பின்பற்றுபவர்கள்

8 அக்டோபர், 2010

ஷங்கர் குழப்பியுள்ள கடவுள் மற்றும் உயிர் !

நாம எதைப் பற்றி மிகுதியான ஆர்வம் கொண்டிருக்கிறோமோ, அது நம்மைக் கடக்கும் போது அதை கண்டிப்பாக தவறவிட்டுவிடமாட்டோம். அது நம் எண்ணத்தில் ஊறிய சமூகம் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி, நாம் விரும்பும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி.

*****

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இது எந்திரன் படத்தில் ரோபோவிடம் கேட்கப்படும் கேள்வி...

இதற்கு ரோபோ சொல்லும் விடை

'என்னைப் படைச்சவர் இவர், இதே போல் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்......எனவே கடவுள் இருக்கிறார்;

இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.

ரோபோவே சொல்லிவிட்டது எனவே கடவுள் உண்டு என்று கொள்வதா ? அல்லது கடவுளுக்கு ரோபோ சாட்சியா என்பதையெல்லாம் விட ரோபோவுக்கு என்ன (புரோகிராம் வழி) சொல்லப்பட்டு இருக்கிறதோ அதன் படிதான் சொல்லும், எனவே இந்த விடையை ரோபோ சொல்லிய விடை அல்லது ரோபோ கடவுள் இருப்பிற்கு சாட்சி என்றெல்லாம் கொள்ள முடியாது. ரோபோ என்ன ரோபோ நம்ம ஊரில் பாம்பு பால் குடித்துவிட்டு, பிள்ளையார் கழுத்தில் படர்ந்து கடவுள் இருப்பதை நிருபனம் செய்துவிடும். நல்ல பாம்புகள் நிருபனம் செய்யாத வேறொரு கடவுளையா ரோபோ நிருபனம் செய்துவிடப் போகிறது...... ?
நம் நாட்டில் நாகப் பாம்புகள் அதற்காவே புற்றுகளில் குடி இருக்கின்றன. :))))

இது நகைச்சுவைக்கு என்றாலும் கூட, எந்திரன் படத்தில் முதலில் கடவுள் இருப்பை உறுதிப்படுத்தும் ரோபோவை விஞ்ஞானி எந்திரன் குழப்பி இருப்பார். அதாவது ரோபோவுக்கு 'உயிர் மற்றும் உணர்ச்சிகள்' பற்றி விளக்கும் காட்சி, அந்த இடத்தில் ரோபோ உயிர் என்றால் என்ன ? என்று கேட்க....'எப்படிச் சொல்றது......பூமியில் உயிர் என்பதே.....பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதோ ஒரு (கோள்) மோதலில் ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்ட ஒன்று' என்பதாக பரிணாம கோட்பாட்டை விளக்குவார்

இதை படம் பார்க்கும் எத்தனை பேர் உள்வாங்கினார்கள் என்று தெரியவில்லை, ரோபோ விடையாக சொல்லும் கடவுள் உண்டு என்பதற்கு முற்றிலும் மாற்றாக பிற்பகுதியில் உயிர்களின் உருவாக்கம் என்பது தற்செயலாக நடந்த ஒன்று விஞ்ஞானி அறிவியல் (பரிணாமக்) கோட்பாட்டை விளக்கி இருப்பார். பார்வையாளர்கள் எப்படி உள்வாங்கி கொள்ள வேண்டும் ? கடவுள் இருக்கார் ஆனால் எதையும் படைக்கல, மனிதர்கள் எந்திரங்களை படைக்கிறார்கள் எந்திரங்களுக்கு மனிதர்கள் தான் கடவுள். பரிணாமக் கோட்பாட்டின் படி தற்செயலாக நடந்த விபத்தில் யாராலும் படைக்கப்படாத மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?

இந்த படத்தில் சொல்லும் இந்த 'கடவுள்' மற்றும் 'உயிர்' குறித்த தகவல் ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது என்று நினைக்க ஒன்றும் இல்லை. படத்தில் இடம் பெறும் இந்த இரு சொல்லாடல்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றவையாகவும் முரண்பாடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாற்றாக கடவுள் பற்றிய கேள்வியில் தசவதாரம் படத்தில் கமல் 'கடவுள் இல்லைன்னு சொல்லவில்லை, இருந்தா நல்லா இருக்கும்...' என்று தான் சொல்லுகிறேன் என்றது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும் குழப்பமற்ற 'நச்'

30 கருத்துகள்:

எல் கே சொன்னது…

கடவுள் இல்லை என்று சொல்லி இருந்தால் திருப்தி ஆகி இருப்பீங்க.. அதைதான சொல்ல வரீங்க??

