பின்பற்றுபவர்கள்

19 மே, 2006

வைகோவுக்கு இனி தடையில்லை.

வைகோஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மதிமுகவை வெளியேற்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி முடிவெடுத்ததாக தெரிகிறது. இதன்படி ஐமு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு மதிமுக தலைவர் வைகோவுக்கு அழைப்பு அனுப்பப் படவில்லை, மேலும் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க உள்ள விருந்துக்கும் மதிமுக எம்.பிக்கள் அழைக்கப்படவில்லை.

அணி மாறினாலும் இது நாள் வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தார் வைகோ. இனி அவரது சொல்லாடல் காங்கிரசை நோக்கி திரும்பும் என்று நினைக்கத்தோன்று கிறது. தேர்தல் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி தூரோகிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று கூறியதையும் இங்கு நினைவு கூறத்தக்கது.

வைகோ தொடர்ந்து அரசியல் களத்தில் பொதுமக்களிடம் தன் கட்சியையும் விரிவுபடுத்துவதற்கு முன்னைவிட முனைப்புடன் செயல்படுவார் என்று நினைக்க முடிகிறது. சிறந்த பார்லிமென்டேரியன் என்று பெயர்வாங்கிய வைகோ தன் கட்சி எம்பிக்களை எப்படி வழிநடத்துவார் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு

9 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

hi r u from sg? jsut now am g through ur blog


singh.jayakumar.

http://singaarakumaran.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

சிங். செயகுமார். said...
hi r u from sg? jsut now am g through ur blog

ஆமாம், இங்கே தான் குப்பை கொட்டுகிறேன், இப்பொது தமிழ் மணத்திலும்

பெயரில்லா சொன்னது…

forward ur mail id

பெயரில்லா சொன்னது…

ஆட்சிக்கூட்டணியில் அங்கம் வகிப்பதால், காங்கிரசையும், சோனியாவையும் வைகோ தேர்தலின் போது நாகரீகம் கருதி விமர்சிக்கவில்லை. அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது. //
காங்கிரசை தாக்க வைகோ முன்னே நீங்கள் தயாராகிவிட்டது போல் தெரிகிறது :)

பெயரில்லா சொன்னது…

வைகோ வோட அரசியல் நாகரீகம் தான் ஊருக்கே தெரியுமே!:)

அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல....

கோவி.கண்ணன் சொன்னது…

//அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல.... //
இதெல்லாம் ... சகஜம்

பெயரில்லா சொன்னது…

//ஆட்சிக்கூட்டணியில் அங்கம் வகிப்பதால், காங்கிரசையும், சோனியாவையும் வைகோ தேர்தலின் போது நாகரீகம் கருதி விமர்சிக்கவில்லை. அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது.//

நானும் இதே கருத்துக் கொண்டவன் தான்.

பெயரில்லா சொன்னது…

//அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல....//

அப்போ கலைஞர் என்ன செய்துகொண்டிருந்தார்?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்