நான் இதை லாவனியாக எழுதித் தொடரவிரும்பியதில்லை, என்னைப் பொருத்த அளவில் முரண்பாடுகளை எடுத்து சொல்வது தேவையானது என்ற அளவில் விமர்சனங்களாக அவற்றை எழுதுவேன், அது லாவனியாகவோ அல்லது எதிர்வினையாகவோ தெரிந்தால் நான் பொறுப்பு இல்லை. முரண்பாடுகளின் மூட்டையாக அல்லது கூமுட்டையாக இருப்பவர்கள் அடுத்த முறை எதையாவது எழுதும் பொழுது தன்னை, தன்னுடைய கொள்கை சார்ப்பு நிலை பற்றிய மதிப்பீடு செய்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
*****
*****
அன்பு நண்பர் சுபி (சுவனப்பிரியன்) 'ஒரு பவுத்தன் என்ற வகையில் வெட்கித் தலை குனிகிறேன்' என்று தலைப்பிட்டு ஒரு பதிவை எழுதி இலங்கையில் யாரோ இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் மீது நடத்திய தாக்குதலுக்காக யாரோ வெட்கித் தலைகுனிந்ததாக அறிவித்ததை எழுதி ஒட்டுமொத்த மனித குலத்திற்கு மனித நேயப் பாடம் படித்துள்ளார். மகிழ்ச்சி.
இவற்றையெல்லாம் மறந்து இன்று தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு எனது இனத்தைச் சேர்ந்த சில தீய சக்திகள் முயற்சிப்பதையிட்டு ஒரு பௌத்தன் என்ற வகையில் நான் வெட்கித் தலை குனிய வேண்டியுள்ளது."
உலகில் நடைபெறும் மதவாத செயல்களில் ஈடுபட்டு மாற்று மத மனித குலத்திற்கு தங்கள் மதம் கேடு விழைவித்திருந்தால், அந்த மதத்தில் தொடர்பு உள்ளவர்களில் சார்பு உள்ளவர்களில் ஒரு சிலர் மனம் இளகி 'இந்த மதத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்' என்று சொல்லுவார்கள். இதுவே உலக நடைமுறை.
ஆஸ்திரேலியாவின் பாதிரியாரையும், அவரது குழந்தைகளையும் உயிரோடு எரித்த பிறகு 'இந்து' என்பதால் வெட்கம் அடைந்தோர் பலர், இது போல் உலகின் மதவாத செயல்கள் நடைபெறும் பொழுது அந்த மதத்தைச் சார்ந்தவர் ஒருசிலராவது வெட்க்கப்படுபவார்கள், அந்த மதங்களைப் பின்பற்றுபவர்களில் சிலருக்கு மனிதாபாபிமானம் உண்டு என்பதற்கு இவை தான் சாட்சி. தவிர அந்த மனிதாபிமானிகள் ஒரு சிலரை வைத்து அந்த மதத்திற்கு புனிதர்கள், நல்லவர்கள் நிறைந்த மதம் என்று சான்றிதழ் வழங்கிவிட முடியாது என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. நிற்க.
எனக்கு தெரிந்து பதிவு எழுதும் சுபி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் இஸ்லாம் பெயரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கிஞ்சித்தும் இது போல் வருத்தப்பட்டதோ, வெட்க்கப்பட்டதோ கிடையாது. மாறாக 'இஸ்லாத்தை சரிவர பின்பற்றாததினால் தான் அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்' என்றே சொல்லி வந்தனர். அதே போன்று ஏன் பவுத்த மதவாதிகள் பவுத்தத்தின் அன்புவழியை சரியாக பின்பற்றாததால் தான் மதவெறியர்களாக மாறியுள்ளனர், இஸ்லாமிய பள்ளி வாசல்களை இடித்துள்ளனர், விரைவில் அவர்கள் உண்மையான பவுத்திற்கு செல்வார்கள்அல்லது செல்லும் படி இறைவன் நாடவேண்டும் என்று இவர்களால் ஏன் நினைக்க முடியவில்லை ?
மதவெறியால் கேரளாவில் ஆசிரியர் ஒருவர் கார்டூன் வரைந்தார் என்பதற்காக தலிபான் பாணி தீர்ப்பு வழங்கி அவரின் கைகளை துண்டித்தனர், சுபி போன்றவர்கள் அமெரிக்க இரட்டை கோபுரத்தை அமெரிக்காவே தகர்த்து கொண்டது என்றே தகவல் பரப்பிவருபவர்கள், கிஞ்சித்தும் பாமியன் மலைக்குன்றில் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை பீரங்கி வைத்து தகர்த்த அல்கொய்தா, தலிபான் செயல்களை இவர்கள் கண்டித்தோ, அல்லது அந்த தீவிரவாத கும்பல்களும் இஸ்லாமியர்கள் என்பதால் இவர்கள் வெட்கப்பட்டதும் கிடையாது. பின்லேடனுக்கு சென்னையில் நடந்த சிறப்பு தொழுகையையும் கண்டித்தோ அதற்காக ஒரு இஸ்லாமியர் என்பதால் இவர்கள் வெட்கப்பட்டதோ கிடையாது.