படத்தை மட்டும் பாருங்க.. அதுல போய் கடவுளை தேடறீங்க

கோவி.கண்ணன் சொன்னது…

// LK said...

கடவுள் இல்லை என்று சொல்லி இருந்தால் திருப்தி ஆகி இருப்பீங்க.. அதைதான சொல்ல வரீங்க??

படத்தை மட்டும் பாருங்க.. அதுல போய் கடவுளை தேடறீங்க//

இருக்கா இல்லையான்னு எனக்கு நல்லா தெரியும் (அதற்கு என் பதிவில் உள்ள வள்ளலார் மற்றும் பெரியார் படங்களே சாட்சி :)) , படத்தைப் பார்த்து அதைத் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை. இருந்தாலும் படத்தில் கடவுள் பற்றிய கருத்துகளில் குழப்பி இருக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லி இருக்கிறேன்.

எல் கே சொன்னது…

இந்தப் படத்தை யாரும் அதற்காக பார்க்கவில்லை.. அதை யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை. என் என்றால் எல்லோருக்கும் தெரியும் கடவுள் உள்ளார் என்று. அதனால் அதை படத்தில் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று தேட மாட்டார்கள். விடுங்கள் அவசியமற்ற ஒரு பதிவு

கோவி.கண்ணன் சொன்னது…

// LK said...

இந்தப் படத்தை யாரும் அதற்காக பார்க்கவில்லை.. அதை யாரும் கண்டுக்கொள்ளவும் இல்லை. என் என்றால் எல்லோருக்கும் தெரியும் கடவுள் உள்ளார் என்று. அதனால் அதை படத்தில் எல்லாம் என்ன சொல்கிறார்கள் என்று தேட மாட்டார்கள். விடுங்கள் அவசியமற்ற ஒரு பதிவு//


நீங்க மட்டும் இல்லை நித்தி முதல் அனைத்து போலி சாமியார்களும் கூட கடவுளை இருப்பதாகச் சொல்லி கடவுள் வியாபாரமே நடத்துகிறார்கள்.
உங்களின் இந்த பதிவிற்கான பின்னூட்டம் கூட எனக்கு அவசியமற்றதாகத்தான் படுகிறது. அதற்காக நான் வேண்டாம் என்று சொல்லமாட்டேன் எனென்றால் இது கருத்துக்களம் என்பதாக நான் நினைக்கிறேன். மேலும் ஒன்றைப் பற்றி அவசியம் அவசியம் இல்லை என்று சொல்லி புறக்கணிக்க யாருக்கும் உரிமை இருப்பதாகத் தெரியவில்லை

ப.கந்தசாமி சொன்னது…

கோவி-கண்ணன் அவர்களே, தலையீட்டுக்கு மன்னிக்கவும், LK யும் நீங்களும் விவாதத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொண்டு செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது விவாதத்திற்குத் தேவையில்லையே? கருத்துகளைத்தானே விவாதிக்கவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// DrPKandaswamyPhD said...

கோவி-கண்ணன் அவர்களே, தலையீட்டுக்கு மன்னிக்கவும், LK யும் நீங்களும் விவாதத்தை உணர்ச்சி பூர்வமாகக் கொண்டு செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது விவாதத்திற்குத் தேவையில்லையே? கருத்துகளைத்தானே விவாதிக்கவேண்டும்.//

நன்றி ஐயா.

அவரு (எல்கே) அப்படியான்னு எனக்கு தெரியாது, நான் உணர்ச்சிவசப்படவில்லை பதிலுரைத்தேன் அவ்வளவே.

ம.தி.சுதா சொன்னது…

யார் எப்படிச் சொன்னாலும் கடவுள் இருப்பது உண்மை தானே சகோதரா... வசி ரோபாவால் கரைச்சல் பட்டார்.. கடவுள் மனிதனால் கரைச்சல் பட்டார்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

Very nice critical thinking read both your movie review and this post I can only hope people always keep thinking like you even when watching a movie and always trying to infer things from everything. Nice.

உமர் | Umar சொன்னது…

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அதனால், எந்திரன் திரைப்படத்தை நான் பார்க்கக்கூடிய சூழல் எழப்போவதில்லை. ஆனாலும், எந்திரன் படத்தின் கதையை கேட்டதுமே, இந்த கதையே அறிவியல் கோட்பாட்டிற்கு எதிரானதாயிற்றே என்று தோன்றியது. ஐசக் அசிமோவ் கூறியிருந்த மூன்று விதிகளுக்கு முரணாக கதை பின்னப்பட்டிருப்பதாக தோன்றியது.

