பின்பற்றுபவர்கள்

8 மே, 2006

மதிமுக சில எண்ணங்கள் ...

இந்த பதிவு இன்றைய ஓட்டுப் பதிவை பாதிக்காது என்பதால் எழுதுகிறேன்.


திரு மு.க தன்னை எதிர்த்து கட்சி ஆரம்பித்து தன்னிடமே கூட்டணி பேசும் வைகோவை நாடாளுமன்ற தேர்தலில் சேர்த்துக் கொண்டாலும், தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அவருக்கு பின்னடைவு என்ற சொல்லலாமா ?

வைகோவை கட்டுப்பாட்டில் வைப்பதைவிட தனித்து விடுவதே வருங்கால திமுகாவினற்கு நல்லது என்ற நோக்கமாகவும் இருக்கலாம், ஒருகாலும் திமுக தொண்டர்களின் அனுதாபம் வைகோவிற்கு வந்து விடக்கூடாது என்ற நோக்கிலும், அதே சமயத்தில் மதிமுக தொண்டர்கள் திமுகவின் பக்கம் சாய வைக்க வேண்டும் என்று காய் நகர்த்தப்பட்டதாகவும் அனுமானிக்க முடிகிறது.


ஒரு வேளை வைகோ 15 சீட் கேட்டிருந்தால் கூட இவர்கள் 13 சீட்டு மேல் தரமுடியாது என்று சொல்லியிருப்பார்கள். சீட்டே கேட்கவில்லை யென்றாலும், திமுகவிற்கு ஆதரவாக மேடை ஏரவேண்டாமென்று சொல்லியிருப்பார்கள்.


போடோ சிறைவாசத்தினால் வைகோ எப்படியும் தனித்து நிற்கவே துணிவார், தங்களை மிரட்டுவதற்காகவே ஜெ அணியில் சேருவதாக போக்கு காட்டிவருகிறார் என்றுதான் நினைத்திருந்தது அதன் படியே, திருச்சி மாநாட்டு திடலில் வைகோவின் கட்வுட் கடைசி நிமிடம் வரை வைக்கப்பட்டிருந்தது.


வைகோ திமுகவின் எண்ணங்களை நன்கு அறிந்திருந்தார், அவர் திமுகவிற்கு நல்ல பதிலடி கொடுக்கவேண்டு மென்றால் ஜெவுடன் கூட்டணி சேருவது சரி என்று பலத்த யோசனைக்கு பிறகு முடிவெடுத்தார். அதற்கு முன் சொந்த ஊரிலாவது ஒரு கருத்து கணிப்பு நடத்திவிட்டு சேர்ந்திருக்கலாம், செய்யாமல் விட்டது பெருந்தவறு ஆகி மக்கள் மன நிலையை கணிக்க தவறிவிட்டார்.


மக்கள் மனநிலை அப்படியா இருக்கிறது, சிறையில் சந்தித்து வெளியில் வரக்கோறிய கருணாநிதியை விட்டு விட்டு சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்ததை யாரும் ரசிக்கவில்லை என்றே தேர்தல் கால எஸ் எம் எஸ் கலாட்டாக்கள் தெரிவிக்கிறது.

மு.கவை திட்டியிருந்தாலோ, இளைய தளபதியை திட்டியிருந்தாலோ யாரும் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள், அதிமுகவின் செயல்திட்டங்களையும், வாக்குறுதிகளைமட்டும் தொட்டு பேசியிருக்கலாம். மாறாக, ஜெவை புண்ணியவதி என்று புகழ்ந்ததை யாரும் ரசிக்கவில்லை மாறாக வெறுப்பையே தந்தது என்று சொல்லாம், மக்கள் அங்குதான் சந்தர்ப்பவாதி என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.


வைகோ தலைமையில், பாஜக, தேமுதிக, மற்றும் சிறிய கட்சிகளுடன் பேசி மூன்றாவது அணி அமைத்திருந்தால் நிச்சயம் 60 சீட்டுகளாவது இந்த கூட்டணிக்கு கிடைத்திருக்கும்.


