பின்பற்றுபவர்கள்

3 ஆகஸ்ட், 2012

சுவனப்பிரியன் கேட்கும் மொய்விருந்து !


ண்பர் சுவனப்பிரியன் 'சவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே!' என்ற தலைப்பில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவிகள் கேட்டு இடுகை ஒன்றை எழுதி இருக்கிறார், அவரின் உதவி செய்யும் நோக்கம், மனப்பான்மை இவற்றை நான் குறை சொல்லவிரும்பவில்லை மாறாக பாராட்டுகிறேன், ஆனால் இவர் போன்றவர்கள் 'தமிழ்/தமிழன்' என்ற லேபிளை எங்கு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்க இவர்களின் முரண்பாடுகள் விவாதிக்கக் கூடியவை என்ற நிலைக்கு வருகிறது. இலங்கையில் தமிழனுக்கு கொடுமை நடந்தால் இவர்களின் தமிழின பற்று காணமல் போய்விடும் அங்கெல்லாம் இலங்கைத் தமிழர்கள், இலங்கை தமிழ் விடுதலை அமைப்புகள் இஸ்லாத்திற்கு / இஸ்லாமியர்களுக்கு எதிரானாவர்கள் என்ற இவர்களின் நிலைப்பாட்டினால் தமிழும், தமிழனும் காணாமல் போய்விடுவான்.

சுவனப்பிரியன் குறிப்பிட்டுள்ள சவுதி சிறையில் வாடும் இஸ்லாமியர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் இவர் தமிழன் என்று எழுதுவதாகவே வைத்துக் கொண்டாலும், சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் பிற நாடுகளைச் சார்ந்தவர்களின் மதம் ஆராயப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சலுகை எதையும் கொடுக்கவில்லை. என்பதை பாதிக்கப்பட்ட நபர் தன்னை குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய இயலாத நிலையில், மதத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளவும் இயாலாத நிலையில் உள்ளார் என்பதிலிருந்தும் தெரிகிறது, ஆனால் சவுதி அல்லது அரேபிய நாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தால் இவர்கள் இஸ்லாமை விமர்சனம் செய்வதாக நினைத்து கச்சைக் கட்டுகிறார்கள், இவர்களை மதம் சார்ந்து மதிக்காத அரசுகளுக்கு இவர்களாக வலிய சென்று வாதம் பேசுவதில் இருந்து இஸ்லாம் என்றால் அரபு நாடுகளும் அதன் கொள்கைகளும் என்றே எம்மைப் போன்றவர்களை இவர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு இஸ்லாமியர் என்றும், அவரை விடுவிக்க அவர் திருடியதாக குற்றம் சொல்லப்படும் சவுதி ரியாலை கொடுத்துவிட்டாலே போதும் என்றே சுவனப்பிரியன் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் நினைத்தால் குறிப்பிட்ட நபரை வெளியே கொண்டுவர போதிய பணத்தை திரட்ட முடியாதா ?

  • பாதிக்கப்பட்டவர் அப்பாவி, குற்றமற்றவர் மற்றும் ஏழை இஸ்லாமியர் - இந்த தகுதி அடிப்படையில் அவருக்கான உதவிகளை செய்ய இவர்களது (சுவனப்பிரியன் சார்ந்து இருக்கும் தவ்ஹீது ) அமைப்புகளுக்கு போதிய பணம் இல்லை என்று நம்புவதற்கு கடினமாகவே இருக்கிறது.
  • ஒரு  ஏழை இஸ்லாமியரைக் காப்பாற்ற முடியும் என்ற அளவுக்கு பணம் இல்லாதவர்கள் ஊருக்கு ஊர் அமைப்புகளை தொடங்கி நடத்துவது மட்டும் எப்படி சாத்தியம் ?
  • தன் மதத்தைச் சார்ந்த ஒரு ஏழை அப்பாவியை காப்பாற்ற முடியாத நிலைகள் இந்த அமைப்புகள் வேறு எந்த உயர்ந்த நோக்கத்திற்காக செயல்படுகின்றன ?

