பின்பற்றுபவர்கள்

5 மே, 2006

சிறுத்தையும் மாம்பழமும்.

எலியும் பூனையுமாக இருந்தவர்கள் தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸ¤ம், தமிழ் பாதுகாப்பு என்ற பெயரில் இணைந்துவிட்டார்கள். எதிரணியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளாது தேர்தல் வரையில் தொடர்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சென்ற முறை தேர்தலில் வடமாவட்டங்களுக்கான தேர்தலுக்கு துணை ராணுவம் வேண்டுமென்ற திருமாவளவன் இந்த முறை பா.ம.க பற்றி மூச்சு விடவில்லை.

சகட்டு மேனிக்கு எதிரணியை தாக்கும் மருத்துவர் ராமதாஸ¤ம், சிறுத்தைகளை சீண்டுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அணிமாறி வசைமாரி பொழிபவர்கள் அதாவது, வைகோ, இன்பத்தமிழன், விஜய டி ராஜேந்தர், சரத்குமார் போன்றோர்கள் முந்தைய நாள் வரை கட்சியில் இருந்துவிட்டு காரி உமிழ்பவர்கள் தொல்.திருமாவளன் மற்றும் மருத்துவர் ராமதாசிடமிருந்து கற்றுக் கொள்வார்களா ?


தொல்.திருமாவளவனும், மருத்துவர் ராமதாஸ¤ம் சேர்ந்து இருப்பது வடமானிலங்களில் தேர்தல் அமைதியாக நடக்கும் என்று நம்பிக்கையை கொடுக்கிறது. மாம்பழம் பழத்து விட்டதாகவே தெரிகிறது. சிறுத்தையும் பழகிவிட்டதாக தெரிகிறது. சிறுத்தையும் மாம்பழமும் நகையும் சதையுமாக இருப்பது எல்லோருக்கும் நல்லது. பெரிய கட்சிகளுக்குத்தான் ஏமாற்றம்.



இவர்களை தமிழ் இணைத்திருக்கிறது என்பதில் எமக்கெல்லாம் மகிழ்ச்சி.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இவர்களை தமிழ் இணைத்திருக்கிறது என்பதில் எமக்கெல்லாம் மகிழ்ச்சி.//

பெயரில்லா சொன்னது…

//பெரிய கட்சிகளுக்குத்தான் ஏமாற்றம்.



இவர்களை தமிழ் இணைத்திருக்கிறது என்பதில் எமக்கெல்லாம் மகிழ்ச்சி
//
எனக்கும் மிக்க மகிழ்ச்சி, ஆனால் பாவம் கட்சிகளுக்கும் வேறு சிலருக்கும் கூட இது மகிழ்ச்சியாக இருக்கு அதனால் தான் அதை இப்படி எழுதி மகிழ்கின்றார்கள்
////தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது
//
http://rajniramki.blogspot.com/2006/04/blog-post_29.html

பெயரில்லா சொன்னது…

எல்லாம் சும்மா விளம்பர ஸ்டன்ட் தல..எங்க ஒரு சிறுத்தைக்கு மாம்பழ காரர் சம்மந்தி ஆக சொல்லுங்க பாப்போம்...

TBCD சொன்னது…

ஏதோ, உள் குத்து இருக்கு..அங்கே..

இரண்டு பேருக்கும்மே சாதிக்கட்சி என்ற பேரிலிருந்து வரனும் என்கின்ற ஆவல்..

அதனால்..இப்படி பேசி வைச்சிக்கிட்டு ஒன்னாகிட்டாப்ல தெரியுது..

அதுவும் இல்லாம, சாதிக் கட்சிக்கு சாதி கட்சி ஆதரவு தெரிவிக்கலையின்னா எப்படி..

எண்ணெய் வியாபாரிகள் சங்கம் என்பது போல், சாதி கட்சிகள் சங்கம் ஏதும் இருக்குதோ என்னாமோ..?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்