மதத்தின் பெயரால் தீமைகள் நடந்தால் அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் வெட்கம் அடைவது தான் நடைமுறை, இதைத்தான் சுபி சொல்லாமல் எழுதி இருக்கிறார். ஆனாலும் அவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே நம் விருப்பமாகும். சுபி எழுதிய பதிவைப்படித்து இனிமேலாவது தீவிரவாத செயல்களுக்கு இவர்களும் வெட்கம் அடைவார்கள் என்று நம்புவோம்.
உலகில் நடைபெறும் மதவாத செயல்களுக்கெல்லாம் அந்தந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் வெட்கப்பட்டு கண்டனம் தெரிவித்தால் அன்றி மதவெறியை தடுத்து நிறுத்தலாகாது.
உலகில் நடைபெறும் மதவாத செயல்களுக்கெல்லாம் அந்தந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் வெட்கப்பட்டு கண்டனம் தெரிவித்தால் அன்றி மதவெறியை தடுத்து நிறுத்தலாகாது.
இன்ஷா அல்லா.
27 கருத்துகள்:
நல்ல கருத்து. ஆனால் நல்லவைகளை ஏற்றுக்கொள்ளும் புத்தி மனிதனுக்கு கிடையாதே!
கோவி,
விடுறா மாதிரியில்லை, பாவம் சு.பி மண்டைக்காஞ்சு போயிருப்பார் ஏற்கனவே நீங்க வேற மொளகாப்பொடியை தூவுறிங்க :-))
//ஆனாலும் அவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே நம் விருப்பமாகும். //
அதே ...அதே என் விருப்பம்னும் சேர்த்துக்கோங்க.
நானும் அதனைப் படித்தேன் சகோ. முதலில் இவர்கள் ஏன் இதற்கு இப்படி உணர்ச்சி வசப்படுகின்றார்கள் என எனக்குத் தெரியவில்லை.
வன்னிப் போரில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் சாகும் போது அனைவரும் மூடிக் கொண்டே இருந்தனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அதனை சாட்டை செய்யவே இல்லை என்பது தான் உண்மை.
அடுத்து இலங்கை ஒரு பௌத்த நாடாகும், அங்கு அவர்களின் பௌத்த தருமம் என்பதே சட்டமாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
சௌதியில் இருந்தால் சௌதியின் சட்டத்தைப் பின்பற்றுவது போல இலங்கையில் இலங்கையின் சட்டத்தைப் பின்பற்றித் தான் ஆகவேண்டும்.
அடுத்து இலங்கையின் பள்ளிவாசல் உடைப்பின் உண்மை பின்னணி நமக்குத் தெரியவில்லை. இலங்கையில் இருந்து எழுதும் யாரும் நடுநிலையாக எழுதவில்லை.
அடுத்து அப்படியே பள்ளிவாசல்களை உடைக்கின்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். எப்படி தம் மதத்தின் படி முஸ்லிம்கள் பல வழிப்பாட்டுத் தலங்களை இடித்தும் மாற்றியும் கொண்டார்களோ. அதே நியாயப்படியும்.
மாலியில் மிகப் பழமையான சூபி வழிப்பாட்டு தலங்களை இடித்த சலாபி முஸ்லிம்கள் செய்வது சரி என்றே சுவனப்பிரியன் வெளிப்படையாக கூறினார். தமது மத நூலில் அப்படித் தான் செய்யும் படியும் கூறியுள்ளதாக கூறினார் அதே நியாயப்படியும்.
பௌத்த தருமத்துக்கு கேடு வந்தால், ஆபத்து வந்தால் எதிரிகளை எதிர்த்து போராடுவதில் தவறு இல்லை என்றே பௌத்த மத நூல்களும் கூறுகின்றன. அப்படி பார்த்தால் இஸ்லாமியர்களால் ஆபத்து என்ற நிலையில் பௌத்தர்கள் பள்ளிவாசலை இடித்ததும் நியாயமான ஒன்றே... !!!
ஆனால் இலங்கையில் இருக்கும் சிங்களவர்களில் பெரும்பான்மையானவர்கள் இனவெறியோ மதவெறியோ அற்றவர்கள். இல்லை என்றால் இன்று சிங்களப் பகுதிகளில் தமிழர்களோ முஸ்லிம்களோ நிம்மதியாக வாழமுடியாது. அதே போலத் தான் அந்தக் காவலரும் கூறி இருக்கக் கூடும்.. இனக் கலவரங்களின் போது தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வீடுகளில் மறைத்தும் பல சிங்களவர்கள் காப்பாற்றியுள்ளதை தமிழர்களே கூறியுள்ளனர். அதே போலத் தான் இதுவும்.
