பின்பற்றுபவர்கள்

1 மே, 2006

தேர்தல் முடிவு 4:

மே.10 கடந்த மே8ல், தமிழ்னாடு மட்டுமல்லாது, இந்தியாவே திரும்பிபார்க்கும், அதிர்ச்சியாக தமிழக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இதன்படி தான் போட்டியிட்ட 225 இடங்களில் 148 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. இது தமிழக பாரம்பரிய கட்சிகளான திராவிடக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெருத்த பின்னடைவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதனைப் பற்றி குறிப்பிட்ட் பா.ஜ.கவின் தமிழக தலைவர் இல.கனேசன் திராவிடக்கட்சிகளும், காங்கிரஸும் தமிழக மக்களை வஞ்சித்து வந்ததாகவும். மாறி மாறி ஏமாற்றியதாகவும், அதனால் ஒட்டுமொத்த தமிழகமே எழுந்து புரட்சி செய்து பா.ஜ.காவை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் திரு சி.பி.இராதகிருஷ்னன் தெரிவித்த கருத்துக்களில், ஒட்டுமொத்த உலகத்தின் ஒரே ஜெகத் குரு ஷ்ரீ ஷ்ரீ ஷ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, கடவுளின் அவதாரம், மகாபுருஷர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தமிழக அரசு பொய்வழக்கில் கைது செய்த போது ஏற்ப்ட்ட அனுதாபம் காரணமாக எழுந்த அலைகாரணமாக தாங்கள் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் இத்தகைய விரும்ப தகாத நிகழ்வுகளினால் தமிழகம் சுனாமி போன்ற சோகங்களை சந்தித்ததாகவும், இன்நிலை தொடரக்கூடாது என்று பரிகாரமாக பா.ஜ.கவை மக்கள் தேர்ந்தெடுத்ததாக அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

மே.11. நடந்த தமிழக சட்டசபை
தேர்தலில் பா.ஜ.க பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து, மாகா ஷிரி ஜெயேந்திர சரஸ்வதிகள் சுவாமிகள் தலைமையிலான உயர்மட்ட குழு யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை ஆலோசித்து வருகிறது. அவர்களுடைய கட்சி வெற்றி பெறும் என்பது முன்னமே தெரியாது போனதால் தற்பொழுது திடீர் தேர்தல் வாக்குறுதி அறிக்கை தயாரித்ததாகவும் அதன்படி, இந்துக்கள் அனைவரது தெருக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பிள்ளையார் கோவில் இலவசமாக கட்ட இருப்பதாகவும், மசூதிகள் சர்சுகள் அனைத்து ஸ்தலங்களும் இந்து கோவில்கள் போல் அரசே நிர்வாகம் செய்ய இருப்பதாகவும், பழைய இடஒதுக்கீடு முறையை ஒழித்து சீர்திருத்தப் போவதாகவும், அரசு பள்ளிகளில் சீருடையில் காக்கி அரைக்கால் டவுசர் அறிமுகப் படுத்தப் படுமென்றும், தமிழக அரசின் சட்டதிட்டங்களை பரிசீலித்து , சீர்படுத்த மடாதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் அதன் பிறகே , அமைச்சரைவைக்கு ஒப்பு(தலு)க்கு அனுப்பபடும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

மே. 12. கிரக திசைகளும், பலன்களும் இன்று சரியில்லாத காரணத்தால், முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் குழு இரண்டு நாட்களுக்கு செயல்படாது என்ற பத்திரிக்கை குறிப்பு மட்டும் பா.ஜ.க அலுவலகம் லோட்டசிலிருந்து அனுப்பி வைக்கப் பட்டது.


மே. 15. ஜெயேந்திரர் தலைமையிலான பா.ஜ.க வேட்பாளர் குழு, ஜெனத கட்சி தலைவர் திரு சு.சாமி எனப்படுகின்ற சுப்ரமணிய சுவாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தது. அதன் செய்தி அறிக்கையில், திரு சு.சுவாமி, ஜெயேந்திரர் கைதுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியதிற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்திருந்தது.

திரு சு.சாமி தனது கருத்தை சற்று ஆவேசமாக, மாமி என்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை குறிப்பிட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பியது தன் வாழ்னாள் சாதனை என்று குறிப்பிட்டு, ஜெ. வை விரைவில் ஜெயிலுக்கு அனுப்ப போவதாகவும் தெரிவித்தார்.


பின்குறிப்பு : பாஜக வெற்றியைப் பற்றி தமிழக கட்சித் தலைவர்களின் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டமாக பதிய வேண்டுகிறேன். அப்படியே இந்த பதிவிற்கான பின்னூட்டங்களையும் தெரிவியுங்கள்


அடுத்து ஒரு சீரியஸ் பதிவு அது தேர்தல் முடிவு 5: இது நான் மிகவும் எதிர்ப்பார்பது, எதிர்பாருங்கள் அடுத்த பதிவில்... தேர்தல் முடிவுகள் பற்றிய இறுதி பதிவு.தேர்தல் முடிவு 5: தொடரும்...

2 கருத்துகள்:

SK சொன்னது…

'நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார், நிலவே!
நேரில் நடந்ததெல்லாம்
வேடிக்கை பார்த்திட்ட
நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார், நிலவே!'

[நிலவு== சந்த்ரமௌலி]

தங்களின் இந்த முடிவு அப்படியே பலிக்க, சந்த்ரமௌலீஸ்வரரை வேண்டுகிறேன்!
'கேப்டன்+BJP கூட்டணி அரசு நடக்கும் நிலையும் வரலாம்!

நீங்கள் வெளியிடுவது போல, இது எது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய தேர்தல்!
ஏன் இப்படியும் நடக்கக்குடாது!?

குறும்பன் சொன்னது…

// திரு சு.சாமி தனது கருத்தை சற்று ஆவேசமாக, மாமி என்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை குறிப்பிட்டு //
சு.சாமி அடிக்கடி அமெரிக்கா போயிட்டுவருபவர் அதனால மாமி ( அம்மா ) அப்படின்னு சொல்லியிருப்பார். நீங்க தவறா புரிஞ்சிக்காதிங்க. :-)
பாசக காரங்க இந்த மாதிரி பதிவை பார்த்துதான் மகிழனும்.
பாசக காரங்கள மகிழ்விக்கனும்னு பதி போட்டீங்களா? இல்ல பாசக வை கிண்டல் பண்ணி பதிவுபோட்டீங்களா? நோக்கம் புரியலையே? ;)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்