மனிதகுலத்திற்கு எதிராக செயல்படாதவாறே, ரோபோக்கள் வடிவமைக்கப்படவேண்டும். மனிதர்களுக்கு எதிராக செயல்படுமாறு ஒரு ரோபோவை வடிவமைப்பதாக திரைப்படத்தில் காட்டியிருப்பது, தகாத உறவின் (Incest) அடிப்படையில் கதை அமைந்திருப்பதை போன்றதாக நான் நினைக்கின்றேன்.

----
பதிவில் நீங்கள் கூறியுள்ள உயிர் பற்றி. அனைத்து மதங்களும் உயிர் என்பது எங்கோ ஒளிந்திருக்கும் ஒன்று என்பது போலவும், கடவுளின் கட்டுப்பாட்டில் அது இருப்பது போலவும் கூறி வந்துள்ளன. ஆனால், வேதிப்பொருட்களின் சேர்க்கைதான் உயிர் என்று அறிவியல் நிறுவத் தொடங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சிகள் இன்னும் பெருமளவில் நடைபெற்று முடிவுகள் வெளிவந்தாலே கடவுளும், அவர்தம் சித்தாந்தங்களும் காலியாகிவிடும்.

---
//படத்தில் இடம் பெறும் இந்த இரு சொல்லாடல்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றவையாகவும் முரண்பாடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.//

பலர் வசனம் எழுதியதால் நடைபெற்றதாக இருக்குமோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//ம.தி.சுதா said...

யார் எப்படிச் சொன்னாலும் கடவுள் இருப்பது உண்மை தானே சகோதரா... வசி ரோபாவால் கரைச்சல் பட்டார்.. கடவுள் மனிதனால் கரைச்சல் பட்டார்...//

உண்மைன்னு நான் சொன்னால் என்கிட்ட சாட்சி ஆதாரம் கேட்பாங்க, அதனால் நான் வெளையாட்டுக்கு வரல. :) அதே போல் இல்லைன்னு சொன்னாலும் உங்களைப் போன்று இருக்குனு சொல்லுவோரும் உண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//பலர் வசனம் எழுதியதால் நடைபெற்றதாக இருக்குமோ.//

அப்படித்தான் நானும் கருதுகிறேன் கும்மி.

மற்ற கருத்துகளுக்கும் நன்றி

Ŝ₤Ω..™ சொன்னது…

கோவியண்ணே.. //இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.//

அந்த கைத்தட்டல் விடைக்கில்லைண்ணே.. அவங்க தலைவர் கடவுளாம், அதற்கு தான் அந்த அலப்பறை..

Ŝ₤Ω..™ சொன்னது…

“கடவுள் இல்லைன்னு சொல்லறான் பாரு.. அவன நம்பலாம்.. கடவுள் இருக்குன்னு சொல்லறான் பாரு, அவன கூட நம்பலாம்.. ஆனா, நான் தான் கடவுள்ன்னு சொல்லறான் பாரு, அவன மட்டும் நம்பவே கூடாது” - இது கமல் பேசிய வசனம்.. ஏனோ இப்போ நினைவுக்கு வருது..

KATHIR = RAY சொன்னது…

உங்கள் அனுபவத்தில் உணராதவரை
கடவுள் இருக்கிறார் என்பதும் தவறு
கடவுள் இல்லை என்பதும் தவறு

ஒவ்வொரு தனி மனிதனின் அனுபவ உணர்வை பொறுத்தது அது

கோவி.கண்ணன் சொன்னது…

// senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

Very nice critical thinking read both your movie review and this post I can only hope people always keep thinking like you even when watching a movie and always trying to infer things from everything. Nice.//

நன்றி செந்தில்குமரன், நீண்ட நாள்கள் சென்று உங்களிடம் இருந்து பின்னூட்டம் வந்திருக்கு. எழுதுவதையும் (நேரம் இருந்தால்) துவங்கலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

// Ŝ₤Ω..™ said...

கோவியண்ணே.. //இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.//

அந்த கைத்தட்டல் விடைக்கில்லைண்ணே.. அவங்க தலைவர் கடவுளாம், அதற்கு தான் அந்த அலப்பறை..//

:))) நானும் யோசிக்கவில்லை. ஆனால் நான் பார்த்த திரையரங்கில் ஓப்பனிங்கில் கூட யாரும் ஆரவாரம் செய்யவில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//KATHIR = RAY said...