ஆனால் இன்று முளைத்துள்ள வகாபியர்கள் ஒரு பள்ளி வாசல் உடைக்கப்பட்டத்துக்கு இவ்ளோ எழுதுகிறார்களே.. சுமார் 20,000 மக்கள் சிரியாவில் இஸ்லாமியர் - இஸ்லாமியர் போரில் இறந்துள்ளனர். அதுப் பற்ற ஒரு சொட்டுக் கண்ணீரை விட்டார்களா.. இல்லை எப்படியாவது அசாத் வெளியேற வேண்டும், அமெரிக்கத் துணையோடு வகாபியம் அங்கும் கொடிக் கட்ட வேண்டும். சியா, அல்லாவி முஸ்லிம்கள் மற்றும் கிருத்தவர்கள் ஓரம் கட்டப்பட வேண்டும். அதற்கு அப்பாவி மக்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன. பக்ரைனில் சுன்னி மன்னர்கள் மக்களை சுட்டுக் கொன்றார்கள்.. சௌதியில் சியா மக்களை அடித்து விரட்டி மிரட்டி வருகின்றார்கள்.. அது எல்லாம் கண்ணுக்குத் தெரியாது இவர்களுக்கு. இராக்கில் தினம் தினம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மக்கள் வெடிகுண்டுகளுக்கு இலக்காகி செத்து வருகின்றார்கள். அது எல்லாம் தெரியாது ..
அத்தோடு விட்டார்களா.. ஹாலந்தில் முகம்மதுவின் கார்டூனை வரைந்தார் என ஒருவரைப் போட்டுத் தள்ளினார்கள்... கொஞ்ச நாள் முன்னர் பிரான்சில் இரவில் பர்த்தா போட்டுவிட்டு அலைபவரை அந்நாட்டு சட்டப்படி முகத் திரையை விலக்குங்கள் எனக் கேட்டதுக்கு போலிசையை அடித்து உதைத்துள்ளார்கள்.
பாகிஸ்தானின் பெரும் விஞ்ஞானியும் ஹிக் போசானை கண்டுப்பிடிக்க பெரும்பங்காற்றிய அப்துஸ் சலாம் அவரின் ஆக்கங்களை பள்ளிப் பாடங்களில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஏனெனில் அவர் ஒரு அகமதியா முஸ்லிம் என்பதால்.
ஆக நியாய தர்மங்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தான் தமக்கில்லை என்பது தான் அவர்கள் நியாயம். அப்படி எனில் பௌத்தர்கள் இலங்கையில் செய்ததும் சரியே. அவர்களின் மத நாட்டில் அவர்களின் மதத்தினை நிலைநாட்ட என்னவும் செய்வார்கள்... !!! முடிந்தால் கேளுங்கள் இல்லை எனில் சௌதியில் போய் தூய இஸ்லாமியனாக வாழுங்கள் !!!
( எனது நிலைப்பாட்டின் படி பௌத்தர்கள் செய்ததும் தவறே, இவர்கள் செய்வதும் தவறே )
பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க..
//பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க..//
ஞாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒன்றுமே இல்லை என்றால் வேற என்ன செய்வாங்க.
:)
//பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க..//
ஞாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒன்றுமே இல்லை என்றால் வேற என்ன செய்வாங்க.
:)
கோவி.கண்ணன் சொன்னது…
ஞாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல ஒன்றுமே இல்லை என்றால் வேற என்ன செய்வாங்க...
////////////////////////////
ஓஹோ நீங்க பதில் எதிர் பார்கிறீங்களா ...பாவம் சார் நீங்க ...
அவங்க என்ன வச்சிகிட்டா வஞ்சனை பண்றாங்க இருந்தா சொல்லிட மாட்டாங்களா .....?
இருந்தாலும் உங்க ஏதிர்பார்ப்பு ஆச்சரிய பட வைக்கிறது...
கோவி... உங்களோட பதிவுகளை கொஞ்ச நாளா படிச்சுட்டு வர்றேன். இந்த இடுகையை இன்னிக்கு காலைல இருந்தே எதிர்பார்த்தேன்.
சரியாய் சொல்லி இருக்கீங்க.
நண்பர் சுகவனபிரியன் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூட்டுக்கு என்ன பதிவு போட்டாருன்னு எனக்கு தெரியாது. அதையும் ஞாயம்னு சொல்லுவருங்கறது மட்டும் எனக்கு நல்லா புரியுது.
கோவி சார்...ஒரு தனிப்பட்டவருக்கு பதில் கூறி வீணாக உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க...
சிங்கம் புலியோடு நேரில் நின்று சண்டை போடலாம்....அது வீரம், அதுல ஒரு நியாயம் இருக்கு....கொசு வோடு யாரும் சண்டையிடுவது கிடையாது....
கொசு வலை அடிச்சிக்குறது தான் சிறந்த தீர்வு.
இக்பால் செல்வன்!
//பேச நாதிக் கெட்டவர்கள்.. மைனஸ் ஓட்டினைக் குத்த மட்டுமே தெரியும் ... !!! குத்துங்க குத்துங்க... நல்லா குத்துங்க... சிங்களவன் இலங்கையில் மொத்தமா குத்தப் போறானுங்க//
விரக்தியில் உள் மனதில் உள்ளது அப்படியே வெளி வருகிறது. எண்ணம் போல்தான் வாழ்வு. கவலை வேண்டாம். முஸ்லிம்கள் மேல் கை வைத்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சி அடையும் என்பதை அறியாதவரல்ல ராஜபக்ஷே! பல பவுத்தர்கள் இஸ்லாத்தை நோக்கி செல்வதை மட்டுப் படுத்தவே இது போன்ற நிகழ்வுகள். காலப் போக்கில் உண்மையே நிலைத்து நிற்கும்!