து போல் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டவர்களையெல்லாம் எப்படி காப்பாற்றுவது, அவர்கள் ஒருவேளை திருடி இருந்தால், அல்லது இது போல் உதவிகள் கிடைக்கும் என்று தெரிந்தே திருடினால் அவர்களுக்கெல்லாம் இஸ்லாமிய அமைப்புகள் உதவிக் கொண்டே இருக்க முடியுமா ? என்ற அறிவுப்பூர்வமான கேள்விகள் வந்தால், பாதிக்கப்பட்டவரின் குற்ற முகாந்திரம் தெரியாமல் உதவிகள் மட்டும் கேட்க முடியுமா ? என்ற கேள்வியும் கூடவே வருகிறது.

பாதிக்கப்பட்ட நபருக்கான உதவிகள் என்பது அவர் குற்றமற்றவர் என்ற நம்பிக்கை அடிப்படையில் அமைந்த நிலையில் ஒருவரை காப்பாற்றவேண்டுமா ? பலரைக் காப்பாற்ற வேண்டுமா ? என்பதைவிட அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம்.

ற்ற மதத்துக்காரர்கள் குற்றவாளி இல்லை என்று நிருபனம் செய்ய சான்றுகள் தேவை. ஆனால் சுவனப்பிரியன் போன்றவர்களின் கூற்றுகளால் 'இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒரு இஸ்லாமியர் திருடவோ அல்லது பிற குற்றச் செயல்களில் ஈடுபடவோ வாய்ப்பில்லை' (பர்மா பஜாரில் டிவிடி விற்கலாமா ? என்று கேட்காதீர்கள்). எனவே பாதிக்கப்பட்டவர் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றுபவரா ? ஐந்து வேளை தொழுவரா ? இஸ்லாமிய கடைமைகளை பின்பற்றுவரா ? என்று தெரிந்தலே போதும்.  பாதிக்கப்பட்ட நபர் உண்மையான இஸ்லாமியர் இஸ்லாத்தை பின்பற்றுபவர், இவர் குற்றம் செய்திருக்க வாய்பில்லை, அப்படி நினைக்கத் தேவை இல்லை, அதை நிருபனம் செய்யவும் தேவை இல்லை என்று சுவனப்பிரியன் போன்றவர்களின் சான்றிதழ் / பரிந்துரை அடிப்படையில் மேற்சொன்ன இஸ்லாமிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட நபர் குறித்து தெரிந்து கொண்டு உதவி செய்ய முடியாதா என்ன ?

துவும் செய்ய வாய்ப்பில்லாதா நிலையில் இஸ்லாத்தை அடிபிறழாமல் பின்பற்றும் ஒருவர் குற்றவாளி என்று காவலர்களால் குற்றம் சுமத்தப்படும் நிலையில் இஸ்லாமிய அமைப்புகளும் காப்பாற்றது, இஸ்லாமிய அரசுகளும் காப்பாற்றது அவர்களுக்கு தேவை எல்லாம் குற்றமற்றவர் என்று குற்றவாளி தன்னைத் தானே நிருபனம் செய்யவேண்டும் என்ற நிலைப்பாடு என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்,  அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் சிறையில் செய்யாத குற்றத்திற்கு தண்டனைப் பொறுவதைத் தவிர்த்து வேறு வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மனிதாபிமான அடைப்படையில் உதவ வெளி உலகில் ஏராளமானவர் உண்டு.

னால் மதமும், மதவாத அமைப்புகளும், மதவாத அரசுகளும் மக்களுக்கு சேவை செய்கின்றன என்பது போன்ற பொய் தோற்றத்தை தொடர்ந்து பரப்பாதீர்கள். உங்கள் வசதிக்கேற்றவாறு 'தமிழன்' லேபிளை தேவையான இடங்களில் மட்டுமே ஒட்டவைக்காதீர்கள்.

பாதிக்கப்பட்டவருக்கு கண்டிப்பாக உதவிகள் செய்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும், ஆனால் இதில் குற்றவாளியாக ஒருவர் சிக்க வைக்கப்பட்டிருப்பதையும் அவரின் இக்கட்டுகளும், அவர் அந்த மதத்தைப் பின்பற்றுகிறார' என்பதினால் இரு இம்மி கூட தீர்ந்துவிடாது, அதற்கு வாய்ப்பும் இல்லை என்பதை எடுத்துக்காட்டவே இதனை எழுதியுள்ளேன், இதை சுவனப்பிரியனும் உணர்ந்திருக்க வேண்டும் அதனால் தான் வழக்கத்திற்கு மாறாக பாதிக்கப்பட்ட நபரின் மதத்தை முன்னிறுத்தாது 'தமிழன்' என்று சொல்லி இருக்கிறார் சுவனப்பிரியன்.

