகள்... அதாவது சில உயர்வகுப்பினர் (என்று கூறிக் கொள்பவர்கள்)... அரசியலில் புகுந்து இருப்பதையும், ஆளுமை செய்வதையும் ஒப்பிட்டு சொல்லி இருப்பீர்கள் என்றால் நன்றாக இருந்திருக்கும். மேலும் அது எந்த மெஜாரிட்டியின் பலத்தால் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
அருமையான பதிவு, எவ்வளவு சொல்லி என்ன செய்ய தமிழகத்தில் கூட இன்னனும் இவர்களுக்கு வால் பிடிக்க மக்கள் இருப்பது சோகமே அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்த்து தான்.
கோவி,
// சாதி சார்ந்த மைனாரிட்டிகள்... அதாவது சில உயர்வகுப்பினர் (என்று கூறிக் கொள்பவர்கள்)... அரசியலில் புகுந்து இருப்பதையும், ஆளுமை செய்வதையும் ஒப்பிட்டு சொல்லி இருப்பீர்கள் என்றால் நன்றாக இருந்திருக்கும். மேலும் அது எந்த மெஜாரிட்டியின் பலத்தால் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.//
சாதி சார்ந்த மைனாரிட்டிகள் (அதாவது சில உயர்வகுப்பினர்) எந்த மெஜாரிட்டியின் பலத்தால் அரசியலில் புகுந்து ஆளுமை செய்கிறார்கள் என்று கேட்கிறீர்களா?
எல்லா மதங்களுக்குள்ளும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தாலும் , இந்து என்று சொல்லப்படும் சனாதான மதத்திலேயே சாதி அதிகமாக இருப்பதால் , நீங்கள் அந்த சாதி உயர் வகுப்பினரையே சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.அதே சமயம் அந்த சனாதன மதத்தில் உயர்சாதி என்று நீங்கள் யாரைச் சொலிகிறீர்கள் என்றும் தெரியவில்லை. மனு அடுக்கு முறையில் 1-2-3-4... என்பதில் 3 என்பது 4 க்கு உயர்சாதியாகவும் 1 என்பது 3 க்கு உயர்சாதியாகவும் உள்ள நிலையில் நீங்கள் எந்த உயர்சாதியை சாதியை மைனாரிட்டி என்று சொல்கிறீர்கள்?
**
எந்த அடுக்கில் இருந்தாலும் ,கீழ் அடுக்கில் இருக்கும் ஒருவன் இன்னும் "மனு" வை நம்புவதாலேயே மனு ஏணியில் மற்றவர்கள் உயர இருப்பதாக நினைக்கிறான். உயர இருப்பவர்களை மற்றவர்கள் அண்ணாந்து பார்க்கும் மாயையே உயர இருப்பவர்களை இன்னும் ஆளுமை செய்ய வைக்கிறது. யானை அதன் பாகனை பாஸாக நினைத்து பிச்சை எடுப்பது போல.
பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்கள் (மனுவின் அடுக்கில் 1-2-3-4.. ) யாராக இருந்தாலும் தீண்டத்தகாதவர்கள் என்று நீங்களும் நானும் ஒதுக்க ஆரம்பித்தாலே இவர்களின் மாய தோற்றம் விலகி ஆளுமை அடையாளங்கள் சிதைக்கப்படும்.
பெரியார் சிதைக்க விரும்பியதும் இதுதான். எனவே அவர் அடையாளம் 1 -ல் இருந்து ஆரம்பித்தார். அது சொல்லும் எல்லா புனிதத்தையும் உடைத்தார்.
ஆனால் முழுமையான அடையாள அழிப்பு இன்னும் நடக்கவில்லை. இன்று அடையாளம் 2 ல் இருப்பவன் 4 இல் இருப்பவன் வாயில் பீயை ஊற்ற 1 ம் 3 ம் வேடிக்கை பார்க்கிறது. 2-ல் இருப்பவன் 1-ல் இருப்பவனை இன்னும் அண்ணாந்து பார்த்துக் கொண்டுள்ளான்.