//நண்பர் சுகவனபிரியன் மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூட்டுக்கு என்ன பதிவு போட்டாருன்னு எனக்கு தெரியாது. அதையும் ஞாயம்னு சொல்லுவருங்கறது மட்டும் எனக்கு நல்லா புரியுது.//
நண்பர் விருச்சிகன்!
அதையும் நியாயப்படுத்துவேன் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொண்டீர்கள். அந்த தாக்குதல் நடந்த பொழுது நான் இட்ட பதிவு.
........ இந்த மனித குல எதிரிகளை இனம் கண்டு தூக்கில் ஏற்ற வேண்டும். எனது நாட்டு மக்களின் மீது அதுவும் அப்பாவி மக்கள் மீது கோழைத் தனமாக தாக்குதல் நடத்தியிருக்கும் பேடிகளை மனித ஜெனமம் என்றே கூற இயலாது.......
அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்பவன் முழு மனித சமுதாயத்தையும் கொலைசெய்தவனாவான்...அல்குர் ஆன்:5:32
.
http://suvanappiriyan.blogspot.com/2011/07/blog-post_13.html
http://www.kodangi.com/2012/08/truth-behind-the-dambulla-mosque-problems-in-srilanka.html
இந்தப் பதிவிற்கு தொடர்புடைய பதிவு ஒன்றினை எழுதியுள்ளேன்.. பார்க்கவும் ... !!!
//தற்போது சிங்கள பவுத்தர்கள் அதிகம் இஸ்லாத்தை ஏற்பதும் அதிகரித்திருக்கிறது.//
ஐயோ ! ஐயோ ! அப்ப இனி சிறி லங்காவும் போக முடியாதா? அமெரிக்கா போச்சு, ஐரோப்பாவும் போச்சு, கனடாவும் போகப்போகுது (இக்பால் செல்வனுக்கு ஏற்கனவே சாபம் குடுத்துட்டாரு). இந்தோனேசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஓட வேண்டியதுதான்.
"....அடுத்து இலங்கையின் பள்ளிவாசல் உடைப்பின் உண்மை பின்னணி நமக்குத் தெரியவில்லை. ...."
இதனை அறிய நீங்கள் பலகாலம் பினோக்கிப் போகவேண்டும். ஸ்ரீலங்காவில் ‘புனிதப் பிரதேசம்’ என பல இடங்களை பிரகடனம் செய்வார்கள். கேட்டால் அது எல்லா மததுக்கும் உண்டு என்பார்கள். ஆனால் ஸ்ரீலங்கா அரசியல் சட்டத்தில் ‘பெளத்த சாசனம்’ பற்றி உண்டு. அதாவது ஸ்ரீலங்கா அரசின் மாற்ரமுடியாத கடமைகளில் முதன்மையானது பெளத்த சாசனத்தை (வாழ்க்கை முறை ) பேணிப்பாதுகாத்தல்.
எந்தப்பிரதேசமும் ‘புனிதப் பிரதேசம்’ ஆக்கப்பட்டால் அங்கு எந்த கட்டடமோ , சாலைகளோ ஏன் ஒரு விளம்பரம் இடக்கூட அரசின் அனுமதி பெறவேண்டும். ஸ்ரீலங்காவில் ஒரு அரசமரத்தை வெட்டுவதாயின் அரசின் அனுமதி வேண்டும், காரணம் பெளத்தர் அரசமரத்தின் கீழே ஞானம் பெற்றார் என்பதனால். எங்கெல்லாம் அரசமரங்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் திடீர் புத்தர் சிலைகள் முளைப்பதற்கு 100% சாத்தியம் உள்லது. இதில் அவலம் என்னவென்றால் இந்துக்கள் கூட தமது கோவில்காணிகளில் இப்போது அரசமரம் நடுவதை தவிர்த்து ஆலமரங்களையே நடுகிறார்கள்.
இப்படியாக உள்ள ஒரு நாட்டில் தம்புள்ள என்கின்ற சரித்திர பிரசித்தி வாய்ந்த இடம் ஒன்று உண்டு. இவ்விடத்திலேயே சோழப்படையெடுப்புகளின் போது சிங்கள அரசர்களும் அவர்களின் பெளத்த பிக்கு அலோசகர்களும் மரைந்து வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்ததற்கான கற்கோயில்கள் குகைகள் இன்றும் உள்ளன, மிகப்பிசைத்தமான மத வழிபாட்டு மற்றும் உல்லாச தலம் அது.
