இட ஒதுக்கீடு பற்றி பல்வேறு கட்டுரைகளை ஆதரித்தும், எதிர்த்தும் எழுதும் நண்பர்கள் இந்த கவிதைக்கு என்ன பதில் சொல்வார்கள் என்பதைப் பார்பதற்கு மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.
வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !
மயானத்தில் பிணம் சுடவும்,
மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கும்,
பினவறையில் சவம் அறுக்கவும்,
தினை அறுத்து தூற்றுவதற்கும்,
ஊசி பாசி விற்பதற்கும்,
ஊரார் ஆடைகள் வெளுப்பதற்கும்,
ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும்,
ஆடு மாடு மேய்த்திடவும்,
சேற்றிலிறங்கி நாற்று நடவும்,
மாற்றான் தோட்டம் காத்திடவும்,
நைந்த செருப்பை தைத்திடவும்,
நாவிதம் நயமுடன் செய்திடவும்,
நாமும் கேட்போமே இடஒதுக்கீடு !
10 கருத்துகள்:
Those Upper caste oppressors won't ask reservation on those - inhumane professions....
Even They won't raise their voice to release the mojority of the Indian population from those social discremination.
But they will say '80% poulation' whenever they need to promote hindhudva, anti muslim, anti christine propoganda....
GK,
இவ்வளவு அருமையான படைப்பை பாக்காமலேயே விட்டு விட்டேனே..
அருமையாக எழுதியுள்ளீர்கள்
நன்றி நன்றி
//Sivabalan said... இவ்வளவு அருமையான படைப்பை பாக்காமலேயே விட்டு விட்டேனே..
அருமையாக எழுதியுள்ளீர்கள்//
சிபா...!
லேட்டா பார்த்தாலும் லேட்டஸ்டா பின்னூட்டம் போட்டதற்கு
நன்றி !
நல்ல கவிதை கோவி.க. நச்சுன்னு இருந்துச்சு ஆமாம் இட ஒதுக்கீடு என்றால் என்ன. இரண்டு ஏக்கர் நிலமாக்கும் என நினைத்தேன். (ஜோக்குக்காக)
2,6,8,9,10 இதெல்லாம் நான் செய்திருக்கிறேன், சத்ய சாயி சேவாதள உறுப்பினராக, சென்னையிலும், புட்டபர்த்தியிலும்!!
#3 மருத்துவக்கல்லூரியில்!
:))
............இதுல உங்க சாய்ஸ் எதுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே, கோவியாரே!
:))
//SK said...
2,6,8,9,10 இதெல்லாம் நான் செய்திருக்கிறேன், சத்ய சாயி சேவாதள உறுப்பினராக, சென்னையிலும், புட்டபர்த்தியிலும்!!
#3 மருத்துவக்கல்லூரியில்!
:))
............இதுல உங்க சாய்ஸ் எதுன்னு சொல்லாம விட்டுட்டீங்களே, கோவியாரே!
:))
//
எஸ்கே ஐயா,
நல்லது நல்ல சேவை ... நீங்கள் செய்த சேவைக்கு வேண்டிய பலன் கிடைக்கட்டும்.
என்னோட சாய்ஸ் தலைப்பும், கடைசிவரியும் !
:)
இதிலும் இடஒதுக்கீடு கேட்பார்கள் மாச சம்பளம் இலட்ச ரூபாயென்றால் மட்டுமே.... ஒவ்வொன்றின் பெயரும் இடமும் மாறும் பியூட்டி பார்லர்களைப் போல
நல்ல கவிதை ஜிகே.
பராசக்தி படத்துல கீழுள்ளது போல் கடைசியில் ஒரு வசனம் வரும்
"கோபுரத்தில் இருப்பவர்களை குடிசைக்கு கொணர்ந்து தாழ்த்துவதை விட, குடிசையில் இருப்பவர்களை கோபுரத்துக்கு உயர்த்துவோமே."
அதனால் உங்கள் கவிதையில் சொல்லப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு, நியாயமான இடஒதுக்கீட்டை பெற்றுத் தருவதன் மூலம், அவர்களும் உயர வகை செய்வோம்.
அதனால் "வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு".
இட ஒதுக்கீடு தேவையில்லை. ஒதுக்கீடு எப்பொழுது தேவை. தேவையான இருக்கைகளை விட இருக்கும் இருக்கைகள் குறைவை இருக்கும்பொழுது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று உண்மையான நோக்கோடு அரசாங்கம் இருந்தால் செயல்பட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் எல்லா ஏற்றத்தாழ்வுகளையும் ஒழித்திருக்கமுடியும். ஆனால் அரசியல்வாதிகள் குளிர் காய்தலே இந்த ஏற்றதாழ்வு இருப்பதால் தான்.
Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
கருத்துரையிடுக