**
மனுசர்ந்த பிறப்பால் வரும் FC என்ற அடையாளப்படுத்துதலையே எடுக்க வேண்டும்.அது குறியீடு சார்ந்த விசயம்.
தற்போது FC என்று அடையாளப்படுத்தப்பட்டு உள்ளவர்களை " நாய்கள்" என்று அடையாளப்படுத்துங்கள் அவர்கள் அங்கே இருக்க விரும்ப மாட்டார்கள்.
அதுவே அவர்களின் ஆளுமை அடையாளத்தை குலைத்துப் போட்டு மனு-மெஜாரிட்டி பலத்தை குலைத்துப்போடும்.
***
டிஸ்கி:
பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பவர்கள் அனைவரும் பார்ப்பனீயர்களே.
நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.
பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.
இந்த எண்ணம் இல்லாத அனைவரும் மரியாதைக்குரியவர்களே irrespective of their family (father/mother etc.,) beliefs
பலூன் மாமா அவர்களே,
உடனடி மறுமொழிக்கு நன்றி !
உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் சிறுபாண்மை என்ற சொல் பதம் எங்கு பயன்படுத்தவேண்டும், எங்கு பயன்படுத்தக் கூடாது என்று இருக்கிறது. அது ஒரு சொல் குறியீடு.
//பல்வேறு உட்பிரிவுகள் இருந்தாலும் , இந்து என்று சொல்லப்படும் சனாதான மதத்திலேயே சாதி அதிகமாக இருப்பதால்//
இந்துமதம் சனாதன தர்மமா ?
யார் சொன்னது. இந்து என்ற வரை சரி, அது வெள்ளைக்காரன் வைத்த பெயர். ஆனால் அதற்கு முன்பு அது சநாதன தர்மமாக இருந்தது என்று எப்படி சொல்கிறீர்கள் ? இது போல் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு...எல்லாம் வேத வேள்வியில் இருந்து தோன்றியவை என்று காட்டப்படுகிறது, விபரமாக வேறு இடுகையில் சொல்கிறேன். இந்து என்ற ஒருங்கிணையாக காட்டப்பட்டுள்ள மதத்திற்குள் சநாதான தர்மம் என்ற சமய பிரிவும் இருக்கிறது. ஆனால் அதுமட்டுமே 'இந்து' மதம் ஆகாது என்று தற்போதைக்கு சுறுக்கமாக சொல்லிக் கொள்கிறேன்.
:)
// இந்துமதம் சனாதன தர்மமா ?
யார் சொன்னது. //
:-))
ஒருவர் சொல்லிவிட்டார் அல்லது ஒரு புத்தகம் சொல்லிவிட்டது என்பதற்காக அப்படியே ஏற்றுக் கொள்வது இல்லை.
மற்றவர்கள் சொன்ன கருத்தில் இருந்து சொன்னால்தான் அது உண்மையா?
மற்றவர்கள் அல்லது சில புத்தகங்கள் சொன்னாலும் எனது புரிதலின் அடிப்படையில் நான் சொன்ன கருத்து.உங்களின் பார்வையில் தவறாகவே இருந்தாலும் அது எனது கருத்து மட்டுமே.
**
// இந்து என்ற ஒருங்கிணையாக காட்டப்பட்டுள்ள மதத்திற்குள் சநாதான தர்மம் என்ற சமய பிரிவும் இருக்கிறது. ஆனால் அதுமட்டுமே 'இந்து' மதம் ஆகாது //
ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் சாதி சார்ந்த "இந்து" மதக் குறீயீடு என்று வரும்போது எல்லாம் இந்துவாகவே பார்க்கப்படுகிறது. சனாதனதிற்கும் அதனால் ஸ்வாக செய்யப்பட்ட மற்ற குழுக்களுக்கும் அவை பின்பற்றும் அடுக்குமுறைச் சாதி-ஏணியில் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கும்போது என்னால் இரண்டையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. :-((
பிறப்பின் அடிப்படியில் வரும் சாதி என்ற ஒன்ரை வைத்து உயர்வு-தாழ்வு பாராட்டுபவர்கள் எந்த மத்தில் இருந்தாலும் பார்ப்பனீயர்களே.