அவ்விடத்துக்கு அருகில் பலகாலமாக (60-65 வருடங்கள் இருக்கலாம்) ஒரு சிறிய மசூதி ஒன்று உண்டு. இம்மசூதி வழமைபோல வியாபார நோக்கத்திற்காக சென்ற முஸ்லிம்களால் கட்டப்பட்டது, தொழுகையும் நடத்தி வருகிறார்கள்.
புலிகளுடன் ஸ்ரீலங்கா அரசு சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ஸ்ரீலங்கா அரசுக்க்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவைப்பட்டது. அனேக முஸ்லிம்கல் ஸ்ரீலங்கா படைகளின் துணைப்படைகளாக மாறி செயற்பட்டனர். இதில் அனேகர் புலனாய்வாளர்கள். அனேகர் மீது கற்பழிப்புக் குற்ரச்சாட்டுகள் உண்டு. அத்துடன் தமிழரது காணீகளில் இருந்து அடித்து விரட்டல் வியாபார நிலையங்களின் மீது பொய்க்குற்ரச்சாட்டுகள் இட்டு கையகப்படுத்தல் போன்றன இவர்கள் செய்யும் சைட் பிஸ்னஸ்.
புலிகளுடனான சண்டை முடிந்தவுடன் சிங்களவர்களின் பரம எதிரிகளான முஸ்லிமஉக்கு இப்போது ஆப்பு இறுக ஆரம்பித்துள்ளது. எப்படி அவர்கள் பரம எதிரிகள் ஆனார்கள் என்றால், 1915 ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் குழுவினர் பெளத்த மத ஊர்வலம் ஒன்றின்மீது கல்லெறிந்தனர். அது பெரிய சண்டையாக மாறியது. அப்போது ஆட்சியில் இருந்த பிரிட்டிசார் கலகம் செய்வோரை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார், இப்போது ஸ்ரீலங்காவில் எப்படி சந்தர்ப்பம் பார்த்து அரசுடன் இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனரோ அதேபோலவே அன்ரைய பிரிட்டிசாருடன் இணைந்து சிங்கலவருக்கு எதிராக செயற்பட்டனர். இக்க்லவரத்தில் ஆயிரக்கண்க்கான சிங்களவர் கொல்லப்பட்டனர். ஸ்ரீலங்காவின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் சிறையிடப்பட்டனர். இறுதியில் தமிழரான பொன்.ராமநாதன் சிங்கலவருக்காக வழக்காடி நியாயம் பெற்றுத்தந்தார். பின்னர் வழமைபோல சிங்கலவர் ராமநாதனுக்கும் (தமிழருக்கு) துரோகம் செய்து அவரை வெளியேற்றியது தனிக்கதை.
இன்றுவரை சிங்கலவர்கள் இந்த முஸ்லிம் ‘துரோகத்தை’ மறக்கவில்லை.
புலிகளும் மறைந்தபின் முஸ்லிம்களின் தேவை இல்லாமல் போய்விட்டது. ஆனால் முஸ்லிம்கல் ‘வகையாக’ மாட்டிக்கொண்டுள்லனர். ஒரு அலவுக்கு மேல் வாயைத்திறந்தால் இவர்களின் கற்பழிப்பு, கொலை, வயலெரிப்பு, கப்பம் பறிப்பு என பல வெளிவரும். இதில் மிகவும் முக்கியமானது பிரெஞ்சு உதவி நிறுவன ஊழியர்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதும் முஸ்லிம்களின் பங்கும். பிரான்சும் மற்றும் உலக மனித உரிமை அமைப்புகளிம் இன்றும் இதனை கிளறிவருகின்றன. அதுமட்டுமல்ல முதலாவதாக ஸ்ரீலங்காவின் போர்க்குற்ரங்களுக்கான வழக்குவிவகாரங்கள் ஆரம்பித்த போது வழக்கில் முதன்மை முறைப்பாட்டாளராக தம்மை இனைத்தவர் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி. அவர் இப்போது அமெரிககப் பிரஜை, வழக்கு அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்லது. வழக்கு நீதிமன்றத்தில் வருமாயின் ஸ்ரீலங்கா தான் தப்பிக்கொள்ள இதில் பங்குபற்றிய முஸ்லிம்களை தூக்கி உள்ளே போடும் என்பது திண்ணம்.
மீண்டும் தம்புள்ல விடயத்துக்கு வருவோம். முஸ்லிம்களின் ‘தேவை’ முடிந்த நிலையில் அவர்கலை ஓரம் கட்டும் விடயம் ஆரம்பித்துள்ளது. சொல்லப்பட்ட முஸ்லிம் பள்ளீவாசல் தம்புள்ள புனிதப்பிரதேச எல்லைக்குள் வருகிறது. ஸ்ரீலங்கா அரசுக்குள்ள கடமைகளில் முதன்மையானது பெளத்த சாசனத்தை பேணிக்காத்தல். அதன்படி இந்தப்புனிதப் பிரதேசத்தில் இருக்கும் மசூதி அகற்றப்பட வேண்டும். அதனையே இன்று பெளத்தர்கள் ‘கேட்கிறார்கள்’.
எனது பின்னூட்டம் நீண்டிருந்தால் மன்னிக்கவும்.