பின்குறிப்பு : உதவி கேட்பதை கொச்சைப்படுத்தி இதை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை, ஆனால் இதுபோன்ற வேளைகளில் தான், மதவாத கொள்ளைவாத முரண்பாடுகளை எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளவும் முடியும். இது போன்ற நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மதவாதிகள், மத அபிமானிகள் கொஞ்சமேனும் மாறுவார்கள், மனிதாபிமானத்திற்கு திரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் மட்டுமே இதனை இடுகையாக்கியுள்ளேன்.

பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதைத் தான் சற்று விவரித்து எழுதியுள்ளேன்.

25 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல அலசல்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

மத்வாதிகளின் இரட்டை வேடம் அனைவருக்கும் எரிச்சலை தரும்.கடுமையான் சட்டங்களே குர்றங்களை குறைக்கும் என்பது அவர்களின் பொதுவான் பிரச்சாரம் என்றாலும் த்னக்கு ,நெருங்கியவர்கள்க்கு என்றால் சட்டத்தை வளைக்க முடியுமா என பார்ப்ப்து.

இதைத்தானே இந்தியாவில் பணம் படைத்தவன் செய்கிறான்!!!!!!!!!.

கடுமையான சட்டங்கள் எங்குமா ஏழைகளுக்கு மட்டுமே!!!!!!!!

சவுதியில் பண்க்காரன் கொலை செய்தால் இரத்தப்பணம் கொடுத்து தப்பிக்க முடியும்.

பெரும்பாலும் கொல்லப்பட்டவன் வெளிநாட்டு ஏழையாக் இருந்தால் அரபி கொடுக்கும் காசை வாங்கியாவது பிழைப்போம்,செத்த்வன் மீண்டும் வருவானா என் நினைப்புதானே வரும்.

திருட்டுக்கு கை வெட்டுவது ஷரியா. இங்கேயும் அதே சிக்கல் திருட்டை நிரூபிப்பது மிக கடினம்.

ச‌ரி எது எப்ப‌டியோ பாவ‌ம் அந்த‌ த‌மிழ் இஸ்லாமிய‌ர் கை ப‌த்திர‌மா வ‌ந்தா ப‌ர‌வாயில்லை!!!!!!!!!!

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ந‌ன்றி

நம்பள்கி சொன்னது…

சாமி கும்பிடுவதால் மட்டுமே ஒருவன் நல்லவன் ஆக முடியுமா? பல பொண்டாட்டி கட்டிக் கொண்டு "பய பக்தியுடன் (ஹி! ஹி!!) சாமி கும்பிட்டு அம்மாவையும் ஆயாவையும் ஏமாத்துவதை விட, எங்களை மாதிரி மனசாட்சிக்கு பயப்படுகிரவர்களே மனிதர்கள்!

மதிக்கப்பட வேண்டிய மனிதர்கள்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவில் விளக்கம் அருமை....

(த.ம. 1)

கோவி.கண்ணன் சொன்னது…

//ச‌ரி எது எப்ப‌டியோ பாவ‌ம் அந்த‌ த‌மிழ் இஸ்லாமிய‌ர் கை ப‌த்திர‌மா வ‌ந்தா ப‌ர‌வாயில்லை!!!!!!!!!!//

அதற்கு இந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டுப் போடுகிறவர்கள் கை கொடுப்பாங்க என்று நம்புவோம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

: உதவி கேட்பதை கொச்சைப்படுத்தி இதை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை, ஆனால் இதுபோன்ற வேளைகளில் தான், மதவாத கொள்ளைவாத முரண்பாடுகளை எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளவும் முடியும். இது போன்ற நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மதவாதிகள், மத அபிமானிகள் கொஞ்சமேனும் மாறுவார்கள், மனிதாபிமானத்திற்கு திரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் மட்டுமே இதனை இடுகையாக்கியுள்ளேன்.

பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதைத் தான் சற்று விவரித்து எழுதியுள்ளேன்//

இதை விடத் தெளிவாகத் தங்கள்
நிலையைப் புரியவைப்பதென்பது கடினமே
வண்ணக் கண்ணாடிகள் அணியாமல் பார்த்தால் ஒழிய
இதைப் புரிந்து கொள்வதும் கடினமே
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

: உதவி கேட்பதை கொச்சைப்படுத்தி இதை எழுதும் நோக்கம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை, ஆனால் இதுபோன்ற வேளைகளில் தான், மதவாத கொள்ளைவாத முரண்பாடுகளை எடுத்துச் சொன்னால் விளங்கிக்கொள்ளவும் முடியும். இது போன்ற நடைமுறை உதாரணங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் மதவாதிகள், மத அபிமானிகள் கொஞ்சமேனும் மாறுவார்கள், மனிதாபிமானத்திற்கு திரும்புவார்கள் என்கிற நம்பிக்கையில் மட்டுமே இதனை இடுகையாக்கியுள்ளேன்.

பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை என்று பன்னெடுங்காலமாக பலர் சொல்லிவருவதைத் தான் சற்று விவரித்து எழுதியுள்ளேன்//

இதை விடத் தெளிவாகத் தங்கள்
நிலையைப் புரியவைப்பதென்பது கடினமே
வண்ணக் கண்ணாடிகள் அணியாமல் பார்த்தால் ஒழிய
இதைப் புரிந்து கொள்வதும் கடினமே
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா சொன்னது…

// ஆனால் சவுதி அல்லது அரேபிய நாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தால் இவர்கள் இஸ்லாமை விமர்சனம் செய்வதாக நினைத்து கச்சைக் கட்டுகிறார்கள், இவர்களை மதம் சார்ந்து மதிக்காத அரசுகளுக்கு இவர்களாக வலிய சென்று வாதம் பேசுவதில் இருந்து இஸ்லாம் என்றால் அரபு நாடுகளும் அதன் கொள்கைகளும் என்றே எம்மைப் போன்றவர்களை இவர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.

//

well well said. நடுநிலைவாதிகள்,
நியாயவாதிகள் பலரையும்கூட தங்கள் செயல்களால் காவிச் சிந்தனையை நோக்கிச் செலுத்திய புண்ணியம்தான் இறுதியில் இவர்கள் தேடிக்கொண்டது!!

? சொன்னது…

"Muslims from developing countries, particularly from Pakistan, Afghanistan etc keep shouting about an imaginary Muslim Ummah and the pan-Islamic unity. However, in reality, Pakistani, Bangladeshi etc workers in Gulf countries are treated as slaves by their Arab employers / visa providers. They are verbally and physically insulted and abused, frequently termed as miskeen (beggar), thieves and basta**ds. When will converts learn that for Wahhabi Saudis, only Arabs are real Muslims?"

இதை எழுதியவர் இசுலாமிய எதிர்ப்பாளர் அல்ல, பாகிஸ்தானி முஸ்லிம்.சுட்டி

இன்னொரு பாகிஸ்தானி

"I am no fan or Arab people when i see how they treat poor, hardworking laborers from Pakistan and kiss white ass. Arabs have some severe inferiority complex and seem to be in awe of white people from the many interactions I've had with them!" சுட்டி

இதையே நாம் சொன்னால் இசுலாமிய மதவிரோதி என பாய்ந்து பிராண்டுவார்கள்! :-(

Unknown சொன்னது…

//பாதிக்கப்படும் ஏழைகளுக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை//

மிக சரி !

Unknown சொன்னது…

பின் தொடர....

தமிழ்சேட்டுபையன் சொன்னது…

தனக்கு..தனக்குன்னா...#%$%% தடுக்கு..!தடுக்குன்னு ஆடுமாம்! இந்திய இஸ்லாமியர்கள் தமிழ் பேசுவதை கண்டித்தவர்கள்தானே இந்த குரூப்பு!தமிழ் தமிழன் என்பது மதத்தை தாண்டியது!