Racism போன்று Parpanisam மதம் ,நாடு தாண்டிய ஒரு குறியீடு என்பதையே நான் கட்டமைக்க விரும்புகிறேன்.
***
// சிறுபாண்மை என்ற சொல் பதம் எங்கு பயன்படுத்தவேண்டும், எங்கு பயன்படுத்தக் கூடாது என்று இருக்கிறது. அது ஒரு சொல் குறியீடு. //
மோடி அரசியலில் பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார். நீங்கள் பொதுவாக எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே என்கிறீர்கள்.
யார் அந்த குறியீடை பயன்படுத்தலாம் என்பது கேள்வியா? அல்லது எப்போது அந்தக் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது கேள்வியா? :-))
***
மதத்தின் பெயரால் மோடி செய்தது பெரும் குற்றம் ஈனச் செயல். மதத்தின் பெயரால் நடக்கும் எல்லா ஈனச் செயல்களுக்கும் அந்த அந்த மதங்களே பொறுப்பு.
//தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?//
எந்த நீதிமன்றத்திடம் கருத்து எதிர்பார்க்கிறீர்கள்? "பகவத் கீதை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும்" என்று பொன்மொழி உதிர்த்த நீதிமன்றத்திடம் இருந்தா?
(அதுசரி, தன்னுடைய கருத்தினை ஏற்று இன்னும் ஏன் மத்திய அரசு அதனை அறிவிக்கவில்லை; மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள்; அதனை ஏன் கலைக்கக் கூடாது என்றெல்லாம் இன்னும் சொல்லாமல் இருப்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.) கிளம்பவில்லை?
//முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர்//
முன்னாள் குடிமக்க்ள் என்றால்...? இப்போ குடிமக்கள் இல்லையா?
இறைவன் திருப்பெயரால்!
எல்லோருக்கும் இரத்த வெறி பிடித்த நரபலியிட்ட மோடியும் அவனின் அரசாங்கமும் ஒன்றிணைந்து நடத்திய வன்முறை என்பதை உணர்ந்திருந்தாலும் தெஹல்கா, சங்பரிவார கும்பலின் கோர முகத்தை அப்பட்டமாக எடுத்து காட்ட உதவியது. இந்த வந்தேறிகள் கீழ்த்தட்டு மக்களை தனது சுயநலத்திற்காக எப்படி பயன்படுத்துகிறான் என்பது அதிவாசிகள் தான் இந்து மக்கள் தரப்பில் கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் என்பதும் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு கோர வெறியாட்டம், மக்களுக்கு பணியாற்ற வேண்டிய அரசாங்கம், மக்களை வேட்டையாடிய வேதனையான சம்பவம் தெஹல்காவின் தீர முயற்சியால் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.
கோத்ரா இரயில் எரிப்பு முஸ்லிம்களால் திட்டமிட்டு எரிக்கப்பட்ட கோர செயல் என்று சங்பரிவாரம் கூச்சலிட்டதும், சங்பரிவாரம் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கவும் திட்டமிடபட்ட கற்பனை என்பது புலப்படுத்தபட்டுள்ளது.
காட்டுமிராண்டி கும்பல் கர்பிணியின் வயிற்றை கிழித்த போதும் சிறு சலனம் கூட வந்திடவில்லை. இன்னும் அதை பெருமையாக கருதும் கல்நெஞ்சம் படைத்த கயவர்கள் தான் சங்பரிவார கூட்டம் என்பதும் தெஹல்காவால் தோலுறித்து காட்டபட்டுள்ளது.
//பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்வாகவும் ஒரு சிலரைத் தாழ்வாகவும் நினைப்பவர்கள் அனைவரும் பார்ப்பனீயர்களே.