”...முஸ்லிம்கள் மேல் கை வைத்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சி அடையும் என்பதை அறியாதவரல்ல ராஜபக்ஷே! ...” -சுவனப்பிரியன்.
இது அடுத்த வழமையான பம்மாத்து. ஸ்ரீலங்காவின் நீதி அமைச்சர் ஒரு முஸ்லிம் அவரே கையறுநிலையில் அமெரிக்க எம்பசிக்குச் சென்று தமிழர்களின் வியாபாரங்களில் பணம்பறித்து முடித்தாயிற்றி அவர்களிடம் ஒன்றுமில்லை அல்லது வெளிநாடுகலுக்குச் சென்றுவிட்டனர். இப்போ முஸ்லிம் வியாபாரிகளிடம் பணம் பறிப்பு ஆரம்பித்து விட்டது தமிழ் வர்த்தக ஸ்தாபனங்களை இல்லாது செய்து விட்டனர் இப்போது முஸ்லிம்களில் கைவைக்கின்றனர் என ஒப்பாரி வைத்துள்ளார்.
சுவனப்பிரியன் என்னடா வென்றால் ஜோக் அடிக்கிறார். இப்ப்டியான ஜோக்குகளையே முஸ்லிம் அரசியல் வாதிகள் வழமையாக மேடைகளில் எடுத்து விடுவார்கள்.
வணக்கம் சகோ,
மதத்தலங்களை அழிப்பவன் நாகரிகமற்ற காட்டு மிராண்டி.ஆகவே ஒரு சாமான்ய சிங்களர் அதற்கு கண்டனம் தெரிவிக்கிறார்.நாம் காங்கிரஸ் அரசு செய்யும் செயலுக்கோ,மோடியின் செயலுக்கோ வக்கால்த்து வாங்குவது இல்லை.அது போல் அங்கும் ஒரு நடுநிலை உள்ளம்.இராஜபக்சே கும்பல் ஆட்சி மாறினால் பிரச்சினைக்கு தீர்வு வரும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.வாழ்க வளமுடன்!!!!!
************
ஆனால் நாம் விவாதிப்பது சகோ சுவனன் அவர்களின் விள்க்கம்
//முஸ்லிம்கள் மேல் கை வைத்தால் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவு வீழ்ச்சி அடையும் என்பதை அறியாதவரல்ல ராஜபக்ஷே! பல பவுத்தர்கள் இஸ்லாத்தை நோக்கி செல்வதை மட்டுப் படுத்தவே இது போன்ற நிகழ்வுகள். காலப் போக்கில் உண்மையே நிலைத்து நிற்கும்!//
நம் அன்பு சகோ சுவனன் மனதில் எதையும் வைக்காமல் வெள்ளந்தியாக பேசுகிறார் என்றாலும்,அதனை நம் காஃபிர் சகோக்கள் இன்னும் அதிக வெள்ளந்தியாக சிந்திக்காமல் இருப்பது நம்க்கு கவலை தருகிறது.
பெரும்பாலும் காஃபிர்கள்க்கு வரும் கேள்வி மூமின்கள் பெரும்பானமை என்றால் அனைவருக்கும் மத ஆட்சி,சிறுபான்மையாக இருந்தாலும் தனி மத சட்டம் என இரட்டை வேடம் போடுவது ஏன்? என்ற கேள்விக்கு சூசகமாக் சகோ பதில் அளித்து உள்ளார்.
மூமின்கள் மிக சிறுபானமையினராக இலங்கையில் இருந்தாலும் இலங்கை அரசு அவர்களை தமிழர்களை விட மேல்,சிங்களர்களை விட கீழாக .[சகோ சு.பிக்கு இது போதும்!!!]நடத்துவதற்கு அரபு நாடுகளே காரணம்
அரபு நாடுகள் இருப்பதால் இலங்கை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு.
இதே போலவே இந்தியாவிலும் பொருத்தி சிந்தித்து பார்த்துக் கொள்ளுங்கள்.
கொடுமை ஆகவே இந்திய மதசார்பின்மைக்கு அரபு நாடுகளின் அழுத்தம் காரணம்!
மூமின்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை எனவே பெரும்பானமை என்றால் அனைவருக்கும் மத ஆட்சியே!!!!!!!!!
சகோ சு.பி கொடுத்த வசனம் முன் பின் படிக்க வேண்டும்.இது ஆதம் அவர்களின் இரு மகன்களில் காயீன் இன்னொருவர் ஆபேலை கொன்று விடுகிறார்.உலகில் வாரிசுகள்(ஆதம் ஏவாள் தவிர) இருவரில் ஒருவர் இறந்தால் அது அனைவரையும் கொல்வதுதானே!!!
*******
5:31. பின்னர் தம் சதோதரரின் பிரேதத்தை (அடக்குவதற்காக) எவ்வாறு மறைக்க வேண்டுமென்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்; அது பூமியை தோண்டிற்று (இதைப் பார்த்த) அவர் “அந்தோ! நான் இந்த காகத்தைப் போல் கூட இல்லாதாகி விட்டேனே! அப்படியிருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே!” என்று கூறி, கை சேதப்படக் கூடியவராகி விட்டார்.
