ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து மதிமுகவை வெளியேற்ற மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி முடிவெடுத்ததாக தெரிகிறது. இதன்படி ஐமு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு மதிமுக தலைவர் வைகோவுக்கு அழைப்பு அனுப்பப் படவில்லை, மேலும் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்க உள்ள விருந்துக்கும் மதிமுக எம்.பிக்கள் அழைக்கப்படவில்லை.
அணி மாறினாலும் இது நாள் வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தார் வைகோ. இனி அவரது சொல்லாடல் காங்கிரசை நோக்கி திரும்பும் என்று நினைக்கத்தோன்று கிறது. தேர்தல் பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி தூரோகிகளுக்கு பாடம் புகட்டவேண்டும் என்று கூறியதையும் இங்கு நினைவு கூறத்தக்கது.
வைகோ தொடர்ந்து அரசியல் களத்தில் பொதுமக்களிடம் தன் கட்சியையும் விரிவுபடுத்துவதற்கு முன்னைவிட முனைப்புடன் செயல்படுவார் என்று நினைக்க முடிகிறது. சிறந்த பார்லிமென்டேரியன் என்று பெயர்வாங்கிய வைகோ தன் கட்சி எம்பிக்களை எப்படி வழிநடத்துவார் என்பது தான் இப்போதைய எதிர்பார்ப்பு
9 கருத்துகள்:
hi r u from sg? jsut now am g through ur blog
singh.jayakumar.
http://singaarakumaran.blogspot.com
சிங். செயகுமார். said...
hi r u from sg? jsut now am g through ur blog
ஆமாம், இங்கே தான் குப்பை கொட்டுகிறேன், இப்பொது தமிழ் மணத்திலும்
forward ur mail id
ஆட்சிக்கூட்டணியில் அங்கம் வகிப்பதால், காங்கிரசையும், சோனியாவையும் வைகோ தேர்தலின் போது நாகரீகம் கருதி விமர்சிக்கவில்லை. அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது.
//அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது. //
காங்கிரசை தாக்க வைகோ முன்னே நீங்கள் தயாராகிவிட்டது போல் தெரிகிறது :)
வைகோ வோட அரசியல் நாகரீகம் தான் ஊருக்கே தெரியுமே!:)
அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல....
//அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல.... //
இதெல்லாம் ... சகஜம்
//ஆட்சிக்கூட்டணியில் அங்கம் வகிப்பதால், காங்கிரசையும், சோனியாவையும் வைகோ தேர்தலின் போது நாகரீகம் கருதி விமர்சிக்கவில்லை. அந்த அடிப்படை நாகரிக்கம் கூட காங்கிரஸிடமும் சோனியாவிடம் இல்லாமல் போனது வருத்தத்திற்குறியது.//
நானும் இதே கருத்துக் கொண்டவன் தான்.
//அதுவும் குஜராத் படுகொலைகளை ஆதரித்து அவரு பேசிய பேச்சு இன்னமும் பாராளுமன்றத்துல எதிரொலிச்சுக்கே இருக்காம்ல....//
அப்போ கலைஞர் என்ன செய்துகொண்டிருந்தார்?
கருத்துரையிடுக