உங்கள் அனுபவத்தில் உணராதவரை
கடவுள் இருக்கிறார் என்பதும் தவறு
கடவுள் இல்லை என்பதும் தவறு

ஒவ்வொரு தனி மனிதனின் அனுபவ உணர்வை பொறுத்தது அது//

ரைட்டு.........!
:)

ஜோ/Joe சொன்னது…

//'என்னைப் படைச்சவர் இவர், இதே போல் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்......எனவே கடவுள் இருக்கிறார்;//

ரோபோ இப்படி சொன்னதா எனக்கு நினைவில்லை ..என் நினைவிலிருந்து ரோபோ சொன்னது “என்னை படைத்தது வசீகரன் .அப்போ அவர் தான் எனக்கு கடவுள்”

கோவி.கண்ணன் சொன்னது…

//ரோபோ இப்படி சொன்னதா எனக்கு நினைவில்லை ..என் நினைவிலிருந்து ரோபோ சொன்னது “என்னை படைத்தது வசீகரன் .அப்போ அவர் தான் எனக்கு கடவுள்”//

நெட்டுல டவுன்லோட் செய்து கன்பார்ம் பண்ணிக்கலாமா ?
:)

Sathish சொன்னது…

Hello,
There is no confusion in that.
In that movie - nowhere Shankar mentioned that God only created Human beings initially.
Robo answer should not be taken in that way. If you aske me my parents are my God. (similar answer as Robo said). They never discussed about how first human being created either by God or accident.
Kovi - Please do not spread your confusion to others.
Hope you agree with me or put your reply.
Sathish from UK.

Sathish சொன்னது…

@Kummi,
Don't you think what you write is joke!
//நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அதனால், எந்திரன் திரைப்படத்தை நான் பார்க்கக்கூடிய சூழல் எழப்போவதில்லை. ஆனாலும், எந்திரன் படத்தின் கதையை கேட்டதுமே, இந்த கதையே அறிவியல் கோட்பாட்டிற்கு எதிரானதாயிற்றே என்று தோன்றியது//
Without watching the movie - putting a lengthy comment.
I guess this is how most of the people are commenting on most of the things. (not only cinema and not only Endhiran).
I read in another web page - one commented by misunderstanding 1 zetabytes as I GB.
After reading comments area- wondering how people are commenting without reading things and without watching anything properly - do you think think this is right?
First let us correct ourself and look at others misatke.

உமர் | Umar சொன்னது…

@Sathish

நன்றாகப் பாருங்கள் நண்பரே. நான் அந்த முதல் பத்தியில் எந்திரன் படத்தின் கதையை கேட்டதாகதான் கூறியிருந்தேன். விகடன் விமரிசனத்தில் கதையைப் பற்றி எழுதியிருந்தார்கள். படத்தைப் பார்க்காவிட்டாலும் கதையைப் பற்றி கருத்துக் கூற முடியும். படத்தில் யாருடைய நடிப்பைப் பற்றியும் நான் பேசவில்லை. படத்தின் நிறைகுறைகளை அலசவில்லை. நான் வாசித்த ஒன்றைப் பற்றி மட்டுமே பேசியுள்ளேன். ஒரு வேளை நான் கேட்டறிந்த கதை தவறெனில், எனது கருத்துகள் தவறாகும். நான் கேட்டறிந்த கதை தவறா என்று நீங்கள்தான் கூறவேண்டும்.

எல் கே சொன்னது…

கோவியாரே , நான் உணர்ச்சிவசப்பட்டு எங்கும் விவாதம் செய்வது இல்லை. அப்படி விவாதம் செய்வது வீண்
:)

ILA (a) இளா சொன்னது…

கூறுகெட்ட கூபேத்தனம்னு சொல்ற மாதிரி சொல்லியிருக்கீங்க. படைச்சவங்கதான் கடவுள்னா, அம்மா அப்பாகூட கடவுள்தானே? இதை ரஜினி எத்தனையோ படத்துல சொல்லியாச்சே. புதுசா என்ன இருக்கு. சும்மா நீங்களா ஒரு அர்த்தம் எடுத்துக்கிட்டு பதிவு போட்டுகிட்டு

ராவணன் சொன்னது…

படம் சரியாகப் பார்க்கவேண்டும். பார்வையாளர்களில் ஒருவர் கேட்கும் கேள்வி, 'கடவுள் உள்ளாரா?இல்லையா?'
அதற்கு ரோபோ,' கடவுள் என்றால் என்ன?'
அதற்கு அந்த பார்வையாளர் கூறும் பதில்,'நம்மைப் படைத்தவர் கடவுள்.'