பெயரில்லா சொன்னது…

சுவனப்பிரியன் பதிவுக்கு நானிட்ட பின்னூட்டம் இங்கேயேயும் ......


கமருதீன் என்ற தமிழரின் நிலை பரிதாபமாகவே உள்ளது ...

முதலில் கமருதீன் உண்மையிலேயே குற்றமற்றவரா இல்லை திருடினாரா ....

அப்படி குற்றமற்றவர் என்ற நிலையில் ஏன் சௌதி அரசு இவரை சிறையிலிட்டுள்ளது ...

சந்தர்ப்ப சூழல்களால் அப்பாவிகள் சிக்கிக் கொள்வது இயல்பே ஆனாலும், எல்லாம் வல்ல எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டத்தை பூரணமாக ஏற்று நடத்திவரும் சௌதியால் உண்மையான குற்றவாளியை கண்டுப் பிடிக்க முடியவில்லையா .. இரண்டு ஆண்டுகளாக என்ன நடக்குது அங்கே ... !!!

கமருதீன் என்ற தமிழர் குற்றமற்றவர் என்பது உண்மை எனில் இங்கு கேள்விக்கு உள்ளாகி இருப்பது சௌதியின் சட்டமே ...

ஒன்று சட்டத்தில் குறை இருக்க வேண்டும் .. !!! அல்லது கமருதீன் தவறு செய்திருக்க வேண்டும் ... !!! கமருதீன் திருடியமைக்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் என்ன ம...க்கு அவரை இவ்ளோ காலம் சிறையில் வைத்துள்ளார்கள் .. இதுவரைக் காலமும் அங்கிருக்கும் இந்தியர்கள் - சாரி - தமிழர்கள் என்னத்தைப் பி..கி கொண்டு இருக்கின்றார்கள் .. இன்று காசு கட்டி இவரை வெளியே எடுத்துவிடலாம் ..

360,000 ரூபாய் எல்லாம் பிஸ்கோத்து காசு ஆயிரம் தமிழர்கள் கிள்ளிக் கொடுத்தாலும் சேர்ந்துவிடும் .. !!! தவ்வீத் ஜமாத்தில் உள்ளோரே போதும் .. !!!

ஆனால் இன்று அப்பாவியான ஒரு தமிழனுக்கு திருட்டுப் பட்டம் கிடைக்கின்றது, ஆதாரம் இல்லாத பட்சத்திலும் அவனே குற்றவாளி.. நாளை அங்கிருக்கும் லட்சக் கணக்கான தமிழர்கள் மீதும் குற்றம் சுமத்துவார்கள் .. எல்லாருக்கும் காசு சேர்த்துக் கொண்டிருக்க முடியுமா ..

குற்றம் செய்யாத ( அப்படியே நான் எடுத்துக் கொள்கிறேன் ) ஒருவனுக்கே இந்த நிலை .. அந்நிலைக்கு கொண்டு வந்த சட்டத்தை கேள்விக் கேட்காமல் அங்குள்ள தமிழர்கள் மூடிக் கொண்டு இருப்பது நியாயமே இல்லை ..

ஒரு முஸ்லிமுக்கே இந்த நிலை எனில் வேற்று மதத்தவருக்கு இச்சட்டம் எப்படி நியாயம் தரும் சொல்லுங்கள் ..

குரானை மட்டும் படித்து அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது அநியாயம் நடக்கும் இடத்தில் அவன் நம் மதமே ஆனாலும் தட்டிக் கேட்க துணிச்சல் வேண்டும் ..

இந்த ஒரு நல்ல விடயத்தையாவது முகமதுவிடம் இருந்துக் கற்றுக் கொள்ளுக்கங்கள் தோழர்களே !!! அவருக்கு அந்தக் காலத்தில் இருந்த தைரியம் கூட அவரை தினமும் ஜபிக்கும் நம்மவர்களுக்கு ( தமிழர்களுக்கு ) இல்லை ... !!!