மருத்துவர் ராமதாஸ் அணி மாறினால் பொதுமக்களும், கட்சிகளும் கூட பெரிய விசயமாகவோ நினைப்பதில்லை. இதே வழியில் சென்று வைகோ எதிர்காலத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயங்காமல் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற அனுபவத்தை தற்போதைய சந்தர்பவாதம் எனப்படுகின்ற இன்றைய ஜெ கூட்டணி போன்றே மற்றக் கட்சிகளுடன் தொடருமானால், அது அவருக்கும் அவருடைய கட்சிக்கு பா.ம.க போல் வளர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


சந்தர்பவாதம் என்ற குற்றச் சாட்டை தொடர்ந்து சொல்லமுடியாது,பல சந்தர்ப்ப வாதங்களினால் கிடைத்த தொடர் வெற்றி பின்னாளில் சாணக்கியம் எனச் சொல்லப்படுவதை வரலாறு காட்டுகிறது.

அதற்கு மருத்துவர் ராமதாஸ் நல்ல உதாரணம்.


வைகோ சாணக்கியராக மாறுவாரா ? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

பின்குறிப்பு : ஜெயகுமார் குளிர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன ஜெயக்குமார் சந்தோசம் தானே ?

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வைகோ கண்டிப்பாக "சாண"*க்கியராக மாறினார் என்பதை அவருடைய முகமே 11ம் தேதி நன்பகல் காட்டும்.

பெயரில்லா சொன்னது…

உங்கள் அலசலில் அத்தனையும் உண்மையோ உண்மை.
எல்லா திமுக கண்மணிகளுக்கும் வைகோ என்றால் ஒரு
soft corner உள்ளத்தில் எங்கோ ஒழிந்து
இருந்தது. அது என்றைக்குமே திமுகவின்
எதிர்காலத்திற்கு (குறிப்பாக தளபதி காலத்திற்கு) ஒரு தடைகல்லாய் வரும் என்பதை உணர்ந்து திமுக நடத்திய முன் எச்சரிக்கை நடவடிக்கை இன்று ஓவ்வொரு திமுககாரனும் ஒறுத்து ஒதுக்கும் ஓர்
கோமாளியாய் போனார்.

கோவி.கண்ணன் சொன்னது…

பொட்டிக் கடைக்காரரே வருகைக்கு நன்றி. விருப்பி வெறுப்பின்றி எழுத நினைத்து அரசியல் பார்வையாளன் என்ற முறையில் எழுதினேன். இது தற்போதைய தேர்தல் முடிவுகளைக் குறித்து எழுத்தப்பட்டது அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

சின்னப் பிள்ளையின் கருத்துகளுக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

வெற்றி பெற்றால் மட்டுமே சாணக்கியராக வருவதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஏனக்கென்னமோ இவர் ஒரு ஜோக்கராகவே ஆவார் என தோன்றுகிறது. இதைப் படியுங்கள்

பெயரில்லா சொன்னது…

//பல சந்தர்ப்ப வாதங்களினால் கிடைத்த தொடர் வெற்றி பின்னாளில் சாணக்கியம் எனச் சொல்லப்படுவதை வரலாறு காட்டுகிறது. //

இதில் இராமதாஸ் மட்டும் இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும் அடக்கம். கொள்கை என்பதும் தேர்தல் கால கூட்டும் சம்பந்தம் இல்லாதவை. அரசியல் கட்சியாக இல்லாமல் ஒரு இயக்கமாக செயல்பட்டு வரும் தி.க வே அந்த அந்த கால கட்டத்திற்கு ஏற்ப தி.மு.க அ.தி.மு.க என்று மாறி மாறி ஆதரவு நிலையை எடுத்து வருகிறது.

யாரிடமும் தொலை நோக்குப் பார்வை இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

நந்தன்,
வைகோ எத்தனை சதவிகிதம் ஓட்டு பெற்றுள்ளார் எனபதை கணக்கிட்டே இதுகாறும் தொகுதிப் பங்கீடுபற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, எனவே வெற்றி / தோல்வி என்பது எத்தனை சீட்டுகள் என்பதை கூட்டவோ குறைக்கவோ அளவுகோலகப் பயன்படும் என்பது என்கருத்து.

கல்வெட்டு, உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி

பெயரில்லா சொன்னது…

வைகோ ஜோக்கர் தான்... சந்தேகமேயில்லை...

பெயரில்லா சொன்னது…

Your analysis is right. Vaiko's decision was unavoidable. on the other way, he was simply forced away by the DMK.

People of TN always tend to forget the past. They will forget everything in the next 5 years. So, anything may happen in next election "Kootani".

பெயரில்லா சொன்னது…

as a leader of a party, what he has done is perfecly correct....
you know, once mk and mgr were ready to have an alliance ?(in the pressence of biju patnaick in 1980)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்