நிறம் அடிப்படையில் Discriminate செய்வது Racism.
பிறப்பின் அடிப்படையில் Discriminate செய்வது Parpanisam.
இந்த எண்ணம் இல்லாத அனைவரும் மரியாதைக்குரியவர்களே irrespective of their family (father/mother etc.,) beliefs //
அருமை ! பலூன் மாமா !
பதிவுக்கு நன்றி ! கோவியாரே !
//மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்களா ? பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,
மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.
//
நல்ல பதிவு...
//தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?//
நீதிமன்றம மட்டுமா... இந்த அரசினுடைய அத்தனை உறூப்புகளும் கள்ளமௌனம் சாதிக்கிறார்களே. காங்கிரசும் கூட இந்த விசயத்தை பெரிதாக எடுத்துச் செல்வதில்லை என்றே முடிவு செய்துள்ளது.
இதோ பத்திரிக்கைகளின் கள்ளமௌனம் குறித்த பதிவு.
Murder Will Out: Responses in the Press ==> http://www.passtheroti.com/?p=577
இது இந்த அரசினுடைய இயல்பு(அரசு என்பது - ராணுவம், நீதிமன்றம், போலிசு, சிறைச்சாலை, அதிகாரிகள்). அரசாங்கம் என்பது அரசு நிர்வாகத்துக்கான ஒரு அமைப்புதான். அரசாங்கத்தின் இயல்பையும் அரசினுடைய வர்க்க இயல்பே தீர்மாணிக்கிறது. இதோ மோடியினுடைய பிரச்சினையிலும் கூட இந்த அரசு அம்பலமாகி நிற்கிறது. அரசினுடைய இந்த செயல்பாடு ஆச்சர்யமான விசயமல்ல. இத்தனைக்கும் பிறகும் அரசாங்கத்தின் மூலம் அரசினுடைய இயல்பை மாற்றிவிட முடியும் என்று சிலர் நம்புகிறார்களே அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.
அசுரன்
இம்மதவெறி நிகழ்வுகளில் மோடி ஒரு வெறியன், ஒரு ஒநாய் மற்றும் மோடியிசம் போன்ற வார்த்தைப் பயன்பாடுகள் இது மோடி என்ற தனிமனிதனின் வெறியாட்டம் என்ற வரையறைக்குள் புகுத்திவிட்டு மதச்சார்புடைய இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் தங்களுடைய பெயரையும் கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள வழிவகை செய்யும் அபாயம் இருக்கிறது. இந்நிகழ்வில் முக்கியப் பங்கு வகித்ததாக மோடியின் பெயரை தெகல்கா முன்வைத்திருந்தாலும் நிகழ்வுகள், இயக்கங்கள், மற்றும் கட்சிகளின் கொடியுடனும், அவற்றின் தேசியதேர்தல் சின்னங்களுடனும் தான் நடந்துள்ளது. ஆதலால் இந்தியா முழுக்க இருக்கும் இதுபோன்ற மததீவிராத இயக்கங்கள் இதற்கு பொருப்பேற்கவேண்டும்.
இது ஏதோ மோடி என்ற தனிமனிதனின் வெறியாட்டம் என்கின்ற அளவிலே கள்ள மொளனம் சாதித்துவிட்டு, திரைமறைவில் வேறு பல மோடிக்களை உருவாக்கும் செயலில் அவ்வியக்கங்கள் ஈடுபட வழிவகுக்கும்.
தமிழகத் தலைவர்கள் சிலரின் செயல்பாடுகளில் ஒட்டுமொத்தமாக அவ்வியக்கத்தையோ அல்லது இனத்தையோ பொறுப்பேற்கச்செய்து இழிவுபடுத்திய வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூர்வது அவசியம்.
நல்ல பதிவு...
அன்பு நண்பர் கோவி.கண்ணன் அவர்களே!