வவ்வால் சொன்னது…

கோவி,

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க, அவரவர் எந்த நாட்டில் இருக்காங்களோ அங்கு நடப்பதை சரின்னு தூக்கிவச்சுக்கிறாங்க :-))

சு.பி க்கு கூடுதலாக மதமும் பிடிச்சிக்குது அவ்வளவே :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//சரியாத்தான் சொல்லியிருக்கீங்க, அவரவர் எந்த நாட்டில் இருக்காங்களோ அங்கு நடப்பதை சரின்னு தூக்கிவச்சுக்கிறாங்க :-))//

பொழைக்கப் போற நாட்டை தூக்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று இருக்க வேண்டும், வசிக்கிற நாட்டை தூக்கி வைப்பதன் பெயர் நாட்டுப்பற்று.
:)

ராஜரத்தினம் சொன்னது…

How you can say tamil pray muhammad? Only tamil muslims pray him! May be typo!

உதயம் சொன்னது…

(புதுகை.அப்துல்லா சொன்னது…

// ஆனால் சவுதி அல்லது அரேபிய நாடுகளைப் பற்றி விமர்சனம் செய்தால் இவர்கள் இஸ்லாமை விமர்சனம் செய்வதாக நினைத்து கச்சைக் கட்டுகிறார்கள், இவர்களை மதம் சார்ந்து மதிக்காத அரசுகளுக்கு இவர்களாக வலிய சென்று வாதம் பேசுவதில் இருந்து இஸ்லாம் என்றால் அரபு நாடுகளும் அதன் கொள்கைகளும் என்றே எம்மைப் போன்றவர்களை இவர்கள் நினைக்க வைத்துவிடுகிறார்கள் என்பதை இவர்கள் ஒப்புக் கொள்ளவும் மறுக்கிறார்கள்.

//

well well said. நடுநிலைவாதிகள்,
நியாயவாதிகள் பலரையும்கூட தங்கள் செயல்களால் காவிச் சிந்தனையை நோக்கிச் செலுத்திய புண்ணியம்தான் இறுதியில் இவர்கள் தேடிக்கொண்டது!)!

கோவி.கண்ணன் இப்போதெல்லாம் காவி.கண்ணனாக அவதாரம் எடுப்பது இதனால் தானே? ஏற்கனவே இந்தியாவிலுள்ள முஸ்லிம்களை இந்தியர்கள் இல்லை என்று "காவிகள் பத்வா" கொடுத்துவிட்டார்கள், நீங்களும் இப்போது அவர்கள் "தமிழர்கள்" இல்லை குறுக்குசால் ஓட்டி விட்டீர்கள். இது போன்ற வெறுப்பை வளர்க்கும் எழுத்துக்களினால் தானோ அப்பாவி முஸ்லிம்கள் கவவரங்களில் கொத்துக்கொத்தாக கொல்லப்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

Unknown சொன்னது…

ValaiTamil அனைத்து சமையல் குறிப்புகளும் மிக அருமையாக உள்ளது

naren சொன்னது…

நண்பர் இக்பால் செல்வன் சொன்னதை வைத்து மேலும் எழுதுகிறேன்,
உலகில் ஷரியா சட்டம் முழுமுதலாக நல்ல முறையில் செயல்படுத்தும் நாடு சவுதி என சொல்லபடுகிறது. அப்படி நடைமுறைபடுத்தபடும் குற்றநடைமுறை ஷரியா சட்டம் இறைவன் அளித்ததாகவோ(குரான்) அல்லது நபிவழியாக(ஹதீஸ்) இருக்கின்றது என கூறுகிறார்கள். ஆகையால், அந்த நடைமுறை எக்காலத்திற்கும், எந்த காரனத்திற்கும் தப்பில்விழாத(infallible) ஆக இருக்க வேண்டும். அப்படி தப்பாக இருந்தால் கடவுளும் தப்பு இறைதூதரும் தப்பு.

சு.பி.யின் பதிவை படித்தால், ஒரு உண்மையான முஸ்லிம் தப்பேசெய்யாமல் இறைவனின் நடைமுறை படி தப்பு செய்தான் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அல்லது, நான் தப்பே செய்யவில்லை என்று பொய் சொல்லும் ஒரு நபரை, காப்பாற்ற ஷ்ரியத் முறையில் தமிழர்கள் உதவி செய்ய வேண்டப்படுகிறது.