''படைத்தவர்தான் கடவுள் என்றால் என்னைப் படைத்தது இந்த வசீகரன்,எனவே எனக்குக் கடவுள் இவரே.கடவுள் உண்டு"

இதுதான் படத்தில் உள்ள வசனம்.உங்கள் கற்பனைக்கு ஏற்றதுபோல திரிக்கவேண்டாம்.

நம்மைப் படைத்தது கடவுள் என்றால்
நம் தாய், தந்தையரே நம் கடவுள்.இதுதான் சுருக்கம்.

காமாலகாசனின் அரைக்கிணறு தாண்டும் புத்தி இதில் இல்லை.

karthik சொன்னது…

ஷங்கர் ஒண்டும் குழம்பவில்லை அவர் தெளிவாகத்தான் சொல்லி இருக்கார். காது கேட்காட்டி செவிட்டு மசின் பூட்டி கொண்டு படம் பாருங்க அதில இப்பிடித்தான் வசனம் வரும்
ஒருவர் - கடவுள் இருக்காற இல்லையா?
சிட்டி - கடவுள் எண்டா யாரு
ஒருவர் - நம்மை படைத்தவர் கடவுள் .
சிட்டி - அப்ப கடவுள் இருக்கிறார். Dr வசிகரன் தான் எனக்கு கடவுள் எண்டு சிட்டி பதில் சொல்லும் -
நீங்க கோமாளிஹாசன் ரசிகரா (???????????? நாங்க தெளிவா இருக்கிறோம்

smart சொன்னது…

உங்கள் பதிவிலேயே முரணிருக்கே, கோள்கள் மோதியது என்றீர்கள் அந்த கோள்கள் என்ன திடீர் என்றாவந்தது? அப்புறம் அந்த ஹிந்து மதம் பரிணாமத்தை நம்புது என்கிறார்களே. அப்படிஎன்றால் கோள்கள் மோதி மனிதன் பரிணாமிக்க வைத்தது இறைவன் என்று படத்தில் உள்ளது எனக் கொள்ளலாமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//smart said...
உங்கள் பதிவிலேயே முரணிருக்கே, கோள்கள் மோதியது என்றீர்கள் அந்த கோள்கள் என்ன திடீர் என்றாவந்தது? அப்புறம் அந்த ஹிந்து மதம் பரிணாமத்தை நம்புது என்கிறார்களே. அப்படிஎன்றால் கோள்கள் மோதி மனிதன் பரிணாமிக்க வைத்தது இறைவன் என்று படத்தில் உள்ளது எனக் கொள்ளலாமா?

4:10 AM, October 28, 2010//

கோள்கள் எங்கிருந்து வந்ததா ? கடவுள் எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே வந்திருக்கக் கூடும் என்று சொன்னால் கூட அது கடவுளின் இருப்பை உறுதிப்படுத்துவது ஆகும் என்பதால் நான் அவ்வாறு கூறுவதில்லை :)
கடவுள் வந்திருக்காது அது எப்போதும் இருப்பது என்று நினைக்கும் உங்களால் கோள்களும் அவ்வாறே இருக்கக் கூடும் என்று ஏன் நினைக்க முடியவில்லை ?
எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ முற்றிலுமாகவோ அழிக்க முடியாது அதற்கு பிரிதொரு வடிவம் கொடுக்க முடியும் என்பதே வேதியல் கோட்பாடு, அப்படி எனில் everthing allways exists in some forms and subject to change due to enviroment. எழுதியதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் சொல்வதில்லை, இருந்தாலும் இது குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதியுள்ளேன். திரும்ப திரும்ப அதே போன்று எழுதுவது எனக்கு அலுப்பு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

மேலும் திரு ஸ்மார்ட், இந்து மதம், பொந்து மதம் என்பதிலெல்லாம் எனக்கு ஒன்றும் பெரிதாக நாட்டமில்லை, இந்து மதம் என்று சொல்லப்படுவதில் இந்திய சமய தத்துவங்கள் அனைத்தும்
முன்மொழியப்படுவதில்லை இடத்திற்கு ஏற்றவாறு இட்டுக்கட்ட அவ்வாறு இணைத்துக் கொள்ள மதவாதிகள் அவ்வாறு செய்வார்கள். தற்போதைய இந்து மதம் என்பது
பார்பனீய வைதீக மதத்தின் மாற்றுப் பெயரே.

smart சொன்னது…

//everthing allways exists in some forms and subject to change due to enviroment//
It doesn't mean actual truth but It is the scientific truth understood with our sense. And there are many which can't understand by human.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்