உங்களை போல ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் நாம் எப்போதோ அமெரிக்காவை விட பிகப்பெரிய வல்லரசாகி விட்டிருப்போம். உங்களின் இடுக்கைகளை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். நான் ஒரு இஸ்லாமியன், உண்மயில் உங்களைப்போல நல்ல மனிதரை விரும்புகிறேன், ஹிந்துதுதுவா என்று கொளைவெறியுடன் அலையும் அவர்களை எதிர்த்து நான் வெளியிடும் இடுக்கைகள் மாற்று மத நல்லவர்களின் மனதை புன்படுத்திவிடுமோ என்று அவ்வப்போது கவலைப்படுவது உண்டு. என் பக்கத்து வீட்டில் ஒரு ஹிந்து நண்பர் இருந்தால் அவருடன் என் பழக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும், அது போல ஒவ்வொருவரும் கருத்து வேற்றுமை இன்றி வாழ பழக வேண்டும். நான் தற்போது துபையில் வசிக்கிறேன். ஒரு தமிழனை சந்திக்கும்போது என்னையறியாமல் மகிழ்ச்சி வருகிறது, அவர் ஒரு முஸ்லீம் என்றோ, ஹிந்து என்றோ, கிருத்துவர் என்றோ எண்ணம் வருவதில்லை.தமிழுக்கு அத்துனை சக்தியுண்டு. நாம் இவ்வுலடில் வாழ போவது 70 அல்லது 90 வயது வரைதான், அதை சகோதரத்துவத்துடன் அமதியாக வாழ்ந்துவிட்டு போவோமே!. உங்களை போன்ற நல்லவர்கள் இன்னாட்டில் இருப்பதால் தான் மத வெறியர்கள் அவர்களின் பேராசையை நிறைவேற்ற முடியாது தவிக்கிரார்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்களுடன்
நன்றி.
தீன்.
அன்பு நண்பர் கோவி.கண்ணன் அவர்களே!
உங்களை போல ஒவ்வொரு இந்தியனும் நினைத்தால் நாம் எப்போதோ அமெரிக்காவை விட பிகப்பெரிய வல்லரசாகி விட்டிருப்போம். உங்களின் இடுக்கைகளை ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். நான் ஒரு இஸ்லாமியன், உண்மயில் உங்களைப்போல நல்ல மனிதரை விரும்புகிறேன், ஹிந்துதுதுவா என்று கொளைவெறியுடன் அலையும் அவர்களை எதிர்த்து நான் வெளியிடும் இடுக்கைகள் மாற்று மத நல்லவர்களின் மனதை புன்படுத்திவிடுமோ என்று அவ்வப்போது கவலைப்படுவது உண்டு. என் பக்கத்து வீட்டில் ஒரு ஹிந்து நண்பர் இருந்தால் அவருடன் என் பழக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும், அது போல ஒவ்வொருவரும் கருத்து வேற்றுமை இன்றி வாழ பழக வேண்டும். நான் தற்போது துபையில் வசிக்கிறேன். ஒரு தமிழனை சந்திக்கும்போது என்னையறியாமல் மகிழ்ச்சி வருகிறது, அவர் ஒரு முஸ்லீம் என்றோ, ஹிந்து என்றோ, கிருத்துவர் என்றோ எண்ணம் வருவதில்லை.தமிழுக்கு அத்துனை சக்தியுண்டு. நாம் இவ்வுலடில் வாழ போவது 70 அல்லது 90 வயது வரைதான், அதை சகோதரத்துவத்துடன் அமதியாக வாழ்ந்துவிட்டு போவோமே!. உங்களை போன்ற நல்லவர்கள் இன்னாட்டில் இருப்பதால் தான் மத வெறியர்கள் அவர்களின் பேராசையை நிறைவேற்ற முடியாது தவிக்கிரார்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்களுடன்
நன்றி.
தீன்.
திரு தீன்,
தங்கள் பாராட்டுகள் நிறைவை அளிக்கின்றன. மிக்க நன்றி !
கருத்துரையிடுக