இந்த மறுமொழி, உதவி கேட்பதை கொச்சை படுத்தவதற்கு போடபடவில்லை. மேலும், முதல் உள்மனம் எண்ணமாக அந்த சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என்ற எண்ணத்தில் மாற்றமில்லை.

suvanappiriyan சொன்னது…

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

அறிவிப்பு கொடுத்த ஒரே நாளில் 2600 ரியால் உதவி செய்த நல்லுள்ளங்களின் உதவியால், இறைவன் நாடினால் விரைவில் சிறையில் வாடும் திரு. கமர்தீன் அவர்களை தாயகம் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கைத் தளிர் விட்டுள்ளது.

இன்று ஷிஹாப் கொட்டுக்காடு அவர்களிடம் பேசி அவரின் கபீலை நேரில் சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன், நம்மில் சிலர் சென்று பேசினால் ஒருவேளை மனம் இரங்கலாம்... முயற்சிப்போமே...

-இம்தியாஸ்

என்ன...கோவிக் கண்ணன். நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு பதிவெல்லாம் எழுதியும் ஒரே நாளில் இவ்வளவு தொகையை நல்ல உள்ளங்கள் அள்ளித் தந்துள்ளதே! நல்லது எங்கும் நடந்தால் உங்களுக்கு பொறுக்காதோ....

தமிழில் ஒரு பழமொழி உண்டு...


'உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கவும்'

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,

சவுதி சட்டத்தில் திருடியதாக சொல்லப் படும் பணத்தை திருப்பி செலுத்தினால் விடுவிப்பார்கள் எனில் இது ,அனைவருக்கும் பொருந்துமா? இல்லை குற்றம் சாட்டப்பட்டவருக்கு சில மத அமைப்புகள் கொடுக்கும் ஆதரவிலா?????????

குரான் சொல்லும் கை வெட்டுதலுக்கு பதில் பணத்தை திருப்பி செலுத்தினால் மன்னிப்பு என்னும் மாற்றம் அனைவருக்கும் வரும் எனில் நல்லது.இது சிலருக்கு மட்டும் என்றால் இரட்டை வேடமே!!!!!!!!!!!!!!!

ஏற்கெனவே கை வெட்டப் படவர்களுக்கு என்ன தீர்வு?????????????
***********
செல்லும் நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்துதானே செல்கிறார்கள். பிடிக்கவில்லையெனில் யார் போக சொன்னது என்ற இணைய வாதங்கள் மிக்க அதிர்ச்சியையே கொடுக்கிறது.

வேலை தேடி செல்பவனுக்கு பணம் முக்கியம் போல்,முதலாளிக்கும் தொழிலாளியின் உழைப்பு அவசியம் ,எங்கே தொழிலாளி குறைந்த கூலியில் கிடைபானோ அவனைத்தானே கூப்பிடுகிறான்.நம் நாட்டினர் இல்லையெனில் வேறொரு நாட்டன் கஷ்டப் படமாட்டானா???????

ஒரு தொழிலாளியை நடத்த உலகளாவிய சட்டங்கள் தேவை, என்றாலும் மதவாதிகள் குதிக்கிறார்க்ள்.

நம் நாட்டில் பல பிரச்சினைகளுக்கும் அடிப்படை மக்கள் தொகை அதிகரிப்பு ஆகவே கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் எனில் அதையும் மத சுதந்திரத்தில் தலையிடாதே என்பார்கள்.

தனக்கு நேரும் வரையில் எதைப் பற்றியும் கண்டு கொள்ள மாட்டேன் என்பது எப்போதும் உள்ள மனநிலையா? இல்லை இப்போது நன்கு வெளியே தெரிகிறதா?

இபோதுதான் தெரிகிறது இந்தியா ஏன் 1000+ வருடங்களாக அடிமைப் பட்டு இருந்தது எனறு


ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி

Riyas சொன்னது…

கோவி கண்ணன்..

ஷரியா சட்டம் சரியா தப்பா என நான் சொல்ல வரவில்லை..

இக்கட்டில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதரை விடுவிக்க உதவி கேட்ட ஒரு பதிவை பயன்படுத்தியா உங்கள் கீழ்த்தரமான காழ்ப்புணர்ச்சியை காட்டுவீர்கள்..

