பின்பற்றுபவர்கள்

24 மே, 2006

சோனியா செய்தது சரியா ?

லாபம் தரும் பதவிகளை வைத்திருபோர், பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது என்ற ஒரு சட்டம் மத்திய அரசால் ஏற்றப்பட்டு, அதன்படி, சோனியா, ஜெயாபச்சன் மற்றும் ஏனையோரின் எம்.பி.பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இத்தகைய அறிவிப்பில் தன் பெயர் வரும் முன்னே சோனியா தடாலடியாக தனது எம்.பி பதவியை விட்டுவிட்டு தேர்தலை சந்திப்பதாக அறிவித்து வெற்றியும் பெற்றார். ஜெயாபச்சனின் பதவியை மத்திய அரசே பறித்தது.

சோனியா நடந்து கொண்டது நேர்மையானது என்று பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். 4 லட்சம் வாக்கு வித்யாசத்தில் ரேபரோலியில் மீண்டும் வெற்றிப்பெற்றதாக செய்திதாள்களும் சோனியாவிற்கு புகழ்மாலை சூட்டினர்.

இவர் உள்ளே வெளியே ஆடியதால் யாருக்கு நஷ்டம். பொதுமக்களின் வரிப்பணம். தேவையில்லாமல் ஒரு தேர்தலுக்கு செலவானது மக்களின் வரிப்பணமே. இந்திய அரசாங்கம் மூலம் செலவளிக்கப்பட்ட இந்த பணத்தை வெற்றிபெற்றதால் திரும்ப கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததா ?

இந்த தேவையற்ற ஒரு தேர்தலை நடத்துவதற்கு பாஜகாவும், அந்த மானில கட்சிகளும் கூட காரணம். பலத்த செல்வாக்குடன் சோனியா வெற்றி பெறுவது உறுதி என்று இந்த கட்சிகளுக்கு தெரியாதா ? இவர்கள் போட்டியிடவில்லை யென்றால் சோனியா போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்டிருப்பார். மிகப் பெரிய தேர்தல் செலவான பொதுமக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டிருக்காது.

இவர்கள் வீன், வரட்டு பிடிவாதங்கள் தான் தேவையற்ற தேர்தலும், தேர்தல் செலவும்
பாஜக போன்ற கட்சிகள் தாங்கள் சோனியாவிற்கு எதிராக போட்டியிடாமல் ஒதுங்கி இருப்பதற்கு சரியான காரணம் மக்கள் வரிப்பணம் வீன் விரயம் ஆக விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அந்த கட்சிகளின் மேல் பொதுமக்களுக்கு மதிப்பு கூடும்.
சோனியா நேர்மையானவராக இருந்திருந்தால் பதவியை துறந்தவுடன் மறுபடி போட்டியிட்டிருக்க கூடாது. வேறு ஒருவரை போட்டியிடச் செய்திருக்கலாம், அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருந்து பிறகு போட்டியிடலாம்.

காங்கிரஸ் கட்சி மக்கள் நலனில் அக்கரை கொண்டிருந்தால், இந்த தேவையற்ற தேர்தலுக்கான செலவு அவர்களுடைய கட்சி வேட்பளாரால் ஏற்பட்டது என்பதால் அந்த செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

பாஜக கட்சி நேர்மையானதாக இருந்திருந்தால் இப்படி ஒரு தேவையற்ற தேர்தலே நடந்திருக்காது.

இவர்கள் போடும் ஆட்டத்துக்கு இறைப்பது ஊரார் பணம்

3 கருத்துகள்:

நாகை சிவா சொன்னது…

நல்ல பதிவு. நியாமான கேள்விகள். மக்கள் வரி பணத்தை பத்தி அவர்க்களுக்கு என்ன கவலை. அரசியல் ஆதாயம் கிடைத்தால் சரி.

அவர் ராஜினாமா செய்த போது நான் போட்ட பதிவு.
http://tsivaram.blogspot.com/2006/04/blog-post_04.html

Boston Bala சொன்னது…

---பாஜக கட்சி நேர்மையானதாக இருந்திருந்தால் இப்படி ஒரு தேவையற்ற தேர்தலே நடந்திருக்காது.---

பாஜக தேர்தலில் நிற்காவிட்டாலும், உ.பி.யில் இருக்கும் பிற கட்சிகளான சமாஜ்வாதி, உமா பாரதி புதிய கட்சி, கல்யாண் சிங் தவிர மற்ற அதிருப்தி பாஜக, பகுஜன், போன்றவர்களும், சுயேச்சைகளும் நின்றிருப்பார்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றி பாலா,
அங்கு எந்தந்த கட்சிகள் போட்டியிட்டன என்ற விபரம் தெரியாது, அதனால். இந்த தேவையற்ற ஒரு தேர்தலை நடத்துவதற்கு பாஜகாவும், அந்த மானில கட்சிகளும் கூட காரணம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். சோனியா வெற்றி பொறுவது இவர்கள் எல்லோருக்கும் தெரியுமே. ஜென நாயகத்தை குறைத்துமதிப்பிடாமல் நான், அதே சமயத்தில் ஜெனநாயகம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு தேவையில்லாத வெட்டிச் செலவுக்கு இழுத்துவிட்டார்கள் என்று கூறுகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்