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
************
5.33ல் சரியாக் அல்லாஹ் விள்க்கி விடுகிறான்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
விளக்கம் சொல்லியே ஓய்ந்து போயிட்டேன்!!!!!
காஃபிர்களே சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!
நன்றி
இஸ்லாமியர்கள் பற்றி உண்மையை தெரிவிக்கும் பதிவு.
//எனக்கு தெரிந்து பதிவு எழுதும் சுபி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் இஸ்லாம் பெயரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கிஞ்சித்தும் இது போல் வருத்தப்பட்டதோ வெட்க்கப்பட்டதோ கிடையாது//
பலருக்கு தெரிந்த பகிரங்க உண்மை.
சகோ இக்பால் செல்வன் சவூதி அரேபியாவில் காபிர் பெண்ணுக்கு ஆணி அடித்த அரபிக்கு ஏதாவது தண்டணை கிடைத்தா என்று கேட்டிருந்தார்.இதை கண்டித்து ஒரு இஸ்லாமியர் பதிவு எழுதியிருப்பார்களா? ஆனால் அரபுகாரனை பற்றியோ,சவூதி அரேபியா பற்றியோ கண்டித்து உள்ளதை உண்மையை சொன்னா போதும், ரியாஸ் தொடக்கம் வரிசையாக பதறி அடித்து கொண்டு ஓடி வருவார்கள்.
உலகில் நடைபெறும் மதவாத செயல்களுக்கெல்லாம் அந்தந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் வெட்கப்பட்டு கண்டனம் தெரிவித்தால் அன்றி மதவெறியை தடுத்து நிறுத்தலாகாது.//
மதத் தீவட்டியைக் கையிலேந்தித் திரிவோர்
எல்லாம் அவசியம் மனதில் கொள்ளவேண்டிய
அருமையான கருத்து
பகிர்வுக்கு நன்ரி
தொடர வாழ்த்துக்கள்
இலங்கையிலே பௌத்தர்கள் இஸ்லாமிய வழிபாட்டுத்தலத்தைமட்டுமல்ல, இந்துக்கோவிலையுமேதான் உடைத்தார்கள். ஆனால், அது பேசப்படவில்லை. எதையுடைத்திருந்தாலுங்கூட, அடிப்படைவாதிகளின்மீதான ஆத்திரத்திலே பௌத்தவெறியர்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தமுடியாது.
மிகுதிப்படி, /பல பவுத்தர்கள் இஸ்லாத்தை நோக்கி செல்வதை மட்டுப் படுத்தவே இது போன்ற நிகழ்வுகள்/ போன்ற சுவனப்பிரியர் குழாத்தின் காமெடி, இந்துக்கூட்டத்தின் வெள்ளைக்காரன் டோட்டிகட்டிக்கின்னு உத்ராக்ஷம் போட்டுக்கின்னான் ரேஞ்சு காமெடி. மாதாகோவில் கழிவுத்தொட்டிநீர் வியாதிக்காரர்களைச் சொஸ்தமாக்குகிறது ரேஞ்சு. இப்படியாக நாலைஞ்சு காமெடியர்கள் இருப்பதாலேதான் ஓசியிலே சிரிச்சிருக்கின்றோம். இதுல உங்களுக்கு எங்களுல என்னையா காண்டு? நீங்க எதுக்கு மண்ணைப் போடறீங்க? மிகுதிப்படி உங்கள் இடுகையின் கருத்திலே சுவனப்பிரியன் குழுவினரின் செயற்பாடுகள் பற்றிய அவதானிப்புடன் உடன்பாடே ;-)
பர்மா முஸ்லீங்களின் விடயத்திலே சொல்லும் அவரின் இடுகையிலே ஐநா-இலங்கைத்தமிழர் குறித்துப் பேசும்போது, பேசியதொனி பயன்படுத்தியிருந்தார். அவரின் உள்ளக்கிடக்கை அதிலே வெள்ளிடைமலை.
/மியன்மார் என்பது பொஸ்னியாவின் களத்தை விட மோசமானது. ஹேர்ஸிகோவினாவினது களத்தை விட மோசமானது. கொஸாவோ களங்களை விட மோசமானது. ஈழத்து சோகத்தை விட பெரும் சோக மயமானது. /
என்ன நியாயத்தராசு இதை நிறுத்ததோ தெரியவில்லை. ரோஹிங்கா முஸ்லீங்களின் துயரைக் குறைக்கமுடியாது. ஆனால், இந்த அயோக்கியசிகாமணி, துயரிலே அளவு பார்த்து மாமிசத்துண்டு வெட்டும் ஷேக்ஸ்பியர் கரெக்டர் ஷைலொக் ஆகிறார்.