இதிலிருந்தே உங்களின் சிறுமைத்தனம்,, வெளிப்பட்டுவிட்டது!!

உங்களை எவன் உதவி செய்ய சொன்னான்.. அவரின் அழைப்புக்கு உதவ நினைப்பவர்கள் உதவட்டுமே,,

மாற்று கருத்துக்களை முன் வைத்தாலும்..உங்களை நல்ல சிந்தனைவாதி என நினைத்திருந்தேன்,, ஆனால் இப்போதுதான் புரிகிறது சமயம் பார்த்து பழிவாங்க துடிக்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர் நீங்கள் என்று!!!

இக்பால் செல்வன், சார்வாகன், நரேன்..
ஐயா ராசாக்களா..
உங்களின் வாததிறமை கண்டு வியந்து போனேன்...
நீண்டநாள் பழிவாங்க காத்திருந்த எதிரியொருவன் அவனாக போய் புதை குழியில் விழுந்த போது அவசரமாக அங்கே சென்று மன்னை போட்டு மூடி பழிவாங்கியது போல் இருக்கிறது உங்கள் வாதங்கள்,,

இது வீரமல்ல எதிரி அசந்த நேரம் பார்த்து முதுகில் குத்துவது,,

வேகநரி சொன்னது…

எவ்வளவு சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இஸ்லாமிய மத வெறி தலைக்கேறியவர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. இப்போ இஸ்லாமிய மத சட்டம்+ சவூதி அரேபிய பற்றி நாம் விபரமாக அறிய முடிகிறது.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டனர் ஏன் பாலஸ்தீனர்கள் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக மட்டுமே. சகோ இக்பால் செல்வன் கனடாவில் உள்ள தமிழ் பெண் விஞ்ஞானியை எமக்கு தெரியபடுத்தினான். இவர்கள் முக்காடிட்ட அரபு பெண்ணை விஞ்ஞானி என்று அறிமுகபடுத்தி இன்புற்றனர். காரணம் இஸ்லாமியர் என்ற ஒரு காரணம். சிறையில் இருப்பவர்ஒரு இஸ்லாமியர் என்ற காரணத்திற்காகவே உதவி கேட்கின்றனர். உதவி கேட்பது தமிழர்களிடம் என்றபடியால் இஸ்லாமிய அடையாளம் பின் தள்ளபட்டு புதை குழியில் மூடப்பட்ட தமிழ் அடையாளம் தோண்டி எடுக்கபட்டு முன்னெறுத்தபடுகிறது. முதலில் இந்தியர் இரண்டாவது தமிழர்கள் என்று சொல்லபட்ட போது நாங்கள் முதலாவதும் இஸ்லாமியர் இரண்டாவதும் இஸ்லாமியர் ஆயிரமாம் தடவையிம் இஸ்லாமியர் என்று பெருமைபட்டவர்கள் தான் இவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன...கோவிக் கண்ணன். நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு பதிவெல்லாம் எழுதியும் ஒரே நாளில் இவ்வளவு தொகையை நல்ல உள்ளங்கள் அள்ளித் தந்துள்ளதே! நல்லது எங்கும் நடந்தால் உங்களுக்கு பொறுக்காதோ....//

இங்கே சம்பந்தப்பட்ட நபர் திருடி இருப்பார் என்று நான் ஐயமாகக் கூட எதையும் எழுதிவிடவில்லை, பாலாறும் தேனாறும் ஓடும் சவுதியின் ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமை குறித்து உங்களுக்கு ஒருவார்த்தைக் கூட கண்டித்து எழுத துப்பு இல்லை, தேவைப்படும் பொழுது தமிழன் பட்டம் சூட்டும் உங்கள் முரண்பாடுகளைத் தான் சுட்டினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாற்று கருத்துக்களை முன் வைத்தாலும்..உங்களை நல்ல சிந்தனைவாதி என நினைத்திருந்தேன்,, ஆனால் இப்போதுதான் புரிகிறது சமயம் பார்த்து பழிவாங்க துடிக்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர் நீங்கள் என்று!!!//

பாராட்டு பத்திரம் குறித்து நான் கவலைப்படுவதில்லை, உங்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கும் அதிகாரம் இருப்பதும் எனக்கு தெரியாது. :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்