அதன்பிறகு சொல்கிறார்:
/இலங்கை விவகாரத்தில் ஜெனீவாவரை சென்று ஆட்டம் போடும் அமெரிக்கா இங்கு நடுநிலை என்கிறது. /
அதாவது, அமெரிக்கா இலங்கைப் பிரச்சனையிலே தமிழருக்காக எதற்காக ஸ்ரீலங்காவுக்கு எதிராகப் பேசுகின்றது என்பதாக இவரின் கருத்து. அமெரிக்கா தமிழருக்காகப் பேசியதா என்பதே சிரிப்புக்குரிய கேள்வி என்பதைவிட்டுவிடலாம்.
இந்த அடிப்படைவாதக்கும்பல் அடக்கப்படவேண்டியது. இந்து, கிறீச்துவ, பௌத்த, யூத அடிப்படைவாதக்கும்பல் எல்லாமேதான். சகிப்புத்தன்மையற்று இப்படியாகப் பேசும் கும்பல் தன் செயற்பாட்டாலே சகிப்புத்தன்மையின்மையைத்தான் மற்றவர்களிடத்தும் தூண்டுகின்றது.
தாங்கள் வாங்கியிருக்கும் ஓட்டு 9/11
// குடுகுடுப்பை கூறியது...
தாங்கள் வாங்கியிருக்கும் ஓட்டு 9/11//
அட்டாக் அட்டாக் :)
@ ரகுநந்தன் இலங்கையின் உண்மை நிலையை விளக்கியமைக்கு நன்றிகள். சமத்துவம் என்ற ரீதியில் பார்த்தால் சிங்களவர்கள் செய்வது தவறான ஒன்றே ஆனால், இங்கு என்ன பிரச்சனை எனில் முஸ்லிம்கள் தாம் பெரும்பான்மையன நாடுகளில் பிற மதங்கள் மீது நடத்தும் கொடுமைகளை மறைத்துவிடுவார்கள்.. ஆனால் பிற நாடுகளில் போய் கொண்டு இஸ்லாமிய சட்டம் வேண்டும், அனைவரும் முஸ்லிமாக மாற வேண்டும் என்பார்கள் ...
மலேசியாவில் இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்ட போது யாரின் கண்ணில் அது படவில்லை. ஆனால் சிறிலங்காவில் பள்ளிவாசல் நீக்கப்பட சொன்னதும் குய்யோ முய்யோ எனக் கதறுகின்றார்கள் ...
இஸ்லாமிய நாடுகள் தத்தமது நாடுகளில் செய்வது சரி என்றால் இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் செய்வதும் சரி என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும் ...
சுவனப்பிரியன் தமது பதிவில் பல பொய்களை அடுக்கடுக்கி எழுதி உள்ளார். தெரிந்து எழுதினாரா தெரியாமல் எழுதினாரா என எனக்குத் தெரியாது. ஆனால் அவற்றுக்கான பதிலை மாலை எனது பதிவில் வலையேற்ற உள்ளேன். ரகுநந்தன் போன்ற இலங்கையர் ( அல்லது இலங்கையை நன்கு அறிந்தோர் ) வந்து கருத்திட்டால் பதிவுலகில் பரப்பப்படும் பொய்களை உடைக்கலாம்... !!!
மைனஸ் ஓட்டு கம்மியா விழுந்தாப்போல தெரியுது. நிறைய பேர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களோ .. !!
//இக்பால் செல்வன் கூறியது...
மைனஸ் ஓட்டு கம்மியா விழுந்தாப்போல தெரியுது. நிறைய பேர் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களோ .. !!//
:)) சிந்திப்பவர்களுக்கு இதில் நற்சான்று இருக்கிறது - இப்படிக்கு பூனையார்
//இந்தோனேசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் ஓட வேண்டியதுதான். //
என்னது இந்தோனேஷியாவா ..? அடடா ...! தப்பா சொல்லிட்டீங்களே .. எதுக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள். முடிஞ்சா காசு கீசு குடுக்கலாமான்னு பாருங்க.
அன்பின் இனிய கோவி வணக்கம்!
வழக்கம் போல, அருமையான ஆய்வுமிகுந்த, உள்ளங்கை நெல்லிக்கனி யாக தங்கள் பதிவு மிளிர்கிறது. விருப்பு வெறுப்பற்று, உண்மையின் உருவமாக விளங்குகிறது. வாழ்த்துக்கள்!
மேலும், சென்ற வாரம் நான் சிங்கை வந்தபோது, தாங்களும் உடன் வந்த நண்பர்(பெயர் மறந்துவிட்டது) அவர்களும், மற்றும் சத்திரியன் அவர்களும் இராசேந்திரன் அவர்களும் என்னைத் தேடிவந்து உரையாடிச் சென்றது, என் வாழ்வில் மறக்க முடியாத, நிகழ்ச்சி, மகிழ்ச்சி ஆகும்
என், நன்றியை நான் அனைவருக்கும் தெரிவித்ததாக சொல்ல வேண்டுகிறேன். நண்பரின்பெயரைக் குறிப்பிட்டால் நலமாகும் விரைவில் நம் சந்திப்புப் பற்றி ஒரு பதிவுபோட உள்ளதால் தேவைப்படுகிறது பிற பின்னர்
புலவர் சா இராமாநுசம்
கருத்துரையிடுக